Friday, February 27, 2009

புலிகளின் வான்வழித் தாக்குதல், வெளிவராத தகவல்கள்


இலங்கையின் கட்டுநாயக விமானப்படைத்தளமும் அதனையொட்டியுள்ள வான் படை தலைமையகமும் சிங்கள அரசின் அதி உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறது.

இதற்குள் ஊடுருவி மீண்டும் ஒருமுறை புலிகள் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல்… இலங்கை அரசுக்கு கிலிபிடிக்க வைத்துவிட்டது. புலிகளின் இந்த தாக்குதலை இலங்கை அரசு முறியடித்துவிட்டாலும், “”இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது” என்று சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன.

வன்னியில் உள்ள தமிழர்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தும் சிங்கள அரசுக்கு, “”எங்கள் தமிழர்கள் வாழும் பகுதியில் குண்டுவீச்சைத் தொடர்ந்தால் சிங்களர்களின் தலைநகரமான கொழும்பு மீது நாங்கள் குண்டு வீசுவோம்” என்ற எச்சரிக்கும் விதத்தில் புலிகள் நடத்திய தாக்குதலாகத்தான் இதைப் பார்க்கிறோம் என்கி றார்கள் இன்னமும் பீதி விலகாத கொழும்புவாசிகள்.

இலங்கையின் பாதுகாப்புத் துறை பேச்சாளரும் அமைச்சருமான கெகலியேரம்புக்வெல, “”புலிகள் நடத்திய வான் தற்கொலைத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் விமானப்படைத் தளத்தை முற்றிலும் அரசு இழந்திருக் கும்!” என்கிறார் மிரட்சியுடன்.
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள புலிகள் தலைமை, ”வான்படைத் தலைமையகமும் கட்டுநாயக வான்படைத் தளமும் தமிழ்மக்கள் மீதான வான் வழி தாக்குதல்களில் முக்கிய பங்கு வகிப்பவை.

அதனால் அதனை இலக்கு வைத்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தினோம்” என்கிறது.

கடந்த 21-ந் தேதி இரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பிரபாகரனிடம் நீலப்புலிகள் விருது பெற்ற வான்கரும்புலிகளின் (தற்கொலைப்படை) முக்கிய தளபதிகளில் ஒருவரான ரூபன் மற்றும் சிரித்திரன் பங்கேற்றனர்.

“”தற்போது நடத்தப்பட்ட தாக்குதலோடு இதுவரை 9 முறை விமானத்தாக்குதலை நடத்தியுள்ளனர் புலிகள்.

இதற்குமுன்பு நடத்தப்பட்ட தாக்குதல்கள் எல்லாமே, இலக்கை குறிவைத்து குண்டுகளை வீசிவிட்டு பத்திரமாக திரும்பிவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் வியூகங்கள் வகுத்தனர் புலிகள். ஆனால் முதல் முறையாக வான்வழி தற்கொலைத்தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக் கின்றனர்.
அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது போன்ற ஒரு தற்கொலை வான்படைத்தாக்குதல் நடத்தப்பட்டால்தான் நோக்கம் நிறைவேறும் என புலிகள் கருதியிருக்கக் கூடும்”என்கிறார்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

“புலிகளின் பரப்பளவை சுருக்கிவிட் டோம், அவர்களின் 7 விமான ஓடுதளங் களையும் கைப்பற்றி அழித்துவிட்டோம். புலிகளால் இனி செயல்படமுடியாது.விமான தாக்குதலையும் நடத்தமுடியாது. ஓரிரு நாட்களில் புலிகளை முற்றிலும் அழித்து விடுவோம்.

air-tigers
சரணடைவதை தவிர வேறு வழிகள் அவர்களுக்கு இல்லை’ என்றெல்லாம் சிங்கள ராணுவம் இறுமாந்திருக்கும் நிலையில்தான் திடீரென பிரதான வான் வழியிலேயே தங்களின் 2 விமானங்களை சீறிப்பாய வைத்து தாக்குதலை நடத்தி இலங்கை அரசை கதிகலங்க வைத்துள்ளனர் புலிகள்.

இந்த தாக்குதல் எப்படி நடந்துள்ளது என்று வன்னி பிரதேசத்தில் விசாரித்தபோது, “”வன்னிப் பகுதியில் புதுக்குடியிருப்பு மற்றும் அதனையொட்டிய கடற்பரப்புமாக சேர்ந்து 100 சதுரகிலோ மீட்டர் பரப்பளவிலேயே புலிகள் உள்ளனர்.
இந்த பகுதியை சகல முனைகளிலும் சுற்றி வளைத்து 8 படையணி களை நிற்க வைத்து கடுமையாக தாக்குதலை நடத்திவருகிறது ராணுவம். இது தவிர முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிநவீன 25-க்கும் மேற்பட்ட டோரா கப்பல்களை நிறுத்தி தீவிரமாக கண்காணித்து வரு கின்றனர். அதேபோல முல் லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் எல்லாம் இந்தியா வழங்கிய ராடார்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக் கிறது.
இதனையெல் லாம் மீறித்தான் இந்த தாக்குதலை நடத்தி யிருக்கிறார்கள் புலிகள்.

புதுக்குடியிருப்பு மற்றும் தங்கள் கட்டுப் பாட்டில் உள்ள கடற் பிரதேசத்தில் 2 ஓடு தளங்களை வைத்திருக் கிறார்கள்.
கடற்பிரதேச ஓடுதளத்திலிருந்து முல் லைத்தீவு வழியாக கொழும்பு நோக்கி விரைய ஒரு திட்டம் போடப்பட்டிருக்கிறது.
ஆனால், முல்லைத்தீவு வான்வழி என்பது திறந்தவெளி பகுதி. இதில் பயணித்தால் கடல் பகுதியில் உள்ள சிங்கள கடற்படை… தங்கள் விமானம் புறப்பட்ட இடத்திலேயே தாக்கி அழித்துவிட சாத்தியங்கள் அதிகம்.
அதிலும் கொழும்பு நோக்கி செல்ல முல்லைதீவு தேவையும் இல்லை என கருதி புதுக்குடியிருப்பு பகுதி ஓடுதளத்திலிருந்தே விமானங்களை இயக்க முடிவெடுத்துள்ளார் பிரபாகரன்.

அதன்படி, புதுக்குடியிருப்பிலிருந்து இரவு 8.25க்கு ஒரு விமானமும் 8.40க்கு மற்றொரு விமானமும் புறப்பட்டது.
இந்த 2 விமானங்களில் ஒன்றில் கேணல் ரூபனும் மற்றொன்றில் கேணல் சிரித்திரனும் பயணித்தனர். 2 விமானங்களிலும் 230 கிலோ எடைகொண்ட சி 4 ரக வெடிமருந்துகளும் குண்டுகளும் நிரப்பப் பட்டன.
இலக்கை அடைந்ததும் விமானங் களை தாழ்வாக இறக்கி விமானத்தை வெடிக்க வைத்து இலங்கை அர சின் வான்படைத்தளத் தையும் வான் படைத் தலைமையகத்தையும் சிதறடிப்பதுதான் திட் டம்.

இந்த திட்டத்தின் படி இரவு 9.40 க்கு கொழும்புவை அடைந் துள்ளன. புலிகளின் விமானம் பறந்த பாதை என்பது இலங் கை விமானப் படையினர் பயன்படுத்தும் பிரதான வான் வழி பாதையாகும்.

ஆனால் இந்த பகுதிகளில் இருந்த ரேடார் களின் பார்வையில் படாமல் விரைந்துள்ள புலிகளின் விமானம் கொழும்புக்குள் நுழைந்தபோது தான் அங்கிருந்த ரேடார்களில் சிக்கியுள்ளது.
அப்போதுதான் கண்டறிந்துள்ளனர் ராணுவத்தினர். உடனடியாக கொழும்பு முழுவதும் மின்சாரத்தை துண்டித்தனர்.

ஆகாயத்தில் ஒளிவெள்ளத் தை பாய்ச்சி புலிகளின் விமானத்தை தேடினர்.

சட்டென்று விமானங்கள் சிக்காததால் உயர்பாதுகாப்பு வளைய பகுதி முழுவதும் நின் றிருந்த ராணுவத்தினர் விமான படைஎதிர்ப்பு பீரங்கி மூலம் ஆகாயத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

இதில் விமான படைத் தலைமையகத்தை தாக்குவதற்கு நெருங்கிவிட்ட விமானம் நிலை தடுமாற… அருகில் இருந்த வருமான வரித் துறையின் 13 மாடி கட்டி டத்தில் மோதி விபத்திற்குள்ளாகி விட்டது.

இதனால் அந்த கட்டிடம் தீப்பற்றி எரிந்தது. அதேவேளையில் வான்படைத்தளத்தைநெருங்கி விட்ட மற்றொரு விமானத்தை நோக்கி ராணுவத்தினர் சுட… அந்த விமானமும் இலக்கை அடைய முடியவில்லை.

