Tuesday, September 30, 2008

"கொழும்பினதும் கிழக்கு மாகாணத்தினதும் பாதுகாப்பினை முறியடிப்பதே புலிகளின் திட்டம்"சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

வன்னியில் மோதல்கள் தீவிரமடைந்து வருகையில் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் போன்றவற்றின் மீது அதிரடி தாக்குதல்களை நிகழ்த்துவது விடுதலைப் புலிகளின் பிரதான இலக்கு.

இதனால் வன்னியில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் படையினர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம்.

கொழும்பில் தாக்குதலில் ஈடுபடும் நோக்குடன் விடுதலைப் புலிகள் பலர் முஸ்லிம் மக்களின் பெயர்களைக் கொண்ட அடையாள அட்டையுடன் நடமாடி வருகின்றனர்.

கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, இரத்மலான இடைத்தங்கல் முகாம், இரத்மலான வானூர்தி நிலையம், கட்டுநாயக்கா வான்படை தளம் என்பனவே கொழும்பில் அவர்களின் பிரதான இலக்கு.

கிழக்கில் அம்பாறை மற்றும் திருமலை மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இதனிடையே அனைத்துலக ரீதியிலும் தமிழ் மக்கள் போர் தொடர்பான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்னிந்தியாவில் நடைபெறவுள்ள உண்ணாநிலை போராட்டம் முக்கியத்துவம் மிக்கது.

எனினும் அது தொடர்பாக மத்திய அரசின் பதில் என்ன என்பது தான் தற்போதைய கேள்வி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 2 அப்பாவி பொதுமக்கள் பலி; 2 சிறார்கள் உட்பட 13 பேர் காயம்கிளிநொச்சி நகர் கனகாம்பிக்கைக்குளம் வீதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு சிறார்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுச்சிதறல்கள் கிளிநொச்சி பொதுமருத்துவமனைப் பகுதிகளிலும் வீழ்ந்துள்ளன.

கிளிநொச்சி நகரில் உள்ள கனகாம்பிகைக்குளம் வீதி ஏ-9 சாலை அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை முற்பகல் 10:20 நிமிடத்துக்கு சிறிலங்கா வான்படையின் இரண்டு கிபீர் வானூர்திகள் நான்கு தடவைகள் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின.

இக்குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நான்கு வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. 16 வீடுகள் சேதமாகியுள்ளன.

இதில் இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்கள் வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் ஆவர்.

இவர்களின் உடலங்கள் சிதைந்துள்ளதால் அவை உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

இத்தாக்குதலில் 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.அவர்கள் விவரம்:

இராமையா விஜயதர்சினி (வயது 16)

பரந்தாமன் கௌரி (வயது 03)

செல்லையா யோகராணி (வயது 68)

செபமாலை இந்திராணி (வயது 28)

அருட்சோதி ஆரோக்கியம் (வயது 49)

காந்தரூபன் சிவாஜினி (வயது 28)

தர்மன் கோகுலவாசன் (வயது 04)

கந்தசாமி சத்தியஞானதேவி (வயது 57)

வர்ணகுலசிங்கம் இராஜேந்திரம் (வயது 45)

செல்லையா சுப்பிரமணியம் (வயது 53)

செல்வநாயகம் பெருமாள் (வயது 65)

விக்கினேஸ்வரன் கமலாதேவி (வயது 26)

வேலு லட்சுமிப்பிள்ளை (வயது 68)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலின் சிதறல்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனைப் பகுதிக்குள் வீழ்ந்து வெடித்ததில் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சந்திரநேருவின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவின் வீட்டின் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திருக்கோயில் பிரதேசத்தில் அமைந்துள்ள சந்திரநேருவின் வீட்டின் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் காரணமாக வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும், சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவை விமர்சித்த அரசாங்கத் தொலைக்காட்சிகளுக்கு எதிராக வழக்குகாலி வீதியில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளை அகற்றுவது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் அரசாங்கத் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன.
தேசிய ரூபவாஹினி மற்றும் சுயாதீனத் தொலைக்காட்சி ஆகிய அரசாங்க தொலைக்காட்சி அலைவரிசைகளில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அதிஉயர் பீடமாக கருதப்படும் நீதிமன்றக் கட்டமைப்பை அவமரியாதைக்கு உட்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்தமைக்காக குறித்த தொலைக்காட்சி சேவைகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது. குறித்த தொலைக்காட்சி அலைவரிசைகளின் பணிப்பாளர்கள், குறித்த நிகழ்ச்சியைத் தயாரித்து ஒளிபரப்புச் செய்த தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பான எழுத்து மூல உத்தரவு கிடைக்கப்பெற்றவுடன் வீதித் தடைகள் அகற்றப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. காலி வீதியில் அமைந்துள்ள வீதித்தடைளை உடனடியாக அகற்றுமாறு உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேதிகளில் உதயமானவர்களுக்கு..., எண்களுக்கான பலன்களை இங்க

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு...

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் அக்கிரகம் போலவே உலகின் இயக்கத்தை தீர்மானிக்க வல்லவர்கள். வருங்கால தலைவர்கள் நீங்கள். உங்களது ஊக்கம் நிறைந்த செயற்பாடுகள் உங்களை மென்மேலும் வலுப்படுத்தவல்லது. சிறந்த ஆழுமை கொண்ட நீங்கள் எடுத்த கரியத்தில் தீவிரமான போக்கு உடையவர்களாக தென்படுவீர்கள். பணத்தை நீங்கள் தேடிச்செல்ல மாட்டீர்கள் பணம் உங்களைத் தேடி வரவேண்டுமென்றே நினைப்பீர்கள.; சிறுபிள்ளைகள் அழகியகாட்சிகள் உங்களை எளிதில் கவர்ந்துவிடவல்லன. சூரியனின் ஆதிக்கம் அதிகமாகவே இருப்பதால் உடலில் உஷ்ணம் சற்று அதிகமாகவே காணப்படும். இதனால் விரைவிலேயே கண்ணுக்கு கண்ணாடி அணியவேண்டிய தேவை ஏற்படலாம். தலைமுடி உதிர்வதற்கான வய்ப்பக்களும் நிறையவே உண்டு. உங்களிடம் உள்ள பிடிவாதங்களை சற்று குறைபிபீர்களேயானால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி உண்டு.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு...

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் நீங்கள். சந்திரனுக்கு சுய ஒளிகிடையாது. இருப்பினும் சூரியனின் ஒளியில் அது இயங்குகிறது. இத்தன்மை உங்களிலும் உண்டு. பெரிய பெரிய காரியங்களை எல்லாம் தொடங்கவீர்கள் ஆனால் பலரது கருத்தையும் கேட்டபின்பு இடையிலேயே விட்டுவிடுவீர்கள். மனதில் கற்பனை அலைபுரண்டோடும். ஆனால் அதை எட்டுவதற்கு பணப்பிரட்சினை உட்பட பல பிரட்சினைகள் தடையாக இரந்தவண்ணம் இருக்கம். நிற்கிற குருவியை பறக்குது என்று சொல்லி வாதிடும் திறமை உங்களிடம் உண்டு. பேச்சிலே தணல் பறக்கும். வீரியம் பேசுவதிலும் வல்லவர்கள் நீங்கள். ஆனால் உண்மையிலேயே பயந்த சுபாவம் கொண்டவர்கள் நீங்கள்தான். ஆதிகமாக விபத்துக்களினால் உங்களுக்கு ஆபத்து அதிகம் உண்டு. சலிக்காமல் உழையுங்கள் வாழ்கையில் வெற்றி நிச்சயம்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு...

குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். குருவைப்போலவே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு தெரியாத ஒரு கலையே இல்லை எனலாம். அன்பு காட்டுபவர்களுக்கு நீங்கள் சிறந்த கொடை வள்ளல்கள். மற்றவரை பார்த்தமாத்திரத்திலேயே புரிந்துகொள்ளும் தன்மை கொண்ட நீங்கள் எடுத்தகாரியத்தில் மனவைராக்கியத்துடன் செயற்படுவீர்கள். உங்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு நீங்கள் எவ்வறு கட்டுப்பட்டு நடக்கின்றீர்களோ அதுபோன்றே உங்களுக்கு கீழ் உள்ளவர்களும் உங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என கருதுகின்றீர்கள். இதனால் சிலவேளைகளில் கோபமடைகின்றீhகள். உங்களுக்கு பிடிக்காத விடயங்களை எதிர்க்கின்றீர்கள் அல்லது அப்பகுதியை விட்டு விலகிவிடுகின்றீர்கள். பொதுவாகவே இந்த இலக்கத்தில் பிறந்த நீங்கள் பிறந்த இடத்தில் வாழ்வது குறைவே. புpறந்த இடம் ஒன்றாகவம் வழுமிடம் ஒன்றாகவுமே இருக்கும். தன்னம்பிக்கையுடன் போராடுங்கள் உலகம் உங்கள் கையில்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். ஊண்மையிலேயே கம்பீரமான தோற்றத்தைக் கொண்டு விளங்குவீர்கள். உலகில் புதிது புதிதாக நடைபெறும் மாற்றங்களை அறிந்து கொள்வதில் என்றும் ஆர்வத்துடன் செயற்படுவீர்கள். எச்சந்தர்ப்பத்திலும் உங்கள் தகுதியை குறைத்துக்கொள்ள மாட்டீர்கள். செல்வச்செழிப்புடன் இனிய எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவீர்கள். எவ்வளவுதான் வலிமையான தோற்றப்பாடடை நீங்கள் கொண்டிருந்தாலும் உங்கள் உள்ளம் கருணை நிறைந்தது. நீங்கள் மற்றவரிடத்தில் காட்டுகின்ற அளவுகடந்த அன்பே சில வேளைகளில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். வலிமையான உடற்கட்டமைப்பை கொண்ட உங்களின் வாழ்க்கை முழவதும் ஒரு மனக்கவலை தொடர்ந்த வண்ணமே இருக்கும். இத்துணைக்கும் மேலாக நீங்களே பலர் மத்தியில் பெரும் செல்வந்தப்புள்ளிகளாக விளங்குவீர்கள். மனக்கவலைகளை மறந்து வாழ்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மகிழ்சியாக இருங்கள் வெற்றி உங்களதே.

