Friday, December 23, 2011

திம்புவில் எல்.ரி.ரி.ஈ. கையாண்டதைப் போன்ற உபாயத்தை த.தே.கூ. கையாள்கிறது-அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

பொலிஸ், காணி அதிகாரங்களைக் கோரி காலத்தை விரயமாக்கக்கூடாது எனவும் உத்தேச நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் பேச்சுவார்த்தை நடத்துமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் அரசாங்கம் கோரியுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக கூறிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் எதிர்மறையான நிலைப்பாட்டில் உள்ளததாகவும் அரசாங்கம் கலந்துரையாடத் தயாரில்லாத விடயங்களில் அதிகார பரவலாக்கத்தை வலியுறுத்தி நிற்பதாகவும் தெரிவித்தார்.

திம்புப் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து எல்.ரி.ரி.ஈ. வெளியேறியபோது அவ்வியக்கம் கையாண்டதைப் போன்ற உபாயத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையாள்கிறது எனவும் அவர் கூறினார்.

'அரசாங்கம் 31 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்கும். இதற்காக 19 பேரின் பெயர்களையும் அறிவித்துள்ளது. ஆனால் த.தே.கூட்டமைப்பு தனது அங்கத்தவர்களின் பெயர்களை இதுவரை அறிவிக்கவில்லை. அரசாங்கத்துடன் த.தே.கூட்டமைப்பு அவர்களின் அபிலாஷைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து எல்.ரி.ரி.ஈ. வெளியேறியபோது கையாண்டதைப் போன்ற உபாயத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையாள்கிறது.

த.தே.கூட்டமைப்பின் எதிர்மறையான மற்றும் கடும்போக்கு நிலைப்பாடு காரணமாக அதனுடன் பேசுவது கடினமானது. யுத்தம் முடிந்தமையும் சமாதானம் உதயமாகியமையும் தமிழ் மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது. அது உண்மையல்ல. வடக்கில் சமாதானம், சட்டம் ஒழுங்கு, அபிவிருத்தியில் 5 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டதாக ஏற்றுக்கொள்வதற்கும் த.தே.கூ. மறுக்கிறது' அமைச்சர் ரம்புக்வெல்ல கூறினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக சில மேற்குல நாடுகள் சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளமை உற்சாகமளிப்பதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

'சிலர் அரசாங்கம் இந்த அறிக்கையை அரசாங்கம் வெளியிடாது எனக் கூறினார்கள். ஆனால் ஆனால் குறுகிய காலத்தில் ஆணைக்குழுவுடன் சிபாரிசுகளுடன்கூடிய அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளளது.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்காக ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும்' எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.

No comments:

Post a Comment