Showing posts with label இலங்கை அரசியல். Show all posts
Showing posts with label இலங்கை அரசியல். Show all posts

Thursday, May 6, 2010

தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்- நா.உ சரத் பொன்சேகா







யுத்தக் காலப்பகுதியில் இராணுவத்தினரால் நாட்டுக்கும், மக்களுக்கும் எதிராக குற்றம் செய்திருந்தால் அவை வெளிக்கொணரப்படுவதோடு, தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் எவராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தேசிய கூட்டணியின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைப்பெற்ற போது போர்குற்றங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பொன்சேகா, முன்னாள் இரானுவ தளபதி என்ற வகையில் விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தக் காலப்பகுதியில் இடம் பெற்றதாகக் கூறப்படும் எந்தவொரு சம்பவத்தையும் மறைக்க விரும்பவில்லை. இச் சம்பவங்கள் தொடர்பில் எந்தச் சந்தர்ப்பத்திலும் கேட்டாலும் அதனை பற்றி வெளிப்படையாக கூற நான் தயாராக இருக்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தினால் இளைஞர் யுவதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்- நாமல் ராஜபக்ஷ _

அவசரகாலச் சட்டத்தினால் என்னை போன்ற இளைஞர், யுவதிகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டியதன் நேரம் நெருங்கியுள்ளது- எனினும் உடனடியாக செய்ய முடியாது என அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கன்னி உரையில் தெரிவித்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. பிரதமர் டி. எம். ஜயரட்ன அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்துப் பேசினார். அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டிற்காக நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக குரல் கொடுக்கக் கூடிய இளைஞர் சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு அவசரகாலச் சட்டம் அற்ற நாட்டை உருவாக்குவோம். கஷ்டப் பிரதேசம் என்ற சொல்லுக்கு இடமில்லாமல் கிராம மட்டத்தில் அபிவிருத்தி முன்னெடுக்கப்படல் வேண்டும். எமக்குக் கிடைத்த சுதந்திரத்தைச் சரியான முறையில் பயன்படுத்துவதுடன் இந்நாட்டின் இளம் சமுதாயத்திற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் பயங்கரவாதம் முழுமையாக அணைந்துவிடவில்லை. இன்னும் நீறுபூத்த நெருப்பாக எரிந்துகொண்டு தான் உள்ளது. எனவே அவசரகாலச் சட்டம் படிப்படியாக அகற்றப்பட வேண்டும்.

அவசரகாலச் சட்டம் இறுதியாக 2005ஆம் ஆண்டுகளில் அமைச்சர் லஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன் தான் அமுலுக்கு வந்தது. என்னுடைய வயதையும் விட கூடுதல் வயது இந்த அவசரகாலச் சட்டத்துக்கு உள்ளது.

வடக்கு கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதுமுள்ள என்னைப் போன்ற சகோதர சகோதரிகள் அனைவரும் அவசரகாலச் சட்டத்தினுள் தான் வாழ்ந்தார்கள்.

இளைஞர் யுவதிகள் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டியதன் நேரம் நெருங்கியுள்ளது- எனினும் உடனடியாக செய்ய முடியாது.

பயங்கரவாதம் தோன்றியதற்கான அடிப்படை என்ன என்பது பற்றி பார்ப்போமானால் முன்னேற்றமடையாத கஷ்டப் பிரதேசம் தான் பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருந்துள்ளது.

குறிப்பாக சேகுவேராவூம் இவ்வாறான கருத்தைத்தான் கூறியிருந்தார். பின்தங்கிய கஷ்டப் பிரதேசத்திலிருந்து தான் புரட்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதனையே பிரபாகரனும் தெரிவித்திருந்தார். பின்தங்கிய கஷ்டப் பிரதேசத்திலிருந்து வரும் இளைஞர்கள் யுவதிகளே தனது அமைப்பில் தங்கி இருப்பவர்கள் என்றும் வசதியாக நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள் தங்குவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

கிராம மட்டத்தில் அபிவிருத்தியை முன்னெடுக்காவிடின் மீண்டும் ஒரு புரட்சி அல்லது கொரில்லா அமைப்பு உருவாவதை தடுத்துவிட முடியாது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 1948ம் ஆண்டு லக்ஷ்மன் ராஜபக்ஷவையும், 1970 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், 2010 ஆம் ஆண்டு தன்னையும் மிகவும் குறைந்த இளம் வயதில் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக வாக்களித்த அம்பாந்தோட்டை மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக நாமல் ராஜபக்ஷ தனது கன்னிப் பேச்சை ஆரம்பிக்கும் போதே தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்காக இல்லை. வீதிகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருக்கின்றன என 1954 ஆம் ஆண்டு டி. ஏ. ராஜபக்ஷ இந்த சபையில் தெரிவித்திருந்தார்.

