Wednesday, March 31, 2010

நித்தியானந்தர் இலங்கையில் புகலிடம்

இந்தியாவில் பொலிசாரால் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கையில் ஹட்டன் பிரதேசத்தில் மறைந்திருப்பதாக இரகசியத் தகவல் ஒன்று கசிந்திருக்கின்றது.

இவருக்கு இங்குப் புகலிடம் கொடுத்திருப்பவர் மத்திய மலைநாட்டின் ஒரு 'பெரும் புள்ளி' என்றும் கூறப்படுகின்றது.

ரஞ்சிதாவின் புதிய கிளிப் [18+ ADULTS ONLY]


எச்சரிக்கை: தயவுசெய்து 18 வயது குறைந்தவர்கள் இதை பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்...

இந்த படங்களை போடுவோமா, வேண்டாமா என்று பல மணி நேரம் யோசித்தேன், யோசித்தேன யோசித்தேன் அப்படி கொடுரமா யோசித்தேன்... சரி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று போட துணிந்துவிட்டேன்... இதுவரை நக்கீரன் தளத்திலோ, சன் டீவியுன் இரவு நேர ஒளிபரப்பிலோ இதை கண்டிருக்க முடியாது... நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா படங்கள் மிகவும் ஆபாசமாக இருக்கும்... பிடிக்காதவர்கள் தயவுசெய்து குளோஸ் செய்துவிடுங்கள்.

scroll down...

மீண்டும் எச்சரிக்கை: தயவுசெய்து 18 வயது குறைந்தவர்கள் இதை பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்...
ஏப்ரல் ஃபூல், ஹஹஹ...

Tuesday, March 30, 2010

வெள்ளைக்கார மச்சான் வேட்டு ஒண்ணு வச்சான்நித்திய ஆனந்தாவுக்கு எதிராக, 'பிளாக்மெயில்' சீடர் தர்மானந்தா ஒரு பக்கம்

குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்க... 'குடைச்சல் நம்பர் டூ'வாக கடல் தாண்டி குபீரென்று பாய்ந்திருக்கிறது புது தோட்டா! இது அச்சு அசல் அமெரிக்க பிரஜை ஒருத்தரின் கைங்கரியம்! அவர் பெயர் டக்ளஸ் மெக்கெல்லர்!

கலிஃபோர்னியாவில் அட்டார்னி ஜெனரல் ஜெரி ப்ரவுனுக்கு இவர் எழுதியிருப்பதாகச் சொல்லப்படும் கடிதத்தின் நகலில், அதிரடியாக பல குற்றச்சாட்டுகள் நித்தியானந்தா மீது!

'ஐயா அட்டார்னி ஜெனரல் அவர்களே,

நித்தியானந்தா என்ற சாமியார் அமெரிக்காவில் பல கிளைகள் வைத்து ஆன்மிகம் என்ற பெயரில் பலே மோசடிகள் செய்து வருகிறார். நித்தியானந்தா ஃபவுண்டேஷன், லைஃப் ப்ளிஸ் ஃபவுண்டேஷன், நித்ய யோகா, வேதிக் டெம்பிள், தியானபீடம் ஃபவுண்டேஷன் என்று அவர் பலவகையிலும் நிறுவி பல குற்றங்கள் செய்து வருகிறார். அதையெல்லாம் நீங்கள் விசாரித்து உரிய தண்டனையை அவருக்குத் தரவேண்டும். அதற்கான பக்கா சாட்சியாக நானே வந்து எல்லாம் சொல்லத் தயார்! 2003-ம் வருடம் தொடங்கி, ஆறு வருடங்கள் அவரோடு ஒட்டி உறவாடிய பக்தன் என்ற முறையில் எனக்கு பல ரகசியங்கள் தெரியும்...' என்கிறது, இந்த டக்ளஸ் மெக்கெல்லர் எழுதியதாகச் சொல்லப்படும் கவரிங் லெட்டர்!

எல்லாம் போச்சு சாமியாராலே!

செக்ஸ் க்ரைம், மோசடிகளோடு சேர்த்து 'ஹவாலா' டைப்பிலான 'மணி லாண்டரிங்' விவகாரத்திலும் நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லி திகில் கிளப்புகிறது இந்தக் கடிதம். 'அந்த சாமியாராலேதான் என் வேலை போச்சு. என்னைவிட்டு என் பொண்டாட்டிபோயிட்டா! இப்ப நான் கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிக்கிறேன் அவராலே! தேவைப்பட்டா இந்தியாவின் எந்த கோர்ட்டிலும் போய் நின்றுகூட இதைப் பற்றியெல் லாம் நான் விவரமாகச் சொல்லத் தயார்' என்று போட்டுத் தாக்குகிறது அந்தக் கடிதம்!

நித்ய பிரபாவாகிய நான்...

வெள்ளைக்கார குடைச்சல் பார்ட்டி தன் கடிதத்தோடு கொடுத்திருக்கும் நீளமான டாகு மென்ட்டில் விவகாரம் செம ஹாட்டாகவேவிவரிக்கப் பட்டிருக்கிறது.

''2003-ம் வருஷத்துலதான் எனக்கு நித்தியானந்தா அறிமுகமானாரு. இந்து மதத்தின் மீது இருந்த ஈடுபாட்டால அவரோட ஐக்கியமானேன். என் பெயரை 'நித்ய பிரபா' என்றே சாமியார் மாத்தி வெச்சாரு. அமெரிக்காவுல அவர் ஆசிரமம் தொடங்கியபோது, அதுல டெலிபோன் ஆபரேட்டர் வேலையில தொடங்கி அத்தனை வேலைகளையும் நானே செஞ்சுருக்கேன். நித்திய ஆனந்தாவுக்கு விசா கிடைக்காத சமயத்துல நான்தான் பெரும் முயற்சி எடுத்து அவருக்கு அமெரிக்காவுக்கு விசா கிடைக்க ஏற்பாடு செஞ்சேன்.

எனக்கு சொந்தமான 'சான்ஜோஸ்' வீட்டிலும் நித்தியானந்தா தங்குவாரு. அந்த சமயத்துல அமெரிக்காவை சேர்ந்த பல இளம் பெண்கள்அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போவாங்க. முதலில் எனக்கு இதெல்லாம் தப்பா தோணவே இல்ல.

ஆனால், நான் நித்திய ஆனந்தாவோடு இப்படி இழைவது என் மனைவிக்கு ஏனோ பிடிக்கலை. அவரைவிட்டு விலகி வரும்படி அந்த மகராசியும் பல தடவை சொன்னா... நான்தான் பாவி, கேட்காமப் போயிட்டேன். அதனால அவ டைவர்ஸ் வாங்கிட்டுப் போயிட்டா. அவளுக்கு ஏன் நித்தியானந்தாவைப் பிடிக்கலன்னு அப்ப எனக்கு தெரி

யலை...'' என்று புலம்பும் அந்த டக்ளஸ் மெக்கெல்லர் கடிதம்... ஜிலுஜிலுப்பாக மேற்கொண்டு போகிறது.

யார் அந்த நடிகை..?

''2007-ம் ஆண்டு நித்தியானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருத்தரை கலிஃபோர்னியாவுக்கு கூட்டிட்டுவந்தாரு. சினிமாவுல எனக்கு பெருசா ஈடுபாடு இல்லை. அதனால அவங்க பேருஎனக்கு நினைப்பில் இல்லே. ஆனா, திருமணம் செய்தவங்கன்னு மட்டும் தெரியும். அந்த நடிகைகூட என் வீட்டுல 15 நாள் தங்கியிருந்தாங்க. அந்த நடிகைக்கும் நித்திய ஆனந்தாவுக்கும் செக்ஸுவல் ரிலேஷன் ஷிப் இருந்ததைநான் புரிஞ்சுக்கிட்டேன். அதைப்பத்தி அவரிடமே கேட்டேன். 'கடவுளை அடைய ஆனந்தமான வழி இதுதான்'னு என்கிட்ட சிரிச்சுக்கிட்டே சொன்னாரு...'' என்று சொல்லும் புகார் கடிதம்,

''பிறகு ஆசிரமத்துக்கு வந்த பல பெண்களோடு குரூப் செக்ஸ் வெச்சுக் கிட்டதையும் என்னால உணர முடிஞ்சுது. பெண்களோடு சந்தோஷமாக இருக்கிறதை அவர் மறைக்கவோ மறுக்கவோ இல்லை'' என்று கலாய்க்கிறது!

அடங்காத ஆசை...

மேற்கொண்டு சொல்லப்படுகிற குற்றச்சாட்டு, தூக்கிப்போட வைக்கிற ரகம்!

