|
Friday, June 11, 2010
வடக்கு, கிழக்கு இணைப்பு உடனடியாகச் சாத்தியமில்லை என்பதனை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாக டக்ளஸ் தெரிவிப்பு
Thursday, June 10, 2010
அறிமுகமா-அங்கீகாரமா
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சைக்குரிய ஒருவராக மாறியுள்ளார்.அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இந்தியப்பிரதமர் மன்மோஹன் சிங்கிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியால் அறிமுகம் செய்துவைக்கப்படுவதை படத்தில் காணலாம்
மஹிந்த ராஜபக்ச, இமாச்சல பிரதேசத்திற்கு சென்றுள்ளார்
ஷிம்லாவிற்கு சென்ற அவர்களை நகர முதல்வர் ஊர்மிளா சிங்,, முதலமைச்சர் பிரேம்குமார் துமால் மற்றும் அமைச்சர்கள் பலரும் ராஜ்பவனில் வைத்து வரவேற்றுள்ளனர். ஜனாதிபதி தற்போது ஒபரோய் குழுமத்தை சேர்ந்த வைல்ட் பிளவர் ஹோல் விருந்தகத்தில் தங்கியுள்ளார். அதேவேளை, பெரும்பாலான நேரத்தை பிரிட்டிஷ் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களிலேயே ஜனாதிபதி செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபராய் விருந்தகம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள பர்ணஸ் கோட் என்ற கட்டிடம் வரலாற்று சிறப்பு மிக்கது என ரஜிவ் பின்டால் தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையில் கடந்த 1971 ம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை பர்னஸ் கோட்டில் வைத்தே கைச்சத்திடப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் ஷிம்லா நகர ஆளுநரின் வாசஸ்தலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, 1832 ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டிடம், அப்போதை ஆண்டு பஞ்சாப் ஆளுனர் லெப்டினட் சேர் லோயூஸ் டானேயின் வசித்துவந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில். ஒபராய் குழும விருந்தகம் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அருகில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா தங்கிச் செல்லும் ஒய்வுபெறும் சொகுசு இல்லமும் உள்ளது. இந்த இல்லம் பிரிட்டிஷ் இராணுவத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி ஒருவரின் வாசஸ்தலமாகவும் பயன்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும். இந்திய சுதந்திர தினத்திற்கு பின்னர் இந்த கட்டிடம் இமாச்சல பிராந்திய சுற்றுலா அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் விருந்தகமாக செயற்பட்டு வருகிறது. இதனிடையே, 1992 ம் ஆண்டு தீவிபத்து ஒன்றையும் இந்த கட்டிடம் சந்தித்திருந்தது. கடந்த 1995 ம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்த கட்டிடங்களை ஒபராய் குழுமத்திற்கு கையளித்துள்ள நிலையில், இது கடல் மட்டத்தில் இருந்து 8300 அடி உயரத்தில் அடர்ந்த வன சுற்றாடலுக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
Wednesday, June 9, 2010
விண்ணைத்தாண்டி வருவாயா .....
13 ஆவது திருத்த அடிப்படையில் தீர்வு; புனர்வாழ்வுப் பணியைத் துரிதமாக்குக! மன்மோகன் சிங் வலியுறுத்து; மஹிந்த இணக்கம்
* இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு இசைவாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வு ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.
* சிறுபான்மை இன மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக அவர்களின் பிரதிநிதிகளூடாகத் தாம் பேச்சுவார்த் தையை ஆரம்பித்துள்ளதாகவும், 13ஆவது திருத்தத்தை உள்ளடக்கிய தீர்வைக் காண்பதே தமது இலக்கு என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்கு றுதியளித்தார்.
* போரினால் இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக்குடியமர்த்த வேண் டும் என்ற இந்தியப் பிரதமரின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை ஜனாதி பதி அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
* இதேவேளை வடக்கு, கிழக்கைச் சேரந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு 50,000 வீடுகளைக் அமைத்துக்கொடுப்பதற்கு
இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது.
இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
ண மடு தலைமன்னார் ரயில்வே பாதையை அமைப்பதற்கு இந்தியா 800 மில்லியன் டொலர்களை கடன் உதவியாக வழங்கும்.
ண பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம், தூத்துக்குடி கொழும்பு பாதைச்சேவை மற்றும் தலைமன்னார் இராமேஸ்வரம் பாதைச் சேவைகளைப் புனரமைக்கவும், மீளத்தொடங்கவும் இந்தியா உதவிகளை வழங்கும்.
ண இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்கு யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் இந்தியாவின் கொன்சல்ஜெனரல் அலுவலகங்களைத் திறத்தல்.