1970 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இவ்வாறான கூற்றை இந்தச் சபையில் தெரிவித்திருந்தார். கிராம அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற தேவை அன்றே உணரப்பட்டது என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேலும் தெரிவித்தார் ___ E-mail to a friend

Thursday, April 22, 2010

சபாநாயகராகச் சமல் ராஜபக்­ தெரிவு பிரதிச் சபாநாயகர் பதவி பிரியங்கரவுக்கு! ஈ.பி.டி.பியின் சந்திரகுமார் குழுக்களின் பிரதித் தலைவர்





ஏழாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளாலும் வாக்கெடுப் பின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருடன் சேர்த்து முன்னாள் பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ண பிரதி சபாநாயகராகவும், யாழ். மாவட்டத்தில் ஆளுங்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஈ.பி.டி.பியைச் சேர்ந்தவ ரான முருகேஷ் சந்திரகுமார்(அசோக்) குழுக்களின் பிரதித்தலைவராகவும் வாக்கெடுப்பின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றம் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்கிறது என்றும் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.
காலை 8.45 மணியளவில் ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமானதும் முதலில் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.
சமல் ராஜபக்ஷவின் பெயரைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ண அந்தப் பதவிக்குப் பிரேரித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய அதை வழிமொழிந்தார். வேறு எவரின் பெயரும் இப்பதவிக்குப் பிரேரிக்கப்படாதமையால் சமல் ராஜபக்ஷ சபாநாயகராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டது.
பிரதமரும், கரு ஜயசூரியவும் எழுந்து சென்று சமல் ராஜபக்ஷவை அழைத்து வந்து சபாநாயகரின் ஆசனத்தில் அமரவைத்தனர். எம்.பிக்களின் சத்தியப்பிரமானத்தைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு இடம்பெற்றது.
இந்தப் பதவிக்கு முன்னர் பிரதி சபாநாயகராகவிருந்த பிரியங்கர ஜயரட்ணவின் பெயரை பிரதமர் பிரேரித்தார். ஐக்கிய தேசியக் கட்சி எம்.பியான ஜோன் அமரதுங்க அதை வழிமொழிந்தார். அதையடுத்து பிரியங்கர பிரதி சபாநாயகராக ஏகமனதாக அறிவிக்கப்பட்டார்.
அடுத்து குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு இடம்பெற்றது. இப்பதவிக்கு முருகேசு சந்திரகுமாரின் பெயரை நிமால் ஸ்ரீபால டி சில்வா பிரேரித்தார். டக்ளஸ் தேவானந்தா அதை வழிமொழிந்தார். அவரும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக இந்த நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்கிறது என்று சபாநாயகர் அறிவித்தார்

மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் : நாடாளுமன்றில் சரத்





இந்நாட்டில் மாறுபட்ட கருத்துடையவர்கள், மாறுபட்ட சிந்தனையுடையவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் எனக்கூறி கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்றுகாலை 8.30 மணிக்கு ஆரம்பமானது. சபாநாயகர், பிரதி சபாநாயகர் தெரிவுகளைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு வாழ்த்துரை நிகழ்த்தினர்.

அதன்போது உரையாற்றிய ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனநாயக நாட்டில் தனிமனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Wednesday, April 21, 2010

உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்புடன் புதிய நாடாளுமன்றின் முதல் கூட்டத்தில் 225 எம்.பிக்கள் இன்று சத்தியப்பிரமாணம்



ஏழாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்கின்றனர். காலை 8.45 மணிக்கு நாடாளுமன்றம் முதல் தடவையாகக் கூடியதும் இந்த நிகழ்வு இடம்பெறும்.



