Wednesday, December 23, 2009

எம் தலைவன் குறிப்புக்கள் சில

தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ''போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்'' என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ''எடுத்தால் எங்கே வைப்பது'' என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் 'ஏழு தலைமுறைகள்'. அதில் 'இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

''ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?'' என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ''யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.''

''பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை'' என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. 'தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

'இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், 'பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ''தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்'' என்பார்!

தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

அநாதைக் குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

'உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ''நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!''

''ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?'' என்றுஅடக்க மாகச் சொல்வார்!

மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

'தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

Tuesday, December 22, 2009

துவாரகாவா இசைப்பிரியாவா?

வ்
விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகர னின் மகள் துவாரகா கொல்லப்பட்டதாக சில இணையதளங்கள் மூலம் பரவிய செய்தியும், அதையட்டி வெளியான புகைப் படமும் லேசாக ஆறிக்கொண்டிருந்த ஈழ ஆர்வலர்களின் இதயக் காயத்தை மறுபடி கிளறி விட்டன! 'துவாரகாவின் உயிரோட்டமான புகைப்படத்துடன் ஒப்பிடும்போது அந்த நிறமும் சாயலும் அப்படித்தானே இருக்கிறது!' என்று புலம்பியவர்கள், 'பிரபாகரன் குடும்பத்தில், போருக்குத் துளியும் தொடர்பில்லாத அவருடைய மகளையும் இப்படி பலியாக்கியதா சிங்கள ராணுவம்' என்று கொதிப்போடு பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

சீரழிக்கப்பட்ட இசைபிரியா!

துவாரகாவின் சாயலை நினைவூட்டும் அந்த புகைப் படத்தில் உள்ளதாகச் சொல்லப்படும் இசைபிரியா விடுதலைப் புலிகள் மட்டுமின்றி, தமிழீழ ஆதரவுப் பிரமுகர்கள் மத்தியிலும் பிரபலமான ஒரு முகம்தானாம்! அவருடைய தோற்றம் போலவே, குரலும் மிக இனிமை யானது! அதனாலேயே, இயக்கத்தின் 'நிதர்சனம்' என்ற பிரிவில் போராளியாக இணைந்த அவருக்கு, தமிழீழத் தேசியத் தொலக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணியும் ஒதுக்கப்பட்டதாம். இவர் கடற்புலிகளின் துணை கட்டளைத் தளபதியாக இருந்த சீறிராம் என்பவரின் மனைவி என்றும் தகவல்கள் வந்தபடி உள்ளன.

''மே மாதம் 15-ம் தேதி நடந்த ராணுவத் தாக்குதலின் போது இசைபிரியாவுக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. எல்லோரும் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிய அந்தத் தருணத்தில், அவரைக் காப்பாற்ற ஆள் இல்லாமல் போய் விட்டது. ராணுவத்தினர் நெருங்கி வந்துவிட்டதால், காயப்பட்டு துடித்த இசைபிரியாவை புலிகளா லும் மீட்டெடுக்க முடிய வில்லை. வலியோடு போராடிக் கொண்டிருந்த இசைபிரியா ராணுவத்தி னர் கையில் சிக்கிவிட்டார்...'' என்று கூறும் இலங்கை பத்திரிகை யாளர்கள் சிலர், மேற்கொண்டு சொல்லும் தகவல் கண்ணீரைப் பெருக்கெடுக்க வைக்கிறது -

''ரத்தம் சொட்டிக் கொண்டிருந்த அந்த நிலையிலும் பதினைந்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் இசைபிரியாவை சின்னா பின்னமாக்கி இருக்கிறார்கள். கடைசிக்கட்டப் போரில் ஈடுபட்ட ராணுவத்தினர் சிலரிடம் அந்த நிமிடங்களில் வக்கிரமாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவே இருப்பதாகத் தெரிகிறது!'' என்கிறார்கள் இந்தப் பத்திரிகையாளர்கள். கடைசிக்கட்டப் போரில் தப்பிய சிலரிடம் பேசியதை வைத்தே இவர்கள் இப்படி விவரிக் கிறார்கள்.

'இது துவாரகாவின் புகைப்படம்' என்று ஒரு பக்கம் இணைய தளங்களில் வெளியானபடி இருக்க... இன்னொரு பக்கம் மீடியாக்களை சந்தித்த இலங்கை ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார, 'யுத்தத்தில் துவாரகாவின் சடலமோ பிரபாகரன் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களின் சடலமோ மீட்கப்படவில்லை. இணையதளங்களில் வெளியாகியிருக்கும் அந்தப் படம் துவாரகாவினுடையது போல் தெரியவில்லை' என மறுத்து வைத்தார்.

போர்க்களத்தில் துவாரகா!

''அயர்லாந்தில் தன்னுடய உயர் படிப்பை மேற்கொண்டிருந்த துவாரகா, யுத்தம் கொடூர கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில் தன் தந்தையைப் பார்க்க வேண்டுமென்று ஈழத்துக்கு வந்திருந்தது உண்மைதான். இறுதிக்கட்ட சமரில் அவரும் ஆயுதமேந்திப் போராடினார். ஆனால், அவர் வீர மரணமடைந்தாரா, தப்பி வெளியேறினாரா என்பதெல்லாம் இது வரை தெரியாத விஷயம்!'' என்ற கருத்தைச் சொல்லும் இலங்கை முக்கியஸ்தர்கள் சிலர்,

''இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளைத் தவிர்த்து வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் தமிழ்ப் பெண்கள் பொதுவில் சிவப்பாக இருக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். இயக்கத்தில் வட பகுதியைச் சேர்ந்த மாநிறமான பெண்களே பிரதானமாக இடம்பெற்றிருந்ததால், புகைப்படத்தில் உள்ள பெண் சிவப்பாக இருப்பதை வைத்தே அதை துவாரகா என்று சுலபமாக நம்பி விட்டார்கள் பலர். இசைபிரியாவும் நல்ல சிவப்பு நிறம் கொண்டவர். அதுவும்கூட இணைய தளங்களில் இப்படி தவறான தகவலாக வெளியாகக் காரணமாகியிருக்கலாம்!'' என்றும் கூறுகிறார்கள்.

இந்நிலையில்தான், 'பிரபாகரன் எந்த பங்கமும் இன்றி உயிரோடுதான் இருக்கிறார்' என்று சொல்லும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரான

பழ.நெடுமாறன், துவாரகா விவகாரம் இத்தனை நாள் கழித்து திடீரென்று இணைய தளங்கள் மூலம் பரவுவதன் பின்னால் இந்தியா மற்றும் இலங்கையின் உளவு அமைப்புகள் இருப்ப தாகக் கூறுகிறார். வருகிற 26, 27 தேதிகளில்

தஞ்சாவூரில் நடத்தவிருக்கும் உலகத் தமிழர் மாநாட்டில் இதன் பின்னே உள்ள சதி குறித்து விவரமாக முழங்கும் முடிவில் இருக்கும் நெடுமாறனை நாம் நேரில் சந்தித்தபோது, ''வருடா வருடம் ஏதாவதொரு தலைப்பில் உலகத் தமிழர் மாநாட்டை நடத்துவோம். இந்த வருடம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடாக நடத்துகிறோம். தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளும் அந்த மாநாட்டில் ஈழத்தின் விடிவுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவோம்!'' என்ற நெடுமாறனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்.

''பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கிளம்பிய பரபரப்புகளே முடிவுக்கு வராத நிலையில், திடீரென அவர் மகள் துவாரகா இறந்ததாக படத்தோடு திகீர் கிளம்பியிருக்கிறதே?''

''பிரபாகரனை கொன்று விட்டதாக மார்தட்டிய ராஜபக்ஷே அதை வைத்தே ஜெயித்துவிடலாம் என எண்ணி அதிபர் தேர்தலை அறிவித்தார். ஆனாலும், போரை முன்னின்று நடத்திய ஃபொன்சேகாவே இப்போது ராஜபக்ஷேக்கு எதிராக நிற்கிறார். அதனால், 'வெற்றி பெறுவோமோ... மாட்டோமோ...' என்கிற பதற்றம் ராஜபக்ஷேக்கு உண்டாகிவிட்டது. உடனே தங்களது உளவு அமைப்பு களின் மூலமாகவே துவாரகா விவகாரத்தை திடீரெனக் கிளப்பத் தொடங்கி விட்டார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக போர் வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் பதிய வைத்துக் கொண்டே இருக்க ராஜபக்ஷே திட்டமிடுகிறார். முதலில் பிரபாகரன், பிறகு மதிவதனி, பாலச்சந்திரன் பற்றி திட்டமிட்டு பரபரப்புக் கிளப்பியவர்கள், இப்போது துவாரகா குறித்தும் பரபரப்பு கிளப்புகிறார்கள்.

எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல் களின் அடிப்படையில் சொல்கிறேன்... துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது அவர் கிடையாது. இப்போதைக்கு அதைத் தான் சொல்ல முடியுமே தவிர, மேற்கொண்டு இதுபற்றி சொல்ல முடியாது.''

''அப்படியென்றால் துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது யார்?''

''அது இசைபிரியா என்கிற பெண் போராளி யின் சடலம். 'நிதர்சனம்' புகைப்படப் பிரிவில் பணியாற்றிய இசைபிரியா, புலி களின் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். ஆண், பெண் என்றெல்லாம் பாராமல்... களத்தில் ஆயுதமேந்தி இருப்பவர்கள் - நிராயுதபாணியாக நிற்பவர்கள் என்றும் பாராமல்... இரக்கமற்று ராஜபக்ஷே ராணுவம் வீழ்த்தித் தள்ளிய பட்டியலில் அடங்குவார் இசை

பிரியா! ''

''பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று எதை வைத்து உறுதியாகச் சொல்கிறீர்கள்?''

''சிங்கள உளவுத் துறையும், இந்தியாவின் 'ரா'வும் எந்த விஷயத்தை அறிய போராடிக் கொண்டிருக்கின்றனவே... அதனை எப்படி நான் விளக்கிவிட முடியும்? அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக இரு நாட்டு உளவுத் துறையும் எந்தளவுக்கு போராடிக் கொண்டிருக்கின்றன என்று உள் வட்டத்தில் விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். சிங்கள ராணுவத்தின் கையில் தன் உடல் சிக்கும் அளவுக்கு விடக் கூடியவரா பிரபாகரன்? அவருடைய சாமர்த்தியங்களைப் பற்றி நம்மைவிட சிங்கள ராணுவத்துக்கு நன்றாகத் தெரியும்! பிரபாகரன் என் உடன்பிறவா தம்பி. அவரைப் பற்றி சிங்கள ராணுவம் அறியாததும் எனக்குத் தெரியும். சிங்கள ராணுவம் காட்டிய சடலத்தைப் போல்தான் அவர் இருப்பார் என நினைப்பவர்கள் வேண்டுமானால், அந்த விஷமப் பிரசாரத்தை நம்பலாம். ஆனால், பிரபாகரன் அப்படியான உருவத்தில் இருக்க மாட்டார் என்பது அவரை அருகிலிருந்து அறிந்தவர் களுக்குத்தான் தெரியும். பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் புலிகளை அடியோடு அழித்து விட்டதாகவும் கொக்கரிக்கும் சிங்கள ராணுவம், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோடிக்கணக்கில் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பது ஏன்? எந்த பயத்தில்? இதிலிருந்தே தெரியவில்லையா?''

''பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய அரசிடம் இலங்கை அரசு கொடுத்துவிட்டதாகச் சொல்லப் படுகிறதே?''

''இந்தக் கேலிக்கூத்துக்கு என்னுடைய பதிலாக, ஜூ.வி. வாசகர்கள் நன்கு நினைவில் வைத்திருக்கும் ஒரு சம்பவத்தை மட்டும் சொல் கிறேன். மதுரை அருகே உள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். அவருடைய கணவரே அந்தம்மாவைக் கொலை செய்துவிட்டதாக ஒரு வழக்கு நடந்தது. பாண்டியம்மாளின் சடலம் காட்டப்பட்டது. 'நான்தான் கொன்றேன்!' என கணவரே வாக்குமூலம் கொடுத்தார். தகுந்த சாட்சியங்களோடு விசாரித்து, கோர்ட்டில் அவருக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், திடீரென ஒரு நாள் பாண்டியம்மாள் கோர்ட்டில் வந்து நின்றார். அதன் பிறகுதான் போலீஸ் செய்த அத்தனை ஜோடிப்புகளும் வெட்டவெளிச்சமானது. உடனே நீதிபதி பாண்டியம்மாளின் கணவரிடம், 'நீயே உன் மனைவியைக் கொலை செய்ததாக முதலில் ஒப்புக் கொண்டது ஏன்?' எனக் கேட்டார். 'என்னை அடிச்சே அப்படியரு வாக்குமூலத்தை போலீஸ் வாங்கிட்டாங்க...' எனச் சொன்னார் பாண்டியம்மாளின் கணவர்.

தமிழ்நாடு போலீஸ் செய்த ஜோடிப்பு இந்தளவு என்றால், ஒரு நாட்டின் ராணுவம் எத்தகைய ஜோடிப்புகளை செய்யும் என்பதை எண்ணிப் பாருங்கள். பாண்டியம்மாளின் கதைதான் பிரபாகரன் விவகாரத் திலும் நடக்கிறது. உண்மை வெளிச்சத்துக்கு வரும் நாளில், சில அவசர லாபங்களுக்காக வெற்றிப் புராணம் பாடியவர்கள் வெட்கப்பட்டு நிற்கப் போகிறார்கள்.''

''பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் மூலமாகவோ, புலிகளின் தரப்பிலிருந்தோ உங்களுக்கு என்ன விதமான தகவல் வந்தது?''

''அப்படியரு தகவல் வராமல் எப்படி அவர் உயிரோடு இருப்பதாக நான் சொல்வேன்? நம்பத் தகுந்த செய்தி யாரிடமிருந்து வரவேண்டுமோ... அங்கிருந்தே வந்தது. ஆனாலும், எனக்கு வந்த தகவல்கள் குறித்து இப்போதைக்கு நான் ஏதும் சொல்லக் கூடாது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பரப்புவதன் மூலமாக தமிழின எழுச்சியை அடியோடு அடக்கிவிட இந்திய அரசு நினைக்கிறது. ஆனால், எப்போதுமே தமிழகத்தில் கொண்டாடப்பட்டிராத மாவீரர் தினம் இந்த வருடம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எதை வீழ்த்தத் துடிக்கிறார்களோ... அது வீறுகொண்டு விரிந்து கொண்டிருப்பதால், அடுத்தடுத்து இன்னும் பல கதைகளைக்கூட இரு நாட்டு உளவு அமைப்புகளும் பரப்பக் கூடும்!''

''பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரான கே.பி-யே அவர் கொல்லப்பட்டதாக அறிக்கை விட்டாரே?''

''அப்படியரு அறிக்கையை வெளியிட வைத்ததே இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' தான். ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் இலங்கையின் இணக்கம் சீனா பக்கம் திரும்பியது. அதனால் இலங்கையை எச்சரிக்கும் விதமாக கே.பி-யை வளைத்தது ரா. 'கே.பி. மூலமாக புலிகள் படையை நாங்கள் மறுபடியும் உருவாக்கத் தயங்க மாட்டோம்' என இலங்கையை ரா எச்சரித்தது. கூடவே கே.பி. மூலமாக பிரபாகரன் இறந்து விட்டதாகவும், அடுத்த தலைமை தான்தான் என்றும் அறிவிக்க வைத்தது. 'ரா'வின் இந்த செயல்பாடு சிங்கள அரசுக்கு பெரிய தலைவலியாக அமைய... அவர்கள் சில நாடுகளின் துணையோடு கே.பி-யை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்த விஷயத்தில் சிங்கள அரசிடம் ரா. தோற்றுப் போனதுதான் உண்மை!''

''பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக இருந்ததாக செய்திகள் கசிகிறதே?''

''ராஜீவ் காந்தி கொலைக்கு புலிகள்தான் காரணம் என விசாரணை அதிகாரிகள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ரெங்கநாத் என்கிற வீடு புரோக்கர் மிக முக்கிய விஷயம் ஒன்றை நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தார். அதுபற்றி மீடியாக்களிடமும் சொன்னார். அதைப் பார்த்த சோனியா காந்தி, உடனடியாக அந்த ரெங்கநாத்தை சந்திக்க விரும்புவதாக சொல்லி இருக்கிறார். அப்போது ரெங்கநாத் என் அலுவலகத்தில் இருந்தார். உடனே என்னிடம் ஓடோடிவந்த தங்கபாலு, கௌரிசங்கர் இருவரும் அந்த விஷயத்தைச் சொன்னார்கள். ரெங்கநாத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக நான் சொன்னவுடன், உரிய பாதுகாப்புக்கு வழி செய்யப்படும் என அர்ஜுன் சிங் டெல்லியிலிருந்து அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையில் நான் ரெங்கநாத் ஸ்டேட்மென்ட்டை வீடியோ பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பினேன். அதைக் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்த சோனியா, உடனடி யாக ரெங்கநாத்தை சந்தித்தே ஆகவேண்டுமென விரும்பினார்.
தக்க பாதுகாப்புடன் சோனியாவை சந்தித்த ரெங்கநாத் இப்போது சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தொடர்பான சில விஷயங்களை ஆதாரபூர்வமாகப் போட்டுடைத்தார். அன்றிலிருந்து சி.பி.ஐ-யின் முக்கிய அதிகாரி ஒருவரை தன் வீட்டுப் பக்கம் வரவே கூடாது என சோனியா எச்சரித்த சம்பவமும் நடந்தது. இதெல்லாம் தெரிந்துகொண்ட பின்பும், ஈழத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சாவின் விளிம்பில் நின்று கதறியபோது, போரை நிறுத்த சோனியா எந்த முனைப்பும் காட்டவில்லை. அவர் நினைத்திருந்தால்... ஒரே நிமிடத்தில் போரை நிறுத்தி இருக்க முடியும். ஆனாலும் காங்கிரஸ் அரசு அதற்கு முயலாதது சில சந்தேகங்களை விதைக்கத்தான் செய்கிறது.

சோனியாவை இயக்கிக் கொண்டிருக்கும் சில இந்திய அதிகாரிகள் இலங்கை விவகாரத்தில் திட்டமிட்டு நிறைய மோசடிகளைச் செய் தார்கள். இலங்கைக்கு பக்க பலமாக இருக்கவும், தமிழர்கள் கொன்றழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கவும் செய்த அந்த அதிகாரிகள், அதற் காக எக்கச்சக்கமான பணத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான தமிழ் உயிர்களை பாழாய்ப்போன பணம்தான் காவு வாங்கிவிட்டது! ஈழத்தைச் சுடுகாடாக்க இந்தளவுக்கு முனைப்புக் காட்டிய இந்திய அதிகாரிகள், அதற்கு விலையாக இந்தியாவின் பாதுகாப்பை பலி கொடுத்துவிட்டார்கள். இலங்கையில் கால் பதித்துவிட்ட சீனா... தமிழகத்தில் இருக்கும் அணுமின் நிலையங்கள் பக்கம் ஆயுதத்தைத் திருப்ப எவ்வளவு நேரமாகிவிடப் போகிறது?!'' என்று பட்டென முடித்துக் கொண்டார் பழ.நெடுமாறன்.

அடுத்து நாம் சீமானிடமும் பேசினோம். ''இசை பிரியாவின் உடலைக் காட்டி துவாரகா இறந்ததாகச் செய்தி பரப்புவதன் மூலமாக தமிழர்கள் மீது உளவியல் போரை சிங்கள அரசு தொடுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழீழத்துக்கு நான் போயிருந்தபோது புலிகளின் தொலைக்காட்சிக்காக என்னை பேட்டி கண்டவர் இசைபிரியா. தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தவர். புலிகளின் வெற்றிச் செய்திகளை மிகுந்த உற்சாகத்தோடு சொல்லி, புலித் தளபதிகளின் பாராட்டுகளைப் பெற்றவர் இசைபிரியா. அவருடைய படத்தை அலங்கோலமாக வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் கூனிக்குறுக வைத்திருக்கிறது சிங்கள அரசு'' என்றார் வேதனையோடு.

Thursday, December 17, 2009

யாழிலிருந்து சகல வாகனங்களும் கட்டுப்பாடுகள் இன்றி ஏ-9 பாதையால் பயணிக்க அனுமதி: யாழ்.அரச அதிபர்

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஏ-9 பாதை போக்குவரத்துச் சம்பந்தமாகப் பின்வரும் ஏற்பாடுகள் இன்று முதல் (18.12.2009) நடைமுறைக்கு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

1. ஏ-9 பாதையூடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தனியார் வாகனங்கள் உட்பட சகல வாகனங்களும் காலை 6.00 மணியில் இருந்து பிற்பகல்; 4.00 மணிவரை கட்டுப்பாடுகள் இன்றி பயணத்தை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2. வவுனியா மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் காலை 6.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை கட்டுப்பாடுகள் இன்றி யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

3. யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் சகல பொதுப் பேருந்துகளும் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும் சகல தனியார் பேருந்துகளும் யாழ்.தனியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் தொடரணி சேவை இன்றி பஸ்களில் பயணிகள் ஏற்றப்பட்ட உடன் நேரடியாக ஏ-9 பாதையூடாக வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கலாம்.

இவ் வீதியால் பயணிக்கும் வாகனங்கள் தேவைக்கு ஏற்ப இடைக்கிடை இராணுவத்தின் சோதனை நிலையங்களில் பரிசோதிக்கப்படும்.

இப்பாதையில் பயணத்தை மேற்கொள்ளும் சகல வாகன சாரதிகள், நடத்துநர்கள், உதவியாளர்கள், பயணிகள் யாவரும் இச் செயற்பாட்டிற்கு தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டப்படுகின்றனர். இத்தகவல் யாழ. மாவட்ட கட்டளைத்தளபதியினால் நேற்று மாலை (17.12.2009) யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்ட

Wednesday, December 16, 2009

இலங்கை அரசின் துரோகமும் வஞ்சகமும்

விடுதலைப்புலிகள்


துரோகமும் வஞ்சகமும் வெகுசீக்கிரமே வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பார்கள். அதுவும், சேர்ந்து சதி செய்தவர்களுக்குள் சண்டை ஆரம்பித்துவிட்டால் இன்னும் வேகமாகவே வெளிவரும். அதிகாரப் பங்கீட்டு ஆசையில், மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் சரத் ஃபொன்சேகாவுக்கும் ஏற்பட்ட மோதலில், பல்வேறு ரகசியங்களைத் தினமும் வெளியிடுகிறார் சரத் ஃபொன்சேகா. 'நான் ராணுவப் புரட்சி செய்யப்போவதாகச் சந்தேகப்பட்டு, இந்தியாவின் உதவியை மகிந்தா கேட்டார். இந்தியக் கடற்படை நமது எல்லையில் அக்டோபர் 15-ம் தேதி காத்திருந்தது' என்பது சரத் வீசிய முதலாவது அஸ்திரம். உடனே, அதிர்ச்சியில் அதிர்ந்த இந்தியா, 'அப்படி எதுவும் நடக்கவில்லை' என்று மறுத்தது. அடித்துப் புரண்டு கொழும்புக்கு ஓடினார் அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

இப்போது இரண்டாவது அஸ்திரத்தை வீசியிருக்கிறார் சரத். மனசாட்சியுள்ள அனைவர் மனதையும் திடுக்கிடவைக்கும் கோரக் கொலையாக நடந்த சம்பவம் அது. புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த நடேசன், சமாதானச் செயலர் புலித்தேவன், முக்கியத் தளபதி ரமேஷ் ஆகிய மூன்று பேருடன் அவர்கள் குடும்பத்தினரும் இணைந்து வெள்ளைக் கொடியைக் கையில் தாங்கிச் சரணடைவதற்காக நடந்து வரும்போது நாலாபுறமும் இருந்து பாய்ந்து வந்த அலுமினியக் குண்டுகள் அவர்களைச் சல்லடையாகக் துளைத்தெறிந்த சம்பவம், சமீபகாலச் சரித்திரத்தில் வேறு எங்கும் நடக்காத துரோகக் கதை. வெள்ளைக் கொடியில் ரத்தச் சிதறல்கள் விழுந்ததை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்தன. மனித உரிமை அமைப்புகள் இதைக் கண்டித்தன. 'அவர்கள் சமாதானத்துக்காக வரவில்லை' என்று சிங்கள அதிகாரிகள் மறுத்தார்கள். இன்று அரசியலில் குதித்து, 'அடுத்த ஜனாதிபதி நான்தான்' என்ற கனவில் மிதந்துகொண்டு இருக்கும் சரத் ஃபொன்சேகா, இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார். "நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூன்று பேரும் நார்வே மற்றும் வெளிநாட்டுத் தரப்புகள் மூலமாகச் சரணடையப் போவதை ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்ஷேவுக்குச் சொன்னார்கள். இந்தத் தகவலை கோத்தபய ராஜபக்ஷேவுக்கு பசில் சொல்லியிருக்கிறார். அதன்படி வெள்ளைக் கொடியும் வெள்ளை ஆடையும் அணிந்து இவர்கள் மே 17-ம் தேதி அதிகாலை சரணடையலாம் என்று சொல்லப்பட்டது. அப்போது 58-வது படையணித் தளபதியான சவேந்திர சில்வாவுக்கு கோத்தபய ராஜபக்ஷே ஓர் உத்தரவு போட்டார். 'யாரும் சரணடையக் கூடாது. அனைவரையும் சுட்டுக் கொல்லுங்கள்' என்று சொல்லியிருக்கிறார். அதன்படி அனைவரும் கொல்லப்பட்டார்கள்"- இதுதான் சரத் விவரிக்கும் செய்தி. இலங்கையின் போர்க் குற்றத்துக்கு இதைவிட முக்கியமான ஆதாரம் வேறு தேவையில்லை. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. 'நான் அப்படிச் சொல்லவே இல்லை!' என்று மறுத்திருக்கிறார் ஃபொன்சேகா.

இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவருக்குமே உள்காய்ச்சல் ஆரம்பித்திருக்கிறது. இதுபற்றி சிங்கள ராணுவத்தின் தளபதிகள் கருத்துச் சொல்ல மறுத்துள்ளார்கள். 58-வது படையணித் தளபதி சவேந்திர சில்வாவும் கருத்துச் சொல்ல மறுத்துள்ளார். 'புலிகள் சரணைடையப் போகும் தகவலை எனக்குத் தொலைபேசி மூலம் சொல்லியிருந்தார்கள்!' என்கிறார் நார்வே சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சோல்கிம். "நார்வேயிடம் இருந்து புலிகள் சரணடைவது தொடர்பாக எந்தத் தகவலையும் நான் பெறவில்லை!" என்று பசில் ராஜபக்ஷே மறுத்திருக்கிறார். இப்படி வெள்ளைக் கொடியுடன் வந்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது உலக சமுதாயத்தின் முன் மறைக்கப்படுகிறது. ஆனால், அந்தக் கொலைக்கு முக்கியமான சாட்சியாக 'சண்டே டைம்ஸ்' செய்தியாளர் மேரி கெல்வின் இருக்கிறார். உண்மையில் அன்று நடந்தது என்ன என்பதை அவர் உலகத்தின் முன்னால் சொல்லிவிட்டார்.

"இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் கடைசியாக புலிகள் நிலைகொண்டு இருந்த மிகச் சிறிய காட்டுப் பகுதியில் இருந்து மே 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் எனக்கு சேட்டிலைட் போனில் அழைப்பு வந்தது. இயந்திரத் துப்பாக்கி சத்தங்களைப் பின்புறத்தில் என்னால் கேட்க முடிந்தது. எட்டு வருடங்களுக்கு முன்பே எனக்கு நடேசன், புலித்தேவனைத் தெரியும். அவர்களும் ஏனைய 300 போராளிகளும் அவர்களது குடும்பங்களும் தங்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சியாக என்னிடம் பேசினார்கள். 'ஆயுதங்களைக் கீழே போட நாங்கள் தயார். எங்களது பாதுகாப்புக்கு அமெரிக்கா அல்லது பிரிட்டன் உத்தரவாதம் தர வேண்டும். தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை முன் வைக்க வேண்டும் ஆகிய மூன்று நிபந்தனைகளுடன் சரணடையத் தயார்' என்று நடேசன் என்னிடம் சொன்னார்.

அமெரிக்கா, பிரிட்டன் அதிகாரிகளிடம் பேசிய நான், அப்போது கொழும்பில் இருந்த ஐ.நா. சிறப்புத் தூதுவர் விஜய் நம்பியாரிடம் பேசினேன். அவர் இந்தத் தகவலை இலங்கை அரசுக்குச் சொல்வதாகச் சொன்னார். இது நடேசனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பதுங்கு குழிக்குள் சிரித்தபடி தாங்கள் இருக்கும் படத்தை எடுத்து புலித்தேவன் எனக்கு அனுப்பிவைத்தார். அதன்பிறகு எந்தத் தகவலும் இல்லை. அதிகாலை ஆகிவிட்டது. 'புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள்' என்று நம்பியாரிடம் மீண்டும் சொன்னேன். 'நான் ஜனாதிபதியிடம் பேசிவிட்டேன். வெள்ளைக் கொடியைப் பிடித்தபடி அவர்கள் வந்தால் போதும்' என்று நம்பியார் என்னிடம் சொன்னார். லண்டனில் இருந்து நடேசனுக்கு போன் கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்து அவருக்கு சொல்லச் சொன்னேன். அவர்களாலும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால், அதற்குள் அங்கு எல்லாம் நடந்து முடிந்து விட்டது. அன்று மாலை அவர்களது உடல்களைத் தான் டி.வி-யில் பார்த்தேன்.

இதற்கிடையில் இலங்கை எம்.பி. ஒருவரை நடேசன் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அவர் ஜனாதிபதிக்குப் பேசியிருக்கிறார். சரணடைந் தால் முழு பாதுகாப்புடன் நடத்தப்படுவார்கள் என்று அவரும் சொல்லியிருக்கிறார். அதன்படி நம்பிக்கையுடன் நடந்து போயிருக்கிறார் நடேசன். ஆனால், 6.20 மணிக்கு அனைத்தும் முடிந்தது. சில பயங்கரவாத நடவடிக்கைகளால் புலிகளைச் சர்வதேச நாடுகள் தடை செய்திருந்தாலும், நடேசனும் புலித்தேவனும் தமிழர் உரிமைப் பிரச்னைக்கு ஓர் அரசியல் தீர்வையே விரும்பியிருந்தார்கள். அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் தமிழர்களுக்கு நம்பிக்கையான அரசியல் தலைவராகி இருப்பார்கள்!" என்று சொல்லியிருக்கிறார் மேரி கெல்வின்.

நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் சுமார் 300 பேர் சரணடைய வந்திருக்கிறார்கள். இவர்களைப் பார்த்ததும் ராணுவம் சுட ஆரம்பித்தது. இதில் நான்கைந்து பேர் மட்டுமே தப்பிக்க முடிந்ததாம். நடேசனின் மனைவி ஒரு சிங்களப் பெண்மணி. ராணுவம் சுட்டதைப் பார்த்த அவர், சிங்களத்தில் கத்தியிருக்கிறார். "நடேசன் சரணடைய வருகிறார். அவரை ஏன் சுடுகிறாய்?" என்று கேட்டிருக்கிறார். அந்த நொடியில் பறந்து வந்த குண்டு அவரையும் பலி வாங்கியது. புலிகளிடம் ஆறு சிங்கள் ராணுவ வீரர்கள் பணயக் கைதிகளாக ஐந்து ஆண்டுகளாக இருந்தார்கள்.இனி தப்பிக்க வழியில்லை என்று தெரிந்ததும் மே 15-ம் தேதி அதிகாலையில் அந்த ஆறு பேரையும் அனுப்பிவைத்தார்கள் புலிகள். ஆனால், நடேசனின் மனைவி சிங்களப் பெண்மணி என்று தெரிந்தே கொன்றது ராணுவம். "இந்த அரக்கத்தனத்தில் தனக்குப் பங்கு இல்லை. மேலும், கடைசி மூன்று நாட்கள் நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது" என்கிறார் ஃபொன்சேகா. அப்படியானால், மூன்று நாட்கள் நடந்தவை உலகத்தின் முன்னால் நிரூபிக்கத்தக்க போர்க்குற்றங்களாக இருப்பதால், அவர் தப்பிக்க முயற்சிக்கிறார்.

இந்தியாவின் மிக முக்கியமான மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல்-லின் தமிழகப் பொறுப்பாளராக இருக்கும் வழக்கறிஞர் சுரேஷ், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணங்களைச் சேகரித்து, உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுசேர்க்கும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார். "வெள்ளைக் கொடியோடு சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றார்கள் என்று நாங்கள் சொன்னபோது நம்ப மறுத்தார்கள். ஆனால், இன்று சரத் ஃபொன்சேகாவே ஒப்புக்கொண்டுவிட்டார். மகிந்தாவுக்கும் ஃபொன்சேகாவுக்கும் நடக்கும் உள்சண்டையால் இது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமை அறிக்கைப்படியும் ஜெனிவா வார் கன்வென்ஷன்படியும் நடேசன் உள்ளிட்ட சரண் அடைந்த புலிகள் கொல்லப்பட்டது மாபெரும் குற்றம். போர்ச் சூழலில் தொடர்புடைய எதிர்த்தரப்பினர் சரணடையும்போது அவர்களது உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் உண்டு. அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று இருக்கிறது. நடேசனுடன் அப்பாவிப் பொதுமக்களும் பெண்களும் போயிருக்கிறார்கள். அவர்களும் சுடப் பட்டுள்ளார்கள். எனவே, இவை அப்பட்டமான மனித உரிமை மீறல். போர்க்குற்றம்தான். அடுத்த மாதம் ஐரோப்பிய நாடுகளில் நடக்க இருக்கும் கூட்டத்தில் இதைப் பதிவு செய்வேன்!" என்று சொல்கிறார் சுரேஷ்.

இலங்கைத் தேர்தல் முடிவதற்கு முன் இன்னும் எத்தனை கோரங்கள் வெளியில் வந்து உலகை உலுக்கப்போகின்றவோ?! அப்போதும்கூட உலக நாடுகளிடம் மயான அமைதிதான் நிலவுமோ என்னவோ?!

Tuesday, December 15, 2009

இறுதிக்கட்டப் போர் ரகசியங்கள்
ஒட்டிக் கிடந்தவர்கள் முட்டிக் கொள்வதன் விளைவாக, விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் ரகசியங்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனச் சொல்லி, அதற்கான சூழலையும் விளக்கி வந்தது ஜூ.வி.! இதோ அரசியலில் குதித்திருக்கும் ஃபொன்சேகா, தன் முன்னாள் நண்பர் ராஜபக்ஷேவுக்கு எதிராகத் திருவாய் மலரத் தொடங்கிவிட்டார்!

இது வரை தமிழ் உணர்வாளர்கள் கூறி வந்த குற்றச்சாட்டுகளை, கூட்டுக் கொடுமை நடத்தியவர்களில் ஒருவரான ஃபொன்சேகாவே சொல்லியிருப்பதுதான் இதில் விசேஷம்!

கடந்த 11-ம் தேதி கட்டுப்பணம் (வேட்பாளர் டெபாசிட்) செலுத்திய ஃபொன்சேகா, உடனே ஐ.தே.முன்னணி தலைவர்களுடன் பிரசார வியூகம் பற்றி விவாதிக்கத் தொடங்கி விட்டார். அதில், 'எப்படியும் சிங்கள வாக்குகள் பாதி நமக்கு வந்து விடும். தமிழ் மக்களின் வாக்குகளைக் குறிவைப்போம். அதன்படி, இறுதிக்கட்ட யுத்த விவகாரங்களை வைத்து அரசியல்நடத்துவது தான் தோதான அணுகுமுறையாக இருக்கும்!' என முடிவெடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், கொழும்புவில் இருக்கும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் நம்மிடம் சில விஷயங்களை முன்வைத்தனர்.

''போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன், சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன், ராணுவ அதிரடிப் படைப்பிரிவு தளபதி ரமேஷ் ஆகியோர் ராணுவத்திடம் சரணடைவதற்காக செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாகவும், நார்வே தூதுவர் எரிக் சோல்கிம்

மூலமாகவும் சில முயற்சிகளை மேற்கொண்டது உண்மைதான். மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவியான அடேலின் தோழியும், புலிகள் இயக்கத்துக்கு சில காலம் சர்வதேசத் தொடர்புகளின் மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டவருமான கெவின் என்பவரும் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். இதில் எரிக், அதிபரின் ஆலோசகரான பசிலிடம் பேசிய பிறகு, பசில் போய் அதிபரிடம் பேசினார். கிட்டத்தட்ட 10,000 புலிகள் ராணுவத்திடம் சரணடையும் பட்சத்தில், அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதாக அதிபரும் அனுமதியளித்தார். இதன்படிதான், 58-வது படையணியின் தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வாவிடம் இவர்கள் அனைவரும் சரணடைய வேண்டும் என உத்தரவு வந்திருக்கிறது.

மே 17-ம் தேதி அதிகாலை வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் வெள்ளையுடை அணிந்து, வெள்ளைக் கொடிகளைத் தாங்கியவாறு அவர்கள் வெளியில் வந்தனர். இந்த நேரத்தில் இந்த விஷயம் கோத்தபயவுக்கு தெரியவும், சவேந்திர சில்வாவை அழைத்து எல்லோரையும் சுட்டுக் கொல்லும்படி அவர்தான் உத்தரவிட்டி ருக்கிறார். அதன்படியே, அத்தனை பேரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது, இதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வேலையில் இறங்கியுள்ளார் ஃபொன்சேகா. ராணுவத் தளபதியான தான், அப்போது களத்தில் இல்லை என்பதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்!'' என்றார்கள்.

ஃபொன்சேகாவின் இந்த அதிரடியைத் தொடர்ந்து மீடியாக்களை சந்தித்திருக்கிறார் அமைச்சர் மகிந்தா சமரசிங்கே. ''ஃபொன்சேகா தேசத்துரோகி ஆகி விட்டார். போரின்போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த யாரையும் ராணுவம் கொல்லவில்லை என கடந்த ஜூலை 10-ம் தேதி ஃபொன்சேகாவே ஓர் அறிக்கையில் கூறியிருந்தார். இப்போது முரண்பட்டு வேறு தகவலைச் சொல்வதால், மக்களுக்கு அவர் மீதான நம்பகத்தன்மை குறைவதுதான் நடக்கும்!'' என பாய்ந்திருக்கிறார்.