மின்சாரத்தை துண்டித்து விட்டு ஆகாயத்தில் சரமாரியாக பீரங்கி தாக்குதலை ராணுவம் நடத்தியதால் புலிகளின் தளபதிகள் தடுமாறிவிட்டனர்.
தங்களிடமிருந்த வெடிகுண்டுகளை இயக்குவதற்கு முன்பு புலிகள் மீது ராணுவத்தின் குண்டுகள் பாய்ந்ததால் செயல் இழந்து விட்டது புலிகளின் விமானம்.
ஒரு 5 நிமிடம் ராணு வத்தின் தாக்குதலிலிருந்து புலிகளின் விமானத்தில் ஏதேனும் ஒன்று தப்பித்திருந்தாலும்கூட ராணுவத்திற்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியிருப் பார்கள்.

பெரிய இழப்புகள் ராணுவத்திற்கு இல்லையென்றா லும் கூட.. புலிகள் தங்களால் எந்தசூழலிலும் பலத்தை நிரூபிக்க முடியும் என்று உணர்த்தியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்”’என்கின்றனர்.

இலங்கை ராணுவ வட்டாரங்களில் விசாரித்த போது,’”"வவுனியா, மன்னார் வழியாக புலிகளின் விமானம் பயணிக் கிறபோதே எங்களுக்கு தகவல் வந்து விட்டது.
இந்தியா வழங்கிய ரேடார்கள் இந்த முறை தப்பு செய்யவில்லை.

மிக துல்லியமாக எங்களுக்கு காட்டிக்கொடுத்தது. அத்துடன் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது என்பதையும் கணக்கிட்டு சொல்லியது ரேடார்கள்.
அதனால் கொழும்பில் வைத்து அதனை தகர்க்கவேண்டு மென்று புலிகளின் விமானத்தை இடையில் மறிக்கவில்லை.
அதேசமயம், ராணுவத்தின் விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் படையணியினரையும் உஷார் படுத்திவிட்டு காத்திருந்தோம்.

கொழும்பிற்குள் நுழைந்ததுமே மின்சாரத்தை துண்டித்துவிட்டு அதிரடியான தாக்குதலை நடத்தியதில் புலிகளின் விமானங்களை வீழ்த்திவிட்டோம்.

ரிஸ்க்கான ஆபரேசன்தான். கொஞ்சம் தவறியிருந்தாலும் புலிகள் ஜெயித்திருப்பார்கள்.

சமாளிக்கவே முடியாத அளவிற்கு ராணுவத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும்.

ஆக புலிகளிடமிருந்த 2 விமானங்களையும் அழித்துவிட்டோம்.

இனி அவர்கள் வான்வழித் தாக்குதல் நடத்த முடியாது. புலிகளுக்கு மிகப்பெரிய இழப்பு இது”’என்கின்றனர் ராணுவ உயர் அதிகாரிகள்.

ஆனால் புலிகள் தரப்போ,’”"ஏற்கனவே நாங்கள் பயன்படுத்திய விமானத்திற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
தற்போது பயன்படுத்தியது ஒருவர் அமர்ந்து செல்லும் மிக சிறிய ரக விமானம். ஏற்கனவே பயன்படுத்தியது இருவர் மற்றும் நால்வர் அமர்ந்து செல்லும் விமானங்கள்.
அந்த விமானங்கள் இன்னமும் பத்திரமாகத்தான் இருக்கிறது. அதனால் புலிகளின் வான் வழித்தாக்குதல்கள் தொடரும்”’என்கின்றன வன்னியிலிருந்து வரும் தகவல்கள்.
புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ள ராணுவத் தினர் அந்த விமானத்திலிருந்து வெடி மருந்துகளை கைப்பற்றியிருப்ப துடன் அந்த விமானங்கள் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது?

என்ன உலோகத்தால் உருவாக்கியிருக்கின்றனர்? எத்தனை பாகங் களாக பிரிக்க முடிகிறது? எந்த நாட்டிலிருந்து விமான பாகங்களை வரவழைத்துள்ளனர்”என்று தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

-கொழும்பிலிருந்து எழில்

இலங்கை வான்படையின் விமானம் வன்னியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது


இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று இன்று முல்லைத்தீவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. இற்த விமானம் இலங்கை நேரம் முற்பகல் 11.30 அளவில் இரணைப்பாலைப் பகுதியில் வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே விடுதலைப்புலிகளிடம் விமான எதிர்ப்பு சுடுகலன்கள் இருப்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில்

இன்று இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மக்கள் மீது இன அழிப்புத் தாக்குதலை மேற்கொண்டு வந்த கிபிர் ரக விமானமே இன்று வெள்ளிக்கிழமை காலை 11.25 மணியளவில் இரணைப்பாலை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினர் இதனைச் சுட்டு வீழ்த்தியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.விமானம் வானத்தில் வெடித்துச் சிதறியதை அங்குள்ள மக்கள் நேரில் பார்த்துள்ளனர்.முன்னதாக சிறீலங்கா வான்படையின் விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் ராடரைவிட்டு மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

வன்னி வான்பரப்பில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த சென்ற போது காணமல்போயுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி வெளிவந்துள்ளது.
தற்போது சண்டை நடைபெறும் பகுதியிலே இவ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த முக்கிய செய்தி
புதுக்குடியிருப்பை ஆக்கிரமிக்கும் சிறீலங்காவின் நடவடிக்கை பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் புதுக்குடியிருப்பை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சுமார் 1500 வரையான படையினர் கொல்லப்பட்ட நிலையில் நேற்றும் இன்றும் நடைபெற்ற சண்டையில் மேலும் நூற்றுக் கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன், சுமார் 15 கிலோ மீற்றர் படையினர் பின் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

எனினும் இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து செய்திகள் எவையும் வெளிவரவில்லை. இதுவேளை, முழுமையான போர் செய்திகள் தணிக்கையில் உள்ள நிலையில் சிறிலங்கா தரப்பில் இருந்தும் இது தொடர்பான தகவல்கள் எவையும் வெளிவரவில்லை.

எனினும் உலங்குவானூர்திகள் களமுனைகளில் அவசரமாக இறங்கி ஏறுவதாகவும், கொழும்பில் அவசர வாகனங்கள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவருகின்றது.

இதேவேளை, இன்றைய தாக்குதலின் போது சிறிலங்கா வான் படையின் கிபிர் விமானம் ஒன்றும் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாதுகாப்புத்தரப்பிடம் இருந்து தெளிவான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. மேலதிக தவல்கள் விரைவில்.

Wednesday, February 11, 2009

இலங்கையில் வெற்றி யாருக்கு

ராஜபக்சவும், பிரபாகரனும், இலங்கையும் ஒரே ராசி (விருச்சிகம்) என்று கூறியிருந்தீர்கள். ஜாதக ரீதியான வேறுபாடுகளில் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்?

பதில்: மேஷம், ரிஷபம் சேர்ந்து விருச்சிக ராசி பிறந்திருக்கிறதா அல்லது கடகம், கன்னி சேர்ந்து விருச்சிகம் வந்துள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் மனிதர்களில் எந்த ராசியும், எந்த ராசியும் சேர்ந்து இந்த (குழந்தை) ராசி பிறந்துள்ளது என்பது ரொம்ப முக்கியம்.

இதில் பிரபாகரன் விருச்சிக ராசி, அனுசம் நட்சத்திரம். பொதுவாக அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் கொள்கை/துறையில் உறுதியாக இருப்பார்கள். அது போராடும் துறையாக இருந்தாலும், துறவறம் மேற்கொள்வதாக இருந்தாலும் அதில் பிடிப்புடன் கடைசி வரை இருப்பார்கள். விடுதலை வேட்கையும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் போராடி வருவதால்தான் வெற்றி, தோல்வியின்றி ஈழப் போர் நீண்டு கொண்டே செல்கிறது.

கோச்சார கிரகங்களின் படி பார்த்தால் ஒரே ராசிக்காரர்களுக்கு ஒரே மாதிரியான பலன்கள் இருக்கும். ஆனால் பிறக்கும் போது இருக்கக் கூடிய கிரக அமைப்புகளின் படி கணிக்கப்படும் தசா புக்தி பலன்கள் மாறுபடும். இதில் புலிகள் தலைவருக்கு அது சாதகமாக இருக்கிறது.

நவாம்சத்தை வைத்துப் பார்த்தாலும் அந்த நாடு அவருக்கு இடம் கொடுக்கும். புறம் தள்ளுவதற்கான வாய்ப்பு இல்லை.

பிரபாகரனுக்கு கண்டம் ஏதும் இல்லை!


தமிழ் வார இதழ் ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு ஜனவரி 22ஆம் தேதி அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய கண்டம் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது உலகத் தமிழர்களிடையே பதற்றத்தையும், பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளது.

ஜோதிடப்படி அவருக்கு உண்மையாகவே இன்று (ஜனவரி 22) கண்டம் உள்ளதா? என்ன அடிப்பையில் உள்ளது என்பதை விளக்கிக் கூறுங்களேன்?

பதில்: அவருடைய (புலிகள் தலைவர் பிரபாகரன்) ஜாதகத்தைப் பார்க்கும் போது ராசி, கிரக அமைப்புகள் சற்று வலுவாகவே உள்ளது. ராசிநாதன் செவ்வாய் கடந்த இரண்டே முக்கால் மாதமாக (அக்டோபர் பிற்பகுதியில் இருந்து) கொஞ்சம் வலுவிழந்து காணப்படுகிறார்.

ஆனால் அதே செவ்வாய் வரும் ஜனவரி 27ஆம் தேதி உச்சமடைகிறார். இது அவருக்கு மிகப் பெரிய பலத்தை அளிக்கும். பொதுவாகவே விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரத்திற்கு ராசிக்கு 3ஆம் இடத்தில் செவ்வாய் உச்சமடைவது மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும்.

அதே நேரத்தில் தற்போது விடுதலைப்புலிகள் பின்வாங்குவது ஏன் என்று பார்த்தால் அதற்கு பல காரணங்கள் உள்ளது. ஏனென்றால் நவாம்சத்தைப் பொறுத்த வரை இவரது லக்னம் கடகம். இதற்கான குறியீடு நண்டு ஆகும். பொதுவாகவே நண்டு பதுங்கும். அதற்கடுத்து வேகமாக வெளிப்படும்.

நண்டைப் பொறுத்தவரை பாதுகாப்பு அரண் ஏற்படுத்திக் கொண்டு அதன் பின்னர் பாய்ந்து தாக்கக் கூடிய குணத்தை உடையது. எனவேதான், அவர் பின்வாங்குகிறார் என்று கூறுவதை ஜாதக அமைப்பின்படி தோல்வியாக கருத முடியாது. அடுத்தடுத்த கட்டங்களில் அவர் ஆவேசமாக வெளிப்படுவதற்காக எடுத்துக் கொள்ளும் காலம் என்று கருதலாம். ஏனென்றால் அவரது ஜாதகத்தில் உள்ள கோள்களின் அமைப்பும் அதனைத்தான் உணர்த்துகின்றன.

நவாம்சத்தில் கடகமாக இருப்பதாலும், ராசியில் விருச்சிகமாக இருப்பதாலும், ஜோதிடப்படி இவரிடம் வேகம்+விவேகம் நிறைந்திருக்கும். ஜனவரி 27ஆம் தேதி முதல் பிரபாகரனுக்கு பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும்.

பொதுவாக விருச்சிக ராசிக்காரர்கள் தாங்கள் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சவும் ஜனன ஜாதகப்படி விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம் என்றாலும், நவாம்சத்தைப் கருத்தில் கொள்ளும் போது இவர் பிரபாரகரனிடம் இருந்து வேறுபடுகிறார்.

நவாம்சத்தில் கடகமாக இருப்பதாலும், ராசியில் விருச்சிகமாக இருப்பதாலும் பிரபாகரனுக்கு உறுதியாக வெற்றி கிடைக்கும். ஆனால் காலம் கடந்து, கடுமையாக போராடிய பின்னர் கிடைக்கும். ஆனால் அந்த வெற்றி சரித்திரத்தில் இடம்பெறக் கூடிய மிகப்பெரிய அளவில் இருக்கும்.

நவாம்சத்தைப் பொறுத்தவரை தற்போதைய அதிபர் ராஜபக்சவை விட, இவருடையது சிறப்பாக இருப்பதால் ஜனவரி 27இல் இருந்து சிறப்பு பலன்களை எதிர்பார்க்கலாம். நல்ல மாற்றங்கள் உண்டாகும். பாதிப்புகள் இருக்காது.

பொதுவாக நவாம்சத்தில் கடகம் வந்தாலே அவர்களுக்கு ஊடகங்களின் ஆதரவு கிடைக்காது. ஏனென்றால் சந்திரனின் லக்னம் கடகம். ஊடகங்களுக்கு உரிய கிரகம் புதன். ஆனால் சந்திரனும், புதனும் பகைக்கோள்கள். எனவே அவருக்கு ஊடகங்களின் (நாளிதழ், வாரஇதழ், தொலைக்காட்சி, மாதஇதழ்) ஆதரவு கிடைக்காது. வேண்டுமானால் அவதூறு பரப்பலாம்.
என்றாலும் இதுபோன்றவற்றையும் தாண்டி நிஜமாகவே வெற்றி பெறக் கூடிய வலிமையான கிரக அமைப்புகள் அவருக்கு உள்ளது.

கடந்த அக்டோபரில் இருந்து வலுவிழந்து காணப்பட்ட செவ்வாய், நடுவில் ஆட்சி பெற்றது. ஆனால் அப்போதெல்லாம் சிறப்பான பலன்கள் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது செவ்வாய் உச்சமடைவதை ஜோதிட ரீதியாக பெரிய பலமாக கருத வேண்டும். இதனால் இலங்கையில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். சிறிலங்க படையினரை தடுத்து நிறுத்துதல், அவர்களுக்கு பதிலடி கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் இனி நடைபெறும்.

இந்தியாவின் ஆதரவு கிடைக்கும்!

கேள்வி: கடக ராசி பற்றி விவாதித்ததால் இதனைக் கேட்கிறேன். இந்தியாவும் கடக ராசிதான். ஆனால் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கு எதிராகவே இந்தியா நடந்து கொள்கிறதே ஏன்?

இங்கே ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தியா கடக ராசி. ஆனால் பிரபாகரனுக்கு நவாம்சத்தில்தான் கடக லகனம் உள்ளது. எனவே தற்போது இந்தியா அவருக்கு உதவி செய்யாதது போல் நடந்து கொண்டாலும், எதிர்காலத்தில் அவருக்கு உதவும் நிலை உறுதியாக ஏற்படும். அதற்கான சாத்தியங்கள் ஜோதிட ரீதியாக வலுவாக உள்ளன.

நீங்கள் சொன்ன மாதிரி இந்தியா கடக ராசி, பூசம் நட்சத்திரம். புலிகள் தலைவருக்கு விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம். நண்டுக்கும், தேளுக்கும் எப்போதுமே பகை கிடையாது.
ஏனென்றால் ஜோதிட ரீதியாக கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகள் எப்போதுமே பகையாக கருதப்படாது. அவற்றிடைய உள்ளூர ஆத்மார்த்தமான அன்பு உள்ளது.

அரசியல் சூழல் காரணமாக தற்போது இந்தியாவின் நிலை மாறுபட்டிருக்கலாம். காரணம் இப்போது கடக ராசிக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. இக்காலத்தில் விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களை இந்தியா பகைத்துக் கொள்ளலாம். அதுமாதிரிதான் கருத வேண்டும்.

எதிர்வரும் 27-9-2009 உடன் இந்தியாவுக்கான ஏழரைச் சனி நிறைவடைகிறது. அதன் பின்னர் இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகளில் சில மாற்றங்களை உறுதியாக நம்பலாம். எதிர்த்தவர்களை ஆதரிப்பதும், ஆதரித்தவர்களை எதிர்ப்பதும் போன்ற மாற்றம் ஏற்படலாம்.

முதல்வர் நல்ல முயற்சிகள் மேற்கொள்வார்

கேள்வி: அப்போது தமிழகத்தின் நிலை எப்படி இருக்கும்?

தற்போதைய முதல்வர் ஜோதிடப்படி கடக லக்னம், ரிஷப ராசியில் பிறந்துள்ளார். புலிகள் தலைவருக்கு நவாம்சத்தில் கடக லக்னம் என்பதால், தமிழகத்தில் நாடாளுபவரின் மூலம் ஆதரவான முயற்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கடந்த காலத்தில் சில கிரக அமைப்புகள் சரியில்லாமல் இருந்தது. ஆனால் இனி சிறப்பாக கிரக நிலை அமைய உள்ளதால் முதல்வரால் சில நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நம்பலாம்.

கேள்வி: ஆனால் சமீபத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடுத்த எந்த நடவடிக்கைகளும் பலன் அளிக்கவில்லையே?

அதற்கு காரணம் தமிழகத்தை ஆளுபவருடைய கிரக அமைப்பு, மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஜாதக அமைப்புதான்.

சோனியாவின் ஜாதகப்படி அவர் மிதுன ராசி. பொதுவாக மிதுனம் என்பது புதனுடையது ராசி. நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி புதனும், விருச்சிகமும் பகையானவை என்பதால் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே இவ்விடயத்தில் மத்திய அரசு பின்வாங்குகிறது. அதனால்தான் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது.

கேள்வி: ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் பிரதமரான மன்மோகன் சிங்கின் ஜாதக அமைப்பு கருத்தில் கொள்ளப்படாதா?

நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இயங்கும் தசை, இயக்கும் தசை என்று இருப்பது போல்தான் அவரது ஜாதக அமைப்பை கருத்தில் கொள்ள வேண்டும்.

Friday, February 6, 2009

புதுக்குடியிருப்பில் புலிகள் மேற்கொண்ட ஊடறுப்பு தாக்குதலில் 1000 ற்கும் அதிகமான படையினர் பலி;பெருமளவில் ஆயுத தளபாடங்கள் மீட்பு
பெப்ரவரி 1ம் திகதி விடுதலைப்புலிகள் புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவான கனரக ஆயுதங்கள் அடங்கிய படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா சிறப்பு படைப்பிரிவினர் மன்னாகண்டல் மற்றும் கேப்பாபுலவு ஆகிய பகுதிகளில் முகாமிலிருந்து புதுக்குடியிருப்பை பகுதியை கைப்பற்றும் நோக்கில் இறுதித் தாக்குதலுக்கு தயாராகி இருந்த வேளையில் விடுதலைப் புலிகளின் சிறப்பு படையணிகள் இராணுவத்தின் பின்வளங்களை ஊடறுத்து பாரிய முற்றுகைத் தாக்குதலை கடந்த முதலாம் திகதி மேற்கொண்டனர்.

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்:

கடந்த பெப்ரவரி 1ம் நாள் புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கேப்பாபுலவு மற்றும் மன்னாகண்டல் பகுதிகளில் பெருமளவு படையினரும், பெருந்தொகையான படையப்பொருட்களும் குவிக்கப்பட்டிருந்தன.

இதனை அறிந்த விடுதலைப்புலிகள் அதிகாலை வேளையில் முகாமின் பின்தளப்பகுதி ஊடாக ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதல் 3 ம் திகதிவரை தொடர்ந்தது.

இதன்போது படையினர் எதிர்பார்க்காமல் இருந்த நிலையில் நடத்தப்பட்ட திடீர்த்தாக்குதலினால் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பலியாகினர். பல கனரக படையப்பொருட்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் யுத்த டாங்கிகள், யுத்த துருப்புக் காவிகள், கவச வாகனங்கள், ட்றக் வண்டிகள், உழுபொறிகள் உட்பட சிறீலங்கா படைகளின் 20 வழங்கல் ஊர்திகள், தமிழீழ விடுதலைப் புலிகளால் துடைத்தழிக்கப்பட்டன.

அத்துடன் 3ம் திகதி கரும்புலி வீரர்களின் தாக்குதலினால் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். பெருந்தொகையில் படையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்

81 மில்லி மீற்றர் மோட்டார்கள் - பல
120 மில்லி மீற்றர் மோட்டார்கள் - பல
120 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் - 2000
81 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் - 8000
ஏ.கே துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்
ஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல
ஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல
ஆர்.பி.ஜி புரொப்ளர்கள் - பல
எல்.எம்.ஜி துப்பாக்கிகள் - பல

என இன்னும் பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை செவ்வாய்கிழமை கேப்பாப்புலவு பகுதியில் இடம்பெற்ற கரும்புலி தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டதாகவும் புதன்கிழமை வெளிவந்த ஈழநாதம் பத்திரிகை தெரிவித்திருந்தது. அதில் கரும்புலி தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளின் தேசியத் தலைவருடனான படங்களும் பிரசுரமாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


Tiger female commandos in final preparation before the preemptive strike [Photo: LTTE]


An LTTE commando with mortar [Photo: LTTE]


An LTTE commander of the female fighters [Photo: LTTE]


LTTE female commandos before launching the attack [Photo: LTTE]


Tiger fighters in a tank heading towards a frontier.

Tuesday, February 3, 2009

இல்லாமல் போகுமா இலங்கை?--ரசாயன ஆபத்து...


லகம் முழுக்க வியாபித்திருக்கும் தமிழர்கள் ஒருசேரக் குரல் கொடுத்தும் சிங்கள அரசின் யுத்த வெறியாட்டத்துக்கு முடிவு கட்ட யாரும் முன்வரவில்லை! ''இன்னும் பத்தே நாட்களில் புலிகளைப் பூண்டோடு அழித்து விடுவோம்!''

எனக் கொக்கரித்திருக்கும் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவ நடவடிக் கைகளை உக்கிரமாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார். இதுநாள் வரை பதிலடித் தாக்குதல்கள் நடத்தாமல் தற்காப்பு போர் முறைகளையே பின்பற்றி வரும் புலிகள் தரப்பு,

கல்மாடுகுள அணைத் தகர்ப்பைப் போல் அதிரடியாக ஏதோ நடத்தும் முடிவில் இருப்பதாகவும் இலங்கையில் இருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பொய்யாகிப் போன போர்நிறுத்தம்!

சிங்கள ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் தங்கி இருந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய கொடூரம், உலக நாடுகளையே கோபப்பட வைத்தது. ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் கடுமையான

வார்த்தைகளால் இலங்கை அரசை புரட்டி யெடுக்க, உடனடியாக அவரை சந்தித்திருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரர் பசில் ராஜபக்ஷே. அந்த சந்திப்பின்போது, '2009-ம் வருடத்துக்குப் பிறகு ஒரு மாதத்தில் 439 தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். 1,732 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். 173 தமிழர்கள் காணாமல் போயிருக்கின்றனர்.

சராசரியாக நாளன்றுக்கு 14 தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்' என ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணைய செயலர் நவநீதம் பிள்ளை வழங்கிய சில புள்ளிவிவரங்களை விளக்கி, இலங்கையில் மனித உரிமைகள் சுத்தமாக மலிந்துவிட்டதாக பான் கீ மூன் ஆவேசப்பட்டிருக்கிறார். அதேநேரம், பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மில்லிபேன்டும், 'அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனும் இலங்கையின் நிலைமை கவலையளிப்பதாகவும், படுபாதகக் கொலைகளை ராணுவம் நிகழ்த்துவதாகவும்' கருத்து வெளியிட்டிருந்தார்.

இன்னொரு பக்கம், 'இதேநிலை தொடர்ந்தால், இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டியிருக்கும்' என ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியம் எச்சரித்தது.

இதற்கிடையில், தமிழக அரசும் போர்நிறுத்தம் குறித்து மத்திய அரசை வற்புறுத்தியது. 'முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று சிங்கள அரசிடம் பேசினோம். அதையடுத்து 48 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டது' என முதல்வருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதம் சட்டமன்றத்திலும் முதல்வரின் சார்பில் வாசிக்கப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் இலங்கையின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளே, 'நாங்கள் போர்நிறுத்தம் குறித்து எந்தக் கருத்தும் சொல்லவில்லை. தமிழர்கள் வெளியேறுவதற்கான அவகாசத்தைத்தான் கொடுத் தோம்' எனப் போட்டுடைத் தார்கள்.

இதுகுறித்துப் பேசும் இலங்கையின் தமிழ் கூட்டமைப்பு எம்.பி-க்கள், ''ராஜபக்ஷே இந்திய அரசை ஏமாற்றினாரா... இல்லை இந்திய அரசு தமிழக முதல்வரை ஏமாற்றியதா என்று தெரியவில்லை. போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவித்துவிட்ட சிங்கள ராணுவம், மக்கள் வெளியேறக் கெடு கொடுத்த காலத்திலும், தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக்கொண்டுதான் இருந்தது. புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, சுதந்திரபுரம் ஏரியாக்களில் செல் தாக் குதலுக்கும் பீரங்கித் தாக்குதலுக்கும் ஆளாகி ஏராளமான அப்பாவித் தமிழர்கள் இறந்து போனார்கள். செஞ்சிலுவைச் சங்க ஊழியர்களின் மீதும், மருத்துவமனை மீதும் ஈவு இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டன!'' என்கிறார்கள்.

முல்லைத்தீவை ஒட்டிய காட்டுப்பகுதியில் கிட்டத் தட்ட இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் தஞ்ச மடைந்துள்ள நிலையில், 48 மணி நேர போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து நிறைய தமிழர்கள் அரசு பகுதிகளுக்குள் தஞ்ச மடைவார்கள் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், வெறும் 226 பேர் மட்டுமே வெளியேறி இருக்கிறார்கள். தமிழ் எம்.பி-யான மனோ கணேசன் நம்மிடம், ''அரசு 48 மணிநேர அவகாசத்தை அறிவித்ததுமே அரசுடன் கூட்டணியிலிருக்கும் ஜாதீக ஹெல உறுமய கட்சியினர், 'வன்னியிலிருந்து வெளியேறும் எல்லோருமே புலிகள்தான்' என்றொரு கருத்தை வெளியிட்டனர். வன்னியிலிருந்து போர் காயங்களுடன் வெளிவரும் மக்களை மருத்துவமனைகளில் அனுமதிப்பதைவிட ரகசிய முகாம்களில் வைத்து சித்ரவதைதான் செய்கிறார்கள்!'' என்கிறார்.

மீண்டும் 'செம்மணி' சித்ரவதைகள்!

