Friday, April 30, 2010

மகிந்தவுக்கு ஆதரவளிக்கும்படி இந்தியா அழுத்தம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம்!!


சிறிலங்காவின் அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசதலைவர் மகிந்த மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்றும் மகிந்த இந்த ஆதரவரை வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம் வழங்கியுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இணைக்கப்படாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை தவிர்ந்த அதிகாரங்களை பகிர்ந்தளித்து – மகிந்தவின் திட்டப்படி – தீர்வு பொதி ஒன்றை முன்மொழிந்து தமிழர் பிரச்சினைக்கு முடிவு ஒன்றை காணவேண்டும் என்று இந்தியா விரும்புவதாகவும் -

தீர்வு விடயத்தில் இன்னமும் காலத்தை இழுத்தடித்தால், அது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிறிலங்காவின் மீது அழுத்தங்களை அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்துவிடும் என்று இந்தியா கருதுவதாகவும் இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஆகவே, சிறிலங்காவின் புதிய அரசு அரசமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வை வழங்குவதற்கு தேவையான நாடாளுமன்ற பலத்தை – மூன்றிலிரண்டு பெரும்பான்மையை – தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக வழங்குவதாக இந்திய தரப்பிலிருந்து சிறிலங்காவுக்கு உறுதியளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில் – புதிய அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தாம் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

புதிய அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக கெல உறுமய மற்றும் வீமல் வீரவன்ச தரப்பு ஆகியவை, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னர் அரசதலைவர் தேர்தல் காலப்பகுதியில் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தமைக்கு போர்க்கொடி தூக்கியபோதும், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுத்தருவது குறித்தும் அண்மையில் சிறிலங்கா – இந்திய தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தியது எவ்வாறு?: கோத்தபாயவின் வாக்குமூலம்

உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வருடம் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை இந்திய சிறிலங்கா அதிகாரிகள் எவ்வாறு ஒரு குழுவாக இணைந்து முறியடித்தனர் என்பதை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

Indian Defence Review இற்காக திரு சசிக்குமார் என்பவருக்கு அளித்த விரிவான செவ்வியிலேயே இந்த ஏமாற்று நாடகத்தின் பின்னணியை கோத்தபாய போட்டு உடைத்துள்ளார். புலிகளை வெற்றிகரமாகத் தோற்கடிக்க முடிந்தமைக்கான ஒன்பது காரணங்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தச் செவ்வியின் சில பகுதிகளை பொங்குதமிழில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

இந்த செவ்வியில் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் தொடர்பாக கோத்தபாய ராஜபச்ச தெரிவித்திருப்பதாவது:

கடந்த வருடம் ஏப்ரல் 24 ம் திகதி, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி உடனடிப் போர்நிறுத்தம் வேண்டி சென்னையிலுள்ள அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இச்சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர மேனன் என்னை அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்தியத் தூதுக்குழு ஒன்று அவசரமாக கொழும்பு வரவிருப்பதாகத் தெரிவித்தார்.

நான் உடனடியாகவே ஜனாதிபதி ராஜபச்சவின் அலுவலகத்திற்குச் சென்று அவரின் அனுமதியைப் பெற்று 5 நிமிடத்திற்குள்ளாகவே மீண்டும் மேனனைத் தொடர்பு கொண்டேன்.

முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் (No Fire Zone) ஷெல் தாக்குதல்கள் உட்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம். இந்தியா சிறிலங்கா அதிகாரிகள் குழவாக மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு சிறந்த உதாரணமாக இது உள்ளது என இந்தச் செவ்வியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வெளியிடாத சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்.

வன்னியில் பேரழிவு யுத்தம் நடந்த காலப்பகுதியில் இந்திய இலங்கை அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் செயற்பாடுகள் பற்றி கோத்தபாய விரிவாக எடுத்துக் கூறியுள்ளதாவது:

இந்திய நிலைப்பாடு என்பது இந்த யுத்தத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருந்தது. 1987 ஆண்டு ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை வடமராட்சியில் உணவுப் பொட்டலங்களைப் போட்டது. அதன் பின்னான காலத்தில் இப்படியான நிலை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்தோம்.

மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணுவதிலும் இந்தியாவிற்கு உடனுக்குடன் நிலமைகளை தெளிவாக்குவதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

எமது பக்கத்தில் நானும், பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தியத் தரப்பில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகாரத்துறையின் செயலாளர் சிவசங்கர மேனன் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் விஜய் சிங் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டோம்.

நாம் தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் தொடர்பிலிருந்தோம். சிக்கலான விடயங்கள் எழும்போதெல்லாம் நாம் கூடிப் பேசி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டோம். இதனால் எமது இராணுவம் எந்தவிதமான தடைகளும் இன்றி தமது இராணுவ நடவடிக்கையைத் தொடர முடிந்தது என கோத்தபாய இந்திய அதிகாரிகளுடன் இருந்த இறுக்மான உறவையும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதில் இந்தியா காட்டிய ஈடுபாட்டையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

கோத்தபாயவின் இந்த சுய வாக்குமூலம் இவ் உண்ணாவிரதம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த வருடம் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தபோது அன்றைய தினம் அதிகாலை எவருக்கும் அறிவிக்காது, தான் அண்ணா சமாதிக்கு முன்னர் திடீரென உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாகத் தெரிவித்திருந்தார். தமிழக இந்திய ஊடகங்களும் அவ்வாறே எழுதியிருந்தன.

ஆனால் கோத்தபாயவின் நேர்காணலில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பதற்கு முதல்நாளே இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் தன்னைத் தொடர்பு கொண்டு ஒரு சந்திப்பிற்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ளமை இந்த உண்ணாவிரதம் என்பதே இந்திய அரசும் தமிழக முதல்வரும் இணைந்து நடத்திய நாடகமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் கோத்தபாய தனது நேர்காணலில், இந்திய அதிகாரிகளுடன் ஏற்பட்ட சந்திப்பை அடுத்து சகல இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக தாம் அறிக்கை விட்டதன் மூலம் தமிழகத்திலிருந்து எழுந்திருக்ககூடிய ஆபத்தை தவிர்த்துக் கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் முதல்வர் தனது உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, வன்னியில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்றும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தனக்கு அறிவித்துள்ளதாகவும் கூறியே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். திமுக ஆதரவு ஊடகங்களும் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வன்னியில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகவே பிரச்சாரப்படுத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோத்தபாயவின் நேர்காணலைப் பார்க்கும்போது எழும் கேள்விஇந்த உண்ணாவிரதம் முதல்வர் கருணாநிதியும் இந்திய அதிகாரிகளும் இணைந்து நடத்திய கூட்டு நாடகமா அல்லது இந்திய அதிகாரிகள் சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து கருணாநிதியை இத்தனை சுலபமாக ஏமாற்றிவிட்டார்களா என்பதுதான்.

Thursday, April 29, 2010

மலேசியாவிற்கு தப்பிவந்த 500க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்-மலேசியா அரசு

கோலாலம்பூர் : இலங்கை போர் முடிவடைந்த பிறகு 500க்கும் மேற்பட்ட
விடுதலைப்புலிகள் மலேசியாவிற்கு தப்பிவந்ததாகவும், ஆனால் அவர்கள்
திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாகவும் மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன்
ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு மே மாதம்
இலங்கையில் போர் முடிவடைந்த பிறகு, அங்கிருந்து விடுதலைப் புலிகளின்
முக்கிய தலைவர்கள் வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு
ஆகஸ்ட் மாதம் முதல் சென்ற மாதம் வரை 500க்கும் மேற்பட்ட புலிகள்
அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் அகதிகளாக தமது நாட்டில் தஞ்சமடைய
வந்ததாகவும், ஆனால், அவர்களைக் கைது செய்து நாடுகடத்தி விட்டதாகவும்
மலேசிய அமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள்
பற்றிய விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.

அம்பலமாகும் நித்தியின் லீலைகள்

""நித்யானந்தாவுக்கும், அவரின் தம்பி நித்தீஸ்வரருக்கும் நடந்த மோதலையும், சாமியார் தம்பிக்காக பெண்பார்த்த கதையையும் சொல் றேன்'' என தொடர்ந்தார் அந்தப் பெண்.

‘அண்ணனின் காம லீலைகளைப் பார்த்த தம்பியால் சும்மாயிருக்க முடியுமா? அவரும் ஆசை வலைகளை வீசிப் பார்த்தார். கடந்த ஆண்டு புதிதாக பிரம்மச்சாரியாக வந்த ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி கட்டிப்பிடிக்க... அந்தப்பெண், சாமியாரிடம் சொல்லிவிட்டார் அழுதபடி.

கட்டிப்பிடிக்கிற உலக உரிமை சாமியாருக்கு மட்டும்தானே. இதனால் கோபமான சாமியார் வழக்கமான வன்முறையை பிரயோகித்தார்.

அதென்ன வழக்கமான வன்முறை?

ஆசிரமத்தில் ஆணோ, பெண் ணோ.... அடங் கிப் போக மறுத் தாலோ... அல் லது நியாய மான கேள்விகளை எழுப்பினாலோ... சம்பந்தப்பட்டவரை கம்பெடுத்து விளாசுவார் சாமியார். அடி பொறுக்க மாட்டாமல் அலறினா லும் விடமாட்டார். தன் கை வலிக்கிற வரை அடித்து நொறுக்கிவிடுவார். தங்களுடைய கல்விச் சான்றிதழ் எல்லாம் சாமியாரின் லாக்கரில் சிக்கியிருப்பதால் வெளியேறவும் முடியாமல் அடிபட்டு உதைபட்டு அங்கேயே கிடப்பார்கள்.

அதே தடியடி டெக்னிக்கை தன் தம்பி மீதும் பிரயோகித்தார். ஊருக்குத் தான் சாமியார். தம்பிக்குத் தெரியாதா அண்ணனின் யோக்கிதை. கம்பை பிடுங்கிக்கொண்டு அண்ணனை தாக்க ஆரம்பித்தாலும் இறுதியில் ஜெயித்தது அண்ணன்தான். ஆமாம்... சாமியார் தாக்கினதில் தம்பியின் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது.

அடிபட்ட பாம்பாய் சீறிய தம்பி... ‘""இப்பவே வெளி உலகத்துக்கு ஒன் னோட முகமூடிய கிழிச்சுக்காட்றேன்'' என கிளம்ப.... சாமியாருக்கு ஷாக்! சட்டென சரண்டர் ஆனார்.

""உன் பேரைச் சொல்லிக்கிட்டு எவனெவனோ இந்த ஆசிரமத்தில் எல்லா அட்டகாசமும் பண்றான். ஒன் தம்பி நான்... ஏதோ ஆசப் பட்டு ஒரு பொண்ண கட்டிப்புடிச்சது தப்பா?'' என தம்பி எரிச்ச லாக...

தம்பிக்கும் காமம் உண்டு என்பதை ஒப்புக்கொண்ட சாமியார்.... ‘""உனக்கு என் னைப் போல பக்குவம் பத்தாது. நீ இப்படி நடந்தா நம்ம ஆசிரம ரகசியங்கள் வெளியேறிடும். முதல்ல உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்'' என தம்பியை சம்மதிக்க வைத்தார் சாமியார்.

சேலத்தில் உணவு சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் பிரபலமானவர் அவர். சாமியாரின் பக்த வி.ஐ.பி.களில் மிக முக்கிய மானவர். அவரின் மகளை தன் தம்பிக்கு பேசிமுடிக்க ஏற்பாடு செய்தார் சாமியார்.

""என்னது... சாமியார் ஃபேமிலியில் சம்பந்தமா? எல்லாம் சாமியாரோட மகிமை. அடியே... நம்ம பொண்ணு கொடுத்து வச்சவ... உலகம் அறிஞ்ச ஒரு பிரபலத் தின் வீட்டுக்கு மருமகளா ஆகப் போறாளே...'' என சந்தோஷப்பட்டார்.

ஆசிரமத்திற்கு வந்த தொழிலதிபர் வரதட்சணை விஷயங்கள் குறித்து பேசினார் சாமியாரிடம்.

பக்தர்களின் வீட்டுக்கு வந்து ஒரு பூஜை நடத்தி விட்டுப் போக வேண்டுமானால் பூஜை சாமான்கள் மற்றும் போக்குவரத்து செலவு போக சாமியாருக்கு தனியாக ஒரு லட்ச ரூபாய் தண்டம் வைக்க வேண்டும். இப்படி பக்தி கொள்ளை அடிக்கிற சாமியார் என்ன சொன்னார் தெரியுமா?

""‘வரதட்சணையெல்லாம் வேண்டாம்.''

ஆனால் தொழிலதிபரோ... ""என் சக்திக்கு உட்பட்டு என் பொண்ணுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய் றேன் சாமி'' எனச் சொல்லிவிட்டு கிளம்பப் போனார்.

‘அந்த "சக்திக்கு உட்பட்டது' எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்துவிடும் போல இருந்தது சாமியாருக்கு.

""நாங்க வரதட்சணையை எதிர்பார்க்கல. ஆனா.. ஒங்க பொண்ணுக்கு என்ன செய்யப் போறீங்க?னு நான் தெரிஞ்சுக்கலாமா?''

‘""ஐந்து கிலோ தங்கம். அப்புறம் எவ்வளவு வெள்ளி வேணுமோ... அதன்படி செஞ்சிடுறேன்'' சொல்லிவிட்டு கிளம்பினார் தொழிலதிபர்.

சாமியாருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆனால் அந்த சந்தோஷம் சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

""அவரு பொண்ணத்தான கட்டிக்கச் சொல்ற? அவ ரொம்ப குண்டா இருப்பா. அதனால் எனக்கு அந்தப் பொண்ணு வேணாம். வேற பொண்ணு பாரு'' எனச் சொல்லிவிட்டார் நித்தீஸ்.

சாமியாரின் சமாதானங் கள் எடுபடவில்லை.

நாமக்கல் பகுதி கல்வித் தொழில் அதிபர் (இப்பவெல் லாம் கல்விங்கிறது தொழி லாத்தானே ஆயிருச்சு) ஒருவர் சாமியாரின் பக்தர். அவரின் மகளை தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்க திட்டமிட்ட நித்யானந்தா தன் அடிப்பொடி ஆனந்தா ஒருவரிடம் என்ன சொன்னார் தெரியுமா?

""அந்த வீட்டுப் பொண்ண கட்டிவச்சுட்டா அதன் மூலம் அந்த கல்வி நிறுவனத்தை கைப்பத்திடலாம். அத வச்சு இன்னும் பல ஊர்ல காலேஜ் கட்டி காசு பாக்கலாம்ல'' என சாமியார் ஆனந்தக் கூத்தாடினார்.

சாமியார் மேல் நிரம்ப பக்தி வைத்திருந்த அந்த கல்வி அதிபர், தன் கல்வி நிறுவனத்தின் பிளாக் ஒன்றிற்கு சாமியாரின் பேரை வச்சு அழகு பார்த்தவர். அவரிடம் சாமியார் தன் தம்பிக்கு பெண் கேட்டார். ஆனால் கல்வி அதிபரோ... ‘""சாமியார் - பக்தன் உறவு போதும் சாமி. சம்பந்தி உறவெல்லாம் வேணாம்'' என தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார்.

சாமியாரின் இந்த திட்டமும் தவிடு பொடியானது.

திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த ஒரு பெண்ணை தனக்கு பிடித்திருப்பதாகவும் அந்தப் பெண்ணை கட்டிவைக்கும்படியும் நித்தீஸ் சொன்னார். ஆனால் நித்யானந்தா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

காரணம்... நித்யானந்தா அந்தப் பெண்ணை பலமுறை தொட்டவர். நித்தீஸ் கைகாட்டுகிற பெண்களையெல்லாம் நித்யா மறுத்தார்.

அந்த அளவுக்கு சாமியார் கை வைத்திருந்தார். இதனாலேயே தம்பியின் கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இப்படி சாமியார் காம-சாம தாண்டவங்கள் ஆடி யிருந்தாலும் அவரின் ஆசை ஒன்று நிறைவேறாததில் வருத்தமோ வருத்தம். பெங்களூரைச் சேர்ந்த அழகான பெண். அந்தப் பெண்ணை அமெரிக்க ஆசிரமத்தில் நல்ல பதவி தந்து தன் ஆசைநாயகியாக வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். இதற்காக அந்தப் பெண்ணை மூளைச் சலவையும் செய்தார்.

""நீ டிரைவிங் பழகிக்கோ. அதன் பிறகு நாம் அமெரிக்கா போய்விடலாம். நீ எப்போதும் என் அருகிலேயே இருப்பது மாதிரி... நீயே எனக்கு கார் ஓட்டலாம். அமெரிக்காவில் நீ எல்லாத்தையும் அனு பவிக்கலாம்'' என ஐடியாவும் கொடுத்தார் சாமியார்.

ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர்... ""அமெ ரிக்காவும் வேணாம்... ஆஸ்திரேலியாவும் வேணாம். ஏதோ இந்த ஆசிரமத்தப் பத்தி மக்கள் மகிமையோட பேசிக்கிட்டதால் வந்தோம். நீங்க... சின்னப் பொண்ணு மனசுல அமெரிக்க ஆசையை தூண்டாதீங்க. ஒங்களுக்கு ஒரு கும்பிடு... ஒங்க ஆசிரமத்துக்கு ஒரு கும்பிடு...'' என கிளம்பிவிட்டனர். இப்படி சாமியாரின் கால் அமுக்கு வைபவத்தில் இருந்து புத்திசாலித்தனமாக தப்பியவர்கள் கதையும் நிறைய்ய உண்டு.

ஆனால் இப்போது சாமியார் தான் தப்பமுடியா மல் மாட்டிக் கொண்டு ‘இனி ஆசிரமமே வேணாம் என மலையேறிவிட்டார்.

சாமியார் அடிக்கடி சொல்லுவார் ""ஸாஸென் என்ற ஜென் வார்த்தைக்கு ‘"சும்மா அமர்ந்திருத்தல்' என்று பொருள். இது ஒருவகை தியானம். இந்த தியானம் செய்ய கஷ்டமாக இருக்கும். அதை செய்து விட்டால் நீங்கள் உங்கள் மனதின் ஆசைகளை... மனதையே கூட வென்று விடலாம்'' எனச் சொல்லுவார்.

நீங்களும் ‘"ஸாஸென்' ஆக இருந்திருக்கலாமே. அதாவது சும்மா இருந்திருக்கலாமே சாமி!

மீண்டும் எல்லாளன் படை நான்கு கோரிக்கைகளை முன்வைத்து எச்சரிக்கை : யாழில் துண்டுப்பிரசுரம்

_
வர்த்தக நிலையங்களில் சிங்கள பெயர்ப்பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடு,காணி விற்றல், தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கும் தீர்வு காணுமாறு கோரி யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தில் இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.

அதில்,

‘இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கியுள்ளோம். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிட பல உத்திகளை வகுத்துள்ளது. இந்த உத்திகளில் சிலவே தென்னிலங்கையில் இருந்து அதிகளவிலான சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய எம்மை சிறுபான்மையினராக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் ஒருவார காலத்திற்குள் முடிவுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் நீங்கள் கடும் விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும்.

அதியுச்ச தண்டனைகளையும் பெறுவீர்கள்.

எமது சக்தியான விடுதலைப் புலிகளின் இயங்குநிலை ஸ்தம்பிதமடைந்துள்ள இதேவேளை எம்முடன் ஒத்துழைத்து சிங்களமயமாக்கலில் எமது தாய்மண்ணையும் தாய்மொழியையும் எதிர்கால சந்ததியையும் காப்போம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. _

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களை தன்பக்கம் இழுக்க அரசு சதி முயற்சி சலுகைகளுக்கு அடிபணியோம் என்கிறார் மட்டு. எம்.பி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசு பகீரத முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
பிரதியமைச்சர் பதவி, ரொக்கப் பணம், சொகுசு வாகனங்கள் போன்ற ஆடம்பரச் சலுகைகளைத் தருவதாகக் கூறி அரசுப் பிரதிநிதிகள் கூட்டமைப்பு எம்.பிக்களை அணுகுகின்றனர் என்று சுட்டிக்காட்டிய அவர், எனினும் அத்தகைய சதி முயற்சிக்குத் தாங்கள் ஒருபோதும் அடிபணியமாட்டார்கள் என் றும் சூளுரைத்தார்.
கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருக் கும் யோகேஸ்வரனை வரவேற்று மட்டு. துறைநீலாவணை தில்லையம்பல பிள்ளை யார் ஆலய முன்றலில் நேற்று கிராம மக்க ளால் விழா எடுக்கப்பட்டது.
அவ்வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
பிரதியமைச்சர் பதவி, ரொக்கப்பணம், உயர்பாதுகாப்பு, சொகுசு வாகனங்கள் ஆகிய வற்றைத் தருவார்கள் என்று கூறி அரசுத் தரப்பினர் எம்மை விலை பேசுகின்றார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ அரசு எனக்குப் பிர தியமைச்சர் பதவி உட்பட அனைத்து வசதி களையும் ஏற்படுத்தித் தருவதாகக் கூறி என்னிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் பிரதிநிதிகளை அனுப்பியும் பேச்சுகளை நடத்தியது. இதேபோலவே தமிழ்க் கூட்டமைப்பின் எல்லா எம்.பிக்களுடனும் இரகசியமாகப் பேரம்பேச அரசு முயல்கிறது.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசினால் விலைக்கு வாங்கவே முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மக்களின் ஆணையை மதித்து நடப்பார்களே ஒழிய அம்மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார்கள்.
ஏனைய தமிழ்க் கட்சிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து தமிழ்மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பேரினவாதக் கட்சிகளை நாம் தோற்கடிக்க முடியும். கடந்த தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
இந்தத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக மட்டக்களப்பில் 360 வேட்பாளர் போட்டியிட்டனர். ஆனால் ஏனைய 359 வேட்பாளர்களும் எதிர்கொள்ளாத பிரச்சினைகளை எல்லாம் கூட்டமைப்பின் வேட்பாளரான நான் சந்திக்க நேர்ந்தது.
தேர்தலுக்கு முந்திய இரவில் துண்டுப் பிரசுரமொன்றை நான் வெளியிட்டது போல் வெளியிட்டனர்.
நான் தேர்தலில் இருந்து விலகுகிறேனென பொய்ப்பிரசாரம் செய்தனர். ஆனால் மக்கள் என்னைக் கைவிடவில்லை. நான் தமிழ் மக்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் வரை ஓயமாட்டேன் என்றார்.

யாழ். பொது நூலகம் கணனி மயம்; வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு
ஏனைய பொது நூலகங்களுடன் தக வல்களை பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப் படுத்தப்படவுள்ளது என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
தகவல் பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ். நூலகம் தொடர்புபடுத்தப்படவுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்திற்கு அமைய யாழ். பொது நூலகத்தை முழுமையாக கணனி மயப்படுத்தவும், மேலும் நவீன மயப்படுத்தவும் தேவை யான சகல வசதிகளையும் அரசு மேற் கொண்டுள்ளது.
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த நூலகம் 2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மீண்டும் திறந்து வைக் கப்பட்டது. கூடிய தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் கணினி மயப்படுத் தப்படவுள்ளதுடன் சிறுவர் பகுதியும் அவர்களுக்கு ஏற்றவகையில் கணனி மயப்படுத்தப்படவுள்ளது என்றும் மாநாட் டில் அவர் கூறினார்.

வடக்கின் விமான, துறைமுக சேவைகளை அபிவிருத்தி செய்ய இந்தியா ஆர்வம்! தூதர் அசோக் காந்த் தகவல்வடக்கின் விமான மற்றும் துறைமுக சேவைகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு, ஏப். 30
வடக்கின் விமான மற்றும் துறைமுக சேவைகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத் தளங்களை புனரமைத்தல் மற்றும் துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும் என இந்தியா அறி வித்துள்ளது.
பிரதமர் டி.எம்.ஜயரட்னவுடன் நடந்த சந்திப்பின்போது இலங்கைக்கான இந் தியத் தூதர் அசோக் காந்த் இத்தகவலைத் தெரிவித்தார்.
குறிப்பாக பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகி யவற்றை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
புதிய பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவிக் கும் நோக்கில் அசோக் காந்த், பிரதமர் அலுவலகத்திற்கு நேற்று விஜயம் செய் துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் தற் போது காணப்படும் உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலை விவகாரம் சூடு பிடித்து மாநகர சபைக் கூட்டத்தில் அமளி!யாழ். பிரதான வீதியில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பான விவகாரத்தால் மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் மூன்று மணி நேரமாக அமளிதுமளி தொடர்ந்தது. இறுதியில் கூட்டம் இடை நிறுத்தப்பட்டது. மாநகர முதல்வர் திருமதி யோகேஸ் வரி பற்குணராஜா தலைமையில் சபை யின் மாதாந்தக்


யாழ்ப்பாணம்,ஏப்.30
யாழ். பிரதான வீதியில் புத்தர் சிலை அமைப்பது தொடர்பான விவகாரத்தால் மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் மூன்று மணி நேரமாக அமளிதுமளி தொடர்ந்தது. இறுதியில் கூட்டம் இடை நிறுத்தப்பட்டது.
மாநகர முதல்வர் திருமதி யோகேஸ் வரி பற்குணராஜா தலைமையில் சபை யின் மாதாந்தக் கூட்டம் நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.
கூட்ட ஆரம்பத்தில் கூட்ட நிகழ்ச்சி நிரலை முதல்வர் வாசித்த போது, எதிர்க் கட்சித் தலைவர் மு.றெமிடியஸ் தெரி வித்த ஆட்சேபத்தை அடுத்து இரு தரப்புக்
களுக்கும் இடையில் தர்க்கம் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன.
தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் நீடித்த களேபரத்தால் சபையின் நிகழ்ச் சிகளைத் தொடர முடியாத நிலையில் கூட்டம் இடை நிறுத்தப்பட்டது.
நேற்றைய கூட்ட ஆரம்பத்தில் முதல் வர் வாசித்த நிகழ்ச்சி நிரலின் 12 ஆவது விடயத்தில் முன் அறிவித்தபடி, கௌரவ உறுப்பினர் அ.கிளபோடாசியஸ் பின்வ ரும் பிரேரணையைப் பிரேரிப்பார் எனத் தெரிவித்து "பிரதான வீதியில் புத்தர் சிலை வைக்க எண்ணியுள்ள இடத்தில் வீதிக் குறியீடுகள் பொருத்த சபை தீர்மானிக் கிறது' என்று குறிப்பிடப்படுகிறது எனக் கூறியதும் தர்க்கம் ஆரம்பித்தன.
அந்த இடத்தில் யார் புத்தர் சிலை வைக்க எண்ணியுள்ளனர் என்று எதிர்க்கட் சித் தலைவர் றெமிடியஸ் உறுப்பினர் கிளபோடாசியஸிடம் கேள்வி எழுப் பினார். இதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கோரினார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தரப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:
மாநகரசபை எச்சந்தர்ப்பத்திலும் இவ் வாறு புத்தர் சிலை வைக்க எண்ண வில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சியினர் இவ் விடயம் எதிர்காலத்தில் தேவையற்ற சிக் கல்களை ஏற்படுத்த இடம் உள்ளதாக உறு திபடக்கூறினர். அத்துடன் யாழ். மாநகர சபையின் எந்தவொரு கூட்டத்திலோ அல் லது தீர்மானத்திலோ இத்தகைய விடயங் கள் பேசப்படவில்லை. நிகழ்ச்சி நிரல் களிலும் சேர்க்கப்படவில்லை. அப்படியி ருந்தும் ஏன் இப்படிக் குறிப்பிட வேண் டும்? இந்தச் சொற்பதம் யாழ். மாநகர சபை நிர்வாகம் புத்தர் சிலை வைக்க எண் ணியுள்ளதாகத் தவறாக அர்த்தப்படுத்தி விடும். அத்துடன் அதற்கு நாங்களும் ஒத்துழைப்பு வழங்கியதாக அமைந்து விடும் என்பதையும் வற்புறுத்தினோம்.
எனவே அதை நீக்கி ""யாழ் பிரதான வீதி மடத்தடிச் சந்தியில் புத்தர் சிலை வைக்க இராணுவத்தினர் ஏற்கனவே முயற்சி எடுத்த இடத்தில் என திருத்தி உள் ளடக்க வேண்டும் என மு.றெமிடியஸ், மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப் பின் யாழ். மாநகர சபை உறுப்பினர்களான கே.என். விந்தன் கனகரத்தினம், அ. பரஞ்சோதி, என். இராஜதேவன் உட்பட கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்க ளும் றெமிடியஸின் கருத்தை ஆதரித்துப் பேசினர்.
இதற்குப் பதில் அளித்த முதல் வர், குறித்த சொற்பதத்தை மாற்றி நீங்கள் குறிப்பிடுவதைச் சேர்க்க முடியாது, என உறுதியாக நிற்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய உறுப் பினர்களும் முதல்வரின் கருத்தை ஆதரித் தனர். அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியி னருக்கும் எதிர்க்கட்சியினருக்குமிடை யில் சுமார் மூன்று மணி நேரம் கடும் வாக்குவாதமும் சொற்போர்களும் இடம் பெற்ற நிலையில் இக்கூட்டத்திலே ""பிர தான வீதியில் புத்தர் சிலை வைக்க எண்ணி யுள்ள இடத்தில்'' என்ற விடயத்தில் முதல் வரும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் இறுதி வரை விடாப்பிடியாகவே இருந்தனர்.
எவ்வித இணக்கப்பாடுமன்றி இருந்த நிலையில், முதல்வர் ""நான் கூட்டத்தில் இருந்து எழும்பிச் செல்கிறேன். நீங்கள் இயலுமானால் கூட்டத்தை நடத்திப் பாருங்கள்'' எனக்கூறிச்சென்றார். அத் தோடு இந்த மாதத்திற்கான மாதாந்தப் பொதுக்கூட்டம் தொடர்ந்து நடைபெறா மல் கலைந்துசென்றது என்றுள்ளது.