இலங்கை அரசு தரப்பின் கிடுகிடுப்பை ரசித்தபடி இருக்கும் 'புதிய அரசியல்வாதி' ஃபொன்சேகா, அடுத்தடுத்து மேலும் சில பிரசார குண்டுகளை போடவும் தயாராக இருக்கிறாராம். இது தொடர்பாக ஐ.தே.க-வின் எம்.பி-க்கள் சிலரிடம் பேசினோ
''ஃபொன்சேகா, சாதாரணமான ஒரு விஷயத்தைத் தான் முதல்ல சொல்லியிருக்காரு. அடுத்து, கடற்படை தளபதி சூசையின் மனைவி குடும்பத்துடன் கைது செய்யப்பட்டபோது நடந்த விஷயங்கள், 57-வது படைப்பிரிவு தலைமையகத்தில் வைத்து பொட்டு அம்மானின் குடும்பத்துக்கு நிகழ்ந்த கொடூரம், புலிகளின் முக்கியக் கட்டளைத் தளபதிகள் 67 பேர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமை, தற்போது ஃபோர்த் ஃப்ளோரில் பாலகுமாரன் உள்ளிட்ட புலிகளின் அரசியல்பிரிவு தலைவர்கள் அனுபவிக்கும் துயரங்கள், மாணிக் ஃபார்ம் முகாமில் ஒரே நேரத்தில் 500 இளம் தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பயங்கரம், பிரபாகரனுக்கு இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்... இப்படி வரிசையாக யுத்த ரகசியங்களை வகைப்படுத்தி வைத்திருக்கிறார் ஃபொன்சேகா. இவை தொடர்பான ஒலி நாடாக்களும், சிங்கள ராணுவத்தினரின் செல்போன் பதிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட சி.டி-க்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இது தவிர, எந்தக் குற்றமும் செய்யாத, பாவமும் அறியாத அப்பாவித் தமிழர்கள் 2 லட்சம் பேரை போரில் கொல்ல வேண்டிய நெருக்கடி ஏன் வந்தது? அந்த உத்தரவைக் கொடுத்தது யார்? இந்தக் கேள்விகளுக்கும் ஃபொன்சேகா சில தெளிவுகளை ஏற்படுத்துவார்! நடந்த விஷயங்களில் சிலவற்றுக்குத் தானும் பொறுப்பேற்று, அதற்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவும் அவர் தயாராகி வருகிறார்!'' என்கிறார்கள். ஃபொன்சேகா சொல்வதை தமிழ் மக்கள் அப்படியே நம்புவார்களா, தெரியாது! ஆனால், மோதிக் கொள்ளும் இரண்டு பெருந்தலைகளும் மாறி மாறி உண்மைகளை வெளியிடும்போது, ஈழத்துக் கொடுமை குறித்து இன்னும் பல வயிற்றெரிச்சலான காட்சிகள் நம்முன் விரியும். தாங்கிக் கொள்ளத் தயாராவோம்!

தமிழீழ தேசிய தலைவரின் மகள் துவாரகாவின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளனதமிழீழ தேசிய தலைவரின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜ.நா வின் பிரதிநிதிகள் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக விடுதலைப் புலிகளுக்கு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்றுள்ளனர். பார்ப்பவர் இரத்தம் உறையும் வகையில் இக்கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிறிதொரு இடத்தில் இவ்வாறான சூழ்ச்சி சதிவலை காரணமாக பாலச்சந்திரன் உட்பட, துவாரகாவையும் இலங்கை இராணுவத்தினர் கொடூரமாக கொலைசெய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. துவாரகா என நம்பப்படும் இந்த உடல் நிர்வாணமாக்கப்பட்டு உள்ளதால், இப்புகைப்படதை நாம் முழுமையாக வெளியிட முடியவில்லை. சர்வதேசத்தின் சதிவலையில், சிக்கி இறுதிநேரத்தில் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தற்போது அஞ்சப்படுகிறது. இதில் இந்தியா பெரும் பங்கு வகித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வளவு நாள் கழித்து ஏன் தற்போது இந்தப் படம் வெளிவரவேண்டும் என்ற சந்தேகங்கள் மேலோங்கியுள்ளன. குறிப்பாக தமிழர்களைக் கவர சரத் பொன்சேகா தற்போது புலிகளின் தலைவர்களைச் சுடச்சொன்னது கோத்தபாய தான் என்று கூறிக் கொள்கிறார். தம்மிடம் தவறு இல்லை என்பது போன்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்த முயல்கிறார். இன் நிலையில் சிங்கள இராணுவத்தினரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியதாகக் கூறப்படு சில படங்களையும், மற்றும் வீடியோக்கள் சிலவற்றையும், சிலர் கசிய விட்டுள்ளனர் என்பதே உண்மை.

இதுபோல பல வீடியோக்கள் இலங்கை இராணுவத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது அறியப்படுகிறது. அனைத்தும் போர்க்களத்தில் இறுதி நாட்களில் எடுக்கப்படவை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது உண்மையிலேயே துவாரகாவின் படமா என்பதை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை, அவருடைய மூக்கு மற்றும் புருவம் போன்ற உருவ அடையாளங்கள் சில ஒத்துப்போவதையே இந்த உடலம் காட்டி நிற்கிறது. துவாரகா என்று கூறப்படும் இவ் உடலம் நிர்வாணமாக்கப்பட்டு, கொலைசெய்யபட்டுள்ளமையானது ஒரு ரத்தவெறிபிடித்த சிங்கள காடையரின் மனப்போக்கை நமக்கு உணர்த்தி நிற்கிறது. தமிழ்ப் பெண்களை நிர்வானப்படுத்தி அவர்களை மானபங்கப்படுத்தி சிங்கள இனம் காட்டும் குரோதம் சொல்லில் அடங்காதவை, வார்த்தையால் விவரிக்க முடியாத கொடுமை.

சரணடைய வந்தவர்களை ஈவு இரக்கமின்றி கொலைசெய்யும் சிங்கள வெறியர்களுடனா நாம் இனியும் சமஷ்டி தீர்வு என்றும், ஒன்றுபட்ட இலங்கையில் வாழ்வோம் என்றும் நினைக்க முடியும் ? ரத்தம் உறைகிறதா நாம் தமிழனாகப் பிறந்து பட்ட துன்பங்களை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறோமா ? பிரிவுகளிலும் பிளவுகளிலும் ஊறி நிற்கிறோமே அன்றி ஒற்றுமையாக , சிங்களவனை எதிர்க்க இன்னும் தயாரில்லை, இன்னும் எத்தனை எத்தனை எம்குலப் பெண்களின் , சிறுவர்களின் இளைஞர்களின் உடலங்களைப் படமாகக் காட்டப் போகிறதோ சிங்களம்,

இன்று இந்த நாள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள் ! தமிழனாக நாம் பிறந்ததால் பட்ட கஷ்டங்கள் போதும், தடைகளை உடைத்து தமிழீழம் காண நாம் ஒன்றுபட்டு செயப்படுவோம் என்று, புலம் பெயர் நாட்டில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தமது பிள்ளைகளுக்கு எமது போராட்டம் பற்றிய வரலாற்றை சொல்லி வளர்க்கவேண்டும், புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் கல்வி நிலையங்களிலும் வரலாற்றுப் பாடம் புகட்டப்படவேண்டும், அதில் எமது போராட்ட வரலாறு கற்பிக்கப்படவேண்டும், இன்று நாம் இல்லையேல் எமது பிள்ளைகள் தமிழீழ போராட்டத்தைக் கொண்டுசெல்லவேண்டும் ! இன்று தொடக்கம் 50 ஆண்டுகள் ஆனாலும் சரி போராட்டம் ஒன்று புதிதாக ஆரம்பமாகவேண்டும் ! அதுவே நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியாகும்.

Saturday, December 12, 2009

'ராஜபக்ஷே தலையில் இடிவிழ...!'
இலங்கை அதிபர் ராஜபக் ஷேயின் அதிபர் நாற் காலிக்கு வேட்டு வைக்க, அங்கே அதிரடித் திட்டங்களை அரங்கேற்றி வருகிறார் முன்னாள் தளபதி ஃபொன்சேகா. இதற்கிடையில், ராஜபக்ஷேயின் தலையில் 'இடிவிழ வேண்டி'(!)... ராமேஸ்வரத்தில் யாகம் நடத்தத் தயாராகி வருகிறது இந்து மக்கள் கட்சி!

டிசம்பர் 13-ம் தேதியன்று ஏற்பாடாகி இருக்கும்இந்த யாக நிகழ்ச்சியில்... பழ.நெடு மாறன், ம.நடராஜன், மதுரை ஆதீனம், இலங்கை எம்.பி- யான சிவாஜிலிங்கம், ம.தி.மு.க-வின் அரசியல் ஆய்வுமைய செயலாளர் செந்தில் அதிபன், பெங்க ளூரு ராம்சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் சிறகடிப்பதால், பரபரப்பாகிக் கிடக்கிறது ராமேஸ்வரம்.

இந்த வினோத வேள்வி குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் சரவண னிடம் பேசினோம். ''உலகம் முழுவதும் நடந்த அறப்போராட்டங்களால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடுமை களை தடுக்க முடியவில்லை. ராஜபக்ஷேயின்இனவெறி யால் இலங்கையில்

ஆயிரக்கணக் கான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படித்தான் புராண காலத்தில் புத்தநந்தி என்பவர் தலைமையில் புத்த குருமார்கள் ஒன்று கூடி திருஞானசம்பந்தரை கொலை செய்யத் திட்டமிட்டனர். அவர் களின் தலையில் இடிவிழ வேண்டும் என, ஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தை சம்பந்தர் சரணாலயர் இறைவன் முன் பாடினார். அந்த வேண்டுதல் பலித்து, தப்பெண்ணம் கொண்டிருந்த புத்த குருமார்களின் தலையில் இடி விழுந்து அவர்களை அழித்தது. அதுபோல இலங்கை தமிழர்களின் உயிர்பலிக்குக் காரணமான ராஜபக்ஷேயின் தலையில் இடிவிழ வலியுறுத்தி 'தமிழ் திருமுறை ஞானவேள்வி' நடத்துகிறோம். பிறகு, இலங்கையில் அல்லல்படும் தமிழர்களின் நலனுக்காகவும், அங்கு தனித்தமிழ் ஈழம் மலர வேண்டியும் ராமநாதசுவாமிக்கு புனிதநீர் அபிஷேகம் செய்து இறைவனை இறைஞ்சுகிறோம். இதில் தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள் பலரும், தமிழ்ப்பற்று கொண்ட சான்றோர்களும் பங்கேற்கின்றனர். முழுக்க முழுக்கத் தமிழிலேயே நடக்க இருக்கும் இந்த வேள்வியை முடக்க போலீஸ் ஏக கெடுபிடிகளை செய்கிறது. அவற்றையெல்லாம் எதிர்கொண்டு திட்டமிட்டபடி வேள்வியை நடத்தியே தீருவோம்!'' என்றார்.

சமீபத்தில் இலங்கை அரசின் ஏற்பாட்டின் பேரில் அங்குள்ள கோயில் பூசாரிகளுக்கு வழிபாட்டுப் பயிற்சி அளித்துவிட்டு வந்திருக்கும் பஷி சிவராஜனிடம் பேசினோம். ''இந்து மதத்தில் வேதம், ஆகமம், தாந்திரிகம், பௌராணிகம் ஆகிய நான்கு முறைகளில் இறைவனை வழிபடலாம். அதனடிப்படையில் பௌராணிக முறைப்படி நடக்க இருக்கும் இந்த வேள்விக்கு, இறைவன் நல்ல பலன் தருவார். மக்கள் ஒன்றுகூடி மனமுருகி இறைவனுக்கு விடுக்கும் வேண்டுதலின் பலனாக இலங்கையில் தமிழர்கள் சிங்களர்களுக்கு இணையாக வாழ வழி பிறக்கும். ஆனால், தனிப்பட்ட ஒரு மனிதரின் அழிவுக்காக இந்த வேள்வியை பயன்படுத்தாமல் இருந்தால் இன்னும் சிறப்பு பெறும்!'' என்றார்.

தமிழ் திருமுறை ஞானவேள்வி குறித்து மதுரை ஆதீனத்திடம் பேசினோம். ''இலங்கை தமிழர்களின் சுபிட்சத்துக்காக இந்து மக்கள் கட்சியினரால் நடத்தப்படும் வேள்வியில் நானும் பங்கேற்க உள்ளேன். ஆனால், ராஜபக்ஷே அழிய வேண்டும் என்ற வேண்டுதலில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. ஓர் உயிரை பறித்துத்தான் மற்றவர் வாழ வேண்டும் என்பதில் நான் ஏற்புடையவன் அல்ல. எனவே, இலங்கைத் தமிழர்கள் இன்னல்கள் தீர்ந்து இன்புற வாழவேண்டும் என்பதையே இந்த வேள்வியின் மூலம் இறைவனிடம் வேண்டுவேன்!'' என்றார்.

Wednesday, December 9, 2009

மாட்டிக்கிட்ட ஃபொன்சேகா மருமகன்!


சிங்கள ராணுவத்தின் ஹீரோ நானே!'' என்ற அறைகூவலோடு சேர்த்து, ''ராஜபக்ஷே கொடுக்கிற வாக்குறுதிகளைவிட அதிகப்படியான நன்மைகளை தமிழ் மக்களுக்கு செய்து காட்டுவேன்!'' என்று சொல்லி, தேர்தல் பிரசாரத்தை அட்வான்ஸாகவே தொடங்கிவிட்ட சரத் ஃபொன்சேகாவுக்கு... கெட்ட காலமும் கூடவே தொடங்கி விட்டது!

அவருடைய மருமகன் தனுனா திலகரத்னே இப்போது அமெரிக்க போலீஸின் பிடியில். கப்பென்று அவரைக் கைது செய்திருக்கும் அமெரிக்க அதிகாரிகள், பகீர் ஆயுத வியாபாரக் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தியிருக்கிறார்கள்!

தனுனா திலகரத்னே அமெரிக்காவில் இருந்தபடியே இலங்கை ராணுவத்துக்கு ஆயுத சப்ளை செய்கிறார் என்பது கடந்த சில மாதங்களாக இலங்கைப் பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்த கசப்பான குற்றச்சாட்டு. ''மாமனார் ராணுவத் தளபதி. மருமகன் ஆயுத சப்ளையர். இலங்கை ராணுவத் தரப்பிலிருந்து பறக்கிற ஒவ்வொரு தோட்டா விலிருந்தும், ஷெல்லில் இருந்தும் தளபதியின் மருமகன் லாபமாக அள்ளிக் குவிக்கிறார். தனுனா திலகரத்னே வாட கைக்கு

எடுத்திருந்த கொழும்பு ஃபிளாட்டில் தற்போது தங்கி யிருப்பது அவருடைய ஆயுத ஏஜென்ட்டான அகமது நிசார்!'' என்று கூறி வந்தனர் சில பத்திரிகையாளர்கள். ''உயிரை அர்ப்பணித்து நாட்டுக்காக நாம் ஆயுதம் ஏந்திக் கொண்டிருக்க, தளபதியின் மருமகன் நோகாமல் அதைக் காசாக்குகிறாரா?'' என்ற குமுறல் சிங்கள ராணுவத்தினர் மத்தியில் பரவலாக இருந்து வந்ததாம்.

''அகமது நிசார் போல ராணுவ பேரத்துக்கான ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு ஏஜென்ட்களை தனுனா திலகரத்னே வைத்திருக்கிறார்.. சிங்கள ராணுவததின் விங் கமாண்டர் ஒருவருடன் கூட்டு சேர்ந்து உக்ரைனிலிருந்து விமானம் வாங்கியது, ராணுவ உடுப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை சீனாவிலிருந்து வாங்கியது என்று கமிஷன் பேரம் விளையாடியிருக்கிறது!'' என்றும் ராணுவத்தின் மத்தியில் ஒரு பேச்சு இருந்ததாம். அதெல்லாம், தனுனா கைதான நிலையில் இப்போது வெளிப்படையான விவாதமாக அங்கே அரங்கேற ஆரம்பித்திருக்கிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் புள்ளியின் தொடர்புகளும் வெளி வரலாம் என்று கூறப்படுகிறது.

''சிங்கள ராணுவ வீரர்களுக்கான உணவு சப்ளை கான்ட்ராக்டிலும் பலே ஊழல்கள் நடந்திருக்கின்றன. மோசமான பாக்கெட் உணவை மலேஷியத் தமிழர் ஒருவர் மூலமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய் ததில் பல கோடிகள் விளையாடியிருக்கிறது. அந்த உணவை சாப்பிட்டு செரிமானம் இல்லாமல் நம் வீரர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, அதை சப்ளை செய்த ஏஜென்ட்கள் ஐரோப்பிய உயர்தட்டு ஹோட்டல்களில் ஷாம்பெயின் குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர்!'' என்று ராணுவ வீரர்கள் மத்தியில் கொதிப்பான ஒரு கடிதமும் சில காலத்துக்கு முன் சுற்றில் விடப்பட்டிருந்ததாம்.

''வாங்கிய ஷெல்களில் கால்வாசி வெடிக்காமலே போனது. இதனால், விடுதலைப் புலிகள் தாக்கியபோது பதிலடி கொடுக்கத் தவறி அநியாயமாக நமது வீரர்கள் பலர் உயிரைவிட்டிருக்கிறார்கள்!'' என்று இப்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள் ராணுவத்துக்குள்.

சரத் ஃபொன்சேகாவின் மகள் அப்ஸராவின் கணவர்தான் இந்த தனுனா திலகரத்னே. ஒக்லஹாமா மாநிலத்தில் எட்மன்டு என்ற நகரில் 'ஐ-கார்ப் இன்டர் நேஷனல்' என்ற கம்பெனி நடத்தும் இவர், 'கம்ப்யூட்டர் தொடர்பான பாகங்களை விற்கும் கம்பெனி' என்று போலியாக அரசு அனுமதி பெற்று, கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துவந்தார் என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு!

இதுபற்றி விஷயம் அறிந்தவர்கள், விளக்கமாக சில தகவல்களைக் கூறினர் -

''அமெரிக்காவில் 'ஹெச்-1 பி' எனும் வேலை விசாவில்தான் இருக்கிறார் தனுனா திலகரத்னே. தன் பார்ட்னர் குவிண்டா குணரத்னேவின் கையெழுத்தை ஃபோர்ஜரி செய்து, அவரையே தன் புது கம்பெனியின் தலைவராக 'நியமித்து' மோசடி செய்துள்ளார். மேலும், தனுனா வேலை விசாவைப் பெறுவதற்காக, போலியாக ஒரு கம்பெனியை உருவாக்கி அதைக் காட்டியே விசா பெற்றார் என்பதும் தெரியவந்துள்ளது.

டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஃபிளவர் மவுன்ட் நகரில் 'பிரிட்டிஷ் போர்னியோ டிஃபன்ஸ்' என்ற நிறுவனத்தையும் துவக்கி, மெக்ஸிகோ வழியாக இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பியிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து ஆயுத சப்ளை செய்ய பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதை முழுக் குடியுரிமை பெற்ற அமெரிக்கர்கள்தான் செய்ய முடியும். இவரோ வேலைக்கான விசாவில் வந்துவிட்டு, ஆயுத விற்பனை நடத்தியிருக்கிறார்!'' என்கிறார்கள். ''தனுனா திலகரத்னேவின் ஏஜென்ட்டான அகமத் நிசார் மூலம் பெற்ற வெடிகுண்டுகளில் 40 சதவிகிதம் வெத்துவேட்டு!'' என்று இலங்கையின் 58-வது பிரிவு பிரிகேடியர் சூரஜ் பன்சாஜியா மற்றும் பிரிகேடியர் சிவேந்திரா சில்லா ஆகியோர் அதிபர் ராஜபக்ஷேயிடம் புகார் கூறியுள்ளதும் இப்போது கவனிக்கத் தக்கது!