5, 14, 23 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். புதுமையின் விரும்பிகள். புதிய ஆடைகள். வாசனைத்திரவியங்கள். வாகனங்கள் என்று எல்லாவற்றையும் நேசிப்பீர்கள். வீரியமான உடற்தோற்றத்தைக்கொண்ட நீங்கள் மனதளவில் மிகவும் பலவீனமானவர்களே. நகைச்சுவையாக பேசுகின்ற தன்மை உங்களுடனேயே பிறந்தது. பேரிய பெரிய தோல்விகளையும் இலகுவில் மறந்துவிடுகின்ற தன்மை கொண்டவர்கள் ஆகையால். வாழ்க்கையில் கவலைகள் என்பது குறைவே. பெரும்பாலும் வர்த்தகத்துறையில் பெரும் ஈடுபாடு கொண்ட நீங்கள் அத்துறையினையே பின்பற்றி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டியவர்கள். வர்த்தகத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களாகையால் குறுக்கு வழிகளில் சிந்திக்கப்பார்பீர்கள். ஊங்கள் ஆற்றலை நேர்வழியில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிநடை போடுங்கள் எதிர்காலத்தின் சிறந்த தொழிலதிபர்கள் நீங்களே.

6, 15, 24 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

சுக்கிரனின் ஆதிக்கத்தில் உதயமானவர்கள் நீங்கள். அக்கிரகம் போலவே கவர்ச்சியான தோற்றத்தை கொண்டிருப்பீர்கள். வாழ்வின் தோல்விகளை எல்லாம் வெற்றிப்படிகளாக மாற்றிக்கொள்வீர்கள். மிகவும் கலகலப்பாக இருக்கும் நீங்கள் மற்றவர் யாராவது உங்களின் சிறு குறைகளை கூறியவுடன் மனமுடைந்து போய்விடுவீர்கள். எப்பாடுபட்டாவது வாழ்வில் ஒரு உன்னத நிலையை எட்டி விடுவீர்கள். செய்யும் வேலைகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பீர்கள். ஊங்களிடம் உள்ள உன்னதமான குணம் பக்கத்திருப்பவர் துன்பம் பாத்திருக்க மாட்டீர்கள். கையில் உள்ளதை உடனேயே கொடுத்து விடுவீர்கள். வாழ்கையில் ஆசைகள் அலைகடலென நீண்டிருக்கும். முடிந்தவரை உங்கள் உணர்வுகளையும்,ஆசைகளையும் கட்டுப்படுத்தப்பழகிக்கொள்ள�
�ங்கள். ஒளிமயமான எதிர்காலம் உங்கள் கையில்.

7, 16, 25 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். தனிமை உங்களுக்கு மிகவும விருப்பமானது. ககலப்பாக பேசிக்கொண்டிருப்பீர்கள். ஆனால் திடீரென மௌனமாகிவிடுவீர்கள். உங்கள் சமயத்தின் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். வாழ்கையில் விரைவாக முன்னேறிவிட வேண்டுமென்ற நோக்கத்தோடு உழைத்துக்கொண்டு இருப்பீர்கள். இலட்சியத்திற்காக மட்டுமே வாழ்கின்றோம் என காட்டிக்கொள்வீர்கள். நீங்கள் கொண்டகருத்தில் உறுதியான பிடிவாதத்துடன் செயற்பட்டு வெற்றியும் காணுவீர்கள். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டு செயற்படுங்கள் வாழ்கையில் வெற்றி உங்கள் பக்கம்.

8, 17, 26 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். சனியைப்போல கொடுப்பதற்கும் ஆளிலை கெடுப்பதற்கும் ஆளில்லை என்பார்கள். ஆகையால் வாழ்வில் சோதனைகளும் சாதனைகளும் உங்களதே. வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டு முன்னுக்கு வரவேண்டியவர்கள். எவ்வளவுதாhன் வாழ்வில் ஏற்றம் கண்டாலும். நீங்களோ அல்லது உங்கள் வாழ்கைத்துணையோ தீராத ஒரு நேயினால் துரத்தப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள். சிரமங்களுக்கு சிரம் சாய்க்காமல் வாழ்கையை வெற்றிகொண்ட பல தலைவர்கள் இந்த இலக்கத்திலே பிறந்தவர்களேதான். சலிக்காமல் உழையுங்கள். நீங்களும் வாழ்வில் வெற்றிபெறுவது நிச்சயம்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் உதயமானவர்களுக்கு...

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மிகவும் தைரிய சாலிகளாவீர்கள். அனீதிகளையும் குற்றங்களையும் உடனுக்குடன் தட்டிக்கேட்க முற்படு...

கிழக்கில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்க் காவற்துறையினருக்கு இந்தியாவில் விசேட பயிற்சி?

இந்தியாவின் புதுடெல்லி காவற்துறைப் பயிற்சி மையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்த தமிழ்க் காவற்துறை அணி ஒன்று ஓரிரு தினங்களில் இலங்கை திரும்பவுள்ளதாக கிழக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு அரசாங்க கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்ட பின்னர் 2007ஆம் ஆணடு தனியே தமிழர்களைக் கொண்ட காவற்துறை அணி ஒன்று உருவாக்கப்பட்டது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் 90க்கும் மேற்பட்ட பெண்களும் 100க்கும் மேற்பட்ட ஆண்களும் தேர்வு செய்யப்பட்டு கல்லடி பயிற்சி முகாமில் 6 மாதகால பயிற்சி வழங்கப்பட்டபின்; கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி புதிய பதவிநிலைகளைப் பெற்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

இவர்கள் இங்கு நிர்வாகப்பயிற்சிகளை மட்டுமே நிறைவு செய்த காரணத்தால் நிர்வாகக் கடமைகளுக்கு மட்டுமே பயன்படுத்த நேரிட்டது. பாட வரையறையில் 8ம் ஆண்டு வரையே படித்தவர்களாக இருந்தால் ஆண்களில் 50க்கும் மேற்பட்டவர்களைத் தேர்ந்து அவர்கள் இந்தியாவில் உள்ள புது டில்லி பயிற்சி முகாமில் ஆயுதப்பயிற்சி பெற்றுக் கொள்வதற்காக அனுப்பிவைக்கப்படடதாக தெரியவருகிறது. இவர்கள் இன்னும் ஓரிரு தினங்களிள் இலங்கைக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத பேரினத்தின் சித்து விளையாட்டு??

உலகநாடுகளின் கண்டனங்களின் பின் பயங்கரவாத சிங்கள அரசு நிர்ப்பந்தத்திற்காகவும் கண்துடைப்பிற்காக சில உணவு பாரவூர்திகளை வன்னிக்கு அனுப்ப நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது அறிந்ததே. வன்னிக்குச் செல்லவிருந்த உணவு பாரவூர்திகளை சோதனையிட்ட இராணுவத்தினர் அப்பாரவூர்தி ஒன்றின் உள் இருந்து பெருந் தொகையான வெடிப்பொருட்கள் கைப்பற்றியதாக இராணுவ பேச்சாளன் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்களை எடுத்தச் செல்ல ஆயத்தமாயிருந்த ஒரு பாரவூர்யில் சூட்சுமமான முறையில் பெருந் தொகையான வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அத்துடன் 28,000 மேற்பட்ட சிறிய ரக பட்டறிகள் (பென் டொச் பற்றரிகள்) மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சோதனையிட்ட இராணுவத்தினர் கண்டுபிடித்திருப்பதாகவும், அப் பாரவூர்திச் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் உதய நாணயக்கார ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

சிலம்பாட்டம் - முன்னோட்டம்!
லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயா‌ரிக்கும் படம் சிலம்பாட்டம். முன்னணி கதாநாயர்களை வைத்து படம் தயா‌ரித்த லஷ்மி மூவி மேக்கர்ஸுக்கு இது இருபத்தைந்தாவது படம்.

முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ். சரவணன் இயக்கும் முதல் படம் இது. ஹீரோ சிலம்பரசன். ஹீரோயினாக நடிப்பது சனா கான். இன்னொரு கதாநாயகி சினேகா.

webdunia photoWD
இதில் முதல் முறையாக பிராமண இளைஞர் வேடத்தில் நடிக்கிறா‌‌ர் சிம்பு. அக்ரஹாரத்து பெண்ணாக சனா கான் நடித்துள்ளார். சாதுவாக வரும் சிம்புவுக்கு கரடு முரடான பிளாஷ்பேக் ஒன்று இருக்கிறது. அது என்ன என்பது சிலம்பாட்டத்தின் சுவாரஸியமான பகுதி.

பிளர்ஷ்பேக் காட்சியில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சினேகா.

படத்துக்கு முதலில் இசையமைத்தவர் தினா. பிறகு அவரை நீக்கி விட்டு யுவனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற பாடலொன்று ‌‌ரீ-மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

படத்தில் சிம்புவின் பெயர் விச்சு.

படத்தின் எடிட்டிங்கை ூட்டிங் ஸ்பாட்டிலேயே நடத்தி புதுமை செய்துள்ளார் இயக்குனர் சரவணன்.

சிம்பு பிராமண இளைஞர், கரடு முரடான இளைஞர், ஸ்டைலிஷான இளைஞர் என மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

கரடு முரடான கேரக்டருக்காக உடல் எடையை அதிக‌ரித்துள்ளார் சிம்பு.

இளையராஜா ஒரு பாடல் பாடியிருக்கிறா‌ர்.

கருணாநிதிக்கு மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கைஇலங்கை இனச்சிக்கலில் தமிழக முதல்வர் கருணாநிதி கடைப்பிடித்து வரும் மௌனத்தை பத்து நாட்களுக்குள் கலைக்காவிட்டால் தான் மேற்கொள்ளப் போகும் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,

ஈழத் தமிழர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துக!

தமிழகத் தமிழனே தூங்காதே!

ஈழத் தமிழனைக் காக்கப் புலியெனப் புறப்படு!

சிறிலங்கா அரசுக்கு இந்தியாவே! ஆயுத உதவி வழங்காதே!

ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஆற்றிய உரை:

தமிழீழத்தில் தமிழன் கொல்லப்படுகிறான். தாய்த் தமிழகத்தில் தமிழன் தூங்குகிறான். தாய்த் தமிழகத்துக்குத் தலைமையேற்கிற முதல்வர் கலைஞரோ அமைதி காக்கிறார்.

ஈழத்தில் குண்டுகள் வெடிப்பது கலைஞரின் காதுகளுக்குக் கேட்கவில்லையா?

ஈழத்தில் உள்ள தாய்மார்கள் கண்ணீர் வடிப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?

இன்னும் ஏன் அமைதி காக்கிறீர்கள்?

ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாகத்தான் அமைதி காக்கிறீர்களா?

உங்களுக்கென்ன ஆட்சி பெரிதா?

நீங்கள் பார்க்காத ஆட்சியா?