இலங்கையின் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவின் திட்டப்படி உருவானதுதான் செம்மணி சித்ரவதைகள். இதுகுறித்துப் பேசும் கொழும்புவாழ் பத்திரிகையாளர்கள், ''பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு விடுதலைப்புலிகளுடன் நடந்த போரில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது சிங்களப்படை.

அதற்கு முக்கியக் காரணமாக இருந்த ஃபொன்சேகா, அப்பாவி தமிழ் இளைஞர்களையும் இளம் பெண்களையும் இலங்கையில் உள்ள செம்மணி என்கிற இடத்தில் அடைத்து வைத்துக் குரூரமாக சித்ரவதை செய்து, ஒரே இடத்தில் புதைக்கச் செய்தார். அப்படி புதைக்கப்பட்டதில், இறந்தவர்கள் மட்டுமல்லாது அரைகுறை உயிரில் அல்லாடியவர்களும் அடக்கம். ஃபொன்சேகாவின் இந்தக் கொடூரம் வெளியுலகுக்குத் தெரிந்தபோது, உலக நாடுகளின் கடும் கண்டனத்துக்கு இலங்கை ஆளானது.

ஆனாலும், செம்மணி சித்ரவதைகள் நிறுத்தப் படவில்லை.... சிங்கள ராணுவத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகின்றன. கடந்த இரு வாரங்களில் மட்டும் 25 இளைஞர்களும், 27 பெண்களும் தமிழர் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து காணாமல் போயிருக்கிறார்கள். இளைஞர்களைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்ற சிங்கள ராணுவம், பெண்கள் மீது பாலியல் சித்ரவதைகளை ஏவி விட்டிருக்கிறது.

இறந்த பெண்களின் மார்புகளை அறுத்த கொடூரங்கள்கூட நடந் திருக்கின்றன! இதற்கான படங்களை சிங்கள ராணுவமே தங்களின் சாதனைப் பெட்டகமாக அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கிறது. இத்தகைய கொடூரங்களுக்கு பயந்துதான் இலங்கை அரசு வற்புறுத்தி அழைத்தும், புலிகளின் கட்டுப்பாட்டைவிட்டுத் தமிழ் மக்கள் இடம் பெயரவில்லை...'' என்கிறார்கள்.

முல்லைத்தீவு நெருக்கடிகள்!

இரண்டு வருடங்களுக்கு முன்புவரை இலங்கையில் 3-ல் 1 பங்கு நிலப்பரப்பைத் தங்கள் வசம் வைத்திருந்த புலிகளிடம் இப்போது வெறும் 300 சதுர மைல்தான் உள்ளது. அதிலும் ஒரேயரு முக்கிய நகரம் புதுக்குடியிருப்பு மட்டுமே. இந்த நகரைக் கைப்பற்றி விட்டால், ஏ-35 சாலையையும் கைப்பற்றி, புலிகளுக்கான கடைசி விநியோகப் பாதையையும் மூடி விடலாமென ராணுவம் கருதுகிறது. முல்லைத்தீவை ராணுவம் கைப்பற்றும் வரைக்கும் தற்காப்பு போரையே மேற்கொண்டு வந்த புலிகள், தற்போதுதான் முன்னகர்வு தாக்குதல்களை முழுவீச்சில் ஆரம்பித்திருக்கின்றனர்.

கடந்த 1-ம் தேதி காலையில் புதுக்குடியிருப்புக்கு தாக்கு தல் நடத்த வந்த ராணுவத்தின் 59-வது படையணி மீது ஊடறுப்பு தாக்குதல்களை மேற்கொண்டிருக்கின்றனர் புலிகள். இதில் 150-க்கும் அதிகமான படையினரை கொன்றதோடு மூன்று டாங்கிகளையும், ஏராளமான ஆயுதங்களையும் கைப்பற்றியிருக்கின்றனர் புலிகள்.

திருகோணமலையில் உள்ள கடற்படையின் கிழக்கு பிராந்திய அலுவலகமான டொக்யார்டிலிருந்துதான் புலிகள் மீதான கடற்தாக்குதல் களை நடத்தி வருகிறது ராணுவம். இதில் இயங்கி வந்த அதிவேகத் தாக்குதல் படையணிகளின் படகு ஒன்றை இரு தினங்களுக்கு முன் வீழ்த்தியிருக்கிறார்கள் கடற் கரும்புலிகள்.

இதில் லெப்டினென்ட் கமான்டர் என்.எஸ்.அபேசிங்க மற்றும் பெரேரா உள்ளிட்ட 24 பேர் இறந்து போயிருக்கிறார்கள். இதுதவிர, பி-434 டோரா படகு மற்றும் அரோ படகுகள் நான்கையும் துவம்சம் செய்திருக்கிறார்கள் புலிகள். இது எல்லாமே புலிகளின் லேட்டஸ்ட் தாக்குதல் வியூகத்தினால் பெறப்பட்ட வெற்றிகள் என்கிறார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்.

பின்வாங்கிய ரகசியம்...

இன்றிருக்கும் போர்ச் சூழலில் புலிகளின் பின்வாங் கல்களை ஒருவிதமான போர் தந்திரம் என்கிறார்கள், புலிகளின் நடவடிக்கைகளை நன்கு அறிந்திருப்பவர்கள். பி.பி.சி-க்கு அளித்த பேட்டி யில் அரசியல் பொறுப்பாளர் நடேசனும், ''ஒருவித திட்டத்தோடுதான் நாங்கள் பின்வாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள்...'' என்று சொல்லியிருக்கிறார்.

''இலங்கை ராணுவத்தில் மொத்தம் 60,000 பேர் இருக் கறதா சொல்றாங்க. ராணுவத்துல நடக்கும் ஒவ்வொரு மூவுமே எங்க உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் கவனத்துக்கு வந்துடும். அவரோட கணக்குப்படி பார்த்தா, தற்போது புதுக்குடியிருப்பு முற்றுகையில் கிட்டத்தட்ட 20,000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்காங்க.

திரிகோணமலையில் 4,000 பேர் இருக்காங்க. தலைநகர் கொழும்பில் 2,000 பேர் இருக்காங்க. இந்த 26,000 பேரை வச்சுக்கிட்டுதான் எல்லா பகுதியையும் அவங்க பாதுகாத்து ஆகணும். இலங்கை ராணுவத்தைப் பொறுத்தவரைக்கும் முல்லைத் தீவு நகரம் வரைக்கும்தான் தெளிவா தெரியும்.

அதைத் தாண்டி அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் புதுக்குடியிருப்பு, விசுவமேடு சந்தி, முகமாலை போன்ற இடங்களைப் பற்றி சரியா தெரியாது. அதனாலதான் ஒவ்வொரு இடத்திலும் எங்களுக்கு உயிர்பலியோ, ஆயுதபலியோ ஏற்பட்டுவிடாதபடிக்கு ரொம்ப கவனமா பின் நகர்ந்துகிட்டே இருந்தோம்.

இப்ப பிப்ரவரி 4-க்குள் எப்படியும் எங்களை ஒழிச்சே தீரணுங்கிற வெறியில எல்லா பகுதி யிலிருக்கும் துருப்புகளையும் மொத்தமா புதுக் குடியிருப்பு நோக்கி குவிச்சிருக்காங்க. நாங்க எதிர் பார்த்ததும் இதுதான். இப்பதான் தங்களுக்கு அதிகம் அறிமுகமில்லாத காட்டுப் பகுதிக்குள் ராணுவம் வர ஆரம்பிச்சிருக்கு. இனி மேல்தான் அவர்களுக்கு இழப்புகள் காத்திருக்கு...'' என்கிறது புலிகளின் தரப்பு.

வியூகம் தயார்... வீரர்கள் தயார்..!