ண கல்வித்துறை வளர்ச்சியில் இருநாடுகளும் இணைந்து செயற்படுதல்.
ண பாதுகாப்பு, மின்சக்தி, ரயில் போக்குவரத்து மற்றும் கலாசாரத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தல்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், குற்றவியல் சம்பந்தமான சட்ட விவகாரங்கள், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை சொந்த நாட்டிடம் கையளித்தல் ஆகிய துறைகளில் நெருங்கிய உறவுகளையும், காத்திரமான செயற்பாடுகளையும் முன்னெடுத்தல், அவர்கள் சம்பந்தமாகவும் நேற்றைய பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் மூலம் இணக்கம் காணப்பட்டது.
இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தியில்லை : டி.ஆர்.பாலு
டில்லி சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை, 14 பேர் கொண்ட தமிழக எம்பிக்கள் குழு, டி.ஆர்.பாலு தலைமையில் நேற்று சந்தித்தது.
இதன்போது, இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களை, அவர்களின் சொந்த இடத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழர் மறுவாழ்வு பணிகளை விரைவுப்படுத்துமாறும், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண வேண்டும் எனவும் குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.
இச்சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த டி.ஆர்.பாலு கூறுகையில்,
"ராஜபக்ஷவுடனான சந்திப்பு ஒரு முன்னேற்றம் மட்டுமே. அவருடனான சந்திப்பு திருப்தி அளிக்கவில்லை" என்றார்.
சனியனைத்தூக்கி பனியனுக்குள் போட்டுக்கொண்ட டக்கி
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனு:
இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இருந்தார். இவர் அலுவல் ரீதியாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார்.
1986-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.
வெளியே வந்த பிறகு, 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
1989-ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்.
இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தரையிறங்கிய இராட்சதர்.....
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் கைகொடுத்து வரவேற்பதையும் அருகில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ நிற்பதையும் படத்தில் காணலாம்.
Tuesday, June 8, 2010
சிலாபத்தில் இந்திய வர்த்தகர் கடத்தல்; கடுமையான தாக்குதலின் பின் விடுவிப்பு
தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது எம்.மணியம் ஹரிராஜ் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவராவார்.
இந்த கடத்தல் சம்பவத்துக்கு ஆரச்சிகட்டுவை பிரதேச சபையின் தலைவர் ஜகத் சமந்த என்பவரே காரணாமாகவிருந்தார் என்று பொலிஸ் விசாரணைகளியிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்துள்ள இந்திய வர்த்தகர் தற்போது சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை ஜனாதிபதி - தமிழக எம்பிக்கள் இன்று சந்திப்பு
ஜனாதிபதி ராஜபக்ஷ மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். இலங்கை பிரச்சினை குறித்து முக்கிய தலைவர்களைச் சந்தித்து அவர் பேசுவார்.
கடந்த 6ஆம் திகதி முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கும் வகையில், அவர்களைச் சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ராஜபக்ஷவிடம் வலியுறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.
மேலும் இதுதொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டில்லி சென்று, ராஜபக்ஷவை நேரில் சந்தித்து வலியுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு அவர் உத்தரவிட்டார்.
முதல்வர் கருணாநிதியின் கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்த டி.ஆர்.பாலு, நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, ராஜபக்ஷவிடம் இலங்கை தமிழர்களை விரைவில் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்த வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் முதல்வர் கருணாநிதி உத்தரவுபடி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கவிஞர் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், இ.ஜி.சுகவனம், ஆதிசங்கர், அப்துல்ரகுமான், ஆர்.செந்தாமரைச் செல்வன், ஜே.கே.ரித்தீஸ், எஸ்.ஆர்.ஜெயதுரை, ஏ.ஏ.ஜின்னா, வசந்தி ஸ்டாலின், மணிசங்கர் அய்யர், எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, பி.விஸ்வநாதன், மாணித்தாகூர், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், ஞானதேசிகன் ஆகியோர் இலங்கை அதிபர் ராஜபக்ஷவைச் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை தீர்க்குமாறு வலியுறுத்துவர் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்படுகிறது
மகிந்தவுக்கு புதுடில்லியில் வரவேற்பு...
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபஸ உள்ளிட்ட குழுவினர் புதுடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்குவதையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி. பிரணித்கெளர் அவர்களை வரவேற்பதையும் படங்கலில் காணலாம்.
Thursday, June 3, 2010
ஜனாதிபதி தலைமையிலான குழு தமிழ் கூட்டமைப்புடன் திங்களன்று பேச்சு
பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு இன்று வெள்ளிக்கிழமை கூட்டமைப்புக்கு அனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார். இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முக்கிய அமைச்சர்கள் சிலரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள் என்றும் சிரேஷ்ட அமைச்சர் கூறினார். மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என அறிய முடிகின்றது.
