Monday, May 31, 2010

'ஐஃபா' விழா நிர்மாணப்பணிகளை பர்வையிட நாமல் நேரடி விஜயம்சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கான மேடை நிர்மாணப்பணிகள் தற்போது கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கு,பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபம் ஆகியவற்றில் இடம்பெறுகின்றன.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நேற்று மாலை இவற்றை நேரடியாகச்சென்று பார்வையிட்டார்.மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட ஏனைய அதிகாரிகளும் இவற்றை மேற்பார்வை செய்வதை படத்தில் காணலாம்.
உலகையே அதிச்சிக்குள்ளாக்கிய 2 வயசு சிறுவனின் புகைத்தல் வீடியோ

இந்தோநேசியாவைச் சேர்ந்த இரண்டே வயதான இந்த சிறுவன் இப்போ புதைத்தல் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டான்.பெற்றோர் சிகரெட் கொடுக்காவிட்டால் கோபத்தில் தலையை நிலத்தில் அடிக்கிறானாம்,அத்துடன் உடல் நிலையும் மாறுகிறதாகவும் தவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி நகரில், கணேசபுரத்தில் புலிச்சீருடையுடனும், நிர்வாணமாகவும் 5 சடலங்கள் மலசலக் கூடக்குழியில் இருந்து நேற்று மீட்பு!


கிளிநொச்சி நகரில், கணேசபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனி தப்புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்ட மலசலக்கூட குழியில் இருந்து நேற்று ஐந்து சடலங்கள் கறுப்புப் பொலித்தீனால் சுற் றிக் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

Hi Jeya

Hi Jeya

Hi Jeya


கிளிநொச்சி, ஜூன் 01
கிளிநொச்சி நகரில், கணேசபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனி தப்புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்ட மலசலக்கூட குழியில் இருந்து நேற்று ஐந்து சடலங்கள் கறுப்புப் பொலித்தீனால் சுற் றிக் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மனிதச் சட லங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட மலசலகூடக் குழியைத் தோண்டிப் பார்க்கும் அதில் போடப்பட்டிருந்த மணல், குப் பைகள் போன்றவற்றை அகற்றும் பணி நேற்றுக் காலை ஆரம் பமானது.
கிளிநொச்சி நீதிவான் பெ.சிவகுமார், வவுனியா வைத்திய சாலை சட்டவைத்திய அதிகாரி எஸ்.சிறீதரன், கிளிநொச்சி, மாங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரி கள், படை அதிகாரிகள், கணேசபுரம் பிரதேச கிராமசேவையா ளர் எஸ்.காண்டீபன் ஆகியோரின் பிரசன்னத்தில் சடலங்கள் மீட்கப்பட்டன.
காலை 9.45 மணிக்கு ஆரம்பமான சடலங்களைத் தோண்டி எடுக்கும் பணி இரண்டு மணி நேரம் நீடித்தது.
கனரக வாகனங்களைக் (பெக்கோ) கொண்டு தோண்டும் நடவடிக்கையை மேற்கொண்டால், மலசலகூடத்துடன் இணைந்துள்ள வீடு சேதமடையும் என்பதால், மலக்குழிக்குள் மண்வெட் டிகளுடன் சிலர் இறக்கப்பட்டுச் சடலங் கள் வெளியே எடுக்கப்பட்டன.
கறுப்புப் பொலித்தீனில் சுற்றப்பட்ட நிலையிலேயே அந்த ஐந்து சடலங்க ளும் மீட்கப்பட்டன.
இரண்டு சடலங்கள் விடுதலைப் புலிகளின் வரி கொண்ட சீருடைகள் அணிந்த நிலையிலும்
ஒரு சடலம் இராணுவச் சீருடையைப் போன்று தோற்றம் அளிக்கும் உடையு டனும்
மற்றிரு சடலங்கள் நிர்வாண நிலை யிலும் மீட்கப்பட்டுள்ளன.
நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சட லங்களில் ஒன்றின் கால் முறிந்து பனை மட்டை கட்டப்பட்ட நிலையிலும், மற் றைய சடலம் கால் முறிந்து பலகை கட் டப்பட்ட நிலையிலும் மீட்கப்பட் டுள்ளன.
இந்தச் சடலங்கள் மிக மோசமாகச் சிதைந்து காணப்பட்டதால், ஆணா, பெண்ணா என உடனடியாக அடையா ளம் காணமுடியாது இருப்பதாகச் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மேலதிக பரிசோதனைகளுக்காகச் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Sunday, May 30, 2010

கிளிநொச்சி கணேசபுரத்தில் மனிதப்புதைகுழி! மலகூடக் குழியின் மேற்பரப்பில் 4 சடலங்கள்!! மேலும் மனித எச்சங்கள் இருக்கலாம் எனச் சந்தேகம்
கிளிநொச்சி நகரை அண்டிய கணேச புரத்தில் மனிதப் புதைகுழி இருப்பது குறித்து வெளியான தகவலை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலசலகூடக் குழியைத் துப்புரவு செய்ய முற்பட்ட வேளை, அங்கு கறுப்புப் பொலித் தீனால் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் இருப்பதை வீட்டின் உரிமை யாளர் கண் டுள்ளார்.
இதுகுறித்து உரிமையாளரான நவரத் தினம் என்பவர் கிராம சேவையாளரின் உத வியுடன் பொலிஸில் முறைப்பாடு செய் துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து கிளி நொச்சி நீதிவான் எஸ். சிவகுமார் சடலங் கள் இருப்பதாகக் கூறப்படும் மலசலகூடக் குழியை (புதைகுழியை) நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். சம்பவ இடத் தில் நீதிவான் விசாரணையும் நடத் தினார். கிளிநொச்சி வைத்தியசாலை டாக்டரும் அங்கு பிரசன்னமாகி இருந்தார்.
நேற்றைய விசாரணையின் பின்னர் நீதிவான் இன்று புதைகுழியைத் தோண்டு மாறு உத்தரவிட்டார்மலசலக் கூடக் குழி மணல் மற்றும் குப்பைகள் போன்றவை போடப்பட்டு மூடப்பட்டுள்ளதால், கனரக இயந்திரங்களைக் (""பெக்கோ'') கொண்டு அதனைக் கிளறித் தோண்டி எடுக்குமாறு நீதிவான் தமது உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கறுப்புப் பொலித்தீனில் உள்ள சடலங்கள் மண்ணுடன் சேர்ந்திருப்பதால் தம்மால் பரிசோதனை செய்யமுடியாது என கிளிநொச்சி வைத்தியசாலை டாக்டர், நீதிவானிடம் தெரிவித்ததை அடுத்து, சட்டவைத்திய அதிகாரியை இன்று அழைத்துவருமாறு நீதிவான் பொலிஸாரைப் பணித்தார்.
இதேவேளை, கணேசபுரத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதியே மீள்குடியேற்றம் ஆரம்பமானதாகவும், அதற்கு முன்னரே இந்தக் குழியில் சடலங்கள் போடப்பட்டு மூடப்பட்டிருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகிறது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது :
வீட்டுக்காரர் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னரே மலசலக் கூடக்குழியைத் துப்புரவு செய்ய ஆரம்பித்துள்ளனர். குழியைத் துப்புரவுசெய்ய ஆரம்பித்துள்ளனர் குழியின் மேல் மூடப்பட்டிருந்த ""பிளேற்'' அங்கு காணப்படவில்லை. மேற் பரப்பில் மணல் போடப்பட்டுக் குப்பை கூளங்கள் போடப்பட்டிருந்தன.
அதனால் சகிக்கமுடியாதவாறு துர்நாற்றம் ஏதும் இருக்கவில்லை. குப்பைகளை அகற்றிய வேளையில், கறுப்புப் பொலித்தீன்கள் தெரிந்தன. அவற்றை அகற்ற முற்பட்டபோதே சிதைந்த எலுப்புகள் அடங்கிய மனித எச்சங்கள் தெரிந்தன.
அநேகமாக அங்கு மேல் மட்டத்தில் நான்கு சடலங்களின் எச்சங்கள் இருக்கலாம் என்று ஓரளவு ஊகிக்கப்படுகிறது.
குழியின் கீழ்ப்பகுதியில் மேலும் அழுகிய சடலங்களின் எச்சங்கள் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதனிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனும் நேற்று குறிப்பிட்ட இடத்துக்கு வந்து நிலைமைகளை நேரில் அவதானித்துச் சென்றார்.

மத்திய அரசிடமே பொலிஸ் அதிகாரங்கள்; மாகாண சபைகளுக்குத் தேவை இல்லை "ரைம்ஸ் ஒவ் இந்தியா'வுக்கு ஜனாதிபதி பேட்டி
பொலிஸ் அதி காரங்கள் எப்போதும் மத்திய அரசி டமே இருக்கவேண்டும். மாகா ணங்களுக்கு வழங்கப்படக்கூடாது. இதில் எத்தனையோ விடயங்கள் இருக் கின்றன. அண்மையில் மும்பையில் நடந்த தாக்குதலைக் கவனியுங்கள். எத்தனையோ தடைகளையும் கடந்து இராணுவ கொமாண் டோக்கள் பல மணிநேரப் போராட்டத்தின் பின் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
"ரைம்ஸ் ஒவ் இந்தியா'வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்த பேட்டியில் இப்படிக் கூறியுள்ளார்.
புலிகளுடனான போராட்டத்தில் பெற்ற வெற்றியின் முதலாவது ஆண்டு நிறை வையொட்டி "ரைம்ஸ் ஒவ் இந்தியா'வுக்கு ஜனாதிபதி இந்தப் பேட்டியை வழங்கி இருந்தார்.
பேட்டியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளவை வருமாறு:
கேள்வி: புலிகள் தோல்வியடைந்து ஓராண்டு கடந்துவிட்டது. புலிகள் இயக்கத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: தனி ஈழம் அமைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுடன் பல தடவைகள் பேச்சுகள் நடத்த முயற்சித்தோம். ஆனால், அவர்கள் மறுத்தனர். முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர, வேறு வழி எனக்கு இருக்கவில்லை.
புலிகளின் கதை இன்னும் முடியவில்லை
கே: சரி. இப்போது இது முடிந்த கதையா?
ப: நான் அப்படிச் சொல்லவில்லை. புலிகளின் ஆதரவாளர்களும், உறங்கு நிலையிலுள்ள அனுதாபிகளும் பல நாடுகளிலும் மிகவும் திறமையாகச் செயற்படுகின்றனர். ஆகவே, கதை இன்னும் முடியவில்லை.
கே: இறுதி யுத்தத்தில் 20 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்று சொல்லப்படுகிறதே?
ப: இது சரியல்ல. இலங்கை இராணுவம் மிகவும் கட்டுப்பாடுகளோடு செயற்படுகிறது. பொதுமக்களை அது அழிக்கவில்லை. பிரபாகரனின் தாய், தந்தையர் உட்பட பல நெருங்கிய உறவினரும் எமது முகாமில்தான் இருந்தனர். அவர்கள் தாக்கப்படவில்லை என்றால் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. அவர்களும் எமது மக்களே!
கே: யுத்தம் முடிந்து 180 நாட்களுக்குள் மூன்று லட்சம் உள்ளூர் அகதிகளை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவோம் என்று உறுதி கூறினீர்களே?
ப: தற்போது முன்னெடுக்கப்படும் முயற்சிகள் எனக்குத் திருப்தி அளிக்கிறது. முகாம்களிலிருந்த மூன்று லட்சம் மக்கள் தொகை இப்போது 30 ஆயிரமாகக் குறைந்திருக்கிறது. இவ்வருட இறுதிக்குள் எல்லா இடங்களிலும் கண்ணிவெடிகளை அகற்றி மிகுதியானவர்களையும் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவோம்.
கே: புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைத்ததா?
ப: ஆம். கிடைத்தது. நாங்கள் அதைப் பாராட்டுகிறோம்.
கே: இராணுவ ஆதரவா அல்லது தார்மீக ஆதரவா?
ப: (சிரித்துக்கொண்டே) இரண்டும் எங்களுக்குத் தேவையானவை.
கே: சீன இராணுவ உதவிகள் தொடர்கின்றனவா?
ப: இராணுவ ஆயுதம் மற்றும் ஆயுதத் தளபாடக் கொள்வனவு என்பது இராணுவ விடயம். இந்தியாவிடமிருந்து எவ்வளவு பெறமுடியுமோ அவ்வளவையும் பெற்றோம். மிகுதியை சீனா, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல் ஏன் அமெரிக்காவிடமிருந்தும் பெற்றோம்.
கே: நீங்கள் ஜூன் 8 இல் இந்தியா வருகிறீர்கள். இதனால் இரண்டு வருடங்களாக கிடப்பில் கிடக்கும் இலங்கை இந்திய பொருளாதார உடன்படிக்கை புத்துயிர் பெறுமா?
ப: பல விடயங்கள் பரிசீலிக்கப்படும். பொருளாதார முன்னேற்றம் முக்கிய இடம் பெறும்.
கே: இந்திய மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய அதிகாரம் பற்றி குறை கூறுகிறீர்களே? இது இலங்கையில் அமுல்படுத்த இருக்கும் மாகாண சபைக்கான 13 ஆவது திருத்தத்தை உதறித் தள்ள ஒரு முன்கூட்டிய கண்ணோட்டமா?
ப: இந்தியா ஒரு பெரிய நாடு. இந்தியாவை இலங்கையுடன் ஒப்பிடமுடியாது. மும்பையில் நடந்த தாக்குதலை நோக்கும்போது, பொலிஸ் அதிகாரங்கள் எப்போதும் மத்திய அரசுடன் இருக்கவேண்டியவை.
கே: உங்களது நெருங்கிய பல உறவினர்கள் உங்கள் நிர்வாகத்தில் இருக்கிறார்களே?
ப: நான் என்ன செய்வது. அண்மையில் நடந்த தேர்தலில் மக்கள் அவர்களுக்கு ஆணை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தேவையில்லை என்று தெரிந்தால் அவர்கள் ஓரம்கட்டப்படுவார்கள்.
கே: ஒருநாள் முழுவதும் கடும் வேலைக்குப் பின் எப்படி ஆறுகிறீர்கள்?
ப: இந்திப் படம் பார்த்து மகிழ்கிறேன். அண்மையில் சாருக்கானின் படமான "எனது பெயர் கான்' என்ற படத்தைப் பார்த்தேன். இது மேற்குலகில் முஸ்லிம்கள் படும் இன்னல்களை விவரிக்கின்றது. எம்மை மனித உரிமைகளை மீறுகிறோம் என்று குறை கூறுபவர்களும் இக்குற்றத்தையே தமது சொந்த நாடுகளில் செய்கிறார்கள் என படத்தைப் பார்த்த பின் நினைவில் கொள்கிறேன்