தனுனாவின் பாகிஸ்தான் தொடர்புகளைத் துருவும் அமெரிக்க அரசு, இவருக்கு அல்கொய்தா மற்றும் தாலிபன்கள் தொடர்புண்டா என்றும் ஆராய்வதாக ஒரு தகவல் கிளம்பி ஃபொன்சேகா வட்டாரத்துக்குப் புளியைக் கரைத்திருக்கிறது.

மருமகன் கதை இப்படி டாப் கியரில் போகிறது... மாமனார் ஃபொன்சேகாவோ அமெரிக்காவில் 'கிரீன் கார்டு' உள்ள, நிரந்தர தங்கும் உரிமை பெற்றவர்!

''ஃபொன்சேகாவின் மருமகன் என்ன செய்து வந்தார் என்பது அமெரிக்க அதிகாரிகளுக்கு இப்போதுதான் தெரிய வந்ததா என்ன? ராஜபக்ஷேவுக்கு எதிரான போர்க் குற்ற வாக்குமூலத்தை ஃபொன்சேகாவிடமிருந்து அழுத்தம் திருத்தமாகப் பெறுவதற்கும், இலங்கை தேர்தல் களத்தில் ராஜபக்ஷேவுக்கு எதிராக அவரை வெறியோடு சுழல வைப்பதற்காகவும்தான் மருமகன் விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறது அமெரிக்கா! மருமகன் சேர்த்த பணத்தை ஃபொன்சேகா உதவியோடு சுவிஸ் வங்கிக்கு மாற்றினார்களா என்ற கோணத்திலும் அடுத்த கட்ட விசாரணையைக் கொண்டு போகக்கூடும். அப்புறமென்ன... ஃபொன்சேகா முழுக்க முழுக்க அமெரிக்கா கீ கொடுக்கும் பொம்மையாக மாற வேண்டியதுதான்!'' என்கிறார்கள் அமெரிக்காவில் உள்ள விவரமான இலங்கைத் தமிழ்ப் புள்ளிகள்.

Tuesday, December 8, 2009

ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ நிவாரணக்கிராமங்களுக்கு இன்று விஜஜம்

ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ நிவாரணக்கிராமங்களுக்கு இன்று விஜஜம்,பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளே செல்வதற்கான அனுமதி அனைவருக்கும் மறுக்கப்பட்டுள்ளது.அருணாச்சலம் முகாமில் அனைத்து மக்களை சந்திக்கும் அவர் அங்கே தமிழில் மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.இதன் காரணமாக அனைத்து கிரவல் வீதிகள் அனைத்தும் தார் போட்டு செப்பனிடப்படுகின்றன.

Friday, November 27, 2009

MI 24 இரானுவ ஹெலிகொப்டர் வீழ்ந்து நொருங்கியது

லஇலங்க புத்தள் என்னுமிடத்தில் இன்று மதியம் 1.30 மணியளவில் இராணுவத்துக்கு சொந்தமான MI 24 ஹெலிகொப்டர் வீழ்ந்து நொருங்கியது.மேலதிக விபரம் தொடரும்

Wednesday, November 25, 2009

தமிழகமெங்கும் "பிரபாகரன் பல்லாண்டு வாழ்க" கட்அவுட்கள்


நாம் தமிழர் இயக்க சென்னை மாவட்ட பொறுப்பாளர் அதியமான் தலைமை வகிப்பார்.

அனைத்து தமிழ் உறவுகளும் தவறாமல் கலந்து கொண்டு நம் இனம் காத்த மாவீரர்கள் நினைவை போற்றுமாறு கேட்டுகொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் பிரபாகரனின் பிறந்த நாளையும், மாவீரர் தினத்தையும் கொண்டாடும் வகையில் தமிழகத்தில் தூத்துக்குடி நகர் முழுவதும் ’பிரபாகரன் பல்லாண்டு வாழ்க’ என்ற வாசகத்துடன் டிஜிட்டல் கட்அவுட்கள் மிகப் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளன.

'தலைவர்' தோன்ற மாட்டார்!நவம்பர் 27 மாவீரர் தினம்! வருடம் தவறாமல் விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் மட்டும் விமரிசையாக கொண்டாடும் இந்த தினத்தை, இம்முறை உலகெங்கும் கொண்டாடத் தயாராகியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். வரலாற்றில் புதிய பதிவாக அமையப் போகிற இந்த வருட மாவீரர் தினம் எத்தகைய திட்டங்களை ஈழ விடிவுக்காக விதைக்கப் போகிறது என கடந்த சில வாரங்களாகவே எதிர்பார்ப்பு பரவிக் கிடந்தது!

'தலைவர்' தோன்ற மாட்டார்!

நான்காம் கட்ட ஈழப் போரில் புலிகள் பெரி தாக வீழ்ச்சியடைந்து, 'பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்' என்று இன்னும்கூட ஒரு தரப்பினர் சொல்லிவரும் நிலையில்தான் மாவீரர் தினம் வருகிறது. பிரபாகரன், பொட்டு அம்மான், யோகி என்று மாவீரர் தின உரையை நிகழ்த்தப் போகும் புலித் தலைவர் பற்றிய யூகப் பட்டியலையும் ஆளுக்கொன்றாக பலர் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களோ இதனை வேறு விதமாகப் பார்க் கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் அவர்களில் சிலரிடத்தில் பேசினோம்.

''ஒவ்வொரு வருடமும் தாயகத்தில் மட்டுமே நடக்கும் மாவீரர் தின நிகழ்வுகள் இந்த வருடம் உலகம் முழுவதும் பல்வேறு தேசங்களிலும் கொண்டாடப்படுவதே புலிகளின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றிதான். இதற்கு காரணமே, மீண்டும் வலுவான ஆயுதப் போராட்டம் தலையெடுக்கும் என்று புலிகள் அறிவிக்காமல்

இருப்பதுதான். தற்போதைய சூழலிலும் அப்படியரு தோற்றத்தையே தொடர நினைக் கிறார்கள் புலிகள். அதனால் தற்போதும் உயிரோடிருக்கும் புலிகளின் முக்கியத் தளபதி கள் யாரானாலும், அவர்கள் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றே கருதவேண்டியுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எதிர்ப்படும் விளைவுகள் எப்படியிருக்கும் என முன் கூட்டியே கணித்த பிரபாகரன், சமர்க்கள ஆய்வு மைய இயக்குநராக இருந்த யோகியை அப்போதே ஓர் ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். எதிர்காலத்தில் தான் வெளிப்பட முடியாத ஒரு பின்னடைவு உண்டானா

லும்கூட, இயக்கத்தின் எதிர்காலக் கொள்கைகளை சூழலுக்குத் தகுந்தவாறு வெளிப்படுத்தும் அதிகாரத்தை யோகிக்கு மட்டுமே தலைவர் வழங்கியிருந்தார். யோகி தன்னை வெளிப்படுத்தினாலும், வெளிப்படுத்தா விட்டாலும் மாவீரர் தினத்தில் வெளியாகப் போகும் கொள்கைகள் என்னவோ யோகி வகுத்தவையாகத்தான் இருக்கும்.

அதேசமயம், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காக போரின் கடைசிக் கட்டத்தில் எடுக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழர்கள் மத்தியில் இந்தப் படமும், இதையட்டிய ஊகத் தகவல்களும் ஒரு புதிய உற்சாகத்தை விதைத்து எதிர்பார்ப்பைக் கூட்டின என்பதையும் மறுக்க முடியாது!'' என்கிறார்கள்.

புலம்பெயர்ந்த நாடுகளில் ஒளிரும் நம்பிக்கை!

மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும்வேளையில், 'பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார்'என்று கூறும் ஒரு குறுந்தகடு கனடா,அயர்லாந்து, ஆஸ்திரேலியாஉள்ளிட்ட நாடுகளில் ரகசியமாக வலம்வருகிறதாம். ''இறுதிக்கட்ட போர் நடந்து கொண்டிருந்த மே 11-ம் தேதி, ஒரு மிகப்பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினர் புலிகள். அப்போது, அந்த ஊடறுப்புத் தாக்குதலில் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவத்தினாலும்கூட வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலின் ஊடாகத்தான் பிரபாகரன் தப்பித்ததாகச் சொல்கிறது அந்த சி.டி.

''இக்கட்டான சமயத்தில் களத்தைவிட்டு வெளியேறுவதில் பிரபாகரனுக்கு உடன்பாடே கிடையாது. ஆனாலும், அவரது மகனான சார்லஸ் ஆன்டனிதான் பிரபாகரனின் பிடிவாதத்தைத் தளர்த்தினார். 'உங்களிடத்தில் நான் நின்று, களத்தை வழி நடத்துகிறேன். நீங்கள் வெளியேறுங்கள்!' என சார்லஸ் சொன்ன பிறகுதான் பிரபாகரன் வெளியேறினார்'' என்று கூறும் குறுந்தகடு 'விநியோகஸ்தர்'கள், மேற்கொண்டு தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வாறு கூறி வருகிறார்கள் -

''போர்க்களத்தில் பிரபாகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான். அவரை சிங்களப் புலி என்றுதான் பிரபாகரன் அழைப்பாராம். அந்த மருத்துவர் மற்றும் பொட்டு அம்மான், சூசை ஆகியோருடன் ஆப்ரிக்க கண்டத்துக்கு அருகிலுள்ள ஒரு தீவுக்குச் செல்ல முடிவெடுத்தாராம் பிரபாகரன். அந்த சமயத்தில் பிரபாகரனின் மெய்க்காவல் படைப்பிரிவான இம்ரான் படைப்பிரிவைச் சேர்ந்த சுமார் 600 கரும்புலி வீரர்கள் பிரபாகரனை சூழ்ந்திருந்தார்களாம். பெரிய அளவில் வெடி பொருட்களை உடம்பில் கட்டிக்கொண்டு படுவேகமாக பைக்கில் சென்று சிங்களத் துருப்புகளின் மீது விழுந்து மிகப்பெரிய தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார்களாம். கிட்டத்தட்ட 280 கரும்புலி வீரர்கள் மரணமடைய... ராணுவத்தை நிலைகுலைய வைத்து, பூநகரி நீரேரி வழியாகத் தப்பித்தாராம் பிரபாகரன்.

இருந்தாலும், ராணுவம் சுட்டதில் ஒரு குண்டு பிரபாகரனின் வயிற்றுப் பகுதியில் தாக்க, அவருக்கான சிகிச்சையை உடனடியாக வழங்கினாராம் மருத்துவர் சிங்களப்புலி. பிறகு அந்தக் காயத்துடனேயே நீர்மூழ்கி கப்பல் வழியாக குறிப்பிட்ட தீவுக்குச் சென்று விட்டார்களாம் மூவரும். சிங்களப் புலி டாக்டரின் குடும்பமும் தற்போது தமிழகத்தின் ஒரு நகரத்தில்தான் வசிக்கிறதாம்'' என்று கூறுகிறார்கள் இவர்கள்.

இம்ரான் படைப்பிரிவில் இருந்து போரிட்டு, காயம்பட்டுத் தப்பிய ஒரு புலியின் வாக்குமூலம் என்று ஒரு காட்சியையும் அந்த சி.டி-யில் இணைத்திருக்கிறார்களாம். ''பிரபாகரன் குறிப்பிட்ட அந்த தீவுக்குப் போன சமயம், பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினி வசிக்கும் கனடா வீட்டில்தான் மதிவதனியும், துவாரகாவும், பாலச்சந்திரனும் இருந்தார்கள். ஆனால், சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் தொடர்ந்த கண்காணிப்பினால், பின்பு அவர்கள் கனடாவிலிருந்து அயர்லாந்து சென்றுவிட்டனர். பிறகு அங்கிருந்தும் கிளம்பி, தற்போது பிரபாகரனுடன் வந்து சேர்ந்து, குறிப்பிட்ட அந்தத் தீவிலேயே இருந்து வருகிறார்கள். நேரமும் காலமும் கனிந்து வரும்போது பிரபாகரன் தன்னை அங்கிருந்து வெளிப்படுத்துவார்'' என முடிகிறதாம் அந்த ரகசிய சர்க்குலேஷன் சி.டி!

இந்தியாவின் துணையோடு இலங்கையில் போர்!

'விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் 'இலங்கையில் மீண்டும் போர் மூளும் - அதுவும் இந்தியாவின் துணையோடு' என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில்.

''போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது. அந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லை தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன. இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்; போரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த நான்கு கோரிக்கைகள்.

போர் முடியும்வரை இதற்கு தலையாட்டி வந்த சிங்கள அரசு, இப்போது சீனாவின் குரலுக்குத் தலையாட்டும் பொம்மையாகிவிட்டது. கடல் நீர் எல்லை ஆதாரச் சட்டத்தைக் காரணம் காட்டி, அந்தமான் டு முல்லை தீவு கடல் பகுதியைக் கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க மறுக்கும் ராஜபக்ஷே, மற்ற மூன்று கோரிக்கை களையும்கூட மறுத்து விட்டார். இதனால், இலங்கையுடனான உறவில் இந்தியாவுக்கு விரிசல் விழுந்திருக்கிறது. அதேசமயம், சீனாவுடனான உறவை இலங்கை வலுப் படுத்தத் தொடங்கியிருப்பதையும் எரிச்சலுடன் பார்க் கிறது.

அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டாலர்களையும், நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டாலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா. அதோடு, வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ள சீனா, மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு ராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும், வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு ராணுவத் தளத் தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப் பான 'ரா' மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.

இந்தியாவுக்கு மூன்று புறம் ஏற்கெனவே சீனாவால் பலமான ஆபத்து உள்ளது. வடபகுதியில் இருக்கும் சீனா... மேற்கில் பாகிஸ்தானில் மூன்று ராணுவத் தளங்களையும், கிழக்கில் பங்களாதேஷில் இரண்டு ராணுவத் தளங்களையும் ஏற்கெனவே நிறுவியிருக்கிறது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாத ஒரே பகுதியாக இருந்து வந்த தெற்கிலும் தற்போது இலங்கையின் ஆதரவினால் கச்சத்தீவில் ராணுவத் தளத்தை அமைக்கப் போகிறது. மொத்தத்தில் இலங்கையில் தற்போது வரப்போகும் தேர்தலில் ராஜபக்ஷே, ஃபொன்சேகா என யார் ஜெயித்தாலும் சரி... இந்தியாவுக்கு அது ஒருவகையில் தோல்வியாகவே முடியும் நிலை! இதெல்லாம், புலி ஆதரவாளர்களால் ஏற்கெனவே தீர்க்கதரிசனத்தோடு சுட்டிக் காட்டப்பட்ட எச்சரிக்கைகள்தான். இப்போது சூடு கண்ட நிலையில், தன் பார்வையை மாற்றிக் கொள்ளத் துவங்கியுள்ளது இந்திய அரசு'' என்று கூறும் புலி தரப்பினர்,

''இதையெல்லாம் ஊன்றி கவனிக்கிறார்கள் எஞ்சி உள்ள புலித் தலைவர்கள். இலங்கையில் மீண்டும் ஓர் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த இந்தியா முனையும். அதற்கு தோதாக புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து, ஆயுதம் மற்றும் யுத்த தந்திர உதவிகளையும் இந்திய அரசு செய்வதற்கு முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம். கிட்டத்தட்ட, இலங்கையின் வரலாற்றுச் சக்கரம் ஆரம்பத்திலிருந்து சுழலும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு!'' என்கிறார்கள்.

'யுத்தத்தை யார் புலிகள் தரப்பில் நடத்துவார்கள்?' என்ற கேள்விக்கும் இவர்களிடம் பதிலுண்டு!

''சில மாதங்களுக்கு முன்பு, போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய சமயம் புலிகளின் ராணுவத் துறை, புலனாய்வுத் துறை, அரசியல் துறை பொறுப்பாளர்களை அழைத்தார் பிரபாகரன். அப்போது 'ராணுவத் துறை இறுதி வரை களத்தில் நின்று போரிட வேண்டும்; போரின் நிறைவில் அரசியல் துறையினர் உலக நாடுகளுக்கு நமது கொள்கைகளையும், சிங்களப்படையின் போர்க்குற்றங்களையும் விளக்க வேண்டும்; அதற்காக புலனாய்வுத் துறையினர் மட்டும் முழுவதுமாகத் தப்பிவிட வேண்டும்' என்பதுதான் தலைவர் இட்ட கட்டளை.

அதன்படி, பொட்டு அம்மானில் தொடங்கி கதிர்காமத்தம்பி அறிவழகன், பாலசிங்கம், ராஜரத்தினம், அண்டு வேல்மன், இளங்கப்பிள்ளை, வீரசிங்கம், ரஞ்சித் பெர்ணாண்டோ, டேவிட் பூபாலபிள்ளை, லூகாஸ் பால சிங்கம், நடராசா மதிதரன், ஜேம்ஸ் கருணாகரன், சதியன் குமரன், பாலச்சந்திரன், ஜெகன்மோகன் உள்ளிட்ட புலனாய்வுப்பிரிவின் முக்கியத் தளபதிகள் 57 பேர் உலக நாடுகள் முழுவதிலும் சென்று பதுங்கிவிட்டனர். அவர்கள் சமயம் பார்த்து வெளியில் வருவார்கள்'' என்பதே இவர்கள் தரும் நம்பிக்கையான விளக்கம்!

Wednesday, November 18, 2009

சீன அடிமை Vs அமெரிக்க பொம்மை!
'போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்' என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற ரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தாவின் அரசியல் ஆளுமை காரணமா... ஃபொன்சேகாவின் ராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்!

மே 18-ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாகமுடித்து விட்டதாக நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷே அறிவித்த அன்றே, இந்தப் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. ஃபொன்சேகாவைத் திருப்திப்படுத்த நான்கு நட்சத்திரங்களைக்கொண்ட ஜெனரல் பதவி தரப்பட்டது. மகிந்தாவுக்கு இணையாக ஃபொன்சேகாவும்சிங்களர் களால் கொண்டாடப்பட்டார். பத்திரிகைகள் அவரை வானளாவப் புகழ்ந்தன. இதுமகிந்தா வுக்குச் சகிக்கவில்லை. ஃபொன்சேகாவுக்கு நெருக்கமான ஏழு பத்திரிகையாளர்கள் தனியாக அழைக்கப்பட்டு, மிரட்டி அனுப்பப் பட்ட தகவல்தான் முதல் ஆரம்பம். ராணுவத்தளபதி யாக இருந்தால், அவர் தரைப் படை வீரர்களை மொத்தமாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்வைத்து எதையும் செய்துவிடுவார் என்பதால், 'முப்படை களுக்கும் சேர்ந்த பொறுப்பு' தரப்பட்டது. முக்கிய மானதாக அது சொல்லப்பட்டாலும் எந்த அதிகாரமும் இல்லாத பதவி அது. முறைப்படி டிசம்பர் 18-ம் தேதி ஃபொன்சேகா ஓய்வு பெற வேண்டும். அதற்குப் பின்னால் விளையாட்டுத் துறையின் ஆலோசகராக இருக்கலாம் என்று மகிந்தா போட்ட உத்தரவு, தன்னைக் கிண்டல் செய்யும் காரியம் என்று நினைத்து, ஃபொன்சேகா அவமானத்தில் நெளிந்தார்.

பாதுகாப்பு கூட்டுப் படைத் தலைமை அதிகாரி அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த ஃபொன்சேகாவுக்கு எந்தக் கோப்புகளும் அனுப்பவில்லை. பழைய கோதா வில் பல விஷயங்களைக் கேட்டு அனுப்பினார் அவர். 'முப்படைகளும் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்பார்கள். அப்போது விளக்கம் அளித் தால் போதுமானது' என்று விளக்கம் தந்தார்கள். அடுத்த நாள் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கோத்த பய, 'ஃபொன்சேகாவுக்கு அதிக அதிகாரம் வழங்கி னால், அது ஆபத்தானதாக இருக்கும்' என்றார். ஃபொன்சேகாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இப்படித் தொடர்ச்சியாக வந்த எந்தத் தகவலும்ஃபொன் சேகாவுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. இந்த மோதலைக் கொழும்பு பத்திரிகைகள் எழுதியது. இதை உற்றுக் கவனித்த எதிர்க்கட்சிகள், ஃபொன்சேகாவை அரசியலுக்கு அழைத்து வந்தால் நல்லது என்று நினைத்தன. 'யூனிஃபார்மைக் கழற்றிவைத்துவிட்டு யாரும் அரசியலுக்கு வரலாம்' என்று வஞ்சகத்தை மறைத்துவைத்துமகிந்தா வும் பச்சைக் கொடி காட்டினார்.

இந்த நிலையில்தான், ஃபொன்சேகாவின் அமெரிக்கப் பயணம் மர்மமான முறையில் நடந்தது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களைச் சர்வதேச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுபோகும் காரியத்தில் மும்முரமாக இருக்கும் நாடு அமெரிக்கா. அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் வேலையில் அது இறங்கியுள்ளது. அந்த நாட்டின் க்ரீன் கார்டுவைத்திருக்கும் ஃபொன்சேகா, இலங்கையின் ராணுவத் தளபதியாக இருப்பது அதற்கு வசதியாகப்போனது. அவரை அங்கு வரவழைத்து விசாரித்து வாக்குமூலம் வாங்க முடிவெடுத்தார்கள்.

'நாட்டுக்கு விரோதமான எதையும் நான் செய்ய மாட்டேன்' என்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஃபொன்சேகா கொழும்பு விமான நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்தார். தேவையான அளவுக்குத் தகவல்கள் அனைத்தையும் அவர் அமெரிக்காவுக்குக் கொடுத்துவிட்டார் என்றே கொழும்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. 'அதைவிட முக்கியமாக ஃபொன்சேகாவை அதிபர் தேர்தலில் நிற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்கள். அந்தத் தைரியத்தில்தான் அவர் இருக்கிறார்' என்றும் சொல்கிறார்கள். இதன் பின்னணி ரொம்பவே பீதியைக் கிளப்புவதாக இருக்கிறது.

ஜெயவர்த்தனா காலத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடாக இருந்தது இலங்கை. ஆனால், இந்தியாவின் நெருக்கடியின்போது தனக்கு அமெரிக்கா எந்த உதவியும் செய்யவில்லை என்று கோபப்பட்டு, உறவைப் புதுப்பிக்காமல் போனார்கள். இதைத் தனக்குச் சாதகமாக சீனா பயன்படுத்திக்கொண்டது. இன்று முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்போல இலங்கை மாறியது, அமெரிக்காவுக்கு உறுத்தல். இதை மாற்ற தனக்குக் கிடைத்த துருப்புச் சீட்டாக ஃபொன்சேகாவை அமெரிக்கா இறக்கிவிடக் காத்திருப்பதாகச் சொல் கிறார்கள். 'நான் எப்போதும் சீனச் சார்பு கம்யூனிஸ்ட்' என்று சொல்லிக்கொள்பவர் மகிந்தா ராஜபக்ஷே. அவர் ஆட்சிக்கு வந்ததும் ஆறு ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படாத சீன ஆயுதக் கிடங்கு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தார். அம்பாந்தொட்டையில் சீனத்துறை முகம், புத்தளத்தில் அனல்மின் நிலையம் அமைக்க வழி அமைத்தார். இந்தியாவும் அமெரிக்காவும் அணுசக்தி ஒப்பந்தம் போட்டதுமே இலங்கை மீது சீனாவுக்கு அதிகமான பாசம் பொங்கியது. சுமார் எட்டு நாட்கள் சீனாவில் தங்கி, தனது நட்பைப் புதுப்பித்தார் ராஜபக்ஷே. இது மட்டுமல்லாமல், அமெரிக்க எதிரியான இரானுக்கு உமா ஓயா அணையில் நீர் மின் நிலையமும் கொழும்பில் பெட்ரோல் சுத்திகரிப்பு மையமும் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. 'யார் என்ன சொன்னாலும், சீனாதான் இலங்கையின் நலனை முழுமையாக விரும்பும் நாடு. அதற்காக இந்தியாவை நாங்கள் பகைக்க மாட்டோம்' என்று மகிந்தா சொல்லி வருகிறார். ஆனால், அருணாசலப் பிரதேசத்தைச் சொந்தம் கொண்டாடுவது முதல் காஷ்மீர் பகுதிகளை ஆக்கிரமித்துவைத்திருப்பது வரை சீனாவுக்கும் இந்தியாவுக்குமான முட்டல் மோதல்கள் அதிகம். எதிரும் புதிருமான இரண்டு பேரை ஒரே நேரத்தில் நட்பு சக்தியாக இலங்கையால் நினைக்க முடியாது. 'ராஜபக்ஷேவுக்குச் சாதகமாக அக்டோபர் 15-ம் தேதி இந்திய ராணுவம் உஷாராக இருந்தது' என்று ஃபொன்சேகா சொன்னதும் அதிர்ச்சி அடைந்துவிட்டது இங்குள்ள மத்திய அரசு. இலங்கைக்குத் தேள் கொட்டினால் இந்தியாவுக்கு நெரி கட்டியது. 'இன்னும் பல ரகசியங்களை ஃபொன்சேகா வெளியிடுவதைத் தடுப்பதற்காகத்தான் பிரணாப் முகர்ஜி கொழும்பு வந்திருப்பதாகச் சொல் கிறார்கள். 'இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்' என்று பிரணாப் சொல்லியிருக்கிறார். தனி ஈழம் கேட்காத, சகோதர யுத்தம் செய்யாத இந்திய மீனவர்களை நித்தமும் அடித்து விரட்டும் சிங்களக் கடற்படையைக் கண்டிக்காத பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசியல் குழப்பங்களைத் தீர்க்கப் போயிருப்பது, அங்குள்ள கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டுவல் லரசுகளும் நடத்தக் காத்திருக்கும் கோர யுத்தத்தின் முதல் காரியமாக இலங்கையின் அதிபர் தேர்தல்நடக்கப் போகிறது. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியும் தமிழர்களுக்குநல்லது இல்லை. சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும் நிற்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கே - பிரபாகரன் ஒப்பந்தப்படி பொது மக்கள் வாழும் இடத்தில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற விதியைப் பின்பற்றாமல் கொக்கரித்து புலிகளை முதலாவது கோபப்படுத்தியவர் சரத் ஃபொன்சேகா. அதன் பிறகுதான் மகிந்தா ஆட்சிக்கு வந்தார். அமைதி ஒப்பந்தத்தை அவர் மதிக்கவே இல்லை. எனவே, இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. 'இன்று தமிழர்களுக்கு உரிமை தராமல் போனதற்கு யார் காரணம்?' என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார் ஃபொன்சேகா. தமிழர்களது வாக்கு வங்கியை வாங்க இப்போதே வலை விரிக்க ஆரம்பித்துவிட்டார் அவர். மீள்குடியேற்றம் என்று சொல்லி ஏற்கெனவே வலையை விரித்துவிட்டார் ராஜபக்ஷே.

இவை இரண்டையும் சீனாவும் அமெரிக்காவும் அகலக் கண்கொண்டு பார்த்து இலங்கைத் தீவைக் கொத்தித் தின்னக் காத்திருக்கின்றன. இந்தியாவின் அடிவயிற்றில் என்னவோ நடக்கப்போகிறது!

Tuesday, November 17, 2009

கிலி கிளப்பும் புலி க்ளைமாக்ஸ்!

போர்க் காலமோ, கார் காலமோ ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் எப்போதும் கொண்டாட்டமான மாதம். காரணம், மாவீரர் தினம். நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கும் அந்த விழா 27-ம் தேதி மாலையுடன் முடிவடையும். 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!' என்ற பாடலின் பின்னணியில் பிரபாகரன் தோன்றிப் பேசுவார். புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அந்த நேரத்துக்காகத் தவம் இருப்பார்கள். அதற்கு முந்தைய 26-ம் தேதிதான் பிரபாகரனின் பிறந்த நாள். கடந்த ஆண்டு போர்க் கால நெருக்கடி சூழ்ந்த நேரத்திலும், பிரபாகரன் தோன்றினார். ''சமாதானத்துக்கான வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறோம். ஆனாலும், எம் எதிரி போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவை நட்பு சக்தியாகத்தான் நினைத்தோம். நினைக்கிறோம். இந்தியா எங்களுக்கு தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும். இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களுக்குத்தான் நான் மிகுந்த நன்றியைச் சொல்ல வேண்டும். அவர்கள் ஆதரவுதான் அனைத் துக்கும் மேலாக முக்கியமானது!'' என்றார் பிரபாகரன்.

ஆனால், புலிகள் இயக்கம் மீண்டு எழ முடியாமல் முடக்கப்பட்டது. பிரபாகரன் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் இதை நம்பவில்லை என்றாலும், நவம்பர் 27 அன்று பிரபாகரன் திரையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் கலந்துகட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறது. 'பிரபாகரன் வர மாட்டார். ஆனால், பொட்டு அம்மான்தான் இந்த வருட மாவீரர் தின உரையை நிகழ்த்தவிருக்கிறார்!' என்ற தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களுள் ஒன்றாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கும் புதிய படம் ஒன்றைப் புலிகள் ஆதரவு இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன. இதுவரை வெளிவராத அந்தப் படத்துக்கு மேலே, 'இந்தப் படம் சொல்லும் தகவல் என்ன?' என்ற புதிரான கேள்வியும் தொக்கி நிற்கிறது.

இதுபற்றி விசாரித்தபோது, ''மே 18-ம் தேதி சிங்கள ராணுவத்துக்கும் புலிகள் அமைப்புக்கும் நடந்த இறுதி யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. புலிகள் அமைப்பின் முக்கியத் தளபதிகள் அழிக்கப்பட்டதாகவும் நந்திக் கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்க முயற்சித்த போது சுட்டுக் கொன்றதாகவும் அறிவித்தார்கள். இவை எல்லாம் நிகழ் வதற்கு ஒரு வாரத்துக்கு முன், புலிகள் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்களை மட்டும் அழைத்தாராம் பிரபாகரன். 'இன்று முதல் மூன்று பிரிவுகளாக நாம் பிரிந்து செயல்பட வேண்டும். ஒரு அணியினர் இங்கிருந்து சிங்கள ராணுவத்துடன் போராடட்டும். இன்னொரு பிரிவினர் அரசிடம் சரணடைந்து தங்களது அரசியல் கோரிக்கையை உலகத்துக்குச் சொல்லட்டும். மூன்றாவது பிரிவினர் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும். இதில் யார் யார் எந்தப் பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நான் எனது நிலையைத் தீர்மானித்துக்கொள்கிறேன். இனி, உங்களை வழிநடத்தும் பொறுப்பை பொட்டு அம்மானிடம் ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த இயக்கத்தின் துணைத் தலைவராக அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்!' என்று அறிவித்தாராம் அப்போது. இயக்கத்தின் தளபதிகளும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட னராம். அப்போது எடுக்கப்பட்ட படத்தில்தான் பிரபாகரனுக்குச் சரிசமமாக பொட்டு உட்காரவைக்கப்பட்டார். இதில் பல ஆச்சர்ய மான விஷயங்கள் உண்டு!'' என்ற பீடிகை கொடுத்து நிறுத்தியவர்கள் மேலும் தொடர்ந்தார்கள்...

''பொதுவாக பொட்டு அம்மான், புலிகளின் சீருடையைத்தான் எப்போதும் அணிவார். சாதாரண உடைகள் அணிந்து அவரைப் பார்க்கவே முடியாது. அரிதாக டி-ஷர்ட் அணிவார். இந்தப் படத்தில் பிரபாகரன் அணிந்துள்ள அதே நிறத்தில் சட்டை அணிந்துள்ளார். மேலும், பொட்டு அம்மான் எப்போதும் கறுப்பு நிற வார் வைத்த சாதாரண வாட்ச்தான் அணிவார். சில்வர் செயின் வாட்ச் அணிந்தால் தனிப்பட்ட அடையாளமாகிவிடும் என்பதால், அதை அணியவே மாட்டார். ஆனால், இப்படத்தில் அதிலும் மாற்றம். சிரித்த முகத்துடன் இருக்கும் அவர் சீரியஸான முகத்துடன் காணப்படுகிறார். இப்படி எத்தனையோ மாற்றங்களை அடுக்கலாம். மிக நெருக்கடியான தருணத்தில் எடுக்கப்பட்ட இப்படம், ஆறு மாதங்கள் கழித்து வெளியானதற்கான பின்னணி 'நவம்பர் 27'-ம் தேதியாக இருக்கலாம்!'' என்று முடித்தார்கள்.

இலங்கையில் தேர்தல் நடந்து முடியும் வரை அரசியல் நிலவரங்களைக் கவனித்துவிட்டு அதன் பிறகு வெளிப்படையாகச் சில அறிவிப்புகளைச் செய்ய புலிகள் அமைப்பினர் முடிவெடுத்திருந்தனராம். ஆனால், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. குமரன் பத்மநாபன் எனப்படும் கே.பி.அணியினர், காஸ்ட்ரோ அணி யினர் என இரண்டு தரப்பாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் யாராவது ஒருவர் வெளிப்படையாக வந்து அறிவித்தால்தான் குழப்பங்களைத் தவிர்க்க முடியும் என்று முடிவெடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் பொட்டு வெளியில் வர இருப்பதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

அதே சமயம், 'பொட்டு அம்மான் இறந்தது உண்மை. ஆனால், அவரது உடலைத்தான் எங்களால் அடையாளம் காண முடியவில்லை!' என்று இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபய ராஜபக்ஷே சொல்லி வருகிறார். தமிழக எம்.பி-க்கள் குழு அங்கு சென்றபோதும், 'பிரபாகரனது உடலை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். ஆனால், பொட்டு பற்றித்தான் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை!' என்று அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்ஷே சொல்லியிருக்கிறார். எனவே, பொட்டு அம்மான் குறித்த சந்தேகங்கள் இன்னமும் முழுக்க களையப்படவில்லை என்பது உண்மை.

புலிகள் அமைப்பின் ஆரம்பக் கட்டத்தில் பிரபாகரன் தலைமையிலான மத்தியக் கமிட்டியில் 32 உறுப்பினர்கள் இருந்தார்கள். அதில் சண்முகலிங்கம் சிவசங்கரன் என்ற இளைஞன்தான் பின்னாட்களில் பொட்டு அம்மானாக உருவெடுத்தார். புலிகள் அமைப்பு மீது சிங்கள ராணுவத்தின் கவனத்தை அதிர்ச்சியுடன் திருப்பிய திருநெல்வேலி தாக்குதலில் இவர் இருந்தார். பிரபாகரனிடம் ஆயுதப் பயிற்சி பெற்று, பின்னர் அவருக்கே மெய்க்காப்பாளராக இருந்தவர். வேதாரண்யம் பகுதியைக் கவனித்து வந்தவர். பின்னர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மாவட்டத் தளபதியாக ஆனார். வேவு பார்ப்பதில் தேர்ந்தவராக இருந்ததால், புலிகளின் புலனாய்வுப் பிரிவை பொட்டுவிடம் ஒப்படைத்தார் பிரபாகரன். 1988-ம் ஆண்டு இப் பொறுப்புக்கு வந்த பொட்டு 16 பிரிவுகளை உருவாக்கி, புலிகளின் திரைமறைவு வெற்றிகளுக்குப் பெரிதும் உதவி னார். இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் சண்டை தொடங் கியபோது, முதல் தாக்குதலில் பலத்த காயம்பட்டு முடக்கப் பட்டார் பொட்டு. வயிறு, கால், கை ஆகியவற்றில் பலத்த காயம் பட்டது. மரணத்தறுவாயை நெருங்கியவரை மிகுந்த சிரமத்துக்குப் பிறகு மீட்டெடுத்து வந்தார்கள். அந்தச் சமயத்தில், அவரை அருகில்இருந்து கவனித்துக்கொண்டவர் பாலசிங்கத்தின் மனைவிஅடேல்.

ராஜீவ் காந்தி கொலையில் பொட்டு அம்மானைத் தொடர்புபடுத்தி சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவு செய்தபோதுதான், இப்படியரு ஆள் இருப்பதே வெளியில் தெரிந்தது. மூன்று ஆண் பிள்ளைகள் பொட்டு அம்மானுக்கு. அதில் இருவர் அமைப்பில் இணைந்து போராடி இறந்துவிட்டார் களாம். ஒரு மகன் மட்டும் இருக்கிறார். 'குடும்பத்துக்கு ஒருவரை இயக்கத்துக்குத் தந்தால் போதுமே. இன்னொரு மகனை எங்காவது படிக்கவைக்கலாமே!' என்று பொட்டு அம்மானிடம் சொன்னதற்கு, 'அதெல்லாம் மற்றவர்களின் குடும்பத்துக்கு. எனது குடும்பத்தினர் அனைவருமே இயக்கத்துக்குத்தான்!' என்றாராம் பொட்டு. 10 ஆண்டுகளுக்கு முன் பொட்டு அம்மானைப்பற்றி தனது புத்தகத்தில் இப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார் அடேல் பாலசிங்கம், 'சுற்றி வளைப்புகளில் இருந்து எதிரிகளைத் திணறடித்து வெளியேறுவதில் அவருக்குப் பல ஆண்டு அனுபவம் உண்டு!'

அடேல் சொன்னது இப்போதும் நடந்திருக்குமா? நவம்பர் 27-ம் தேதி முடிவு தெரியும்!

Tuesday, November 10, 2009

தம்பியா தளபதியா????

எத்தனையோ உயிர்களை இரக்கமின்றி அழித்துமுடித்த இலங்கை மண்ணில், அதிகாரத்தில் இருந்தவர்களே மோதிக்கொள்ளும் காட்சிகளில்கூட நெஞ்சதிர வைக்கும் திருப்பங்கள்..! நெருங்கிய நண்பர்களாக இருந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும், ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் பகைவர்களாக முறுக்கிக்கொண்ட விவகாரம்... இப்போது ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே எதிர்பாராத சச்சரவைக் கிளப்பிவிட்டிருக்கிறது. எல்லாமே பதவி மற்றும் உயிர் பயத்தில் அரங்கேறும் திருப்பங்கள்தான்!