''கலிஃபோர்னியாவின் ஒரு பகுதியில் சனாதன் தர்மா கோயில் என்று ஒன்று இருக்கு. இந்த கோயில்ல நித்தியானந்தாவோட பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். கோயிலோட கர்ப்பக்கிரகத்துக்கு பக்கத்துலயே சகல வசதிகளோட கூடிய சொகுசு அறை இருக்கு. அவருக் காக உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான அறை அது. பயிற்சிப் பட்டறை நடக்குற சமயத்துல அடிக்கடி ரெஸ்ட் எடுக்க அந்த அறைக்குள்ள போயிடுவாரு. அமெரிக்காவுல வசிக்கும் தமிழ்ப் பெண்களுக்கு மட்டும் அந்த அறைக்குள் அனுமதி. தமிழ்ப் பெண்கள் மீது அவருக்கு அப்படி ஓர் அடங்காத ஆசை!

அந்த அறைக்குள்ள போனா என்ன நடக்கும்ணு என்னைப் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பெண்களும் விருப்பப்பட்டுத்தான் போயிட்டு வருவாங்க.

அதேபோல, மான்ட்க்ளேயர் ஏரியாவுலதான் வேதிக் டெம்பிள் இருக்கு. அங்கேயும் கர்ப்பக்கிரகத்துக்கு பக்கத்துலயே நித்தியானந்தாவுக்கு ஓர் அறை உண்டு. இந்த அறையின் சாவி அவரது உதவியாளரான மா நித்ய கோபிகாகிட்ட இருக்கும். அமெரிக்க

என்.ஆர்.ஐ-யான நித்ய கோபிகாவோட ஒரிஜினல் பெயர் வித்யா விஸ்வநாதன்.

அந்த வேதிக் டெம்பிளுக்குள்ள இருக்கிற சொகுசு அறைக்கு யாரெல்லாம் போகவேண்டும் என முடிவெ டுக்கும் அதிகாரம் நித்ய கோபிகா கையிலதான் இருந் தது. விதவிதமான பெண்களைத் தேர்ந்தெடுத்து அவருக்கு அனுப்பி வைக்கும் உன்னதமான வேலையை செய்ததே கோபிகாதான்!'' என்று குபீர் கிளப்புகிறது அமெரிக்க குடைச்சல் புகார்.

தயாராக மூன்று பெண்கள்...அதோடு விட்டால்தானே..!

''நித்தியானந்தாவின் ஆன்மிக போதனை களில் நம்பிக்கை கொண்டு அவரிடம் வந்துசேர்ந்த கலிஃபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சலீஸை சேர்ந்த மூன்று பெண்களை வலுக் கட்டாயமாக பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார் அவர். அந்தப் பெண் களிடம் விசாரித்தால் நிச்சயமாக புகார் கொடுக்க முன்வருவார்கள். அதனால் அவர்களை விசாரிக்க வேண்டும்'' என்று சொல்லிவிட்டு,

''இந்தியாவில் ஒரு விதமான போதனைகளை செய்யும் இந்த சாமியார், அமெரிக்காவில் மட்டும் கிளுகிளு பாலிஸியைத்தான் ஓப்பனாக போதிப்பார். 'உலகத்துக் கான அத்தனை பலன்களையும் செக்ஸ் ஆய்வுகள் மூலம் மட்டுமே பெற்றுத் தரமுடியும். அதற்கான ஆராய்ச்சியில்தான் நான் இறங்கியிருக்கிறேன். அதோடு, எந்தப் பிரச்னைகளையும் செக்ஸ் மூலம் தீர்க்க முடியும் என்பதை நான் உணர்ந் திருக்கிறேன்...' என்று அடிக்கடி சொல்வார் சாமியார்'' என்று பத்த வைக்கிறது!

வயிற்று வலி... விளக்கு ஒளி!

நம்மூர் கிளுகிளு கதைகளில் வருகிற மாதிரியே ஒரு எபிஸோடையும் எடுத்து விடுகிறார் இந்தடக்ளஸ் மெக்கெல்லர். ''ஒருநாள் இரவு நான் ஆசிரமத்துக்குப் போயிருந்தேன்.அப்போது கதவுகள் மெள்ளத் திறந்திருக்க... எட்டிப் பார்த்தேன். உள்ளே தீப விளக்கின் வெளிச்சத்தில் இரண்டு பெண்கள் முழு நிர்வாணமாக இருக்க... அவர்களுடன் ஆனந்த நிலையில் இருந்தார் நித்திய ஆனந்தா. எல்லாம் முடியும் வரை(?) அமைதியாகக் காத்திருந்தேன்.

தாண்டவத்தை முடித்துவிட்டு வெளியே வந்தவர், 'அந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் தீராத வயிற்று வலி இருந்திருக்கு. அதை சரி பண்ணுவதற்குத்தான் இந்த சிகிச்சை கொடுத்தேன். அதனாலதான் மின்சார லைட் இல்லாம தீப விளக்கு வெளிச்சத்தில் அவங் களுக்கு சக்தி கொடுத்தேன். இனி அவங்களுக்கு வயித்து வலியே இருக்காது' என்று சிரித்தபடி சொன்னார், சான்ஸை பயன்படுத்திய சாமியார். எனக்குத் தெரிஞ்சு அமெரிக்காவுல மட்டும் ரெண்டு வருஷத்துல எப்படி யும் 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நித்தியானந்தா இப்படி ஆனந்த டிரீட்மென்ட் கொடுத்திருப்பாரு.

உலகம் முழுக்க இப்போ அவரோட லீலைகளைப் பத்தி பிரச்னைகள் கிளம்பியிருக்கு. அதனாலநாங்களும் இங்கே நடந்த சம்பவங்களை உங்களோட கவனத்துக்கு கொண்டு வந்துட்டோம். நீங்க நடவடிக்கை எடுங் கய்யா...'' என்று கலிஃபோர்னிய அட்டார்னி ஜென ரலுக்கு எழுதப்பட்ட கடிதம் பவ்யமாக முடிகிறது.

விதவை பெண் வில்லங்கம்...

சேலம் மாவட்டத்தில் ஒரு ஏரியாவிலுள்ள வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் விதவை ஒருவரையும் சாமியாருக்கு எதிராக உசுப்பிவிட முடியுமா என்று அவருக்கு எதிரான பார்ட்டிகள் தீவிரமாக முயல்கின்றன. இந்த எதிர்த் தரப்பு பார்ட்டிகள் சொல்வது இதைத்தான் -

''கணவன் இழந்த பெண் அவர். தனிமை சோகம் தாளமுடியாமல் மனஆறுதல் தேட சாமியாரின் பிடதி ஆசிரமத்துக்குப் போனார். பிடதி ஆசிரமத்திலேயே ஒரு கட்டத்தில் சேர்ந்தும்விட்டார். வழக்கம்போல எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்க... ஒரு நாள் தியான மண்டபத்தில் அந்த பெண்ணின் மீது கைகள் படர்ந்திருக்கிறது.

அன்று இரவே பள்ளியறை பூஜைக்கு அந்தப் பெண் அழைக்கப்பட்டிருக்கிறாள். பள்ளியறைக்குள் சாமியார் கொடுத்த டிரீட்மென்ட்டை பெண்ணால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். அடுத்த நாளே ஆசிரமத்திலிருந்து கிளம்பி, சொந்த ஊருக்குத் திரும்பி விட்டாராம். அந்த விதவைப் பெண் எந்த நேரமும் புகார் கொடுத்து பிரச்னையைக் கிளப்புவார் என சாமியார் தரப்பும் பயந்தது. அந்தப் பெண்மணியும் கிட்டத்தட்டஅந்த மூடில்தான் இருந்திருக்கிறார். இதற்கிடையில், சி.டி விவகாரம் வெளியாவதற்கு முன்பு சாமியார் தன் பரிவாரங்களோடு சேலம் வந்தபோது, அந்தப் பெண்ணை நேரில் சந்தித்து மனமுருக மன்னிப்பு கேட்டுவிட்டார். மறுபடியும் ஆசிரமத்துக்கு வரும்படி அழைப்பும் விடுத்தாராம். அந்தப் பெண் மறுத்து விட்டார். ஆனால், தைரியமாக வெளியில் வந்து புகார் தரும்படி நாங்கள் அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வருகிறோம்...'' என்கிறார்கள் இந்த எதிர்பார்ட்டிகள்.

வயசென்ன சாமீ?

இருக்கிற வில்லங்கங்கள் போதாதென்று, நித்திய ஆனந்தாவின் வயசு விவகாரத்தை வைத்தும் சிலர் பிரச்னை பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். விசா வில் ஒரு தேதி, பாலிடெக்னிக்கில் படித்தபோது ஒரு தேதி என்று அவர் மாற்றிக் கொடுத்திருப்பதாக சில ஆதாரங்களை எடுத்துக் காட்டும் அவர்கள்... 'சமீபத் தில் நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சில கோர்ட் ஆவணங்களில் வேறொரு தேதி இருக் கிறது. இதெல்லாம் சட்டத்துக்குச் செய்கிற துரோக மில்லையா?' என்று கொளுத்திப் போட... எட்டு திசையிலிருந்து வரும் பந்துகளில் எதை எப்படித் தடுத்து ஆடுவது என்று இன்னும் தீவிரமான சட்ட ஆலோசனையில் இறங்கியுள்ளார் நித்திய ஆனந்தா!

''டக்ளஸ் மெக்கெல்லரை அத்தனை சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட முடியாது'' என்று கூறும் முன்னாள் ஆசிரமவாசிகள், அவர் இணையதளத்தில் வைத்துள்ள விவரமான 'பிளாக் ஸ்பாட்'டை அதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். நித்திய ஆனந்தா ஆசிரம நிகழ்வுகள் தொடர்பான எக்கச்சக்க வீடியோ படங்கள் ('அந்த மாதிரி' எதுவும் இல்லை!), சாமியார் பற்றிய கடும் விமர்சனங்கள் என்று விவரமாகவே தொகுத்து வைத்துள்ளார் இந்த அமெரிக்க அதிரடி மச்சான்!

''2007 நித்யானந்தா நடத்திய பயிலரங்கத்தில் கலந்து கொண்ட போது 'திடீர் முக்தி' கொடுக்கிறேன் பேர்வழி...என்று அவர் சில கண்கட்டு வித்தைகளை நடத்தினார். சாம்பிராணி நெருப்பில் போதை திரவியங்களை கலந்து மயக்கத்தை ஏற்படுத்தியிருப்பாரோ என்று இப்போது தோன்றுகிறது'' என்று இவர் தன் புகாரில் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் போதை மருந்து குற்றம் செமத்தியான கடுமையோடு டீல் செய்யப்படும் என்பதால், ஆசிரம தரப்பு ரொம்பதான் கவலையோடு இதை கவனிக்கிறதாம்.

ஏதோ சீட்டு கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்ததுபோல, ''நான் அவரிடம் சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை ஏமாந்திருக்கிறேன். என்னைப் போல பல அமெரிக்க பக்தர்களையும் நித்தியானந்த சாமியார் நம்பிக்கை மோசடி செய்துவிட்டார்'' என்றும் தன் புகாரில் புலம்பியிருக்கிறாராம் மெக்கெல்லர்.

நன்றி: ஜீனியர்விகடன்

ஈ.பி.டி.பி.- உதயன் பத்திரிக முறுகல்

"சாவகச்சேரி மாணவன் படுகொலை; ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை! நாட்டை விட்டு வெளியேறவும் தடை' என்ற தலைப்பில் நேற்று "உதயன்', "சுடர் ஒளி' பத்திரிகைகளின் முதலாம் பக்கத் தில் வெளியான செய்திகளுக்காக அப்பத் திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தாம் தீர்மானித்திருக்கின்றார் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார்.
"உதயன்' மற்றும் "சுடர் ஒளி' பத்திரிகைச் செய்திகளுக்கு எதிராக நஷ்டஈடுகோரி வழக்
குத் தாக்கல்' என்ற பெயரில் அவரது அமைச்சின் கடிதத் தலைப்பில் அவரது ஊடகச் செயலாளர் ஒப்பமிட்டு நேற்றுக் காலை விடுத்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நேற்றைய திகதியிட்டு வெளியான அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:
"உதயன்' மற்றும் "சுடர் ஒளி'ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் இன்றைய தலைப்புச் செய்தியானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது திட்டமிட்டு சுமத்தப் படும் ஒரு பொய்யான குற்றச்சாட்டாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் குறிப்பாகத் தேர் தல்களில் இப்பத்திரிகைகள் தருணம் பார்த்துக் காத்திருந்து எங்கள் மீது சேறு பூசும் தீய செயல் களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது என்றும்
இதை நாங்கள் எம்மீது திட்டமிட்ட முறையில் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தேர்தல் வன்முறையாகக் கருதவேண்டியுள்ளது என்றும்
யாழ். தேர்தல் களத்தில் சிதைந்து போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினரான சம்பந்தன் குழுவின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் சரவணபவன் என்பவருக்குச் சொந்தமான பத்திரிகைகள்தான் இந்த "உதயன்' மற்றும் "சுடர் ஒளி' பத்திரிகைகள் என்றும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, இத்தகைய தேர்தல் வன்முறைக்கு எதிராக தாங்கள் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் மற்றும் வெளியூர் கண்காணிப்புக் குழுவிற்கு முறைப்பாடு செய்வதென்றும் கட்சி மீது களங்கம் ஏற்படுத்தியமைக்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது அறிக்கை
இதேசமயம், நேற்று மாலை ஈ.பி.டி.பி. கட்சியின் கடிதத் தலைப்பில் அமைச்சர் டக்ளஸின் அதே ஊடகச் செயலாளர் இன்னொரு அறிக்கையை அனுப்பி வைத்திருக்கின்றார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
"உதயன்', "சுடர் ஒளி' ஆகிய ஊடகங்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது சுமத்தியிருப்பது திட்டமிட்ட அவதூறுப் பிரசாரங்களே அன்றி இதில் உண்மைத்தன்மை எதுவும் இல்லை. கடந்த காலங்களிலும் தேர்தல் நெருங்கும் தருணம் பார்த்து குறித்த இரு பத்திரிகைகளும் ஈ.பி.டி.பி. மீது மிக மோசமான அவதூறு பிரசாரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்த நிகழ்வுகளையும் மக்கள் நன்கு அறிவார்கள்.
மக்கள் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இருக்கும் ஆதரவுத் தளத்தைக் கண்டு அஞ்சும் சில சக்திகள் எதிர்வரும் தேர்தலிலும் ஈ.பி.டி.பி. பேராதரவு பெற்று வெற்றி பெறப் போகின்றது என்ற காழ்ப்புணர்ச்சியினால் சாவகச்சேரி மாணவன் கபில்நாத்தின் படுகொலை தொடர்பான தகவல்களைத் திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்திச் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் "உதயன்', "சுடர் ஒளி' ஆகிய இரு பத்திரிகைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு குழுவினருடன் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான சரவணபவனுக்குச் சொந்தமானவையாகும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பரப்பப்பட்டு வரும் இதுபோன்ற மோசமான அவதூறு பிரசாரங்களினால் நடந்து முடிந்த படுகொலைக்கான சூத்திரதாரிகளைக் கண்டு பிடித்துவிட முடியாது. உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான முறையில் அனைத்து அரசியல் தரப்பினரும் அரசியல் பேதங்களை மறந்து முன்வரவேண்டும். இதன் மூலமே இது போன்ற வன்முறைக் கலாசாரங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்.
தேர்தல் காலத்தில் தவறான அவதூறுப் பிரசாரங்களைத் திட்டமிட்டுப் பரப்புவது என்பது தேர்தல் வன்முறைகளில் ஒன்றாகவே நோக்கப்படும். இதனால் இது குறித்து தேர்தல் வன்முறைகள் தொடர்பான கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்வதற்குமான நஷ்டம் கோரி குறித்த இரு பத்திரிகைகள் மீதும் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் எமது கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது என்று உள்ளது.
ஆசிரியர் குறிப்பு
1. நீதிமன்ற, பொலிஸ் விசாரணைகளில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களே மேற்படி செய்தியில் இடம்பெற்றிருந்தன. மாணவன் கபிலநாத் படுகொலை தொடர்பான தொடர் செய்தியே அது. ஈ.பி.டி.பி. குறிப்பிடுகின்றமை போல அது அவதூறுப் பிரசாரம் அல்ல.அச் செய்தியில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தவறு என்றால் அப்படி நீதிமன்ற மற்றும் பொலிஸ் விசாரணைகளில் இடம்பெறவில்லை என்று டக்ளஸ் தேவானந்தா கருதுவாரானால் அவருக்கு நீதிமன்றத்துக்குச் சென்று உரிய பரிகாரம் காணும் முழு உரிமையுமுண்டு. நீதிமன்றில் இப்பிரச்சினையை எதிர்கொள்ள "உதயன்', "சுடர் ஒளி' தயாராகவே பார்த்து காத்து இருக்கிறது.
2. "இந்த மாணவனைக் கடத்திக் கொலை செய்த வெறியாட்டத்தை நடத்தியோர் சுயேச்சைக் குழு ஒன்றின் வேட்பாளர்களே என விசாரணையில் தெரியவந்திருப்பதாக' அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி நேற்று விடுத்த பகிரங்க அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது குறிப்பிடுகின்றமை போல அவர் "உதயன்', "சுடர் ஒளி' பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால், மேற்படி சுயேச்சைக் குழுவுக்கு எதிராக அவரது கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பற்றிய விடயங்களை நீதிமன்றத்தில் முன்வைத்து, அவற்றை நிரூபிக்குமாறு அவரது கட்சியைக் கோரும் அமிலச் சோதனைக்கும் அந்த வழக்கில் இடமிருக்கும் எனக் கருதுகிறோம். எனவே, அத்தகைய வழக்கை அவர் தொடுப்பதை வரவேற்றுக் காத்திருக்கிறோம்.
3. "உதயன்', "சுடர் ஒளி' இத்தகைய செய்தி பிரசுரித்தமையை "தேர்தல் வன்முறை' என்று விமர்சித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கு எதிராகத் தாங்கள் ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். அப்பப்பா.....! எத்தகைய வரவேற்கத்தக்க போக்கு மாற்றம் இது........? "உதயன்', "சுடர் ஒளி' நாளிதழ்களுக்கு எதிராக அவரது இயக்கம் இலக்கு வைத்து முன்னெடுத்த கடந்தகால நடவடிக்கைகளை அறிந்துள்ள தமிழ் மக்களுக்கு இந்தப் போக்கு மாற்றத்தின் தாற்பரியம் வியப்புக்குரியதாகவே இருக்கும்.
4. எது, எப்படியென்றாலும் ஜனநாயக ரீதியிலான பதில் நடவடிக்கைகள் என்ற விடயத்தில் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதை அவருக்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

Monday, March 29, 2010

வவுனியாவில், ஈ.பி.டி.பியினரால் தாக்கி கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி நிகழ்வு!!


கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர்.

கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர்.

உயிரிழந்தவர் வவுனியா, சாந்தசோலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவர். இச்சம்பவம் நேற்று முன்தினமிரவு வவுனியா திருநாவற்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. இந்தப் படுகொலை தொடர்பில் ஏற்கனவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது சந்தேகநபராக ஈ.பி.டி.பியின் ஒன்றிய உறுப்பினராகிய துன்பம் என்கிற தினேஸ் என்பவரைப் பொலீசார் இன்றுமாலை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரென்று தெரிவிக்கப்படும் அன்ரனி ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குரு தலைமறைவாகியுள்ளதாகவும், அவர் ஈ.பி.டி.பி அமைப்பினரால் கொழும்புக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

அவரைத் தேடும் நடவடிக்கையில் வவுனியா பொலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பொலீஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மரண நிகழ்வுகள் இடம்பெற்ற உயிரிழந்தவரின் இல்லத்தில் இருந்து நிலைமைகளை அவதானித்த நிருபர் வழங்கிய தகவலின்படி, உயிரிழந்தவரின் தலை கடுமையாக தாக்கி சிதைக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர் மனிதாபிமானமற்ற முறையில் கோரத்தனமாக தாக்கப்பட்டுள்ளார் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது.

அன்னாரின் இல்லத்தில் பெருந்திரளானவர்கள் அன்னாருக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்றுமாலை தாண்டிக்குளம் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் தந்தையார் தங்கராசாவினால் இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டு பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதி நிகழ்வுகளில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவரும் புளொட் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈரோஸ் அமைப்பின் சார்பில் செந்தில் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். அதேபோன்று புளொட் டெலோ போன்ற அமைப்புக்களினால் அஞ்சலி துண்டுப் பிரசுரங்களும் வெளியிட்டு விநியோகிக்கப்பட்டிருந்தன.

மாணவனின் கொலையை அடுத்து மக்களின் தாக்குதலில் ஈபிடிபி சாவகச்சேரி அலுவலகம்!


யாழ்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள ஈபிடிபியின் அலுவலகம் கடத்தி காணமல் பொய் சடலமாக மீட்க்கப்பட்பட்ட கபில்நாத்தின் கொலையை அடுத்து மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இம்மாணவனை ஈபிடிபியினரே கடத்தி கொலை செய்ததாக உறுதியான தகவல்கள் வெளியானதை. அடுத்து கோபம் கொண்ட மக்கள் அலுவலகத்தை சூழ்ந்து அடித்து நொருக்கியதாகவும் மக்கள் வருவதை அவதானித்த அலுவலக ஈபிடிபி உறுப்பினர்கள் தப்பி ஓடியதாகவும் தெரியவருகிறது.

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக தெரியவருகிறது.

Thursday, March 25, 2010

நம்புங்கள் நல்லூர் கோயிலும் இடிக்கப்படும், சங்கிலியன் சிலை தூக்கி எறியப்படும், மீண்டும் நூலகம் எரிக்கப்படும்மே 31 - ஜூன் 1, 1981 யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. சிங்கள படைகளின் உதவியுடன், சிங்கள கைகூலிகள் அரசியல் வாதிகள் சேர்ந்து அந்த பொக்கிசத்தினை எரித்தனர். அதற்காக எழுந்த , ஆர்ப்பரித்த குரல்கள் எத்தனை?

மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலை மாணவனும் ஒவ்வொரு உண்டியல்களுடன் களத்தில் இறங்கி ஒரு ரூபாய் கேட்டான் மீண்டும் நூலகத்தை கட்டுவதற்காக. வீடுகள் தோறும் ஒரு செங்கல்லு கேட்கப்பட்டது நூலகத்தினை கட்டுவதற்காக உண்மையில் நூலகம் கட்டுவதற்காக என்பதனை விட எல்லோர் மனதிலும் நூலகம் எரிந்தது போல் பற்றி எரியவேண்டும் என்பதற்காகவே அந்த திட்டம்.

எனக்கு அப்படித்தான் இருந்தது. நானும் அந்த நாளில் (6ஆம் வகுப்பு)160 ரூபா சொச்சம் சேர்த்தேன். காசு சேர்த்ததனை விட அந்த நிகழ்தான் வெப்பியாரமாக இருந்தது.நேற்று நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவு சிலை அதே சிங்களப்படை உதவியுடன், அதே சிங்கள கூலிகளால் நொருக்கப்பட்டது. 12 நாட்கள் நல்லூரில் எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் உண்ண மறுத்து போரிட்ட அந்த திருமகனிற்காக 1987 ஆம் ஆண்டு எத்தனை மாணவர்கள் அழுதார்கள்? எத்தனை பெற்றோர்கள் அழுதார்கள்? இது ஒன்றும் புலிகள் வெருட்டி நடக்கவில்லையே தானாகவே நடந்தது.

ஆனால் நேற்று அந்த மா தியாகி திலீபனின் சிலை உடைக்கப்பட்டபோது ஒரு அழுகை, ஒரு குரல், ஒரு அறிக்கை, ஒரு... எங்கே ஐயா? மக்களுக்குத்தான் அலுப்பு, சலிப்பு, பதைப்பு, வெறுப்பு, பயம் ஆனால் வந்துபாரடா நின்று பாரடா என அரசியல் முழக்கமிடும் வேட்பாளர்களாவது அரசியலுக்கு கூட ஒரு கருத்து சொல்லி இருக்க கூடாதா? அந்த இடத்தை சென்று பார்த்திருக்க கூடாதா?அதற்காக சிங்களவனிடம் ஒரு தடவை அடிவாங்கினால் என்ன? சூடு வாங்கினால் என்ன? வாக்கு கேட்பதற்காக அடி வாங்க தயாராக இருக்கும் நீங்கள் இதற்கு ஏன் பின்னடிப்பு?

நம்புங்கள் நல்லூர் கோயிலும் நாளை இடிக்கப்படும், நம்புங்கள் சங்கிலியன் சிலை தூக்கி எறியப்படும், நம்புங்கள் நாளை மீண்டும் நூலகம் எரிக்கப்படும் அப்போதாவது ஏதாவது பத்துமா என்று பார்ப்போம். மாவீரர் துயிலும் இல்லங்களைத்தான் இடிக்கும் போது பேசாமல் இருந்தோம் சரி அவர்கள் , சிலர் பாணியில் சொன்னால் வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள். ஆனால் தியாக தீபம் திலீபனும் அப்படியா? இவ்வளவு காலமும் இடிக்கப்படாமல் இருந்த தியாக தீபத்தின் சிலை ஏன் இப்போது இடிக்கப்பட்டது?

சிங்களவனுக்கு செருக்கு, முறுக்கு ஏறிவிட்டது என்றுதானே அர்த்தம். எதிர்த்து நிற்க, பயமுறுத்த புலிகள் இல்லையென்றாலும் உங்கள் உணர்வையாவது பதிவு செய்ய வேண்டாமா? எதற்கெடுத்தாலும் ஒரு அடிபோட்டு மடக்குவீர்கள் அதாவது வெளி நாட்டில் இருப்போர்களுக்கு ஒன்றும் விளங்காது என்று. இது பற்றி பின்பு எழுதுகின்றோம்.

ஆனால் இப்போ யாழில் வேட்பாளர்களாக நிற்பவர்கள், தமிழர்களுக்காக உரிமை கேட்க புறப்பட்டவர்களை பார்த்துத்தான் கேட்கின்றோம். எதற்காக உங்கள் மெளனம்?ஆக குறைந்தது திலீபனின் சிலை உடைக்கப்பட்டு எஞ்சி இருக்கின்ற கற்களையாவது பொறுப்பெடுத்து முடிந்தால் பாதுகாப்பாக வையுங்கள்.கூகிள் வழி உலகம்


இனி வருங்காலத்தில் உலகத்தை இந்த கூகிளின் மாயக்கண்ணாடி மூலம் தான் பார்ப்போம் என்று இணையத்தில் ஒரு செய்தி வந்திருந்தது. ரொம்ப பழைய செய்திதான்.

