Tuesday, April 20, 2010
கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகள்
Monday, April 19, 2010
பொதுத் தேர்தலின் முழுமையான முடிவுகள் நாளை நள்ளிரவுக்குள் வெளியிட நடவடிக்கை
| _ | ||
மீள்வாக்குப் பதிவு நடைபெறும் நாவலப்பிட்டிய மற்றும் கும்புறுபிட்டிய ஆகியவற்றின் தேர்தல் முடிவுகளை நாளை நள்ளிரவுக்கு முன்னர் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கண்டி மாவட்டம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். அதன் பின்னர் நாடு முழுவதற்குமான தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளதால் அதற்கு முன்னர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமாணி மூலம் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்
Sunday, April 11, 2010
தமிழ்க் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பியாக பிரபல சட்டத்தரணி சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேசி யப் பட்டியல் மூலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கக்கூடிய வாய்ப்பு அதிகரித்திருக்கிறது என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அவ்வாறு கிடைக்குமிடத்து அந்த இடத்திற்கு பிரபல சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்படுவார் என்று கூட் டமைப்புத் தலைமைப்பீடம் உறுதி செய் துள்ளது.
நடந்த பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திருகோணமலை மாவட் டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வாக்குகள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 590 ஆகும்.
திருகோணமலை மாவட்டத்தில் கிடைத்து இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ள சுமார் 32 ஆயிரம் வாக்குகளையும் சேர்த்தால் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளது என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
Saturday, April 10, 2010
Friday, April 9, 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3ஆவது பெரிய கட்சியாகத் தெரிவு வடக்கு, கிழக்கில் மொத்தம் 13 ஆசனங்கள்
வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழர சுக் கட்சி) மூன்றாவது பெரிய கட்சியாக வந்துள்ளது.
வடக்கு, கிழக்கில் 13 ஆசனங்களைப் பெற்றுள்ள இக்கட்சியில் தேசியப் பட்டியல் உறுப்பினர் களையும் சேர்த்து 15 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் 13 ஆச னங்களைப் பெற்றுள்ளது.
வடக்கில் யாழ்ப்பாணத்தில் 5 ஆசனங் களையும் வன்னியில் 3 ஆசனங்களை யும்கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆசனங்களையும், அம்பாறையில் ஓர் ஆசனத்தையும், திருகோணமலையில் ஓர் ஆசனத்தையும் கூட்டமைப்பு பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் கும் புறுப்பிட்டியில் மறுவாக்களிப்புக்கு உத்தர விடப்பட்டுள்ள போதிலும், அங்கு வெற்றி பெற்ற இரா.சம்பந்தனின் தெரிவைப் பாதிக்காது என்று விடயமறிந்த வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.
2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் மட்டக்களப்பில் ஓர் ஆசனத்தை இழந்துள்ளது.
அதேபோல் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் எட்டு ஆசனங்களைப் பெற்றிருந்த கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் 5 ஆசனங்களை மட் டுமே பெற்றுள்ளது.
வன்னியில் 2004ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டமைப்பு 5 ஆசனங்களைப் பெற்றிருந் தது. இம்முறை தேர்தலில் 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
வன்னி
பெற்றவாக்குகள் கிடைத்த ஆசனங்கள்
தமிரசுக் கட்சி 41,673 3
ஐ.ம.சு.கூ 37,522 2
ஐ.தே.க. 12,783 1
மொத்தவாக்குகள் 266,975
அளிக்கப்பட்ட வாக்குகள் 117,185
நிராகரிக்கப்பட்டவை 10,208
மட்டக்களப்பு
பெற்றவாக்குகள் கிடைத்த ஆசனங்கள்
தமிரசுக் கட்சி 66,235 3
ஐ.ம.சு.கூ 62,009 1
ஐ.தே.க. 22,935 1
த.ம.வி.பு 16,886 0
மொத்தவாக்குகள் 333,644
அளிக்கப்பட்ட வாக்குகள் 195,967
நிராகரிக்கப்பட்டவை 14,749
அம்பாறை (திகாமடுல்ல)
பெற்றவாக்குகள் கிடைத்த ஆசனங்கள்
தமிரசுக் கட்சி 26,895 1
ஐ.ம.சு.கூ 132,096 4
ஐ.தே.க. 90,757 2
மொத்தவாக்குகள் 420,835
அளிக்கப்பட்ட வாக்குகள் 272,462
நிராகரிக்கப்பட்டவை 15,516
Friday, April 2, 2010
இலங்கை பிரதமரின் மகன் இலக்கத்தகடு இல்லாத வாகனத்தில் பிரசாரம்
| ||||||
எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் விதுர விக்ரமநாயக்க பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரசாரத்தின் போது இலக்கத்தகடு இல்லாத வாகனத்தைப் பயன்படுத்தியதாக அந்த இணையத்தளம் ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளது. |