அமெரிக்க அரசின் 'போர்க்குற்ற விசாரணை'க்குப் போகாமல் இலங்கைக்கே திரும்பிவிட்ட ஃபொன்சேகா... ஏர்போர்ட்டில் குழுமியிருந்த மீடியாக்களிடம்,

'நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்த விதமான மோசமான நிகழ்வுகளையும் நான் செய்ய மாட்டேன்!' என வீரா வேசமாகப் பேசியிருந்தார். ''இதுவே ஒருவகை அரசியல் அறைகூவல்தான்!'' என்று விளக்கம் கொடுக்கிறார்கள், இலங்கைப் பத்திரிகையாளர்கள். அவர்களிடத்தில் பேசினோம்.

''ஃபொன்சேகா, அமெரிக்கா விசாரணைகளில் கலந்து கொள்ளாமல் நாடு திரும்பிட்டார்னு தெரிஞ்சதும், இலங்கை அதிபர் தரப்பு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால், அந்தத் தரப்புக்கேதெரியாமல் அமெரிக்காவிடம் சில வாக்குமூலங்களைக் கொடுத்து விட்டுத்தான் திரும்பியிருக்கிறார் ஃபொன்சேகா. அவர் அமெரிக்காவிலிருந்து கிளம்புவதற்கு முதல் நாள்... நவம்பர் 3-ம் தேதி, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் அவரை சந்திச்சிருக்காங்க. அப்போது ஒரு டேப்பை அவருக்குப் போட்டுக் காட்டி னார்கள். இலங்கையின் அம்பலாங்கொடையில் நடந்த ஒரு விழாவில் ஃபொன்சேகா பேசிய உரை அதில் இருந்தது. புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது உலக ராணுவச் சட்டங்களை மீறி செயல்பட வேண்டியிருந் ததாகவும், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த ஆயிரத்துக்கும் அதிகமான புலி உறுப்பினர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றதாகவும் ஃபொன்சேகா அதில் கூறியிருந்தார்.

'ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கைப் பதிய இந்த டேப் ஆதாரம் ஒன்றே போதும்...' என அமெரிக்க அதிகாரிகள் ஃபொன் சேகாவுக்கு கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறார்கள். உடனே, 'முப்படைகளின் தளபதி என்ற முறையில் அதிபர் இடும் உத்தரவுகளை நான் நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். அந்த வகையில் அதிபரின் உத்தரவுப்படிதான் எல்லாமே நடந்தது!' என்ற ரீதியில் ஒரு வாக்குமூலத்தைக் கொடுத்த ஃபொன்சேகா, சில ஆதாரங்களையும் அளித்திருக்கிறார். அதோடு, இலங்கையின் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராய் தான் களமிறங்க நினைப்பதையும் கூறியிருக்கிறார். 'உங்களின் அதிகாரபூர்வமான விசா ரணையில் நான் கலந்துகொண்டால், என் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டை இலங்கையில் பாய்ச்சுவார்கள். அதன்பிறகு நான் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகும்!' என்று தன் நிலையை விளக்கியிருக்கிறார்.

தேவைப்படும்போது வேறு வழிகளில் ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் அவர்திரும்பிப் போக, அமெரிக்காவும் சம்மதித்தது. தற்போது, வாக்குமூலத்தோடு அவர் அளித் திருக்கும் சில ஆதாரங்களை வைத்து வருகிற 24-ம் தேதிக்குள் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பாக வழக்குப் பதிய அமெரிக்கா முயற்சி செய்தது. இதெல்லாம் தாமதமாகத்தான் அதிபர் தரப்புக்குத் தெரிந்திருக்கிறது. உடனே அலரி மாளிகைக்கு வந்து அதிபரையும், பாதுகாப்புச் செயலர் கோத்தபயவையும் சந்தித்து விளக்கங்களை அளிக்கும்படி ஃபொன்சேகாவுக்கு உத்தரவு அனுப்பியிருக்கிறார், அதிபரின் முதன்மைச் செயலர் லலித் வீரதுங்க. கிட்டத்தட்ட ஐந்து முறை உத்தரவு அனுப்பியும் அலரி மாளிகைக்கு செல் வதையே தவிர்த்திருக்கிறார் ஃபொன்சேகா. அதிபர் ராஜபக்ஷேவே ஒரு முறை தொடர்புகொண்டும், பேசுவதைத் தவிர்த்திருந்திருக் கிறார்.

இதில் கோபத்தோடு பதற்றமும் அடைந்துவிட்டது அதிபர் தரப்பு. ஃபொன்சேகாவை எந்த வகையிலும் நம்பமுடியாது என்று முடிவெடுத்து, அதிரடியாகச் சில காரியங்களைச் செய்துள்ளது. இலங்கையில் அதிபர் மற்றும் அரசு பாதுகாப்பு விஷயங்களை, ஃபொன்சேகா கட்டுப்பாட்டிலுள்ள சிங்கள ரெஜிமென்ட்தான் இவ்வளவு காலமாகச் செய்து வந்தது. தற்போது, அந்த ரெஜிமென்ட்டை அந்தப் பணியிலிருந்து விலக்கி, கஜபா ரெஜிமென்ட்டிடம் அந்தப் பணியைக் கொடுத்திருக்கிறார்கள். அதோடு, கொழும்பில் முக்கியப் பணிகளில் இருந்த ஃபொன்சேகாவின் நம்பிக்கைக்குரிய ராணுவ அதிகாரிகளையும் தலைநகரிலிருந்து உஷாராக பணியிட மாற்றம் செய்து, வடக்குப் பிரதேசத்துக்கு அனுப்பிவிட்டனர். கூடவே, ஃபொன்சேகாவின் பாது காப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த ராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் உட்பட 28 பேரை வேறு பணியிடங்களுக்கு கோத்தபயவின் உத்தரவுப்படி மாற்றியிருக்கிறார், அந்தப் பிரிவின் பொறுப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர. ஒருவேளை, நாட்டில் ராணுவப் புரட்சியை ஏற்படுத்தவும், அதிபர் குடும்பத்தைச் சிறைப்பிடிக்கவும் ஃபொன் சேகா திட்டமிட்டால்... அதை சமாளிக்கவே இந்த நடவடிக்கைகள் என்று அதிபரின் அலரி மாளிகையிலிருந்தே தகவல் கசிகிறது.'' என்று கூறுகிறார்கள் இந்தப் பத்திரிகையாளர்கள்.

இதற்கிடையே, தற்போதைய ராணுவத் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய, 'ஃபொன்சேகாவுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்பது தவறு. வன்னி வெற்றிக்காகவே கூட்டுப்படைகளின் ராணுவத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதுவு மில்லாமல் அதிபர் மகிந்தாவின் அரசியல் தலைமையே இந்த ராணுவ வெற்றிக்குக் காரணமேயன்றி, வேறு யாரும் இந்த ராணுவ வெற்றிக்கு சொந்தம் கொண்டாட முடியாது' என மீடியாக்களிடம் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இதில், ஃபொன்சேகா தரப்பும் ரொம்ப சூடாகி, 'இலங்கையில் அரசியலில் ஈடுபடும் உரிமை அனைவருக்கும் உண்டு. இது தொடர்பாக கேள்வி எழுப்பும் உரிமை யாருக்கும் இல்லை' என பதிலடி கொடுத்திருக்கிறது. இதனிடையே, 'இப்படியே இந்த விவகாரங்களை நீடிக்க விடமுடியாது... கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி பதவி உள்ளிட்ட எல்லாப் பதவிகளையும் ஃபொன்சேகா ராஜினாமா செய்துவிட்டு, தன் பலத்தை உடனடி யாக அதிபர் குடும்பத்துக்குக் காட்டவேண்டும்' என்று அவருடைய ஆதரவாளர்களும் உசுப்பத் தொடங்கியிருக்கிறார்களாம். ஃபொன்சேகாவோ, 'என் பதவி முடியும் டிசம்பர் 18-ம் தேதிக்குப் பிறகு அதிரடியைப் பாருங்கள்' என்று அவர்களை சமாதானப்படுத்தி வருகிறாராம். இந்தக் கூத்துகளுக்கு நடுவில்தான் ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே புதிய புயல் வீசத் தொடங்கியிருக்கிறது! ராஜபக்ஷேவின் மனைவி சிராந்தியும், ஃபொன்சேகாவின் மனைவி அனோமாவும் ரொம்ப நெருக்கமானவர்கள். அதிபருக்கும் ஃபொன்சேகாவுக்கும் மோதல்கள் உச்சத்தை அடைந்தாலும்... இவர்களுக்குள் நட்பு இழை இன்னும் அறுபடவில்லையாம். அண்மையில் அதிபர் மனைவி சிராந்தியை தொடர்புகொண்ட அனோமா, 'நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் பாதுகாப்புச் செயலரான கோத்தபயவின் அவசர முடிவுகள்தான் காரணம்' என குற்றம்சாட்டி இருக்கிறாராம். இதனால் பிரச்னையை சுமுகமாக்க நினைக்கும் சிராந்தி, 'கோத்தபயவை பதவியிலிருந்து நீக்கி விட்டால் ஃபொன்சேகாவை சமாதானப்படுத்தி அரசியல் களத்தில் இறங்கவிடாமல் தடுக்கலாம்' என ராஜபக்ஷேவிடம் கூறியதோடு, 'உங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொண்டு, ஃபொன்சேகாவையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதுவே வழி' என்றும் கூறத் தொடங்கியிருக்கிறாராம். கோத்தபயவை நீக்கிவிட்டு முன்னாள் ராணுவத் தளபதி ஜயலத் வீரக்கொடியை பாதுகாப்பு செயலராக நியமிக்கவேண்டும் என அதிபர் ராஜபக்ஷேவை நெருக்குகிறாராம் அவர் மனைவி.

ஆனால், மற்றொரு சகோதரான பசில் ராஜபக்ஷே உள்ளிட்டோர், 'எக்காரணம் கொண்டும் கோத்தபயவுக்கு வீழ்ச்சி ஏற்படுத்துவதை ஏற்க முடியாது' என்று அதிபரின் குடும்பத்துக்கு எதிராகத் திரும்பும் முடிவில் இருக்கிறார்களாம். நாட்டுப் பிரச்னை இப்படி வீட்டுக்குள்ளும் புயல் கிளப்புவதால் திண்டாடுகிறாராம் அதிபர். ஆனால் சிராந்தியோ, கோத்தபய பாதுகாப்பு செயலர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்ற உறுதிமொழியுடன் முதல் கட்டமாக சமாதானத் தூதராக அனோமாவை நேரில் அழைத்து சந்திக்கப் போவதாக பலமான ஒரு பேச்சு உலவுகிறது.

கொலைவெறி அரசியலோடு இப்போது குடும்ப அரசியலும் சேர்ந்துகொள்ள... இலங் கையில் பரபரப்புக்குப் பஞ்சமேயில்லை!

இதற்கிடையில், 'ஃபொன்சேகா அதிபர் தேர்தலில் நிற்கும் பட்சத்தில் தமிழர் கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நாங்கள் கூறும் நான்கு விஷயங்களை ஏற்றுக்கொண்டால் அவரை ஆதரிக்கத் தயார்!' என வெளிப்படையாக அறிவித்திருக்கிறார், தமிழ் கட்சிகளில் ஒன்றான 'ஜனநாயக மக்கள் முன்னணி'யின் தலைவரும் எம்.பி-யுமான மனோ கணேசன்.

அவரிடம் பேசினோம். ''வவுனியாவில் முள்வேலிக்குள் அடைபட்டுக்கிடக்கும் மக்களை அவர்களது சொந்த இடத்தில் மீள் குடியமர்த்துவது, தமிழர்களின் பாரம்பரிய இடங்களில் சிங்கள ஆக்கிரமிப்பைத் தடுத்துக் குடியேற்றத்தைச் சிதைக்காமல் செய்வது, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது, இலங்கையில் நிகழும் தேசிய இனப்படுகொலையைத் தடுக்க முயல்வது போன்ற விஷயங்களில் சரத் ஃபொன்சேகா சாதகமாக பதிலளித்தால்... அவரைப் பொது வேட்பாளராக ஆதரிக்க நாங்கள் தயார்!'' என்றார்.

''பாவம் போக்க வந்தீர்களா..?''

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரி நிருபமா ராஜபக்ஷேவும் அவரது கணவர் திருக்குமரன் நடேசனும் கடந்த 7-ம் தேதி இரவு திருச் செந்தூர் வந்திருந்தனர். மறுநாள் ராமேஸ்வரம் டிரிப். இந்தத் தகவல் தெரிந்து அங்கு திரண்டுவிட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர், திருக் குமரன் தம்பதி இருந்த இடத்தில் கறுப்புக்கொடிகாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இருவரும் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றபோது, அங்கேயும் சிலர் கறுப்புக் கொடி காட்டினார்கள். இந்த இரண்டு சம்பவங்களிலும் சேர்த்து 18 பேரைக் கைது செய்தது காவல் துறை. ராமேஸ்வரத்தில் நிருபர் ஒருவர், ''இலங்கையில் தமிழினத்தை அழித்த பாவத்தைப் போக்கத்தான் ராமேஸ்வரம் வந்தீர்களா..?'' என்று கேட்டு விட... சட்டென்று சூடாகிப் போன திருக்குமரன், ''முட்டாள்தனமாகப் பேசாதீர்கள்...'' என்று சொல்லி விட்டு விருட்டென கிளம்பிவிட்டார்.

இலங்கை அரசியல் நோக்கர்களோ, ''வரப்போகும் அதிபர் தேர்தலில் ராஜ பக்ஷேவை தோற்கடிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, சிஹகய உறும, தமிழ்க் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட 20 கட்சிகள் ஒன்றிணைந்துதான் இந்தக் கூட்டணியை உருவாக்கியிருக்கின்றன. இலங்கையில் தமிழர்களிடம் பெரும்பான்மை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்தக் கூட்டணியில் இணையும் வாய்ப்புகள் சாத்தியம். அதோடு ஃபொன்சேகா பொது வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் தாங்களும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயார் என ஜே.வி.பி-யும் கூறியுள்ளது. இந்தக் கூட்டணியின் சார்பாகத்தான் பொது வேட்பாளராக ஃபொன்சேகா அதிபர் தேர்தலில் முன்னிறுத்தப்படவிருக்கிறார். மிக வலுவான இந்தக் கூட்டணியின் பலத்தோடு சிங்கள மக்களிடம் தற்போது ஃபொன்சேகாவுக்கு இருக்கும் ஆதரவும் வெளிப்படும் பட்சத்தில், ராஜபக்ஷேவை மிக எளிதில் ஃபொன்சேகா தோற்கடித்து விடுவார். அதிபர் தேர்தலில் அவர் வெற்றியடைந்ததும் அமையப் போகும் தற்காலிக அரசின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவதாகத்தான் அவர்களுக்குள் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது...'' என்கிறார்கள்.

இந்நிலையில் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்த பத்திரிகையாளர்கள், ஃபொன்சேகா பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவது குறித்துக் கேட்டனர். ''பொதுவேட்பாளரை களத்தில் நிறுத்துவதில் எனக்கு சம்மதம்தான். ஃபொன்சேகா பொதுவேட்பாளராக வேண்டுமென்றால், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி-பியும் ஒத்துழைக்க வேண்டும். அதுவுமில்லாமல் ஃபொன்சேகா தமிழ் மக்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டை விளக்குவதோடு, அவர்களுக்குத் திருப்தி அளிக்கக்கூடிய வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டும்!'' என்று சொல்லியிருக்கிறார்.

Tuesday, October 20, 2009

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்


மேஷ ராசி


நல்லதை வரவேற்கும் உங்களுக்கு 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும் கேதுவும் அனைத்து வகைகளிலும் உதவுவார்கள்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் அமர்ந்து, உங்களை ஒரு வேலையையும் முழுமையாக பார்க்க விடாமல் தடுத்த ராகு பகவான், இப்போது 9-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். முடியாத காரியங்களையும் இனி முடிப்பீர்கள். உங்களது திறமை வெளிப்படும்.

குடும்பத்தாருடன் இருந்த சண்டை- சச்சரவு நிலை மாறும். வீட்டார் உங்களின் ஆலோசனையை ஏற்பர். தள்ளிப்போன சுபகாரியம் நிகழும்.

தம்பதிக்குள் பாசப் பிணைப்பு அதிகரிக்கும். குழந்தை இல்லாமல் ஏங்கிய தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். என்ன உழைத்தும் கையில் காசு பணம் தங்கவில்லையே எனும் நிலை மாறி சேமிக்கத் துவங்குவீர்கள்.

ராகு பகவான் 27.10.2009 முதல் 28.12.2009 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான உத்திராட நட்சத்திரத்தில் செல்லும் இந்தக் காலகட்டத்தில், மகளுக்கு திருமணம் கைகூடி வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். அவர்களின் கல்வி,வேலை, திருமண முயற்சி வெற்றி பெறும்.

29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் மனைவி வழி உறவினர்கள் உதவுவர். வீடு- வாகன முயற்சிகள் பலிதமாகும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால், இந்தக் காலகட்டத்தில் மருத்துவச் செலவு, சிறு விபத்து, ஏமாற்றங்கள், உறவினர் இடையே மனக்கசப்பு ஆகியவை வந்து நீங்கும்.

பூர்வீக சொத்தை மாற்றி அமைப்பீர்கள். அனைவரும் வியக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை- ஆபரணங்கள் சேரும். ராகு 9-ஆம் வீட்டில் அமர்வதால் தந்தையின் உடல்நலனில் சிறு பாதிப்பு வந்துபோகும். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சண்டையைக் குறையுங்கள். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் செல்வீர்கள். அரசியல் வாதிகள் சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவார்கள். எவரையும் விமர்சிக்க வேண்டாம்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பர். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். இரும்பு, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ரசாயன வகைகள் ஆகியவற்றால் ஆதாயம் உண்டு. அரசு காரியத்தில் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் உங்களை தரக் குறைவாக நடத்திய மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். பதவி உயர்வு தேடி வரும். வேலைச் சுமை குறையும். கலைத்துறையினரது படைப்புகள் பேசப்படும். பெண்களுக்கு தோஷம் நீங்கி கல்யாணம் நடைபெறும். பாதியில் நின்ற கல்வியை தொடர்வர். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தி யாகும். விளையாட்டுப் போட்டியில் பரிசு,பாராட்டு கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை ராசிக்கு 4-வது வீட்டில் அமர்ந்து உங்களை அல்லல்படுத்திய கேது பகவான் இப்போது 3-ஆம் வீட்டில் முகமலர்ச்சியுடன் அமர்கிறார்.

தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். தாயார் மற்றும் இளைய சகோதரருடனான கருத்து மோதல் நீங்கும். நீங்கள் சற்று அனுசரித்துப் போகவும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய உங்கள் யோகாதிபதி குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் வீட்டில் சுபகாரியங்கள் நிகழும். குழந்தை பாக்கியம் கிட்டும். பெரிய பதவிகள் தேடி வரும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் வீண் அலைச்சல், காரியத் தடை ஆகியன ஏற்பட்டு விலகும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். தாழ்வு மனப்பான்மை விலகும்.

சொந்த ஊரில் மதிப்பு உயரும். ஆடம்பரச் செலவைக் குறைப்பீர்கள். வெளிநாட்டில் உள்ளவர்களால் ஆதாயம் உண்டு. உயர்ரக வாகனங்கள் வாங்குவீர்கள். தங்க நகை சேரும்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, விலகியே இருந்த உங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுடன், பெயர், புகழை வாரி வழங்கும்.