முப்படைத் தளபதிகள் சகிதம் கோத்தபாய யாழ். விஜயம்முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் சகிதம் யாழ்ப்பாணத்துக்கு விஜ யம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குடாநாட்டின் கள நிலைவரம் குறித்து விரிவாக ஆராய்ந்தார்.யாழ்ப்பாணம், ஏப். 30
முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் சகிதம் யாழ்ப்பாணத்துக்கு விஜ யம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குடாநாட்டின் கள நிலைவரம் குறித்து விரிவாக ஆராய்ந்தார்.
நேற்றுக்காலை பலாலி வந்தடைந்த கோத்தபாய ராஜபக்ஷவை, யாழ். படைக ளின் தளபதி மேஜர். ஜெனரல் மகிந்த ஹத்துரு சிங்க வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பலாலி தலைமையகத்தில் நடைபெற்ற மாநாட்டில், குடாநாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக கோத்தபாயவுக்குத்
தளபதி விளக்கிக் கூறினார்.
அதன்பின்னர் காங்கேசன்துறைக் கடற் படை முகாமுக்குச் சென்ற கோத்தபாய, வடபிராந்திய கடற்படைத் தளபதியுடன் கலந்துரையாடி நிலைமைகளைக் கேட்ட றிந்தார்.
பின்னர் யாழ். நகருக்கு விஜயம் மேற் கொண்ட பாதுகாப்புத்துறைச் செயலாளர் நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ்.நாக விகாரை, யாழ்.கோட்டை, நகரப் பகுதி ஆகிய இடங்களுக்குச் சென்று நிலைமை களை அவதானித்தார்.
யாழ். நகர சிவில் அலுவலகத்தில் படை அதிகாரிகள் மற்றும் படையினரு டன் கலந்துரையாடி அவர்களின் சேம நலன்களைக் கேட்டறிந்தார்.
நேற்று மாலை நயினாதீவு விகாரைக் குச் சென்ற கோத்தபாய அங்கு வழிபாடு களில் ஈடுபட்டார்.
இதேவேளை ஆனையிறவு முகாமில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் நினை வுத் தூபியைக் கோத்தபாய இன்று திறந்து வைக்கவிருக்கிறார் என்று அறியவந்தது.

யாழ் பல்கலைக்கழக விவசாயபீட மாணவி தற்கொலை..
யாழ் பல்கலைக்கழக விவசாயபீட மாணவியொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் .
இம்மாணவியின் தற்கொலையால் பல்கலைக்கழக சூழல் மிகுந்த பதற்றநிலையை அடைந்துள்ளது கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக விவசாய பீட மாணவியான 29வயதுடைய மாதுமையாள் என்பவரே இவ்வாறு தன்னைத்தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது குறித்த மாணவியின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

யாழில் நகைகளை அபகரிக்க முயன்ற தென்னக யுவதி பிடிபட்டார்

யாழ்ப்பாணம் முத்திரைச் சந்திப் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை வேளை, வயோதிபப் பெண் ஒருவரிடம் தங்க நகைகள் அபகரிக்க முற்பட்ட தென்பகுதியைச் சேர்ந்த இளம்பெண், பாதுகாப்புப் படைப்பிரிவினரால் பிடிக்கப்பட்டார்.

யாழ்ப்பாண நகர் சென்றுவிட்டு பஸ்ஸில் முத்திரைச் சந்தியில் இறங்கி தனது வீடு நோக்கி 60 வயது மதிக்கத்தக்க மேற்படி வயோதிபப் பெண் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரைப் பின் தொடர்ந்து வந்த நாகரீகமாக உடையணிந்த மூன்று யுவதிகள் அவரது நகைகளை அறுத்துக் கொண்டு ஓட முற்பட்டுள்ளனர்.

வயோதிப மாது கூக்குரல் எழுப்பவே, அப்பகுதியில் கடமையில் இருந்த பாதுகாப்புப் படையினர் ஒரு யுவதியைப் பிடித்தனர். ஏனைய இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

பிடிக்கப்பட்ட யுவதியை படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின் போது, குறிப்பிட்ட பெண் தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர் என்பது தெரியவந்தது.

Wednesday, April 28, 2010

சென்னையை நாளை சூறாவளி தாக்கும் அபாயம்-வானிலைமையம் எச்சரிக்கை

நாளையதினம் சென்னைப்பகுதியை சூறாவளி அல்லது நிலநடுக்கம் ஏற்படலாம் என வானிலை மைய இயக்குனர் தெரிவித்தார் .சென்னையின் மத்திய பகுதிகள்,மற்றும் கடற்கரைப்பகுதிகளில் தாக்கம் பலமாக இருக்கலாம்.அனைத்து மீனவர்களையும் கடலுக்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த இருவாரங்களாக சண்டீவி மூலமாக மையம் கொண்டிருந்த டாக்டர் விஜய் அவர்களின் இந்த சூறாவளி நாளைய தினம் வக்கிரம் கொள்ளுமென தெரிவிக்கப்படுகிறது.

சிக்கினார் ரஞ்சிதா-கர்நாடக சிஐடி போலீசில் நேரில் ஆஜராகிறார்!

'பால் கொடுங்க...', 'தயிர் சாதம் கொடுங்க...', 'உலர் திராட்சை கொடுங்க'. 'ஊறவெச்ச பழம் கொடுங்க' என ஒரு கையில் ருத்தி ராட்ச மாலையை உருட்டியபடியே, ஏக அலப்பறை செய்துகொண்டு இருக் கிறார் விசாரணை வளையத்தில் இருக்கும் நித்தியானந்தா!

பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றக் கட்டடமான விதான் சவுதாவுக்கு பின்புறத்தில்தான் சி.ஐ.டி. போலீஸ் அலுவலகம் இருக்கிறது. இங்குதான் நித்தியானந்தாவை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் பளீர் சிரிப்பும் பக்குவமான வார்த்தைகளுமாகப் பேசிய நித்தியானந்தா, விசாரணை நீள நீள அடிக்கடி மயங்கி விழுந்து அதிகாரிகளைக் குழப்பத் தொடங்கிவிட்டார். ''அவரை விசாரிப்பது காமெடி காட்சிக்கு வசனம் எழுதுவதுபோல இருக்கிறது...'' எனச் சிரித்தபடியே சொல்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்!

ஆக்டிங் அமர்க்களம்!

''நான்கு நாட்களாகவே நித்தியானந்தா காலையில் லேட்டாகத்தான் எழுகிறார். 'குளிச்சிட்டுத்தான் பேசுவேன்'னு அடம்பிடிக்கிறார். காலைச் சாப் பாட்டை முடிச்சு, விசாரணையை ஆரம்பிக்கவே 11 மணி ஆகிடுது. மறுபடியும் மூணு மணிக்கு மதியச் சாப்பாட்டை முடிச்சதும், 'கொஞ்ச நேரம்


தூங்கணும்'னு சொல்லி கண் அசந்துவிடுகிறார். அவரை எழுப்பி உட்காரவெச்சாக்கூட சோர்ந்து விழுற மாதிரியே ஆக்ட் கொடுக்கிறார். இரவு ஏழு மணியில் இருந்து ராத்திரி 12 வரைக்கும்கூட விசாரணை நீளும்.

ஒவ்வொரு முறை பேச ஆரம்பிக்கும்போதும், பேச்சை முடிக்கும்போதும் அவருக்கே உரிய பாணியில் 'நித்தியானந்தம்'னு சொல்லிட்டே இருந்தார். 'ஆசிரமத்துக்கு எப்படி இவ்வளவு பணம் வந்துச்சு?'ன்னு கேட்டதுக்கு, 'நானா யார்கிட்டயும் போய் பணம் கொடுங்க என்று கேட்கவில்லை. அவங்க கொண்டுவந்து கொடுத்ததை வாங்கிக்கொண்டோம். அதற்கு முறையாக் கணக்கு இருக்கு. இப்போ எனக்கும் அந்த ஆசிரமத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. ஆசிரமத்தோட எல்லாப் பொறுப்புகளில் இருந்தும் நான் விலகிட்டேன். இப்போ நான் ஒரு தனி மனிதன்!'னு அலட்டிக்காமச் சொல்கிறார்...'' என்றவர்கள் மேற்கொண்டு நித்தியானந்தாவின் வார்த்தைகளாகவே நம்மிடம் விவரித்தார்கள்.

நம்பிக்கைத் துரோகிகள்!

''நித்ய கோபிகாவையும், தர்மானந்தாவையும் நான் ரொம்பவும் நம்பி இருந்தேன். ஆனா, அவங்க ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துதான் எனக்கு எதிராகச் சதி பண்ணி இருக்காங்க. அவங்க நோக்கம் ஆன்மிகம் இல்லை. அற்பப் பணத்தில்தான் ஆசை!

ஆசிரமத்துல எந்தத் தப்பும் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால்... அது கோபிகாவுக்கும், தர்மானந்தாவுக்கும் தெரியாம நடந்திருக்காது. என்ன நடந்ததுன்னு அவங் களையே கூப்பிட்டு விசாரிங்க. நான் பெண்கள்கூட தொடர்பு வெச்சிருந்தேன்ணு சொல்லிட்டு இருக்காங்க... எந்தப் பொண்ணையாவது நான் கையைப் பிடிச்சு இழுத்தேனா? அவங்க விருப்பத்துக்கு மாறாகத் தொந் தரவு கொடுத்தேன் என்று யாராவது உங்களிடம் புகார் சொன்னார்களா? நான் செய்தது எல்லாமே ஆன்மிகத்தோட சம்பந்தப்பட்ட ஒருவித ஆராய்ச்சி. சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியோடுதான் அதை நடத்தினேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி(!) நான் எந்தத் தவறும் செய்யவில்லை.'' என அழுத்தம் திருத்தமாகப் பேசி இருக்கிறார் நித்தியானந்தா.

உலுக்கும் 'உவ்வே' விவகாரம்!

நித்தியானந்தாவின் செக்ஸ் லீலைகள் குறித்து ஏற்கெனவே அறிந்துவைத்திருக்கும் கர்நாடக போலீஸா ருக்கு நெஞ்சை உலுக்கும் இன்னொரு தகவலும் எட்டி இருக்கிறதாம். 'வயிற்றில் இருக்கும் வாரிசுகளை ஆசீர் வதிக்கிறேன்' எனச் சொல்லி நித்தியானந்தா சில கர்ப்பிணிப் பெண்களிடம் மேற்கொண்ட அத்துமீறிய கொடூரங்கள் குறித்து போலீஸ் தரப்பைத் தேடி வந்து சிலர் சொல்ல... நித்தியானந்தாவிடம் கடுமைகாட்டி விசாரித்தார்கள் அதிகாரிகள். ''நான் அப்படி எல்லாம் செய்யவில்லை. யாரோ திட்டமிட்டு என்னை இப்படி டேமேஜ் பண்ணிட்டாங்க...'' என்றாராம். அதிகாரிகள் காட்டிய கடுமையால் அன்று முழுவதும் நித்திரை தொலைத்தவராக இருந்தாராம் நித்தியானந்தா.

அழவைத்த அதிகாரி!

விசாரணை நேரம் தவிர்த்து இதர நேரங்களில் பெங் களூரு போலீஸாரிடம் சகஜமாகப் பேசும் நித்தியானந்தா, தமிழ்நாட்டில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரின் பெயரைச் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறாராம். 'இன்னிக்கு நான் இத்தனை சிக்கலுக்கு ஆளாகி இருக்கி றதுக்குக் காரணமே அவர்தான். எனக்கு எதிராப் புகார் கொடுத்த லெனின் கருப்பன் மூலமா நான் தங்கியிருந்த இடத்தை அந்த அதிகாரிதான் இமாசல் போலீஸுக்கு சொல்லிவிட்டார். ஆரம்பத்திலேயே அந்த அதிகாரிகூட சமரசமாப் போக எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனா, லெனின் கருப்பன் என்னைப்பத்தி அவர்கிட்ட ஏதேதோ சொல்லிவெச்சுட்டான். அதனால், கடைசி வரைக்கும் அசைஞ்சு கொடுக்காம என்னை அல்லாடவெச்சுட்டார் அந்த அதிகாரி. என் பாவம் அவரைச் சும்மாவிடாது' எனக் கண்ணைக் கசக்கியபடியே சாபம் விடுகிறாராம் நித்தியானந்தா.

விசாரணை அதிகாரிகள் சிலரிடம் கெஞ்சிக் கூத்தாடி அந்த போலீஸ் அதிகாரியிடம் இரு முறை செல்போனில் பேசிய நித்தியானந்தா, 'தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க...' என்று அழுதாராம். ஆனால், அதிகாரியின் வார்த்தைகள் அப்போதும் காட்டமாக அமைய... 'என் விதி அவ்வளவுதான்!' எனச் சொல்லி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டாராம்.

நிர்வாணப் பரிசோதனை!

''நித்தியானந்தாவுக்கு எப்போதுமே ஏலக்காய் போட்ட தண்ணீர் பக்கத்தில் இருக்கணும். விசாரணையின்போது அரை மணி நேரத்துக்கு ஒரு முறை தவறாமல் அந்தத் தண்ணீரைக் குடிச்சிட்டே இருந்தார்.

கர்நாடகாவைச் சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலர் அவரைச் சந்திக்க முயற்சி செய்தார்கள். ஆனா, நாங்க யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. நித்தியானந்தாவுக்கு முறைப்படி மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அதுக்காக அவரை ராம் நகரில் இருக்கும் கவர்மென்ட் ஹாஸ் பிட்டலுக்கு கூட்டிட்டுப் போனோம். அங்கே மருத்துவர்கள் அவரை ஒரு மணி நேரம் பரிசோதனை செஞ்சாங்க. சில பரி சோதனைகளுக்காக நித்தியானந்தவின் எல்லா உடை களையும் அவிழ்த்துச் சோதனை செய்ய வேண்டி யிருந்தது. அவர் எதற்கும் மறுப்பு சொல்லாமல் ஒத்துழைப்புக் கொடுத்தார்!'' என்றவர்கள் அடுத்து சொன்ன அக்ரிமென்ட் விஷயம்தான் ஹைலைட்!

'அது'க்கும் அக்ரிமென்ட்!

''நித்தியானந்தாவோட ஆசிரமத்தை எங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது நிறைய ஆவணங்கள் கிடைச் சிருக்கு. அதுல ஒண்ணு... செக்ஸ் உறவுக்கான ஒப்பந்த நகல். 'செக்ஸ் தவறானது இல்லை. உடலைப்பற்றி சோதிக் கும் பயிற்சிக்காக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். அதனை மறுப்பின்றி ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்!' என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த ஒப்பந்த நகலில் ஆசிரமத்தில் தங்கி இருந்த 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டிருக்கிறது.

நித்தியானந்தாவின் செக்ஸ் ஒப்பந்தத்தில் சிக்கிய பலரில் ஐந்து பேரின் படங்கள் ஆசிரமத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் சிக்கி இருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த நான்கெழுத்து நடிகையால் ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டதாரித் தோழி மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த இரு கல்லூரி மாணவிகளும் அதில் அடக்கம். மேலும் இரு பெண்களின் புகைப்படங்களைக் காட்டி ஆசிரமத்தில் விசாரித்தபோது, யாருமே சரியான பதிலைச் சொல்லவில்லையாம்.

நான்கெழுத்து நடிகை மூலமாக நித்தியானந்தாவிடம் சிக்கிய சென்னையைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணைத் தான் போலீஸ் தரப்பு பெரிதாக நம்பிக்கொண்டு இருக்கிறதாம். ஆன்மிகத்தில் ஆர்வமில்லாத அந்தப் பெண்ணுக்கு, ஆரம்பத்திலேயே பெரிய அளவில் பணம் கொடுக்கப்பட்டதாகவும், தற்போது ஆசிரமத் தரப்பாலேயே அந்தப் பெண் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரியவர... அந்தப் பெண்ணின் குடும்பத் தினரை போலீஸ் இப்போது நெருக்கத் தொடங்கி இருக்கிறது. அடுத்த கட்டமாக நான்கெழுத்து நடிகையை விசாரணை வளையத்தில் கொண்டுவரும் முடிவிலும் போலீஸ் தீவிரமாக இருக்கிறது.

பதுக்கப்பட்ட சி.டி-கள் எங்கே?

ஆசிரமத்தின் அத்தனை இண்டு இடுக்குகளையும் துழாவி எடுத்துவிட்ட போலீஸ் தரப்பு, மிகமுக்கிய ஆதாரங்களை கையில் வைத்துக்கொண்டு நித்தியானந் தாவை துருவிக்கொண்டு இருக்கிறது. வெளிநாட்டுச் சேமிப்புகள் குறித்த அந்த ஆதாரங்களுக்கு பதிலே சொல் லாமல் மழுப்பிய நித்தியானந்தா, பக்தைகள் குறித்த கேள்விகளுக்கு, 'அவர்கள் யாரும் எனக்கு எதிராகப் பேச மாட்டார்கள்!' என்று அடித்துச் சொல்லி இருக்கிறார்.

ஆசிரமத்தில் இருந்தும், நித்தியானந்தா தங்கி இருந்த இமாசல் வீட்டில் இருந்தும் கைப்பற்றப்பட்ட லேப்டாப்புகளில் ரெக்க வரி மூலமாக ஏகப்பட்ட தகவல்கள் போலீஸாரால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆசிரமத்தின் அன்றாட நடவடிக்கைகள் ரகசிய கேமராவால் படம் பிடிக்கப்பட்டு நித்தியானந்தாவின் பார்வைக்கு அனுப்பப்படுமாம். அத்தகைய காட்சிகளைப் பார்த்தே உண்மையான விசுவாசிகளை நித்தியானந்தா அடை யாளம் காண்பாராம். அத்தகைய பதிவுகள் சி.டி-யாக்கப்பட்டு, எங்கோ பதுக்கப்பட்டு இருக்கிறதாம். அதுபற்றிய கேள்விகளுக்கு நித்தியானந்தா வாய் திறப்பதே இல்லையாம்!

அடுத்து... ரஞ்சிதா!

நித்தியானந்தாவிடம் இருந்து உரிய விவரங்களைப் பெற முடியாததால், கடுப்பில் அடுத்தடுத்து அவர் மீது வழக்குகளைப் பாய்ச்சும் முடிவில் இருக்கிறது போலீஸ் தரப்பு. தமிழ்நாடு போலீஸிடம் இது குறித்து ஆலோசித்திருக்கும் கர்நாடக போலீஸார் அடுத்த கட்டமாக ரஞ்சிதாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரும் முடிவில் தீவிரமாகி இருக்கிறார்கள். ''பணம் தொடங்கி ஆசிரமத்தில் மர்மமாக நடந்த அத்தனை விவகாரங்களும் ரஞ்சிதாவுக்கு அத்துப் படியாகத் தெரியும். ஆனாலும், பெரிய அளவில் பேசப் பட்ட பேரம்தான் ரஞ்சிதாவை வாய் திறக்க விடாமல் வைத்திருக்கிறது. நித்தியானந்தாவின் மழுப்பல் மேலும் தொடர்ந்தால்... ரஞ்சிதா மூலமாகவே அத்தனை உண்மை களையும் கொண்டுவருவோம். ஏனென்றால், இமாசலில் தங்கி இருந்தபோது ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா எத்தனை முறை பேசி இருக்கிறார் தெரியுமா? 174தடவை!

ஏழு செல்போன்களில் இருந்து மாறி மாறி இத்தனை தடவை ரஞ்சிதாவோடு பேசிய நித்தியானந்தா, பல ரகசியங் களை அவரிடம் சொல்லி இருக்க வாய்ப்பிருக்கிறது!'' எனச் சொல்லித் திகைக்கவைக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்!

இந நிலையில் ரஞ்சிதாவின் வேறு ஒரு தொலைபேசி எண்ணை போலீசாரிடம் நித்யானந்தா தந்தார். அதன்மூலம் ரஞ்சிதாவிடம் போலீசார் பேசி விசாரணைக்காக பெங்களூர் சிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

அதேசமயம், அவர் தப்பி விடாமல் தடுப்ப்பதற்காக அவர் மறைந்துள்ள இடத்திற்கு போலீஸ் தனிப்படையும் விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது

மனித குரங்கிடம் அறைவாங்கிய பசில் ராஜபக்ஸ (காணொளி இணைப்பு)


நேற்று தெகிவளை மிருகக்காட்சி சாலைக்கு விஜயம் செய்த பொருளாதா அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஸ அவர்கள் மனித குரங்கு ஒன்றிற்கு கை கொடுத்தபோது அது எதிர்பாராத விதமாக அவரது கன்னத்தில் அறை ஒன்றைவிட்டதாக தெரியவருகிறது.

இதனையடுத்து மனித குரங்து அலுவலர்களால் அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக தெரியவருகிறது.

இனப்படுகொலை பற்றிய அறிக்கை - றேச்சல் ஜொய்ஸ்


இனப்படுகொலை எனப்படுவது ஒரு சமூகத்தையோ, ஒரு இனத்தையோ, ஒரு மதத்தினரையோ, ஒரு தேசியத்தையோ முழுமையாகவோ அல்லது பகுதிபகுதியாகவோ, திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே அழித்தலாகும்.

1948 ஐ.நா கூட்டத்தில் இனப்படுகொலையெனும் குற்றத்தைத் தடுப்பதும் தண்டிப்பதும் என்ற தலைப்பில், இனப்படுகொலையின் சட்டபூர்வமான வரைவிலக்கணம் தரப்பட்டுள்ளது. அதில் 2வது சட்டத்தின்படி ஒரு சமூகத்தையோ, ஒரு இனத்தையோ, ஒரு மதத்தினரையோ, ஒரு தேசியத்தையோ முழுமையாகவோ அல்லது பகுதிபகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் கீழ்க்கண்ட செயல்கள் இனவழிப்பு என்றும் வரைவிலக்கணத்திற்குள் உள்ளடங்கும்.

ஒரு குழுவினரின் அங்கத்தவரைக் கொலைசெய்தல், ஆபத்து விளைவிக்கும் வகையில் காயப்படுத்தல், மனநோயை ஏற்படுத்தல், அந்தக்குழுவினரின் வாழ்க்கையை முழுதாகவோ, பகுதிபகுதியாகவோ அழிக்கும் வகையில் சூழ்நிலைகளை உருவாக்குதல், அந்தக் குழுவினரின் சந்ததி வளராது தடுக்கும் நோக்குடன் நடவடிக்கை எடுத்தல், ஒரு குழுவினரின் பிள்ளைகளை பலாத்காரமாக இன்னொரு குழுவினரிடம் ஒப்படைத்தல் ஆகியனவே அவையாகும்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் கீழ்க்கண்ட செயல்களை நான் இனவழிப்பாகக் கொள்ளப்படவேண்டும் என்று நம்புகிறேன்:-

யாழ் நூலகத்தை எரிக்கப்பட்டது, வட்டுக்கோட்டை தீர்மானம் புறக்கணிக்கப்பட்டது, தமிழ் மக்களை தனிப்பட்ட முறையில் கடத்துவது காணமல் போகவைப்பது, தமிழை இலங்கையில் அரச மொழியாக ஏற்க மறுத்தது, 'பாதுகாப்பு வலயம்" எனக்கூறப்பட்ட பிரதேசங்களில் துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு நடத்தியது, தமிழ் மக்களை இடம்பெயர்த்து பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்றியது, இடம்பெயர்ந்த மக்களை முள்வேலிக்குள் சிறைப்படுத்தியது ஆகியவையே.

மேற்கூறிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக இன அழிப்பு எனப்பிரகடனப்படுத்தி அவற்றைத் தீர்ப்பதற்கு ஐ.நா சபையின் கூட்டத்தைப் பாவிப்பதற்கு தமிழ் மக்களுடன் சேர்ந்து நானும் உழைப்பேன்.
- வைத்தியர். றேச்சல் ஜொய்ஸ் ( கறோ மேற்கு கொன்சவேட்டீவ் அபேட்சகர்)


அமெரிக்காவை அடித்தளமாக வைத்து இயங்கும் இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழர் (ரீ.ஏ.ஜி) எனும் அமைப்பின் பிரித்தானியப் பிரதிநிதியாகியவரும் 2009ம் ஆண்டு ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை அபேட்சகராக நின்று 50.000க்கு மேல் வாக்குகளைப் பெற்றவருமாகிய ஜனனி ஜனநாயகம் இது பற்றிக்கூறுகையில் 'எமது இனப்படுகொலைக்குச் சட்டமூலம் அங்கிகாரம் பெறும் பொருட்டு உழைத்து வரும் நாங்கள் வைத்தியர் றேச்சலின் நிகரில்லாத ஆதரவால் மகிழ்ச்சி அடைகிறோம். எல்லாத் தகவல்களையும் கவனமாக ஆராய்ந்த பின்னரே அவர் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளார் என நான் அறிவேன். இத்தகைய முடிவுக்கு வந்த அவர் சட்ட ரீதியல் இவ்விடயத்தை அணுகத்தைரியமாகவும் உறுதியாகவும் முயற்சி செய்வார் என்பதனையும் நான் அறிவேன்.

பிரித்தானிய அரசியற்கட்சிகள் ஒன்றும் இலங்கையின் இனப்படுகொலை பற்றி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்காத நிலையில், றேச்சல் ஜோய்ஸ் போன்றவர்கள் தனித்துவமாக இத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஈழத்தமிழருக்கு நடக்கும் இனப்படுகொலையை இனங்கண்டு அதற்குத் தகுந்த பரிகாரம் தேடுவதற்குச் சர்வதேச அரசியல் ஒன்றுபாடும் அனுசரணையும் எவ்வளவு முக்கியம் எனக்கூறத்தேவையில்லை.

2009ல் சில பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்கலாம் என்று கூறியிருந்த பொழுதும் றேச்சல் ஜோய்ஸின் இந்தக்கூற்று ஒரு முக்கிய விடயமாகும். சிலருக்கு இப்படிப்பட்ட நிலைப்பாடு அவர்களின் தனிப்பட்ட அனுபவமாகும். உதாரணமாக ஒஸ்விட்ஸ் இல் இருந்து வந்த தனது மூதாதையர்களைக் கொண்ட லீஸ்கொட் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என உறுதியுடன் நிற்கிறார்.

இல்லியோனிஸ் சட்டப்பேராசிரியரான 'பிரான்சிஸ் பொயில்" சுதந்திரம் முதல் இலங்கை அரசாங்கங்களின் இனப்படுகொலைக்கு தமிழர்கள் இரையாகுகிறார்கள்.

போஸ்னியாவில் 'றடோவன் கறட்சிக்" இனப்படுகொலைக்காக குற்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இலங்கை அரசு சமீபத்தில் நடைபெற்ற வன்னிப்போரில் மாத்திரம் 50.000க்கும் மேல் கொன்றொழித்தது இனப்படுகொலையாகும். என்று அவர் கூறுகிறார்.

வடமராட்சியில் கடத்தலில் ஈடுபட்ட தம்பதியர் இருவர் கைது


கடந்த சனிக்கிழமை வடமராட்சி பகுதியில் பொலிகண்டியை சேர்ந்த 24 அகவையுடைய பெண் ஒருவர் துன்னாலையில் உள்ள உறவினர் வீடுக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது அவரை வெள்ளை வானில் சென்றோர் கடத்தி சென்றுள்ளனர்.

கடத்திச் சென்ற இவர்கள் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவர் மயக்கமடைந்தபோது அவர் இறந்துள்ளார் என கருதி அவரை புதரருகே வீசிவிட்டு சென்றதாகவும் பின்னர் மறுநாள் அவர் கண்விழுத்து எழுந்து வீட்டுக்கு சென்று நடந்ததை தெரிவித்து பொலிசாருக்கு தெரிவித்ததாகவும் பின்னர் காவல்துறையினர் அவர்களை கைது செய்ததாகவும் அறியமுடிகிறது.

இவ்வாறு கடத்தலில் ஈடுபட்டவர்கள் தம்பதிகள் எனவும் அவர்கள் முறை;ப்படி திருமணம் செய்யவில்லை எனவும் இவர்களின் வீட்டில் இருந்து மிதிவண்டியும் நகைகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

மூன்று தடவை அரசதலைவர் பதவி வகிக்கலாம் : புதிய சட்டமூலம்


சிறீலங்காவின் அரச தலைவர் பதவி தொடர்பில் தற்போதுள்ள சட்டத்திருந்தங்களை கைவிட்டு அதனை மறுசீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகின்றது.


இந்த சட்டத்திருத்தங்களின் அடிப்படையில் சிறீலங்கா அரச தலைவர் மூன்று தடவைகள் பதவி வகிக்க முடியும். இந்த சட்டத்திருத்தத்தை முதன்மையாக கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.


நாட்டில் ஜனநாயகத்தையும், உறுதித்தன்மையையும் ஏற்படுத்த மகிந்தா ராஜபக்சாவுக்கு இரு தவணை அரச தலைவர் பதவி போதாது. எதிர்வரும் நவம்பர் மாதம் அரச தலைவர் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான பதவிப்பிரமாணத்தை மேற்கொள்ள முன்னர் இதனை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகள் வவுனியாவிலிருந்து மட்டக்களப்பு காட்டுப்பகுதிக்கு மாற்றம்தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் மட்டக்களப்பு காட்டுப்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். வவுனியா ஓமந்தை பம்பை உட்பட்ட பல பாடசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் தொழிற்பயிற்சி என்ற பெயரில் இடமாற்றப்படுவதாக தெரிவித்து ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.

அவ்வாறு ஏற்றிச் செல்லப்படுகின்ற போராளிகள் மட்டக்களப்பின் காட்டுப்பகுதியான திருக்கோணமடு என்ற பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுப்பகுதியைச் சூழ சிங்களக் கிராமங்களே காணப்படுவதாகவும் அங்கிருந்து வெளியேறமுடியாத வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிற்பயிற்சி என்ற பெயரில் அவர்கள் அங்கு கொண்டு செல்ல ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரையில் அவர்களுக்கு எந்தவித பயிற்சிகளும் வழங்கப்படவில்லை என அவர்களை ஏற்றிச் சென்று அங்குவிட்ட படையினர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

வவுனியாவில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தால் அவர்களை அவர்களின் உறவினர்கள் சென்று பார்த்து ஆறுதலடைந்துகொள்கின்றனர், குறித்த போராளிகளில் பெருமளவானோரைக் குடும்பத் தலைவர்களாகக் கொண்ட பெருமளவான குடும்பங்கள் வறுமை போன்ற நெருக்கடிகளை எதிர்கொண்ட நேரங்களில் அவர்களிடம் சென்று கதைத்து ஆறுதல் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்களை மட்டக்களப்பிற்கு மாற்றியுள்ளமையால் உறவினர்களுக்கும் போராளிகளுக்கும் இடையிலான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்

வன்னியில் கடந்த வருடம் நடை பெற்ற போரின் போது மக்களால் கைவிடப்பட்டு இப்போது மீட்கப் பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஆயி ரம் சைக்கிள்கள் மே மாதம் 6ஆம் திகதி தொடக்கம் உரிமையாளர்களுக் குக் கையளிக்கப்படவுள்ளன.
வன்னியில் கடந்த வருடம் நடை பெற்ற போரின் போது மக்களால் கைவிடப்பட்டு இப்போது மீட்கப் பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஆயி ரம் சைக்கிள்கள் மே மாதம் 6ஆம் திகதி தொடக்கம் உரிமையாளர்களுக் குக் கையளிக்கப்படவுள்ளன. அவற் றின் விவரப் பட்டியலை கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ×.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். அந்தப் பட்டியலை பாருங்கள்.

ஈபிடிபியின் மற்றொர கடத்தல் சம்பவம் அம்பலம்: வவுனியாவில் சம்பவம்


கடந்த 24 ம் திகதி வவுனியா பொது மருத்துவமனைக்கு மருந்தெடுக்க சென்றபோது தம்பிராச ஜெயந்தன் என்பவர் இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இவரை விடுவிப்பதற்கு கப்பமாக பணம் கோரியிருந்தமையும் தெரிந்ததே. இதன்படி சிவில் உடையில் பணத்துடன் சென்ற காவல்துறையினர் இக்கடத்தலின் சூத்திரதாரி ஈபிடிபி தீபனை வவுனியா குட்செட்வீதியில் அமைந்துள்ள ஈபிடிபி அலுவலகத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இவர் வழங்கிய தகவலின் படி தற்போது காவல்துறையினர் மன்னார் மாவட்ட ஈபிடிபி பொறுப்பாளரை லிங்கேசை தேடிவருவதாக தெரியவருகிறது.

இவர்களுடன் ஒரு குழு இவ்வாறான ஆட்கடத்தல் கப்பம் பெறுவதில் ஈடபடுவதாகவும் இவர்கள் சிறீலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்தும ;செயற்படுவதாகவும் தெரியவருகிறது.

எனினும் இச்செயல் வெளிச்சத்திற்கு வந்ததும் ஈபிடிபியினர் வழக்கம்போல இவர் தமது உறுப்பினர் அல்ல எனவும் காவல்துறையினர் தன்னை பிடிக்கவருவதாகவும் தனக்கு அமைக்கலம் வழங்குமாறு கோரியிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் கனரக வாகனங்களை கொண்டு படையினரால் முற்றாக அழிப்பு!


யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் எச்சங்களைத் துடைத்து அழிக்கும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள், வரலாற்றுச் சான்றுகள், மாவீரர் நினைவிடங்கள் போன்றவற்றை முற்றாக அழிக்கும் நடவடிக்கையினை சிங்கள அரச படைகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

இதன் அடிப்படையில் யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடம், கற்சிலைமடுவில் அமைந்துள்ள பண்டாரவவுனியன் நினைவுத் தூபி, வன்னியில் அமைந்திருந்த அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்கள் என பெருமளவான நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு வந்தன.

இதன் தொடராக யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தினை கனரக வாகனங்கள் கொண்டு அழிக்கும் நடவடிக்கள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துயிலும் இல்லம் உடைக்கப்படுகின்ற அதேவேளை, அங்கிருந்து உடைக்கப்படும் கற்கள் வேறொரு பகுதிக்கு வாகனங்கள் மூலம் படையினரால் ஏற்றிச் செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். உடைக்கப்பட்டதன் பின்னர் அந்த நிலப்பகுதியை மட்டப்படுத்தவும் படையினர் முனைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு வவுனிக்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை அழித்த படையினர் அங்கிருந்து மண்ணினை அகழ்ந்து வீதிகளில் கொட்டி வீதி அமைத்து வந்த வேளை அங்கு திரண்ட மல்லாவி மக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு அந் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இதே மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்பின் மீது கடந்த தேர்தலின் போது ஒட்டுக் கட்சிகள் பரப்புரைச் சுரொட்டிகளை ஒட்டி இழிவு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். கோட்டைப்பகுதி பொதுமக்களின் பாவனைக்குயாழ். கோட்டைப்பகுதிக்குள் பொதுமக்கள் சென்று பார்வையிடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. மக்கள் அங்கு சுதந்திரமாக சென்று வரலாம் என 51ஆவது படையணியின் கட்டளைஅதிகாரி பிரிகேடியர் சரத் விஜயசிங்க தெரிவித்தார்.

யாழ். கோட்டைப்பகுதிக்குள் பொதுமக்கள் சென்று பார்வையிடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. மக்கள் அங்கு சுதந்திரமாக சென்று வரலாம் என 51ஆவது படையணியின் கட்டளைஅதிகாரி பிரிகேடியர் சரத் விஜயசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூகையில்,
யாழ். கோட்டைப்பகுதி பொதுமக்களின் பாவனைக்காக இராணு வத்தால் திறந்துவிடப்பட்டிருக் கின்றது. அங்கு செல்வதற்கு பொது மக்களுக்கு எவ்வித தடையுமில்லை. காலை முதல் மாலை வரை யாரும் சென்று பார்வையிடலாம். மக்கள் தமது பொழுதை இன்பமாகக் கழிப்பதகு இப்போது கோட்டைப்பகுதியை நாடி வருகின்றார்கள். மக்களின் இயல்பு நிலையைக் கருத்;தில் கொண்டு நாம் இதனைச் செய்திருக்கின்றோம்.
உயர் பாதுகாப்பு வலயங்கள் தவிர்ந்த எந்தப் பகுதிக்கும் பொது மக்கள் இப்ளேபாது சென்று வரமுடியும். அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடு களும் இல்லை. யாழ். கரையோரப் பகுதிகளில் சில இடங்கள் மிதிவெடி அபாயம் உள்ளமையால் அவை பொது மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கப் படவில்லை. மிதி வெடிகள் அகற்றப் பட்டதும் மக்கள் பாவனைக்கு அவை அனுமதிக்கப்படும் - என்றார்.

வவுனியா திருநாவற்குளம் கொலை சந்தேக நபர் மரணம்


வவுனியா திருநாவற்குளம் பிரதேச வீடொன்றினுள் கடந்த 20 ம் திகதி நுழைந்த தாஸ் எனும் கொள்ளையன் உட்பட்ட கொள்ளையர்கள் அங்கிரந்த பணம், நகைபோன்றவற்றை கொள்ளையிட்டதோடு மாத்திரமல்லாது ஒன்பது வயது சிறுமியையும் குத்து கொலை செய்துதிருந்தமை தெரிந்ததே.

இதன்போது இவரது தாயாரும் மற்றொரு சகோதரனும் காயமடைந்திருந்தமை தெரிந்ததே. இதுதொடர்பில் காவல்துறையினர் தாஸ் மற்றும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்திருந்தார்கள்.

இவர்களில் முக்கிய சந்தேக நபரான தாஸ் என்பவர் குளத்தில் விழுந்து மரணமானதாக ஒரு தகவலும், தப்பி ஓட முற்பட்டபோது சுட்டுக்கொன்றதாக மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது.

இவரது உடலம் கல்மடு குளத்தில் இன்று சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. ஆயுதம் மறைத்து வைத்த இடம் ஒன்றினை காட்டுவதற்காக அழைத்து செல்லப்பட்டபின் இவர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டதாக தெரியவருகிறது.

இவ்வாறு இறந்த தாஸ் என்பவர் புளொட் உறுப்பினர் எனவும் புலனாய்வு பிரிவினருடன் இயங்கி வருவதாகவும் அயற்கிராமங்களில் இவர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஐநா துணைச் செயலர் அடுத்த மாதம் இலங்கை வருகை
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் லின் பஸ்கோ இலங்கையின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அடுத்த மாத நடுப்பகுதியில் இங்கு வருவதற்கு ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபன நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது பற்றி இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலேசிப்பது பஸ்கோவின் விஜயத்திற்கான முன்னைய நோக்கமாக இருந்தது. ஆனால், தற்போதும் அத்தகைய ஆலோசனைகள் நிகழ்ச்சிநிரலில் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை.

ஐக்கியநாடுகள் ஸ்தாபன நிபுணர்கள் குழு நியமனம் குறித்து அண்மைக் காலத்தில் பேச்சு எதுவும் அடிபடவில்லை என்றும் தொடர்ந்தும் நிபுணர்கள் குழு அமைப்பது பற்றிய யோசனை இருப்பதாக தெரியவில்லை என்றும் நியூயோர்க்கில் ஐக்கியநாடுகள் உயர்வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் அடுத்த மாதம் பஸ்கோ இலங்கைக்கு வர அனுமதி கோரப்பட்டுள்ளதை இவ்வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மே மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய பஸ்கோ அனுமதி கோரியுள்ளார். ஆனால் அனுமதி அளிப்பது பற்றி எதுவும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கையின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அண்மையில் நியூயோர்க்கில் செயலாளர் நாயகம் பான் கீ மூனைs சந்தித்து நீண்டநேரம் பேசியுள்ளார். இந்த பேச்சவார்த்தையின் போது இருவரும் நிபுணர்கள் குழு நியமனம் பற்றியும் பேசியுள்ளார்கள் என்று தெரியவருகிறது.

செயலாளர் நாயகமும் சட்டமா அதிபரும் சந்தித்துb பேசியதை பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசிர்கி உறுதிப்படுத்திய போதிலும் பேச்சின் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில்,இம்மாதம் 20ஆம் திகதி இஸ்ரேல் அளித்த ஐக்கியநாடுகள் விருந்து வைபவம் ஒன்றில் இலங்கையின் ஐக்கியநாடுகள் தூதுவர் கலாநிதி பாலித கொஹணவிடம் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம், "நான் உங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவன் அல்லன்" என்று தெரிவித்ததாக அவர்கள் இருவருக்கும் அருகிலிருந்த ஒருரை மேற்கோள் காட்டி 'இன்னர் சிற்றி பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

நிபுணர்கள் குழு எதுவும் நியமிக்கப்பட மாட்டாது என்று எதிர்வு கூறிய கலாநிதி கொஹண, பதிலாக சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வத்திக்கான் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பட்டதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்தது.

இதற்கிடையில், இலங்கை மீது யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக குழு ஒன்றை நியமிப்பது என்று 6 வாரங்களுக்கு முன்னர் செயலாளர் நாயகம் உறுதியளித்தது சம்பந்தமாக எதையும் எதிர்பர்க்க வேண்டாமென சிரேஷ்ட ஐக்கியநாடுகள் அதிகாரி ஒருவர் இன்னர் சிற்றி பிரஸுக்கு தெரிவத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

காணாமல்போன ஊடகவியலாளர் சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைப்பு


கொழும்பில் காணாமல் போயிருந்த இணையத்தளத்தின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னிலிகொட சிறீலங்கா புலனாய்வாளர்களால் சட்டத்திற்குப் புறம்பாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பிரகீத்தின் மனைவி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 24ஆம் நாள் காணாமல் போயிருந்த இவர் தொடர்பாக இதுவரை எந்தவித தகவலும் தெரியவராத நிலையில், இன்று கொழும்பில் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையில் பிரகீத்தின் மனைவி இந்தத் தகவலை வெளியிட்டார்.