தமிழீழ மக்களுக்காக ஒருமித்து அணிதிரளும் தமிழக திரையுலகம்!


தமிழீழ மக்களை வகைதொகையின்றி கொன்றுகுவித்து நரபலி வேட்டையாடிய சிங்கள அரசின் முகத்தில் ஓங்கியறையும் வகையில் அனைத்துலக இந்திய திரைப்பட விழாவை முற்றுமுழுதாகப் புறக்கணிப்பதற்கு தமிழக திரையுலகம் முடிவு செய்துள்ளது.

அத்துடன், தமது ஆட்சேபனைகளை மீறி கொழும்பில் இடம்பெறும் அனைத்துலக இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் சகல இந்திய நடிகர் – நடிகைகளின் திரைப்படங்களும் தமிழகத்தில் திரையிடப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்றும் தமிழக திரையுலகத்தினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்புக்கு வருகை தந்து அனைத்துலக இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜனிகாந்த் அவர்களுக்கு சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச இரகசிய அழைப்பிதல் அனுப்பியிருந்த பொழுதும், அதனை நடிகர் ரஜனிகாந்த் அவர்கள் தூக்கியெறிந்திருப்பதோடு, இதேபோன்ற தீர்மானத்தை நடிகர் கமலஹாசன் உட்பட முன்னணி தமிழக திரையுலகத்தினர் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்தோர் 50 ஆயிரம் ரூபா நிவாரணம் பெறுவதற்கு காணி உறுதிகள் கிடைக்க மாற்று ஏற்பாடுகள்கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடிய மர்ந்த மக்களில் காணி உறுதி இல்லாத வர்கள் 50 ஆயிரம் ரூபா நிவாரணத்தைப் பெறுவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
வன்னிக்குக் கடந்தவாரம் மேற்கொண்ட விஜயத்தின்போது, அங்குள்ள மக்கள் தமது காணிகளின் உறுதிகளைப் பெறமுடி யாதுள்ளது என்றும் அதன் காரணமாக 50 ஆயிரம் ரூபா நிவாரணத்தையும் இழக்கும் நிலை உள்ளதாகவும் கவலை வெளியிட்டனர்
இது தொடர்பாக பிரதிப் பதிவாளர் நாய கம் என்.சதாசிவஐயரிடம் முறையிட்ட போது, உறுதிகளைப் பெறுவதற்கு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் நாடாளு மன்ற உறுப்பினரிடம் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டப் பதிவகத்தில் இருந்த காணி உறுதிகள் காணாமற்போய் விட்டன. இதன் காரணமாகத் தற்காலிக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காணிச் சொந்தக்காரர் தம்மிடம் உள்ள உறுதிகளின் பிரதிகளை மீளப்பதிவு செய்ய ஏற்பாடு அத்துடன் கிளிநொச்சிக் காணிகளின் பதிவுகள் பெரும்பாலானவை வவுனியா, யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய காணிப்பதிவகங்களில் மேற்கொள்ளப்பட் டன. அந்தப் பிரதேச நொத்தாரிசுகள் இந் தப்பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களுடன் தொடர்புகொண்டு, உறுதி களின் பிரதிகளைப் பெற்று கிளிநொச்சி காணிப்பதிவகத்தில் பதிவு செய்து உறுதி களைப் பெறமுடியும்.
புதிய உறுதிகளைப் பதிவு செய்யக் கிளிநொச்சி பதிவகத்துக்கு அறிவுறுத்தல் கள் வழங்கப்பட்டுள்ளன. காணி உரிமை யாளர்கள் அந்தப்பதிவகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிகளைப் பெறமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
அரச காணிகளைப் பொறுத்தவரை, மாகாண காணி ஆணையாளருடன் தொடர்பு கொண்டு காணிகள் தொடர்பான முடிவு களை எடுக்க வேண்டும் என்று பிரதிப்பதி வாளர் நாயகம் தெரிவித்தார் என நாடாளு மன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரி வித்தார்.

கீரிமலையில் வேள்விக்கு சிங்களப் படைகள் தடை! 2 கிலோமீற்றர் தொலைவில் வேள்வி!!!


அதியுயர் படைவலயமாக விளங்கும் யாழ் வலிகாமம் கீரிமலைப் பகுதியில் உள்ள கவுணாவத்தை ஆலயத்தில் வேள்வியை நிகழ்த்துவதற்கு சிங்களப் படையினர் தடைவிதித்துள்ள நிலையில், ஆலயத்தில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் மக்களால் வேள்வி நிகழ்த்தப்பட்டுள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக கவுணாவத்தை ஆலயத்தில் வழிபாடுகளை நிகழ்த்துவதற்கு தடை விதித்திருக்கும் சிங்களப் படையினர், இன்று ஆலயத்திற்கு முதன்மைக் குருக்களையும், ஒரு சில மக்களையும் மட்டும் செல்வதற்கு அனுமதித்து, ஒரு கடாவை பலிகொடுப்பதற்கும், பொங்குவதற்கும் மட்டும் இடமளித்திருந்தனர்.

இதனால் ஏனைய மக்கள் ஆலயத்தில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் வைத்து வேள்வியையும், பொங்கலையும் நிகழ்த்தி, நூற்றுக்கணக்கான ஆடுகளையும், கோழிகளையும் பலிகொடுத்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியுள்ளனர்.


நன்றி: பதிவு

யாழ் - கதிர்காமம் பஸ் சேவை ஆரம்பம்யாழ் - கதிர்காமம் பஸ் சேவை ஆரம்பிக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை , யாழ் குடா நாடு முதல் கதிர்காமம் வரையிலான பஸ் சேவையை முப்பது வருடங்களின் பின்னர் ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜுலை 1ஆம் வாரம் முதல் இவ் இரு பகுதிகளுக்கான பஸ் சேவை இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது

Wednesday, May 26, 2010

மீள்குடியேற்றம் குறித்து ஜெர்மனிய தூதருடன் அமைச்சர் கருணா பேச்சுவடக்கில் இடம்பெயர்ந்த மக்களை அரசாங்கம் மீள்குடியேற்றி வருகின்றது. இது தொடர்பான கலந்துரையாடலொன்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,ஜெர்மனிய தூதுவர் ஜேன்ஸ் பொலட்னருக்கிடையில் இன்றுகாலை இடம்பெற்றதை படத்தில் காணலாம்.

பஸ்களில் பயணிகளின் பணப்பைகள் கொள்ளை; சந்தேகத்தில் சகோதரிகள் கைது

பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பணப் பைகளைக் கொள்ளையிட்டுவந்த பாடசாலை மாணவிகள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று பிலியந்தளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சகோதரிகளான இவ்விருவரிடமிருந்து 30 பணப்பைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சன நெருக்கடி அதிகமாகவுள்ள பஸ்களிலுள்ள பயணிகளிடம் தங்களது கைவரிசையினைக் காண்பித்து வந்துள்ள இவ்விருவரும் குறித்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றிலேயே கல்வி கற்று வருகின்றனர்.

ஒன்பது மற்றும் 12ஆம் தரங்களைச் சேர்ந்த இவ்விருவரும் நீண்ட நாட்களாகவே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

முல்லை. வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் விழாமுல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அம்மன் முன்னிலையில் பொங்கல் வழிபாடுகளில் பக்தர்கள் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம்.

பாதுகாப்பிலிருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடைநிறுத்தம்

பொலிஸாரின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி, ஒரு பொலிஸ் அதிகாரியும் இரு பொலிஸ் கான்ஸ்டாபிள்களும் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

மேற்படி நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி நபர் கடந்த 24ஆம் திகதி திடீரென உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறித்த நபரின் உறவினர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

தனது பதிவை உறுதிப்படுத்தத் தவறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக பொலிஸாரால் சந்தேகிக்கப்பட்டிருந்தார்.

யாழ்.உரும்பிராய் பகுதியில் விபத்து வர்த்தகர் பலி; மற்றொருவர் காயம்

யாழ்.உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொறில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்றும் டிரக்டர் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதை அடுத்தே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த யாழ்ப்பாணம் முஸ்லிம் வீதியைச் சேர்ந்த ஜுனைத் அனீஸ் (வயது 42) என்பவரே உயிரிழந்தவராவார். விபத்தின்போது காயமடைந்த மற்றைய நபர் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மத்திய கல்லூரியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கண்காட்சி

யாழ். மத்திய கல்லூரியில் நாளை மறுதினம் உள்ளூர் உற்பத்தியால் உயர்வோம் என்னும் தொனிப்பொருளிலான கண்காட்சியொன்று இடம்பெறவுள்ளது.

மேற்படி கண்காட்சி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவிருக்கிறது.

இக்கண்காட்சியில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, May 25, 2010

இலங்கையில் கொலை இடம்பெற்றதாக பிலிப் அல்ஸ்டன் கருத்து;அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு

இலங்கையில் சட்டத்திற்கு புறம்பான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம், கொழும்பு நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

மேற்படி அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி சேனுகா செனவிரத்னவிடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்குமாறும் கொழும்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் சட்டத்திற்கு புறம்பான கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பான்கீமூன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் அபிவிருத்தி கூட்டம்மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்திக் கூட்டம் மன்னார் கச்சேரியிலுள்ள ஜெய்கா மண்டபத்தில் நடைபெற்றது. மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் இக்கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம்.
ஜீ.எல்.பீரிஸ் - ஹில்லரி கிளின்டன் பேச்சுவார்த்தை ?

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,ராஜாங்க செயலாளர் ஹில்லரி கிளின்டனுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

வாஷிங்டனில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை வெளிவிவகார ஆமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நேற்று அமைச்சர் பீரிஸ்,ஐ.நா செயலாலர் நாயகம் பான் கீ மூனுடன் பேச்சுவர்த்தளை மேற்கொண்டார்.

வடக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றல்; ஜுலையில் நிறைவு-சந்திரா பெர்ணான்டோ

வட மாகணத்தில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் ஜுலை மாத நடுப்பகுதியில் நிறைவடையும் என வட கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரா பெர்ணான்டோ தெரிவித்தார்.

யாழ்.குடாவில் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு நகைகள் கொள்ளை

வீட்டுக்குள்ளிருந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு அவரது நகைகளை திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணம், நாவலர் வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இதுவரையில் 58,897 பொதுமக்கள் மீள்குடியேற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்மாதம் 15ஆம் திகதி வரையில் மாத்திரம் 18,802 குடும்பங்களைச் சேர்ந்த 58,897பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்று யாழ்.செயலகத் தகவல்கள் தெரிவித்தன.

கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிளைப்பள்ளி போன்ற பிரதேசங்களிலேயே இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

யுத்தத்தின் போதான இடம்பெயர்வுகளுக்கு முன்னர், குறித்த மாவட்டத்தில் மாத்திரம் 42,115 குடும்பங்களைச் சேர்ந்த 1,66,166பேர் வசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் இதுவரையில் 58,897 பொதுமக்கள் மீள்குடியேற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்மாதம் 15ஆம் திகதி வரையில் மாத்திரம் 18,802 குடும்பங்களைச் சேர்ந்த 58,897பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்று யாழ்.செயலகத் தகவல்கள் தெரிவித்தன.

கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிளைப்பள்ளி போன்ற பிரதேசங்களிலேயே இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

யுத்தத்தின் போதான இடம்பெயர்வுகளுக்கு முன்னர், குறித்த மாவட்டத்தில் மாத்திரம் 42,115 குடும்பங்களைச் சேர்ந்த 1,66,166பேர் வசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயுத முகவரின் இரட்டை வேடம்! புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் ஒரே கருவிகள் விற்பனை?

சிறீலங்கா படைகளுக்கு தொலைத்தொடர்புக் கருவிகளை விற்பனை செய்த ஆயுத முகவர் ஒருவர், அதே ரகத்தை சேர்ந்த கருவிகளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் விற்பனை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் டெய்லி மிரர் நாளேடு, முல்லைத்தீவில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான தொலைத்தொடர்புக் கருவிகள் கைப்பற்றப்பட்டதாகவும், இதே ரகத்தைச் சேர்ந்த கருவிகள் படையினரின் வசமிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இவற்றை இரு தரப்பினருக்கும் ஒரே ஆயுத முகவர் விற்பனை செய்திருப்பதோடு, சிறீலங்கா படையினரின் தொலைத்தொடர்புக் கருவிகளை முடக்குவதற்கான உபகரணங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதாகவும் டெய்லி மிரர் நாளேடு தெரிவித்துள்ளது.

மத்திய ஆபிரிக்கா, சாட் நாடுகளுக்கு இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவுஇலங்கை இராணுவத்தின் படைப்பிரிவொன்று ஐ.நா படையுடன் இணைந்து பணிபுரிவதற்காக மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கு விரைவில் புறப்பட்டுச் செல்லவுள்ளது.
மூன்று அதிகாரிகள் உட்பட மொத்தம் 61 பேர் இந்தப்படைப்பிரிவில் அங்கம் வகிக்கவுள்ளனர் எனப் பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை இராணுவப் பிரிவொன்று மத்திய ஆபிரிக் காவுக்குச் செல்வது இதுவே முதற் தட வையாகும்.
இலங்கை இராணுவத்தின் தொழிற்சார் தகைமை மற்றும் அதன் திறமை என்பனவற்
றுக்கு ஐ.நா வழங்கியுள்ள அங்கீகாரமாகவே இது கருதப்படுவதாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் புலி போரளிகள் 198 பேர் இன்று விடுதலைகொழும்பில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 198 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனவாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு கொழும்பில் புனர்வாழ்வு அளித்துவந்த முகாம் இன்றுடன் மூடப்படுவதாக இருந்தது. எனினும் அங்கு தங்கியிருந்த 52 பேர், தங்களது கல்வியைத் தொடரும்வரை அரசாங்கம் அவர்களைப் பொறுப்பேற்கும் எனவும் அவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

"புனர்வாழ்வு முகாமில் எனக்கு நண்பர்கள் பலர் கிடைத்தார்கள். நான் நிறைய விடயங்களை இங்கு கற்றுக் கொண்டேன். எனக்கு முகாமை விட்டுச் செல்வது ஒரு வகையில் கவலையாக இருக்கின்றது. என்றாலும் எனது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைவது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது."

மூன்று வருடகாலமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 17 வயது லுக்சியா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"நான் சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற கனவை புனர்வாழ்வு முகாம் நனவாக்கியுள்ளது. நான் எனது கல்வியைக் கவனமாகத் தொடர்வேன்" என 16 வயதான கிறிஸ்டி என்ற மாணவி குறிப்பிட்டுள்ளதாக ஏ.எப்.பி., செய்தி வெளியிட்டுள்ளது. _

மகிந்தவின் ஊதுகுழலாக மாறூம் கே.பி


ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்களின் வாக்குகளை கவருவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்த பல சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து வந்து கே.பியை சந்திக்க வைத்தார் பஸில் . பின்னர் நாடாளுமன்ற தேர்தலின் போதும் கல்விமான்களையும் சந்திக்க வைத்து மகிந்தவுக்கே வாக்களிக்குமாறு கே.பி மூலமாக மகிந்த கேட்டுக்கொண்டார். பின்னர் தற்போது வடக்கில் தமிழ் உணர்வு பொங்கும் இடமாக இருக்கின்ற யாழ் பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளை சந்திக்க வைத்து புலிகள் பற்றி எதிர் விமர்சனம் பண்ணி இனிமேல் போராட்டம் எனப்து இல்லை. தமிழ்மக்களுக்கு மகிந்தான் சரியான் தலைவர் என்றும் த.தே.கூட்டமைப்பினரையும் ஓரங்கட்டுமாறும் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் எமக்கு கிடைத்த நம்பகமான தகவலின்படி கே.பி புலிகள் பற்றிய ஒரு சில தவல்களை அரசாங்கத்திடம் கொடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.ஆனாலும் கே.பியின் கைதுக்கு பிறகு உடனேயே மேற்குலகில் இருந்த வி.பு முகிய உறுபினர்கள் அனைத்து விடயங்களையும் உடனடியாகவே இரகசியமாக நகர்த்திவிட்டனர். இதனால் அரசாங்கம் இன்றும் அனைத்து வி.பு வலைப்பின்னலை பிடிக்க முடியாமல் திணறுகின்றது. ஆனாலும் இன்றும் அவருக்கு இராஜ மரியாதையுடன் தான் மகிந்த அரசு கொடுத்து வருகிறது .

இதன் ஒரு அங்கமாக இன்று பேராசிரியர் ரொஹான் குணரட்ன கே.பி பற்றிய சில பின்வரும் கருத்துக்களை தெரிவித்தார்.
நாட்டில் யுத்தம் நிறைவடைந்துவிட்டது. இனிவரும் காலங்களில் தொடர்ந்து சமாதானம் நிலவுவதற்கு, விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவு முகவராக செயற்பட்ட, கேபி (குமரன் பத்மநாதன்) உதவத் தயாராக இருக்கிறார்

"நாடு கடந்த அரசாங்கத்தை அமைக்குமாறு வி.உருத்திரகுமாரனின் தலைமையிலான தனது குழுவினருக்குப் பணிப்புரை வழங்கி விட்டு, இலங்கை அரசிடம் சரணாகதியடைந்தவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்.

இவர் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான - காத்திரமான பாத்திரத்தை வகித்து வருவதாக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் ஓர் உறவுப்பாலமாக கே.பி திகழ்கின்றார். இன ஐக்கியத்திற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தனது தொடர்பாளர்கள் ஊடாக கே.பி. பணியாற்றுகின்றார்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அவர் காத்திரமான பங்கை வகித்து வருகின்றார். வடக்குக் கிழக்கை சேர்ந்த பல தமிழர்களை கே.பி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அவரை நானும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். எவ்விதமான சத்தம் சந்தடியின்றி அவரது பணி தொடர்கின்றது. அவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் சித்திரவதைக்கு உட்படுத்தவில்லை. நல்லதொரு பணியில் ஈடுபடும் கே.பி அவர்களை அரசாங்கம் ஏன் சித்திரவதை செய்ய வேண்டும்?

இலங்கை ராணுவத்தினரின் கேவலமான இன்னுமொரு வீடியோ வெளியாகி உள்ளது

போரின் இறுதி நாட்களில் இலங்கை ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட போராளிகளின் உடல்ங்களை மிகவும் கேவலமாக கையாளும் ராணுவத்தினரின் வீடியோ வெளியாகி உள்ளது.பார்க்கும் போதெ நெஞ்சம் பதைபதைக்கின்றது. இறந்தவர்களையே இப்படி கையாள்பவர்கள் உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு சித்திரவதையை அனுபவித்திருப்பார்கள்.... நான் தமிழீழ பிரதேசத்திலே 2008 வரை இருந்த காலப்பகுதியில் பல தடவைகள் விடுதலைப்புலிகள் இல. ராணுவத்தினரின் உடலங்களை கைப்பற்றி அவற்றை மக்கள் பார்வைக்கு வைத்திருந்தார்கள், ஆனாலும் அவர்கள் இறந்து போன அந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விடயத்தில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை அமுல்படுத்த பொலிஸாருக்கு உத்தரவு

யாழ். மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக அமுல்ப்படுத்துமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் அங்கு இடம்பெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

யாழ. மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி டி சில்வா, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பத்மதேவ ஆகியோருடனான சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாரான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

காணாமல்போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்காணாமல்போனோரை கண்டறியும் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று வவுனியா பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று காலை நடைபெற்றது.
காணாமல்போனோர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என்று சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்து தருமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.வவுனியா தாண்டிக்குளத்தில் வாகன விபத்து ஒருவர் பலி; ஏழு பேர் படுகாயம்

திருமண வைபவமொன்றில் கலந்துகொண்ட உறவினர்கள் சிலர் பயணித்த வானொன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், குறித்த திருமண வைபவத்தை வீடியோ ஒளிப்பதிவு செய்த நாவாந்துரையைச் சேர்ந்த எம்.யேசுநேசன் (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற மேற்படி திருமண வைபவத்தில் கலந்துகொண்டுவிட்டு, கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் பயணிக்கும் போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றஇந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரு சிறுவர்களும் அடங்குவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, May 24, 2010

சாள்ஸுக்கு பிணை வழங்க முடியாது; மேல் நீதிமன்றுக்கே அந்த அதிகாரம் உண்டு கபிலநாத் கொலை வழக்கு விசாரணையில் நீதிவான் அறிவிப்பு
பாரதூரமான குற்றங்களுக்குப் பிணை அனுமதி வழங்குவதற்கான அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கே உரியதால் சந்தேக நப ரின் பிணைமனுவை மேல் நீதிமன்றத்தி லேயே சமர்ப்பிக்கவேண்டும்.
இவ்வாறு மாணவன் கபிலநாத் படு கொலை வழக்கின் சந்தேக நபரான சூசை முத்து அலெக்ஸாண்டரை (சாள்ஸ்) பிணை
யில் விடுவிக்கக்கோரி சாவகச்சேரி நீதி மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசா ரித்த நீதிவான் இப்படி அறிவித்தார்.
சாவகச்சேரியில் கபிலநாத் என்ற மாணவனைக் கடத்திப் பின்னர் கொலை செய்த சம்பவத்தில் ஈ.பி.டி.பி அமைப்பின் தென்மராட்சிப் பிரதேச அமைப்பாளரான சூசைமுத்து அலெக்ஸாண்டர் (சாள்ஸ்) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டி ருந்தார் என்பது தெரிந்ததே.
அவரைப் பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சாவகச்சேரி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந் தது. சந்தேகநபர் சார்பில் அஜரான சட்டத் தரணி சந்திரலால் சமர்ப்பித்த இந்த மனுவை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிவான் ரி.ஜே.பிரபாகரன்
மாணவன் கபிலநாத் கொலைவழக் கில் கொலை, கொலைக்கு உடந்தை, கொலை செய்யத்திட்டமிட்டமை போன்ற பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவ்வா றான பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத் தப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரைப் பிணையில் விடுவிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கே உண்டு.
எனவே சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்க அனுமதிப்பது தொடர்பான மனுவை மேல் நீதிமன்றத்திலேயே சமர்ப் பிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

உள் விவகாரங்களில் ஐநா தலையீடு கூடாது : பான் கீ மூனிடம் பீரிஸ் கோரிக்கைநாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ முனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்திய செய்தி இணையத்தளமான பி.ரி.ஐக்கு இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான அழுத்தங்கள் தமது எதிர்கால நடவடிக்கைகளைப் பாதிக்கும் என அமைச்சர் கூறியதாக பி.ரி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஐ.நா.சபையின் செயலாளர் நாயகத்தைச் சந்தித்த பிறகு இவ்வாறு தெரிவித்ததாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

போர்க் குற்றங்கள் சம்பந்தமாக கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கடந்த வாரம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன வலியுறுத்தியிருந்தன.

அதேவேளை, போர்க்குற்றங்கள் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கத் தயாராக இல்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Sunday, May 23, 2010

மனிக்பாம் முகாமிற்கு செல்ல விடாது தடுத்த அரசின் எதேச்சாதிகாரத்தை கவனத்தில் கொள்க சர்வதேசமே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள்வவுனியா "மனிக்பாம்"முகாமுக்குச் செல்லவிடாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் பன்னிருவரையும் தடுத்த இலங்கை அரசாங்கத்தின் எதேச்சாதிகாரச் செயலை, தக்கவாறு கவனத்தில் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்திடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் செயலைக் கண்டித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கூட்டறிக்கை யிலேயே அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர்.
மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திப் பதற்கு விடாது தடுத்தமை ஜனாநாயக உரிமைகளை கேவலப்படுத்தி, ஜனநாய முறைமைகளையும் உதாசீனம் செய்வதாகும் என்றும் அவர்கள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளவை வருமாறு :
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினு டைய 12 நாடாளுமன்ற உறுப்பினர்களால் வன்னியில் பொதுமக்கள் வைத்திருக்கப் பட்டிருக்கின்ற பல முகாம்களையும், தமிழ் இளைஞர்களும், யுவதிகளும், தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தடுப்பு முகாம் களையும், மீள் குடியேற்றமும் புனர்வாழ் வும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகின்ற பிரதேசங்களையும் மக்களையும் பார்வையிடுவதற்காக விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
உண்மையான நிலையை அறிந்து கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கம். இந்த விஜயம் குறித்து மாண்புமிகு ஜனா திபதிக்குக் கடிதங்கள் மூலமாக நாடாளு மன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந் தன் அவர்கள் அறிவித்து இந்த விஜயத் திற்குத் தேவையான ஒழுங்குகளைச் செய்து உதவும்படியாகக் கேட்டிருந்தார். இது சம்பந்தமாக திரு. இரா. சம்பந்தன் அவர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அவர்களுடன் தொடர்பாடலை வைத்திருந்தார்.
அதன் பிரகாரம் இந்த விஜயம் மே 21 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து மே 22 சனி 23 ஞாயிறு தொடர இருந்தது. ஜனாதிபதி யின் செயலாளர் லலித் வீரதுங்க அவர் களுக்கு இத்தகவல் திருவாளர் சம்பந்த னால் அறிவிக்கப்பட்டு இந்த விஜயத்திற்கு அவர் தனது முற்றுமுழுதான சம்மதத் தைத் தெரிவித்தார். இதன் மூலம் இவ் விஜ யத்திற்கு மாண்புமிகு ஜனாதிபதி அவர் களின் சம்மதமும் இருந்தது என்பது தெளிவு.
இந்த நிலையில் மே 22 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர், பொதுமக்கள் வைக்கப்பட்டி ருந்த சில முகாம்களில் ஒன்றான வலயம் 4 இன் வாசலை வந்தடைந்தனர். அங்கே அதற்குப் பொறுப்பாக இருந்த பிரிகேடி யர் இந்த முகாம்களுக்குள்ளே செல்வ தற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லை என்றும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்த விஜயத்தைத் தடுக்கும்படியாகக் கட் டளையிட்டிருக்கின்றார் என்றும் நாடாளு மன்றக் குழுவுக்குக் கூறினார்.
உடனடியாக திரு. இரா. சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியபோது வீரதுங்க இந்த விடயத்தைத் தான் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகக் கூறி, அதுவரைக்கும் நாடா ளுமன்றக் குழுவினை அங்கேயே தரித்து நிற்கும்படியும் கூறினார். அந்த முகாம் வாசலிலே சுமார் ஒரு மணிநேரம் காத் திருந்த பின்னர் ஜனாதிபதியின் செயலாள ரைத் தொடர்பு கொள்வதற்கு எடுத்த முயற் சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந் நிலையில் திரு. இரா. சம்பந்தன் அவர் களுடன் தொடர்புகொள்ளக்கூடிய தொலை பேசி இலக்கங்களை ஜனாதிபதிச் செயல கத்திற்குக் கொடுத்துவிட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கள் அங்கிருந்து புறப்பட்டனர். அதன் பின் னர் திரு. இரா. சம்பந்தனோடு எந்தவித மான தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை.
இந்த முகாம்களிலே தடுத்துவைக்கப் பட்டுள்ள மக்களைச் சந்திப்பதற்கு அவர் களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி களைத் தடுக்கும் இச்செயலானது அந்த மக்களுடைய நியாயபூர்வமான ஜனநாயக உரிமைகளைக் கேவலப்படுத்துகின்ற ஒரு செயலாகும். அத்தோடு முழு ஜனநாயக முறைமையையும் உதாசீனம் செய்யும் ஒரு செயலாகவும் இது அமையும். பாரிய பல விடயங்களை ஒளித்து மறைக்க விரும்பு கின்றவர்களுடைய சர்வாதிகார செயல் இது என்பது தெளிவாகிறது. இலங்கை யிலும் இலங்கையிலிருக்கின்ற எல்லா மக் களையும் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பல்வேறு அங்கங்களை உள்ளடக்கிய சர்வதேசம் முழுவதையும் கட்டுக்கடங் காத இந்த எதேச்சதிகாரச் செயலைத் தங் களுடைய முழுமையான கவனத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு நாம் வேண்டுகின் றோம்.
இந்த சர்வாதிகாரச் செயலை நாம் வன் மையாகக் கண்டிப்பதுடன் இதனை உடன டியாக நிவர்த்தி செய்வதற்குத் தக்க நட வடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கத் திடம் கோருகிறோம் என்றுள்ளது.

கதிர்காமம் பிள்ளையார் கோவில் பௌத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில்?

கதிர்காமத்தில் அமைந்திருக்கும் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தை பௌத்த பிக்குகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு சிங்கள அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் சிங்களப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவின் தலைமையிலான பௌத்த சாசன அமைச்சு ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை ஆட்சேபித்து மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த சுவாமி யோகி சிறீசிவச்சந்திரன் என்ற சைவப் பூசகரால் மாத்தறை மாவட்ட மேல்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய - இலங்கை உறவுகளை கையாளும் பொறுப்பு பஸிலிடம்


.


இந்திய இலங்கை உறவுகளைக் கையாளும் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜ பக்ஷவிடமே ஒப்படைத்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய இலங்கை உறவுகள் தொடர் பான விடயங்களைக் கவனிக்கும் பொறுப்பு தொடர்ந்தும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடமே வழங் கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சராக ஜி.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் பஸில் ராஜபக்ஷவே இந்திய விடயங் களைக் கவனிப்பார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இறுதி விஜயத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் பஸில் ராஜபக்ஷ புதுடில்லி செல்லவிருந்தார்.
எனினும் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு ஜனாதிபதி தடை விதித்துள்ளமையால் பஸில் ராஜபக்ஷ புதுடில்லி செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது

இலங்கை மீது யுத்தக் குற்ற விசாரணை; ஐ.நா. சபை செயலரை வலியுறுத்துக! ஹிலாரி கிளிண்டனுக்கு அமெ. காங்கிரஸ் உறுப்பினர் கடிதம்
இலங்கையில் இடம்பெற்றன எனத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அமெ ரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிளாரி கிளிண்டன் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை வற்புறுத்த வேண்டும்.
மேற்கண்டவாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும், நிதிச் சேவைகள் குழுவின் மூத்த உறுப்பினருமான ஸ்டிவ் டிரை கோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹிலாரி கிளிண்டனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமது வேண்டுகோளை விடுத் துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் அந்த நாட்டு அரசினால் நடத்தப் படும் விதம் குறித்த எமது கவலையை வெளிப்படுத்தி நானும் எனது சகாக்கள் 25 பேரும் ஒருவருட காலத்துக்கு முன்னர் கடிதமொன்றை உங்களுக்கு அனுப்பி இருந்தோம்.
இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதை இலங்கை அரசு
தாமதப்படுத்தி உள்ளது.
இலங்கையில் இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத் துமாறும் நீதி வழங்குமாறும் ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகத்தைத் தூண்டுவதற்கு உங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்
துயரங்கள் மேலும்
அதிகரித்துள்ளன
கடந்த 23 வருடங்களில் இலங்கை மக்கள் மிக மோசமான யுத்தமொன்றைச் சந்தித்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான மோசமான குற்றங்களாகும். இதன் காரணமாக மோதலினால் உருவான துயரங்கள் மேலும் அதிகரித்துள்ளன.
இறுதி நான்கு மாதங்களில் 7ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் எனவும் 13 ஆயிரம் பேர் கயமடைந்தனர் எனவும் ஐ. நா. சபை மதிப்பிடுகின்றது.
ஏனைய மதிப்பீடுகள் 30ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை மக்களின் நல்வாழ்வுக்கு தேசிய நல்லிணக்கமும் நிரந்தர சமாதானமும் அவசியமாகும்.
குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறாமல்
நல்லிணக்கம் சாத்தியமில்லை
எனினும், மோதலின்போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறாமல் இது சாத்தியமாகாது.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த தனது விருப்பத்தை இலங்கை ஜனாதிபதி 2009இல் தெரிவித்திருந்தமை எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
"கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம்' குறித்த ஆணைக்குழுவை நியமித்ததன் மூலம் ஒருவருட காலத்துக்குப் பின்னர் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.
ஆணைக்குழுவின் பயன்
குறித்து சந்தேகம்
கடந்த கால ஆணைக்குழுக்களின் பயனற்ற தன்மை மற்றும் முன்னைய விசாரணைகளை ஜனாதிபதி கைவிட்டமை போன்றவற்றால் தற்போதைய ஆணைக்குழுவை அமைக்கும் நோக்கம் மற்றும் பலாபலன்கள் குறித்து சந்தேகம் எழுகின்றது.
மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.சபை விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை அல்ல.
பல கௌரவம் மிக்க தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் இந்த வேண்டுகோளைப் பகிரங்கமாகவே விடுத்துள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அரசும் நீதியை நிலைநிறுத்தவும், மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான தனிநபர்களைப் பொறுப்புக்கூறச் செய்யவும் விரும்பினால் ஐ.நா.சபை மூலமாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளால் மாத்திரமே அது சத்தியமாகும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மன்னாரில் கிளைமோர் குண்டு மீட்புமன்னார் மூர்வீதி காட்டுபல்லி பகுதியில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் இருந்து புதைக்கப்பட்ட நிலையில் 1 கிலோ நிறையுடைய கிளைமோர் குண்டு ஒன்றை இன்று முற்பகல் 11 மணியளவில் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலையடுத்து கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

இந்த கிளைமோர் குண்டு பொலித்தின் மற்றும் பெற்றரிகள் பொருத்தப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அவ்விடத்துக்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் அந்த கிளைமோர் குண்டினை செயலழிக்கச் செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர் .

அக் குண்டு 2006 ஆம் ஆண்டு புதைக்கபட்டிருக்கலாம் என்று தெரியவருகின்றது .

Friday, May 21, 2010

விடுதலைப் புலிகள் இயக்க போராளி கொடூரக் கொலை - படத்தால் பரபரப்பு
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒருவரை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாக கொலை செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதிர்வு உள்ளிட்ட ஈழத் தமிழ் இணையதளங்களில் இந்த படங்கள் வெளியாகியுள்ளன. இவர் யார், எந்தப் பகுதியில் இந்த கொடுமை நடந்தது, எப்போது நடந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட போராளி இளைஞரை உயிருடன் பிடித்து மிகக் கடுமையாக சித்திரவதை செய்துள்ளதுபோலத் தெரிகிறது. தென்னை மரத்தில் வைத்து அந்த இளைஞரை கட்டி வைத்து கொடூரமாக சித்திரவதை செய்தது போல தெரிகிறது.

ஒரு புகைப்படத்தில் கையில் கத்தியுடன் ஒருவன் நிற்கிறான். அந்த போராளியின் உடலில் ரத்தம் ஓடியுள்ளது. குத்துயிரும் குலையுருமாக காணப்படும் அந்த இளைஞர் பின்னர் பிணமானதாக தெரிகிறது. அந்த இளைஞரின் ரத்தம் தோய்ந்த உடலில், விடுதலைப் புலிகள் இயக்க கொடி போர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஈழத்தில் சிங்கள படையினரின் வெறியாட்டம் தொடங்கியது. அன்று ஓடத் தொடங்கிய தமிழர்களின் ரத்த ஆறு, மே மாதம் 18ம் தேதி வரை நிற்காமல் தொடர்ந்தது. பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கணக்கே இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மாபாதக படுகொலைகள் குறித்த உண்மை இதுவரை தெரியாமலேயே மறைக்கப்பட்டு விட்டது. போரின் உச்சகட்டமாக முள்ளிவாய்க்காலில் மட்டும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் மகா கொடூரமாக கொத்து குண்டுகளை வீசி கூண்டோடு கொல்லப்பட்டனர்.

அப்போது நடந்த சம்பவங்கள் குறித்தும், சிங்களத்தவரின் கொடூரங்கள் குறித்தும் சமீப காலமாக வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் இளைஞர் ஒருவரை சித்திரவதை செய்து கொன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர வைத்துள்ளது.
இது குறித்து கருத்துரைத்திருக்கும் தடவியல் நிபுணர் ஒருவர், குறிப்பிட்ட அரசியல் போராளியின் மூளையின் சில பகுதிகள் அவரது கழுத்தில் வீழ்ந்துகிடப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.