ரிஷப ராசி

எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பவர் நீங்கள். 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலத்தில் ராகுவும் கேதுவும் இணைந்து எப்படிப்பட்ட பலன்களை தரப்போகின்றனர்... பார்ப்போமா?

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் அமர்ந்து கொண்டு, கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு, கையில் காசு- பணத்தை தங்க விடாமல் செய்த ராகு பகவான், இப்போது 8-ல் சென்று மறைகிறார். இதனால் அல்லல் பட்ட உங்கள் மனம் அமைதியாகும்.

திக்கித் திணறிய நீங்கள், திசையறிந்து பயணிப்பீர்கள். தடைபட்ட காரியங்கள் நடந்தேறும். தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தை வழி சொத்தில் இருந்த சிக்கல் தீரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உங்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் ஆச்சர்யப்படும்படி சாதிப்பீர்கள். தம்பதிக்குள் சிறு விவாதங்கள் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப விஷயங்களைச் சொல்ல வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப் பையில் கட்டி வந்து நீங்கும். பாசத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய சுகாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் சொத்துப் பிரச்னை நீங்கும். தாயாரின் நோய் குணமாகும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் செல்வதால் சுறுசுறுப்பாவீர்கள். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பழுதான டி.வி. முதலான பொருட்களை மாற்றுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் மன உளைச்சல், பேச்சால் பிரச்னை ஆகியன வந்து நீங்கும். அரசு விவகாரத்தில் கவனம் தேவை. புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.

பிள்ளைகள், குடும்ப சூழ்நிலையைப் புரிந்து நடப்பர். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவர். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதிய வீடு மாறுவீர்கள். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் செல்வீர்கள். வெளிவட்டார விமர்சனத்தால் கவலை வேண்டாம்; உங்கள் புகழ் கூடும். உணவில் கட்டுப்பாடு தேவை. அசைவ, கார உணவைத் தவிர்த்து, காய்கறி, கீரை வகைகளைச் சேருங்கள். சிறு விபத்து ஏற்பட்டு, பிறகு சரியாகும்.

வியாபாரத்தில் பாக்கியை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்கள் ஆதரிப்பர். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். எவரை நம்பியும் பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். ஷேர், புரோக்கரேஜ், கமிஷன் வகைகள் ஆதாயம் தரும். பங்குதாரர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடு மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் அடக்கு முறை மாறும். முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். சலுகை மற்றும் பதவி உயர்வு உண்டு. கலைத்துறையினரது திறமை வெளிப்படும். பரிசு, பணமுடிச்சு ஆகியன உண்டு. பெண்களுக்கு மனம் போல் மாங்கல்யம் வந்து சேரும்.

கேதுவின் பலன்கள்

ராசிக்கு 2-வது வீட்டில் நுழைகிறார் கேது பகவான். சாதுர்யப் பேச்சால் சாதிப்பீர்கள். சில தருணத்தில் சொற் குற்றம், பொருட்குற்றத்தில் சிக்குவீர்கள். பல் வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும். அத்தியாவசிய செலவு அதிகரிக்கும். மகளின் திருமணப் பேச்சு இனிதே நிறைவேறும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். 27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் கொஞ்சம் அலைச்சல், பெரிய மனிதர்களுடன் கருத்து வேறுபாடு ஆகியன வந்து நீங்கும்.

4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் சிறு அறுவை சிகிச்சை, வீண் செலவு ஆகியன வந்து நீங்கும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் சகோதர வகையில் ஆதாயம் உண்டு. மனைவி வழி உறவினர் உதவுவர்.

எவருக்காகவும் ஜாமீன் போட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் போங்கள்.

இந்த ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்குப் புதிய அனுபவங்களைத் தருவதுடன், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொள்ளவும் வைக்கும்.

மிதுனம்

மனித நேயம் கொண்ட உங்களுக்கு ராகு-கேதுப் பெயர்ச்சி பல புதிய அனுபவங்களைத் தரப் போகிறது.

ராகுவின் பலன்கள்

இப்போது ராகு பகவான், ராசிக்கு 7-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். உங்களின் திறமையை நீங்களே தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். வீண் விவாதம், அலைச்சல், கோபதாபங்கள் அனைத்தும் குறையும். தம்பதிக்குள் மகிழ்ச்சி உண்டு. எனினும் களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டில் அமர்வதால் மனைவியுடன் சிறு பிரச்னைகள் ஏற்படும். மனைவிக்கு மருத்துவச் செலவு நேரும். அவரின் உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எதையும் சுயமாக யோசித்து முடிவெடுங்கள். குழந்தை பாக்கியம் உண்டு. நண்பர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வருமானம் அதிகரிக்கும்; சேமிப்பும் கரையும். திடீர் பயணம் ஏற்படும்.

27.10.2009 முதல் 28.12.2009 வரை உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் இந்தக் கால கட்டத்தில் இளைய சகோதர வகையில் நன்மை உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. 29.12.2009 முதல் 5.9.2010 வரை பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பணவரவு, செல்வாக்கு, கௌரவப் பதவி, வீடு, மனை மூலம் லாபம், புதிய வாகனம், மகளுக்கு திருமணம் அனைத்தும் உண்டாகும். 6.9.2010 முதல் 27.4.2011 வரை மூல நட்சத்திரத்தில் செல்வதால் குடும்பத்தில் குழப்பம், கருத்து மோதல், பணப் பற்றாக் குறை, மன வருத்தம் ஆகியன வந்து நீங்கும்.

பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றி பெறுவர். அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். பாதியில் நின்ற வேலையை முடிப்பீர்கள். பிரபலங்களின் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எவருக்கும் ஜாமீன் போட வேண்டாம். மதிப்பு- மரியாதை கூடும். பெண்களுக்கு கல்யாணத் தடைகள் நீங்கும். மாதவிடாய்க் கோளாறு, மன உளைச்சல் ஆகியன விலகும். வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவது நல்லது.

வியாபாரப் போட்டிகளால் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகள் குறித்து யோசிப்பீர்கள். ரியல் எஸ்டேட், கட்டட வகைகளால் லாபம் பெறுவீர்கள். வேலையாட்களிடம் ரகசியங்களை வெளியிடாதீர்கள். பாக்கிகள் கைக்கு வரும். பங்குதாரர்களிடம் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரியின் போக்கை அறிந்து நடப்பீர்கள். உங்களின் கடின உழைப்பால் பதவி உயர்வு அடைவீர்கள். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். கணினித் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கலைத் துறையினர் போட்டி, பொறாமைகளுக்கு நடுவில் வெற்றி பெறுவர். கைத்தட்டலுடன், காசும் சேரும்.

கேதுவின் பலன்கள்

கேது பகவான் இப்போது உங்கள் ராசியிலேயே வந்து அமருவதால் சமயோஜித புத்தியுடன் செயல்படுவீர்கள். இனி ஆக்க பூர்வமாக செயல்படுவீர்கள். குடும்பத்தாரைப் புரிந்து கொள்ளுங்கள். வருங்காலக் கவலை வந்து போகும். ராசிக்குள் கேது அமர்வதால் தலைச் சுற்றல், ஒற்றைத்தலைவலி, முன்கோபம் ஆகியன வந்து நீங்கும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் மனைவியுடன் கருத்து மோதல், வீண் செலவு வரும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் அநாவசியமாக பிறரது விஷயங்களில் தலையிடாதீர்கள். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். சகோதர வகையில் விட்டுக் கொடுங்கள். தியானம், யோகாவில் ஈடுபடுங்கள். புண்ணியத் தலம் செல்வீர்கள். மாணவர்கள் படிப்பில் தீவிரம் காட்டுவது நல்லது.

இந்த ராகு-கேது மாற்றம், வேலைச் சுமை, விவாதம் ஆகியவற்றைத் தந்தாலும், விட்டுக் கொடுக்கும் குணத்தால் வெற்றியையும் தரும்.

கடகம்

வெளுத்ததெல்லாம் பால் என நினைப்ப வர்களே! இதுவரை எந்த வேலையையும் செய்ய விடாமல் முடக்கி வைத்த ராகுவும் கேதுவும் 27.10.2009 முதல் 27.4.2011 வரை உங்களுக்கு என்ன பலன்களை தரப் போகிறார்கள்..? பார்ப்போமா?

ராகுவின் பலன்கள்:

ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 6-ஆம் இடத்தில் ஆற்றலுடன் வந்து அமர்கிறார். உங்களை எதிரியாகப் பார்த்த குடும்பத்தினர் பாசத்துடன் நடந்து கொள்வர். சந்தேகத்தால் பிரிந்த தம்பதி ஒன்று சேர்வீர்கள். மனைவியின் ஆரோக்கியம் கூடும்.

தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. கடனில் ஒரு பகுதியைத் தீர்ப்பீர்கள். பழைய நகைகளை மாற்றி புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் பேச்சில் கம்பீரம் பிறக்கும். கண்-காது வலி நீங்கும்.

29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் வாகனம் வாங்குவீர்கள். வீடு- மனை அமையும். வி.ஐ.பி-களால் ஆதாயம் உண்டாகும்.

6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்பு, செலவு, மஞ்சள் காமாலை ஆகியன வந்து நீங்கும்.

பிள்ளைகள், உங்களின் அன்புக்குக் கட்டுப்படுவர். மகளுக்கு நல்ல வரன் அமையும். திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். உடன்பிறந்தோர் ஒத்துழைப்பர். பணப் பற்றாக்குறையால் பாதியில் நின்ற கட்டடப் பணியை முடிப்பீர்கள். சொத்து வழக்குகள் சாதகமாகும். ஒதுங்கிய உறவினர்களும், நண்பர்களும் ஓடி வந்து உதவுவர்.

குழந்தை இல்லாத தம்பதிக்கு பிள்ளை பாக்கியம் உண்டாகும். வேலை இல்லாத நிலை மாறி, படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கும். திருமணம் தடைப்பட்ட பெண்களுக்கு கல்யாணம் கூடி வரும்.

ஆடை- ஆபரணங்கள் சேரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் அன்பும், அரவணைப்பும் கிட்டும். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு உயரும்.

வியாபாரத்தில் புதிய யுக்திகளால் லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். கெமிக்கல், எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு.

வேலையாட்கள் விசுவாசமாக நடப்பர். பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைக்கு ஒத்துழைப்பர். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் தொந்தரவு தந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவர். கலைத்துறையினரது கற்பனைக்கு வரவேற்பு கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து மன உளைச்சல், காரியத் தடைகள், நெஞ்சுவலி, தலைச் சுற்றல் ஆகியவற்றைத் தந்த கேது இப்போது 12-ல் அமர்கிறார். உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

முன்கோபம் விலகும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பிள்ளைகளின் கூடா பழக்கவழக்கங்கள் விலகும். மகனுக்கு தடைப்பட்ட திருமணம் முடியும்.

27.10.2009 முதல் 3.5.2010 வரை புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் மகான்கள், சித்தர்களின் ஆசீர்வாதம் கிட்டும். பிள்ளை பாக்கியம் உண்டு. வி.ஐ.பி-கள் அறிமுகமாவர்.

4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் சோர்வு வந்து செல்லும். எவருக்கும் ஜாமீன் போட வேண்டாம்.

10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் தாய்வழி உறவினர்கள் உதவுவர்.

பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். புண்ணிய திருத்தலங்களுக்கு அடிக்கடி செல்வீர்கள்.

இந்த ராகு-கேது மாற்றம், ஓய்ந்து போயிருந்த உங்களை உயர வைப்பதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

சிம்மம்

இதயத்திலிருந்து பேசும் உங்களுக்கு இந்த ராகு-கேது மாற்றம் எப்படி இருக்கும்... பார்ப்போமா?

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் அடியெடுத்து வைப்பதுடன், உங்களின் யோகாதிபதி செவ்வாயின் வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். தம்பதிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல், முன்கோபம் ஆகியன குறையும். மனைவி, பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் திகழ்வீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவர். சொந்தங்கள் இடையே இருந்த மனக்கசப்பு விலகும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். கௌரவப் பதவி தேடி வரும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் ஆடை- ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் மனக்கவலை, செலவு ஆகியன வந்து செல்லும்.

பிள்ளைகளின் போக்கில் கவனம் தேவை. மகனுக்கு நல்ல வேலை அமையும். குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும்.

சொந்த வீட்டுக்கு குடி புகுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. வாகன வசதி பெருகும். பூர்வீகச் சொத்து விஷயத்தில் அவசர முடிவு வேண்டாம். சிலர் பூர்வீகச் சொத்துகளை விற்க வேண்டி வரும். தாய்மாமன் வகையில் மோதல் வரும். பெண்களது திருமணத் தடை நீங்கும். அரசியல்வாதிகள் வீண் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். கடையை விரிவுபடுத்தி நவீனமயம் ஆக்குவீர்கள். பாக்கியை போராடி வசூலிப்பீர்கள். இரும்பு, உணவு, புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. வேலையாட்கள் பொறுப்புடன் நடப்பர். உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். தேங்கிக் கிடந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உயரதிகாரிகள் இனி உங்களின் ஆலோசனையைக் கேட்பர். சம்பள உயர்வு வரும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரைப் பற்றிய கிசுகிசுக்கள் விலகும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவு, வீண் அலைச்சல், தூக்கமின்மை ஆகியவற்றைத் தந்த கேது பகவான் உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ல் வந்து அமருகிறார். திடீர் யோகம், வெற்றி வாய்ப்பு ஆகியன தேடி வரும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை வங்கிக் கடனுதவியால் முழுமையாக முடிப்பீர்கள்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வேலை அமையும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி தேடி வரும். உங்களை குறை சொல்லியவர்களே இனி உங்களைப் புகழ்ந்து பேசுவர். மறைமுக எதிரிகள் அடங்குவர். வியாபாரத்தை மாற்றுவீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். வெளிநாட்டில் உள்ளவர்களால் உத்தியோகத்தில் உங்கள் மீதான குற்றச்சாட்டில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் பிறக்கும். கவிதை, ஓவியம், இசைப் போட்டிகளில் பரிசு பெறுவர். உயர் கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும்.

இந்த ராகுவும் கேதுவும் துவண்டிருந்த உங்களுக்கு தெம்பையும், செல்வம் மற்றும் செல்வாக்கையும் அள்ளித் தரும்.

கன்னி

சகஜமாக பேசிப் பழகும் குணம் கொண்ட உங்களுக்கு ராகு- கேது பெயர்ச்சியால் என்ன பலன்கள் ஏற்பட உள்ளன..?! பார்க்கலாம்.

ராகுவின் பலன்கள்

ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு 4-வது வீட்டில் அமர்வதால் மன நிம்மதி கிடைக்கும். பக்குவமாகப் பேசி தடைப்பட்ட காரியத்தை முடிப்பீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீட்டில் தாமதமான சுபகாரியங்கள் ஏற்பாடாகும். விலகிப் போன உறவினர்கள், நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். தம்பதிக்குள் தாம்பத்தியம் இனிக்கும். உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.

பூர்வீகச் சொத்துப் பிரச்னையை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள். இழுபறியான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தாயாருக்கு ரத்த அழுத்தம், நரம்புக் கோளாறு ஆகியன வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களால் அலைச் சலும் மனக்கசப்பும் ஏற்பட்டு விலகும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் பணத் தட்டுப்பாடு, வழக்கில் பின்னடைவு, வீண் செலவு ஆகியன வந்து நீங்கும்.

29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட வேலையை முடிப்பீர்கள். மகளுக்கு திருமணம் நடந்தேறும், மகனுக்கு வேலை கிடைக்கும்.

6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் வாகன விபத்து, உத்தியோகத்தில் பிரச்னை ஆகியன வந்து செல்லும்.

5-ஆம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் பிள்ளைகளின் முரட்டு குணம் விலகும். அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பண உதவியும் உண்டு.

கன்னிப் பெண்கள் தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வார்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. யோகா, தியானம் செய்யுங்கள்.

பழைய வாகனத்தை விற்று விட்டு நவீன ரக வாகனத்தை வாங்குவீர்கள். எனினும் கவனம் தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

அரசியல்வாதிகளுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கௌரவப் பதவி தேடி வரும். மாணவர்கள் மறதி நீங்கி, நல்ல மதிப்பெண் எடுப்பர்.

வியாபாரப் போட்டியை ராஜ தந்திரத்தால் வென்று லாபம் ஈட்டுவீர்கள். கனிவாகப் பேசி பாக்கியை வசூலிப்பீர்கள். வேலையாட்கள் உதவுவர். உணவு, சிமென்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப் பாருங்கள்.

உத்தியோகத்தில் கஷ்டமான வேலையைச் செய்து முடித்து சக ஊழியர்களை ஆச்சர்யப்படுத்துவீர்கள். மேலதிகாரியைப் பற்றி விமர்சிக்காதீர்கள். கலைத் துறையினரது எண்ணங்கள் பூர்த்தியாகும்.

கேதுவின் பலன்கள்

இப்போது கேது பகவான் 10-வது வீட்டில் வந்து அமர்வதால் தொட்ட காரியத்தை விரைந்து முடிக்க வைப்பார். வெளி நாட்டு வேலைவாய்ப்பு தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல் விலகும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் பண வரவு, பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் பழைய நண்பர்கள், உறவினர்களுடன் கருத்துமோதல் வந்து போகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதீர்கள்.

10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் புதிய வாகனம் வாங்குவீர்கள். சொத்துத் தகராறு சுமுகமாக முடியும்.

உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வேற்று இனத்தவர் உதவுவர். தந்தை வழி உறவினர்களால் செலவு, அலைச்சல் ஆகியன வந்து நீங்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர வைப்பதுடன், புதிய பாதையில் பயணம் செய்ய வைக்கும்.

துலாம்

நீதி, நேர்மை, நியாயம் என தர்ம வழியில் செல்லும் உங்களுக்கு, 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலத்தில் ராகு-கேது பெயர்ச்சியின் பலன்கள் என்ன பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகுபகவான், இப்போது ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு வந்து அமர்வதால் எதிலும் வெற்றி உண்டாகும். தடைப்பட்ட சுப காரியங்களை சிறப்பாக நடத்துவீர்கள். கடனை பைசல் செய்வீர்கள். குடும்பத்தினர் உங்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாயாரின் முகம் மலரும். பாதியில் நின்ற வேலையை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர்கள். அவர்களது உயர்கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடு அனுப்புவீர்கள். வீட்டில் பழுதான மின்னணு மற்றும் மின் சாதனங்களை மாற்றுவீர்கள். மனதுக்குள் கட்டிவைத்த கனவு வீட்டை, இப்போது நிஜமாகக் கட்டும் வாய்ப்பு அமையும். வங்கி கடனுதவியும் கிடைக்கும். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவர். வி.ஐ.பி-கள், கல்வியாளர்கள், ஆன்மிக வாதிகள் என நட்பு வட்டம் விரியும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் வீண் விரயம், சொத்துச் சிக்கல்கள் வந்து போகும்.

29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். வீட்டில் திருமணம் கூடி வரும். வாகனம் வாங்குவீர்கள். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமையும் எதிர்மறை எண்ணங்களும் வந்து நீங்கும்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு- மரியாதை உயரும். இதுவரை தாய்வழி உறவினர்களால் இருந்து வந்த அலைச்சல் மற்றும் செலவு நீங்கும். அடகில் இருந்த நகையை மீட்பீர்கள். நண்பர்கள் உதவுவர்.