இப்போதும் 5 ஆம் முறையாக ஆள்கிறீர்கள். 6 ஆம் முறையாகக் கூட நீங்கள் ஆட்சிக்கு வர ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இலங்கை இனச்சிக்கலில் உறுதியான முடிவெடுங்கள்.

உங்களை வாழ்த்த 8 கோடித் தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள்.

நான் முதலில் உங்களை வந்து வாழ்த்துவேன்.

இந்திய அரசையே நீங்கள்தானே வழிநடத்துகிறீர்கள். அவர்கள் எப்படி உங்கள் ஆட்சியைக் கலைப்பார்கள்?

அப்படியேக் கலைத்தாலும் நாங்கள் சும்மா விட்டு விடுவோமா?

இலங்கை சிக்கலை ஆராய தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா என அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை அனுப்பி வைக்கலாம். குழு அனுப்பப்படும் நாளில் இருந்து சண்டை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அக்குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவெடுக்கட்டும்.

தமிழக சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி ஈழத் தமிழர்களை ராஜபக்ச அரசு படுகொலை செய்வதைக் கண்டித்தும்-

தனித் தமிழீழத்தை ஆதரித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால்- அதை நடுவண் அரசு ஏற்றுக் கொள்ளும்.

இலங்கை இனச்சிக்கலில் பத்து நாட்களுக்குள் கலைஞர் முடிவெடுக்காவிட்டால் ஆயிரக்கணக்கான கருஞ்சட்டை வீரர்கள் தீவுத் திடலில் கூடி ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கிறோம் என்று அறிவிப்பார்கள்.

அதன் பிறகும் மெளனம் கலையவில்லையென்றால்- பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலேயே உண்ணாநிலை மேற்கொள்வார்கள்.

அவர்களைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்-

இளைஞர்கள்-

மகளிர்

என அனைத்துத் தரப்பினரும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்வார்கள்.

பாகிஸ்தான் - சீனா ஆகிய நாடுகளிடமிருந்து சிறிலங்கா ஆயுதம் வாங்குவதாலும் புதுவை காந்த அலைத் தொலை அளவி- ராடர் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் வெளியேற்றப்படுகின்றன.

தமிழர்கள் துரத்தி துரத்திக் கொல்லப்படுகிறார்கள்.

இனியும் முதல்வர் கலைஞர் அமைதி காக்கக்கூடாது.

இங்குள்ள தமிழர்கள் கலைஞர் தலைமையில் ஒன்றாதல் கண்டு எங்கோ மறைந்தார் பகைவர்கள் என்ற செய்தி வர வேண்டும். அவ்வாறு வந்தால் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்றார் அவர்.

பா.ம.க. தலைவர் கோ.க.மணி, திரைப்பட இயக்குநர் சீமான், இந்திய நாடாளுமன்ற பா.ம.க. உறுப்பினர் மூர்த்தி, வேல்முருகன் உள்ளிட்ட தமிழ்நாடு சட்டப்பேரவையின் பா.ம.க. உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கருஞ்சட்டையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஈழத் தமிழர்களுக்காக தி.மு.க. செய்தது என்ன?: முதல்வர் கருணாநிதி விளக்கம்ஈழத் தமிழர்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட செயற்பாடுகள் மற்றும் எதிர்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கலைஞர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு தி.மு.க.வை அழைக்கவில்லையே?

பதில்: தி.மு.க. தொடக்கம் முதல் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவான கட்சி என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். எனவே நம்மை அழைக்க வேண்டாமென்று நினைத்து, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இதுவரை இருந்தவர்களையும், அரைகுறையாக ஆதரவு அளித்து வந்தவர்களையும் முக்கியமாக இந்தப் போராட்டத்திற்கு அழைக்க வேண்டுமென்று நினைத்து அழைத்திருக்கலாம். அதனால் என்ன? இலங்கைத் தமிழர்கள் நன்றாக விடயம் தெரிந்தவர்கள்.

அவர்களுக்கு உண்மையில் நமக்கு ஆதரவானவர் யார்? போலியாக ஆதரவு காட்டுவோர் யார் என்பதெல்லாம் நன்றாகவே தெரியும். இலங்கைத் தமிழர்களுக்காக ஒரே நாளில் அறிக்கை விடுத்து, அடுத்த நாளே 7 லட்சம் மக்களை தமிழகத் தலைநகரில் பேரணி நடத்திக்காட்டி, அவர்களுக்காகப் போராடிய கட்சி தி.மு.க. என்பதையும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளையே பதவி விலகிய கட்சி தி.மு.க. என்பதையும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகவே 1991 ஜனவரியில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பதையும், புதிதாகச் சொல்லி உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தப் பிரச்சினையில் தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆட்சியின் நிலை என்ன என்பது பற்றி சட்டப்பேரவையிலேயே நீண்ட உரை நிகழ்த்தி விளக்கியிருக்கிறேன். எப்படியோ உண்ணாநிலை பந்தலில் அனைத்து கட்சித் தலைவர்கள் கூடும் போது 23.04.08 அன்று சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையையொட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்று அதில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மணலாறில் ஆறுமுனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 6 படையினர் பலி; 20 பேர் காயம்மணலாற்று களமுனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஆறுமுனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். லோ உட்பட்ட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மணலாறு களமுனையில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளனவில் பெருமெடுப்பில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் ஆறுமுனைகளில் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.

இம்முன்னகர்வுகளுக்கு எதிராக செறிவான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர்.

இம்முறியடிப்புத் தாக்குதல்களையடுத்து இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கினர்.

இதில் ஆறு படையினர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.

படையினரிடமிருந்து டாங்கி எதிர்ப்பு படைக்கலமான லோ-01 உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சி‌றில‌ங்காவு‌க்கு ராணுவ உதவி செ‌ய்துவரு‌ம் ம‌த்‌திய அரசை கண்டித்து 10ஆ‌ம் தே‌தி ம‌றிய‌ல்: வைகோ!
சி‌றில‌ங்தீவில் ஈழத் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும், ஏற்படும் உயிரிழப்புக்கும் இந்திய அரசு‌ம் பொறு‌ப்பா‌ளி எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள வைகோ, இந்திய அரசு செய்து வரும் ராணுவ உதவிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி அக்டோபர் 10ஆ‌மதே‌தி செ‌ன்னை‌யி‌ல் எனது தலைமையில் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல், ''‌சி‌றில‌‌ங்க தீவில் சிங்கள இனவாத அரசு, கடந்த 50 ஆண்டுகாலமாக கொடிய அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ள ஈழத் தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு தனது முப்படைகளையும் ஏவி இனப்படுகொலை நடத்தி வருகிறது.

ஈழத் தமிழர்கள் ஜனநாயக அறவழியில் நீதி கேட்டுப் போராடிய ஒவ்வொரு கட்டத்திலும் நயவஞ்சகமாக ஏமாற்று ஒப்பந்தங்களை அறிவித்து ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளையும் பறித்ததோடு சொல்லில் வடிக்க இயலாத கொடுந் துயரத்துக்கும் அவர்களை ஆளாக்கி வந்துள்ளது.

இந்நிலையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ்மக்கள் உண்ண உணவும், வசிப்பதற்கு இடமும் இன்றி வன்னிக் காடுகளில் பசியாலும் நோயாலும் மடியும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சி‌றில‌ங்க அரசுக்கு இந்தியாவின் மன்மோகன் சிங் அரசு திட்டமிட்டு ராணுவ உதவியும், தளவாடங்களும், ராடார்களும் தந்து வந்ததோடு, இந்திய ராணுவ பொறியாளர்களையும், நிபுணர்களையும் ‌சி‌றில‌ங்க ராணுவ தாக்குதலுக்கு உதவி செய்ய நேரடியாக அனுப்பி வைத்தது செப்டம்பர் 9ஆ‌ம் தேதி வன்னியில் நடைபெற்ற சண்டையில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.

சி‌றில‌ங்க தீவில் ஈழத் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும், ஏற்படும் உயிரிழப்புக்கும் இந்திய அரசும் பொறுப்பாளி என்று குற்றம் சாட்டுவதோடு தமிழ் இனத்துக்கு இந்திய அரசு செய்யும் இந்த மன்னிக்க முடியாத துரோகத்துக்கு கண்டனம் தெரிவிக்கவும் இந்திய அரசு செய்து வரும் ராணுவ உதவிகளைத் தடுத்து நிறுத்தக் கோரியும் அக்டோபர் 10ஆ‌ம் தே‌தி காலை 11 மணியளவில் என்னுடைய தலைமையில் சென்னை, அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து புறப்பட்டுச் சென்று உத்தமர் காந்தி சாலையில் (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை) அமைந்துள்ள மத்திய அரசின் அலுவலகமான வருமானவரித் துறை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

மறியல் போராட்டத்தைக் அவைத்தலைவர் மு.கண்ணப்பன் தொடங்கி வைக்கிறார். பொருளாளர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச் செயலர்கள் நாசரேத் துரை, மல்லை சி.இ.சத்யா, துரை.பாலகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்திற்கு முன்னிலை வகிக்கின்றனர். க‌ட்‌சி‌யி‌ன்‌ முன்னணியினரும், தோழர்களும் பங்கேற்க இருக்கும் இந்த அறப்போருக்குத் தமிழ்ப் பெருமக்கள் ஆதரவளிக்க வேண்டுகிறேன்'' எ‌ன்று வைகோ கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌‌ர்.

ஜோத்பூர் : கோ‌யில் நெரிசலில் சிக்கி 72 பேர் பலி!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலுள்ள சாமுண்டா தேவி மலை‌க்கோ‌யிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 72 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சாமுண்டா கோ‌யிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் திடீரெநெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி 72 பேர் பலியாயினர். 100‌க்கு‌மமே‌ற்ப‌‌ட்டவ‌ர்க‌ளபடுகாய‌‌‌மஅடை‌ந்தன‌ர். ப‌லியானவ‌ர்க‌ளி‌‌ன் உடல்கள் மகாத்மா காந்தி மருத்துவமனைக்கும், மதுராதாஸ் மருத்துவமனைக்கு‌‌ம் கொண்டு செல்லப்பட்டதாக, மண்டல காவ‌ல்துறஆணையர் கிரன் சோனி குப்தா தெரிவித்தார்.

படுகாய‌‌மஅட‌ை‌ந்தவ‌ர்க‌ளப‌ல்வேறமரு‌த்துவமனைக‌ளி‌லஅனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர்.