கடந்த 27-ம் தேதி பிலிப்பைன்ஸிலிருந்து ஒரு கப்பல் நிறைய ஆயுதங்களை இறக்கியதின் மூலமாக ஆயுதத் தேவையை புலிகள் கிட்டத்தட்ட சமாளித்து விட்டிருக்கிறார்கள். அதோடு, வருகிற 7-ம் தேதியும் அதிநவீன ஆயுதங்கள் அடங்கிய கப்பல் ஒன்றும் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு வரப் போகிறதாம். ''புலிகள்கிட்ட ஆள்பலம் குறைச்சுருக்கறது உண்மைதான். ஆனால், எந்த சூழ்நிலையையும் விரைவா சமாளிக்கக்கூடியவங்க புலிகள். அவர்களோடு காட்டுப் பகுதியில் தஞ்சமடைந்திருந்த மக்களில் 4,000 பேரைத் தேர்ந்தெடுத்து, அவசியமான சில ஆயுதப் பயிற்சிகளை மட்டும் அளித்து, மிக குறுகிய காலத்தில் போராளிகளாக மாற்றியிருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட 1,000 பேர் தற்கொலைப்படையாக மாறியிருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து தற்போது புலிகளிடம் 17,000 பேர் இருக்கிறார்கள். இந்த மொத்த வலிமையையும் ஒரே புள்ளியில் குவித்து வைத்திருக்கிறார் புலிகள் இயக்கத் தலைவர். இந்த நிலைமையில்தான் கடந்த வாரம் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடல்புலிகள் கமாண்டர் சூசை, கட்டளைத்தளபதி லெப்டினென்ட் கலோனல் பானு, சார்லஸ் ஆண்டனி படைப்பிரிவு தளபதி அமுதாப், ராதா படையணி தளபதி ரத்னம் மாஸ்டர், இம்ரான்பாண்டியன் படையணி தளபதி ஆண்டனி உள்ளிட்ட சில முக்கியமான தளபதிகளுடன் ஆலோசித்து ஒரு வியூகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மொத்த ரெஜிமென்டையும் நேரடியாகக் களத்துக்கு அனுப்பாமல், அதை குழுக்களாகப் பிரித்து அனுப்ப முடிவெடுத்திருக்கிறார்கள். இதன்படி ஒரு ரெஜிமென்டில் உள்ளவர்கள் 4 முதல் 8 பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள். இதில் பயிற்சி பெற்ற வீரர்கள் 4 பேருடன் புதிதாகச் சேர்க்கப்பட்ட 4 பேரும் இணைந்து செல்வார்கள். இந்தக் குழு முழுக்க முன்ன கர்வு படையணியாக செயல்பட்டு, ராணுவ பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தும். புலிகளின் மிக அனுபவம் வாய்ந்த வீரர்கள், தற்காப்புப் படையணியாக செயல்பட்டு ராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவார்கள். இந்த சமயத்தில் புலிகளின் டாங்கி அணிகளும், ஏவுகணை உந்து செலுத்துதல் பிரிவும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்.

இதுதவிர கரும்புலிகள் 2,000 பேர் தயாராக இருக் கிறார்கள். அதனால் தற்போதைய நிலவரப்படி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், இந்தியாவை நினைத்துதான் கலவரமாக இருக்கிறது. ஏற்கெனவே ராடார் உதவி, உளவு உதவிகளை செய்து வந்த இந்தியா, இப்போது நேரடியாக ஆள் பலத்தையும் கொடுத்து உதவுகிறது! கடந்த வாரம் உடையார்கட்டில் நடந்த சண்டையில் காயம்பட்ட வீரர்களில் 8 இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். திடீரென்று இந்தியா பெருமளவில் ஆள்பலம் கொடுத்து உதவினால் சமாளிப்பது கடினம்தான்...'' என்கிறார்கள் புலிகள் தரப்பில்.

இதற்கிடையில், உலகம் முழுவதிலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் மத்தியில் எழுச்சியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் புலிகள் இயக்கம் இறங்கி இருக்கிறது. இதற்காக அனைத்துலக உறவு களுக்கான பிரிவை புலிகள் அமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது. செல்வராசா பத்மநாபன் என்பவரை இந்த பிரிவுக்கான பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்கள். விரைவில் புலிகள் அமைப்பிலிருந்து அமெரிக்க ஹிலாரி கிளின்ட்டனை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அப்படியரு நிகழ்ச்சி நடக்கும்பட்சத்தில் புலிகள் சார்பில் ஹிலாரியை சந்திக்கும் குழுவில் செல்வராசா பத்மநாபன் முக்கியமான நபராக இருப்பாராம்.

இலங்கையே இல்லாமல் போகும்!

புலிகளிடம் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக பல காலமாகவே பேசப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து ரசாயன ஆயுதங்கள் வாங்கப்பட்டிருக்கும் என்றும் புலிகளே ரசாயன ஆயுதங்களை உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள்தான் என்றும் பல்வேறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் கேட்டபோது, ''போரில் புலிகள் பெரிதாகப் பின்ன டைகிற போதெல்லாம் ரசாயன ஆயுதங்கள் அவர்கள் வசம் இருப்பதாக செய்திகள் பரவுவது வழக்கம். 1990-ம் ஆண்டு நடந்த போரில், புலிகள் பலத்த அடி வாங்கினார்கள். அப்போது போர்களில் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்ட கொடூர பாதிப்புகளை உண்டாக்கும் ஆயுதங்கள் அவர்கள் வசம் இருப்பதாகச் செய்தி பரப்பி விடப் பட்டது.

ஆனால் புலிகள், போர் மரபுகளை மீறிய ஆயுதங்களை எந்தப் போரிலுமே பயன்படுத்தி யதில்லை. அவர்கள் ரசாயன ஆயுதங்களை உருவாக் கவோ பயன்படுத்தவோ மாட்டார்கள். ஆனால், தாங்களும் ஈழ மக்களும் பூண்டோடு அழிகிற கட்டா யம் வந்தால்... ரசாயன ஆயுதங்களால் மொத்த இலங்கையையும் அழித்துவிட்டுத்தான் அவர்கள் மடிவார்கள் எனப் பேச்சிருப்பதையும் மறுக்க முடியாது!'' என்கிறார்கள்.

வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்

வன்னியில் கேப்பாபுலவு என்ற இடத்தில் சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பிய ஊர்தியுடன் இரண்டு கரும்புலிகள் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கும் முள்ளிவளைக்கும் இடையில் உள்ள கேப்பாபுலவு என்ற இடத்தில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினரின் நிலைகள் மீது நேற்று செவ்வாய்க்கிழமை வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மூலம் இரண்டு கரும்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலின் போது லெப். கேணல் குயில்வண்ணன் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் சிவராஜா, மேஜர் புலிவேந்தன் என்று அழைக்கப்படும் வவுனியா, நெடுங்கேணியைச் சேர்ந்த தியாகராஜா தமிழ்ச்செல்வன் ஆகிய இரு கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட இழப்பு விவரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

3வது நாளாக தொடரும் தாக்குதல் பெருமளவு ஆயுதம் மீட்பு;300 மேற்பட்ட இராணுவம் பலி;ஒருவர் சரண் அடைந்தார்இன்றும் 3வது நாளாக தொடரும் ஊடறுப்பு தாக்குதலில் 300 மேற்பட்ட படையினர் கொல்லபட்டதுடன் பெருமளவு ஆயுத தளபாடங்கள் கைபட்டபட்டன.அட்டிலறி ஷெல் மற்றும் 122mm ஷெல் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் 122mm மோட்டார் குண்டு செலுத்திகள் பலவும் கைப்பற்றப்பட்டன.அத்துடன் பிடிபட்ட ஒரு ராணுவத்தினர் மக்களுடன் பேசும் போது தான் புத்தளம் மாவட்டம் ஆராச்சிகட்டுவ எனும் இடத்தை சேர்ந்தவர் என்றும்

மேலதீக தகவல் பின்னர்.......

17 வயதான தான் 1 1/2 மாத பயிற்சியின் பின் சண்டைக்கு அனுப்பபட்டதகவும் வருத்தப்பட்டார். தகப்பனை இழந்த இவர் குடும்ப வறுமை காரணமாக தான் ராணுவத்திடம் சேர்ந்ததாகவும் தனக்கு சம்பளம் 18,000 என்றும் சொன்னார்.

Monday, February 2, 2009

விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று ஊடறப்புத் தாக்குதலின் போது குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளது – கொழும்பு ஊடகம்


விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று நேற்று நடைபெற்ற ஊடறப்புத் தாக்குதலின் போது குண்டு வீச்சில் ஈடுபட்டதாக பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 30 பேர் கொண்ட விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணி ஒன்று இலங்கை இராணுவத்தின் 59வது படைப்பிரிவை ஊடறுத்து தாக்குதல் நடத்தியதாகவும் இதன் போது படைத்தரப்பிற்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நடைபெற்ற வேளை விடுதலைப்புலிகளின் விமானம் ஒன்று குண்டு வீச்சை மேற்கொண்டு விட்டு விசுவமடுவிற்கு மேற்காக சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசுவமடு பிரதேசத்தை கைப்பற்றி அங்கு நிலை கொண்டுள்ள 58வது படைப்பிரிவினால் இந்த விமானம் தரையிறங்கியமை தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியை நோக்கி இலங்கை இராணுவம் தொடர்ச்சியான பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அணிகள் முல்லைத்தீவு களப்பின் ஊடகவே இந்த ஊடறுப்பை மேற்கொண்டதாகவும் இதில் கடற்புலிகளின் பங்களிப்பும் கணிசமாக இருந்திருக்கலாம் என்றும் படைத்தரப்பை மேறகோள் காட்டி அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்தத் தாக்குதலின் போது அரச படையினரின் 3 யுத்த தாங்கிகள் மற்றும் துருப்புக் காவி வாகனம் என்பன சேதமடைந்துள்ளதாக வெளியான தகவல்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.

புலிகளின் அடுத்த மூவ்

அமெரிக்க ஆயுதம்...

போர் தரும் வேதனையைவிட, 'தங்கள் தகப்பன் நாடான இந்தியா தங்களை ஆதரிக்கவில்லை!' என்கிற வேதனைதான் ஈழத்தமிழர்களை வாட்டி யெடுக்கிறது. இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் பிரணாப் முகர்ஜியின் பயணமும் 'வந்தார்... சென்றார்' என்கிற ரீதியில் ஒரு சம்பிரதாயமாக நடந்து முடியவே, இறுதி நம்பிக்கையையும் இழந்து தவிக்கின்றன தமிழ் உறவுகள்.

காவுகொண்ட கறுப்புத் திங்கள்!

'முல்லைத்தீவு நகரைப் பிடித்துவிட்டோம்!' என்று கடந்த 25-ம் தேதி இலங்கை ராணுவம் அறிவித்திருந்த வேளையில், விசுவமேடு சந்தி பகுதியில் தங்களுடைய கடைசி பீரங்கித் தளத்தின் மூலமாகக் கடுமையான எதிர்த்தாக்குதலைக்


கொடுத்துக்கொண்டிருந்தனர் புலிகள். இந்த நேரத்தில், 'புலிகளின் சிறப்புத் தற்கொலைப் படையணி, சாதாரண மக்களாக மாறி ராணுவ இலக்கு களின் மீது கடுமையான தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்போகிறார்கள்!' என்றொரு வதந்தி ராணுவத்தின் உளவுப்பிரிவுக்கு வர... அதுவே, பொதுமக்களுக்கு எமனாக அமைந்துவிட்டது.

உடனே தமிழ் மக்களின் மீது அரக்கத்தனமான தாக்கு தலில் இறங்கிவிட்டது ராணுவம். 'மக்கள் பாதுகாப்பு வளையங்களாக' அறிவிக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்பு, விசுவமேடு, உடையார்கட்டு, வன்னிபுலம் போன்ற பகுதிகளின் மீது கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் பாது காப்பு வளையங்களில் கூட்டம் கூட்டமாக சொந்தபந்தங்களுடன் தங்கியிருந்த அப்பாவி மக்கள் மீது நாலாபுறத்திலிருந்தும் கிளஸ்டர் குண்டுகளும் ஷெல் வீச்சுக்களும் தொடர்ந் திருக்கின்றன. காலை 9.40-க்குத் தொடங்கி 10.30 வரைக்கும் நடந்த இந்தக் கோரத் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாக, மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மருந்துப் பொருட்களை ஏற்றிவந்த ஐ.நா. குழு ஒன்றும் இந்தத் தாக்குதலில் மாட்டிக்கொண்டது. அந்தக் குழு கொழும் பிலுள்ள ஐ.நா. பிரதிநிதி நீல் புஹ்னுக்குத் தகவல் தந்திருக்கிறது. அதற்குள் தாக்குதல் பற்றிய விவரங்கள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, கொழும்பு நகரம் முழுவதும் தகவல் தொடர்பைத் துண்டித்தது அரசு. இதன்பிறகு நீல் புஹ்ன் இந்தத் தகவலை ஐ.நா-வுக்குத் தெரியப்படுத்த, ஐ.நா-வின் செயலாளர் பான் கி மூனிடம் இருந்து கடுமையான கண்டன அறிக்கை வந்திருக்கிறது. அதோடு பிரிட்டன், நார்வே, அமெரிக்கா போன்ற நாடுகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன. இதைத் தொடர்ந்துதான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அழைத்தார் அதிபர் மகிந்த ராஜபக்ஷே!

பிரணாப் பயணம்... தமிழர்கள் ஏமாற்றம்!

கடந்த 27-ம் தேதி இலங்கை சென்ற பிரணாப், உடனடியாக அதிபர் மகிந்தாவை சந்தித்தார். ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா, பிரணாப்பிடம் போர் நிலவரம் குறித்து விளக்கியிருக்கிறார். இலங்கையிலிருந்து அவர் கிளம்புவதற்கு முன், 'இலங்கையில் ராணுவ நடவடிக்கைகள்தான் இயல்பு நிலை திரும்ப உதவும். இந்தியா-இலங்கை உறவுகள் மேம்பட்டிருக்கிறது!' என்று சொல்ல... அது தமிழர்கள் மத்தியில் கோபத்தைக் கிளப்பி யிருக்கிறது.

இதுபற்றி தமிழ் எம்.பி-க்கள் சிலரிடம் பேசினோம். ''இந்தியா தலையிட்டால்தான் பிரச்னை தீரும். இலங்கையில் பிரச்னை தீவிர மானதும் தமிழக முதல்வர் கலைஞர் அதுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைப்பதில் வேகம் காட்டினார். ஆனால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதில் காட்டலை. அப்படி அவர் அழுத்தம் கொடுத்திருந்தா, என்னிக்கோ பிரணாப் வந்திருப்பார். அதே மாதிரி பிப்ரவரி 3-ம் தேதி தி.மு.க. செயற்குழுவைக் கூட்டி இலங்கைப் பிரச்னையில் அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்கப்போறதா சொல்லியிருக்கார் கலைஞர். இந்த நிலைமையில, முதல்வருக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாதவாறு இலங்கைக்கு வந்திருக்கார் பிரணாப். இங்கே அவர், தமிழ்ப் பிரதிநிதி கள் யாரையும் சந்திக்கலை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரா நடக்கும் விஷயங்களை அவரிடம் சொல்ல நினைத்திருந்தோம். ஆனா, அவர் யாரையும் சந்திக்கலை. இப்படியரு நிலைப்பாட்டில், பிரணாப் இலங்கைக்கு வராமலேயே இருந்திருக்கலாம்!'' என்கிறார்கள் கொதிப்புடன்.

செம்மணி புதைகுழிகளும் சிங்கள அட்டூழியமும்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி-க்கள் நம்மிடம், ''1995-ம் ஆண்டு புலிகளிடமிருந்து யாழ்ப்பாணம் நகரை ராணுவம் கைப்பற்றியபோது, அங்கிருந்த நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்த மக்களில் 600 பேரை கொன்று செம்மணியில் புதைத்தது. இந்த கொடூரத்துக்குப் பின்புலமாக இருந்தவர் சரத் ஃபொன்சேகா. அந்த பயங்கரத்தைத் திரும்பவும் நடத்துகிறார் அவர். ராணுவத்தின் தொடர்ச்சியான எரிகணை மற்றும் வான்கணைத் தாக்குதல்களுக்கு பயந்து வரும் மக்கள், வவுனியாவில் அரசாங்கம் அமைத்திருக்கற மக்கள் நலன்புரி நிலையங்களில்தான் தங்கறாங்க. அப்படித் தங்குபவர்களில் ஆண்களைத் தனியே அழைச்சுக்கிட்டுப் போய் சித்ரவதை பண்ணிக் கொல்றாங்க. பெண்களை விசாரணைங்கிற பெயரில் பலாத்காரம் செஞ்சு சின்னாபின்னப்படுத்தி கொன்னுடுறாங்க. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி 25 இளைஞர்களும் 27 பெண்களும் கொல்லப்பட்டிருக்காங்க. கொழும்பின் மையப் பகுதியான புரக்கோட்டை முழுவதும் தமிழ் தொழிலதிபர்கள்தான் ஆதிக்கம் செலுத்தறாங்க. இதை ஒழிக்கறதுக்காக புரக்கோட்டை பகுதியை அரசாங் கமே எடுக்கப் பார்க்குது. இங்கே சிங்களர்களை குடியேத்தி, தமிழ் தொழிலதிபர்களை ஒழிக்கணும்னு நினைக்குது. இதுதவிர, போர் நடந்தப்ப கிழக்குப் பகுதியில் இருந்த தமிழர்களில் பலர், அகதிகளா இந்தியாவுக்குப் போய்ட்டாங்க. இன்னும் சிலர் வடபகுதிகளில் குடியேறிட்டாங்க. அதனால, கிழக்குப் பகுதியில நிறைய இடங்கள் காலியா இருக்கு. இப்போ இந்த இடங்களில் சிங்களர்களைக் குடியேத்துறாங்க. அதிபர் மகிந்தாவோட சொந்த ஊரான அம்பலாந்தொடை, காலே, திசமார, தங்கால, மாத்தலே, கழுத்தர போன்ற பகுதிகள்ல இருக்கற சிங்களர்களுக்குப் பத்து ஏக்கர் நிலத்தை இலவசமா கொடுத்து கிழக்குப் பகுதியில குடியமர்த்தறாங்க. இதனால

தமிழர்களோட நிலம் பறிபோகுது. என்னிக்காவது எங்க மக்கள் திரும்பி வந்தா, நிக்க இடமிருக்காது. வடக்கைக் கைப்பற்றிய பிறகும் இதே மாதிரியான நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்வாங்கன்னு பிரணாப்கிட்ட விளக்க நினைச்சோம். முடியலை!'' என்றவர்கள் தொடர்ந்து...

ஏனிந்த மௌனம்..?

