Thursday, May 6, 2010

சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கையை உடனடியாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்குக! ஐ.தே.முவின் அநுரகுமார வலியுறுத்து



இதுவரை படையி ன ரிடம் சரணடைந்த, அவர்களால் கைது செய் யப்பட்ட தமிழ் இளை ஞர்களின் எண்ணிக்கையை அரசு உடனடி யாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய முன்னணியின் எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.
நேற்றைய அவசரகாலச்சட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
யுத்தம் முடிவடைந்து ஒரு வருடமா கின்றது. இனங்களுக்கிடையே ஒற்றுமை யைக் கட்டியெழுப்ப அரசு இன்னும் நட வடிக்கை எடுக்கவில்லை. அதற்கான ஆற் றல் அரசிடமில்லை.
சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் பற்றிய நம்பிக்கையை இந்த அரசு தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பத் தவறிவிட்டது. இவை தொடர்பில் அந்த மக்கள் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர்.
அரசு இனவாதத்தை உள்ளடக்கிய கீழ்த்தரமான மனோநிலையில்தான் செயற் படுகிறது. அடுத்தவர்களுக்கு மரியாதை வழங்க அரசு தவறிவிட்டது. இனங்களை மதிக்காதவர்களை ஒற்றுமைப்படுத்த இந்த அரசிடம் ஆற்றல் இல்லை.
படையினரின் தியாகத்தால் பெறப் பட்ட யுத்த வெற்றியின் பலன்கள் இந்த மக்களிடம் சென்றடையவில்லை. இது எமது நாடு என்ற உணர்வை அரசு தமிழ் மக்களிடையே இன்னும் ஏற்படுத்த வில்லை.
படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை மற் றும் அவர்களின் விவரங்கள் எவற்றையும் அரசு வெளியிடவில்லை.
தமது பிள்ளைகள் உயிருடன் இருக் கின்றார்களா என்று தேடி அந்த இளை ஞர்களின் பெற்றோர்கள் புகைப்படங்களு டன் அகதி முகாம்களில் ஏறி இறங்குகின் றனர்.
அந்தப் பெற்றோர்களுக்காகக் கைதுசெய் யப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் எண் ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அரசு உடனடியாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும். என்றார்.

No comments:

Post a Comment