Showing posts with label தமிழக சாமியார்கள். Show all posts
Showing posts with label தமிழக சாமியார்கள். Show all posts

Monday, March 15, 2010

சாமியார்மேனியா – தமிழக அரசுக்கு ஆலோசனைகள்

தமிழ்நாடு சாமியார் வாரியம் என்று ஒன்றை உண்டாக்க வேண்டும். சாமியார்களையும் ரெகுலேட் செய்த மாதிரி இருக்கும், கட்சிக்காரர்களுக்கு வாரியத் தலைவர் பதவி கொடுத்த மாதிரியும் இருக்கும்.

சிறு தொழிலுக்கு விண்ணப்பிக்கிற மாதிரி சாமியார் ஆக விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஹார்மோன் ஊசி போட்டு testosterone சுரப்பிகள் சுத்த சவரம் செய்யப்படும்.

கோவணம் மட்டுமே உடுத்த அனுமதிக்கப்படும். இதன் காரணமாக பெண்கள் ஆசிரமம் பக்கம் வருவது தவிர்க்கப்படும்.

சாமியார் லைசன்ஸ் வழங்கும் போது RSP சீரிஸில் (Registered Samiyar Practitioner) ஒரு நம்பர் தரப்படும். அதை ஆசிரம வாயிலில் கொட்டை எழுத்தில் எழுத வேண்டும். கோவணத்திலும் அச்சிட்டுருக்க வேண்டும்.

யாசித்துதான் சாப்பிட வேண்டும். வெங்காயம், முருங்கைக்காய் வாசனை வருகிற தெருக்களில் சாமியார் காணப்பட்டால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும்.

ஆன்மிகம் தவிர்த்து வேறு எதைப்பற்றி ஒரு வார்த்தை பேசினாலும் லைசன்ஸ் ரத்து.

சொற்பொழிவுகளுக்கு ஏதாவது சன்மானம் தர விரும்புபவர்கள் அரசிடம் செலுத்த வேண்டும். அது சாமியார்கள் நிர்வாண-சாரி நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.

ஒரே ஒரு குடிலும் அதில் ஒரு ஸ்டீல் கம்பிக் கொடியும் மட்டுமே அனுமதிக்கப்படும். கட்டிக்கொள்ள ஒன்று காயப்போட ஒன்று என்று இரண்டு கோவணங்கள் வழங்கப்படும். மூன்றாவது கோவணம் வாங்க வேண்டும் என்றால் முதல் இரண்டில் ஒன்று கிழிந்து விட்டது என்று நிரூபித்தாக வேண்டும்.

குடில் என்று சொன்னோமே, அது நாற்புறமும் கண்ணாடியால் ஆனது. வெஸ்டன் டாய்லேட் தரப்பட்டு, அதிலும் இடுப்புக்கு மேல் கண்ணாடி இருக்கும்.