''முல்லைத்தீவு மாவட்டம் என்பதே ஒட்டுமொத்தமாக புதுக்குடியிருப்பு, விசுவமேடு, தர்மபுரம், ருத்ரபுரம் உள்பட பத்து கிராமங்களை உள்ளடக்கியதுதான். தற்போது புதுக் குடியிருப்பு என்ற ஒற்றைக் கிராமத்தில்தான் தமிழர்கள் முடக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சமயத்திலும்கூட புலிகள் பெரியளவில் எதிர்ப்புத் தாக்குதல் நடத்தாதது, புலிகள் ஆதரவாளர்களுக்கே குழப்பமாக இருக்கிறது.

'புலிகளிடம் வெறும் 1,500 பேர்தான் இருக்கிறார்கள், அதனால்தான் அவர்களால் ராணுவத்தை எதிர்க்க முடியவில்லை!' என்கிறார் கருணா. அமைதிப் பேச்சு வார்த்தையின்போது 31,000 பேர் புலிகள் இயக்கத்தில் இருந் ததாகவும், அடுத்தடுத்த சில வருடங்களில் போரால் 5,000 பேர் இறந்துவிட்டதாகவும், கிழக்குப் பகுதி பிரிவின்போது 6,800 பேர் தன்னுடன் வந்துவிட்டதாகவும் அவர் சொல்கிறார். அப்படிப் பார்த்தாலும் சுமார் 19,000 பேர் மீதி இருக்கவேண்டுமே? எங்கள் கணக்குப்படி புலிகளிடம் தற்போது பயிற்சி பெற்ற 20,000 பேர் இருக்கிறார்கள். ஆனால், இவர்களை வழிநடத்த சரியான தளபதிகள் இல்லை. பல போர்முனைகளை வெற்றிகரமாக நின்று நடத்திய பிரிகேடியர் பால்ராஜின் மறைவு, புலிகளுக்குப் பெரும் இழப்பு. இருக்கிற ஒன்றிரண்டு நல்ல தளபதிகளையும் இழந்துடக் கூடாதுன்னு நினைக்கிறார் பிரபாகரன். தற்போது புதுக்குடியிருப்பில் முடங்கியிருந்தாலும், திறமை வாய்ந்த லெப்டினென்ட் கர்னல் பானுவின் தலைமையில் போர் முனையில் எதிர்ப்புத் தாக்குதலை ஆரம்பிக்கப் போறாங்க. அதுவுமில்லாமல் ஓயாத அலைகள்-1, ஓயாத அலைகள்-2 உள்ளிட்ட பல முக்கியமான சமர்களை நடத்தியது சார்லஸ் ஆண்டனியின் 'எலைட் ஃபோர்ஸ்'தான். இது எப்போது வேண்டுமானாலும் தற்கொலைப்படையா மாறுகிற நிலையில் இருக்கு. 300 பேர் இருக்கற இந்த ஸ்பெஷல் எலைட் ஃபோர்ஸை இதுவரைக்கும் களத்துக்குக் கொண்டு வரலை. அதேமாதிரி மாலதி படையணி, தலைவர் பிரபாகரனோட வலது கை மாதிரி. 300 பேர் இருக்கற இந்தப் படையணியையும் இதுவரைக்கும் களமிறக்கலை. இதுதவிர, கர்னல் சூசை தலைமையிலான சிறப்பு கடற்கரும்புலிகள் அணி எப்படிப்பட்ட தாக்குதல்களையும் சமாளிக்கும் திறன் படைத்த முன்னகர்வு அணி. ஊருடுவித் தாக்குவதில் ஆண்டனி படையணி கில்லாடி. இப்படி தன்னோட நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கற பத்துக்கும் அதிகமான சிறப்புப் படையணிகளைத் தலைவர் பிரபாகரன் இதுவரைக்கும் களத்துக்கே கொண்டுவராதது ஏன்னு புரியலை. தலைவரோட பையன் தலைமையில இருக்கற விமானப் படையையும் களத்தில் இறக்காததுக்கும் காரணம் புரியலை!'' என்கிறார்கள்

புலிகளின் அமெரிக்க ஆயுதம்...

நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டமாக வர்ணிக்கப் படும் இந்தப் போரில் ஒரு முக்கியக் காரணத்துக்காக புலிகள் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள், அவர்களுடைய ஆதர வாளர்கள்.

''இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் போன்ற பல நாடுகள் செய்த ராணுவ உதவிதான் இந்தப் போரில் இலங்கை ராணுவத்தை வேகமா செயல்பட வச்சுருக்கு.இதனால ஆசியாவில் அமெரிக்காவுக்கு எதிரான ஒரு வலு வான கூட்டணி அமைஞ்சுருக்கற மாதிரியான தோற்றம் ஏற்பட்டிருக்கு. இதை அமெரிக்கா விரும்பலை. புலிகள் ஆதரவு மனப்பான்மை உள்ள ஹிலாரி கிளின்ட்டன் இப்போ அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராகி இருக்காங்க. வரும் பிப். 4-ல் லண்டன், அமெரிக்கா, கனடாவில் இருக்கற சில முக்கிய தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் ஹிலாரியை சந்திக்கப் போறாங்க. தெற்காசியாவில் அமெரிக்காவுக்கு எதிரா சீனா அமைக்கும் கூட்டணி பற்றியும், அதில் இலங்கையின் பங்கு பற்றியும் அவரிடம் விவரிப்பாங்க. அமெரிக்காவை கன்வின்ஸ் செய்துட்டா போதும்... அதுக்குப் பிறகு சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ. மூலமா புலிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வாங்க. அதுக்குப் பிறகு புலிகளோட தாக்குதல் வீரியமாகும். சிங்கள ராணுவத்தோட கொலைவெறியில் தொய்வு வந்துடும். தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலரும் இந்த நடவடிக்கைக்கு உதவி பண்றாங்க. இதுக்காக சி.ஐ.ஏ-வின் தெற்காசியப் பிரதிநிதி சார்லஸை சமீபத்தில் சென்னையில் வைத்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமா வளவன் சந்தித்திருப்பதாகவும் தகவல். பிப். 4-ல் ஹிலாரியின் சந்திப்புக்குப் பிறகு அமெரிக்காவின் உதவியைப் பொறுத்துதான் புலிகளின் அடுத்தகட்ட மூவ் இருக்கும்...'' என்கிறார்கள்.

எங்கே பிரபாகரன்?

'பிரபாகரன் எங்கும் தப்பியோட முடியாதபடி பாதுகாப்பு அரண்களை அமைத்திருக்கிறோம். அவர் எங்கள் கையில் மாட்டுவது உறுதி!' என்கிறார் ராணுவ தளபதி சரத் ஃபொன் சேகா.

ஆனால் புலிகளின் ஆதரவாளர்களோ, ''தலைவர் முல்லைத் தீவில் எங்களுடன்தான் இருக்கிறார். ஏற்கெனவே இதுபோல் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோதெல்லாம், 'நான் எதிரி களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டால், சயனைட் சாப்பிட்டு மரணமடைய விரும்பவில்லை. அதனால் நீங்களே என்னை நெஞ்சில் சுட்டு, வீர மரணமடைய வைக்கவேண்டும்!' என்று தலைவர் கூறியிருக்கிறார். இப்போதும் அதைத்தான் விரும்பு வார். ஆனால், தலைவரின் மகன் சார்லஸ் ஆண்டனி, தலை வரை முல்லைத்தீவிலிருந்து அழைத்துச் செல்ல விரும்புகிறார். ஆப்பிரிக்கக் கண்டத்தில் எத்தியோப்பியாவுக்குப் பக்கத்திலுள்ள ஒரு குட்டி நாடு எரித்ரியா. இந்த நாட்டில் புலிகள் இயக் கத்தை முழுமையாக ஆதரிக்கிறார்கள். ஏற்கெனவே ஐ.நா. சபையில்கூட புலிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தது இந்த நாடு. அதனால், தங்களிடமுள்ள ரஷ்யத் தயாரிப்பான அதிவிரைவு குட்டி நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக அவரை அங்கே அழைத்துச்செல்ல நினைக்கிறார் சார்லஸ். தலைவரின் மனநிலைதான் புரியவில்லை!'' என்கிறார்கள்.

Sunday, February 1, 2009

சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: பெருமளவிலான படையினர் பலி; 3 டாங்கிகள் அழிப்பு, பெரும் இராணுவ தளவாடங்கள், படையினர் உடலங


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க தயாராக இருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதில் 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் 3 டாங்கிகள் மற்றும் துருப்புக்காவி உள்ளிட்ட பெருமளவிலான வாகனங்கள் விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாரான சூழ்நிலையில் இருந்தனர். இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர். இதில் 150-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால்

டாங்கிகள் - 03
துருப்புக்காவி - 01
இராணுவ ஊர்திகள் (ட்றக்) - 02
இராணுவ பேருந்து - 01
இராணுவ உழுபொறிகள் - 02

ஆகியன இதுவரை விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

வாகனங்களுக்குள் படையினர் இருந்த போதே விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இருந்த பெருமளவிலான படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் இந்த தொடர் தாக்குதலில் பெருமளவிலான படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்ட வண்ணம்விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.