சிறீலங்கா புலனாய்வுத்துறை மற்றும் காவல்துறைக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 10ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tuesday, April 27, 2010

ஐக்கிய தேசியக் கட்சிப் பதவிகளில் விரைவில் மாற்றம் _ஐக்கியத் தேசியக் கட்சியை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இதன்போது பிரதான பதவிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்றங்கள் இடம்பெறும் போது, ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்த மாற்றங்கள் குறித்து அடுத்த மத்திய குழுக் கூட்டத்தின் போது ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்களின் போது, ஐக்கியத் தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவாகலாம் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கரு,சஜீத்,ரவி : சிரேஷ்ட, பிரதி, உப தலைவர்கள்?

தற்போது பிரதித் தலைவராக பணியாற்றி வரும் கரு ஜயசூரிய, சிரேஷ்ட பிரதித் தலைவராக பதவி உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சஜித் பிரேமதாச இதற்கு இதுவரை தமது இணக்கப்பாட்டை வெளிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ரவி கருணாநாயக்காவின் பெயரும் கட்சியின் உப தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையைத் தவிர்க்கும் வகையில், முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. எனினும் அதில் எவ்வித இணக்கப்பாடும் காணப்படவில்லை.

நேற்றைய பேச்சுவார்த்தையில் மனோ கணேசன் பங்கேற்கவில்லை. எனினும் இன்றையதினம் அவரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நித்யானந்தாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை-மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்


பெங்களூர்: செக்ஸ் புகாரில் கைதாகியுள்ள நித்யானந்தா நெஞ்சு வலிப்பதாகக் கூறியதையடுத்து பெங்களூர் அரசு இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், பரிசோதனையில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரியவந்ததையடுத்து இன்று அவர் வெளியேற்றப்பட்டார்.

இமாச்சல் பிரதேசத்தில் கைதான நித்யானந்தாவை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் 4 நாட்களாக தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்றுடன் அவரது போலீஸ் காவல் முடிவடைந்ததால் மாலை சி.ஐ.டி. அலுவலகத்தில் இருந்து நித்யானந்தாவை போலீஸ் வேனில் ராம்நகர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நீதிபதி நாராயண பிரசாத் (பொறுப்பு) முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நித்யானந்தாவின் வழக்கறிஞர் சந்திரமெளலி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

அப்போது நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த நித்யானந்தா, போலீசார் தனக்கு சரியான நேரத்துக்கு உணவு கொடுப்பதாகவும், தியானம் நடத்த அனுமதிப்பதாகவும், எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.

இதையடுத்து ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, போலீசாரின் கோரிக்கையை ஏற்று அவரை மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து மாலை 6.10 மணிக்கு நித்யானந்தா மீண்டும் சிஐடி போலீசார் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டார்.

அந்த அலுவலகத்தை நெருங்கியபோது தனக்கு நெஞ்சு வலிப்பதாக நித்யானந்தா கூறினார். இதையடு்த்து அவரை பன்னரகட்டா சாலையில் உள்ள ஜெயதேவா அரசு இருதய மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் நித்யானந்தா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இ.சி.ஜி. மற்றும் ரத்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட்டது.

நித்யானந்தாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை-டாக்டர்கள்:

இந் நிலையில் நித்யானந்தாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அவர்கள் கூறுகையி்ல், நித்யானந்தாவுக்கு எந்த உடல் நல பாதிப்பும் இல்லை. நெஞ்சு வலியும் இல்லை, காய்ச்சலும் இல்லை, ரத்த அழுத்தமும் இல்லை என்றனர்.

மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்:

இந் நிலையில் நித்யானந்தா இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சிஐடி போலீசார் மீ்ண்டும் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை தொடர்கிறது.

நேற்றிரவு நித்யானந்தா அனுமதிக்கப்பட்டதால் ஜெயதேவா மருத்துவமனையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இவர்கள் நேற்றிரவு மருத்துவமனைக்கு வெளியே தரையில் படுத்துத் தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நோயாளிகளும் பொது மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வடக்கு கிழக்கில் 5000 வேலைவாய்ப்புகள் : அமெரிக்கா திட்டம்


போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பகுதிகளில் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்த அமெரிக்க அபிவிருத்தி நிறுவனம் முன்வந்துள்ளது.

சிறீலங்காவில் உள்ளுரில் இயங்கிவரும் ஐந்து தனியார் அமைப்புகளுடன் இணைந்து 5000 முழுநேர தொழில் வாய்ப்புக்களை உருவாக்க அமெரிக்க அபிவிருத்;திக்கான அமைப்பு முன்வந்துள்ளதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரியவருகிறது.

இதன்படி அமெரிக்க அபிவிருத்தி அமைப்பினால் 5.3 மில்லியன் டொலர்களும்
சிறீலங்காவின் தனியார்துறை மூலம் 1400 மில்லியன் ரூபா பெறுமதியான முதலிடுகளையும் பெற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயம்,புடவை கைத்தொழில்,அத்தியாவசிய பொருட்களுக்கான உற்பமத்தி போன்றவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படும் எனத் தெரியவருகிறது.

மோ்வின் ஊடக துணையமைச்சர் – எல்லைகளற்ற ஊடக அமைப்பு கண்டனம்


ஊடகங்கள் மீதான அடக்குமுறை காரணமாக அடிதடி அமைச்சர் என கொழும்பின் ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட மோ்வின் சில்வாவை, ஊடக துணையமைச்சராக நியமித்திருப்பதற்கு, பிரான்சை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற ஊடக அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கடிதம் ஒன்றை சிறீலங்காவின் புதிய பிரதமர் டி.எம்.ஜயரட்ணவிற்கு அனுப்பி வைத்துள்ள இந்த அமைப்பு, சிறீலங்கா அரசு இந்த நியமனத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் துணைத் தொழிலமைச்சரும், தற்போதைய துணை ஊடக அமைச்சருமான மோ்வின் சில்வாவும், அவரது அடியாட்களும் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் பலரைத் தாக்கியதுடன், ஊடகங்களுக்குள் உள்நுழைந்து வன்முறையிலும் ஈடுபட்டதுடன், வெளிப்படையான எச்சரிக்கைகளை விடுத்திருந்தமையும் இங்கு நினைவூட்டத்தக்கது.

நித்யானந்தா சாமியாருக்கு திடீர் நெஞ்சுவலி: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி


பெங்களூரு: பெங்களூரு போலீசாரின் காவலில் இருந்து வரும் நித்யானந்தா சாமியாருக்கு, நேற்று திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் புகாரில், கைது செய்யப்பட்டுள்ள நித்யானந்தா சாமியாரை, பெங்களூரு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். நேற்றுடன் 4 நாள் காவல் முடிவடைந்ததையடுத்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, மேலும் 2 நாட்கள் காவல் நீட்டிப்பு பெற்றனர். பின்னர், அவரை விசாரணைக்காக அழைத்து சென்றபோது, தனக்கு நெஞ்சுவலிப்பதாக நித்யானந்தா கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி மற்றும் ரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, போலீசார் கைப்பற்றியுள்ள சி.டி.யில், நித்யானந்தா புலித்தோலினால் ஆன பெல்ட் மற்றும் சிறுத்தைப்புலி, புள்ளிமான் போன்ற விலங்குகளின் தோலை பயன்படுத்தியிருக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த சி.டி.யை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், நித்யானந்தாவுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

30 வருடங்களின் பின் நாடெங்கும் சனத்தொகைக் கணக்கெடுப்பு _


முப்பது வருடங்களுக்குப் பின்னர், நாடுமுழுவதிலும் சனத் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2011ஆம் ஆண்டு இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள இயக்குநர் நாயகம் டி.பி.பி.எஸ். விஜயரத்ன தெரிவித்தார்.

1981ஆம் ஆண்டு நாடு முழுவதும் சனத்தொகை கணக்கெடுப்பு முதல்முதலில் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 10 வருடங்களுக்கு முன்னர் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் கணக்கெடுக்கப்பட்டன.

எனினும் அது நாடு முழுவதும் நடத்தப்படவில்லை. அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்த பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனதையிட்டே நாடு முழுவதிலும் இந்தக் கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது என்றும் அவர் கூறினார்.

நெதர்லாந்தில் விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் கைது _நெதர்லாந்து நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளையடுத்து, அந்நாட்டின் தேசிய குற்றப் புலனாய்வு சேவை ஏழு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

அதேவேளை, மேலும் 16 வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் போது கணினிகள், காகித ஆவணங்கள், தொலைபேசிகள், புகைப்படங்கள், டிவிடிக்கள் என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்நடவடிக்கையின் போது 40,000 யூரோ பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது.

நெதர்லாந்து நாட்டின் தேசிய குற்றப் புலானாய்வுப் பொலிசார் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகளுக்காக நிதிகள் சேகரிக்கப்பட்டமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2002 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்படி, அப்படியான அமைப்புக்களுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதரவு வழங்குவது சட்டப்படி பொருளாதாரக் குற்றமாகக் கருதப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Monday, April 26, 2010

தந்தை செல்வாவின் 33வது நினைவு சிரார்த்த தினம் வடகிழக்குப் பகுதிகளில் அனுஸ்டிப்பு

தந்தை செல்வாவின் 33வது நினைவு சிரார்த்த தினம் இன்று வடகிழக்குப் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தந்தை செல்வா நினைவுத் தூபியில் இன்று காலையில் தந்தை செல்வா நினைவார்த்த அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

தந்தை செல்வாவின் நினைவுத்தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் அவரது சமாதியில் மலரஞ்சலியும் இடம்பெற்றிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா மற்றும் தமிழரசுக்கட்சியின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் வவுனியா மணிக்கூட்டுச்சந்திப்பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் தூபிக்கு காலையில் மலர்மாலை அஞ்சலி இடம்பெற்றது. ரம்பைக்குளம், குருமண்காடு, காளிகோவில் மற்றும் வேப்பம்குளம் கிறிஸ்தவ தேவாலயம் என்பவற்றில் வழிபாடு மற்றும் ஆராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றன. மாலையில் வவுனியா நகரப் பகுதியில் அஞ்சலிக்கூட்ட நிகழ்வொன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் இயக்கத்தின் போராட்ட எதிரொலி: அமிதாப் கொழும்பு செல்வது குறித்து பரீசீலனை


சிறிலங்காவின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் சிறிலங்கா அரசு கொழும்பில் சர்வதேச விருது வழங்கும் விழாவை வரும் ஆடி 2 முதல் 4 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய பங்காற்றுகின்றார்.இந்த நிகழ்ச்சியை நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் வன்மையாக கண்டித்தார்.

நாம் தமிழர் இயக்கம் அமிதாப் வீட்டு முன் ஆர்ப்பாட்டமும் முற்றுகையும் நடத்தும் என்றும் அறிவித்தார்.அவரது உத்தரவின் படி நாம் தமிழர் இயக்கத்தின் மும்பை கிளையின் சார்பாக நேற்று ஞாயிறு அன்று மும்பையில் உள்ள அமிதாப் வீட்டின் முன் நூற்றுக்கணக்கான நாம் தமிழர் இயக்கத்தினர் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமிதாப் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்தனர்.அமிதாப் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கத்தவறினால் போராட்டம் தீவிரமாகும் என்றும் எச்சரித்தனர்.இதன் விளைவாக இன்று அமிதாப் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.அவரது வலைப்பக்கத்தில் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

தமிழர்களின் உணர்வுகளைத்தான் புரிந்துள்ளதாகவும், அவர்களது உணர்வுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ள அமிதாப் விரைவில் இது குறித்து அனைவரிடமும் பேசி நல்ல முடிவைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து மும்பை நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில் இது எமது நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் முழு வெற்றி கிடைக்கும் வரை செந்தமிழன் சீமான் தலைமையில் எம் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

வவுனியா திருநாவற்குளம் மாணவியைக் கொன்றது புளொட்

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் சிறுமி கொலையுடன் தொடர்புடையவர்கள் புளொட் அமைப்பினர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் கடந்தவாரம் தாயையும் சிறுமியையும் கத்தியால் குத்திவிட்டு நகைகள் பணம் உட்பட்ட பொருட்களைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் புளொட் அமைப்பைச் சேர்ந்த தாசன், கிரி, குரு ஆகிய நீண்ட கால உறுப்பினர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்தே புளொட் அமைப்பினர் சம்பவத்துடன் தொடர்புபட்டமை தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளன.இதேவேளை புளொட் அமைப்பினைச் சேர்ந்த மேலும் இருவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்வதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியும் சம்பவம் நடைபெற்ற வீட்டுக்கு அருகில் உள்ள புதல் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகிய 9 வயதுடைய சிறுமி மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் போது கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த ஆசிரியையான சிறுமியின் தாயார் தொடர்ந்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்.

சிறீலங்காவில் திரைப்படவிழாவில் பங்கேற்பதை அமிர்தாப் பச்சன் பரிசீலனை


இலங்கையில் எதிர்வரும் ஜீலை மாதம் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விருதுவழங்கும் விழாவில் பங்கேற்பதை அமிர்தாப்பச்சன் அவர்கள் பரீசீலனை செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

நாம் தமிழர் இயக்கம் மேற்கொண்ட போராட்டத்தின்விளைவாகவே இவ்அறிவித்தல்கள் வெளிவந்தள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை அரசாங்கம் தனது படைகளால் அநியாயமாக பலர் தமிழர்களை கொல்லப்பட்டதை கண்டித்து சிறீலங்காவில் நடைபெறவுள்ள இந்திய திரைப்படவிழாவை புறக்கணிக்கவேண்டும் எனபோராட்டங்கள் பல நடைபெற்றுவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவேளை பல தமிழ் முன்ணனி நடிகர்களான விஜய்,அஜித், ரஜனி மற்றும் கமல் ஆகியோர் இதனை புறக்கணித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

வவுனியாவில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் மீட்புவவுனியாவில் வைத்துக் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த சனியன்று வவு னியா வைத்தியசாலைக்குச் செல்லும்போது கடத்தப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலி ஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், வவுனியாவிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கைதுசெய்யப்பட்ட குறித்த உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்தே, மேற்படி கடத்தப்பட்டிருந்த நபர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜீ 15 நாடுகளின் தலைமை பதவி இம்முறை மகிந்தவிற்கு


எதிர்வரும் மே மாதம் 17 ம் திகதி இரண்டு நாட்கள் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ஜீ15 நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ளமை தெரிந்ததே. 1989 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ் அமைப்பில் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 17 நாடகள் அங்கம் வகிக்கின்றன.

