Sunday, May 9, 2010

இலங்கைத் தமிழருக்கு உகந்த தீர்வை வழங்குவதற்கு இந்தியா தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தவில்லை "றோ' வின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிஹரன்


இலங்கைத் தமிழர்களுக் கான உரிய, உகந்த தீர்வை வழங்குவதற்கு இந்தியா தனது முழுமையான பலத்தையும் பயன்படுத்தவில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலானாய்வுப் பிரிவின் றோவின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிஹரன் புட்டுக்காட்டியுள்ளார்.



இலங்கைத் தமிழர்களுக் கான உரிய, உகந்த தீர்வை வழங்குவதற்கு இந்தியா தனது முழுமையான பலத்தையும் பயன்படுத்தவில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலானாய்வுப் பிரிவின் றோவின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிஹரன் புட்டுக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு உதவி வழங்கக்கூடிய ஆர்வலர்களுட னான கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுன்தினம் சென் னையில் இடம்பெற்றபோது அவர் அதில் கலந்து கொண்டு இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்படுவதற்கு இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா நினைத்தால், இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான முழுமையான தீர்வை முன் வைப் பதற்கு அழுத்தம் கொடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியா அதனை செய்ய மறுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் தற்போது சீரான குடியேற்ற நடைமுறை எவையும் இல்லை. புதிய கட்டுக்கோப்பான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலமே இலங்கை யில் சீரான தமிழ்க் குடியேற்றத்தை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய இராணுவத்தின்
நான்கில் ஒரு பங்கு
இலங்கையில்.....!
இதேவேளை, இலங்கையின் இராணுவத்தினரின் எண்ணிக்கை 2 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தின் நான்கில் ஒரு பங்காக அது காணப்படுகிறது. இது இந்தியாவுக்கு மிகப்பாரிய அச்சுறுத்தல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அருட்தந்தை ஜெகத் கஸ்பார், இலங்கையில் மனித உரிமைகளுக்கான தீர்வு ஒன்று இல்லாமல் வேறு எதனையும் தீர்த்து விட முடியாது எனக் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் ஒரேயொரு நம்பிக்கையாக விடுதலைப் புலிகளே இருந்துள்ளனர். தற்போது முறைமையற்ற முறையில் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசு மக்களை நோக்கி செல்ல வேண்டிய தேவை ஒன்று அங்கு நிலவுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இதில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய ஊடகவியலாளர் பகவான் சிங், விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையை இந்தியா சீனாவிடம் இழந்துவிட்டது எனக் கூறினார்.
இந்த நிலையில் இலங்கைக்கு இனிமேல் இந்தியா தேவைப்படாது என்றும் தற்போது தமிழர்களின் தடயங்கள் அழிக்கப்பட்டு இலங்கை முழுவதும் சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment