Showing posts with label IPL கிரிகெட். Show all posts
Showing posts with label IPL கிரிகெட். Show all posts

Thursday, April 22, 2010

IPL இறுதிப்போட்டிக்கு தமன்னா,நயன்,திரிசா,அசின் அனைவரும் நேரில் பார்க்கச் செல்கின்றனர்


சென்னை சூப்பர் கிங்ஸ் கழக கண்மணிஅனைவருக்கும் வயித்தில பீரை (King Fisher) வார்த்தார் கருணாநிதி

நீண்டகால சென்னை சூப்பர் கிங்ஸ் கழக கண்மணிகளின் உருக்கமான வேண்டுகோளுக்கிணங்க, கருணாநிதி அனைத்து திரைப்பட நடிகைகளையும் கிரிக்கெட் இறுதிபோட்டிக்கு செல்ல வேண்டுமென அன்புக்கட்டளை பிறப்பித்துள்ளார்.Add Image

இதனைத்தொடர்ந்து இன்று சென்னையில் கருணாநிதி வீட்டில் அனைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் கழக கண்மணிகளும் நேரில் சென்று நன்றி தெரிவித்ததுடன் கோப்பையை வென்று வந்து கருணாநிதிக்கு பாரட்டு விழா நடத்துவோமென சபதமிட்டனர்.

அத்துடன் இறுதிப்போட்டியில் வென்றால்

சென்னை சூப்பர் கிங்ஸ் கழக கண்மணிஅனைவருக்கும் தி.மு.க கட்சியில் அங்கத்தவர் பதவியும், 1 கிலோ அரிசி 1 ரூபாயில் வாங்குவதற்கான கூப்பனும்,ஒரு இலவச தொல்லைக்காட்சியும் வழங்கப்படும் என கருணாநிதி அறிவித்தார்

Tuesday, April 20, 2010

ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து விலக லலித் மோடி மறுப்பு :மத்திய அரசு தலையிட அனைத்து கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்


Top world news stories and headlines detail

புதுடில்லி : சூதாட்டம், பினாமி பெயரில் அணிகள் ஏலம் எடுத்தது போன்ற விஷயங்களில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சர்ச்சைகளில் சிக்கியுள்ள லலித் மோடியின் மீதான பிடி இறுகியுள்ளது. ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என, லலித் மோடி பேட்டி கொடுத்தாலும், மோடிக்கு எதிராக ஐ.பி.எல்., நிர்வாகக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து, அவரை பதவி நீக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரை நீக்குமாறு, அரசியல் கட்சித் தலைவர்களும், மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.,) ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், கிரிக்கெட் அணிகள் ஏலம் எடுக்கப்பட்டு, போட்டிகள் நடந்து வருகின்றன. கொச்சி அணி ஏலம் எடுக்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய சசி தரூர், தனது மத்திய அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது.அடுத்தபடியாக, ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியும், இந்த விவகாரத்தில் தனது பதவியை இழப்பார் என, தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல்., போட்டிகளில் சூதாட்டம் நடப்பது, பினாமி பெயர்களில் அணிகளை ஏலம் எடுத்தது, போட்டிகளை 'டிவி'யில் ஒளிபரப்ப லஞ்சம் பெற்றது, ஐ.பி.எல்., வருவாய் தொடர்பாக வரி ஏய்ப்பு செய்தது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், லலித் மோடி மீது சுமத்தப்பட்டுள்ளன.வருமானவரித் துறை அதிகாரிகள் இதுகுறித்து ஏற்கனவே விசாரணையை துவக்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில், லலித் மோடியின் பதவிக்கு, 'வேட்டு' வைக்கும் விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் முதலில் லலித் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த மத்திய அமைச்சர் சரத் பவாரும், தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளார்.


சரத் பவார் ஆலோசனை : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சஷாங் மனோகர், மத்திய அமைச்சர் சரத் பவாரை நேற்று டில்லியில் சந்தித்தார். கிரிக்கெட் வாரியத்தின் மூத்த தலைவர்களும் சரத் பவாரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, ஐ.பி.எல்., தொடர்பாக தற்போது நிலவி வரும் சர்ச்சைகள் குறித்து அவர்கள் பேசினர். தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சைகளால், கிரிக்கெட் வாரியத்துக்கு, மக்களிடையே ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க வேண்டுமெனில், லலித் மோடியை பதவியில் இருந்து நீக்குவது நல்லது என, இவர்கள் முடிவு எடுத்ததாக தெரிகிறது. பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், ஐ.பி.எல்., விவகாரத்தில் அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், விவசாய அமைச்சர் சரத் பவார் ஆகியோரும் நேற்று இதுகுறித்து பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.


இதற்கிடையே, மத்திய அமைச்சர் சரத் பவார் கூறியதாவது:ஐ.பி.எல்., நிர்வாகக் குழு கூட்டம் வரும் 26ல் நடக்கிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு லலித் மோடி கட்டுப்படுவார். இந்த விவகாரத்தில் கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதி, நிர்வாகக் குழு முடிவு எடுக்கும். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய துணைத் தலைவராகவும் மோடி உள்ளார். எனவே, மோடி உள்ளிட்ட கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில், ஒரு மனதாக முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு சரத் பவார் கூறினார்.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் கூறியதாவது:கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள பெரும்பாலானோர், லலித் மோடிக்கு எதிராகவே உள்ளனர். எனவே, லலித் மோடியை ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து, தானாகவே விலகும்படி கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொள்ளும். இதை, மோடி ஏற்காத பட்சத்தில், வரும் 26ம் தேதி மும்பையில் நடக்கும் ஐ.பி.எல்., நிர்வாகக் குழு கூட்டத்தில், அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார். இவ்வாறு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.'இந்த பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும்' என, மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், பா.ஜ., மூத்த தலைவர் பிரகாஷ் ஜாவேத்கர், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.


லலித் மோடி பிடிவாதம் : சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற லலித் மோடி, நேற்று மாலை மும்பை திரும்பினார். அவர் கூறுகையில், 'ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. இதுகுறித்து வெளியாகும் தகவல்கள் யூகத்தின் அடிப்படையிலானவை. ஐ.பி.எல்., தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட தயார்' என்றார்.

Sunday, April 18, 2010

நடப்பு சம்பியன் டெக்கான் அணிக்கு மீண்டும் அரையிறுதி வாய்ப்பு



டெல்லியில் நடைபெற்ற நேற்றைய 55ஆவது லீக் போட்டியில் கம்பிரின் டெல்லி டார்டெவில்ஸ் அணி, நடப்பு சம்பியன் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியை சந்தித்தது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலையில் போட்டிகள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெக்கான் அணித்தலைவர் கில்கிறிஸ்ட், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதேவேளை டெல்லி அணி வீரர்கள் வரிசையில் மாற்றம் எதுவும் இல்லை. டெக்கான் அணியில் ஆர்.பி.சிங்கிற்கு பதிலாக ஹரிஸ்,ஹர்மீட் சிங்கிற்கு பதிலாக வாஸ் ஆகிய இருவரும் இடம் பெற்றனர்.

டெக்கான் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கில்கிறிஸ்ட் 10 , மோனிஷ் மிஸ்ரா 25 , சுமன் 5 , ரோகித் சர்மா 11 , சைமண்ட்ஸ் 54 , மார்ஷ் 13, பின்வந்த சுமன்ந்த் (7*), ராகுல் சர்மா (14*) என்ற ஓட்டங்களைப் பெற, டெக்கான் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களைப் பெற்றது.

146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி வீரர்கள் வார்னர் 5, சேவக் 8, டில்ஷான் 11 ,அணித்தலைவர் கம்பீர் 4 , மன்ஹாஸ் 23 , கார்த்திக் 1, கொலிங்வுட் (51*) அமித் மிஸ்ரா 4 , ஓட்டங்களையும் எடுத்தனர். இதன்படி டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களை எடுத்து.

நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக சைமண்ட்ஸ் தெரிவு செய்யப்பட்டார். மேற்படி தோல்வியை தொடர்ந்து அரையிறுதிக்கான போட்டியில் இருந்து டெல்லி அணி வெளியேறியது.

எதிர் வரும் 22ஆம் திகதி மும்பையில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் டெக்கான் அணி, சென்னையை எதிர்த்து விளையாட உள்ளது.

சென்னை அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தார் டோனி


-ஐபிஎல் போட்டியில் தனது கடைசி லீக் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது சென்னை அணி.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அணி தலைவர் டோனி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

இதன் படி பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பில் யுவராஜ் சிங் 01, ஜயவர்த்தன 21 , சங்கக்கார33, மார்ஷ் 88, இர்பான் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு 193 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 எடுத்து வெற்றி பெற்றது.

சென்னை அணி சார்பில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான ஹெய்டன் 5 , முரளி விஜய் 13, ரெய்னா 46 , டோனி 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

நேற்றைய போட்டியில் இறுதி மூன்று ஓவர்கள் பரபரப்பாக அமைந்தன. 18 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்றால் சென்னை அணிக்கு வெற்றி என்ற நிலை இருந்தது.

18 ஆவது ஓவரில் டோனி அடித்த 2 நான்கு ஓட்டங்களின் உதவியுடன் 15 ஓட்டங்கள் கிடைத்தன. 19ஆவது ஓவரில் 13 ஓட்டங்கள் பெறப்பட்டன. இதனால் 6 பந்துகளில் 16 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் சென்னை அணி இருந்தது.

இறுதி நான்கு பந்துகளில் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 3,4ஆவது பந்தை எதிர்கொண்ட டோனி அந்த பந்தை இரண்டு ஆறு ஓட்டங்களாக்கினார். இதன் மூலம் 2 பந்துகள் மீதம் இருக்கையில் சென்னை அணி 195 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக சென்னை அணியின் தலைவர் டோனி தெரிவு செய்யப்பட்டார்.

Thursday, March 25, 2010

ப்ரீத்தி ஜிந்தா யாருக்கு அக்கா?