இந்த கண்ணாடி போன்ற சாதனத்தால், எந்த ஒரு விஷயத்தையும் பார்க்கும் போது, அது சம்பந்தமான தகவல்கள் இதில் ஒளிரும்.

ஒரு கட்டிடத்தை பார்த்தால், அது பற்றிய தகவல்கள் இப்படி வரும்.வீடுகளைப் பார்த்தால் எந்த பேங்கில் கடன் வாங்கி கட்டியது? இதுவரை எவ்வளவு கட்டப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் வருமோ?

கரகாட்டக்காரனில் செந்தில் கேட்ட கேள்விக்கு, இது பதில் சொல்லுமா? இந்த காரை இதுக்கு முன்னாடி...

ஏதாவது ஒரு மாடி மீது தொட்டால், அதில் யார் இருந்தார்கள். எப்ப வரை இருந்தார்கள் போன்ற தகவல்கள் வரும். இதை நீங்கள் குடும்பத்துடன் டாஸ்மாக்கை கடந்து செல்லும்போது பார்த்துவிடாதீர்கள். நீங்கள் அங்கே சென்ற வரலாறு முழுவதும் வந்துவிட போகிறது.மீட்டிங் நடக்கும் அறையை சுலபமாக கண்டுப்பிடிக்கலாம். கவனம். ரெய்டுல மாட்டிக்க போறீங்க.பத்திரிக்கை மீது வைத்து பார்த்தால், டிஜிட்டல் டிக்‌ஷனரியாக உருவெடுக்கும்.புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லி கொடுக்கும். இதை வைத்து பார்த்தாவது, பின்நவீனத்துவ படைப்புகள் புரியுமா? இந்த சாதனம் ஹேங் ஆகிவிட கூடாது.தெரியாத மொழியில் உள்ளதை, மொழிமாற்றம் செய்து படித்து கொள்ளலாம். சென்னை பாஷையை கண்டுக்கொள்ளுமா?புத்தகத்திலும் தேடுதல் வசதி. இந்த வார ஆனந்த விகடனில் நம்ம படைப்பு வந்திருக்கிறதா? என்று பதிவர்கள் வாங்கியவுடன் தேடி கொள்ளலாம்.ஒரு ஆப்பிளை பார்த்தால், அதில் என்னன்ன, எவ்வவ்ளவு உள்ளது என்று காட்டும். கூடவே ‘என் செல்ல பேரு ஆப்பிள்... நீ சைஸா கடிச்சிக்கோ”ன்னு பாட்டும் பாடும். நல்லா கவனிச்சிங்கன்னா, ஆப்பிள்க்குள்ள முமைத்கான் கூட தெரிவாங்க.ஏதாவது உணவை பார்த்தால், அதில் உள்ள சத்துக்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். உங்க தெரு முனையில் உள்ள டீக்கடை மாஸ்டர் போட்ட உளுந்த வடையை பார்த்தீங்கன்னா, அது ரீபைண்ட் ஆயிலில் செய்ததா, இல்ல லாரி இன்ஜின் ஆயிலில் செய்ததா என்று தெரிந்து விடும்.கூடவே கூகிளிடம் சில எதிர்பார்ப்புகள்.

1) அரசியல்வாதிகளை பார்த்தால் சொத்து மதிப்பு தெரியணும்.
2) நடிகர்களை பார்த்தால் வயசு தெரியணும்.
3) நடிகைகளை பார்க்கும்போது, மேக்கப் இல்லாத ஒரிஜினல் முகத்தை காட்டணும்.
4) டாக்டரை பார்க்கும்போது, அவரோட ஒரிஜினல் சர்டிபிகேட், மார்க் ஷீட் காட்டணும்.
5) ஜெட் ஏர்வேஸ் பைலட்டுக்கு உண்மையிலேயே வயித்த வலியா தெரிஞ்சுக்கணும்.

உங்க ஆசையை சொல்லுங்க...

அப்பா அம்மா விளையாட்டு!

Date : (2.11.86)

அப்பா அம்மா விளையாட்டு!

பாலுமகேந்திரா இயக்கத்தில் 'அப்பா அம்மா விளையாட்டு' என்ற படத்தில் பாண்டியராஜனின் ஜோடியாக, பிரதான வேடத்தில் அறிமுகமாகிறார் ரஞ்சிதா. இவர் இதற்கு முன் பாலுமகேந்திராவின் டைரக்ஷனில் 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' என்ற படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் மகளாக நடித்திருக்கிறார். நேரில் பார்க்க சாதாரண தோற்றத்தில் இருக்கும் இவர், பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் பிரமாதமாக இருக்கிறார்!


1986 ல் அப்பா அம்மா விளையாட்டு

2009 ல் சாமியார் விளையாட்டு


நன்ற

ப்ரீத்தி ஜிந்தா யாருக்கு அக்கா?

ப்ரீத்தி ஜிந்தா யாருக்கு அக்கா?

திகுதிகுவெனத் தீ பிடித்து ஓடிக்கொண்டு இருக்கும் ஐ.பி.எல். திருவிழாவின் சில டிட்பிட்ஸ்...

'கட்டிப்பிடிப்பதை ரசிகர்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கிங்ஸ் லெவன் டீம் என் குடும்பம் மாதிரி. அதில் யுவராஜ் சிங் எனது தம்பி மாதிரி' என்பது ப்ரீத்தி ஜிந்தாவின் சமீபத்திய அறிக்கை. பதிலுக்கு யுவராஜ், 'ப்ரீத்தி ஜிந்தாவுக்கு இந்தியா முழுக்கப் பல அண் ணன், தம்பிகள்இருக்கிறார் கள். ஆனால், அவர் எனக்கு மட்டும் அக்கா இல்லை!' என்று ட்விட்டரில் ட்விட்டி இருக்கிறார். நல்ல அக்கா - தம்பி!

சேப்பாக்கில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த த்ரிஷாவை மெகா ஸ்க்ரீனில் காட்டியதும், விசில் பறந்தது. இதைத் தவறாகப் புரிந்துகொண்ட ரவி சாஸ் திரி 'பார்த்தீவ் பட்டேல் 50 ரன் அடித்ததை சென்னை ரசிகர்கள் எவ்வளவு உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள் பாருங்கள்' என்று அப்பாவியாக ஒரு கமென்ட் அடித்தார். இதுக்குப் பேர்தான் ஸ்க்ரீன் டெஸ்ட்!

Click to Enlargeசென்னையில் முதல் போட்டியின்போது தமிழ்க் கலாசாரத்துக்கு ஏற்ப அடக்கமான உடையில் ஆடினார்கள், சென்னை சூப்பர் கிங்ஸின் சியர் லீடர்ஸ். கடுப் பான சென்னை ரசிகர்கள், எதிர் அணி யின் கிளாமர் கேர்ள்ஸை ஆதரித்தார்கள். இப்போது சென்னை சியர் லீடர்ஸின் உடை சுருங்கிவிட்டது. இந்த சென்னை ரசிகர்கள் எப்பவுமே இப்படித்தான்!

கொச்சி, புனே என அடுத்த ஆண்டு முதல் இரண்டு புதிய அணிகள் ஐ.பி.எல்லுக்குள் புது என்ட்ரி கொடுக்க இருக்கின்றன. புனே அணியை சஹாரா குருப் 1,702 கோடி ரூபாய்க்கும், கொச்சி அணியை ரென்டீவஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 1,533 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளன. மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியா சிமென்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எவ்வளவு கொடுத்து வாங்கியது தெரியுமா? 222.6 கோடி ரூபாய். விலைவாசி ஏறிப்போச்சு!

புதிதாக இரண்டு அணிகள் அடுத்த ஆண்டு இடம்பெறுவதால் தற்போது 60 மேட்ச்சுகள் என்பதுமாறி அடுத்த ஆண்டு முதல் 94 ஆட்டங்கள் நடைபெறும். அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு அணியும் தலா 18 மேட்ச் சுகள் ஆட வேண்டும். ஆடுங்கோள்!

கேப்டன் கௌதம் கம்பீர் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் காயம் காரணமாக டீமில் இல்லாததால், தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ். இதனால், காயம் அடைந்திருக்கும் இருவரையும் தனி விமானத்தில் இலங்கைக்கு ஆயுர்வேத ட்ரீட்மென்ட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் கள். அதற்கான செலவு மட்டும் 40 லட்ச ரூபாய். சிகிச்சை செலவு கள் தனி. இருக்குற மகராசன் அள்ளி முடியுறான்!

ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி, கேத்ரீனா கைஃப், தீபிகா படுகோன் அனைவரையும்விட இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுபவர் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளர் காயத்ரி ரெட்டி. ஐ.பி.எல். துவங்கியதில் இருந்து கூகுள் சர்ச் இன்ஜினில் அதிகம் தேடப்படுபவர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித் திருக்கிறார் காயத்ரி. இதுதானாச் சேர்ந்த கூட்டம்!

ஐ.பி.எல். நைட்ஸ் என்கிற பெயரில் கிரிக்கெட் மேட்ச் முடிந்ததும் பார்ட்டியை ஆரம்பித்துவிடுகிறார்கள். நடிகைகள், மாடல்கள் என அனைவரும் பார்ட்டிக்கு ஆஜராகிவிடுவதால், வெற்றியோ, தோல்வியோ அனைத்து பிளேயர்களும் பார்ட்டிக்கு வந்து விடுகி றார்கள். ஹர்பஜனுடன் காதல் இல்லை என்று சொல்லும் கீதா பஸ்ரா தவறாமல் இந்த பார்ட்டிகளில் கலந்துகொண்டு ஹர்பஜன் சிங்கை உற்சாகப்படுத்தி வருகி றார். பாஜி ஆடினா பாரதத்துக்கே பார்ட்டிதான்!


நன்றி ஆனந்த விகடன்

Wednesday, March 24, 2010

பெருமைக்குரியவர்கள் .....

உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் உண்டு. தனி மனிதனுக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு இனத்திற்கும் கூட ஒரு குணம் உண்டு. உலகம் உருவான காலத்தில் இருந்து, பல கால கட்டங்களில், பல மனிதர்கள், பல காரணங்களுக்காக பெருமை வாய்ந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். அவர்களில் சிலர் இங்கே!

மார்டின் லூதர் கிங்

அமெரிக்காவில், அமெரிக்கர்களால், ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்டு, தமது இனத்திற்காக, இனத்தின் உரிமைகளுக்காக, தனி மனித உரிமைகளுக்காக, அடிமைகள் என்ற வார்த்தையை அகராதியிலிருந்து அடியோடு அழிப்பதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்து, அரும்பாடு பட்டு, கொலையுண்டு மாண்ட ஒரு மாவீரர் இவர். இவரது செயல்களுக்காக, இவருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு கூட அளிக்கப்பட்டது.

வின்ஸ்டன் சர்ச்சில்

இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்து, படித்து, இராணுவத்தில் பணியாற்றி, அரசியல் பணியாற்றி, 2 முறை இங்கிலாந்தின் பிரதமராகி, 1945 ல் ஜெர்மனிக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்றவர். இங்கிலாந்தில் மட்டுமன்றி, உலகத்திலேயே இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஒரே பிரதமர் என்ற பெருமைக்குரியவர்.
மகாத்மா காந்தி

தென்னாப்பிரிக்காவில் வாழும் சிறுபான்மை இந்தியர்களுக்காக போராடியவர், இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர், இந்தியா என்றொரு நாடுண்டு என்பதை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர்.


எம். ஜி. ஆர்

ஏழை எளிய மக்களின் நலனுக்காக அக்கறை காட்டியவர். அள்ளிக் கொடுத்த வள்ளல், தமிழர்களின் கல்வி முறையை சீரமைத்து, ஏழை எளியவர்களும் கல்வி கற்க வழிவகை செய்தவர் என்ற பெருமைக்குரியவர்.


கலைஞர் கருணாநிதி

ஈழத்தில் போர் நிறுத்தம் வரவேண்டும், இல்லையென்றால் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விடுவார்கள் என்று சென்னையில் இருந்தபடியே மிறட்டல் நாடகம் நடத்தியவர். பின்பு, மத்திய அரசானது ஈழ மக்களுக்கு உதவி செய்ய முன் வந்ததால், ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்கின்றோம் என்று கூறியவர்.

உடல் நிலை காரணமாக, டெல்லி செல்ல இயலாமல், சென்னையில் இருந்துகொண்டே, தந்தியும், கடிதமும் எழுதி எமது இன மக்களின் துயர் துடைக்க பாடுபட்டவர்.

போர் நிறுத்தத்திற்காக உண்ணநிலையையும் எடுத்தவர்.

தற்போது, மகன் அழகிரிக்காகவும், மகள் கனிமொழிக்காகவும், உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் டெல்லி சென்று அமைச்சரவையில் வாய்ப்பு கேட்டு காங்கிரஸ் கட்சியை மிரட்டுபவர்.

அது கிடைக்கவில்லை என்றதும், வெளியில் இருந்து ஆதரவை அளிப்பதாக அறிவித்தவர்.

உலகமே தமிழனத்தின் தலைவர் என்று தம்மை கூறிக்கொண்டிருந்த வேளையில், தமது இனத்தின் அழிவிற்காக முழு ஆதரவை மத்திய அரசிற்கு வழங்கிய இவர், தமது குடும்பத்திற்கு பதவி கொடுக்கவில்லை என்பதற்காக, வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக முடிவு எடுத்துள்ளார்.

இதனால் இவர் உலகத்தமிழினத்தின் துரோகி என்ற பெருமைக்குரியவர்.


சார்லஸ் ஆண்டனி

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

http://jcet.blogspot.com/2007/09/arathuppal-illaraviyal-makkatperu-7.html

என்ற வள்ளுவ முனிவரின் வாக்குப்படி, தந்தைக்கும், தமது இனத்திற்கும் பெருமை சேர்த்தவன் இந்த பிள்ளை.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று கூறுவது போல், நான் வளர்ந்துவிட்டேன், என்னுடைய இளைய வயது ஈன சுகங்கள்தான் முக்கியமென்று எண்ணாமல், எமது சகோதர, சகோதரிகளின் உரிமைகளுக்காக,
தானே முன்னின்று சமர் செய்து வீர சொர்க்கம் அடந்த இவன்தான் தமிழினத்தின் வீரப்பிள்ளை என்ற பெருமைக்குரியவன்.

வேலுப்பிள்ளை பிரபாகரன்

கதிரவன் பிறந்து, எழுந்து, உலகத்தை விழிக்கச் செய்கின்றான். அதேபோல், தமிழினம் என்றோர் இனமுண்டு என்பதை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்து பெருமை, நமது தேசியத்தலைவர் அவர்களைச்சேரும்.

சராசரி மனிதனாக, ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி, பல்வேறு உடைகளை உடுத்தி அழகு பார்த்து, படிக்க வைத்து, அவனுக்கு மணம் செய்து வைத்து மகிழ்தலை பெரிதாக எண்ணாமல், தான் பெற்ற மகனை, தமது இனத்திற்காக முன்னின்று சமர் செய்யடா என்று கூறிய பெருமைக்குரியவர்.

Sunday, March 21, 2010

பொட்டு அம்மான் உயிருடன் இருக் கிறார்-இண்டர்போல் போலீஸ்


''பொட்டு அம்மான் உயிருடன் இருக் கிறார். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது!'' - இப்படி அறிவித்திருப்பது ஈழ ஆர்வலர்கள் யாருமல்ல... இண்டர்போல் போலீஸ்!

விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான் குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பிரபாகரன் விஷயத்தில் சந்தேகப்பட்ட ஈழ ஆதரவாளர்கள்கூட பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்பினார்கள். இதற் கிடையில்,

''பெயர்: பொட்டு அம்மான் என்கிற சிவசங்கரன், பிறந்த வருடம்: 1962, பிறந்த இடம்: ஆரியவாலை, சாவகச்சேரி, இலங்கை... தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், சிங்களம்... கைது வாரன்ட்: சென்னை, இந்தியா...'' என தேடப்படும் குற்றவாளியாக அவரை இண்டர்போல் இணையதளம் சில தினங்களுக்கு முன்னால் திடீர் செய்தி வெளியிட... ஈழ ஆர்வலர்கள் பரபரத்து எழுந்திருக்கிறார்கள்.

இண்டர்போல் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பைப் பார்த்து உஷாராக வேண்டிய இலங்கை அரசோ, ''கடந்த மே மாதம் நடந்த ஈழப் போரின் கடைசி நாளில் பொட்டு அம்மானும் அவர் மனைவியும் உடலில் வெடிகுண்டு களைக் கட்டி வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்கள். அதனால், அவரது இறப்பு குறித்த ஆதாரங்களை எங்களால் சமர்ப்பிக்க முடி யாமல் போய்விட்டது. பொட்டு உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை!'' என அவசர அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பொட்டு விவகாரம் திடீரென கிளம்பிய பின்னணி குறித்து விசாரித்தோம். ''ஈழப்போர் நடந்த காலம் தொட்டு இன்றுவரை இலங்கையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பெரிய தலைவலியாக இருப்பது பொட்டு அம்மான்தான். கடைசிக்கட்டப் போரின் போது அவருக்கு 'குருவி' என ரகசியப் பெயர் சூட்டப்பட்டது. இப்போதும்கூட, ரகசிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புலிகளிடம் சிங்கள ராணுவமும் புலனாய்வுத் துறையும் அவரைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன் ராணுவத்திடம் பிரபா என்ற போராளி சிக்கினார். அவரைத் துருவி எடுத்தபோது, பொட்டு அம்மான் வெளிநாட்டுக்கு தப்ப முயன்று கொண்டிருப்பதாகத் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொழும்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை பகுதிக்குச் சென்று அங்கு இருந்த ஆறு மாடிக் கட்டடம் ஒன்றை ராணுவத் தரப்பு சல்லடையாகத் துழாவியது. அதிகாரிகள் அந்த இடத்துக்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சந்தேகத்துக்கிடமான சிலர் அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரது பெயர் 'குருவி'! இந்த விஷயத்தை மீடியாக்களுக்குத் தெரியாமல் இலங்கையின் உளவுப் பிரிவு மறைத்தாலும், சர்வதேச உளவு அமைப்புகளுக்கு 'குருவி' என்ற பெயரில் தப்பியது பொட்டு அம்மான் என்பது புரிந்துவிட்டது.