ஜோத்பூரிலுள்ள சாமூண்டா தேவி கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இதைக் காணவரும் பக்தர்களில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.

இக்கோவிலில் இன்று காலை நிகழ்ந்த திடீர் கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவராத நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறப்புகள் மிகுந்த ரமலான்

ஒவ்வொரு வருடத்திலும் அல்லாஹூ தஆலா பல விஷேச தினங்களை ஏற்படுத்தி அவற்றில் செய்யும் நல்அமல்களுக்கு பன் மடங்கு நன்மைகளைத் தருகின்றான். அப்படிப்பட்ட நாட்களைக் கொண்டதுதான் ரமலான் மாதமும், இதில் செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலிகள் கொடுக்கப்படுகின்றன.

மற்ற மாதங்களில் செய்யும் அமல்களைவிட இம்மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள். இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. அல்லாஹ்வின் அருள் இறங்குகின்றது. நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது. அல்லாஹ் பாவங்களை மன்னிக்கின்றான்.’யார் இம்மாதத்திலும் அல்லாஹ்விடம் பிழை பொறுப்புத் தேடவில்லையோ அவன் நாசமாகட்டும்‘’ என ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதற்கு ஆமின் சொன்னார்கள்.இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவ மன்னிப்பும் தேடுங்கள், அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் அருளையும் பாவ மன்னிப்பையும், நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்குவானாக!

ரமலான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜீவன்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் ’நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே நிறுத்திக் கொள்ளுங்கள்!’ என்று உரக்கச் சொல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் : திர்மிதீ, இப்னுமாஜா

நோன்பின் கடமைகள்

மு‌ஸ்‌லி‌ம் ம‌க்க‌ள் நோ‌ன்‌பிரு‌ந்து த‌ங்களது கடமையா‌ற்‌றி ர‌ம்ஜா‌ன் ப‌ண்டிகை‌க் கொ‌ண்டாடு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த நேர‌த்‌தி‌ல், நோ‌ன்‌பி‌ன் கடமைக‌ள் ப‌ற்‌றி உ‌ங்க‌ளுட‌ன் ப‌கி‌ர்‌ந்து கொ‌‌ள்‌கிறோ‌ம்.

1. பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது.

webdunia photoWD
2. முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக (பதிலாக) ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

3. பைத்தியக்காரர்கள், ந‌ன்மை‌-‌தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர்கள் நோன்பு நோற்பது கடமை‌யி‌ல்லை. நோன்புக்கு பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியது‌மி‌ல்லை.

4. சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

5. பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

6. கற்பமாக இருக்கும் பெண் அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப் பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

7. மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

8. 'தீ' மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது, பிறகு அந்த நோன்பை நோற்க வேண்டும்.


நோன்பை முறிக்கும் செயல்கள்!

1. சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும்.

2. முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.

3. வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.

4. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்க‌ள் (மருந்து, குளுக்கோஸ் போன்றவைக‌ள்) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும்.

5. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும்.

சிறுபான்மை மக்களை உதாசீனப்படுத்தும் சரத் பொன்சேகாவின் கருத்துக்கு CPAகண்டனம்சிறுபான்மை மக்கள் தொடர்பில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு தமது கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 23ம் திகதி கனடிய பத்திரிகையான தி நெசனல் போஸ்ட் பத்திரிகைக்கு இராணுவத் தளபதி அளித்த செவ்வி குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நாடு சிங்கள மக்களுக்கே உரித்தானது, சிறுபான்மை மக்கள் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது என இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.

எனினும், நாட்டின் உயர் பாதுகாப்புப் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கும் ஒர் படைத்தளபதி இவ்வாறான அரசியல் ரீதியான இனவாத கொள்கைகளை வெளியிடுவது கண்டிக்கப்பட வேண்டியதென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இராணுவத் தளபதியின் குறித்த செவ்வி சிறுபான்மை மக்களை உதாசீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியின் இந்த பொறுப்பற்ற செயல் குறித்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான இனவாத கொள்கைகளின் மூலம் இன நல்லிணக்கத்திற்கு பாரிய குந்தகம் ஏற்படக் கூடும் என மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றார்சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனமொன்றினால் வழங்கப்படவிருந்த விருது வழங்கும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாதனைகளுக்காக அமைச்சர் தேவானந்தாவிற்கு இந்த விருது வழங்கப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அமைச்சர் திடீரென சுகவீனமுற்றதனால் விருது வழங்கும் நிகழ்வு காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக காரியாலயத்திலிருந்து ஆயத்தமான போது அமைச்சர் சுகவீனமுற்றதாக அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பாணியில் தடுப்பரண்களை அமைத்துள்ள புலிகள்:தரைமார்க்கமாக முன்னேற முடியாமலிருக்கும் இராணுவம்விடுதலைப் புலிகள் வன்னிப் போர்முனைகளில் இந்திய இராணுவத்தின் பாணியில் ஏற்படுத்தி வைத்துள்ள தடுப்பரண்களினால் இலங்கை இராணுவம் தரை மார்க்கமாக முன்னேற முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளதாக இந்திய இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

விடுதலைப் புலிகள் குறித்து பல்வேறு விதமான கருத்துகள் நிலவி வந்தாலும், அவர்களின் இராணுவ உத்திகள் பெரும் வியப்பளிப்பவையாகவே உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு நாட்டின் இராணுவத்திடம் இருக்க வேண்டிய அத்தனை வசதியும் சாதுரியமும் புத்திசாலித்தனமும் ஆயுத, ஆள் பலமும் புலிகளிடம் உள்ளது.

இந்த நிலையில், புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ள பாதுகாப்பு அரண்கள் குறித்த வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளன. அதில் என்ன ஆச்சரியம் என்றால், இத்தகைய பாதுகாப்பு அரண்களை இந்திய இராணுவமும் கையாளுகிறது என்பதுதான்.

பாகிஸ்தானுடனான போரின்போதுதான் இத்தகைய பாதுகாப்பு அரண்களை இந்தியா பயன்படுத்தத் தொடங்கியது. உண்மையில் இது பிரெஞ்சுப் பாணி தடுப்பரண் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தடுப்பரண் மேற்கு மன்னார் கடலோரப் பகுதியில் உள்ள நாச்சிக்குடா முதல், கிழக்கில் உள்ள அக்கராயன்குளம் வரையிலும் நீண்டு காணப்படுகிறது. "ஸிக் ஸாக்' வடிவிலும் மொத்தம் 3 கட்டங்களைக் கொண்டதாகவும் இந்தத் தடுப்பரண் உள்ளது.

முதலில் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட தளம் வருகிறது. அடுத்து பெரும் பள்ளம் வரும். இதைத் தொடர்ந்து வருவது தாக்குதல் நடத்தும் வீரர்கள் பதுங்கியிருந்து தாக்கக்கூடிய பதுங்கு குழிகள்.
இந்த மூன்றும் சேர்ந்ததுதான் புலிகளின் தடுப்பரணாகும். இந்தப் பதுங்கு குழிகளுக்குள் இருந்தபடி 360 பாகை கோணத்தில் எந்தப் பக்கம் உள்ள எதிரிகளையும் குறிபார்த்துத் தாக்க முடியுமாம்.

கண்ணிவெடிகளை இயக்குவதில் புலிகள் சாதுரியமானவர்கள் என்பது அனைவரும் அறிந்தது. இந்தப் பாதுகாப்பு அரண்களில் முதலில் வரும் கண்ணிவெடி பொறியிலிருந்து அவ்வளவு எளிதில் இராணுவத்தால் தப்ப முடியாதாம். ஒருவேளை அதற்கு அவர்கள் முயன்றால் பதுங்குகுழிகளிலிருந்து வரும் தாக்குதலையும் சமாளிக்க வேண்டும். கண்ணிவெடியையும் தாண்டி அவர்கள் வந்துவிட்டால் அகழிகள் எனப்படும் பள்ளங்களை அவர்களால் நிச்சயம் தாண்ட முடியாதாம்.

இந்த அகழிகள் 10 அடி ஆழமுடையன. இந்தப் பள்ளத்தை கவச வாகனங்களால் நிச்சயம் தாண்ட முடியாது. இப்படி எதிரிகளால் எளிதில் தங்களது பகுதிகளுக்குள் நுழைய முடியாத அளவுக்கு மிகச் சிறப்பான பாதுகாப்பு அரணை விடுதலைப் புலிகள் உருவாக்கி வைத்துள்ளனராம்.

இத்தகைய பாதுகாப்பு அரண்களை இதுவரை இலங்கைப் படையினர் சந்தித்ததில்லையாம். இதில் அவர்களுக்கு அனுபவமும் கிடையாதாம். இதுகுறித்தும் தெரியாதாம்.

ஐரோப்பிய நிறுவனங்கள் உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காகக் கொண்டு வந்த இயந்திரங்களைக் கொண்டு இந்த பாதுகாப்பு அரண்களை புலிகள் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நில மார்க்கமாக விடுதலைப் புலிகளின் முக்கிய பகுதிகளுக்குள் இராணுவத்தால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், விடுதலைப் புலிகளிடம் மிகவும் அதி நவீனமான ஆயுதங்கள் ஏராளமாக இருக்கிறதாம். ஆனால், போதிய ஆட்கள் இல்லாததே அவர்களின் தற்போதைய பின்னடைவுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதை இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் ஒப்புக் கொண்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தளாயில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தாக்குதல்: நால்வர் பலிதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாதலிக்குல் படைத்தரப்பைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கந்தளாய் பிரதேசத்துக்குட்பட்ட சேரநாவ பகுதியில் சிறிலங்கா படையினரும் ஊர்காவல் படையினரும் சேர்ந்து அமைத்திருந்த காவலரண் மீது நேற்று திங்கட்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் காவலரண் முற்றாக தாக்கியழிக்கப்பட்டது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

படையினரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி - 01, அதற்குரிய ரவைகள் - 30, சொட்கண் - 01 ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காவலரணானது அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் தேர் முட்டிகளில் தேடும் இராணுவத்தினர்

யாழ் குடாநாட்டிலுள்ள இந்து ஆலயங்களிலுள்ள தேர் முட்டிகளை இராணுவத்தினர் சோதனைக்கு உட்படுத்திவருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தலாமென பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக இராணுவத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்தே பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்திருப்பதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், யாழ் குடாநாட்டில் யாரும் இல்லாத வீடுகளையும் இராணுவத்தினர் சோதனைக் உட்படுத்திவருவதாகத் தெரியவருகிறது.

இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாருமில்லாத வீடுகளில் பதுங்கியிருப்பதாலும், யாருமற்ற வீடுகளில் சமூகவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதாலும் இந்தச் சோதனைநடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதிகளில் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடரங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய தென்மராட்சியில் இரவு 7 மணியிலிருந்து ஊடரங்குச்சட்டம் அமுலுக்கு வருவதாகத் தெரியவருகிறது.

இதுஇவ்விதமிருக்க ஊடரங்குச்சட்டம் அமுல்படுத்தும் நேரங்களில் வீதிகளில் நடமாடுபவர்கள் மீது எந்தவிதமான எச்சரிக்கையுமின்றி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படும் எனக் கூறும் அநாமதேய சுவரொட்டிகள் குடாநாட்டின் தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் ஒட்டப்பட்டிருப்பதாக யாழ் செய்திகள் கூறுகின்றன. எனினும், இது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பிலிருந்து எந்தவிதமான அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை.

Monday, September 29, 2008

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகிக்க தகுதியற்றவர் – ஆங்கில ஊடகம்

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகிக்க தகுதியற்றவர் – ஆங்கில ஊடகம்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2008, 02:33.31 AM GMT +05:30 ]

இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ந்தும் அந்தப் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என பிரபல ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு விரோதமான கருத்துக்களை வெளியிடும் இராணுவத் தளபதிக்கு எதிராக யுத்த குற்றவியல் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர், மலே மற்றும் தலை தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து வரும் அனைவருக்கும் இந்தத் தேசம் சொந்தமானதென்பதை இராணுவத் தளபதி தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளது.

உயர் இராணுவப் பதவியை வகிக்கும் சரத் பென்சேகா பேரினவாத அரசியல் சக்திகளைப் போன்று கருத்துக்கள் வெளியிடுவதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இராணுவத் தளபதி என்ற ரீதியில் அரசாங்கத்திற்கு நூறு வீதம் கட்டுப்பட்டவராக சரத் பொன்சேகா பணியாற்ற வேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனினும், ஓர் குறிப்பிட்ட இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஏனைய இனங்களை உதாசீனம் செய்வது படைத்தளபதி ஒருவருக்கு உசிதமாக அமையானதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டுச் செயற்பட முடியாவிட்டால் இராணுவச் சீருடை அணிவதில் அர்த்தமில்லை எனவும், மொத்தப் படையினரையும் சரத் பொன்சேகா அவமானப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இனத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் பயங்கரவாதமாகவே அமைந்துள்ளதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள மக்களுக்கு மட்டுமே இந்த தேசம் சொந்தமானது என்ற நிலைப்பாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்கும் இராணுவத் தளபதி தமிழ் சிவிலியன்களைப் பாதுகாப்பார் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு புறக்கோட்டையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது

புறக்கோட்டை மல்வத்த வீதிக்கும் மெயின் வீதிக்கும் இடைப்பட்ட இடத்தில் சற்றும் முன்னர் குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. இவ் வெடிச்சம்பவத்தில் 06 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸ் அத்தியட்சகர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். எவருக்கும் உயிராபத்தோ காயங்களோ ஏற்பட வில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக வாசலுக்கருகில் உள்ள மணிக்கூண்டுக் கோபுரத்தினருகினிலேயே இவ் வெடிச்சம்மபவம் இடம் பெற்றுள்ளது. வான் ஒன்றிற்கு அருகிலேயே இவ் வெடிச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

Sunday, September 28, 2008

குரு என் ஆளு - படப்பாடல்கள்


மாதவன், மம்தா மோகந்தாஸ்,அப்பாஸ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் முக்கோணக் காதல் திரைப்ப்டமான குரு என் ஆளு படப்பாடல்களை பின்வரும் இணையத்தொடர்பு மூலம் தரையிறக்கி கொள்ளலாம்.
http://www.megaupload.com/?d=ZL07XJVY

Download Varanam Aayiram Mp3 SongsGautam Menon's 'Varanam Aayiram' starring Suriya, Divya Spandana, Sameera Reddy and Simran has generated a hype since it's launch a year ago. The audio launch of this speculated flick was held on 24th September at Satyam Cinemas, Chennai.

Sony BMG holds the audio rights and markets the musical score composed by Harris Jeyaraj. Among the canned songs, two of them were screened on the event. The cast & crew were present in entirety on the occasion that took place filled with a galore of celebrities from the film fraternity.

http://www.megaupload.com/?d=01HIJUVP

ஐ.நா.வின் வழித்துணையுடன் வன்னிக்கு உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படும்-இடம்பெயர்ந்த மக்களிடம் நேரடியாக விநியோகிக்கவும் ஏற்பாடு


வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுப் பொருட்கள் எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் அங்கு சென்றடையுமென கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருட்களுடன் 60 பார ஊர்திகள் ஐ.நா. வின் கொடியை தாங்கியவாறு ஐ.நா. அதிகாரிகளின் வழித்துணையுடன் கட்டுப்பாடற்ற பகுதிக்கு செல்லவுள்ளதாகத் தெரிவித்த ஐ.நா.வின் கொழும்பு அலுவலகம், அங்கு தற்போது களஞ்சிய வசதிகள் இல்லாததால் உணவுப் பொருட்களை இடம்பெயர்ந்த மக்களிடமே நேரடியாக விநியோகிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கூறியது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கடந்த 16 ஆம் திகதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறியதையடுத்து நேற்றுவரை அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. இந்நிலையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணப் பொருட்களை தங்குத்தடையின்றி வழங்க வேண்டுமென அமெரிக்கா உட்பட ஐரோப்பிய ஒன்றியமும், ஐ.நா. வும் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றன. இதனையடுத்தே உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருள், வாகனத் தொடரணியை ஐ.நா. அதிகாரிகள் வழித்துணையுடன் கட்டுப்பாடற்ற பகுதிக்கு அனுப்ப அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் உயர் அதிகாரியொருவர் கடந்த 16 ஆம் திகதிக்குப் பின்னர் உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருட்கள் அடங்கிய வாகன தொடரணி ஐ.நா. கொடியை தாங்கியவாறு ஐ.நா. அதிகாரிகளின் வழித்துணையுடன் சில நாட்களில் வன்னிக்கு செல்லவுள்ளது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்களை அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கும் வசதி தற்போது இல்லை. எனவே அவற்றை இடம்பெயர்ந்துள்ள மக்களிடம் நேரடியாக விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலாவது வாகனத் தொடரணியின் வெற்றி மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதன் பெறுபேற்றின் அடிப்படையிலேயே எதிர்கால விநியோக நடவடிக்கைகள் இடம்பெறும்.

இந்த உணவுப் பொருட்களின் விநியோகம் ஐ.நா. அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும். விநியோக நடவடிக்கை முடிவடையும் வரை ஐ.நா. அதிகாரிகள் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் தங்கியிருப்பர்.

வன்னிப் பகுதிக்கான உணவு விநியோகம் தொடர்ச்சியாக இடம்பெறுவது அவசியமானதாகும். தமது சொந்த இடங்களை விட்டு பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களுக்கான உணவு விநியோகம் சீராக இடம்பெறாவிட்டால் அவர்கள் பாரிய இன்னல்களுக்கு உள்ளாவர் என்றார். இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் ஐ.நா. முகவர் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்குமிடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

மல்லாகம் பகுதியில் இரவு வேளையில் திருட்டு

மல்லாகம் பகுதியில் உள்ள ஜயனார் கோவிலடி பனங்கட்டித் தொழிற்சாலை ஒழுங்கைப் பகுதிகளில் உள்ள இரண்டு வீடுகளில் முகத்தை துண்டால் மறைத்துக் கட்டிய ஆயததாரிகள் மிகவும் துணிகரமான முறையில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்கள்

கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் கிராம அலுவலர் பாலபத்தமன் வீட்டின் மதில் சுவரைப்பாய்ந்து ஆயுதங்களுடன் சென்ற கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் அங்கிருந்து சுமார் ஜந்து லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளார்கள் இந்த சம்பவம் இடம் பெற்ற இடத்தில் இருந்து பறிப்பட்ட திருடர்கள் பனங்கட்டடித் தொழிற்சாலை அமைந்துள்ள ஒழுங்கையில் உள்ள கதிர்காமத்தம்பி என்பவருடைய வீட்டிற்குச் சென்று கொள்ளையிட் முயன்ற வேளையில் வீட்டார் சத்த்மிட்டதைத் தொடர்ந்து கொள்ளையர்கள் கொண்டுவந்த கத்தியையும் கைவிட்டு தப்பி ஓடியுள்ளாhகள் இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்ட்டுள்ளது
E-mail to a friend

திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் இளைஞரின் சடலம் மீட்பு


திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் இருந்து இனம் தெரியாத இளைஞர் ஒருவரின் சடலத்தை கோப்பாய் பொலிசார் பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில மீட்டுள்ளார்கள் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சடலம் திருநெல்வேலியில் உள்ள கை ஒழுங்கையில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்ட்டுள்ளது.

கட்டைக் காற்சட்டையும் ரீசேட்டும் அணிந்த காணப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்ட சடலம் சுமார் 25 க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவருடையதாக காணப்படலாம் எனவும் இவர் ஒரு பெயின்ரராக இருக்க முடியும் எனவும் சடலத்தில் காணப்பட்ட உடைகளில் காணப்படும் பெயின்ரின் மூலம் ஊகிக்கப்படுகின்றது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.இவர் வேறு இடத்தில் சுடப்பட்டுக் கொண்டு வந்து பொடப்பட்டரரா அன்றி சத்தம் கெட்க்காத முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டரா என்பதையும் அறிய முடியவில்லை.

இலங்கையின் வடக்கே அதிகரித்துள்ள மோதல் குறித்து பிரித்தானியா கவனம் -லோக் மல்கோக் பிறவுன்


வீரகேசரி இணையம் 9/29/2008 10:42:43 AM - இலங்கையின் வடபகுதி அதிகரித்துவரும் மோதல்கள் குறித்து ஐக்கிய இராச்சியம் கவனம் செலுத்துவதுடன் மோதல்கள் இடம்பெறும் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்க்க்கு மனிதபிமான உதவிகளை மனிதபிமான தொண்டு நிறுவனங்கள் ஊடாக தொடர்ந்தும் வழங்கவுள்ள தீர்மானத்தினை ஐக்கிய இராச்சியம் வரவேற்பதாக ஆபிரிக்க மற்றும் ஐ.நாவிற்கான பொதுநலவாய அமைச்சர் லோசட் மல்லோக் பிறவுன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுன் மற்றும் சர்வதேச அபிவிருத்தி செயலாளர் டக்ளஸ் அலக்சாண்டர் ஆகியோர் இவ்விடயம் குறித்து நியூயோர்க்கில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரயாடியுள்ளனர்.

