Tuesday, March 31, 2009

புலிகளின் அரண்களை உடைத்து நுழைய 7 நாட்களாக சிங்களப்படை கடும் சமர்: முறியடிக்கப்பட்ட புதுக்குடியிருப்புச் சமரில் 1,412 படையினர் பலி; 6,123 பேர் காயம்


புதுக்குடியிருப்பு இரணைப்பாலை கிழக்கு மற்றும் ஆனந்தபுரத்தில் சிறீலங்காப் படையினரின் பாரிய முற்றுகை நடவடிக்கை .

தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் கடந்த 7 நாட்களும் நடத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதல்களில் 1,412 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 6,123 படையினர்

படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அறிவித்துள்ளது.

வன்னியில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. அண்மைய நாட்களாக புதுக்குடியிருப்பு இரணைப்பாலை மற்றும் ஆனந்தபுரத்தில் இரு தரப்பினர் இடையே கடுமையான சமர் இடம்பெற்று வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வான் தாக்குதல்கள், எறிகைணத் தாக்குதல்கள், பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள், மோட்டார் தாக்குதல்கள், டாங்கித் தாக்குதல்கள், ஆர்.பி.ஜி. உந்துகணைத் தாக்குதல்கள் மற்றும் கனரக கனோன் ரகத் தூப்பாக்களின் சூட்டாதரவுடன் நாளாந்தம் சிறீலங்காப் படையினரால் முன்னெடுக்கப்படும் படை நகர்வுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து வருகின்றனர்.

இரணைப்பாலையில் உள்ள செந்தூரன் சிலையடியை இரு தரப்பினரும் 10 அதிகமான தடவைகள் மாறி மாறி கைப்பற்றியுள்ளனர். இப்பகுதி ''ஸ்ரானின் கிராட்'' மாறியுள்ளதாக விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி ஒருவர் பதிவு இணையத்திடம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-

புதுக்குடியிருப்புப் பகுதியில் நாளாந்தம் நூற்றுக்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் பல நூற்றுக்கணக்கில் படையினர் காயமடைந்து வருகின்றனர்.

இப்பகுதியில் யுத்தத்திற்காக களமிறக்கப்பபட்ட சிறீலங்காப் படையினரின் 57-வது படைப்பிரிவும், 58-வது படைப்பிரிவும் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஆதரவாக 53-வது படைப்பிரிவையும் 55-வது படைப்பிரிவையும் சிறீலங்காப் படை அதிகாரி களமிறக்கியுள்ளனர். 57-வது, 58-வது படைப்பிரிவில் பெரும்பாலான படையினர் கொல்லப்பட்டுவிட்டனர்.

தற்பொழுது படையினருக்கு ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் காரணமாக களத்தில் நிற்கும் படைத் தளபதிகளுக்கும் கட்டளை மையத் தளபதிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்று வருக்கின்றது.

படையினரின் உளவுரண் பாதிக்கப்பட்ட நிலையில் நாளாந்தம் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது நாள் ஒன்றுக்குப் பல தடவைகள் வான்தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றது.

வன்னியில் இடம்பெற்று வரும் மோதல்கள் நெருங்கிய நேரடித் துப்பாக்கி மோதல்களாகவே மாறியுள்ளதால், சிறீலங்காப் படையினருக்கு பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் தென்னிலங்கையிலிருந்து சிறீலங்கா ஊர்காவல் படையினர் வரவழைக்கப்பட்டு படையினருடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

வன்னிக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தற்போது ஆவேசத்துடன் படையினருக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Thursday, March 26, 2009

"லாகூர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இந்தியப் படையினர் பாவனையில் உள்ளவை'


பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ரொக்கட் லோஞ்சர்கள், வெடி பொருட்கள் என்பன இந்தியப் படையினர்

பயன்படுத்துபவையென அறியவந்துள்ளதாக பாகிஸ்தானின் "டோன்' (dawn) பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது.

தாக்குதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து 4 ரொக்கட் லோஞ்சர்களும் 9 வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இரசாயனப்பகுப்பாய்வு அறிக்கையின் பிரகாரம் இவை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இந்தியப் படைகளால் உபயோகிக்கப்பட்டவை என்று "டோன்' பத்திரிகை கூறியுள்ளது.

இவற்றுடன் 40 கிரனேட்டுகள் , 10 எஸ்.எம்.ஜி., 5 பிஸ்ரல்கள், இவற்றுடன் 577 எஸ்.எம்.ஜி. யின் ரவைகள், 160 ரவைகள் என்பனவும் அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் அன்றைய தினம் 312 சன்னங்களை சுட்டு வெளியேற்றியிருந்ததுடன் 2 ரொக்கட்டுகளை ஏவியும் 2 குண்டுகளை வெடிக்க வைத்தும் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

தற்கொலை அங்கி எதுவும் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான நோக்கத்தடன் அவர்கள் அங்கு வரவில்லையெனத் தெரிகிறது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட எஸ்.எம்.ஜி. இயந்திரத் துப்பாக்கிகள் ரஷ்ய, ஜேர்மன் மற்றும் சீனத் தயாரிப்புகளாகும் என்று விசாரணையாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை டோனுக்கு தெரிவித்துள்ளார்.

லாகூரில் மார்ச் 3 இல் இடம்பெற்ற தாக்குதலில் பாகிஸ்தானின் 6 பொலிஸாரும் ஒரு வாகன சாரதியும் கொல்லப்பட்டனர். இலங்கை கிரிக்கெட் அணியின் 6 வீரர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

அரச முகவரமைப்பொன்றின் உதவியின்றி நாட்டிலுள்ள எந்தவொரு போராளி அமைப்புகளாலும் இத்தாக்குதலை நடத்தக் கூடிய ஆற்றல் இல்லையென்ற அபிப்பிராயத்தை விசாரணையாளர்கள் கொண்டுள்ளனர்.

"ஆயுதங்கள் மற்றும் தொடர்பாடல் வலைப்பின்னல் என்பவையே தாங்கள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் என்றும் அதாவது அரச முகவரமைப்பொன்றும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது' என்று விசாரணையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

100 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதும் இதுவரை எந்தவொரு பயங்கரவாதியும் கைது செய்யப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக சகல பயங்கரவாதிகளும் பழங்குடியினர் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டனர். பொலிஸாரின் தாமதமான செயற்பாட்டால் அவர்கள் தப்பிவிட்டனர் என்றும் விசாரணையாளர் தெரிவித்துள்ளார்.

நான்கு நோக்கத்துடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையாளர்கள் இப்போது உறுதியான விதத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துதல், வெளிநாட்டு விளையாட்டுக் குழுக்கள் பாகிஸ்தானுக்கு வருவதை நிறுத்துவது, பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையை இழக்கச் செய்வது, தனது அரச முகவரமைப்பு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யிலும் பார்க்க ஆற்றல் உடையது என்று பாகிஸ்தானுக்கு வெளிப்படுத்துவது என்பனவே தாக்குதலின் முக்கிய நோக்கங்கள் என்று விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.

பஞ்சாப் மேலதிக பொலிஸ்மா அதிபர் சலாகுடீன் கான் நியாஸி தலைமையில் 4 உறுப்பினர்கள் அடங்கிய பொலிஸ் குழுவும் சமஷ்டி விசாரணை முகவர் நிலையம் , ஐ.எஸ்.ஐ. புலனாய்வு பிரிவு என்பனவற்றை உள்ளடக்கிய கூட்டு விசாரணைப் பிரிவும் லாகூர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துகின்றன.

Wednesday, March 25, 2009

ஆர்பிஜி உந்துகணையை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்

சிறிலங்கா படையினர் ஏவிய ஆர்பிஜி எறிகணை ஒன்று இளம் பெண் ஒருவரின் காலில் துளைத்து வெடிக்காதிருந்த நிலையில் குறித்த ஆர்பிஜி பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டு ஆர்பிஜியுடன் பாதிக்கப்பட்ட காலும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

மாத்தளன் மருத்துவமனையின் பின்புறம் வசித்து வந்த 25 வயதுடைய ரவீந்திரராசா சுதர்சினி என்ற

பெண்ணின் காலிலேயே ஆர்பிஜி உந்துகணை துளைத்து வெடிக்காத நிலையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த பெண்ணின் காலில் ஆர்பிஜி உந்துகணை வெடிக்காத நிலையில் துளைத்ததும் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது மருத்துவர்கள் தாதியர்களும் பெரிதும் அச்சமடைந்து ஆர்பிஜி உந்துகணை வெடிக்கப்போகிறதோ என்று கருதி விலகிச் சென்றனர்.


