Thursday, May 6, 2010

யுத்தத்தின் இறுதிக்கட்ட சம்பவங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு






இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதிக்கட்டத்தில் சர்வதேசரீதியாக ஏற் றுக்கொள்ளப்பட்ட மரபுகள் மீறப்பட்டன என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கான ஆணைக் குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கவுள்ளார் என்று ஜனாதிபதி ஊட கப்பிரிவு அறிவித்துள்ளது.
சர்வதேச மரபுகளை மீறும் நடவடிக்கை கள் இடம்பெற்றனவா, அப்படி இடம்பெற் றால் அதற்கான சூழல் மற்றும் அதற்கான பொறுப்பாளர்கள் யார் என்பவை குறித்தும் ஆணைக்குழு கவனம் செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்கம் மற்றும் கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்கள் தொடர்பான இந்த ஆணைக்குழுவில் இலங்கையையும், வெளிநாட்டையும் சேர்ந்த ஏழுபேர் அடங் கியிருப்பர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சமீபகால மோதலின் போது அனுபவித்த விடயங்கள் மூலமாக கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள் மற்றும் தேசியநல்லிணக்கம் தொடர்பாக ஆராய் வதற்கான இந்தக் குழுவை ஜனாதிபதி விரைவில் நியமிப்பார்.
கடந்தகால மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட துயரங்கள் குறித்து மீட்டுப் பார்ப் பதற்கான சந்தர்ப்பம் தற்போது இருப்ப
தாக ஜனாதிபதி கருதுகிறார்.
மேலும் குறிப்பிட்ட ஆணைக்குழு மோதலின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறான நஷ்டஈட்டை வழங்குவது என்பது குறித்தும் பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment