Sunday, May 2, 2010

எமது சந்ததியினர் செய்த தியாகத்தின் பயனை இழக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படக் கூடாது யாழ்.நகரில் நடந்த மேதினக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜாஇன்றைய சந்ததியினர் எமது இனத் தின் அடையாளத்தை தாங்கிப்பிடிக்க அணிதிரளத் தயாராக வேண்டும். இல்லை யேல் எமது இனம் இதுவரை செய்த தியா கம் தோற்றுப் போய்விடும். தியாகத்தின் பயனை இழக்கும் நிலைக்கு எமது இனம் தள்ளப்பட்டுவிடக் கூடாது.


யாழ்ப்பாணம்,மே2
இன்றைய சந்ததியினர் எமது இனத் தின் அடையாளத்தை தாங்கிப்பிடிக்க அணிதிரளத் தயாராக வேண்டும். இல்லை யேல் எமது இனம் இதுவரை செய்த தியா கம் தோற்றுப் போய்விடும். தியாகத்தின் பயனை இழக்கும் நிலைக்கு எமது இனம் தள்ளப்பட்டுவிடக் கூடாது.
இவ்வாறு கூறினார் மாவை சேனாதி ராஜா எம்.பி.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதினக் கூட்டம் நேற்று மாலை யாழ்.மார்ட்டீன் வீதி யிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத் தில் இடம்பெற்றது.
விவசாய சங்கங்களின் சம்மேளனத் தலைவர் செ.இலகுநாதனின் தலைமை யில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விசேட உரை நிகழ்த்தும்போது மாவை சேனாதி ராஜா மேலும் தெரிவித்தவை வருமாறு:

