Monday, June 7, 2010
Thursday, June 3, 2010
போரின் இறுதி நாட்களின் தடயங்கள்-2-அண்ணனின் மறைவிடம்
Wednesday, June 2, 2010
போரின் இறுதி நாட்களின் தடயங்கள்-1


தமிழீழத்தில் போரின் இறுதி நாட்களில் புலிகள் தமது அனைத்து வளங்களையும் பாவித்திருந்தார்கள், அதில் ஒன்றுதான் கரும்புலித்தாக்குதல். குண்டு துளைக்காத மாதிரி உருமாற்றப்பட்ட வாகனங்களில் கரும்புலிகள் இராணுவத்தினரின் முகாம்களுக்குள் அதிவேகமாக சென்று திடீர் தாக்குதல் நடத்துவது. 1993 ம் ஆண்டென நினைக்கிறேன் இதேபோன்று மத்தியான நேரம் மட்டக்களப்பிலும் பஸ்சில் சென்று ராணுவ முகாமிற்குள் திடீரென ஊடுருவி வெற்றீகரமான தாக்குதலை நடத்தியிருந்தார்கள்..அதேபோன்று இத்தாக்குதலும் 7 ம் திகதி மாசி மாதம் புதுக்குடியிருப்புக்கு அண்மையாக நடத்தப்பட்டிருந்தது.ஆனால் ராணுவத்தினர் டாங்கிகள் கொண்டு இந்த வாகனத்தை தாக்கியதன் காரணத்தினால் இலக்கை சரியாக எய்த முடியாமல் போய்விட்டது.இப்போது அந்த வாகனத்தை ராணுவத்தினர் நினைவுதடயமாக பாதுகாத்து வருகின்றனர். எனக்கு பார்க்க கிடைத்த அந்த வாகனத்தை நிழல் படமூடாக உங்களிடம் சேர்ப்பிக்கின்றேன்.
* இந்த நிழல் படம் உரிய அனுமதி பெற்று எடுக்கப்பட்டது,இந்தப்பகுதி முல்லைத்தீவின் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது.இதனை கொப்பி செய்து போடுபவர்கள் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
மேலும் மிகுதி அண்ணனின் நிலக்கீழ் பங்கர்,காட்டு மத்தியில் முகாம்களின் படங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும்
Tuesday, May 25, 2010
மகிந்தவின் ஊதுகுழலாக மாறூம் கே.பி

ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்களின் வாக்குகளை கவருவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்த பல சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து வந்து கே.பியை சந்திக்க வைத்தார் பஸில் . பின்னர் நாடாளுமன்ற தேர்தலின் போதும் கல்விமான்களையும் சந்திக்க வைத்து மகிந்தவுக்கே வாக்களிக்குமாறு கே.பி மூலமாக மகிந்த கேட்டுக்கொண்டார். பின்னர் தற்போது வடக்கில் தமிழ் உணர்வு பொங்கும் இடமாக இருக்கின்ற யாழ் பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளை சந்திக்க வைத்து புலிகள் பற்றி எதிர் விமர்சனம் பண்ணி இனிமேல் போராட்டம் எனப்து இல்லை. தமிழ்மக்களுக்கு மகிந்தான் சரியான் தலைவர் என்றும் த.தே.கூட்டமைப்பினரையும் ஓரங்கட்டுமாறும் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் எமக்கு கிடைத்த நம்பகமான தகவலின்படி கே.பி புலிகள் பற்றிய ஒரு சில தவல்களை அரசாங்கத்திடம் கொடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.ஆனாலும் கே.பியின் கைதுக்கு பிறகு உடனேயே மேற்குலகில் இருந்த வி.பு முகிய உறுபினர்கள் அனைத்து விடயங்களையும் உடனடியாகவே இரகசியமாக நகர்த்திவிட்டனர். இதனால் அரசாங்கம் இன்றும் அனைத்து வி.பு வலைப்பின்னலை பிடிக்க முடியாமல் திணறுகின்றது. ஆனாலும் இன்றும் அவருக்கு இராஜ மரியாதையுடன் தான் மகிந்த அரசு கொடுத்து வருகிறது .
இதன் ஒரு அங்கமாக இன்று பேராசிரியர் ரொஹான் குணரட்ன கே.பி பற்றிய சில பின்வரும் கருத்துக்களை தெரிவித்தார்.
நாட்டில் யுத்தம் நிறைவடைந்துவிட்டது. இனிவரும் காலங்களில் தொடர்ந்து சமாதானம் நிலவுவதற்கு, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவு முகவராக செயற்பட்ட, கேபி (குமரன் பத்மநாதன்) உதவத் தயாராக இருக்கிறார்
"நாடு கடந்த அரசாங்கத்தை அமைக்குமாறு வி.உருத்திரகுமாரனின் தலைமையிலான தனது குழுவினருக்குப் பணிப்புரை வழங்கி விட்டு, இலங்கை அரசிடம் சரணாகதியடைந்தவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்.