அதேவேளை பொதுமக்களை சுதந்திரமாக நடமாடவும் வெளியேறுவதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம். மேலும் இருத்தரப்பினரும் சர்வதேச சட்ட விதிமுறைகளிற்கு அமைவாக மனிதபிமான தொண்டு நிறுவனங்களின் சுதந்திரமான செயற்பாடுகளிற்கும் மோதல் இடம்பெறும் பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு குறித்து கவனத்திற்கு கொள்ள வேண்டுமென அறிக்கையில் லோட் மல்லோக் பிறவுன் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி; 9 பேர் காயம்வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் சென்ற முச்சக்கர ஊர்தி மீது ஈருளி மோதிய போது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 9 பேர் காயமடைந்துள்ளனர்.

வவுனியா நகரில் இருக்கும் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள இரண்டாம் குறுக்குத் தெருவில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:15 நிமிடமளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர ஊர்தியில் ஆண் காவல்துறையினர் நால்வரும், பெண் காவல்துறையினர் ஒருவரும் சென்றுள்ளனர்.

இக்குண்டுத் தாக்குதலின் போது அருகிலிருந்த சிறிலங்கா படைத்துறை சோதனை நிலையமும் சேதமடைந்துள்ளது. இதில் சோதனை நிலையத்தில் நின்ற மூவர் காயமடைந்தனர். இவர்களில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

இத்தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த நால்வரும், இராணுவத்தைச் சேர்ந்த மூவரும், பொதுமக்களில் இருவருமாக ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பில் மினி முகாம் புலிகளால் தாக்கியழிப்பு: 6 பேர் பலி; ஆயுதங்கள் மீட்புமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திகிலிவட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து அமைத்திருந்த மினி முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர். ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட திகிலிவட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவினரும் மினி முகாம் அமைத்திருந்தனர்.

இம்முகாம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர். முகாமை தமது கட்டுப்பாட்டில் 15 நிமிடம் வரை வைத்திருந்த விடுதலைப் புலிகள் அங்கிருந்தவற்றினை முழுமையாக தாக்கியழித்துள்ளனர்.

இத்தாக்குதலின் போது சிறிலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர்.

இதில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:

ரி-56 ரக துப்பாக்கிகள் - 05

பிகே எல்எம்ஜி - 01

பிகே ரம் ரவைக்கூடு - 01

பிகே எல்எம்ஜி ரவைகள் - 100

ஏகே ரவைக்கூடு - 09

ஏகே ரவைகள் - 200

கோல்சர் - 01

ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: ஐந்து பொதுமக்கள் காயம்கிளிநொச்சி பகுதியினை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்து பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சியின் தெற்குப் பகுதிக்கிராமங்களான பாரதிபுரம், மலையாளபுரம் கிராம மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.

இதில் இ.ரஜித்குமார் (வயது 19) என்ற இளைஞரின் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன. ரி.காந்தரூபன் (வயது 21) என்பவர் காலை இழந்துள்ளார்.

வி.சதீஸ் (வயது 25) என்பவரும் ஜெகன் (வயது 30) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையும் மற்றொருவரும் இதில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த வி.சதீஸ் யாழ்ப்பாணம் காரைநகரில் இருந்து இடம்பெயர்ந்து இப்பகுதியில் தங்கியிருந்தவர் ஆவார்.

கிளிநொச்சி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் மக்கள் வாழ்விடங்கள் அழிவுகளைச் சந்திக்கின்றன.

Sunday, September 21, 2008

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை தரையிறக்கியுள்ளனர்: "சண்டே ரைம்ஸ்"

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுதங்களை தருவித்துள்ளனர் என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:
வவுனியா படைத் தலைமையகம் மீது 09.09.08 விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு அரசு விசாரணைக்குழுவை நியமித்துள்ளது.
வவுனியா வான்படைத் தளத்தின் வான்படை கட்டளை அதிகாரி குறூப் கப்டன் றொமேஷ் பெர்னாண்டோ இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலின் போது படைத்தளத்தில் காணப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான ஆய்வுகளை இக்குழு மேற்கொள்ளவுள்ளது.
மேலும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இந்திரா இரு பரிமான கதுவீ (ராடர்) சேதமடைந்ததுடன் அதனை ஒத்த மேலும் பல முக்கிய இலக்குகளும் குறிவைக்கப்பட்டிருந்தன.
எனினும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அதனை வெளியிட முடியவில்லை.
இதனிடையே விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுத தளபாடங்களை தருவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
நான்காவது ஈழப்போர் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் தீவிர எதிர்ப்பை காட்டி வருகின்றனர். அவர்களின் வலிமையை குறைத்து மதிப்பிட முடியாது.
விடுதலைப் புலிகளின் 80 விகிதமான பலத்தை முறியடித்து விட்டதாக படைத்தரப்பு தெரிவித்து வருகின்ற போதும் அண்மைய வாரங்களில் விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Friday, September 19, 2008

ஐநாவுக்கு ஏற்றவாறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது – கோத்தபாய

ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு தேவையான வகையில் இராணவ நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதென பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சிவிலியன்களைப் போன்றே தொண்டு நிறுவன பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் கடப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வெளியேறி, வவுனியாவில் இருந்து இயங்குமாறு ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இதனை வெளியேற்றமாக கருதக் கூடாது எனவும், ஓர் இடம் நகர்வாகவே கருதப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பூவியியல் அமைப்பு பற்றி தெளிவற்ற சில வெளிநாட்டு ஆய்வாளர்களே செய்திகளை திரிபுபடுத்தி வெளியிடுகின்றனர். ஆபிரிக்காவைப் போன்று ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் செயற்பாடுமாறு நாம் கோரவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இன்னமும் அரசாங்க அதிபர்களின் ஊடாகவே விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, வவுனியாவிலிருந்து இருந்து இயங்குவதன் மூலம் எவ்வித சிக்கல்களும் ஏற்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகரை, தொப்பிகல போன்ற பிரதேசங்களில் உணவு விநியோகம் மிகவும் சீராக இடம்பெற்றதென்பதனை எவரும் மறந்துவிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரபல ஆங்கில வார ஏட்டுக்கு அளித்த செவ்வியின் போது பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

பல அரச சார்பற்ற நிறுவனங்கள் வன்னியில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வந்ததாகவும், தற்போதைய கள நிலவரப்படி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கக் கூடிய சாத்தியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ் மாணவன் முதலிடம்இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தர்மலிங்கம் பசுபதன் என்ற மாணவன் மொத்தமாக 176 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ்ப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் மூன்று மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். குறித்த மூன்று மாணவிகளும் 183 புள்ளிகளைப் பெற்று முதனிலை வகிக்கின்றனர்.

கொழும்ப சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும் மஹிந்தனி அமாசா ஹபுவாராச்சி பம்பலப்பிட்டி லிண்ட்சே மகளிர் பாடசாலையின் சஜினி அஞ்சனா சேனாதீர மற்றும் புத்தளம் புனித அன்றூ மத்திய மகா வித்தியாலத்தைச் சேர்ந்த அபேசிங்ககே தோன மனீசா சுபிபி ஆகியோரே இவ்வாறு முதனிலை வகிக்கின்றனர்.

புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 265000 மாணவ மாணவியரில் 30000 மாணவ மாணவியர் பிரபல பாடசாலைகளில் அனுமதி அல்லது புலமைப்பரிசில் பணத்தினைப் பெற்றுக் கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

Thursday, September 18, 2008

ராஜபகஷவால் கொழும்பில் குண்டுவைக்க நியமிக்கப்பட்ட மாபியாக்குழு மர்மங்கள் சில இணையம் ஒன்றில் அம்பலம்


இன்று இலங்கையில் அரசாங்கம் வன்னி நிலத்தை மீட்டு இலங்கையை முற்று முழுதாக தன் வசப்படுத்தும் நோக்கில் தனது படை நடவடிக்கை ஆரம்பித்து பல இடங்களை கைப்பற்றி வரும் இத்தருணத்தில் வன்னி மீதான பாரிய கண்மூடித்தனமான தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. அந்தப் பாரிய போரில் பல பொதுமக்கள் கொல்லப்பட போகின்றார்கள் என்பது இங்கு நன்றாகவே புரியக்கூடிய உண்மை. அத்தருணத்தில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் இறக்கும் வாய்ப்பக்களே அதிகம். இந்த பாரிய தாக்குதலில் பொதுமக்கள் இறக்கும் போது வெளிநாடுகளில் இருந்து இலங்கை அரசுக்கு பாரிய அழுத்தங்கள் ஏற்படும் என்பதை கருத்தில்க் கொண்டு உடனடியாக அந்த அழுத்தத்தை மறைப்பதற்காக இலங்கை அரசாங்கம் பல திட்டங்களை தீட்டியதாகவும் அதற்கு தலைமை தாங்குகிறார் இலங்கை ஜனாதிபதியின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச அவர்கள்.

இத்தாக்குதலில் ஏற்படும் படுகொலைகளை வெளிநாடுகளுக்கு மறைக்கும் முகமாகவே வன்னியிலிருந்து தொண்டு நிறுவனம் அவசர அவசரமாக வெளியேற்றப் பட்டடனர்.

திட்டங்கள் வருமாறு

ரெயில் பஸ்களில் குண்டு வைப்பது பாடசாலைகளில் தாக்குதல் நடாத்துவது. பஸ்களில் வைத்துக் கொல்வதால் இதன் மூலம் உலகநாடுகளின் அனுதாபத்தைக் கவர முடியும். சிறுவர்களை புலிகள் கொல்வதாக சொல்லமுடியும். இதனூடாக அனுதாபத்தை அடைய முடியும் என்பது அவர்களது குறிக்கோள்.

இத்திட்டத்திற்காக 4 குழுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஒரு தமிழ்க்குழு, ஒரு முஸ்லிம் குழு, 2 சிங்களக்குழு. ஒரு குழுவில் 7இல் இருந்து 12 பேர் வரை அடங்கியுள்ள இக்குழுக்களில் தமிழ் குழுவில் 9பேர் உள்ளடங்கியுள்ளனர் என்பது தெட்டத்தெளிவான உண்மை. இத்தமிழ்க் குழுவின் தலைவர் யாழ்ப்பாணம் தொண்டமானாறைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் முன்பு புலிகள் அமைப்பில் இருந்ததாகவும் பணமோசடி காரணமாக தலைமறைவாகி திரிந்தவர்.

முஸ்லிம் குழுவின் தலைவர் அவரும் அதே யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தவர். இவருடைய சகோதரன் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த குழுக்கள் செய்யப்போகும் செயல்மூலம் தமிழ்மக்களுக்கு பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்படுவது உண்மை. இதில் பாதிக்கப்படுவது புலம்பெயர்தமிழ்மக்களே. இதைத்தடுக்கும் சக்தியாக புலிகள்தான் முன்வரவேண்டும். அதாவது வெளிநாட்டவர்களை இலங்கையில் இருந்து வெளியேற்றி வெளிநாட்டவர்களது உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். அத்துடன் அனைத்துப் பாடசாலைகளும் தற்காலிகமாக மூடிக் காப்பாற்ற வேண்டும். இதைச் செய்யக்கூடிய வல்லமை புலிகளின் அறிக்கைகள் மூலமே நடைமுறைக்கு வரும் என்பதை நாம் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வன்னிக் களமுனைகள் பலவற்றில் புலிகள்-படையினர் உக்கிரச் சமர்!


வன்னிக்களமுனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்றும் பல இடங்களில் உக்கிர சமர்கள் இடம்பெற்றுள்ளன.
விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்குடன் இராணுவத்தினர் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வன்னேரிக்குளம் பகுதி நோக்கி நேற்றுக்காலை பெருமெடுப்பில் இராணுவம் முன்னேற முயன்றவேளையில் அங்கு இரு தரப்புகளுக்கும் இடையே போர் மூண்டது. ஏறக்குறைய நான்கு மணித்தியாலயங்கள் நடந்த இந்தச் சண்டையில் குறைந்தது 22 படையினர் கொல்லப்பட்டனர். நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
இராணுவத்தை சற்றுத்தூரம் முன்னேறவிட்டு, பிறகு எமது படையணிகள் தீவிர முறியடிப்புப் பாய்ச்சலை மேற்கொண்டன. அப்போது உயிரிழந்த தமது சகாக்கள் சிலரது சடலங்களையும் கனரக ஆயுதங்கள் உட்பட பெருந்தொகையான படைப்பொருள்களையும் கைவிட்டுவிட்டு இராணுவத்தினர் தமது பழைய நிலைகளுக்குப் பின்வாங்கி ஓடிவிட்டனர். என்று வன்னியிலுள்ள புலிகளின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இராணுவத் தரப்பிலிருந்து நேற்றுமாலை வரை எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
இதேவேளை
வன்னி வடிளாங்குளத்தில்...
வன்னி விளாங்குளம் மன்னகுளம் புதூர் பகுதிகளை நோக்கி பெருமெடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரை தமது படையணிகள் தீவிர எதிர்த்தாக்குதல் நடத்தி முறியடித்தன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். இந்தச் சமரில் 10 இராணுவத்தினர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர் என்றும் புலிகள் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் நகர்வை ஆரம்பித்த படையினர், நேற்றுமுன்தினம் மாலையில் அங்கிருந்து பின்வாங்கி தமது பழைய நிலைகளுக்குச் சென்றனர் என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சமரின்போது இராணுவத்தினர் கைவிட்டுச் சென்ற படைப்பொருள்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.
அக்கராயன் குளத்தில்
நாச்சிக்குடா பகுதியில் உள்ள கரம்பைக்குளம் குளக்கட்டு பகுதியிலும், அக்கராயன் குளம் பிரதேசத்திலும் நேற்றுமுன்தினம் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் மோதல்களில் கொல்லப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தலைமையகம் நேற்று அறிவித்தது. பெரும் எண்ணிக்கையான படையினர் இதில் காயமடைந்து விட்டனர் எனத் தெரிவித்த இராணுவத் தலைமைப்பீடம், இந்தச் சண்டைகளில் 40 விடுதலைப் புலிகள் இறந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டது.
அதேவேளை வன்னேரிக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் மோட்டார் மற்றும் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் இடங்களை இலக்குவைத்து நேற்றுமதியம் 12 மணிக்கும், 12.30 மணிக்கும் ஜெற் மற்றும் எம்.ஐ. 24 ரக ஹெலிக்கொப்டர்கள் தாக்குதலை நடத்தின என்று படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டது.

புலிகளின் வானோடிகள் குறித்து ஆராய்ந்து வரும் சிறிலங்கா புலனாய்வுத்துறை
தமிழீழ விடுதலைப் புலிகளின் வானோடிகளின் திறன் குறித்து அவற்றை கலைத்துச்சென்று தாக்குதல் நடத்த விரைந்த சிறிலங்கா வான் படையினரின் மூலம் தெரிந்து கொண்டுள்ள அரச புலனாய்வு வட்டாரங்கள், இவ்வளவுக்கு புலிகள் எவ்வாறு வானூர்தி ஓட்ட பயிற்சி பெற்றார்கள் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

இது தொடர்பில் அறிய வருவதாவது:

வவுனியா படைத்தளம் மீது தாக்குதல் நடத்த வந்த புலிகளின் வானூர்திகளை கலைத்து சென்று தாக்குதவதற்கு கொழும்பிலிருந்து சென்ற சிறிலங்கா வான் படையின் எஃப்-7 வானூர்திகள் அந்த கும்மிருட்டு வேளையிலும் ஒருவாறு புலிகளின் வானூர்தியை கண்டுவிட்டன.

தனது வானூர்தி சிறிலங்கா வானூர்தியின் கண்காணிப்பு எல்லைக்குள் வந்துவிட்டதை அறிந்துகொண்ட புலிகளின் வானோடி தனது வானூர்தியை திடீரென கரணம் அடிக்கச்செய்து, சிறிலங்கா வானூர்தியின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார்.

அதேபோல, வவுனியா படைத்தளம் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த புலிகளின் வானூர்தி அங்கு சிறிலங்கா வான்படையின் எஃப்-7 தாக்குதல் வானூர்தி வந்தவுடன் உடனேயே முல்லைத்தீவுக்கு திரும்புவது போல பாசாங்கு செய்துவிட்டு, முல்லைத்தீவு நோக்கி அரைவாசி தூரம் சென்றுவிட்டு, திடீரென திரும்பி வந்து வவுனியா கூட்டுப்படைத்தள அதிகாரி நிர்மல தர்மரட்ணவின் அதிகாரபூர்வ இருப்பிடத்தின் மீது குண்டென்றை வீசிச்சென்றது.

இது போன்ற நுணுக்கமான வான்படை போரியல் முறைகளை இவ்வளவு நேர்த்தியாக புலிகள் எங்கு பயிற்சி பெற்றார்கள் என்பது குறித்து சிறிலங்கா அரச புலனாய்வு வட்டாரங்கள் ஆராய்ந்து வருகின்றன.

சிறிலங்கா படைத் தரப்பு வட்டாரங்களிலிருந்து பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறுகையில், வவுனியா தாக்குதலை பொறுத்தவரை அங்கு தாக்குதல் நடத்த வந்த புலிகளின் வானூர்தியை சுட்டு வீழ்த்தச்சென்ற சிறிலங்கா வான்படை வானோடியை விட புலிகளின் வானோடி மிகவும் சாமர்த்தியமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

வன்னிப்பெரு நிலப்பரப்பு மக்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலைவன்னிப்பெரு நிலப்பரப்பில் மக்கள் இடம்பெயர்ந்துள்ள அவல நிலைமைகள் தொடர்பாக ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஜெனீவாவில் நேற்று வியாழக்கிழமை அனைத்துலக மனித உரிமைகள் ஆணையத்தின் ஒன்பதாவது அமர்வு இடம்பெற்றது. அங்கு மனித உரிமைகள் பற்றிய விவாதத்தில் உரையாற்றும்போதே தூதுவர்கள் இவ்வாறு கவலை தெரிவித்தனர்.

போர் நடவடிக்கைகளினால் வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாகவும் நிவாரணங்கள் சுகாதார மற்றும் அடிப்படை வசதிகள் போதுமானவையாக இல்லை என்றும் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை ஆட்கடத்தல், காணாமல் போதல், கொலைகள் போன்ற மனித உரிமைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் சிறிலங்கா அரசாங்கத்தினால் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

அதேவேளை போர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு பேச்சுக்கான சூழ்நிலையை ஏற்படுவதற்குரிய ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்றில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஈடுபட வேண்டும் நெதர்லாந்து தூதுவர் வலியுறுத்தினார்.

அனைத்துலக மனித உரிமைகள் ஆணையத்தின் ஒன்பதாவது அமர்வில் ஜக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அமெரிக்கா ஹியூமன் றைற் வொச், அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் உட்பட மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இந்த உரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அறிக்கைகளாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

வாயுத்தாக்குதலுக்கு எதிராக ம

வாயுத்தாக்குதலுக்கு எதிராக முகமூடிகளை பயன்படுத்த ராணுவம் முடிவு


வாயுத்தாக்குதலுக்கு எதிராக முகமூடிகளை பயன்படுத்த ராணுவம் முடிவு.ஆனால் இது எவ்வளவு சாத்தியம் என்பது கேள்விக்குறியே.காடுகள் ஊடாக முன்னேறும் படையினர் முகமூடிகளை அணிந்து கொண்டு தாக்குதல் நடத்துவதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.

நாச்சிக்குடாவுக்கு அண்மையாக கடலில் கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் சண்டை

வலைப்பாடு அருகே சற்று நேரத்துக்கு முன் கடலில் கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் சண்டை நடைபெற்றுள்ளது. மேலதிக விபரங்கள் தொடரும்...

எந்திரன் - ரஜினி-ஷங்கர் வெற்றி கூட்டணியின் சீசன்-2 தொடங்கி விட்டது

ரஜினி-ஷங்கர் வெற்றி கூட்டணியின் சீசன்-2 தொடங்கி விட்டது. இங்கல்ல, படுஅமர்க்களமாக அமெரிக்காவில்.

ஏ.ஆர்.ரஹ்மானின் அதிரடியான இரண்டு பாடல்களுக்கு அமெரிக்காவில் ரஜினியும் ஐஸ்வர்யாவும் ஆட ஆரம்பித்துவிட்டார்கள்! `ஒரு கூடை சன்லைட்' பாடல்போல் இந்த இரண்டு பாடல்களுமே புது பாணியில் இருக்கிறது என்கிறது ரஹ்மான் வட்டாரங்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் அமெரிக்காவில்தான் அத்தனை ரகசியங்களும் இருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற காஸ்ட்யூம் டிஸைனரான மேரி-இ வோட், ஸ்டண்ட் மாஸ்டர் யென் வூ பிங்க் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் மாயாஜாலம் காட்டும் ஸ்டேன்வின்ஸ்டன் என ஹாலிவுட் ஜாம்பவான்களுடன் கை கோர்த்திருக்கிறார் ஷங்கர்.

ரொம்ப சிம்பிளான கதைதான். விஞ்ஞானியான ரஜினி தனது தீவிரமான சோதனைகள் மூலம் ஒரு ரோபோவை உருவாக்குகிறார். ஒரு மனிதனைப் போலவே இந்த ரோபோ எல்லா விஷயங்களிலும் பட்டையைக் கிளப்புகிறது. ஒரு கட்டத்தில் ரோபோ தனது நல்ல கேரக்டரிலிருந்து மாறி வில்லன் போல அட்டகாசம் செய்ய ஆரம்பிக்கிறது. இதை உருவாக்கிய விஞ்ஞானி ரஜினி, எப்படிச் சமாளித்து வெற்றி பெற்று மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதே கதை. இதில் விஞ்ஞானியும் ரஜினிதான். ரோபோவும் ரஜினிதான். கதை சில வருடங்களுக்கு முன்பே முடிவாகிவிட்டாலும், தற்போது ரஜினியின் இமேஜ் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப திரைக்கதையிலும், வசனங்களிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார் ஷங்கர்.

ரஜினியின் ரோபோ கேரக்டரைப் பொறுத்தவரை பிரபல ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் நடித்த `பை சென்ட்டெனியல் மேன்' படத்தில் வரும் ரோபோ கேரக்டரைப் போலவே உருவக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய `ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்' என்ற படமும் ஷங்கருக்கு இன்ஸ்பிரேஷன்.

`ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்' படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸில் தூள்கிளப்பியது அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டேன் வின்ஸ்டன் ஸ்டூடியோ. தற்போது இதே நிறுவனம்தான் எந்திரன் ரஜினியின் பரபர ஆக்ஷன் காட்சிகளை ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் மிரட்ட இருக்கிறது.

உலகப் புகழ் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் யென் வூ பிங்க்கின் கால்ஷீட்டை மொத்தமாக வாங்கி வைத்திருக்கிறார்கள். இன்று உலகளவில் நம்பர் ஒன் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஸ்டண்ட் கோரியோகிராஃபர் இவர்தான். ஜாக்கிசானுக்கே வழி காட்டியவர்.

ரஜினிக்கு ஸ்பெஷல் பயிற்சியும் அளிக்கத் தயாராகிவிட்டார் யென். அமெரிக்காவில் நடைபெறப்போகும் இந்தப் பயிற்சிகள் ரஜினியின் உடல் வலிமையை மட்டுமல்ல மனவலிமையையும் கூட்டுமாம்.

ரோபோ ரஜினியின் காஸ்ட்யூமை வடிவமைக்கப் போவது மற்றொரு ஹாலிவுட் காஸ்ட்யூம் டிஸைனர் மேரி.இ.வோட். இவர்தான் `மென் இன் பிளாக்', `பேட்மேன் ரிட்டர்ன்ஸ்' போன்ற படங்களில் உலகின் கவனத்தைக் கவர்ந்தவர்.

விஞ்ஞானி ரஜினியின் ஸ்டைலான லுக்கிற்கு கியாரண்டி கொடுப்பவர் பாலிவுட்டின் காஸ்ட்யூம் டிஸைனர் மணீஷ் மல்ஹோத்ரா. `சிவாஜி'யில் ரஜினிக்கு காஸ்ட்யூம் டிஸைன் செய்தது இவர்தான். ``இந்த வருடம் வெல்வெட் டைப் காஸ்ட்யூம்களுக்கு வரவேற்பு இருக்கும். அதே போல ஸ்லிம் ஃபிட் உடைகள்தான் இப்ப ட்ரெண்ட்'' என்கிறார் மணீஷ். ஐஸ்வர்யாராயின் உடைகளையும் வடிவமைத்துவிட்டார்களாம். அந்த உடை டிசைன்களை பார்த்த ஐஸ் `வாவ்' என்று சொன்னதாக பாலிவுட் வட்டாரங்கள் சொல்லுகின்றன.

மொத்தத்தில் ரஜினி -ஷங்கர் கூட்டணி மீடியாவின் கவனத்தை மீண்டும் தங்கள் மீது கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. அதனால் இனி கவர் ஸ்டோரிகளுக்கும், குட்டிச் செய்திகளுக்கும் பஞ்ச மிருக்காது..

Wednesday, September 17, 2008

வன்னியில்விடுதலைப் புலிகள் விஷவாயு ஆயுதங்களை பயன்படுத்தியதாக இராணுவத் தரப்புக் குற்றஞ்சாட்டியுள்ளது

வன்னியில் நடைபெற்றுவரும் போரில், விடுதலைப் புலிகள் விஷவாயு ஆயுதங்களை பயன்படுத்தியதாக இராணுவத் தரப்புக் குற்றஞ்சாட்டியுள்ளது.
கிளிநொச்சியில், அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது விடுதலைப் புலிகள் மூச்சுத் திணறல் உண்டாக்கக் கூடிய C.S.GAS எனப்படும் விஷ வாயுவைக்கக்கும் கிரனேட் குண்டுகளைக் கொண்டு படையினர் மீது தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.
அக்கராயன் மோதலின் போது மூச்சுத் திணறல் காரணமாக 6 இராணுவத்தினர் அனுராதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புலிகளின் விஷவாயு கக்கும் கிரனேட் குண்டுகளாலேயே பாதிக்கப்பட்டனர் என்று கருதப்படுவதாகவும் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மோதல்கள் இடம்பெறும் வேளைகளில் எதிர்த்தரப்பினரை பலவீனப்படுத்தும் வகையில் பல்வேறு நடைமுறைகள் கையாளப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அந்த வகையிலேயே படையினரின் உற்சாகத்தையும் பலத்தையும் முறியடிக்கும் வகையில் விடுதலைப்புலிகள் புதியதொரு நடமுறையைக் கையாண்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக கிளிநொச்சி, அக்கராயன்குளம், வன்னிவிளாங்குளம் மற்றும் மேற்கு மாங்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருதரப்பு மோதல்களின் போது விடுதலைப் புலிகளால் மூச்சுத் திணறலை ஏற்படுத்தக் கூடிய விஷ வாயுவைகக்கும் கிரனைட் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் 6படையினர் மூச்சு தினறல் ஏற்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகைக்குண்டுகளை ஒத்ததான இந்தக் குண்டுத் தாக்குதலினால் எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை. எதிர்காலத்திலும் விடுதலைப் புலிகளால் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அதனை முறியடிக்கும் வகையில் படையினரும் சுகாதாரத்துறையினரும் நட வடிக்கை எடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

அக்கராயனில் அண்மையில் நடந்த சண்டையில் புலிகள் புதிய தயாரிப்பு பல்குழல் பீரங்கி

அக்கராயனில் அண்மையில் நடந்த சண்டையில் புலிகள் புதிய தயாரிப்பு பல்குழல் பீரங்கிகளை பாவித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனாலேயே படையினருக்கு அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளன,ஆனால் அதை மூடி மறைத்து புலிகள் இரசாயன ஆயுதங்களை பாவித்ததாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஏ9 வீதியில் கிளைமோர் தாக்குதல்- பொதுமக்கள் பலி

வவுனியா வடக்கு புளியங்குளம் புதூர் பகுதியில் பயணிகள் பேருந்து மீது சிறிலங்கா படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் பொது மக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை 8.10 மணியளவில் பயணிகள் பேருந்து மீது கண்டிவீதியில் புளியங்குளம் புதூர் சந்தியில் வைத்து சிறிலங்கா படையினர் கிளைமோர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் மூவர் பேர் கொல்லப்பட்டனர். மூவர் படுகாயமடைந்தனர்.லலிதாராணி (வயது 28), கேதீஸ்வரன் (வயது 28), செல்வநாயகம் (வயது 48) ஆகியோர் காயமடைந்தனர்.கொல்லப்பட்டவர்கள் பெயர் விவரம் இதுவரை கிடைக்கவில்லை.

Tuesday, September 16, 2008

இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம் - மீனவர்கள் படகுகள் உடைப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை உடைத்தும், துப்பாக்கியால் சுட்டும் மிரட்டி விரட்டியுள்ளது இலங்கை கடற்படை.

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல, இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தையும் அடக்க முடியவில்லை. தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கிவருகிறது இலங்கை கடற்படை.

தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக முதல்வர் கருணாநிதி பலமுறை எச்சரிக்கை விடுத்தும், நயமான முறையில் கோரிக்கைகள் விடுத்தும் கூட, இலங்கை கடற்படையின் வெறிச் செயல் கொஞ்சமும் குறையவில்லை.

முன்பு குருவிகளை சுடுவது போல தமிழக மீனவர்களை சுட்டு வந்தனர். இப்போது தமிழக மீனவர்களின் படகுகளைத் தாக்கியும், மீனவர்களைக் காயப்படுத்தியும் வருகின்றனர். இது மட்டுமே அவர்களிடம் தெரியும் வித்தியாசமாகும்.

நேற்று காலை 500க்கும் மேற்பட்ட படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இரு பெரிய கப்பல்களில் கடற்படையினர் அங்கு வந்தனர்.

பின்னர் வானத்தை நோக்கி சுட ஆரம்பித்த கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளையும் சரமாரியாக சுட்டுத் தள்ளினர். பின்னர் 25க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் மீது தங்களது கப்பல்களால் மோதி சேதப்படுத்தினர். இதில் ஒரு படகுமுற்றிலும் உடைந்து போனது.

அப்படியும் வெறி தணியாமல், மீன் பிடி வலைகளை துப்பாக்கிகளால் குத்திக் கிழித்து சேதப்படுத்திய பின்னர், இனிமேல் எல்லைப் பகுதியைத் தாண்டி வந்து மீன் பிடிக்கக் கூடாது. மீறினால் சுட்டு வீழ்த்தி விடுவோம் என எச்சரித்து விட்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் படகுகளுடன் கரைக்குத் திரும்பினர். உடைந்த படகையும் தங்களது படகுடன் கட்டி கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கோபத்தையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்தால், மீண்டும் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.