ப்ரீத்தி ஜிந்தா யாருக்கு அக்கா?

திகுதிகுவெனத் தீ பிடித்து ஓடிக்கொண்டு இருக்கும் ஐ.பி.எல். திருவிழாவின் சில டிட்பிட்ஸ்...

'கட்டிப்பிடிப்பதை ரசிகர்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கிங்ஸ் லெவன் டீம் என் குடும்பம் மாதிரி. அதில் யுவராஜ் சிங் எனது தம்பி மாதிரி' என்பது ப்ரீத்தி ஜிந்தாவின் சமீபத்திய அறிக்கை. பதிலுக்கு யுவராஜ், 'ப்ரீத்தி ஜிந்தாவுக்கு இந்தியா முழுக்கப் பல அண் ணன், தம்பிகள்இருக்கிறார் கள். ஆனால், அவர் எனக்கு மட்டும் அக்கா இல்லை!' என்று ட்விட்டரில் ட்விட்டி இருக்கிறார். நல்ல அக்கா - தம்பி!

சேப்பாக்கில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த த்ரிஷாவை மெகா ஸ்க்ரீனில் காட்டியதும், விசில் பறந்தது. இதைத் தவறாகப் புரிந்துகொண்ட ரவி சாஸ் திரி 'பார்த்தீவ் பட்டேல் 50 ரன் அடித்ததை சென்னை ரசிகர்கள் எவ்வளவு உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள் பாருங்கள்' என்று அப்பாவியாக ஒரு கமென்ட் அடித்தார். இதுக்குப் பேர்தான் ஸ்க்ரீன் டெஸ்ட்!

Click to Enlargeசென்னையில் முதல் போட்டியின்போது தமிழ்க் கலாசாரத்துக்கு ஏற்ப அடக்கமான உடையில் ஆடினார்கள், சென்னை சூப்பர் கிங்ஸின் சியர் லீடர்ஸ். கடுப் பான சென்னை ரசிகர்கள், எதிர் அணி யின் கிளாமர் கேர்ள்ஸை ஆதரித்தார்கள். இப்போது சென்னை சியர் லீடர்ஸின் உடை சுருங்கிவிட்டது. இந்த சென்னை ரசிகர்கள் எப்பவுமே இப்படித்தான்!

கொச்சி, புனே என அடுத்த ஆண்டு முதல் இரண்டு புதிய அணிகள் ஐ.பி.எல்லுக்குள் புது என்ட்ரி கொடுக்க இருக்கின்றன. புனே அணியை சஹாரா குருப் 1,702 கோடி ரூபாய்க்கும், கொச்சி அணியை ரென்டீவஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 1,533 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளன. மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியா சிமென்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எவ்வளவு கொடுத்து வாங்கியது தெரியுமா? 222.6 கோடி ரூபாய். விலைவாசி ஏறிப்போச்சு!

புதிதாக இரண்டு அணிகள் அடுத்த ஆண்டு இடம்பெறுவதால் தற்போது 60 மேட்ச்சுகள் என்பதுமாறி அடுத்த ஆண்டு முதல் 94 ஆட்டங்கள் நடைபெறும். அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு அணியும் தலா 18 மேட்ச் சுகள் ஆட வேண்டும். ஆடுங்கோள்!

கேப்டன் கௌதம் கம்பீர் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் காயம் காரணமாக டீமில் இல்லாததால், தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ். இதனால், காயம் அடைந்திருக்கும் இருவரையும் தனி விமானத்தில் இலங்கைக்கு ஆயுர்வேத ட்ரீட்மென்ட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் கள். அதற்கான செலவு மட்டும் 40 லட்ச ரூபாய். சிகிச்சை செலவு கள் தனி. இருக்குற மகராசன் அள்ளி முடியுறான்!

ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி, கேத்ரீனா கைஃப், தீபிகா படுகோன் அனைவரையும்விட இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுபவர் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளர் காயத்ரி ரெட்டி. ஐ.பி.எல். துவங்கியதில் இருந்து கூகுள் சர்ச் இன்ஜினில் அதிகம் தேடப்படுபவர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித் திருக்கிறார் காயத்ரி. இதுதானாச் சேர்ந்த கூட்டம்!

ஐ.பி.எல். நைட்ஸ் என்கிற பெயரில் கிரிக்கெட் மேட்ச் முடிந்ததும் பார்ட்டியை ஆரம்பித்துவிடுகிறார்கள். நடிகைகள், மாடல்கள் என அனைவரும் பார்ட்டிக்கு ஆஜராகிவிடுவதால், வெற்றியோ, தோல்வியோ அனைத்து பிளேயர்களும் பார்ட்டிக்கு வந்து விடுகி றார்கள். ஹர்பஜனுடன் காதல் இல்லை என்று சொல்லும் கீதா பஸ்ரா தவறாமல் இந்த பார்ட்டிகளில் கலந்துகொண்டு ஹர்பஜன் சிங்கை உற்சாகப்படுத்தி வருகி றார். பாஜி ஆடினா பாரதத்துக்கே பார்ட்டிதான்!


நன்றி ஆனந்த விகடன்