இவர் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான - காத்திரமான பாத்திரத்தை வகித்து வருவதாக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் ஓர் உறவுப்பாலமாக கே.பி திகழ்கின்றார். இன ஐக்கியத்திற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தனது தொடர்பாளர்கள் ஊடாக கே.பி. பணியாற்றுகின்றார்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அவர் காத்திரமான பங்கை வகித்து வருகின்றார். வடக்குக் கிழக்கை சேர்ந்த பல தமிழர்களை கே.பி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அவரை நானும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். எவ்விதமான சத்தம் சந்தடியின்றி அவரது பணி தொடர்கின்றது. அவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் சித்திரவதைக்கு உட்படுத்தவில்லை. நல்லதொரு பணியில் ஈடுபடும் கே.பி அவர்களை அரசாங்கம் ஏன் சித்திரவதை செய்ய வேண்டும்?
இலங்கை ராணுவத்தினரின் கேவலமான இன்னுமொரு வீடியோ வெளியாகி உள்ளது
Thursday, May 20, 2010
தளபதி கேணல் ராமுடன் ஒரு பத்திரிகையாளரின் சந்திப்பு
2009 மே 17-க்குப் பிறகு, ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்பு கள் இல்லாததால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பரிதவிப்போடு இருந்தார்கள் என் கிற பத்திரிகையாளர் பாண்டியன், ""ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் முக்கிய தளபதியாக விளங் கும் சங்கீதன்தான் எனக்கு அழைப்பு விடுத்தார். ஈழ நிலவரத்தை நேரில் அறிந்துவர எனக்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிவித்த சங்கீதன், கொழும்புக்குப் பயணம் மேற்கொள் ளும்படி அறிவுறுத்தினார்`` என்கிறார்.
உரிய அனுமதியுடனும் ஆவணங்களுட னும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு விமானப் பயணம் மேற்கொண்ட பாண்டியன், அதற்கடுத்த சமிக்ஞைக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. அதன்பின், திரிகோண மலைக்கு வருமாறு அவருக்குத் தகவல் தெரி விக்கப்படுகிறது. சாலை வழியே திரிகோண மலைக்குப் பயணித்தார் பாண்டியன். வெட்ட வெளியாய் காட்சியளிக்கும் தமிழர் பகுதிகளின் துயரங்கள் கண்ணில் படுகின்றன. சிங்கள ராணுவத்தின் வாகனங்கள் ரோந்து சுற்றிய படியே இருக்கின்றன.
விடியற்காலை நேரத்தில் திரிகோண மலைக்குச் சென்ற பத்திரிகையாளர் பாண்டிய னை அழைத்துச் செல்ல ஒரு வேன் வருகிறது. அந்த வேனில் இருந்தவர்கள் இளைஞர்கள். சிவில் உடையில்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் விடுதலைப்புலிகள். அவரை ஏற்றிக் கொண்ட வேன், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சுற்றுலாதலத்திற்குச் செல்கிறது. பக்கத்திலேயே ஒரு ராணுவ முகாம். ஜீப்புகளில் சிங்கள ராணு வத்தினர் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். வேனில் இருந்த இளைஞர்கள் பதற்றப்பட வில்லை. அந்த சுற்றுலாதலத்திற்கு வந்திருக்கும் மற்ற வாகனங் களுடன் ஒன்றாக விடுதலைப் புலிகளின் வேனும் செல் கிறது. உள்ளே இருந்த இளை ஞர்களிடம் வாக்கி-டாக்கி இருக்கிறது. அதன் மூலமாக அவர்களுக்கு கட்டளைகள் வந்தபடியே இருக்க, இவர் களும் பதிலளித்துக் கொண்டே பயணிக் கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேன் நிற்கிறது. ""அது எந்த இடம் என்று எனக்குத் தெரியவில்லை. இறங் கியவுடன், "வாருங்கோ..` என்றபடி என்னை அந்த இளைஞர்கள் மலைக்காட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத காடு. மரங்கள், அடர்த்தி யான புதர்கள் என வெளியே இருந்து வருபவர்களுக்கு வழி தெரியாமல் திணறடிக்கும் வகையில் இருந்த மலைக்காட்டில், இளைஞர் கள் வழிநடத்த 4 கி.மீ. தூரத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். புதிய அனுபவம் என்பதால் அந்தச் சூழலும் நடைப்பயணமும் சற்று சிரமமாகத்தான் இருந்தது `` என்கிறார்.
காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாண்டியனைக் காத்திருக்கச் சொல்கிறார்கள். அந்த இடத்தில் 50 பேருக்கு குறையாத அளவில் தமிழர்களின் படை இருக்கிறது. உலக நாடுகளை வியக்க வைத்த போராளி இயக்கமான விடுதலைப் புலிகளின் உடையுடன் முதன்முதலாக புலிப்படை யினரைப் பார்க்கிறார் பாண்டியன். அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. ஏ.கே.47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் இந்த ஆயுதங்களுடன் மனதைரியம் என்கிற வலிமையான ஆயுதத்தையும் கொண்ட வர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
புலிப்படையில் உள்ள ஒவ்வொருவரின் முதுகிலும் ஒரு பை இருக்கிறது. அது, அவர்கள் ஓரிடத்திலேயே நிலைகொண்டிருப்பதில்லை என்பதையும் மலைக்காடு முழுவதும் சுற்றி வந்த படியே இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. அவர்களின் உற்சாக-உத்வேக மந்திரம் பிரபாகரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பெயரைச் சொன்னாலே அவர்களின் நாடிநரம்பு களில் முறுக்கேறுகிறது. காட்டில் அவர்கள் மேற் கொள்ளும் பயிற்சிகளில் பிரபாகரன் பாணியை பார்க்க முடிகிறது. குறைந்த அளவிலான போராளிப் படையை வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்கொண்டு முறியடிப் பது எப்படி என்கிற பயிற்சி களை அவர்கள் மேற் கொள்கிறார்கள். பயிற்சிகள் அனைத்தும் கடுமையான வை. காட்டுக்குள் போதிய வசதிகள் இல்லாத நிலையி லேயே இந்தப் பயிற்சிகள் தொடர்வதை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்கிறார் பாண்டியன்.
""நீங்க எங்களை மன்னிக் கணும். தற்போதைய சூழ்நிலையில் படம் எடுக்க ஏலாது. எங்கட நிலைமையை நீங்க புரிஞ்சவராய் இருப்பீர்கள் என நினைக்கிறோம்`` என மென்மையான மறுப்பு வெளிப்படவே, புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிடுகிறார் பாண்டியன். ""ரொம்ப நன்றிங்க அய்யா... ஏதேனும் ஒரு படம் வெளியே போய் பிரசுரமாகி, அதன்மூலம் எந்தக் காடு, எத்தனை நபர்கள் என்ற பின்புலம் தெரிந்து போகுமென்டால், மீண்டும் விடுதலைப் போராட்டத்தை வலிமைப்படுத்தும் எங்களின் முயற்சிகள் தோற்றுப்போகும்`` என்கிறார்கள் புலிகள்.
பயிற்சிகளுக்குப் பிறகு, காட்டுப்பகுதியி லேயே சமையல் நடக்கிறது. அதிகம் புகை வராத மரக்கட்டைகளைக் கொண்டு கச்சிதமாக அடுப்பு மூட்டி, உணவு தயாரிக்கிறார்கள். ""தாய்த் தமிழகத்திலிருந்து வந்திருக்கிற பத்திரிகை சகோதரருக்கு நம்ம ஊரு சொதி செஞ்சு கொடுங்கோ`` என்கிறார் ஒரு புலி. ""சகோதரர் கேட்பதை செய்து கொடுப்போம்`` என்கிறார் இன்னொரு புலி. போராட்டக்களத்திலும் அவர் களின் விருந்தோம்பல் பண்பு குறையவில்லை. ""எங்கட பண்பும் வீரமும் ஒருநாளும் மறைந்து போகாது`` என்கிறார்கள் புலிகள்.
அவர்களில் ஒருவர் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார். பிறகு, தனது வாக்கி-டாக்கியில் யாரிடமோ பேசிவிட்டு, தயாராக இருங்கள் என்கிறார். அங்கிருந்த 50 புலிகளும் பொசிஷன் எடுத்து நிற்கிறார்கள். சிலர் தரையில் படுத்து, தலையை மட்டும் உயர்த்தி, துப்பாக்கியால் குறிபார்த்தபடி பொசிஷன் எடுக்கிறார்கள். சிலர், மலைக்காட்டில் உள்ள உயர்ந்த மரங்களில் ஏறி, அதன் கிளைகளில் படுத்தபடி, குறி பார்க்கிறார் கள். எல்லோரும் எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில், பத்திரிகையாளர் பாண்டி யனை நோக்கி வேகமாகவும் கம்பீர மாகவும் வருகிறது அந்த உருவம்.
நடுத்தர வயது. நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகம். பிரபாகரன் போலவே இடுப்பில் பெல்ட் அணிந் திருக்க, அதில் துப்பாக்கிகள் இருக் கின்றன. பாதுகாப்புக்கு, துப்பாக்கி ஏந்திய புலிகள். பாண்டியனை நெருங்கி வந்து, ""வாருங்கோ... வாருங்கோ.. உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்`` என்று கைகொடுத்த அவர், கேணல் ராம். கிழக்கு மாகாணமான அம்பாறையின் விடுதலைப்புலிகள் தளபதி.
புலிகளின் ராஜதந்திர உத்திகளின் படி, நான்காம் ஈழப்போரின் கடைசி கட்டத்தில் கேணல் ராம் தலைமையி லான படை பங்கேற்கவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பு வகித்த அவரையும், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பு வகித்த நகுலனையும் தங்கள் படையினருடன் பத்திரமாக இருக்கும்படி உத்தரவிட்டார் பிரபாகரன். தன்னிடமிருந்து கட்டளை கள் வந்தபிறகு களத்திற்கு வரலாம் என்பதுதான் அவரது உத்தரவு.
2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தி லேயே 4000 பேருடன் இருவரது படைகளும் காட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்துவிடுகிறது. முள்ளிவாய்க்கால் தாக்குதல்களின்போது, தலைமையின் கட்டளைப்படி இவர்கள் காட்டில்தான் இருந்தார்கள். அதனால்தான், இப் போதும் சிங்கள ராணுவத்திற்கு சவாலாக இருக்கிறார்கள்.
பாண்டியனுக்கு கைகொடுத்த கேணல் ராம், ""யுத்தத்தின் கடைசி நிமிடம் வரை தலைமை எங்களை அழைக்கவில்லை. காட்டுக்குள் இருந்து போரைத் தொடரவேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். எங்களுடன் இருந்த 4000 புலிகளுடன், முள்ளி வாய்க்கால் தாக்குதல்களின்போது, வெளியேறி வந்த புலிகளையும் சேர்த்து தற்போது 6000 புலிகளாக பலம் பெற்றிருக்கிறோம். பெண் புலிகளும் இருக்கிறார்கள். சிங்கள ராணுவத்தின் கண்கள் எங்களைத் தேடுகின்றன. நீங்கள் காட்டுக்குள் 4 கி.மீ. சிரமப்பட்டு நடந்து வந்திருப்பீர்கள். நான் 20 கி.மீ. நடந்து வந்து உங்களை சந்திக்கிறேன். இது 100 கி.மீ.க்கு பரந்திருக்கும் மலைக்காடு. இதுதான் எங்களுக்கான பாதுகாப்பு கேடயம்.