தற்போது எமது சூழலில் நிலவுகின்ற அச்ச நிலையைப் போக்கி எமது இலட் சியங்களை அடைவதற்கு இளைஞர்கள் அனைவரும் எமது கட்சியுடன் இணைய வேண்டும். இளைஞர்களிடம் பொறுப் பைக் கொடுக்கத் தீவிரமாக யோசித்து வருகின்றேன். நாடாளுமன்றப் பொறுப் பிலிருந்து விலகி வேறு வழியில் செயற் படுவதற்குக் கடந்த வருடமே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் வன்னிப் போர் இத்தனை தூரம் மோசமாக முடிந்த தாலேயே மீண்டும் நான் இத் தேர்தலில் போட்டியிட வந்தேன்.
நாம் அடுத்ததாகச் செய்ய வேண்டியது என்ன? இளைஞர்கள் எமது கட்சியில் இணைவதற்கு, இன்று எமது கட்சியில் இருப்பவர்கள் தமது சந்ததியினரை இணைக்க வேண்டும். அதுதான் ஒரே அடிப்படை வழி.
நிலங்கள் விலைபோகின்றன
இராணுவமயம், சிங்களமயம், அவற்றை விட நவீன வர்த்தகத்துக்குக் கூடாக எமது நிலங்கள் விலைபோய்க் கொண்டிருக்கின் றன. எமது மண்ணுக்குள்ளே நடக்கும் இந்த நிலையை அறியாமல் பலர் இன்று "ரிவி' நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்டவர்களாக இருந்து வருகின்றார்கள்.
எம்மவர்கள் திண்டாட்டம்
சிறிதாவது நாம் விழிப்படைய வேண் டும். இன்று ஏ9 பாதை திறக்கப்பட்ட பின் னர் என்ன நடக்கிறது. இந்தத் தெருக்களை எல்லாம் பாருங்கள். யாருடைய வியா பாரப் பண்டங்கள் குவிக்கப்பட்டுள்ளன? எமது உற்பத்தியாளர்களுக்கு என்ன நடக் கிறது? ஏற்கனவே இங்கு உற்பத்தி செய் யப்படுகின்ற பண்டங்களுக்கு உற்பத்திச் செலவை பெற்றுக்கொள்ள முடியாமல் அவர்கள் திண்டாடுகின்றார்கள்.
இன்று விலைவாசியின் நிலை என்ன? ஏதோ யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் தமது பிள்ளைகள் வெளிநாடுகளில் படாதபாடு பட்டு சொல்லெணாத் துன்பப்பட்டு உழைத்து அனுப்பும் பணத்தில் தமது வாழ்வை நகர்த்திச் செல்கின்றனர்.
இருந்தாலும் அந்தப் பிள்ளைகளின் ஆதரவு எமக்குத் அதிகமாகத் தேவைப் படுகிறது. எமது இனத்துக்காக அங்கே போராட அவர்கள் ஆயத்தமாக உள்ளர்கள். அது அந்த நாட்டு சட்டத்திட்டத்திற்கு அமைவானதாக இருக்கும்.
நாம் இப்போது போராட்டத்திற்கு வாருங்கள் என்று அழைக்கவில்லை. பொருளாதார வளர்ச்சியில் உச்ச நிலை யில் உள்ள நாடுகளின் பொருளாதாரம் இன்று ஏழை நாடுகளுக்குள் குவிக்கப் பட்டு வருகின்றது.
வடக்கு, கிழக்குப் பகுதி முழுவதும் வாக் களிப்பு மிகவும் குறைவாக இருந்தபோதும் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் சிங்கள அரசுத் தலைமைக் கும் வெளிநாட்டு சக்திகளுக்கும் தமிழ் மக்கள் சில விடயங்களை வெளிப்படுத் தியிருக்கிறார்கள்.
எமது இனமும் நிலமும் சூறையாடப்பட்டு வருகின்றது
எமது சமூகம் விழித்தெழ வேண்டும். எமது இனமும், நிலமும் சிங்கள பேரின வாதத்தால் சூறையாடப்பட்டு வருகின்றன.
அத்துடன், எமது பகுதியில் மூடப் பட்ட பெரிய தொழிற்சாலைகள் எவையும் மீளத் திறக்கப்படவில்லை. புதிய தொழிற் சாலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் வங்கி கள், நிதி நிறுவனங்கள் குவிக்கப்படுகின் றன. இவையும் எமது வளங்களை சுரண்ட முற்படுகின்றன.
உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப் படவேண்டும். ஆனால் அப்படி ஏதும் இடம்பெறவில்லை. அரசும் அரசு சாந்தவர் களும் எமது வளங்களைச் சுரண்டிவரு கின்றனர்.
பலாலி விமானத்தளத்தை உள்ளடக் கிய பகுதிகள் விவசாய உற்பத்திகளுக்கு மிகவும் ஏற்ற நிலப்பரப்பு. அது தொடர் பாக அரசும் அமைச்சர்களும் கதைத்தார் களா என்றால் இல்லை. இதே போன்று தான் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற் சாலையின் நிலையும். முருகைக் கற்பாறை கள் அகழப்படுவதனால் பல்வேறு வித மான சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படும். இவை தொடர்பாக இந்தியப் பிரதமருக் கும் வலியுறுத்தி யிருந்தோம்.
தொழிலாளர் வர்க்கம் சுதந்திரமாக நட மாடமுடியாத சூழ்நிலையும் சுதந்திரமாக உழைக்க முடியாத நிலைமையும் உள் ளன.
வேலைவாய்ப்பு வழங்குகிறோம் எனக் கூறி வேலையற்ற பட்டதாரிகளை மூளைச் சலவை செய்து அவர்களை இளைஞர் களை தமிழ் இன விரோத செயற்பாடு களுக்குத் துணைபோகத் தூண்டுகின் றனர்.
எமது வளத்தைப் பயன்படுத்தி, தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில்துறை கள் ஏற்படுத்தப்படவேண்டும். அப்போது தான் இந்த இழிநிலைக்கு முடிவு கட் டப்படும் என்றார்.
இந்நிகழ்வில் நடாளுமன்ற உறுப்பி னர்களான ஈ.சரவணபவன், எஸ்.சிறித ரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ. சிறில் மற்றும் தொழிற் சங் கங்களின் பிரதிநிதிகள் பலரும் உரை நிகழ்த்தினர்.
மேதினக் கூட்டத்தில் யாழ்மாவட் டத்தின் பல பாகங்களிலிருந்தும் தொழி லாளர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment