இலங்கையின் கட்டுநாயக விமானப்படைத்தளமும் அதனையொட்டியுள்ள வான் படை தலைமையகமும் சிங்கள அரசின் அதி உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறது.
இதற்குள் ஊடுருவி மீண்டும் ஒருமுறை புலிகள் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல்… இலங்கை அரசுக்கு கிலிபிடிக்க வைத்துவிட்டது. புலிகளின் இந்த தாக்குதலை இலங்கை அரசு முறியடித்துவிட்டாலும், “”இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது” என்று சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன.
வன்னியில் உள்ள தமிழர்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தும் சிங்கள அரசுக்கு, “”எங்கள் தமிழர்கள் வாழும் பகுதியில் குண்டுவீச்சைத் தொடர்ந்தால் சிங்களர்களின் தலைநகரமான கொழும்பு மீது நாங்கள் குண்டு வீசுவோம்” என்ற எச்சரிக்கும் விதத்தில் புலிகள் நடத்திய தாக்குதலாகத்தான் இதைப் பார்க்கிறோம் என்கி றார்கள் இன்னமும் பீதி விலகாத கொழும்புவாசிகள்.
இலங்கையின் பாதுகாப்புத் துறை பேச்சாளரும் அமைச்சருமான கெகலியேரம்புக்வெல, “”புலிகள் நடத்திய வான் தற்கொலைத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் விமானப்படைத் தளத்தை முற்றிலும் அரசு இழந்திருக் கும்!” என்கிறார் மிரட்சியுடன்.
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள புலிகள் தலைமை, ”வான்படைத் தலைமையகமும் கட்டுநாயக வான்படைத் தளமும் தமிழ்மக்கள் மீதான வான் வழி தாக்குதல்களில் முக்கிய பங்கு வகிப்பவை.
அதனால் அதனை இலக்கு வைத்து வெற்றிகரமாக தாக்குதல் நடத்தினோம்” என்கிறது.
கடந்த 21-ந் தேதி இரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பிரபாகரனிடம் நீலப்புலிகள் விருது பெற்ற வான்கரும்புலிகளின் (தற்கொலைப்படை) முக்கிய தளபதிகளில் ஒருவரான ரூபன் மற்றும் சிரித்திரன் பங்கேற்றனர்.
“”தற்போது நடத்தப்பட்ட தாக்குதலோடு இதுவரை 9 முறை விமானத்தாக்குதலை நடத்தியுள்ளனர் புலிகள்.
இதற்குமுன்பு நடத்தப்பட்ட தாக்குதல்கள் எல்லாமே, இலக்கை குறிவைத்து குண்டுகளை வீசிவிட்டு பத்திரமாக திரும்பிவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் வியூகங்கள் வகுத்தனர் புலிகள். ஆனால் முதல் முறையாக வான்வழி தற்கொலைத்தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக் கின்றனர்.
அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது போன்ற ஒரு தற்கொலை வான்படைத்தாக்குதல் நடத்தப்பட்டால்தான் நோக்கம் நிறைவேறும் என புலிகள் கருதியிருக்கக் கூடும்”என்கிறார்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
“புலிகளின் பரப்பளவை சுருக்கிவிட் டோம், அவர்களின் 7 விமான ஓடுதளங் களையும் கைப்பற்றி அழித்துவிட்டோம். புலிகளால் இனி செயல்படமுடியாது.விமான தாக்குதலையும் நடத்தமுடியாது. ஓரிரு நாட்களில் புலிகளை முற்றிலும் அழித்து விடுவோம்.

சரணடைவதை தவிர வேறு வழிகள் அவர்களுக்கு இல்லை’ என்றெல்லாம் சிங்கள ராணுவம் இறுமாந்திருக்கும் நிலையில்தான் திடீரென பிரதான வான் வழியிலேயே தங்களின் 2 விமானங்களை சீறிப்பாய வைத்து தாக்குதலை நடத்தி இலங்கை அரசை கதிகலங்க வைத்துள்ளனர் புலிகள்.
இந்த தாக்குதல் எப்படி நடந்துள்ளது என்று வன்னி பிரதேசத்தில் விசாரித்தபோது, “”வன்னிப் பகுதியில் புதுக்குடியிருப்பு மற்றும் அதனையொட்டிய கடற்பரப்புமாக சேர்ந்து 100 சதுரகிலோ மீட்டர் பரப்பளவிலேயே புலிகள் உள்ளனர்.
இந்த பகுதியை சகல முனைகளிலும் சுற்றி வளைத்து 8 படையணி களை நிற்க வைத்து கடுமையாக தாக்குதலை நடத்திவருகிறது ராணுவம். இது தவிர முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிநவீன 25-க்கும் மேற்பட்ட டோரா கப்பல்களை நிறுத்தி தீவிரமாக கண்காணித்து வரு கின்றனர். அதேபோல முல் லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் எல்லாம் இந்தியா வழங்கிய ராடார்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக் கிறது.
இதனையெல் லாம் மீறித்தான் இந்த தாக்குதலை நடத்தி யிருக்கிறார்கள் புலிகள்.
புதுக்குடியிருப்பு மற்றும் தங்கள் கட்டுப் பாட்டில் உள்ள கடற் பிரதேசத்தில் 2 ஓடு தளங்களை வைத்திருக் கிறார்கள்.
கடற்பிரதேச ஓடுதளத்திலிருந்து முல் லைத்தீவு வழியாக கொழும்பு நோக்கி விரைய ஒரு திட்டம் போடப்பட்டிருக்கிறது.
ஆனால், முல்லைத்தீவு வான்வழி என்பது திறந்தவெளி பகுதி. இதில் பயணித்தால் கடல் பகுதியில் உள்ள சிங்கள கடற்படை… தங்கள் விமானம் புறப்பட்ட இடத்திலேயே தாக்கி அழித்துவிட சாத்தியங்கள் அதிகம்.
அதிலும் கொழும்பு நோக்கி செல்ல முல்லைதீவு தேவையும் இல்லை என கருதி புதுக்குடியிருப்பு பகுதி ஓடுதளத்திலிருந்தே விமானங்களை இயக்க முடிவெடுத்துள்ளார் பிரபாகரன்.
அதன்படி, புதுக்குடியிருப்பிலிருந்து இரவு 8.25க்கு ஒரு விமானமும் 8.40க்கு மற்றொரு விமானமும் புறப்பட்டது.
இந்த 2 விமானங்களில் ஒன்றில் கேணல் ரூபனும் மற்றொன்றில் கேணல் சிரித்திரனும் பயணித்தனர். 2 விமானங்களிலும் 230 கிலோ எடைகொண்ட சி 4 ரக வெடிமருந்துகளும் குண்டுகளும் நிரப்பப் பட்டன.
இலக்கை அடைந்ததும் விமானங் களை தாழ்வாக இறக்கி விமானத்தை வெடிக்க வைத்து இலங்கை அர சின் வான்படைத்தளத் தையும் வான் படைத் தலைமையகத்தையும் சிதறடிப்பதுதான் திட் டம்.
இந்த திட்டத்தின் படி இரவு 9.40 க்கு கொழும்புவை அடைந் துள்ளன. புலிகளின் விமானம் பறந்த பாதை என்பது இலங் கை விமானப் படையினர் பயன்படுத்தும் பிரதான வான் வழி பாதையாகும்.
ஆனால் இந்த பகுதிகளில் இருந்த ரேடார் களின் பார்வையில் படாமல் விரைந்துள்ள புலிகளின் விமானம் கொழும்புக்குள் நுழைந்தபோது தான் அங்கிருந்த ரேடார்களில் சிக்கியுள்ளது.
அப்போதுதான் கண்டறிந்துள்ளனர் ராணுவத்தினர். உடனடியாக கொழும்பு முழுவதும் மின்சாரத்தை துண்டித்தனர்.
ஆகாயத்தில் ஒளிவெள்ளத் தை பாய்ச்சி புலிகளின் விமானத்தை தேடினர்.
சட்டென்று விமானங்கள் சிக்காததால் உயர்பாதுகாப்பு வளைய பகுதி முழுவதும் நின் றிருந்த ராணுவத்தினர் விமான படைஎதிர்ப்பு பீரங்கி மூலம் ஆகாயத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதில் விமான படைத் தலைமையகத்தை தாக்குவதற்கு நெருங்கிவிட்ட விமானம் நிலை தடுமாற… அருகில் இருந்த வருமான வரித் துறையின் 13 மாடி கட்டி டத்தில் மோதி விபத்திற்குள்ளாகி விட்டது.