எங்களிடம் உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் சர்வதேச அளவில் அழைப்புகளைப் பெற முடிகிறது. பல நாட்டு உளவுப்பிரிவினரும் எங்களைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள். எங்களது செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கிறது இலங்கை ராணுவம்.
செல்போன், வாக்கி-டாக்கி ஆகியவற்றை ஒட்டுக்கேட்டு நாங்கள் எந்தப் பகுதியில் நடமாடுகிறோம் என்பதை தெரிந்துகொண்டு, தாக்குதல் நடத்த நினைக்கிறார்கள். நாங்கள் இப்போது பாரிய அளவிலான தாக்குதலுக்குத் தயாராக இல்லை. இப்போதைய எங்கள் நோக்கம், புலிகளை ஒருங்கிணைத்து இயக்கத்தை வலிமைப்படுத்து வது, படைபலத்தையும் ஆயுதபலத்தையும் பெருக்கு வது. அதன்பின்னர், தலைமை வழியில் செயல் படுவோம்.
சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்`` என்று சொன்ன கேணல் ராமிடம், பத்திரி கையாளர் பாண்டியன் கேள்விகளை முன்வைத்தார். ஈழப்பிரச்சினையின் இன் றைய நிலவரம் குறித்த மிக முக்கியமான அந்த கேள்வி களுக்குப் பதிலளிக்கத் தயாரானார் கேணல் ராம்.
தொடரும்...
நன்றி : நக்கீரன்
Tuesday, May 18, 2010
புலிப் பிரமுகர் கல்கிசையில் கைது!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப் பின் முன்னாள் முக்கிய பிரமுகர் ஒருவர் கல்கிசையில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரி விக்கப்படுகிறது. ஸ்ரீதரன் ஐங்கரன் என்ற இந்த நபர், கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் காய மடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்குப் புறப்படத் தயாராக இருந்த
நிலையிலேயே கல்கிசையில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டார் என்றும் இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Sunday, May 16, 2010
பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 1 ம் ஆண்டு வீரவணக்கம்

1986 ம் ஆண்டுதான் முதன்முதலாக சொர்ணம் அண்ணாவைப்பார்த்தேன், தாடிச்சிறி அண்ணாவுடன் வீட்டுக்கு வந்தபோதுதான். அன்று அவர்கள் திருகோணமைலையில் இருந்து ஒரு காரை கொண்டுவந்திருந்தனர். அது அரசாங்கத்துக்கு சொந்தமானது.அதை எப்படியோ கடத்திக்கொண்டு வந்துவிட்டனர்.தாடிச்சிறி அண்ணாதான் அப்போ யாழ் மாவட்டத்துக்கு வாகனப்பொறுப்பாளராக இருந்தார்.புதிதாக வாகனங்கள் கொண்டு வந்து எங்கட் வீட்டிலும் பெரியம்மா வீட்டிலும்தான் இயக்க பெயின்ற் கலர் மாத்துவார்கள்.அப்போது நான் சிறுவனாகா இருந்தேன். அன்று எனது பிறந்த நாள் அதனால் சொர்ணம் அண்ணாவும், தாடிச்சிறி அண்ணாவும் கண்டோஸ் வாங்கித்தந்தனர்.அன்று அவர்கள் கொண்டு வந்த அந்த காருக்கு அருகில் நின்று எடுத்துகொண்ட எனது பிறந்தநாள் படம் இன்றும் பொக்கிசமாக காத்துவருகிறேன். இந்தியன் ஆமி வந்து சண்டை தொடங்கினநேரம் எமது வீட்டில் சொர்ணம் அண்ணாவும் அவர்களின் வாகனமும் எமது வீட்டில் நின்றிருந்தன, அதை அறிந்து எமது வீட்டுக்கு அதிகாலை 6 மணியளவில் ஆமி அடித்த செல் வந்து வீட்டு கிணற்றடியில் விழுந்தில் அதிஸ்டவசமாக அம்மா தூக்கி எறியப்பட்டு காயங்களுடன் உயிர்தப்பினார். உடனேயே அந்த இடத்துக்கு வந்த சிறி அண்ணாவும் ,இம்ரான் அண்ணாவும் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருந்து கட்டிவிட்டு எங்களை சாவகச்சேரி போக சொல்லிவிட்டார்கள், அவர்களிடம் வீட்டுத்திறப்பை கொடுத்துவிட்டு நாங்கள் போய்விட்டோம், அதற்குப்பிறகு இந்தியா ராணுவம் யாழ்ப்பாணம் கைப்பற்றியதைதொடர்ந்து நாங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம்,ஆனால் எமது வீட்டில் ஒரு பொருள்கூட களவு போகவில்லை.அதற்குபிறகு 1990 ம் ஆண்டு
இந்தியா ராணுவம் போன பிறகு ஒருநாள் திடீரென்று ஒரு பிக்கப் வாசலில் வந்து நிண்டிச்சு பார்த்தா பல பேர் இறங்கி பாதுகாப்பு கொடுக்க தம்பியா எண்டு சந்தோசத்தோட வந்து என்னை துக்கி கொஞ்சிவிட்டு அம்மா,அப்பவுடன் கதைத்தார்,தாடிச்சிறி அண்ணா கடைசியா கரும்புலியா போன அந்த நாட்களை அம்மா சொல்லி அழத்தொடங்க அக்கா இது விடுதலைப்போராட்டம் , எல்லாரும் உயிரோட இருக்கணும் எண்டால் போராடேலாது, உங்கட மகனை நீங்க தரமாட்டீங்களோ எண்டு என்னைப்பார்த்து கேட்க பிறகென்ன வழமையான சண்டைதான் , அப்போது அப்பா வைத்திருந்த சிவபு நிற ஹொண்டா 200 மோட்டர் சைக்கிளை சொர்ணம் அண்ணா தந்து தேவைக்காக வாங்கிக்கொண்டார்.அதற்குபிறகு எனக்குபார்க்கக்கிடைக்கவில்லை.
ஆனால் அவரது போராட்ட வீர்ச்செயல்கள் அடிக்கடி அப்போது பேப்பரில் வந்து கொண்டிருந்தன.ஆனால் 2006 ல் என்னை கட்டாய ஆட்சேர்ப்பில் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்,அப்போ எனது குடும்பம்,அத்தோடு இயக்க உர்ற்பினர் தொடர்பு பற்றி கேட்டபோது நான் சொர்ணம் அண்ணாவைப்பற்றி சொன்னதும் ,அவ்ரை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்கள், அவர்களும் ஞாபகப்படுத்தி என்னுடன் உரையாடிவிட்டு, என்னை விடுவிக்க அனுமதி கொடுத்தார்.என்னை வந்து சந்திப்பதாக கூறினார்,ஆனால் கள நிலைமைகாரணமாக சந்திக்க முடியாமல் போய்விட்டது.
இறுதி நாட்களில் பல ஊடறுப்பு சமர்களை நடத்திய இவர் 15 ம் திகதி சண்டையின் போது பலத்த காயமைடைந்து சயனைட் கடித்து வீரமரணமைடந்தார்.அவர்து மனைவி பிள்ளைகள் மெனிப்பாம் முகாமில் தான் இருந்தார்கள்,ஒரு சிலரின் காட்டிக்கொடுப்பால் ராணுவத்தினர் கைது செய்து அழைத்துப்போயுள்ளனர். சொர்ணம் அண்ணாவின் நினைவுகளும் அவர் சமர்க்களமாடிய அந்த நாட்களும் என்றும் எம்மை விட்டு நீங்காது.அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
Saturday, May 15, 2010
அனைத்து தளபதிகளையும் ஒரே இடத்தில் தரிசனம் கொடுத்த அந்த நாள்- பாகம் 1
அன்று காலை வெகு சீக்கிரமே எழும்பவேண்டிய கட்டாயம்,பின் வீட்டு அன்ரியும் பிள்ளைகளும் அல்லோலகல்லோலப்படும் சத்தம் என் நித்திரை முறிய காரணமாகியது.அனைவரும் தமது வீட்டில் இருந்த பங்கருக்குள் ஓடி பதுக்கிக்கொள்வதில் குறியாக இருந்தனர். எனக்கோ இது ஒன்றும் புதிதல்ல.2007 ம் ஆண்டுக்குபிறகு இது வன்னி மக்களின் ஒரு சராசரி வேலையாகிபோய்விட்டது.
ஆனாலும் நமது புலனாய்வு அறிவைப்பயன்படுத்தி நாமும் பதுங்க வேண்டுமா இல்லை எங்கே போடப்போகிறது எண்டு வீட்டு கூட்ஸ்க்கு மேல ஏறி நிண்டு
பார்க்கலாமா எண்டு வண்டு சுத்திற இடத்தையும் நேரத்தையும் கணித்து தெரிந்து கொள்வோம்.வண்டு எனபது அமெரிக்கவின் புண்ணியத்தினால் இலங்கை ராணுவத்துக்கு வழங்கப்பட்ட உளவு விமானம்,இதை வன்னியில் உள்ள
அனைவரும் இப்படித்தான் அழைப்போம். இந்த வண்டு மிகவும் உயரத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கும்,அதனால் எமது கண்களால் சாதாரணமாக
பார்த்துவிட முடியாது. உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே கண்டு பிடிக்கமுடியும்.அதனால் அதை சத்தத்தை வைத்தே அந்த விமானம் எந்த பிரதேசத்தை வட்டமிடுகிறது என்று தெரிந்து கொள்வோம்.அதனால் தான் மக்கள்ஸ் அதுக்கு வண்டு என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
வண்டு ஒரு பிரதேசத்தை வட்டமிடத்தொடங்கிவிட்டால் அந்த பிரதேசத்தில் உள்ள மக்கள்ஸ் வேகமாக அந்த பிரதேசத்தில் இருந்து வேறு இடங்களுக்கு சென்றுவிடுவார்கள் இல்லையென்றால் பங்கருக்குள் பதுங்கிக்கொள்வார்கள்.அத்துடன் அருகில் ஏதாவ்து இயக்க முகாம் இருந்தால் மிக தூரமாகபோய்விடுவார்கள். நான் இருந்த வீட்டில் மொத்தமாக 7 பேர் தங்கியிருந்தோம்.அனைவருக்குமாக எமது நிறுவனத்தினால் அந்த வீடு கொடுக்கப்பட்டிருந்தது.அன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் பங்கர் வெட்டி வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாய தேவையாக இருந்து.
எனவே நாமும் எமது வீட்டில் ,பங்கர் சகல வசதிகளுடன் வெட்டி வைத்திருந்தோம், அதனால பக்கத்தில் இருக்கும் அன்ரிமார்,சிறுவர்கள்,சிறுமிகள்
எங்கள் வீட்டு பங்கரில் பதுங்கிக்கொள்வார்கள்.எனக்கொரு கெட்ட பழக்கங்க. இப்படியான நேரத்தில் கமராவும் கையுமா அலைவேன் ,கிபிர் வந்து குண்டு போடும் போது, வீடியோ எடுப்பேன் அது அருகிலே என்றாலும் கூட.( நான் 2008 ஜன்வரி மாதம் உருத்திரபுரம் முகாம் மீது சரமாரியா 3 கிபிர் விமானங்கள் குண்டு மழை பொழிந்த்தன
அப்போது ஒரு விமானம் எமது நிறுவனத்துக்கு 500 மீட்டர் தள்ளி உள்ள இயக்கத்தின் மருத்துவ பிரிவு முகாமுக்கு குண்டு போட்டது ,அதனை நான் நிலத்தில் பாதுகாப்பாக படுத்து இருந்து வீடியோ எடுத்திருந்தேன்,அன்று புலிகளின் விமானஎதிர்ப்புப்படையினர் மிகவும் மூர்க்கமாக கலிபர் ,23 m.m மற்றும் ஒலிகன் பீரங்கிகளினால் கிளீநொச்சி நகரின் நாலாபுறமுமிருந்து கிபிர் விமானங்கள் மீது தாக்கினார்கள்,இதன் காரணத்தினால் அவையினால் சரியான இலக்குகளைத்தாக்க முடியாமல் வெறும் காணிகளில் போட்டுவிட்டு தளம் திரும்பின.அவை அனைத்தும் எனது வீடியோவில் பதிவாகியிருந்தது. பின்னர் அவை இணையத்தள்ம் ஊடாக வெளீயாகி இன்றும் உலகெங்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றது) எனவே அந்த வீடியோ மூலம் நான் கிளியில் சிறிது பிரபலம் அடைந்திருந்தேன்,முக்கியாமான் அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்ததற்காக முக்கியமானவர்களிடம்
அந்த விமானக்காட்சியைப்பார்க்க இங்கே அழுத்துங்கள்
எனவே எனக்கு இப்படிப்பட்ட காட்சிகளை ஒளிப்பதிவு செய்வது மிகவும் பிடித்திருந்தது,அத்துடன் இதனை சவாலாகவே கருதினேன்.
எனெவே 2 ம் திகதி கார்த்திகை மாசம் 2007 காலை 6 மணியிருக்கும் எமது பிரதேசம் உள்ளடங்கலாக அதிகாலை முதல் வண்டு சுற்றிக்கொண்டிருந்தது.
முதல் நாள்தான் தலைவர் அவர்களினால் அநுராதபுரம் தாக்குதலில் ஈடுபட்ட விமானப்புலிகளுக்கும்,வேவுப்போராளிகளுக்கும் விருது வழங்கியிருந்தார்.
எமது வீட்டுக்கருகில் இருந்த படைத்துறைப்புலனாய்வு முகாமுக்குள் மணி ஒலிக்கப்பட்டது( வன்னியில் இருந்த அனைத்து இயக்க முகாம்களிலிலும்
கிபிர் விமானம் கட்டுநாயக்காவிலிருந்து புறப்படும்பொழுதே இங்கே அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டு மணி ஒலிக்கப்படும்,மணி ஒலித்த உடனேயே அனைத்து போராளிகளும் பங்கருக்குள் போய்விடுவார்கள் என்பது இராணுவத்துக்கு 2008 வரை தெரியாது) கிபிர் விமானம் வந்து பல நிமிடங்களின்பின் தான் அதன் சத்த்தை எங்களால் கேட்க முடியும்.எனவே நானும் எம்து வீட்டிலிருந்த எமத் சக ஊழியர்களூம் வீட்டுக்கு வெளியில் வந்து நின்று ஆகாயத்தை பார்த்துகொண்டிருந்தோம்.
திடிரென்று விமானத்தின் சத்தம் கேட்கத்தொடங்கியது. அப்போ அந்த திசையைநோக்கி நான் பார்த்த போது கிளீநொச்சை ஆஸ்பத்திரி பக்கமாக மிகவும் தாழவாக பதிந்து குண்டுகளை போட்டு விட்டு மேலெழுந்து.அன்றையதினம் நான் எனது கமராவை அலுவலகத்தில் வைத்து விட்டு வந்ததினால் என்னால் ஒளிப்பதிவு செய்யமுடியாமல் போய்விட்டது.அதே இடத்தில் சரியாக 1 வருடத்தின் முன்பு 2006 ம் ஆண்டு 2 ம் திகதியும் குண்டு போட்டன கிபிர் விமானங்கள் ,ஆனால் கிளிநொச்சி மருத்துவமனைக்குத்தான் சேதம் அதிகமாக இருந்தது அத்துடன் 2006 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ம் திகதி முகமாலையில் சண்டை தொடங்கிய பிறகு அதுதான் முதல்முறையாக கிளிநொச்சி நகருக்குள் கிபிர் விமானங்கள் மிகவும் தாழ்வாக பதிந்து குண்டுகள் போட்டன.அன்று எமது சக அலுவலர் சுதர்சினியின் பிறந்தநாள்,எனவே பின்னேரம் அனைவரும் கேக் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதுதான் எமது நிறுவனத்தின் விமான அபாய மணி ஒலித்தது, எனவே அனைவரும் பங்கருக்கு சென்றவேளையில் நானும் நண்பன் சுதனும் எனது அலுவலக அறையில் இருந்து கதைக்க்துகொண்டிருந்தோம்,அது நாள்வரை கிபிர்விமானங்கள் காடுகளுக்குள் மட்டும் தான் கொண்டு போட்டுக்கொண்டிருந்தன.அந்த அலட்சியத்தால் நாமிருவரும் வெளியில் போகவில்லை.அப்போதுதான் கீழிருந்து கலிபர் துப்பாக்கிகள் சுடும் ஓசைகள் கேட்டன. நானும் அவனும் அதைக்கேட்டு விட்டு வெளியில் போய்ப்பார்ப்போம் என்று வெளியில் வந்துகொண்டிருக்கும் வேளை மிகவும் பலத்த சத்தத்துடன் கிபிர் விமானம் பதிந்து கீழே போய்க்கொண்டிருந்தது, அந்த நேரம் உடனே நான் கீழே விழுந்து படுத்துவிட்டுத்தான் பார்த்தேன் பக்கத்தில் நின்ற சுதனைக்காணவில்லை.அவன் சத்தம் கேட்ட உடனேயே தவண்டு கொண்டு பங்கருக்குள் போய் விழுந்த்துவிட்டான்,மிகப்பெரிய சத்ததுடன் குண்டுகள் வெடித்தன ,எமது அலுவலகம் அதிர்ந்தது, சில யன்னல் கண்ணாடிகள் உடைந்தன, மாமரத்துக்குப்பக்கத்தில் சில
குண்டு சிதறல்கள் வந்து விழுந்தன.சில ந்மிடத்தில் விமானங்களும் போய்விட்டன.அந்தநாளை எம்மால் மறகமுடியாமல் போய்விட்டது,அத்துடன் சுதர்சினியின் பிறந்தநாளும் எல்லோராலும் மறக்கமுடியாது போய்விட்டது
வேறு யாரோடதுமில்ல புலனாய்வுபொறுப்பாளர் பொட்டு அவர்களோடது எண்டதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்திச்சி. அண்டைக்கு அதிகாலையிலதான் தலைவரோட அனைத்து முக்கியதளபதிகளூம் ஒப்பரேசன் எல்லாளன் வெற்றிகொண்டாத்தில் பங்கு பற்றியிருந்தார்கள்.காலையில் பேப்பரில் கூட படத்தோட நியூஸ் வந்திருந்த்து.
அப்போ அவரோட வாகன அந்த ஏரியாவில் நிக்குது எண்டால் மிகமுக்கியமான இடமாத்தான் இருக்கும் எண்டு நினைத்துக்கொண்டே எனது அலுவலக வேலையை செய்யத்தொடங்கினேன் .அப்போ இணையளத்தள செய்திகளைப்பார்த்தேன், விமானக்குண்டு வீச்சு பற்றி ஏதாவது போட்டிருக்கா எண்டு, அதில் திருவையாறு பகுதியில் கிபிர் விமானங்கள் குண்டு வீச்சு எண்டே போட்டிருந்து. 9 மணீபோல எமது சக அலுவலக அதிகாரி ஓடி வந்து சொன்ன செய்தி என்னை ஒருகணம்
ஆடிப்போக வைத்தது.பரிசளிப்பு விழா முடிஞ்சு தமிழ்ச்செல்வன் காலைல அந்த வீட்டிலதான் வந்து நிண்டவராம். கிபிர் வெளிகிட்ட அலாரம் அடிச்ச உடனே எல்லாரும்
பங்கருக்குள்ள போய்ட்டினாம்.அந்த பங்கரைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்த சம்பவம் நடந்து பல காலத்துக்குப்பிறகு எனக்கு அந்த இடத்துக்குபோக கிடைத்தது
சரி இனி சம்பவத்துக்கு வருவோம்.
அதிகாலையில் இருந்தே வண்டு கிளிநொச்சி நகரை சுற்றி கொண்டிருந்திருக்கிறது.அப்போதுதான் பரிசளிப்பு விழா முடிந்த்து தமிழ்ச்செல்வன் அவர்கள் தனது பஜிரோவில் இந்த முகாமுக்கு அதிகாலை வேளை வந்து தங்கியிருக்கிறார். அதனை வண்டு மூலமாக வீடியோ பண்ணிய ராணுவத்தினர் அந்த இடத்தை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்திருக்கின்றனர். அக்கிருந்து அநத வாகனம் வெளியே வராமையினால் யாரோ இயக்க பிரமுகர் உள்ளே இருக்கின்றார் என தெரிந்த்து கொண்டு விமானப்படைக்கு அறீவித்திருக்கின்றனர். உடனேயே வண்டு மூலம் அந்த வீட்டின் சரியான G.P.S ஜ பெற்றுக்கொண்டு கிபிர் விமாங்கள் குண்டுகளைப்போட்டிருக்கின்னறன.கிபிர் விமானங்களும் வந்த உடனேயே தமிழ்ச்செல்வனும் அவர்களின் உதவியாளர்களும் பங்கருக்குள் போய் பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள்.ஆனால் விதி அந்த குண்டுகளும் சரியாகப்போய் அந்த பங்கரின் வாசலிலேயெ வெடித்திருக்கின்றன,ஒன்றோ இரண்டோ இல்லை 5 குண்டுகள். வாசலில் வெடித்த குண்டுகள் அந்த பங்கரினுள்ளே மிகபெரிய தாக்கத்தி ஏற்படுத்தி உள்ளே உடைத்துவிட்டன, அதில் சிக்கி பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், லெப்.கேணல் மற்றும் அவரது உதவியாளர்களும் வீரமரணம் அடைந்தனர்
ஆனால் வெளியில் நின்று கீழே விழுந்து படுத்த போராளிகளும்,அடுத்த வளவில் பதுப்க்கிய போராளிகளும் சிறிய காயங்களோடுதப்பிவிட்டனர்.
விடயம் திஎரிந்த உடனேயே, திரு பொட்டம்மான் அந்த இடத்துக்கு வந்து தமிழ்ச்செல்வன் அவர்களை கூப்பிட்டுகிட்டே இருந்த்தாராம், உடனடியாக அந்த இடத்துக்கு இடிபாடுகளை அகற்றி பங்கரினுள்ளே சிக்கியிருந்த்தவர்களை காப்பாற்ற மிகவும் சிரமப்பட்டார்கள் போராளிகள், ஆனால் விதி அவர்களை எம்மிடம் இருந்து பிரித்து விட்டது. தமிழ்ச்செல்வனின் உடலம் மீட்கப்பட்ட போது அவரின் கால்கள் முறிந்தே கிடந்தன, மற்றவரின் உடலம் மிகவும் மோசமாக சிதைவடைந்து விட்டது.
எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. எதிரிக்கு மூக்குடைத்து வெற்றிவிழா கொண்டாடிய அந்த நாளே எமது மிகப்பெரிய இழப்பைக்கொடுக்கவேண்டியதாயிற்று. இந்த செய்தியை தலவரிடம் பொட்டு அம்மானே நேரிடியாக தெரிவிக்க ஒருகணம் அவரும் கலங்கிப்போனாரம்.தவிர்க்கமுடியாத பேரிழப்பு.
சில மணீ நேரத்தில் இணையத்தளத்திலும் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் வீரமரணம் தெரிவிக்கப்பட்டது.அதையடுத்த 2 நாட்கள் துக்கதினமாக அறிவிக்கப்பட்டது.
எனவே நாமும் அலுவலக வேலைய முடித்துக்கொண்டு பின்னேரம் வீடு போய்க்கொண்டிருந்தோம். அப்போ எமது வீதியில் எனக்கு சில விடயங்கள் புதிதாகப்பட்டது. சில வீடுகளில் பல இளைஞ்ர்கள் நின்று கொண்டிருந்தார்கள்,அதைத்தவிர புதிய ரக மோட்டார்சைக்கிள்களில் சீருடை அணிந்த போராளிகள் கைகளில் கனரக ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.எமது வீட்டுக்கு வரும்போது வாசலில் நிண்ட அன்ரி சொன்னா தமிழ்ச்செல்வனோட பொடி வந்திருக்காம் போய்ப்பார்க்கேல்லையோ எண்டு
உடனே நானும் ஞானாவும் வெளிக்கிட்டு நமது வீட்டுகருகில் இருந்த தமிழ்ச்செல்வனின் வீட்டுக்குப்போனாம்,அபோது அந்த ஒழுங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த்து நானும் பார்த்துக்கொண்டே போகும்போது திடீரென்று மோட்டர்சைக்கிளில் உள்ளே இருந்து வந்த் போராளைகள் எங்களை வீதியின் வெளீயே நிக்குமாறூ கேட்டார்கள், அப்போ து திடீரென்று எங்கிருந்தோ இரண்டு பஜிரோக்கள் வந்து தமிழ்ச்செல்வனின் வாசலில் நின்றன., இருட்டு வேறு,அனைத்து வாகன லைட்டுக்களும் நிப்பாட்டப்பட்டன, அப்போது வீட்டுக்குளேயிருந்து
நாலைந்து போராளிகள் சுற்றிவர ஒருவர் உள்ளிருந்து வந்து பஜிரோவில் ஏறினார்.அப்போ ஞானா கத்தினான் அண்ணே தலைவர் போறார் எண்டு, அந்த ஒரு கணத்தில் நான் அவரை பார்க்கும் பேறு பெற்றேன்.உடனேயே சீறிகொண்டு புறப்பட்டது அவரின் பஜிரோ, எம்மை கடந்து செல்லும் போது எனக்குள்ளே எண்ணிக்கொண்டேன்,சீ கொஞ்ச நேரம் முதல்ல வந்திருந்தாகூட அவரைப்பார்த்திருக்கலாமே எண்டு, என்ன செய்ய கொடுத்து வைத்தது அவ்வளவுதான் எண்டு நினைத்துக்கொண்டு எனது அஞ்சலியைச்செலுத்தி விட்டு வீடுவந்தேன்.