அரசாங்க பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது அரசியல் தீர்வுத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று தெரியவருகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் எட்டாம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் ஏழாம் திகதி திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளமை விசேட அம்சமாகும் எனக் கருதப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த எதிர்பார்ப்பதாக அரசாங்கம் கூறிவந்த நிலையில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தத் தயார் என்று தமிழ்க்கூட்டமைப்பு அண்மையில் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ததாக தெரியவருகின்றது.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தனுடன் அண்மையில் உத்தியோகப்பற்றற்ற முறையிலான பேச்சுவார்த்தை ஒன்றில் தான் ஈடுபட்டதாகவும் இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்றும் கூட்டமைப்புக்கு இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் திறந்த அழைப்பு ஒன்றையே விடுத்துள்ளது எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறுகின்ற முதலாவது சந்திப்பு இதுவாகும். இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் அங்கு பிரதமர் உட்பட முக்கியஸ்தர்கள் பலருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தைகளின்போது இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் விரிவாக ஆராயப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனப்பிரச்சினைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வுத்திட்டம் ஒன்றினை தயாரித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த தீர்வுத்திட்டம் குறித்து இந்திய மத்திய அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்க் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையிலேயே புதுடில்லிக்கான ஜனாதிபதியின் விஜயம் அமையவுள்ளது.
இந்திய தலைவர்களுடனான பேச்சுக்களுக்கு முன்னோடியாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் குற்றம்புரிந்த ஆசிரியர் தலவாக்கலையில் கைது
பல நாட்களாகத் தலைமறைவாகி இருந்த இவரைப் பொலிஸார் தேடிவந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் சட்டதரணி ரேணுகா ஹேரத்திடம் தனக்கு முன்பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
Thursday, May 13, 2010
விடுதலை புலிகளுக்கு எதிரான போருக்காக வன்னிக்கு வந்த இந்திய ஜெனரல் தீபக் கபூர்: இந்திய நிருபர் தகவல்!!
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் சிறீலங்கா இராணுவத்தினருக்கு இந்தியப்படைகள் களத்தில் நின்று கட்டளைகளையும் நெறிப்பபடுத்தல்களையும் வழங்கியமைக்கு தகுந்த சாட்சியாக இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே தனது அனுபவப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் இந்திய படைகளும் ஆயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு ஆதாரமாக இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் தீபக் கபூர் அங்கு களமுனை பணிகளில் ஈடுபட்டிருந்தமை நிக்கல் கோக்கலேயின் பத்தியொன்றில் வெளியாகியிருக்கின்றது.
போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடந்த மே மாத நடுப்பகுதியில் வன்னிப்பகுதி நேரடியாக சென்று செய்தி சேகரித்தவர் என்ற வகையில் அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ள இந்தியாவிலன் புதுடில்லி தொலைக்காட்சியின் பாதுகாப்புத்துறை நிருபரும் முன்னாள் அவுட் லுக் சஞ்சிகை நிருபருமான நிக்கல் கோக்கலே தனது பத்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:-
விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் இவ்வாறான ஒரு முடிவைக்கிட்டும் என்றும் எதிர்பார்த்திராத பலரில் ஒருவராக நானும் இந்தியாவிலேயே இருந்து செய்திகளை அவதானித்துக்கொண்டிருந்தேன். ஆனால், போர் முடிவடைந்துவிட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்காவிலிருந்து தொடர்ச்சியாக கிடைத்த தகவல்களை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்ற தொடர் குழப்பநிலை இருந்துகொண்டே இருந்தது. இறுதியில் சிறீலங்காவுக்கு செல்வது என்ற முடிவுடன் எனது ஒளிப்பதிவாளர் தனபாலுடன் கொழும்புக்கு சென்றேன.
அங்கு சென்று பொன்சேகா, கோத்தபாய உட்பட பலரை செவ்வி கண்டேன். பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இடத்துக்கும் சென்று செய்தி சேகரித்தேன்.
இதன்பின்னர், மே 22 ஆம் திகதியும் அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பல கேள்விகளை கேட்டேன். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறதே? எவ்வாறு அவர் கொல்லப்பட்டார். என்பது உட்பட பல கேள்விகளை தொடுத்தேன்.
அதற்கு பொன்சேகா, “உங்களது நாட்டு இராணுவ தளபதிதான் களமுனையில் நின்றார். எங்களது இராணுவ வெற்றியை பாராட்டினார்” – என்று பதிலளித்தார். அதற்கு நான் ” ஆம். ஜெனரல் தீபக் கபூர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சீறிலங்காவின் இராணுவ நடவடிக்கையில் விசேட கவனம் செலுத்திவந்தார் என்பது எனக்கு தெரியும்” – என்றேன். அதற்கு பொன்சேகா ” என்ன…தீபக் கபூரை உங்களுக்கு தெரியுமா” என்றார். அப்போது பொன்சேகாவுடன் கூடவிருந்த சிறிலங்கா இராணுவத்தின் அப்போதைய பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார ” இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பான நிருபராக நிக்கின் பல ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார்” என்று பொன்சேகாவுக்கு விளக்கினார்.
- இவ்வாறு அவர் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இராணுவத்தில் 43 வருடங்களாக பணியாற்றிய ஜெனரல் தீபக் கபூர் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, May 12, 2010
இந்தியத் திரைப்பட விழாவில் அமிதாப் கலந்து கொள்ளமாட்டார்- சீமான்
எதிர்வரும் ஜீன் மாதம் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை கொழும்பில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெறவிருந்தது. இருப்பினும் இதற்கு எதிராக போராட்டத்தை நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் அமிதாப் பச்சனின் வீட்டுக்கு முன் மேற்கொண்டார்.
எனவே இப் போராட்டத்தின் பின்னே இந்தியத் திரைப்பட விழாவில் அமிதாப் கலந்து கொள்ளமாட்டார் என அமிதாப் பச்சன் முடிவு செய்ததாக சீமான் தெரிவித்துள்ளார். _
Sunday, May 9, 2010
இலங்கைத் தமிழருக்கு உகந்த தீர்வை வழங்குவதற்கு இந்தியா தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தவில்லை "றோ' வின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிஹரன்
இலங்கைத் தமிழர்களுக் கான உரிய, உகந்த தீர்வை வழங்குவதற்கு இந்தியா தனது முழுமையான பலத்தையும் பயன்படுத்தவில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலானாய்வுப் பிரிவின் றோவின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிஹரன் புட்டுக்காட்டியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக் கான உரிய, உகந்த தீர்வை வழங்குவதற்கு இந்தியா தனது முழுமையான பலத்தையும் பயன்படுத்தவில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலானாய்வுப் பிரிவின் றோவின் முன்னாள் தலைவர் கேணல் ஹரிஹரன் புட்டுக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு உதவி வழங்கக்கூடிய ஆர்வலர்களுட னான கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுன்தினம் சென் னையில் இடம்பெற்றபோது அவர் அதில் கலந்து கொண்டு இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்படுவதற்கு இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா நினைத்தால், இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான முழுமையான தீர்வை முன் வைப் பதற்கு அழுத்தம் கொடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியா அதனை செய்ய மறுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் தற்போது சீரான குடியேற்ற நடைமுறை எவையும் இல்லை. புதிய கட்டுக்கோப்பான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலமே இலங்கை யில் சீரான தமிழ்க் குடியேற்றத்தை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய இராணுவத்தின்
நான்கில் ஒரு பங்கு
இலங்கையில்.....!
இதேவேளை, இலங்கையின் இராணுவத்தினரின் எண்ணிக்கை 2 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தின் நான்கில் ஒரு பங்காக அது காணப்படுகிறது. இது இந்தியாவுக்கு மிகப்பாரிய அச்சுறுத்தல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அருட்தந்தை ஜெகத் கஸ்பார், இலங்கையில் மனித உரிமைகளுக்கான தீர்வு ஒன்று இல்லாமல் வேறு எதனையும் தீர்த்து விட முடியாது எனக் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் ஒரேயொரு நம்பிக்கையாக விடுதலைப் புலிகளே இருந்துள்ளனர். தற்போது முறைமையற்ற முறையில் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசு மக்களை நோக்கி செல்ல வேண்டிய தேவை ஒன்று அங்கு நிலவுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இதில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய ஊடகவியலாளர் பகவான் சிங், விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையை இந்தியா சீனாவிடம் இழந்துவிட்டது எனக் கூறினார்.
இந்த நிலையில் இலங்கைக்கு இனிமேல் இந்தியா தேவைப்படாது என்றும் தற்போது தமிழர்களின் தடயங்கள் அழிக்கப்பட்டு இலங்கை முழுவதும் சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
Thursday, May 6, 2010
இலங்கை அதிகாரிகளைச் சந்திக்க மலேசிய அகதிகள் மறுப்பு : அமைச்சுப் பணிப்பாளர்
தாம் அகதிகளாக அல்லாமல் சிறைக்கைதிகளாக நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தமை குறித்து, அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே பணிப்பாளர் இதனைத் தெரிவித்தார்.