பிரபாகரன், பொட்டு அம்மான் இறந்து விட்டதாக இலங்கை அரசு இந்தியாவுக்கு கொடுத்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்பதை இண்டர்போல் போலீஸ் ஏற்கெனவே புரிந்துகொண்டு விட்டது. இதனால்தான், ராஜீவ் கொலை வழக்கை முடிக்க முடியாமல் சி.பி.ஐ. திணறி வருகிறது. இதற்கிடையில், பொட்டு அம்மானின் சர்வதேச தொடர்புகளை யூகித்த இண்டர்போல், அவரை மீண்டும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது!'' எனச் சொன்ன கொழும்பு விவரப்புள்ளிகள், இன்னொரு பகீர் தகவலையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

''புலிகளின் ஆயுதக் கொள்முதல் செய்த கே.பி. சில மாதங்களுக்கு முன்பு சிங்கள ராணுவத்திடம் சிக்கினார். ஆனால்... அதுவே பெரிய நாடகமோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது! புலிகளின் நாடு கடந்த நெட்வொர்க்குக்கு கே.பி-யின் பெயர் வெளியளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பெயரில் ஒளிந்திருந்த வேறு சிலர் புலிகளின் இக்கட்டுகளைக் களைய கடைசி நேரத்தில் போராடிப் பார்த்திருக்கிறார்கள். போரில் புலிகள் அடியோடு தோற்றபோது, புலிகளின் சர்வதேச ஆட்களுக்கும் கே.பி-க்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்திருக்கின்றன. சர்வதேச நிதியகங்களில் இருக்கும் புலிகளின் சேமிப்புக்கு உரிமை கோருவதிலும் சிக்கல் வெடித்து இருக்கிறது. மெக்ஸிகோவில் உள்ள மூன்று வங்கிகளுக்கு புலிகளின் சேமிப்பை மாற்றவும் முயற்சி நடந்துள்ளது. அப்போதுதான், பொட்டு அம்மான் வெளியே இருக்கும் சிலருடன் தொடர்புகொண்டு பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்.

இதெல்லாமே மெதுவாக இண்டர்போல் காதுக்கு வந்து சேர்ந்தது. பொட்டு உயிரோடு இருப்பதுபோல் இண்டர்போல் இப்போது அறிவித்துவிட்டதால், இலங்கை அரசுக்கு கடும் கலக்கம். புலிகளின் அத்தனை தளபதிகளும் அடியோடு வீழ்த்தப்பட்டார்கள் என சிங்கள அரசு தொடர்ந்து அறிவித்ததற்கு காரணமே, சர்வதேசத் தமிழர்கள் மீண்டும் புலிகளுக்கு நிதி கொடுக்க முன்வரக் கூடாது என்பதற்காகத்தான். மேலும், ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான பொட்டு அம்மானின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ-யும் ஏற்க மறுப்பதால், சிங்கள அரசுக்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. சமீபத்தில், இலங்கைக்குச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம், 'சர்வதேச அளவில் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் இப்போதும் பிரபாகரனையும் அவருடைய தளபதிகளையும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்!' என இலங்கையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே பகிரங்கமாக அறிவித்ததையும் கவனிக்கவேண்டும்'' என்றார்கள்.

இதற்கிடையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு மிக முக்கிய இடத்தில் இருந்து ரகசியக் கடிதம் ஒன்று வந்திருப்பதாகவும்... அதில், ''நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம். விரைவிலேயே வெளியுலகுக்கு வரத் தயாராகிவிட்டோம். பழையபடி மிகுந்த வலிமையோடு போரிட நாங்கள் தயாராகி வருகிறோம்'' என சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஐந்து பேருக்கு இதே கடிதம் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

''போரின் கடைசி நாள் பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக இத்தனை மாதங்கள் கழித்து இலங்கை அரசு வலிந்து அறிவிக்க வேண்டிய அவசியமென்ன? இண்டர்போல் அறிக்கை வெளியான பிறகுதான் தற்கொலை தகவல் அவர்களுக்குக் கிடைத்ததா? பிரான்ஸில் ஈழத்தமிழர்கள் ஏற்பாடு செய்யப் போகும் ரகசியக் கூட்டத்துக்கு பொட்டு அம்மான் நேரிலேயே வருவதாகச் சொல்லி இருக்கிறாராம். இண்டர்போல் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால்தான் அந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டே போகிறது. ஒரே ஒரு நிமிடமாவது அவர் வெளிச்சத்துக்கு வந்து போவார்'' என்று ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சிலர் அடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

''புலிகளின் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவராக பொறுப்பேற்பாரா?'' என்று இவர்களிடம் கேட்டால்... ''எங்களுக்கு வந்த மற்றொரு மிக இனிப்பான தகவல்படி சொல்வதானால்... இயக்கத்துக்கு புதிய தலைமை வரவேண்டிய அவசியமில்லை!'' என்று மட்டும் சிரித்தபடியே சொல்கிறார்கள்.-

நன்றி; ஜீனியர் விகடன்

Friday, March 19, 2010

எனக்கு வந்த ஒரு குறுந்தகவல் :

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க சுலபமான வழி..!!
எனக்கு வந்த ஒரு குறுந்தகவல் :

கீழ்க்கண்ட கணக்கை சரியாகச் செய்துவிட்டால் உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரை சரியாக கண்டுபிடிக்கலாமாம்..முதலில் : உங்கள் பெயரின் ஆங்கிலத்தில் ஆரம்பிக்கும் முதல் எழுத்தின் எண்ணை எடுத்துக்கொள்ளவும்..உதாரணமாக..m என்றால் 13 . இரண்டாவதாக : .இதனை ஒன்பதால் பெருக்கவும் ..

மூன்றாவதாக : வரும் எண்ணை ஒன்றாகக் கூட்டிக்கொள்ளவும்..(உதாரணம் 13 X 9 = 117, 1 + 1 + 7 = 9) ..

நான்கவதாக : வரும் விடையை 108 ஆல் பெருக்கவும்..

ஐந்தாவதாக : வரும் விடையை மீண்டும் 4802 ஆல் பெருக்கவும்

ஆறாவதாக : வரும் விடையுடன் 7008 ஐ கூட்டவும்

ஏழாவதாக : மொத்த எங்களையும் உங்கள் மொபைல் போனில் new messege பகுதியில் dictionary mode இல் tyep செய்தால் உங்கள் வாழ்க்கைத்துணையின் பெயரை நிச்சயமாகத் தெரிந்துகொள்ளலாம்...!

முயற்சி செய்து பிறகு வரும் விடையை பின்னூட்டத்தில் என்னுடன்

Thursday, March 18, 2010

நித்தி நீதிமன்றத்தில் ஆஜர்


ஹரித்துவாருக்கு ஓடி, ஒளிந்து இருந்து கொண்டிருந்த நித்யானந்தாவை நம் தமிழ் நாடு போலீஸ் அங்கு போய் கோழியை அமுக்குவது போல் “லபக்”கென்று பிடித்து கொண்டு வந்து விடுகிறது. அடுத்த நாள் அவர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். மனதில் வலிமை, எண்ணத்தில் நேர்மை(!), பேச்சில் திறமை (!), காசில் கடுமை என்று கனகச்சிதமாக இருந்த நித்யானந்தா, பெண் விஷயத்தில் இருந்த பலவீனத்தால் மாட்டிக்கொண்டதில் விழி பிதுங்கி குற்றவாளிக்கூண்டில் நிற்கிறார். அவரின் லீலையை ரிலீஸ் செய்த சன் டிவியே அவரின் நீதி மன்ற காட்சிகளையும் நேரலையில் ஒளிபரப்புகிறது. என்ன தான் பயம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் தரப்பு நியாயத்தை தைரியமாக கூறி அவர் வாதாடும் பரபரப்பு காட்சிகள் இனி உங்கள் விழிகளுக்காக..!!

இதோ காட்சி..!

நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நின்று கொண்டிருக்கிறார் நித்யானந்தா. நீதிபதி அவரை பார்த்து “நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா..?”. அவரின் சம்மதத்தை கூட எதிர்பார்க்காமல் நித்யானந்தா தன் பேச்சை தொடங்குகிறார். பேசித்தானே அவர் இலட்சக்கணக்கான மக்களை கவர்ந்து காவி உடைக்குள் திணித்தார்..!! நித்யானந்தா தன் தரப்பு வாதத்தை தொடங்குகிறார்..!!!

இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாக ஊரை ஏய்த்துப் பிழைக்கும் ஒண்ணாம் நம்பர் கேடி சாமியார்களில் நானும் ஒருவன்.

பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள் என்று கூறி ஊரை ஏமாற்றினேன். தியானம் என்கிற பேரில் தில்லுமுல்லுகள் செய்தேன். கண்ட நடிகைகளுடன் கதவை திறந்து வைத்து “கசமுசா” பண்ணினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.!! நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் இதை எல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று..!! இல்லை..நிச்சயமாக இல்லை..!!

பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள் என்று கதை அளந்தேன். ஏன்.. மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா..? மனதெல்லாம் கஷ்டங்களுடன் வருபவர்களிடம் காசை வாங்கி கொண்டு ஆறுதல் தரவேண்டும் என்பதற்காக..!!

கண்ட நடிகைகளுடன் கதவை திறந்து வைத்து “கசமுசா” பண்ணினேன். ஏன் அவர்களிடம் சல்லாபித்து இன்ப லோகததை காணவா..? இல்லை..மக்கள் நடிகைகள் என்ற மலையாள மாமிகளின் மாயையிலிருந்து வெளி வரவேண்டும் என்பதற்காக..!

தியானம் என்கிற பேரில் தில்லுமுல்லுகள் செய்தேன். மக்களை மயக்கி கன்னக்கோல் வைக்கவா..? இல்லை... திருட்டுத்தனம் செய்து மாட்டிக்கொண்டாலும் அது தியானத்தின் ஒரு பகுதி என்று சொல்லி தப்பித்து விடவேண்டும் என்பதற்காக..!!

உனக்கேன் இவ்வளவு அக்கறை.. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன்...நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலம் என்பீர்கள். எனது இந்த சுயநலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது. நடிகைகளுடன் சல்லாபித்தாலும் நாளொரு பேட்டாவும், பொழுதொரு சன்மானமுமாக அள்ளிக்கொடுத்தேனே.. அதைப்போல..!! என்னை குற்றவாளி, அயோக்கியன் என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையை சற்றே திரும்பி பார்த்தால் நான் செய்த திருட்டுத்தனங்கள், அதற்காக வாங்கிய அடிகள், அதனால் கிடைத்த அவமானங்கள் விளங்கும்..!! மனதை வருடும் மந்திரங்கள் இல்லை என் பாதையில், மனசை கெடுக்கும் தந்திரங்கள் நிறைந்திருக்கின்றன. கடவுளை தீண்டியதில்லை நான். ஆனால் காமத்தின் எல்லையை தாண்டி இருக்கிறேன். கேளுங்கள் என் ”தில்லுதுர” கதையை நீதிபதி அவர்களே..! என்னை ஜெயிலுக்குள் விட்டு டவுசரை கழட்டுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..!!

போலி ஆன்மீகம் பொங்கி வழியும் இந்தியாவில், கண்டவர்களை எல்லாம் கடவுளர்களாக நினைக்கும் தங்க தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான்..! பிறக்க ஒரு ஊர்.. பிழைக்க ஒரு ஊர்..! ஆன்மீகம் என்ற பெயரில் ஊரை அடித்து உலையில் போடும் சாமியார்களை நம்பி ஏமாறும் தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா..? திருவண்ணாமலையில் பிறந்து, காவிரிக்கரையில் அமர்ந்து வாயில் வந்ததை எல்லாம் ஜோஸியம் என்று வாந்தி எடுத்துக்கொண்டிருந்தேன். ஆரம்ப வியாபாரமே வெகு சிறப்பாக தான் நடந்தது.

என்னை கண்டவர்கள் கடவுள் அவதரித்து விட்டார் என்றனர். தொட்டால் துலங்குகிறது என்றார்கள். பார்வை பட்டால் பலன் கிடைக்கிறது என்றார்கள். ஆனால் கடைசியில் நடந்ததை நினைத்தாலோ கண்ணைக்கட்டுகிறது..!! வீடியோ மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ரஞ்சிதா, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். மனதை பறிகொடுத்தேன். பின் பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். வீடியோவில் படமாக்கப்பட்டேன். அதனால் அடிபட்டேன்.. ஆத்திரப்பட்டேன்... ஆவேசப்பட்டேன்.. ஒன்றும் வேலைக்காகாததால் மாட்டிக்கொண்டேன்.

அவள் பெயரோ ரஞ்சிதா..! கேட்டாலே கிறக்கம் கொடுக்கும் பெயர்..!! ஆனால் பேச்சில் உண்மை இல்லை.! செயலில் நன்மை இல்லை..!! ஆதரவாய் கட்டிக்கொண்ட ஆர்மிக்காரனுக்கும் அல்வா கொடுத்து விட்டாள். அவளுக்கு கண்ணி வீசினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் கண்டதையும் கேட்டனர். வீடியோ எடுப்பதில் ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் லெனின் என்கிற பிரேமானந்தா, இவன் பண ஆசையில் என் அறைக்குள் பல முறை கேமரா வைக்க முயன்றான். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் ”கதவை மூடு.. கேமரா தொலையட்டும்..!!” என்று அப்போதே அவனுக்கு ஆப்பு வைத்திருப்பேன்..!!

நான் ஏமாற்றாத நாளில்லை..!! ஏமாறாத பரமஹம்ச பக்தனும் இல்லை..!! நான் மட்டும் நினைத்திருந்தால் சாமியாராகாமல் அரசியலில் புகுந்து அனைவரையும் ஏமாற்றியிருக்கலாம். பெண்ணாசை வந்தால் கள்ளக்காதல் செய்து காலத்தை ஓட்டி இருக்கலாம். மட்டமான மசாலா படங்களில் நடித்து மக்களின் மனதை கெடுத்திருக்கலாம். இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?

சன் டிவியில் என் படத்தை சகட்டு மேனிக்கு போட்டு சந்தி சிரிக்க வைத்தார்கள்..... ஓடினேன்..! என் மடங்களில் புகுந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள்... ஓடினேன்...!! என் பேனர்களை எரித்து என்னை கொலை வெறியோடு தேடினார்கள்.. யூட்யுப்-ல் என் வீடியோவுக்கு மட்டும் ஏகப்பட்ட ஹிட்டுகளை கொடுத்தார்கள்..ஓடினேன்..!! கள்ளச்சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று கலகம் செய்தார்கள் ஓடினேன்..!!

ஓடினேன்... ஓடினேன்... ஹரித்துவாரின் கடைசி எல்லை வரைக்கும் ஓடினேன்.. ஆனால் எத்தனை ஓடியும் இந்த எடுபட்ட தமிழ் நாட்டு போலீஸ் என்னை எப்படியோ அமுக்கி பிடித்து விட்டது..!! புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து விட்டேன்..!!

சரியான அரசு சன் டிவியின் வீடியோ ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும். என் வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும்..இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா இந்த நித்யானந்தாவை..?!!

துறவியாக இருந்து கொண்டு ஆடை களைந்து அழகியுடன் சல்லாபித்தது ஒரு குற்றம். ஆசிரம் அமைப்பதற்காக அடுத்தவன் நிலத்தை அபகரித்தது ஒரு குற்றம். ஆன்மீகம் என்ற பெயரில் அத்தனை மக்களின் நம்பிக்கையை நாசமாக்கியது ஒரு குற்றம். காணிக்கை என்ற பெயரில் கணக்கிடலங்கா கருப்பு பணம் சேர்த்தது ஒரு குற்றம்..!!

இத்தனை குற்றங்களுக்கும் யார் காரணம்..?

பாலாஜி சக்திவேல் பட ஹீரோ போல் இருந்த என்னை துறவியென நம்பியது யார் குற்றம்.? சாமியார் வேஷம் போட்டு காசு பார்க்க நினைத்த என் குற்றமா..? இல்லை..எத்தனை டுபாக்கூர் சாமியார்கள் மாட்டினாலும், மறு நிமிடமே மறந்து விட்டு மீண்டும் மீண்டும் நம்பும் முட்டாள் மக்களின் குற்றமா..?

நடிகையுடன் சல்லாபித்தது யார் குற்றம்..? ஜாலியாக இருந்து இவ்வுலகிலேயே சொர்க்கலோகத்தை சுகிக்க நினைத்த என் குற்றமா.? இல்லை..பணத்துக்காக என்னிடம் பல்லைக்காட்டி படுக்கையில் விழுந்த நடிகையின் குற்றமா.?

பல கோடி ரூபாய் பணம் சேர்த்தது யார் குற்றம்..? நான் உண்டு என் லீலைகள் உண்டு என்று இருந்த என் குற்றமா..? இல்லை..சாமியார் என்றாலே சாக்கு பையில் பணத்தை கொண்டு வந்து கொட்டும் ஏமாளிகள் குற்றமா.?

இக்குற்றங்கள் களையப்படும் வரை நித்யானந்தாக்களும், ரஞ்சிதாக்களும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்..!!! நன்றி... வணக்கம்..!!


நன்றி : idhayampesukirathu.blogspot.com