இக்கூட்டமைப்புகளின் தலைமை பதவியானது ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும். இம்முறை இப்பதவியானது சிறீலங்காவிற்கு கிடைக்கவுள்ளதாக தெரியவருகிறது.

குடாநாட்டில் கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்கிறார் படைத்தளபதி
யாழ்.மாவட்டத்தில் கடத்தல் சம்ப வங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனி னும் கடத்தல் சம்பவம் இடம்பெற்றால் எமக்கு அறிவிக்கும்பட்சத்தில் நடவ டிக்கை எடுக்கப்படும்.
யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜென ரல் மகிந்த ஹத்துறுசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் பரவலாகக்கடத்தப்படுவ தாக வெளிவந்துள்ள தகவல் குறித்து இணையத்தளம் ஒன்றுக்குக் கருத்துக் கூறுகையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். படைகளின் தளபதி மேலும் தெரிவித்துள்ளதாவது
யாழ். மாவட்டத்தில் கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதாக வெளிவரும் தகல்களில் எந்தவித உண்மையும் இல்லை. கடத்தல் சம்பவம் எதுவும் தொடர்பாக முறைப்பாடுகள் இதுவரை இல்லை என்றார் அவர்

Sunday, April 25, 2010

நான் ஜெயிலுக்குப்போறேன் ஜெயிலுக்குப்போறேன் ஜெயிலுக்குப்போறேன்-நித்தி

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காதாமே... அதே கதைதான்!

அங்கே இங்கே என்று போக்குக் காட்டி,இமாசல பிரதேசத்தில் அந்தர்தியானம்


ஆகியிருந்த நித்தியானந் தாவை, அவருடைய செல்போன் பேச்சுகளை வைத்தே 'டிராக்' பண்ணி அமுக்கியது போலீஸ். அப்போதும் 'கெத்'து குறையாமல் அவர் பண்ணிய அலம்பலில் ஒரு சாம்பிள்தான் அட்டைப்பட சிச்சுவேஷன்!

சண்டிகரிலிருந்து இமாசலப் பிரதேசத்தின் தலை நகரான குளுகுளு சிம்லாவுக்கு போகும் வழியில் சோலன் மாவட்டம் உள்ளது. அங்கிருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள குனியால் - ஷிவ்சங்கர்கர் பகுதியில் மொத்தமே 200 குடும்பங்கள்தான். இங்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள மூன்று அறைகள் கொண்ட பங்களாவில்தான் நித்தி யானந்தா தனது ஐந்து சகாக்களுடன் மார்ச் 27-ம் தேதியி லிருந்து பத்திரமாகத் தங்கி இருந்திருக்கிறார். அங்கே அவரை வளைத்துப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் - இமாசல பிரதேச போலீஸின் உளவு மற்றும் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் டி.ஐ.ஜி-யான வேணுகோபால். அவரிடம் நாம் பேசினோம்.

''தான் பதுங்கியிருந்த இடத்தில் நடமாடும் கம்ப்யூட்டர் அலுவலகத்தையே நடத்தி வந்திருக்கிறார் நித்தியானந்தா. ஆர்பிட் ஷிங்கால் என்கிறவன் ஐ.டி. ஸ்பெஷலிஸ்ட். அவன்தான் அவரது கம்ப்யூட்டர் மூளை. நாங்கள் நெருங்குவதற்குக் கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும், வெளிநாட்டுக்குத் தப்பியிருப்பார் நித்தியானந்தா. அவரை பத்திரமாக விமானம் ஏற்றிவிட வேண்டும் என்றே ஷைலேஸ் திவாரி என்ற உள்ளூர்க்காரன் ரகசிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான்.

கைது செய்யப்போன போலீஸாரிடம் அந்த சாமியார், 'எனக்கு அவரைத் தெரியும்... இவரைத் தெரியும்...' என்று பெரிய பெரிய ஆட்களின் பேராகச் சொல்லியிருக்கிறார். இதனால் போலீஸார் சற்றுத் தயங்கி நிற்க... சாமியாரின் வெட்டி பந்தாவை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த நான் பொறுமை இழந்துவிட்டேன். எத்தனையோ வி.வி.ஐ.பி-கள் இவரது காலடியில் ஆசி வாங்கின புகைப்படங்களை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். அவர்களையெல்லாம் ஏமாற்றும் வகையில், செக்ஸ் குற்றச்சாட்டில் ஆதாரத்துடன் சிக்கிய இந்த ஆளை, மற்ற குற்றவாளிகளைப் போலத்தான் நடத்தவேண்டுமென்ற முடிவோடு நெருங்கினேன். என்னிடமும் அவர், 'பார்த்துக்கிட்டே இருங்க... உங்களுக்கு அவரிடமிருந்து போன் வரும்' என்று மிகப் பெரிய அரசியல்வாதி ஒருவரின் பெயரைச் சொன்னார். 'மிஸ்டர்! நீ ஒரு குற்றவாளி. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அப்புறம் நாம் பேச லாமா?' என்று சொல்லி இறுக்கமாக அவர் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தேன்...'' என்றார். அவரிடம் நாம் மேலும் கேள்விகளைஅடுக்கினோம்.

''நித்தியானந்தா மறைவிடமாக உங்கள் மாநிலத் தைத் தேர்ந்தெடுக்க ஸ்பெஷல் காரணம் ஏதாவது உண்டா?''

''இமாசல பிரதேசத்தில் சாமியாருக்கு ஆதரவான பெரிய நெட்வொர்க் இருக்கிறது. இனிமேல்தான் இது பற்றி விசாரிக்கப் போகிறோம். டெல்லியிலுள்ள விவேக், சத்தியேந்திரநாத் என்கிற இரண்டு பிசினஸ் பிரமுகர்களின் வீடு குனியால் என்ற பகுதியில் உள்ளது. இந்த சாமியார் விவேக்கிடம், 'உனக்கு இரண்டு கோடி ரூபாய் தருகிறேன். பள்ளிக்கூடம் கட்டி பிழைத்துக்கொள்' என்று சொல்லிவிட்டுத்தான் அவரது வீட்டில் பதுங்க இடம் பிடித்ததாகத் தெரிகிறது. தற்போது, அந்த இருவரையும் விசாரணைக்கு அழைத்திருக்கிறோம். நித்தியானந்தாவுடன் இப்போதும் பல மாநிலத்தவர், பல வெளிநாட்டவர் தொடர்பில் இருக்கிறார்கள். தினம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்கி றார். நல்ல ராஜபோக வாழ்க்கை. இடம் மாறி மாறித் தங்கியதோடு காரையும்கூட அடிக்கடி மாற்றியிருக்கிறார்.''

''இந்த இடத்தில்தான் இருக்கிறார் என்று எப்படி லொக்கேட் செய்தீர்கள்?''

ஹரித்வாரில் கும்பமேளாவுக்கு போன நித்தியானந்தா, அங்கிருந்து எங்கே போனார் தெரியவில்லையென்று கர்நாடகா போலீஸ் வலை வீசி தேடிக்கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு, எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. நித்தியானந்தா எங்கள் மாநிலத்தில்தான் எங்கோ பதுங்கியிருக்கிறார் என்று. உடனே உஷாரானோம். தேட ஆரம்பித்தோம். அவரைக் காட்டிக் கொடுத்தது செல்போன். உள்ளூர் முகவரியில் ஒரு சிம் கார்டு வாங்கி அதைப் பயன்படுத்தும்போது, எங்கள் வலையில் சிக்கி னார். அதுவுமில்லாமல், ஏ.டி.எம். சென்டரில் தினமும் ஏராளமான பணத்தை எடுத்து வந்தார். கிரெடிட் கார்டு களையும் பயன்படுத்தினார். அமெரிக்காவுக்கு ஒரு சின்ன ஊரிலிருந்து அடிக்கடி போன்கால் போனதையும் நாங் கள் கவனித்தோம். இதுமாதிரி வேறு சில க்ளூக்களை வைத்து நித்தியானந்தா பதுங்கியிருப்பது குனியால் என்கிற ஊரில்தான் என்று முடிவு செய்தோம். ஒரு வாரமாக, அவரது வாகனத்தை பயன்படுத்தாமல் ஒரே வீட்டில் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்தோம். அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சோதனையிடுவது சாத்தியமில்லை. இதுமாதிரி சாமியார்களைச் சுற்றி வெறி பிடித்த பக்தர்கள் இருப்பார்கள். அவர்கள் சண்டை போட்டு, கலாட்டா பண்ணுவார்கள். இதையெல்லாம் எதிர்பார்த்து கடந்த 21-ம் தேதியன்று நூற்றுக்கும் மேற்பட்ட காமாண்டோ படையினருடன் அந்த ஊரை முற்றுகையிட்டேன். அன்று காலைகூட, 'யூ டியூப்'பில் ஆன்லைன் வாயிலாக ஆன்மிக போதனை செய்துகொண்டிருந்தார் நித்தியானந்தா. போலீஸார் திபுதிபுவென்று நுழைவதைப் பார்த்து ஆறு சகாக்கள் புடைசூழ வீட்டின் உள்ளே உட்கார்ந்திருந்த அவர் திடுக்கிட்டார். அவரே இதை எதிர்பார்க்கவில்லை. ஷைலேஷ் திவாரி என்பவன் மட்டும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். மற்றவர்களை நாங்கள் பிடித்தோம். முதலில் கொஞ்சம் எதிர்ப்பு காட்டினார். நான் உள்ளே போனதும், குனிந்து வணக்கம் தெரிவித்தார். அவரை நான் பிடித்து வாசலுக்கு இழுத்து வந்தபோது,எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஆனால், ரொம்ப புத்திசாலித்தனமாக நடந்துகொள்வதாக நினைத்து உரத்த குரலில், 'யாரும் பதற்றப்பட வேண்டாம். பொறுமையாக அமைதி காக்கவேண்டும்' என்றார். அதாவது, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவர் கைது சம்ப வத்தைப் பார்த்து டென்ஷனாகி... போலீஸாரை எதிர்த்து கலாட்டா செய்யத் தூண்டும் விதத்தில் அப்படி பேசினார். ஆனால், அங்கிருந்தவர்கள் இவர் பேசியதை ஏளனமாகத்தான் பார்த்தார்கள். ரியாக்ட் செய்யவில்லை.''

''ஏதாவது ரகசிய சி.டி-களை பறிமுதல் செய்தீர்களா?''

''அகில இந்திய அளவில் தேடப்படும் குற்றவாளி யான நித்தியானந்தா, இதில் ரொம்பவே எச்சரிக்கை யான ஆள். அதனால், அவர் தங்கியிருந்த இடத்தில் சி.டி.கள் ஏதும் சிக்கவில்லை. 300 கிலோ லக்கேஜ்கள் இருந்தன. ஒரு வீட்டை காலி செய்து போகிற மாதிரிதான் அவற்றையெல்லாம் அள்ளி வந்தோம். எலெக்ட்ரானிக் பொருட்கள் மட்டும் 150 கிலோ இருக்கும். 3 லேப்டேப்புகள், 10 செல்போன்கள், 15 சிம் கார்டுகள். கேமரா, மோடம், போர்ட்டபிள் பவர் கனெக்ஷன், இன்டர்நெட் தகவல் தொடர்பு சாதனங்கள்... இப்படி ஏராளமானவை இருந்தன. உலர்ந்த பழங்கள் கொண்ட மூட்டையும் இருந்தது. பெரிய பெரிய சூட்கேஸ்கள் 12 இருந்தன. பணம் மட்டும் சில லட்ச ரூபாய். அமெரிக்க டாலர் கத்தையாக இருந்தன. ஆன் லைனில் வெளிநாடுகளில் இருந்து பணம் இவருக்கு கொட்டிக்கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியவந்தது.''

''உங்கள் விசாரணையில் ஏதாவது தகவல் கிடைத்ததா?''

''நித்தியானந்தாவை சி.பி.சி.ஐ.டி. ஆபீஸ§க்கு அழைத்து வந்தோம். முதலில் போலீஸ் வாகனத்தைவிட்டு இறங்க மறுத்து முரண்டு பிடித்தார். ஒருவழியாக, 'சும்மா ஒரு சாதாரண விசாரணைக்குத்தான்' என்று சொல்லி இறக்கினோம். உள்ளே வந்தவரை நேராக லாக்-அப் அறைக்கு அழைத்துச் செல்ல... முதன்முதலாக அவர் முகத்தில் பயம் கவ்வியது தெரிந்தது. பொதுவாக, அவர் சேரில் உட்கார மாட்டாராம். சோஃபாவில்தான் உட்காருவாராம். லாக்-அப் அறையை தவிர்த்து விசாரணை அறையில் சாதாரணமாக உட்கார வைத்தோம். முதலில், 'இன்று மௌனவிரதம். பேச மாட்டேன்' என்றார் சைகையில்! நான் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். 'நான் பேசமாட்டேன். எனது ஸ்போக்ஸ் பெர்சன் இவர். உங்களுடன் இவர்தான் பேசுவார்' என்றும் சைகை காட்டினார். 'குற்றவாளியாகக் கருதப்படும் நீங்கள்தான் பேச வேண்டும்' என நான் கண்டிப்பான குரலில் சொன்னேன். உடனே, 'நான் பக்தர் களுக்காக சேவை செய்தேன். எமக்குத் தப்பான வழி தெரியாது. நல்லதுதான் செய்தேன்' என்று பேச ஆரம்பித்தார். அவரோடு வந்த மற்ற ஐந்து சகாக்களை பிரித்து தனித்தனி அறையில் வைத்து ஸ்பெஷலாக விசாரித்தோம். அவர்களும் பல விஷயங்களைக் கக்கி இருக்கிறார்கள்!''

''நித்தியானந்தா இரவில் என்ன சாப்பிட்டார்?''

''சப்பாத்தி, சாதம் கொடுத்தோம். அதை சாப்பிட மறுத்தார்.பழங்கள், பிஸ்தா, பாதாம், பால்... இவற்றைத்தான் சாப்பிடுவேன்என்று சொன்னார். பழங்களில் ஆப்பிளும் பப்பாளியும்தான் வேண்டும் என்றார். 'போனால் போகிறது' என்று சொல்லி, அவர் கேட்ட அயிட்டங்களை வரவழைத்தோம். மிக்ஸ்டு காய்கறிகளையும், உலர்ந்த திராட்சைகளையும் வரவழைத்துக் கொடுத்தோம். அவற்றை விரும்பிச் சாப்பிட்டார். விடிய விடிய விசாரணை நடந்தது. அவர் தூங்கப்போகும்போது எங்கள் போலீஸாரை அவரது அறையிலேயே தங்கச் சொன்னேன். அப்போது ஒரு போலீஸ்காரர் தயக்கத்துடன் பின்வாங்கினார். என்னவென்று கேட்டபோது, 'இந்த சாமியார் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டும் ஐ.பி.சி. 377 என்கிற பிரிவிலும் வழக்கு பதிவு ஆகியிருப்பதை சுட்டிக் காட்டினார். அதாவது, இயற்கைக்கு மாறாக சிறுவர்கள் மற்றும் ஆணுடன் உடலுறவு கொண்ட குற்றத்துக்கு ஆளானவர்கள் மீதான செக்ஷன் அது. அதனால் போலீஸாரை அறைக்கதவு அருகே காவல் காக்கும்படி சொன்னேன். அவரும் அப்படியே காவல் நின்றார். தூங்கி எழுந்து மறுநாள் காலையில் குளித்து முடித்தார். அங்கிருந்த ஒவ்வொருவரையும் பார்த்து தனது வழக்கமான ஸ்டைலில் கையைத் தூக்கி ஆசீர்வாதம் பண்ணத் துவங்கினார். எங்கள் டி.எஸ்.பி. ஒருவர், ''யோவ், நீ யாரு எங்களுக்கு ஆசீர்வாதம் பண்ண..? உனக்கு நாங்கள்ல ஆசீர்வாதம் பண்ணணும்!'' என்று குரலை உயர்த்த, அப்படியே அமைதியாகிவிட்டார். பரோட் டோவும் தயிரையும் டிபனாக கொடுத்தோம். மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தார். பிறகுதான், சண்டிகருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றோம். அங்கிருந்து, பெங்களூருவுக்கு போலீஸார் அழைத்துப் போனார்கள்.''

''நித்தியானந்தாவை தவிர மற்ற சகாக்கள் ஏதாவது சொன் னார்களா?''

''எங்கள் விசாரணைக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார்கள். என்ன பெயரில் யார் ஆசிரமத்துக்கு வந்தாலும், உடனே வேறு புதுப் பெயர் வைத்துவிடுவது நித்யானந்தாவின் வழக்கமாம். உதாரணத்துக்கு, அருண்ராஜ் என்பவர் வேலூர்க்காரர். அவருக்கு சாமியார் வைத்த பெயர் நித்யராஜ் மகானந்தா. ஆந்திராவை சேர்ந்த கோபால் ஷீலம் ரெட்டி என்பவரை, நித்யபக்தானந்தா என்று மாற்றியிருக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள ஆசிரமத்தில் ஏதோ ஒரு பெண் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவராம் இவர். உடுப்பி பக்கத்தில் இருக்கும் ஒரு நடிகை பற்றி பேசினார் ஒரு சகா. 'சாமியாருக்கு செய்யும் சேவையானது கடவுளுக்கே செய்வது போன்றது' என்று அடிக்கடி இவர்களிடம் சொல்வாராம். இன்னொரு நடிகையோ, 'நான் செய்த பாவத்துக்கு விமோசனத்துக்காக நித்தியானந்தரை தேடிவந்தேன்' என்று சொன்னாராம். சில பெண்கள் சாமிக்கு சேவை செய்துமுடித்து அப்படியே அவருடைய சகாக்களுக்கும் சேவை செய்து விட்டுப்போகும் கதையையும் சொன்னார்கள். இதுமாதிரி எக்கச்சக்கமான கதைகள்... எல்லாவற்றையும் முறைப்படி பதிவு செய்தோம். மறுநாள் காலை அவர்களை கோர்ட்டில் ஒப்படைத்து, எங்கள் கஸ்டடிக்கு எடுத்தோம். அடுத்த கட்ட விசாரணைக்காக பெங்களூரு போலீ ஸாரிடம் ஒப்படைத்தோம்!'' என்றார்.

''ரஞ்சிதாதான் ஒரே சாட்சி!''

போலீஸ் விசாரணையில் இருந்த நித்தியானந்தாவிடம் நம் சார்பிலும் சில கேள்விகளை அடுக்கினோம். தயங்கிய குரலில் ஆரம்பித்தாலும் தைரியமாகவே கிடுகிடுக்கத் தொடங்கினார் நித்தியானந்தா.

''நான் எங்கேயும் ஒளிந்திருக்கவில்லை. போலீஸ் என்னை வலைவீசி தேடியதாகச் சொல்வது தவறு. மடத்தில் தங்கி இருந்தால், பக்தர்களுக்கு வீணான சிரமங்கள் ஏற்படும் என நினைத்துத்தான் நான் தனியே ஓரிடத்தில் தங்கி இருந்தேன். தனிமை தேடி தங்கி இருந்தேனே தவிர, தலைமறைவாகவில்லை! போலீஸ் என்னைத் தேடி வந்தபோது, இயல்பாகத்தான் அவர்களை எதிர்கொண்டேன். பதறி ஓடவோ பிரச்னை செய்யவோ இல்லை!''

''கடுமையான சட்டங்களின் கீழ் உங்களை சிறையில் தள்ளப் போவதாகச் சொல்லப்படுகிறதே?''

''வழக்கு குறித்த விவகாரங்கள் எல்லாம் என்னுடைய வழக்கறிஞர்களுக்குத்தான் தெரியும். எந்த வழக்கில் என்னை கைது செய்திருக்கிறார்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனால்,இந்த நிலையிலும் தைரியமாகவும்நம்பிக்கையோடும் இருக் கிறேன். சில போலீஸ் அதிகாரிகள் தன்மை யோடு நடத்துகிறார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள்... ஒரு போலீஸ் அதிகாரி என்னைப் பார்த்த உடனேயே கண் கலங்கி அழத் தொடங்கிவிட்டார். என் மீது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்கள் எடுபடவில்லை என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?''

''ரஞ்சிதாவை வற்புறுத்தி தமிழக போலீஸ் உங்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கைப் பாய்ச்சப் போவதாகப் பேசப் படுகிறதே?''

''ரஞ்சிதா மட்டுமல்ல... ஆசிரமத்தைச் சேர்ந்த யாரும் என் மீது தவறான புகார் கொடுக்க மாட்டார்கள். ரஞ்சிதாவை யார் நிர்ப் பந்தித்தாலும் அவர் எனக்கு எதிராகப் பேச மாட்டார். நான் தவறு செய்திருந்தால்தானே அவர் பேசுவார். என்னைப் பற்றிய எல்லா விஷயங்களும் ரஞ்சிதாவுக்கு நன்றாகத் தெரியும். நான் நல்லவன் என்பதற்கு அவரைவிட வேறு சாட்சி வேண்டியதில்லை. அதனால் யாருடைய வற்புறுத்தலுக்காகவும் அவர் எனக்கு எதிராகத் திரும்ப மாட்டார்!''

''தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் நீங்கள் ரஞ்சிதாவோடு பேசினீர்களா?''

''இப்போதும் சொல்கிறேன்... நான் ஒருபோதும் தலைமறைவாக இருக்கவில்லை. நான் தங்கி இருந்த இடம் எல்லோருக்குமே தெரியும். என்னைத் தொடர்பு கொண்டு எத்தனையோ பேர் கண்ணீர்விட்டு அழுதார்கள். வெளிநாடுகளில் இருந்து இமெயில் மூலமாக நிறைய பேர் வருத்தப் பட்டார்கள். நான் யாரோடெல்லாம் பேச நினைத்தேனோ... அவர்கள் அனைவருடனும் பேசினேன்; தைரியம் சொன்னேன். 'எந்நாளும் ஆசிரமம் நிலைக்கும்' என நம்பிக்கை சொன்னேன். உண்மையாகவே போலீஸ் என்னைத் துரத்தி இருந் தால்... இன்றைக்கு இருக்கும் நவீன டெக்னாலஜிகளை வைத்து அரை மணி நேரத்துக்குள் என்னைப் பிடித் திருக்க முடியுமே..!''

படுக்கையில் பணக்கட்டுகள்!

சாமியார் தங்கி இருந்த வீட்டின் வாட்ச்மேன் ஜெக்தீஷிடம் பேசினோம். ''சிம்லாவை சேர்ந்த விவேக் என்பவரின் பெயரில்தான் இந்த வீடு இருக்கிறது. எங்கள் மேனேஜரான மஹாதேவ், கடந்த மார்ச் 27-ம் தேதி மாலை எனக்கு போன் செய்து, சில விருந்தாளிகள் வருவதாகச் சொன்னார். அதன்படியே ஒரு தனியார் டாக்ஸியில் அந்த சாமியாரும் அவரோடு சேர்ந்த ஆறு பேரும் வந்தார்கள். அவர்களுடன் பெண்கள் யாருமில்லை. என்னிடம் சாவி இல்லாததால் பூட்டை உடைத்து அவர்கள் தங்க ஏற்பாடு செய்தேன். தினமும் வீட்டைப் பெருக்குவதற்காக உள்ளே சென்ற நான், ஆங்காங்கே ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்ததைப் பார்த்தேன். மேலும் கட்டுக்கட்டான நோட்டுகள் பத்திரப்படுத்தப்படாமல் படுக்கையின் மேலேயே கிடந்தன...'' என்றார் அதிர்ச்சியோடு.

கைதின்போது உடனிருந்த அக்ரி காவல் நிலைய இன்ஸ்பெக்டரான விக்ரம் சௌகானிடம் பேசினோம். ''மதியம் சுமார் 12.30 மணிக்கு அந்த வீட்டில் நுழைந்தோம். கைது செய்தபோது சாமியார் மாறுவேடம் இன்றி அதே உடையில் இருந்தார். பெரிய அளவில் பிடிவாதமோ, வாக்குவாதமோ செய்யாமல் அமைதியுடன் எங்களுடன் கிளம்பி விட்டார். வழி நெடுக ருத்ராட்ச மாலையை கையில் உருட்டிக்கொண்டு மந்திரங்கள் ஜபித்தபடி வந்தார். ஆனால், எங்கள் கேள்விகள் எதற்கும் பதில் கூற மறுத்துவிட்டார். அவருக்கு ஹைப்பர் டென்ஷன் இருப்பதால், பி.பி. மாத்திரைகளை தவறாமல் சாப்பிட்டார்...'' என்றார்.

இந்நிலையில், நித்தியானந்தாவுக்கு இடம் கொடுத்த மேனேஜர் மஹாதேவ் பீகாரைச் சேர்ந்தவர் எனவும், அவர் மீது பாட்னாவில் ஒரு பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸ் தேடி வருவதாகவும் தகவல் கிடைத் துள்ளது. அதேபோல், அந்த வீடு விவேக்குக்கு முன்பாக அஸ்வினி சிங் என்பவரிடம் இருந்துள்ளது. இவர் மர்மமான முறையில் 2009-ல் கொலை செய்யப்பட்டார். இவ்வாறு நித்தியானந்தாவுக்கு உதவிய பலரும் கிரிமினல் குற்றங்களில் தொடர்புடையவர்களாகவே இருப்பதால், சிம்லாவின் சி.ஐ.டி. போலீஸ் மேற்கொண்டும் தீவிரமாக விசாரித்து வருகிறது.

இதற்கிடையில் பெங்களூரு அழைத்து வரப்பட்ட நித்யானந் தாவை புகைப்படம் எடுக்க ஏர்போர்ட்டில் மீடியாக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போலியாக ஒரு சாமியாரை உருவாக்கி அவரை போலீஸ் ஏர்போர்ட்டிலிருந்து அழைத்துவர... மீடியாக்கள் அந்தப் போலியைத் துரத்தியபடியே ஓடின. அந்த இடைவெளியில் நித்யானந்தாவை ஏர்போர்ட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தது போலீஸ்.


நித்தியானந்தா நாடகம்!

நித்தியானந்தா கைது செய்யப்பட்ட விவகாரமே ஒரு நாடகம் என்கிறார்கள் கர்நாடக பத்திரிகையாளர்கள்!

''ஆசிரமத்தைவிட்டு வெளியேறி னாலும் தன்னைப் பற்றிய சலசலப்பி லிருந்து நித்தியானந்தாவால் தப்ப முடியவில்லை. அதனால், அவரே கர்நாடக போலீஸ் அதிகாரிகள் சிலருடன் பேசி அடுத்தகட்ட திட்டங்களை வகுத்திருக் கிறார். அதனால், கைதுக்குப் பிறகு கடகடவென தன் மீதுள்ள வழக்குகளுக்கு முழுக்குப் போட்டுவிட்டு மறுபடியும் மடத்துக்குள் நுழைய நித்தியானந்தா திட்டம் போட்டிருக்கிறார். கர்நாடக அரசு அவருக்கு ஆதரவாக இருப்பதால், இப்படி கைது நாடகம் அரங்கேற்றப் பட்டிருக்கிறது!'' என்கிறார்கள் அந்தப் பத்திரிகையாளர்கள்.

- கே.ராஜாதிருவேங்கடம்


நித்தியானந்தாவை கைது செய்த வேணுகோபால் ஐ.பி.எஸ். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர். 1995-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தவர். ஹிமாசல பிரதேச மாநில கேடர் அதிகாரி. அங்கே, ஐந்து மாவட்டத்தில் எஸ்.பி-யாக பணிபுரிந்தவர். எல்லைப் பகுதியில் அட்டகாசம் செய்துகொண்டிருந்த முகமூடி கொள்ளையர்களை ஒழித்து மக்களது பாராட்டுதலை பெற்றவர். மேலும் அங்குள்ள அணையை தகர்க்க பஞ்சாப் மாநில தீவிரவாதிகள் முற்பட்டபோது, அவர்களுடன் சண்டையிட்டு வளைத்துப் பிடித்தார். அதேபோல், போதை கடத்தல் தொழிலில் கொடிகட்டிப்பறந்த சர்வதேச புள்ளிகள் பலரையும் பிடித்து உள்ளே தள்ளியவர். இவரது மனைவியின் பெயர் பாக்கியவதி. ரவி என்கிற மகனும் ரித்திமா என்கிற மகளும் இருக்கிறார்கள். ''என்னுடைய பேட்ச்சை சேர்ந்த டேவிட்சன், சங்கராச்சாரியரை கைது செய்தவர். நான் இப்போது நித்தியானந்தாவை கைது செய்திருக்கிறேன்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் வேணுகோபால்.