[பெண் ஒருவரின் உடலைத் துளைத்து வெடிக்காத நிலையில் அவரை படுகாயப்படுத்தியிருக்கும் ஆர்பிஜி உந்துகணை. படம்: புதினத்துக்காக சகிலா]

எனினும் ஆர்பிஜி உந்துகணை பாதுகாப்பாக வெடிக்காத நிலையில் செயலிழக்கப்பட்டது. அதனையடுத்து துரிதமாக செயற்பட்ட மருத்துவர்களும் தாதியர்களும் சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆர்பிஜி உந்துகணையை எடுப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பயிற்றப்பட்ட ஒருவர் சாதூரியமாக செயற்பட்டு ஆர்பிஜி உந்துகணையை செயலிழக்கச் செய்தார்.

எந்தவிதமான அடிப்படை மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கின்ற உபகரணங்களையும் மருந்துகளையும் பயன்படுத்தி மருத்துவர்கள் வெற்றிகரமாக சத்திர சிகிச்சை செய்து நச்சுத்தன்மை உடலில் மேலும் பரவாத வகையில் பெண்ணின் பாதிக்கப்பட்ட காலை அகற்றினர் என்பது பாராட்டத்தக்கதாகும்.

கனரக ஆயுதங்களால் தாக்குவதாலேயே பெருமளவாள படையினருக்கு காயம் - இராணுவ தளபதி

ஆட்லறி மற்றும் ஷெல் போன்ற கனரக ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதால் படைத்தரப்பைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு காயங்கள் ஏற்படுகின்றன என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

வன்னியில் மிகக் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்குண்டுள்ள விடுதலைப் புலிகள் இராணுவத்தினர் இருக்கும் பகுதிகளுக்கு ஊடுருவி தாக்குதல்கள் நடத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். தேசிய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து வடக்கில் மேற்கொண்டு வரும் மனிதாபிமான போர் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந்நிலையில் இப் போரின் வெற்றியை அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வடக்கில் படையினர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தே இந்த வெற்றியை அண்மித்துள்ளனர். தவிர இது தானாக வந்த வெற்றியல்ல. மோதல்களில் ஈடுபட்டு வரும் விடுதலைப்புலிகளுக்கு எவ்வகையிலோ ஆயுதங்கள் கிடைத்துள்ளனர்.

படையினருக்க ஏற்பட்டுள்ள காயல்களில் பெரும்பாலானவை புலிகளால் நடத்தப்படும் கனரக ஆயுதங்களால் ஏற்படுத்தப்பட்டவையாகும். அவர்கள் எவ்வித ஆயுதங்களால் தாக்கதல்களை நடத்தினாலும் படையினரின் பயணம் நிறுத்தப்படுவதில்லை.

எமது இராணுவத்தினர் உண்ணாமல் உறங்காமல் போரின் வெற்றிக்காக தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். அதனை வார்த்தைகளால் கூறி விட முடியாது. அவர்கள் பலத்துடனேயே இந்த வெற்றியை நோக்கி பயணித்துள்ளனர்.

வன்னியில் தற்போது எஞ்சியுள்ள விடுதலைப்புலி உறப்பினர்கள் இராணுவத்தினர் இருக்கும் பகுதிகளுக்குள் ஊடுருவி பலத்த தாக்குதல்களை நடத்தவே முயற்சித்து வருகின்றனர்

Thursday, March 19, 2009

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் கடும் சமர்


புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதுக்குடியிருப்பு மருத்துவமனையை அண்மித்த பகுதிகள், புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதி,

மற்றும் இரணைப்பாலைச் சந்தியில் இடம்பெற்ற மோதல்களிலேயே 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத்தின் கவச வாகணம் ஒன்றும் தாக்கியழிப்பு.

பல இராணுவத்தினரது உடலங்களை புலிகள் கைப்பற்றி இருப்பதாகவும் அறியப்படுகிறது. இராணுவத்தின் வலிந்த தாக்குதலை எதிர்கொண்டு கடும் முறியடிப்புச் சமரில் ஈடுபட்டிருக்கும் புலிகள், குழுக்களாக பிரிந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவியுள்ளதால், இராணுவத்தினர் பல அதிர்சி தாக்குதலுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விஸ்வமடுவில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவிக்கையில், புதுக்குடியிருப்பில் இருந்து சுமார் 3 கி.லோ மீட்டர் தொலைவில் சமர் இடம் பெறுவதாக தெரிவித்தனர்.

நாளாந்தம் பல நூற்றுக்கண்கான படையினர் வன்னிக் களமுனையில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். படையினருக்கு ஏற்பட்டு வரும் ஆளணி இழப்புகளை அடுத்து சிறீலங்காப் படையினர் பலர் மாறி மாறி படையணிகளுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

தென்னிலங்கையிலிருந்து ஊர்காவல் படையினரை வவுனியாவுக்கு வருவித்து, வவுனியாவில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரை புதுக்குடியிருப்பு பகுதிக் களமுனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வன்னியில் மூர்க்கத்தனமான வான் தாக்குதல்கள்! இன்று மட்டும் 8 தடவைகள் குண்டு வீச்சு! சிறீலங்கா வான்படையினர் அண்மைய நாட்களாக மூர்க்கத்தனமாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இன்று வியாழக்கிழமை இச் செய்தி எழுதும் வரைக்கும் சிறீலங்கா வான் படைக்குச் சொந்தமான மிகையொலி விமானங்கள் எட்டுத் தடவைகள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ம் நாளுக்குள் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு மகிந்த அரசாங்கத்திடம் இந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சி வலியுத்திய நிலையில் கடந்த சில நாட்களாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மனிதம் கொன்று.... மனம் தின்று.... ஈழம் இன்று....ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது: விகடன்


குண்டுகள் வீசப்படும்போது முதலில் பிணம் விழுகிறது. உயிரோடு பிழைப்பவரின் மனம் அடுத்ததாக விழுகிறது. ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது.

'கவனமாகக் காலை வையுங்கள். கண்ணி வெடிகள் இருக்கலாம்' என்ற வாசகம் ஈழ மக்கள் வாழ்க்கையில் இயல்பானது. 'பாதங்களைப் பார்த்து வையுங்கள்... பிணங்கள் தட்டுப்படலாம்' என்பதுதான் இன்றைய யதார்த்தம். பிணங்கள் பார்த்துப் பழகிய மனங்கள் இப்போது

அழுவதில்லை. 'கொடுத்துவைத்தவர்கள், சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்' என்பது ஆறுதல்!

'அரசியல் தீர்வு என்ன என்று சிலர் பேசுகிறார்கள், பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்குமா என்று பலர் கவலைப்படுகிறார்கள். அந்த மக்கள் உளவியல்ரீதியாகப் பெரும் பாதிப்பில் சிக்கி இருக்கிறார்களே... அதைப் பற்றி யார் பேசப் போவது?' என்று கண்ணீர் வார்த்தைகளால் கேட்கிறார் யாழ் மாவட்டப் பாதிரியார்களில் ஒருவரான ஜெபனேசன் அடிகள்.

ஒரு நாள் இரவு மின்சாரம் இல்லையென்றால், மறுநாள் வாழ்க்கையே வெறுக்கிறது. பால்காரர் வராவிட்டால், வேலைக்காரம்மா லீவு போட்டால், கேபிள் கட்டானால் இங்கே பலருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடுகிறது. சில கல் தொலைவில் இலட்சக்கணக்கான மக்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல், கிடந்து துடிக்கிறார்கள். குடியிருக்க வீடு இல்லை, உணவில்லை, மாற்று உடையில்லை, மருந்து இல்லை. எல்லா ஊருக்கும் எருமையில் வரும் எமன், ஈழத்தில் மட்டும் ஏரோபிளேன் ஏறி வந்து குண்டுகள் வீசுகிறான்.

உயிர் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்பதைத் தவிர, சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. ''81 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் இங்கு இருக்கிறார்கள்' என்று புள்ளிவிவரம் சொல்கிறார், முல்லைத் தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்தீபன். மாத்தளன் கடற்கரைப் பகுதிக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் வந்து இறங்கியபோது, 'எங்களக் காப்பாத்தச் சோறு போடுங்க', 'எம் புள்ளைகளைக் குணப்படுத்த மருந்து கொடுங்க' என்று மொழி தெரியாத மனிதர்களிடம் பிச்சை கேட்டு ஆணும் பெண்ணுமாகக் கதறிய கோலம் காணச் சகிக்காதது. குண்டடி பட்டுச் செத்தவர்கள் போக, பாம்புக் கடி, நாய்க் கடியால் இறந்தவர்களும் மலேரியா காய்ச்சலுக்கு மருந்து இல்லாமல் மறைந்த வர்களும் அதிகம்.


18 பேர் நான்கு நாட்களில் தொடர்ச்சியாகச் செத்து விழுக, விநோதமான வியாதி ஏதாவது பரவிஇருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கிறது கொஞ்சம் அக்கறையுள்ள மருத்துவக் குழு. அவர்களால் காரணத்தை வெளியில் சொல்ல முடியவில்லை.

'உணவின்மை, ஊட்டச் சத்து இல்லாதது, நோய் எதிர்ப்புச் சக்தி இழந்தது என மூன்று காரணங்களால் நிறையப் பேர் தூங்கிய நிலையில் இறந்துகிடக்கிறார்கள்' என்கிறது மருத்துவர் குழு. 'பிள்ள சாப்பிட்டே மூணு நாள் ஆகியிருக்கும் போல இருக்கே' என்று கேட்கிறார்.

தூக்கி வந்த அம்மா, அமைதியாகத் தலை கவிழ்ந்து நிற்கிறார். துக்க மிகுதியில் அழுவதற்கு உடலில் கண்ணீர் மிச்சம் இல்லாததே அவரது மயான மௌனத்துக்குக் காரணம்.

பால் வளம் இழந்த மார்பின் காரணம் அறியுமா குழந்தை? சபேசன் சிந்து, சிவராசா சக்தி கணேசன் ஆகிய இரண்டு குழந்தைகள் பெயர் வரலாற்றில் இடம் பெறும். அம்மையிடம் பால் இல்லாமல் செத்த பிள்ளைகள். இனி, உலகில் வறுமைக்கு சோமாலியாவைச் சொல்ல வேண்டியதில்லை. நமது சொந்தங்களே இருக்கிறார்கள்.
தன் வளர்ப்பு மகனைத் தேடி, தயா தங்கராசா என்பவர் வன்னி மருத்துவமனைக்குப் போகிறார். அவர் சொல்லும் காட்சி... ''வைத்திய சாலைக்குள் அனைவரும் உறுப்புகளை இழந்தவர்களாக இருந்தார்கள். யாரையும் பார்க்க அவ்வளவாக அனுமதிக்கப்படவில்லை.

நோயாளிகளுக்குத் தங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாது. தங்களது வலியின் காரணமாகவும் கெட்ட கனவுகள் காரணமாகவும் இரவு முழுவதும் கத்திக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்தார்கள்.

இரண்டு கால்களையும் கைகளையும் இழந்த ஒரு கர்ப்பிணித் தாய், தாதியை அழைத்து தான் சாவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கதறிக்கொண்டு இருந்தாள். ஒரு தாய் வெறுமையுடன் உட்கார்ந்திருந்தாள். குண்டு விழுந்து அவள் ஓடத் தொடங்கியபோது அவளது குழந்தை கொல்லப்பட்டதாம்.

ஒரு மண்வெட்டியை எடுத்து மண்ணைத் தோண்டி குழந்தையைப் புதைக்கும் துணிவு அவளுக்கு இருந்திருக்கிறது. தனது குழந்தையின் உடல் காட்டு விலங்குகளால் உண்ணப்படுவதை அவள் விரும்பவில்லை. இதைச் சொல்லும்போது அவள் அழவில்லை. உளவியல் பிரச்னைக்கு அவள் உட்பட்டிருந்தாள் என்பது உறுதி!''

சாவைச் சட்டை பண்ணாமல்... ரத்தத்தை அலட்சியப்படுத்தி... சதைகள் பிய்ந்து தொங்கும்போது உணர்வில்லாமல் பார்த்து... குப்பைமேட்டைக் கொளுத்துவது போல மனித உடல்கள் எரிவதை வெறுமனே வேடிக்கை பார்க்க மக்கள் பழகிவிட்டால், அந்த மனம் என்னவாகும்?

குழந்தைகளுக்கு விருப்பமே விமானம் பார்ப்பதுதான். ஆனால், ஈழத்துக் குழந்தைக்கு அதுதான் எமன். 30 ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் இருந்து வாங்கி வரப்பட்ட விமானம்தான் குண்டு போடுவதைத் தமிழ்ப் பகுதிகளில் தொடங்கிவைத்தது. அதனுடைய கிர் ஒலியைக் கேட்டாலே, மக்களுக்குக் கிறுக்குப் பிடித்தது. அதிலிருந்து தப்பிக்கப் பதுங்கு குழிகள் வெட்டி, அதில் வாழப் பழகினார்கள். வெளிச்சத்தைப் பார்த்துக் கண் கூசும் அளவுக்குப் பலரது வாழ்க்கை பதுங்கு குழிக்குள் கழிந்தன. கடந்த ஆண்டில் மட்டும் 14 ஆயிரம் டன் குண்டுகள் விமானங்களின் மூலம் போடப்பட்டுள்ளதாக சிங்கள ராணுவம் பெருமையாக அறிவித்துள்ளது.

சமீபகாலமாகப் பயன்படுத்தப்படும் பீரங்கிக் குண்டுகள் ஏற்படுத்தும் சத்தம் காது சவ்வு மற்றும் தொப்புள் ஆகிய இரண்டையும் கிழிக்கிறதாம். இதனால், காது வழியாக ரத்தம் வடிந்த நிலையில் வாழ்வோரும் தொப்புள் வெடித்து வேறு எந்தக் காயமும் இல்லாமல் மரணிப்போரும் அதிகமாகி வருகிறார்களாம்.
கொடூரங்களைச் செய்வதைவிட அதைப் பரப்புவதையும் சரியாகவே சிங்கள ராணுவம் செய்து வருவதாகச் சொல்கிறார்கள். மக்களை மனரீதியாகப் பலவீனப்படுத்துவதில் ராணுவம் இறங்கி உள்ளது. கற்பழிப்புக் கதைகளை ராணுவம் இதனால்தான் அதிகம் பரப்பி வருகிறது. 100 பேர் சாவு, 200 பேர் சாவு என்ற தகவல்களைப் பரப்புவதை 'உளவியல் யுத்தம்' என்கிறார்கள். அதனால்தான் கடுமையான போர் ஆரம்பமாவதற்கு முன், கடந்த ஜூலை மாதம் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழரை அடிமைப்படுத்த முயலும் எதிரி தனது சூழ்ச்சிகரமான உளவியல் போரைத் தொடுத்துள்ளான். வதந்திகளைப் பரப்பி மனங்களைக் குழப்பி வருகிறான்' என்று எச்சரித்தது.

கற்பழிக்கப்படும் பெண்களது உடல்களைப் பொது இடங்களில் போட்டுவிட்டுப் போவது அப்படித்தான். பெண்களையும் சிறுவர்களையும் இது அதிகமாகப் பாதிக்கிறது. இழப்புகள், சோகங்கள், இடப் பெயர்வுகள் பல மாதங்களாகத் தொடர்வதால் தலைவலி, உடல் சோர்வு, அதிகக் கோபம், உணவில் விருப்பமின்மை, கவலை, சோகம், அச்சம், வேதனை என அத்தனை உளவியல் பாதிப்புகளும் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.

இந்த மனித மனங்களை மீண்டும் தட்டியெழுப்ப முடியுமா என்று மனநல மருத்துவர் ருத்ரனைக் கேட்டோம். ''நம் வீட்டில் ஒரு சாவு விழுந்தால், அது அதிகபட்சம் இரண்டு மூன்று மாதங்கள் நம் மனச் சிறையில் உட்கார்ந்து கிடக்கும். அந்தச் சோகம் மெள்ள மெள்ள மறைந்து, நாம் அடுத்த வேலைக்குத் தாவிவிடுவோம். நம் வீட்டிலேயே அடுத்தடுத்து மரணங்கள் சம்பவித்தால், மறுபடி மறுபடி நமது சோகம் தட்டியெழுப்பப்படும். அது மாதிரிதான், நிமிஷத்துக்கு நிமிஷம் நாள்கணக்கில், மாதக்கணக்கில் மரணங்கள் நடந்தால், அழுவதற்கு நம்மிடம் கண்ணீர் இல்லை. பழகிப்போகும். அப்படித்தான் மரணத்தைப் பார்த்து அம்மக்கள் மனசு பழகிப் போய்விட்டது.

அழுகை என்பது மனதின் தற்காப்பு. சொல்லிப் பயனில்லாததை அழுவதன் மூலமாக அறிவிக்கிறோம். அது எப்போதாவதுதான் சாத்தியம். தொடர்ச்சியாக அழ முடியாது. இவ்வளவு பேர் செத்து விழும்போதும் அம் மக்களால் அழ முடியாததற்குக் காரணம், அதைப் பார்த்து அவர்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதால்தான்.

குண்டு வீச்சையும், பீரங்கி வருகையையும் முதல் தடவை பார்க்கும் தலைமுறையாக இருந்தால், அவர்களுக்குப் பதற்றம் இருந்திருக்கும். 30 ஆண்டுகளாகப் பார்த்துச் சலித்துப்போன சத்தம். சென்னையில் குண்டு விழுகிறது என்றால், ஏற்படும் பதற்றம், அச்சம் அந்த மக்கள் மனதில் இல்லை. ஏனென்றால், அச்சத்தை நித்தமும் எதிர்பார்த்துதான் அவர்களது வாழ்க்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. 'நாளை நலமடைவோம்' என்று அவர்கள் நினைப்பதில்லை. 'இன்றிருந்ததைவிட நாளை இன்னும் மோசமாகும்' என்ற எதிர்பார்ப்புடனே மறுநாளை எதிர்கொள்கிறார்கள்.

பதற்றம் என்ற வார்த்தைதான் உளவியலில் ஆரம்பமான அளவு. ஆனால், அவர்களது மனதில் பதற்றம் அப்படியே பதிந்துபோய்விட்டது. போர்ச் சூழலில் கஷ்டப்படும் மக்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை. ஏனென்றால், அவர்களது பயமே மரணத்தைப் பார்த்துத்தான். அதனால், தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டார்கள். ஆபத்து, மரணம், துயரம் ஆகிய மூன்றையும் எதிர்பார்த்து வாழும் வாழ்க்கைதான் ஈழத் தமிழருடையது. அதனால்தான் அவர்கள் அழுவதில்லை. சோகமாவதில்லை. நிம்மதியற்ற அரசியல் சூழ்நிலை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாழும் மக்களுக்கு இதுதான் தலைவிதி.

ஒருவனின் வாழ்க்கையை அவனது அனுபவம்தான் தீர்மானிக்கிறது. இவர்களுக்கு அனுபவமே அச்சம் கலந்ததாக இருக்கிறது. நிம்மதியான கடந்த காலம் இல்லாததால் நம்பிக்கையான எதிர்காலத்தைக் கற்பனை செய்ய முடியவில்லை. வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதைச் சொல்ல இயலவில்லை.
குழந்தைகள்கூட தொடர்ந்து இந்தச் சம்பவங்களைப் பார்த்துப் பழகிவிட்டார்கள். அவர்களுக்கு உடல் காயங்களால் வலி இருக்கலாம். அதிர்ச்சி குறைந்து போயிருக்கும். தனது தாய்-தகப்பனைத்தான் குழந்தைகள் தனது பாதுகாப்பாக நினைக்கும்.

ஆனால், இலங்கையில் யார் யார்கூடவோ ஓடி, வாழ்ந்து பழகியதால் சமூகத்தைத் தனது பாதுகாப்பாக நினைக்க ஆரம்பிக்கும். குடும்பத்தை இழந்த குழந்தைக்குச் சமூகமே குடும்பமாக ஆகும். படிப்பை இழந்த பிள்ளைகள் மனதில் ஏற்பட்ட வெறுமைக்கு அளவு இல்லை. இது இரண்டு தலைமுறைகளைப் பாதிக்கும். பணத்தால் வரும் தைரியம் கொஞ்ச நாள்தான். கல்வியால் வரும் தைரியம் ஆயுள் வரை இருக்கும். எனவே தைரியமற்ற, எந்தச் சிந்தனையுமற்ற, கோழையான, வெறுமையான மனிதர்களாக்கும் கொடுமையே அங்கு நிகழ்கிறது.

அங்கு ஓர் அரசியல் தீர்வு வரும் என்று வைத்துக்கொண்டாலும், போருக்குப் பின் அந்த மக்களை மறுபடியும் உடல், மன ஆரோக்கியத்துடன் கட்டமைக்கிற பணி மிகப் பெரிய சவால்!'' என்கிறார் ருத்ரன்.

சூனியம் ஓர் இனத்தைச் சூழ்வதும் அதன் சொந்தங்கள் சும்மா இருப்பதுமான சூழல் வேறு இனத்தில் நடக்காது. நாற்காலி யுத்தத்தில் தமிழகம் மும்முரமாகிவிட்டது. ஆனால், ஈழ மக்கள் வாழ்வோ உளவியல் யுத்தத்தில் உயிர்விட்டுக்கொண்டு இருக்கிறது!

ஆண்-பெண்களில் பலரை பிடித்து சித்திரவதை வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் படுகொலை


idp_1_2இன்று முன்தினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலை கொண்டுள்ள 58டாவது சிங்கள படைகளிடம் 384 தமிழர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். என தேசியபாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. 180 ஆண்கள்-204 பெண்களுடன் சிறுவர்கள் உள்ளடங்கலாக 384 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர் இங்கு இவ்வாறு தஞ்சம் அடையும் மக்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கும் படையினர் ஆண்-பெண்களில் பலரை பிடித்து சித்திரவதை வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்வதாக செய்திகள் கசிந்துள்ளன.

ஐ.நா. அமைதிகாக்கும் படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் ‐ முன்னாள் சட்ட மா அதிபர் சிவாபசுபதி:


un20tankஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென முன்னாள் சட்ட மா அதிபரும், அவுஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பு தலைவருமான சிவாபசுபதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவிலியன் இழப்புக்களை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரச சர்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யுத்த வலயத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னியில் பேரவலத்தை எதிர்நோக்கியிருக்கும் சிவிலியன்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி முன்னாள் சட்ட மா அதிபர் சிவாபசுபதி அவசர கடிதமொன்றை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தற்போது வசித்தும் வரும் இலங்கையைச் சேர்ந்த புத்திஜீவிகள் பலர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

சக்தி வாய்ந்த புதுவகை ஆயுதங்கள் மூலம் தமிழீழவிடுதலைப்புலிகள் தாக்குதலை நடத்துவதாக சிங்கள ராணுவம் தெரிவித்துள்ளது








http://www.nazarian.no/images/wep/394_Knights_master.jpg

new-weponsமுல்லைத்தீவில் படையினர் மீது ஒருவகை புதிய ஆயுதங்களை பாவித்து தாக்குதல் நடத்திவருவதாக படைத்தரப்பு தெரிவிக்கிறது. எவ்வகையான ஆயுதம் என குறிப்பிட மறுத்த அதிகாரிகள் இத்தாக்குதலால், 11ம் இலகு காலாற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்னமும் இனம் காணப்படாத இப் புதிய வகை ஆயுதங்களானது வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் தருவிக்கப்பட்டவையாக இருக்கலாம், அல்லது தருவிக்கப்பட்ட ஆயுதத்தை புலிகள் நவீன மயப்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம் என இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இரணைப்பாலையில் 58வது படைப்பிரிவும், புதுமத்தளான் பகுதியில் 55ம் படைப்பிரிவினரும் புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் நகர்வுகளை தடுப்பதற்காக புலிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து முன்னேறும் இராணுவ அணிகளுக்குள் ஊடுருவி தாக்கிவருவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிய அளவில் இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாவதாகவும், இருப்பினும் இவர்களை வடபகுதியிலேயே வைத்து சிகிச்சை அளிக்குமாறு கண்டிப்பான உத்தரவுகளை பாதுகாப்பு அமைச்சு பிறப்பித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுக்குடியிருப்பு தாக்குதல்களில் காயமடைந்த 125 படையினர் கொழும்பு மருத்துவமனைகளில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்த சிறிலங்கா படையினரில் 125 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் இராணுவ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதல்களில் உயிரிழந்த 78 படையினரின் உடலங்கள் கொழும்பு பொரளையில் உள்ள பிரபலமான இரண்டு மலர்ச்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

காயமடைந்த படையினரில் பலர் அனுராதபுரம், பொலநறுவை மற்றும் குருநாகல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களிலும் மற்றும் வேறு தாக்குதல்களிலும் இதுவரை 610 படையினர் கொல்லப்பட்டும் 700 பேர் வரை காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப் புலிகள் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களில் நடைபெற்ற மோதல்களில் 480 படையினர் கொல்லப்பட்டும் 600 பேர் காயமடைந்தும் உள்ளதாக இராணுவ உயர் அதிகாரிகள் மேலும் கூறுகின்றனர்.

அதேவேளையில் புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றுள்ளதாகவும் இரு தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் நேற்று காலை சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஆனால், படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் எதனையும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கவில்லை.

Wednesday, March 18, 2009

வித்தியாதரனுக்கு 3 மாத தடுப்புக் காவல் உத்தரவு


கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மரணச்சடங்கொன்றில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பிரபல ஊடகவிலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று புறக்கோட்டை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வித்தியாதரன்
மீது தொடர் விசாரணைகள் இடம்பெறுவதனால் அவரது தடுப்புக் காவலை நீடிக்குமாறு காவற்துறையினர் வலியுறுத்தியதை அடுத்து நீதவான் ஜெகான் பலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவுஸ்ரேலிய எஸ்பிஎஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் வித்தியாதரன் பயங்கரவாதி எனவும் அவரைக் காப்பாற்ற முயல்வோரின் கரங்களும் ரத்தக்கறை படிந்ததாக கருதப்படும் எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

விசுவமடுவில் இருந்து விடுமுறையில் சென்ற சிங்கள இராணுவ வீரர் இடம்பெய்ர்ந்த தமிழர்களின் வீடுகளில் கொள்ளையடித்த பெறுமதியரன நகையுடன் சிக்கினார்


தம்புத்தேகம சோதனைச் சாவடியில் பொலிசார் நடத்திய சோதனையின் போது இராணுவ வீரரொருவரிடமிருந்து சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கைப்பற்றப்பட்டன.

முல்லைத்தீவு, விஸ்வமடுவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இவர், தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த போதே தம்புத்தேகம சோதனைச் சாவடியில் வைத்துச் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.
இவரிடமிருந்து தங்க மாலைகள், வளையல்கள், காதணிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்டுள்ள இவர் தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சம்பந்தப்பட்ட சோதனைச் சாவடிக்குப் பொறுப்பான பொலிஸ் இன்ஸ்பெக்டர் எச்.டபிள்யூ,டபிள்யூ. குமாரசிறி தெரிவித்தார்.

Tuesday, March 17, 2009

உலகில் எங்கும் நடக்காத கொடூரம் தமிழர் தாயகத்தில் - கர்ப்பிணிப்பெண் உடல் சிதறிப்பலி - கருவிலிருந்த குழந்தையும் சிதறிய பரிதாபம்


பாதுகாப்பு வலயத்தில் சிங்கள கொடூர இராணுவத்தினர் நடத்தியுள்ள கோர எறிகணை தாக்குதலில் உலகில் எங்குமே நடைபெறா கோரச் சாவை தமிழினம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

நேற்று செவ்வாய்கிழமை நிகழ்ந்த படுகொலை ஒன்று ஈழத்தமிழினம் இதுவரை சந்தித்தாரத கொடூரம். படையினர் ஏவிய எறிகணையொன்று ஓலை வீட்டில் வீழ்ந்து வெடித்ததில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த நிறைமாத கற்பினி பெண்ணின் வயிறு பிளவுற்று சிசுவும் தாயும் துடிதுடித்து இறந்துள்ளனர்.


தாயின் வயிற்றுப் புறமாக உருக்குலைந்த நிலையில் குழந்தையின் உடலத்தின் எச்சங்கள் காணப்படுகின்றது.

தமிழினப் படுகொலையை மெளனமாக அங்கீகரித்துக் கொண்டிருக்கும் சர்வதேசம், இந்தப் படுகொலையை எவ்வாறு நியாயப்படுத்தப்போகின்றதோ..?

அண்மையில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் கருவில் உள்ள குழந்தையொன்று காயமடைந்த நிலையில் பிறந்தது. மருத்துவர்களின் தீவிர சத்திரசிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வன்னியில் 30 நிமிடத்துக்கு ஒரு தடவை வான்குண்டுத் தாக்குதல்; எறிணைத் தாக்குதல்: 78 தமிழர்கள் படுகொலை; 188 பேர் காயம்



வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களில் 78 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 188 பேர் காயமடைந்துள்ளனர்.

மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டைப் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இதேவேளையில் புதுக்குடியிருப்பு, பச்சைப்புல்மோட்டை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று காலை தொடக்கம் பிற்பகல் 5:00 மணிவரை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.

30 நிமிடத்துக்கு ஒரு தடவை என மாறி மாறி வந்த சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீது குண்டுத் தாக்குதலை நடத்தின.

வான்குண்டுத் தாக்குதல்களில் மட்டும் 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தாக்குதல்களிலும் 188 பேர் காயமடைந்துள்ளனர்.

மூன்று நாள் மோதலில் புதுக்குடியிருப்பில் 610 படையினர் பலி; 700 பேர் காயம்



முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் சிறிலங்கா படையினர் தரப்பில் 610 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் வரையானோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது:

புதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் பல முனைகளில் முன்நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா படையினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா படையினரின் நகர்வுகளுக்கு எதிராக நேற்று திங்கட்கிழமையும் நேற்று முன்நாளும் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் சிறிலங்கா படையினர் தரப்பில் 402 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் இன்றும் உக்கிர மோதல் நடைபெற்றது.

இதில் சிறிலங்கா படையினர் தரப்பில் 208 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் வரையிலானோர் காயமடைந்துள்ளனர்.

மோதல்களின் போது சிறிலங்கா படையினர் அதிகளவிலான வெடிபொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் என சமர்-கட்டளை மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது இவ்வாறிருக்க, புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

படையினருக்கு ஏற்பட்ட இழப்பு விபரம் எதனையும் சிறிலங்கா படைத்தரப்பு வெளியிடவில்லை.

இந்தியாவின் உதவியினாலேயே புலிகளுடனான போரில் வெற்றி பெற்றோம்: சிறிலங்கா அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு



தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்திய அரசாங்கமே மிகப்பெரிய உதவி செய்தது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சபையின் முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இல்லையேல் விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டிருக்க முடியாது எனவும் சபையில் எடுத்துக்கூறிய அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, சிறிலங்கா மக்கள் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர் என்றும் வலியுறுத்தி கூறினார்.

நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு சபாநாயகர் வி.ஜே.மு லொக்கு பண்டார தலைமையில் கூடியதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல கேள்வி நேரம் இடம்பெற்றது.

அதனையடுத்து, சபாநாயகரின் இணக்கத்துடன் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அனுரகுமார திசநாயக்க போரில் காயமடையும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்திய மருத்துவர் குழு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு அறிக்கையினை சபையில் வெளியிட்டு விளக்கம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, இந்திய அரசாங்த்திற்கு புகழாரம் சூட்டி கட்சி வேறுபாடுகள் இன்றி இந்தியாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

புல்மோட்டையில் தற்காலிக மருத்துவ முகாம் அமைத்துள்ள இந்திய மருத்துவ குழு இந்திய இராணுவ மருத்துவ குழு அல்ல, இந்திய இராணுவத்திற்கு மருத்துவம் செய்த இராணுவத்தினர் அல்லாத மருத்துவ குழுதான் இங்கு வருகை தந்துள்ளது என தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இந்திய மருத்துவ குழு இங்கு சேவையாற்றும். இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்கள் கூட சிறிலங்காவின் இறையான்மைக்கு கட்டுப்பட்ட உதவிகள்தான் என்றும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா ஜே.வி.பி.யின் சந்தேகங்களுக்கு பதிலளித்து கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகள் எதனையும் வழங்கவில்லை என இந்திய அரசின் உயர்பீடமும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்த நிலையில் சிறிலங்காவின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பகிரங்கமாக இந்திய அரசாங்கத்தின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்திருப்பது இந்திய உயர்பீடத்தின் கூற்றுக்கள் முற்றிலும் பொய்யானது என்பதையே நிரூபித்திருக்கின்றது.

பொதுமக்களுக்கு இழப்பின்றி புலிகளுடன் போர்: மகிந்த சமரசிங்கவின் கூற்றை ஏற்க வெளிநாட்டு இராஜதந்திரிகள் மறுப்பு



முல்லைத்தீவில் பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் இன்றி தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை சிறிலங்கா படைகள் நடத்தி வருவதாக அந்நாட்டின் அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியதை கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஏற்க மறுத்துள்ளனர்.

அமெரிக்க, பிரித்தானிய, பிரான்ஸ், நோர்வே மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கொழும்பில் உள்ள அதிகாரிகள் தரத்திலான இராஜதந்திரிகளை அமைச்சர் மகிந்த சமரசிங்க சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எடுத்துக் கூறினார்.

ஆனால், போரில் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் எதுவும் அங்கு இல்லை எனவும் இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற சந்திபில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் அரச தலைவர் செயலக அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் ஆகியனவற்றின் உதவியுடன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜதந்திரிகள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது.

இச்சந்திப்பு குறித்து அரசாங்கமோ அல்லது கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களோ ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Sunday, March 15, 2009

வன்னியில் மழையினால் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள சிறிலங்கா படையினர்: கொழும்பு ஊடகம்

sri-lanka-rainவன்னிப்பெரு நிலப்பரப்பில் கடந்த வாரம் பெய்த கடும் மழையினால் சிறிலங்கா படையினர் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னிப் பகுதியில் கடந்த வாரம் பெய்த கடுமையான மழையினால் சிறிலங்கா படையினரின் நடவடிக்கைகளில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

சாலை பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலங்கள் பல அழிவடைந்துள்ளதுடன் பதுங்குகுழிகளும் நீரினால் நிரம்பியுள்ளன.

இதேவேளையில் தனது முன்னணி பாதுகாப்பு நிலைகளை பார்வையிடச் சென்ற 11 ஆவது சிறிலங்கா இலகு காலாட் படை பற்றலியனின் கட்டளை அதிகாரி லெப். கேணல் கீத்சிறி எக்கநாயக்க பயணம் செய்த உழவூர்தி குளம் ஒன்றில் நிரம்பி பாய்ந்த நீரினால் அடித்துச் செல்லப்பட்டது.

உழவூர்தியின் சாரதி காணாமல் போனபோதும், கட்டளை அதிகாரி நீந்தி கரை சேர்ந்தார். இவர், பின்னர் காலை 6.00 மணிவரை அங்கு தங்கியிருந்த பின்னர் அங்கிருந்து நகர முற்பட்ட போது விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் அங்கு வீழந்து வெடித்துள்ளன.

அப்பகுதியில் மறைந்திருந்த விடுதலைப் புலிகளே அதிகாரியின் நிலையிடம் தொடர்பான தகவல்களை வழங்கியிருக்க வேண்டும்.

பின்னர், அவர் மற்றுமொரு உழவூர்தியின் உதவியுடன் வெளியேற முற்பட்ட போதும், அந்த உழவூர்தியும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதன் பின்னர் குளத்திற்கு குறுக்காக கயிறு ஒன்றை கட்டுவித்த படையினர் அதிகாரியை மீட்டு எடுத்துள்ளனர்.

பிறிதொரு சம்பவத்தில் சாலை பகுதியில் இருந்து புதுமாத்தளன் பகுதியில் உள்ள படையினரின் நிலைகளை பார்வையிடச் சென்ற 55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரசன்ன டீ சில்வா மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மென்டக்க சமரசிங்க ஆகியோரும் பாதகமான காலநிலையினால் பெரும் நெருக்கடிகளை சந்தித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, March 12, 2009

ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக அணிதிரளத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள்



ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி தொடரும் புலம்பெயர் போராட்டங்களின் மத்தியில், ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் எதிர்வரும் 16ஆம் நாள் ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக அணிதிரளத் தயாராகி வருகின்றனர்.

• பொதுமக்களுக்கான உடனடி உணவு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட வேண்டும்,
• ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும்,
• தமிழரின் பாதுகாப்புக் கவசங்கள் கழையப்படக்கூடாது..


போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஐரோப்பிய ஆணையகத்தை நோக்கி பேரணியும், கண்டனக்கூட்டமும் இடம்பெறவுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், விடுதலை இயக்கத்தையும் அங்கீகரிக்கோரும் இந்த மாபெரும் உரிமைப் போர் எதிர்வரும் 16ஆம் நாள் காலை 10:00 மணியளவில் பெல்ஜியத்தின் தலைநகர் Gare du nord, bd albert II (2) தொடரூந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாக இருக்கின்றது.

நாளாந்தம் பலியெடுக்கப்படும் எம் உறவுகளின் உயிர் குடிக்கும் பயங்கரவாத அரசின் முகத்திரையைக் கிழிக்கவும், அழிக்கப்படும் இனத்தைப் பாராமுகமாக இருக்கும் அனைத்துலகின் மனசாட்சியை உலுப்பவும் ஐரோப்பிய தமிழர்கள் அணிதிரள வேண்டும் என புலம்பெயர் ஐரோப்பிய தமிழ் இளையோர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வன்னியில் பொதுமக்களிற்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பாகவும், மக்களின் அவலம் பற்றியும் சிறீலங்கா அரசு பொய்யான பரப்புரையை மேற்கொண்டு மேற்குலகை ஏமாற்றிவரும் இந்தக் காலகட்டத்தில், புலம்பெயர் தமிழ் மக்கள் அந்தப் பரப்புரையை உடைந்தெறிந்து, மக்களைக் காப்பது அவசியம் எனச்சுட்டிக்காட்டப்படுகின்றது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களது ஓர்மம் நிறைந்த சழைக்காத தொடர் போராட்டங்கள் காரணமாகவே அனைத்துலக நாடுகள் ஈழப்பிரச்சினையில் சற்றேனும் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதுடன், அரசுக்கான கண்டனங்களையும், கட்டுப்பாடுகளையும் விதிக்க தலைப்பட்டிருப்பதால், ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்திலும் மக்கள் பெரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வன்னி மக்களின் அவலத்தை தடுத்து நிறுத்தக்கோரும் மற்றொரு போராட்டம் சுவிஸ்வாழ் தமிழ் மக்களால் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் அதேநாள் நடத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்லறிப் படைத் தள அழிப்பில் வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகளுடன் தமிழீழத் தேசியத் தலைவர்


தேராவில் பிரதேசத்தில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் பாரிய ஆட்லறிப் படைத் தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் செவ்வாய்கிழமை அதிகாலை தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.

கரும் புலிகள் படையணியும், கிட்டுப் பீரங்கிப் படையணியும் இணைந்து நடத்திய இந்த வெற்றிகரத் தாக்குதலில் ஆறு ஆட்லறிகளும் மற்றும் வெடி பொருட்களும் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளன. இதில் 50ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.


மூன்று கரும்புலிகள் உட் பட ஏழு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் கரும்புலிகள் எடுத்துக்கொண்ட நிழற்படங்களை ஈழநாதம் இதழ் நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த வெற்றிகரத் தாக்குதலில்ழ

கரும்புலி லெப்.கேணல்மாறன்
கரும்புலி மேஜர் தமிழ்மாறன்
கரும்புலி கப்டன் கதிர்நிலவன்

மேஜர் மலர்ச்செம்மல்
கப்டன் ஈழவிழியன்
கப்டன் காலைக்கதிரவன்
கப்டன் கலையினியவன்

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.



<<

புதுக்குடியிருப்பு, விசுவமடுவில் சிறிலங்கா படையினருக்கு அதிக இழப்பு: அறிக்கை சமர்ப்பிக்குமாறு சரத்துக்கு மகிந்த உத்தரவு



புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட அதிக உயிரிழப்புக்கள் மற்றும் படையப் பொருட்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக விசுவமடுவில் படையினருக்கு ஏற்பட்ட கடுமையான இழப்புக்கள் தொடர்பாக போர்க் களத்தில் உள்ள படை உயரதிகாரிகளுடன் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேரடியாக தொடர்பு கொண்டு வினவியதாகவும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளையில் ஊடகத்துறை அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தன கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வன்னி போர் நிலைமை குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விசனம் தெரிவித்து விளக்கம் கோரியிருப்பதாகவும் தெரியவருகின்றது.

கனரக ஆயுதங்களை வன்னி போர்முனையில் படையினர் பயன்படுத்தவில்லை என்றும் அதனாலேயே படையினருக்கு கடந்த சில நாட்களில் கூடுதல் இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன என்றும் அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தன கொழும்பில் நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தமிழீழ விடுதலை புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும் 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்பில் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக விசுவமடு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் படையினருக்கு கூடுதல் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனவும் காயமடைந்த அதிகாரிகள் தரத்திலான படையினர் சுமார் 77 பேர் வரை கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் மற்றும் கொழும்பு இராணுவ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து அரசாங்கம் இதுவரை ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை.

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வழங்குகின்ற தகவல்களும் பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவிக்கின்ற கருத்துக்கள் மாத்திரமே கொழும்பு ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடும் காற்றுடன் கூடிய மழையால் புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு



புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் கடும் காற்றுடன் கூடிய மழையினால் 50,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு நிர்கதியாகியுள்ளதுடன் அவர்களின் தற்காலிக குடிசைகளும் அழிவடைந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 9ம் மற்றும் 10ம் திகதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் அண்மையில் வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையால் புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெயர்ந்து தற்காலிக குடில்களில் வாழும் மக்களைப் பெரிதும் பாதித்திருப்பதாகவும் வேறிடம் செல்ல வழியில்லாது இவர்கள் கஷ்டப்படுவதாகவும், இதனால் 50,000க்கும் அதிகமானோர் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் இரண்டு அடி உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது இதனால் குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பணித்தாய்மார் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரவு வேளையில் கடும் மழை பெய்வதினால் மக்கள் உறக்கமின்றி அலைமோதுவதாகவும் சிலர் மேட்டு நிலங்களை நோக்கி இடம்பெயர்வதாகவும் தெரிவித்தார்.

இயற்கையின் அழிவு ஒரு புறத்தில் இருக்க போதிய உணவு, மருந்து, சுத்தமான குடிநீர் இன்றி வாழ்வதாகவும் அத்துடன் தற்காலிக மலசல கூடமும் சேதமடைந்துள்ளதால் இவர்கள் பெரும் அவலத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு 50,000 தற்காலிக குடில்கள் தேவைப்படுவதுடன் தற்காலிக மலசல கூடமும் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பொய் செய்திகளினால் தடுமாறும் இலங்கை இராணுவம்!


poralikal20kalamunai1விடுதலைப் புலிகளை 37 சதுர கி.மீ துரத்திற்குள் முடக்கிவிட்டோம் என்று கூறிய இராணுவம் அதே வாயால் நிலை தடுமாறி அவர்கள் தம்மை ஊடறுத்துத் தாக்குகிறார்கள் என்றும் அறிவித்துள்ளது. இராணுவத்தால் முடக்கப்பட்டுவிட்ட விடுதலைப் புலிகள் எப்படி ஊடறுத்தத் தாக்குகிறார்கள் என்ற கேள்விக்கு பொய் செய்திகளை பரப்புவோரால் பதிலளிக்க முடியவில்லை.

இவ்வளவு மோசமான போர் நடைபெறும்போது மரணித்த, காயமடைந்த இராணுவத்தினரின் தொகை மிகவும் சொற்பமாக இருக்கிறது. போரில் மரணமும் காயமும் அடையாத மந்திரவாதிகளாக சிங்கள இராணுவம் சண்டையிடுவது போன்ற மாயை உருவாக்கப்பட்டிருப்பதையே சிங்கள இராணுவத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய்யன்று சிறீலங்கா படையினர் விசுவமடு பகுதியில் அமைத்திருந்த ஆட்டிலறி தளத்தையே விடுதலைப்புலிகள் துவம்சம் செய்திருக்கிறார்கள். இந்தத் தாக்குதலில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இராணுவம் மடிந்துள்ளது.

தொடர்ந்து இலங்காபுவத் செய்திகளை கேட்டு அலுத்துப்போன சிங்கள மக்களுக்கு வெற்றி கானல் நீராகி வருவது போன்ற உண்மையின் உணர்வு மெல்ல மெல்ல மணக்கத் தொடங்கிவிட்டது. சிங்கள பிரதமர் போர் முடிவடைய மேலும் ஒரு வருடம் வேண்டுமென கூறியுள்ளது அதற்கு ஓர் உதாரணம். இருப்பினும் அவர் கூறியது சரியான கணிப்பாகவே உள்ளது. விடுதலைப்புலிகள் போரை வெற்றியுடன் முடித்து வைக்க ஒரு வருடம் தேவை என்று அவர் கருதியுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.

சிங்கள அரசிற்கும், அதற்கு துணை போகும் உலக சமுதாயத்திற்கும் சின்னஞ்சிறிய ஈழத் தமிழினமே புதிய பாடத்தை தரவேண்டும் என்பதுதான் விதியென்றால் அதை யார்தான் தடுப்பது. பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானுக்கு விழுந்த அடி உலகத்தில் உள்ள எல்லார் முதுகிலும் விழுந்தது என்று கூறுவார்கள். அதுபோல உலக மாந்தர் அனைவர் முதுகிலும் விடுதலைப் புலிகள் சிங்கள இராணுவத்திற்குப் போடும் அடி விழப்போகிறது என்பதே தர்மத்தின் குரலாகும்.

இப்போது விடுதலைப் புலிகளும் சிங்கள இராணுவமும் ஆளையாள் பார்க்கக் கூடிய இடை வெளியில்தான் நிற்கிறார்கள். ரஸ்யாவில் நாஜிப்படைகள் லெனின்கிராட்டை முற்றுகையிட்டபோது சுமார் ஒரு மில்லியன் மக்கள் பட்டினியாலும், போரினாலும் மடிந்தார்கள். ஆனால் ரஸ்யர்கள் மன உறுதி தளராமல் அந்தப் போரில் வென்றார்கள். ஜேர்மனியருக்கு லெனின்கிராட் போரே சாவு மணியாக அமைந்தது.

லெனின் கிராட் போரில் தனது சிpய மகள் இறந்துவிட அவளை தூக்கிக் கொண்டு ஜேர்மனிய நாஜிப் படைகளை நோக்கி நடக்கிறான் ஒரு ரஸ்யத் தந்தை. நாஜிகள் அவளை சுடுகிறார்கள்இ உடல் சல்லடையாகிப் போகமகளுடன் வீழ்கிறான் அந்தத் தந்தை. அதுபோல காட்சிகளை இப்போது வன்னியில் நடைபெறக் காண்கிறோம்.

களத்தில் வீழ்ந்து கிடக்கும் மாவீரர்களையும், மானம் குலையாத தமிழீழ மக்களையும் பார்க்கும்போது கண்ணீர் விட்டே வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை என்ற பாரதி பாடலே காதுகளில் ஒலிக்கிறது.

இந்த மண் எங்களின் சொந்த மண் !
இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன் !
பாடல் வரிகள் காதுகளில் ஒலிக்கிறது.

நீதிக்கு இது ஒரு போராட்டம் ! - இதை
நிச்சயம் உலகம் பாராட்டும் !
இந்த வரிகளும் விரைவில் நிஜமாகக் காண்பர் ஈழத் தமிழர்.

Tuesday, March 10, 2009

தேவிபுர ஊடறுப்புத் தாக்குதல்களில் 500-க்கு அதிகமான படையினர் பலி! 1000-க்கு அதிகமான படையினர் காயம்!



விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றில் 500-க்கும் அதிகமான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலைக்கு தெற்கே அமைந்துள்ள தேவிபுரத்தினுள் ஊடறுப்புத் தாக்குதலை தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் சிறீலங்காப் படையினருக்கு பலத்த ஆழணி உயிரிழப்புகளை ஏற்பட்டுத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் 58வது படைப்பிரிவின் 3 கொம்பனிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. கடந்த இரு நாள் நடந்த ஊடறுப்புத் தாக்குதல்களில் 500-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

ஊடறுப்புப் தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளினால் சிறீலங்காப் படையினரின் படைக் கருவிகள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறீலங்காப் படையினரின் படைக்கருவிகளை பயன்படுத்தி கடந்த இரு நாட்களும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி, பல சதுரகிலோ மீற்றர் நிலப்பரப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ந தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் கடந்த திங்கட்கிழமை இரவு தளம் திரும்பியுள்ளன.

மூங்கிலாறு ஆட்டிலறி ஏவுகணைத் தளம் புலிகள் வசம்! 6 ஆட்டிலறிகள் புலிகளால் அழிப்பு!



முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.

இது தொடர்பாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாவது:

விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்டிலறி பீரங்கித் தளத்தை நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.

இத்தாக்குதலில் சிறிலங்கா படையினர் தரப்பில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர் என வன்னி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஆறு ஆட்டிலறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும், கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும், ஆட்டிலறித் தளத்தில் களஞ்சியப்படுத்தியிருந்த 1000 ற்கும் அதிகமான எறிகணைகளை சிறீலங்காப் படையினர் இலக்குகளை நோக்கி ஏவியுள்ளனர்.

நேற்று நண்பகல் வரை இப்பகுதியில் நிலைகொண்ட விடுதலைப் புலிகள், எறிகணைகள் தீரும் வரை எறிகணைத் தாக்குதல்களை நடத்திவிட்டு, குறித்த 6 ஆட்டிலறிகளையும் தகர்த்துவிட்டு, எந்தவொரு உயிரிழப்புகளும் இன்றி மீண்டும் தளம் திரும்பியுள்ளனர்.

இவர்கள் ஏவிய எறிகணைகளே சிறீலங்காப் படையினரின் இலங்குகளிலும் தென்மராட்சிப் பகுதியிலும் வீழ்ந்து வெடித்துள்ளன. இவ் எறிகணைத் தாக்குதல்களில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளை அடுத்தே சிறீலங்காப் படையினர் இடம்பெயர்ந்த மக்கள் மீது கடுமையாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 129 க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 200 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வன்னி நிலப்பரப்பில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகளால் கருப்பட்டமுறிப்பு, இரணைமடு, ஒட்டிசுட்டான், குமிழமுனை, மற்றும் மூங்கிலாறு பகுதிகளிலேயே 20 ஆட்டிலறிகள் தகர்கப்பட்டுள்ளன. 3 ஆட்டிலறிகள் கடுமையாகத் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் படையினருக்கான விநியோக வாகனங்களும் பலவும் தாக்கி அழிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இத்தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கரும்புலி லெப்.கேணல் மாறன்

கரும்புலி மேஜர் தமிழ்மாறன்

கரும்புலி கப்டன் கதிர்நிலவன்

மேஜர் மலர்ச்செம்மல்

கப்டன் ஈழவிழியன்

கப்டன் காலைக்கதிரவன்

கப்டன் கலைஇனியவன்

ஆகிய போராளிகளுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு படையணி ஊடுருவி கடும் தாக்குதல்

சிறிலங்கா படையினரின் பல கிலோ மீற்றர் தூரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதுடன் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த படையினரின் பீரங்கி நிலைகளையும் கைப்பற்றியுள்ளனர் என்று கொழும்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா படையினர் இந்த வாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர். படையினரின் 58 ஆவது டிவிசன் படையணியின் முன்னணி நிலைகளை தகர்த்தவாறு விடுதலைப் புலிகளின் 600 உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் இந்த பெருமெடுப்பிலான ஊடுருவல் காரணமாக ஏ-9 பாதையின் ஊடான படையினரின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீள கைப்பற்ற முடியாத நிலையில் 58 ஆவது டிவிசன் படையணி உள்ளது.

படையினரின் பிரதேசத்திற்குள் 12 கிலோ மீற்றர் தூரம் வரை ஊடுருவிய விடுதலைப் புலிகளின் அணிகள் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த பீரங்கி தளத்தை கைப்பற்றியுள்ளனர்.

அங்கிருந்த 130 மி.மீ பீரங்கிகள் மூன்றை கைப்பற்றி அதனைக்கொண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மட்டும் நடைபெற்ற மோதல்களில் 200 படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பளை, முகமாலை, கிளாலி நோக்கி விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதல்


யாழ்ப்பாணம் பளை, கிளாலி, மற்றும் முகமாலை முன்னரங்க நிலைகளிலுள்ள படை முகாம்களை நோக்கி நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஏ-9 வீதியை இலக்குவைத்து நேற்றிரவு ஆரம்பித்த எறிகணைத் தாக்குதல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல்வரை நீடித்திருந்ததாக பதிவின் யாழ் செய்தியாளார் தெரிவிக்கின்றார்.

விடுதலைப் புலிகள் வீசிய எறிகணைகளில் பல சிறீலங்கா படையினரது முகாம்களிலும், முகாம்களிற்கு அருகிலும் வீழ்ந்து வெடித்துள்ளன.

விடுதலைப் புலிகள் எறிகணை வீசியபோது சிறீலங்கா படையினரை ஏற்றிய 25 வரையிலான பேரூந்துகள் யாழ் குடாநாட்டிற்கு ஏ-9 பாதையூடாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதால், விடுதலைப் புலிகளின் இலக்கு இந்தப் பேரூந்துகளாக இருக்கலாம் என படைத்தரப்பு எண்ணுகின்றது.

ஏனெனில் உணவுப் பொருள்கள் அடங்கிய பாரவூர்திகள் தென்மராட்சியைச் சென்றடைய முன்னர், படையினரை ஏற்றிய 25 பேரூந்துகளும் தென் பகுதியில் இருந்து அங்கு வந்து சேர்ந்து விட்டதாகப் பதிவின் செய்தியாளர் மேலும் கூறினார்.

விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலைத் தொடர்ந்து கிளாலி முன்னரங்க நிலைகளுக்கு அண்மையாக இருந்த மக்கள், மற்றும் விடத்தல்பளை, உசன் போன்ற பிரதேச மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்ட போதிலும், பொதுமக்கள் அற்ற படையினரது முகாம்கள் அமைந்துள்ள பகுதிகள் நோக்கியே விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

முன்னரும் பல தடவைகள் தென்மராட்சியிலுள்ள மிருசுவில், வரணி, மற்றும் பலாலி படைத்தளங்கள் நோக்கி துல்லியமான எணிகணைத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர்.

ஏ-9 நெடுஞ்சாலை ஊடாக யாழ் குடாநாட்டிற்கான உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக அறிவித்த சிறீலங்கா அரசும், அதன் படைகளும், அந்த உணவுப் பாரவூர்திகளின் கவசத்துடன், யாழ் குடாநாட்டிற்கான படையினர், மற்றும் படைத்துறை வழங்கலை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தகவல் விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு தெரிய வந்தது என்ற குழப்பத்தில் சிறீலங்கா படைத்தரப்பு தற்பொழுது இருப்பதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

குண்டு வெடிப்பு


மாத்தறை அக்குறஸ்ஸ பிரதேச கொடபிட்டிய பகுதியில் இன்று ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற மீலாதுன் நபி நிகழ்வில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உட்பட 135 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இது ஒரு தற்கொலை தாக்குதல் எனவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கொழும்பிலிருந்து மேலதிக மருத்துவர் குழு ஹெலிகப்டர் மூலம் மாத்தறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thesamnet.co.uk/wp-content/uploads/2009/03/akkurassa-02.jpg

காயமடைந்தவர்களில் அமைச்சர் மஹிந்த விஜயசேகர உள்ளடங்குவதாகவும் காயமடைந்த அமைச்சர் மஹிந்த விஜேசேகரவை, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, மஹிந்த விஜயசேகர, அமீர் அலி. பண்டு பண்டாரநாயக்க ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தற்கொலை தாக்குதலையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

http://thesamnet.co.uk/wp-content/uploads/2009/03/akkurassa-05.jpg


விடுதலைப் புலிகள் சனிக்கிழ்மை நள்ளிரவு முதல் பாரிய தாக்குதல்


விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளை நோக்கி இடம்பெற்று வருகின்ற ராணுவ நடவடிக்கைகள் முக்கியமானதோர் பரிணாமம் மிக்க கட்டத்தை எய்தியிருப்பதாக படைத்தரப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் மூலம் தெரிய வருகின்றது.

இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாணத்திலிருந்து சுண்டிக்குளம் ஊடாக சாலை வரை முன்னேறியுள்ள 55 வது படையணிகள் மீது

விடுதலைப் புலிகள் சனிக்கிழ்மை நள்ளிரவு முதல் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாக இந்த ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது சாலை பகுதியில் அதிகளவு ஆய்தங்களை விடுதலைப்புலிகள் கைப்ப்பற்றியுள்ளதாகவும்.மேலும் சுதந்திரபுரம், விஷ்வமடுவில் சமர்கள் இடம்பெறுவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இராணு அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளுடன் நேற்றிரவு முதல் மூண்ட மோதல்கள் தற்போது வரை நீடித்துக் கொண்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அகோரம் மிக்கதாகக் காணப்படுவதாகவும் கருத்துத் தெரிவித்தார்.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ராணுவத்தின் 55வது படைப்பிரிவு சேதங்களைச் சந்தித்திருப்பதாக அவர் தகவல்களை வெளியிட்ட போதிலும் உயிரிழப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

எனினும் ராணுவத்தினரின் கணிசமான படைக் கலசங்கள் விடுதலைப் புலிகள் வசம் வீழ்ந்திருப்பதாக மற்றுமோர் உறுதிப்படுத்தப்படாத பாதுகாப்புத் தரப்புச் செய்தி தெரிவிக்கின்றது. 4ம் கட்ட ஈழப் போரின் முக்கிய பரிமாணம் தற்போது எய்தப்பட்டு வருவதாக படைத்தரப்பு கூறுகின்ற போதிலும் விடுதலைப்புலிகள் தம் மீதான முற்றுகையை உடைத்துக் கொள்வதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அந்தப் படையதிகாரி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தமது கொமாண்டோக்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை மெற்கொள்வதாகவும் தற்கொலைப் படையாளிகளே பெருமளவில் களப்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதனால் படைத்தரப்பிடையே பெரும் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்த அந்தப் படையதிகாரி இந்த மோதல் தற்போது வரை தொடர்வதால் சேதங்கள் தொடர்பான விபரங்களைத் தம்மால் திரட்ட முடியாமல் இருப்பதாகவும் எனினும் உயிரிழந்த காயமடைந்த படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவு இருக்கும் எனவும் காயமடைந்த படையினரை அகற்றும் பணி மிகத் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில் இந்தப் பகுதிகளில் மோதல்கள் மூண்ட வண்ணமே இருக்கின்றது. குறிப்பாக சாலை சுண்டிக்குளம் மற்றும் புதுக்குடியிருப்பை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. சாலை வரையான தமது கடற்பகுதியை விஸ்தரிப்பதற்கும் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் தமது பிரதேசங்களின் எல்லைகளை விஸ்தரிப்பதற்குமே விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்வதாக அந்தப் படையதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பகுதிகளில் படைநடவடிக்கைகளை புதுக்குடியிருப்புச் சந்தி வரை படையினர் நோக்கி மேற்கொள்கின்ற போதிலும் இந்த மோதல் படைத்தரப்பிற்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ள ஓர் நகர்வாக அமைந்திருந்ததாக 58வது படைப்பிரிவுடன் தொடர்புடைய தரப்புகள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகள் ஒவ்வோர் தனியார் வீடுகளில் இருந்தும் வீடு வீடாகத் தாக்குதல்களை நடத்துவதாகவும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 2 அல்லது 3 படையினர் உயிழந்தோ அல்லது களத்திலிருந்து அகற்றப்படும் நெருக்குவாரங்கள் இருந்ததாகவும் படைத்தரப்புக் கூறுகின்றது. இதனால் புதுக்குடியிருப்பை நோக்கிய நகர்வில் அப்பகுதியிலுள்ள வீடுகள் முற்றாகவோ அல்லது கணிசமாகவோ அழிந்து சேதமடைந்துள்ளன.

படையினர் டாங்கிகள் மற்றும் பீரங்கிகளைக் கொண்டு வீடுகளைத் தகர்த்த பின்னரேயே முன்னகர்வுகளை மேற்கொள்வதாகவும் விடுதலைப்புலிகள் வீடுகளில் இருந்தே தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் அதனாலேயே இந்தத் தாக்குதலை படைத்தரப்பு மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளும் இலங்கை ராணுவத்தினருக்கும் அக்கினிச்சுவாலை எனும் ராணுவ நடவடிக்கைகள் 2000 ஆம் ஆண்டு முகமாலையிலிருந்து ஆனையிறவை நோக்கி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக்கினிச்சுவாலையின் போது அந்தப் பகுதியில் எந்த வகையில் சேதங்கள் ஏற்பட்டதோ அதேயேளவு சேதங்கள் புதுக்குடியிருப்புப் பகுதயிலும் ஏற்பட்டுள்ளதாக படைத்தரப்புக் கூறுகின்றது.

விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதல்; தொடர்பாக எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளாத போதிலும் யுத்த களமுளை அடுத்து வரும் நாட்களில் மிகவும் கடுமையானதும் மோசமானதுமாகவுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.