கொழும்பு,ஏப்ரல் 22
ஏழாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்கின்றனர். காலை 8.45 மணிக்கு நாடாளுமன்றம் முதல் தடவையாகக் கூடியதும் இந்த நிகழ்வு இடம்பெறும்.
தொடர்ந்து சபாநாயகர், பிரதி சபாநாயகர்,குழுக்களின் பிரதித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு உரியவர்கள் தெரிவுசெய்யப்படுவர்.

அரசுத் தரப்பில் சிரேஷ்ட உறுப்பின ரான ஜோன் செனிவிரத்ன சபாநாயகராகத் தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன.
இன்றைய முதலாவது அமர்வுக்காகக் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரை யும் காலை 8.30மணிக்கு நாடாளுமன்றத் திற்கு சமுகம் அளிக்குமாறு நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட வேண்டுகோள் விடுத்துள் ளார்.
இன்றைய இந்த நிகழ்வையொட்டி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளி யேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. முப்படையினரும் பொலிஸாரும் நாடாளுமன்றத்தைச் சுற்றி நிறுத்தப்பட் டுள்ளனர். இந்த நிகழ்வின் செய்தியைச் சேகரிக் கச் செல்லும் ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் வழமைபோல் நேரடியாக நாடாளு மன்றத்திற்குச் செல்ல முடியாது. அவர்கள் காலை 7.00மணியளவில் அரச தகவல் திணைக்களத்தில் வைத்து ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரால் சோதனையிடப் பட்டு அங்கிருந்து நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரி விக்கப்படுகின்றது.
அதேபோல், சத்தியப்பிரமாண நிகழ் வைப் பார்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப் பினர்களுடன் வரும் அவர்களின் உறவி னர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள் ளது.
இந்த முதல்நாள் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகக் கலந்துகொள்ளமாட்டார் என்றே தெரிய வருகின்றது.

Tuesday, April 20, 2010

தி.மு. ஜயரட்ன இன்று அலரி மாளிகையில் பிரதமராக பதவிப் பிரமாணம்





நடந்து முடிந்த 7ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றியடைந்ததையடுத்து இன்று தி.மு. ஜயரட்ன பிரதமராகப் பதவியேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று மலை 4.00 மணிக்கு அலரி மாளிகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இவர் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளை நாடாளுமன்றத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா

_



நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை 7ஆவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவான புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது

Wednesday, April 14, 2010

புதிய அமைச்சரவையை அமைப்பதில் அரசுக்குள் எழுந்துள்ளது நெருக்கடி!



புதிய அமைச்சரவையை அமைப்பதில் பெரும் நெருக்கடிகளை அரசு எதிர்நோக்கி யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



கொழும்பு,ஏப்,15
புதிய அமைச்சரவையை அமைப்பதில் பெரும் நெருக்கடிகளை அரசு எதிர்நோக்கி யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அமைச்சரவையை எதிர்வரும் 21ஆம் திகதி அமைக்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளபோதிலும் அமைச்சர் களைத் தெரிவு செய்வதில் அரசுத் தலை மைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம்.
கடந்த அமைச்சரவையில் 103 அமைச் சர்கள் அங்கம் வகித்தனர். இம்முறை அமைச்சரவையை 35அல்லது 40பேர் கொண்டதாக அமைக்க அரசு முடிவு செய் திருந்ததாக முன்னர் தகவல்கள் வெளி யாகியிருந்தன.
இணை அமைச்சர்களாக(குtச்tஞு Mடிணடிண் tஞுணூண்) சிலரை நியமிக்கவும் அரசு ஆலோ சித்து வருவதாகத் தெரியவருகிறது.
தற்போதைய அமைச்சரவையில் உள்ள சிலர் தமக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கவேண்டும் என்று அரசுக்கு நெருக் குதல் கொடுத்து வருகின்றனர் என்றும், இதனால் அரசுக்கு பெரும் இக்கட்டு நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறுப்படுகின் றது.
தேர்தலில் தோல்வியுற்ற அமைச்சர்க ளான ரோகித பொகெல்லாகம, பேரியல் அஷ்ரப், அமீர்அலி போன்றோரை தேசி யப் பட்டியல் ஊடாக நியமித்து அமைச் சுப் பதவி வழங்கவேண்டும் என்று ஒரு தரப்பினர் அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருவதாக அறியப்படுகிறது. இத்தகைய நிலைமைகளால் அமைச்சரவை நியமிக்க ஜனாதிபதி பெரும் நெருக்கடியை எதிர் கொள்வதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது