Sunday, May 2, 2010

யாழ் கடத்தல் சம்பவகள் எம் மீது சேறு பூசும் நடவடிக்கைகள்:டக்கி







யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வரும் கடத்தல் நடவடிக்கைகள் அனைத்தும் எங்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைள் என பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஒரு சில கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுகின்றது எனினும் இச்சம்பவங்கள் எம்மீது சேறு பூசும் நடவடிகைகளாக சிலர் திட்டமிட்டு மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு படையினர் பலரும் யாழ் நகரில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சில தமிழ் பாதுகாப்பு அதிகாரிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ் நகரில் அதிகரித்து வரும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே டக்லஸ் தேவானந்தா இதனை எமது எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்

தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் யாழ்மாநகர முதல்வர்


ட்

யாழ்நகர முதல்வர் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதாக யாழ்நகர வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் மற்றுமொரு அம்சமாக யாழ்பொது நூலகத்தில் இயங்கும் சிற்றுண்டிச்சாலையை தென்னிலங்கையை சேர்ந்த சிங்களவர் ஒருவருக்கு கொடுக்குமாறு தற்போது சிற்றுண்டிசாலையை நடாத்தும் தமிழ் வர்த்தகருக்கு இம் மாநகர முதல்வர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இவரது மற்றுமொரு நடவடிக்கையான தென்னிலங்கை தெருவோர வியாபாரிகள் தெருவோர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊற்சாகப்படுத்துவதாக அமைந்துள்ளதாக வர்த்தகரல்கள் மேலும்குற்றம் சுமத்தியுள்ளனர்.

தனது தனிப்பட்ட லாபம் கருதி இவர்களை அனுமதிப்பதாகவும் இவர்கள் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக அதேபொருட்களை விற்பனை செய்வதால் தாம் பல இலட்சம் செலவழித்து தொடங்கிய வியாபாரங்கள் பாதிப்படைவதாக இவர்கள் விசனமடைந்துள்ளனர்.

இவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து செல்வதாகவும் இச்சிங்கள வியாபாரிகள் தாம் யாழ்நகர முதல்வரின் அனுமதியை பெற்றே இவ்வியாபாரம் செய்வதாக கூறி தமது வியாபாரத்தினை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.