மேற்படி அகதிகள் தொடர்பில், இலங்கை அதிகாரிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பும் இணைந்து இவர்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முனைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, அகதிகள் பற்றிய புலன் விசாரணைகள் முடியும் வரை, அவர்களைச் சந்திக்க இலங்கை அரசாங்கத்திற்கு மலேசிய அதிகாரிகள் தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி, 31 பேரும், 24 ஆம் திகதி 75 பேருமாக 106 இலங்கை அகதிகள் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளுடனான போர் முடிந்த தினத்தை விமரிசையாகக் கொண்டாடுகிறது அரசு
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் கடந்த வருடம் மே 18 ஆம் திகதி யுடன் முடிவுக்கு வந்து ஒரு வருடம் கழி வதை அரசு வெகு விமரிசையாகக் கொண் டாடத் திட்டமிட்டுள்ளது.
இராணுவ சேவைகள் அதிகாரசபை எதிர்வரும் 18 ஆம் திகதியை பயங்கரவாத ஒழிப்பு தினமாகப் பிரகடனப்படுத்தி உள் ளது.
இக்கொண்டாட்டங்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஒருவார காலம்வரை இடம்பெறும். இறுதி நாளான 18 ஆம் திகதி நாடாளுமன்ற விளையாட்டு மைதா னத்துக்கு எதிர்ப்பக்கமாக அமைந்திருக் கும் போர் வீரர்கள் நினைவுத் தூபி முன் பாக சம்பிரதாய வைபவம் ஒன்று இடம்பெற உள்ளது. இச்சம்பிரதாய வைபவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிப்பார்.
இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, கடற்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் கலந்துகொள்கின்ற னர்.
அத்தினத்தில் மாலை 6 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் தீபம் ஏற்றி, போரில் உயிரைத் தியாகம் செய்த படையினரை நினைவுகூரவேண்டுமென்று இராணுவ சேவைகள் அதிகாரசபை கோரி உள்ளது.
Tuesday, May 4, 2010
இந்திய உளவுத்துறை ராவின் சில்மிசங்கள்
மன்மோகன் ஷர்மா, சீனத் தலைநகரில் இந்திய தூதரகத்தின் அதிகாரி. 'ரா'வில் இருந்து பிரத்தியேகமாக உளவு பார்க்க அனுப்பிவைக்கப்பட்டவர். 'சீன மொழி படிக்கிறேன்' என்று பெய்ஜிங் அழகியிடம் சரணடைந்தார். இந்திய ரகசியங்கள் எல்லாம் இரண்டாவது 'பெக்'கில் வெளியேறின. சீன அரசால் பிரத்தியேகமாக அனுப்பப்பட்ட இந்தப் பெண், லகுவாகப் பிடித்த மீன் - ஷர்மா. இந்தியா தூங்கி எழுந்து அவரைத் திரும்ப அழைப்பதற்குள், பல ரகசியங்கள் அந்தப் பெண்ணின் மடியில்!
2007-ம் ஆண்டு ஹாங்காங்கில் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய ரவி நாயர், சீன உளவுத் துறையின் பெண்ணிடம் அம்பேல். பல ரகசியங்கள் கைமாறின. நாயரை அவசரமாக கொழும்புக்கு மாற்றினார்கள்!
உலகின் பல நாடுகளைக் கண்காணிக்கும் 'ரா' அமைப்பில் இருந்த ரபீந்தர் சிங் என்பவர், அமெரிக்க உளவாளியாகச் செயல்பட்டார். அமெரிக்காவைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தவர் 'டாலருக்கு' விலை போனார். இவர் மூலம் பல மிக முக்கியத் தகவல்கள் லீக் ஆகின. தாம் கண்காணிக்கப்படுவதை உணர்ந்த சிங், 2004-ம் ஆண்டு நேபாளம் வழியாக அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார். இன்று வரை அவரை நாடு கடத்தக் கேட்டும் அமெரிக்கா அசைந்து கொடுக்கவில்லை!
இந்திய பிரதமரின் அலுவலகத்திலேயே சி.ஐ.ஏ. உளவாளிகள் தைரியமாக வலம் வந்தனர். பிரதமராக இருந்த வாஜ்பாய் அணு ஆயுத சோதனை செய்ய இரண்டு முறை குறித்த தேதியும் அமெரிக்காவுக்குத் தெரிந்துபோனது!
அதுசரி நம்ம விஜயகாந் சார் போல நாட்டைக்காக்கும் உளவுத்துறை அதிகாரிகள் யாருமே இல்லையா?