பெண்கள், பாதியில் விட்ட படிப்பைத் தொடர்வார்கள். மாதவிடாய்க் கோளாறு, ரத்தசோகை நீங்கும்.

அரசியல்வாதிகள் வீண் விமர்சனங் களைத் தவிர்க்கவும். தலைமையின் ஆதரவு எப்போதும் உண்டு. வாகன கடனை அடைப்பீர்கள்.

வியாபாரப் போட்டியை புது யுக்தியால் வெல்வீர்கள். பாக்கியை கறாராகப் பேசி வசூலியுங்கள். ஷேர், புரோக்கரேஜ் ஆதாயம் தரும். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் உங்களை அலைக்கழித்த மேலதிகாரி இனி மதிப்பார். சக ஊழியர்கள் ஆதரிப்பர். கலைஞர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வர்.

கேதுவின் பலன்கள்

ராசிக்கு 9-ஆம் இடத்தில் கேது வந்து அமர்கிறார். குடும்பத்தில் நிலவிய குழப்பம் அகலும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்த இடத்தில் பண உதவி கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவீர்கள். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் தந்தையின் உடல்நிலை பாதிக்கும்.

10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் மனைவி மற்றும் சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களது நிலையைப் புரிந்து கொள்வர்.

கேது 9-ஆம் வீட்டுக்கு வருவதால் தந்தைக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். அவருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். தந்தை வழி சொத்துகளால் அலைச்சல்களும் செலவுகளும் ஏற்படும்.

பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். வேலையின்றித் தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அயல்நாட்டு நிறுவன வாய்ப்பை ஏற்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

இதுவரை புதிய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட ராகுவும் கேதுவும் இனி திடீர் யோகத்தையும் புகழையும் அள்ளித் தருவார்கள்.

விருச்சிகம்
சிறப்பு கட்டுரை

புன்சிரிப்பாலும் அறிவுபூர்வமான பேச்சாலும் பிறர் மனதில் எளிதாக நுழையும் உங்களுக்கு, ராகுவும் கேதுவும் அடுத்து வரும் ஒன்றரை வருடங்களுக்கு என்ன பலன்கள் தரப் போகிறார்கள் பார்ப்போமா?

ராகுவின் பலன்கள்

ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் இருப்பினும் செலவும் ஏற்படும். பாதியில் நின்ற காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் சிறு பிரச்னை வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. உடன்பிறந்தோருடன் இருந்த மனக்கசப்பு விலகும். பாசம் அதிகரிக்கும். சகோதரியின் திருமணத்தை சிறப்புற நடத்துவீர்கள். கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவர். பால்ய நண்பர்கள் உதவுவர்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய சூரியனின் உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். வி.ஐ.பி-கள் உதவுவர்.

29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். மே மாதம் முதல், வீடு, வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழியில் மகிழ்ச்சி தங்கும். எதிலும் வெற்றி உண்டு.

6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் டென்ஷன், அவமானம், வாகன விபத்து ஆகியன ஏற்படக்கூடும்.

பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மகளுக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் அமையும். மகனது உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னை நீங்கும். பயணங்களால் லேசாக உடல்நிலை பாதிக்கும். அரசு காரியங்களில் வெற்றி உண்டு.

2-ஆம் வீட்டில் ராகு நிற்பதால் எவரையும் தாக்கிப் பேசவேண்டாம். பத்திரங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. வழக்குகளில் இருந்த இழுபறி நிலை மாறும்.

பெண்களது தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். வீடு- மனை வாங்குவதில் இருந்த சிக்கல் நீங்கும். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவர். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவர்.

வியாபார நஷ்டத்தில் இருந்து விடுபட புதிதாக யோசிப்பீர்கள். லாபம் உயரும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். கடையை விரிவுபடுத்துவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் இருந்த மோதல் போக்கு மறையும். மேலதிகாரி உங்களைப் புரிந்து கொண்டு புதிய பதவி தருவார். சக ஊழியர்களால் மனஸ்தாபம் ஏற்படும். கலைத் துறையினருக்கு வாய்ப்பு தேடி வரும்.

கேதுவின் பலன்கள்

இப்போது, உங்களின் ராசிக்கு 8-ல் வந்தமர்கிறார் கேது. அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதி உண்டு. நிதானம் மற்றும் பொறுமையை கடைப்பிடியுங்கள். மனைவியுடன் விட்டுக்கொடுத்து போங்கள்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். கண் மற்றும் காதில் வலி ஏற்படும். செலவு அதிகரிக்கும்.

4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் செல்வாக்கு, புகழ் கூடும். மறைமுக எதிரிகளிடம் கவனம் தேவை.

10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் சகோதரருடன் அனுசரித்துச் செல்லுங்கள்.

கேது 8-ல் அமர்வதால் முன் கோபம் அதிகமாகும். வாகன விபத்து, வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் ஆகியன அதிகரிக்கும்.

அடுத்தவரது பிரச்னையில் தலையிடாதீர்கள். ஆன்மிகம், பொது அறிவு, யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு.

உத்தியோகத்தில் வேலைச் சுமையால், குடும்பத்தில் சிறு கருத்து மோதல் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கப் பாருங்கள். ஆசிரியரின் ஒத்துழைப்பு உண்டு.

மொத்தத்தில் இந்த ராகு- கேது பெயர்ச்சி, உங்களை சமயோஜிதமாக செயல்பட வைத்து முன்னேற வைக்கும்.

தனுசு

தளராத மனமும் தான- தர்மங்களில் ஈடுபாடும் கொண்ட உங்களுக்கு, ராகுவும் கேதுவும் 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலத்தில் என்ன பலன்களைத் தரப்போகிறார்கள் பார்ப்போமா?

ராகுவின் பலன்கள்:

ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் தட்டுத் தடுமாறிய உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். சிலர் அவமதித்துப் பேசினாலும் தக்க பதிலடி தருவீர்கள். குடும்பத்தில் சிறு வாக்குவாதம் வந்து போகும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பிள்ளைகளுக்கு படிப்பின் மீது இருந்த அலட்சியம் மாறும். நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பண வரவு அதிகரிக்கும். என்றாலும் செலவினங்களும் துரத்தும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உங்களின் யோகாதிபதியான சூரியனின் உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் வேலை கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் மனைவியின் உடல்நிலை பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகும். பயணச் செலவுகள் அதிகரிக்கும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர்.

ராசியில் நிற்கும் ராகு அடிக்கடி தலைவலி, வீண் சந்தேகம் மற்றும் சலிப்பையும் உண்டாக்குவார். உறவினர்கள் சிலர் உதவி கேட்பர். வீண் பகை, மனக் கசப்பு ஏற்படும். பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். தெய்வ பலத்தால் பிரச்னையை சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் வரக்கூடும். வெளி உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது. எவருக்காகவும் ஜாமீன் போட வேண்டாம். இரவு நேரத்தில் வாகனத்தை கவனமாக இயக்கவும். அயல்நாட்டு பயணம் தேடி வரும்.

வியாபாரத்தில் அதிக முதலீடுகளைத் தவிர்த்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். போட்டியாளர்கள் அதிகரிப்பர். வேலை ஆட்கள் முரண்டு பிடிப்பார்கள். முக்கிய வேலையை முன்னின்று முடியுங்கள். பங்குதாரர்களை விட்டுப்பிடியுங்கள்.

புது ஆர்டர்கள், ஏஜென்சிகளை போராடிப் பெறுவீர்கள். அரசு விஷயங் களில் அலட்சியம் வேண்டாம். உத்தி யோகத்தில் தடைப்பட்ட உரிமைகளும் சலுகைகளும் கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கலைத் துறையினருக்கு பரிசு- பாராட்டு குவியும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

கேதுவின் பலன்கள்

இப்போது, ராசிக்கு 7-வது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார் கேது. உங்களின் தோற்றப் பொலிவை கூட்டுவதுடன், அறிவாற்றலையும் அதிகப்படுத்துவார். பிரபலங்கள் அறிமுகமாவர். பிள்ளைகளின் நலனுக்காக திட்டமிடுவீர்கள். உடன்பிறந்தோர் ஒத்துழைப்பர். 7-ஆம் வீட்டில் கேது அமர்வதால் தம்பதிக்குள் காரசார விவாதம் வந்து போகும். பரஸ்பரம் சந்தேகப்படுவதைத் தவிர்க்கவும். சொத்துப் பிரச்னை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம்.

கேது- 27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் தடைப்பட்ட வேலை நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். கடனை அடைப்பீர்கள். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத் தில் செல்வதால் மனைவிக்கு அறுவை சிகிச்சை, ஏமாற்றம், அலைச்சல் ஆகியன வந்து செல்லும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் பயம் விலகும். எதிலும் வெற்றி உண்டு.

7-ஆம் வீட்டில் கேது அமர்வதால் வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துமோதல் ஏற்படும். வேலையாட் களிடம் வீண் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு கிடைக்கும். கெட்ட நண்பர்களைத் தவிர்க்கவும்.

இந்த ராகு-கேது மாற்றம் உங்களை மேலும் பக்குவப்படுத்தும்; பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் வைக்கும்.

மகரம்

மனம் விட்டுப் பேசுபவர்களாக, எவர் பொய் சொன்னாலும் மன்னிக்காதவர்களாகத் திகழும் உங்களுக்கு ராகு-கேது பெயர்ச்சி என்ன செய்யும் என்று பார்ப்போமா?

ராகுவின் பலன்கள்

ராகுபகவான் இப்போது ராசிக்கு 12-ஆம் வீட்டுக்கு வந்து அமர்வதால் நோய் நீங்கும். முகத்தில் சந்தோஷம் பொங்கும். பிறரது பிரச்னைகளை கையில் எடுத்து சிக்கிய நிலை மாறும். விலகியவர்கள் வலிய வந்து பேசுவர். இழுபறியான பணிகள் முழுமையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவர். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், காது குத்து என நல்லதெல்லாம் நடைபெறும். தூரத்து உறவினர்கள்கூட உங்கள் வீடு தேடி வருவர்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் மனைவி வழியில் மருத்துவச் செலவு வந்து நீங்கும்.

29.12.2009 முதல் 5.9.2010 முடிய உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் செல்வதால் பணத்தட்டுப்பாடு நீங்கும். திருமணம் கூடி வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் புண்ணியத் தலங்களுக்குச் செல்வீர்கள். வி.ஐ.பி-கள் உதவுவர்.

பிள்ளைகளிடம் வெறுப்பாகப் பேசாமல், பாசமாகப் பழகுவீர்கள். அவர்களை உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு அயல்நாட்டுக்கு அனுப்புவீர்கள். உங்களின் உண்மையான அன்பை உடன்பிறந்தோர் உணருவர். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். பூர்வீகச் சொத்தில் இருந்த சிக்கல் விலகும். தந்தையுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். தாயாரின் உடல்நிலை சீராகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். குலதெய்வக் கோயிலை எடுத்துக் கட்டுவீர்கள். நாடாளுபவர்கள் உதவுவர்.

கன்னிப்பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, தூக்கமின்மை ஆகியன நீங்கும். கல்யாணம் நடைபெறும். வெளிநாட்டில் உள்ளவர்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகள் பலத்தை நிரூபித்து தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பார்கள். அக்கம்பக்கத்தாரது அன்புத் தொல்லை விலகும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை விற்பீர்கள். விலகிச் சென்ற வேலையாட்கள் வருவர். கூட்டுத் தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதியால் அதிக லாபம் வரும். உத்தியோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியைக் கவர்வீர்கள். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். கலைஞர்களுக்கு, புகழ் கூடும். வருமானம் உயரும்.

கேதுவின் பலன்கள்

உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் கேது அடியெடுத்து வைப்பதால் பிரச்னையின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். ஷேர் மூலம் பணம் வரும். சொத்து வாங்குவீர்கள்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உதவுவர். செல்வாக்கு கூடும். திருமணம் நடந்தேறும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் எவரை நம்பியும் முக்கிய முடிவு எடுக்க வேண்டாம். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் பங்காளிப் பிரச்னை தீரும்.

கேது 6-ல் நிற்பதால் புத்தி சாதுர்யத்துடன் பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். கையில் காசு,பணம் புரளும். பழைய கடனையும் பைசல் செய்வீர்கள். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும். உடல்நலம் சீராகும். உத்தியோகம் மீதான வழக்குகள் வெற்றி பெறும். ஆடை- ஆபரணங்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கௌரவப் பதவி தேடி வரும். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். மதிப்பெண் உயரும்.

விரக்தி மற்றும் பணப் பிரச்னையில் தவித்த உங்களுக்கு யோகங்களையும் உற்சாகத்தையும் வாரி வழங்குவதாக இந்த ராகு-கேது பெயர்ச்சி அமையும்

கும்பம்

அன்புடன் பழகி அனைவருக்கும் உதவும் உங்களுக்கு, 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலத்தில் ராகு-கேது மாற்றம் என்ன செய்யப் போகிறது... பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கை மற்றும் பணவரவைத் தருவதுடன் வீண் செலவையும் குறைப்பார். சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். மதிப்பு கூடும். தம்பதிக்குள் இருந்த சண்டை- சச்சரவு நிலை மாறும். குழந்தை பாக்கியம் கிட்டும். கடனை அடைப்பீர்கள். பிள்ளைகள், கெட்ட நண்பர்களிடம் இருந்து விலகுவர். உயர்கல்வியில் வெற்றி பெறுவர். மகனின் தனித் திறமையைக் கண்டுபிடித்து உற்சாகப் படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பயணம் மற்றும் வி.ஐ.பி-களின் தொடர்பு கிட்டும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். மே மாதம் முதல், வெற்றி உண்டு. திருமணம் கூடி வரும். வேலை கிடைத்து, அந்தஸ்து உயரும்.

6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் உடல் நலம் பாதிக்கும். பிரச்னையில் சிக்க வைக்க சிலர் முயலுவர். கவனம் தேவை.

11-ல் ராகு இருப்பதால் பாதியில் நின்ற வேலையை முடிப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் இடையே இருந்த மனக் கசப்பு நீங்கும். நண்பர்கள், உறவினர்களில் சிலர் எதிரியாக மாறிய நிலை மாறி, அனைவரும் பணிவர். குல தெய்வத்திடம் குழந்தைக்காக வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

பெண்களுக்கு தோஷம் நீங்கி கல்யாணம் நடைபெறும். சமயோஜித புத்தியுடன் செயல்படுவீர்கள். வழக்குகள் விரைந்து முடியும். அரசியல்வாதிகள் இழந்த பதவியைப் பெறுவர். அக்கம்பக்கத்தாருடன் உறவு சுமுகமாகும்.

வியாபாரத்தில் போட்டியை சமாளிக்க புதிய உத்தியைக் கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். அனுபவம் மிகுந்த வேலையாட்கள் வருவர். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு, சக ஊழியர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். திறமை வெளிப்படும். கலைத் துறையினருக்கு வேற்று மொழி வாய்ப்பு தேடி வரும். சம்பள பாக்கி வந்து சேரும்.

கேதுவின் பலன்கள்

கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய வீடான 5-ஆம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் பெருமை உண்டு. ஆனால் செலவும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். சேமித்த தொகையில் வீடு வாங்குவீர்கள். வதந்தியில் இருந்து விடுபடுவீர்கள். தயக்கம், தடுமாற்றம் ஆகியன வந்து நீங்கும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. அரசு காரியம் விரைந்து முடியும்.

4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் தலைச்சுற்றல், வயிற்றுவலி, அலைச்சல் மற்றும் செலவு உண்டு.

10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை, திடீர் பயணம் அதிகரிக்கும்.

கேது 5-ஆம் வீட்டில் அமர்வதால் பங்குதாரர்களிடையே நிலவிய பனிப்போர் நீங்கும். உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகள் ஆதாயம் தரும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் தேடி வரும். மாணவர்களுக்கு மந்தம், மறதி விலகும். கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள்.

இந்த ராகு- கேது பெயர்ச்சி, திக்கு திசையறியாது தடுமாறித் திணறிக்கொண்டிருந்த உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

மீனம்

எளிமையாக வாழும் உங்களுக்கு, 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலத்தில் ராகுவும் கேதுவும் என்ன பலன்கள் தரப் போகிறார்கள்... பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராசிக்கு பதினோராம் வீட்டில் இருந்து பொருள் வரவு, திடீர் லாபம், வாகன வசதி என தந்த ராகு பகவான் இப்போது பத்தாவது வீட்டில் அமர்கிறார். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதி அடைபடும். பணவரவு உண்டு. ஆடம்பரப் பொருட்கள் சேரும். நன்கு பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள்.

உழைப்புக்கேற்ற நற்பலனை அடைவீர்கள். ராகுவின் இந்தப் பெயர்ச்சியால், சுய சிந்தனை மேலோங்கும். சுயதொழில் செய்ய வல்லமை ஏற்படும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்கு சென்று வாருங்கள். குழந்தை பாக்கியம் உண்டு.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் வேற்று நாட்டிலிருப்பவர்கள் உதவுவர். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமையும்,ஆடம்பரச் செலவுகளும் அதிகரிக்கும். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். பணவரவு உண்டு. பதவிகள் தேடி வரும். மனைவிக்கு மருத்துவச் செலவு வரும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வ தால் வதந்திகள் வெளியாகும். சகிப்புத்தன்மையுடன் செயல்படுங்கள்.

ராகு 10-ல் வருவதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். படபடப்பு, டென்ஷன் விலகும். மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும். கன்னிப் பெண்கள் விரக்தி, சோம்பலில் இருந்து மீள்வர். நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துப் போவது நல்லது. வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு குடி புகுவீர்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் லாபம் உண்டு. பழைய சரக்குகளை சலுகை களால் விற்பனை செய்வீர்கள். பாக்கி களும் வசூலாகும். கடையை விரிவுபடுத்தி நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.

கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை கலந்து ஆலோசியுங்கள். மேலதிகாரிகளுடன் நெருக்கமாவீர்கள். இடமாற்றம் உண்டு. கலைஞர்களின் திறமைக்கு பரிசு- பாராட்டு கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து, புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்.

கேதுவின் பலன்கள்

ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, சொந்த- பந்தங்களிடையே கருத்து மோதல் என கசப்பான அனுபவங்களைத் தந்த கேது, இப்போது ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்வதால் பக்குவப்பட வைப்பார். கனிவான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகள் உங்கள் விருப்பங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. கௌரவ பதவிகள் தேடி வரும். அந்தஸ்து உயரும்.

4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் ஏமாற்றம், வீண்பழி, உடல்நலக்குறைவு, வேலைச்சுமை, விரக்தி ஏற்படக்கூடும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் வீடு- மனை வாங்குவது, விற்பதில் இருந்த சிக்கல்கள் தீரும்.

கேது 4-ஆம் வீட்டில் அமர்வதால் முக்கிய படிவங்களில் கையெழுத்திடும் போது யோசித்து கையெழுத்திடுவது நல்லது. தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சொந்த ஊரில் மதிப்பு- மரியாதை கூடும். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும்.

இந்த ராகு-கேது மாற்றம் நல்ல அனுபவ அறிவையும், பலரின் நட்பையும் அமைத்துத் தரும்.