இதனால் அந்த கட்டிடம் தீப்பற்றி எரிந்தது. அதேவேளையில் வான்படைத்தளத்தைநெருங்கி விட்ட மற்றொரு விமானத்தை நோக்கி ராணுவத்தினர் சுட… அந்த விமானமும் இலக்கை அடைய முடியவில்லை.
மின்சாரத்தை துண்டித்து விட்டு ஆகாயத்தில் சரமாரியாக பீரங்கி தாக்குதலை ராணுவம் நடத்தியதால் புலிகளின் தளபதிகள் தடுமாறிவிட்டனர்.
தங்களிடமிருந்த வெடிகுண்டுகளை இயக்குவதற்கு முன்பு புலிகள் மீது ராணுவத்தின் குண்டுகள் பாய்ந்ததால் செயல் இழந்து விட்டது புலிகளின் விமானம்.
ஒரு 5 நிமிடம் ராணு வத்தின் தாக்குதலிலிருந்து புலிகளின் விமானத்தில் ஏதேனும் ஒன்று தப்பித்திருந்தாலும்கூட ராணுவத்திற்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியிருப் பார்கள்.
பெரிய இழப்புகள் ராணுவத்திற்கு இல்லையென்றா லும் கூட.. புலிகள் தங்களால் எந்தசூழலிலும் பலத்தை நிரூபிக்க முடியும் என்று உணர்த்தியிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்”’என்கின்றனர்.
இலங்கை ராணுவ வட்டாரங்களில் விசாரித்த போது,’”"வவுனியா, மன்னார் வழியாக புலிகளின் விமானம் பயணிக் கிறபோதே எங்களுக்கு தகவல் வந்து விட்டது.
இந்தியா வழங்கிய ரேடார்கள் இந்த முறை தப்பு செய்யவில்லை.
மிக துல்லியமாக எங்களுக்கு காட்டிக்கொடுத்தது. அத்துடன் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது என்பதையும் கணக்கிட்டு சொல்லியது ரேடார்கள்.
அதனால் கொழும்பில் வைத்து அதனை தகர்க்கவேண்டு மென்று புலிகளின் விமானத்தை இடையில் மறிக்கவில்லை.
அதேசமயம், ராணுவத்தின் விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் படையணியினரையும் உஷார் படுத்திவிட்டு காத்திருந்தோம்.
கொழும்பிற்குள் நுழைந்ததுமே மின்சாரத்தை துண்டித்துவிட்டு அதிரடியான தாக்குதலை நடத்தியதில் புலிகளின் விமானங்களை வீழ்த்திவிட்டோம்.
ரிஸ்க்கான ஆபரேசன்தான். கொஞ்சம் தவறியிருந்தாலும் புலிகள் ஜெயித்திருப்பார்கள்.
சமாளிக்கவே முடியாத அளவிற்கு ராணுவத்திற்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும்.
ஆக புலிகளிடமிருந்த 2 விமானங்களையும் அழித்துவிட்டோம்.
இனி அவர்கள் வான்வழித் தாக்குதல் நடத்த முடியாது. புலிகளுக்கு மிகப்பெரிய இழப்பு இது”’என்கின்றனர் ராணுவ உயர் அதிகாரிகள்.
ஆனால் புலிகள் தரப்போ,’”"ஏற்கனவே நாங்கள் பயன்படுத்திய விமானத்திற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
தற்போது பயன்படுத்தியது ஒருவர் அமர்ந்து செல்லும் மிக சிறிய ரக விமானம். ஏற்கனவே பயன்படுத்தியது இருவர் மற்றும் நால்வர் அமர்ந்து செல்லும் விமானங்கள்.
அந்த விமானங்கள் இன்னமும் பத்திரமாகத்தான் இருக்கிறது. அதனால் புலிகளின் வான் வழித்தாக்குதல்கள் தொடரும்”’என்கின்றன வன்னியிலிருந்து வரும் தகவல்கள்.
புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ள ராணுவத் தினர் அந்த விமானத்திலிருந்து வெடி மருந்துகளை கைப்பற்றியிருப்ப துடன் அந்த விமானங்கள் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது?
என்ன உலோகத்தால் உருவாக்கியிருக்கின்றனர்? எத்தனை பாகங் களாக பிரிக்க முடிகிறது? எந்த நாட்டிலிருந்து விமான பாகங்களை வரவழைத்துள்ளனர்”என்று தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
-கொழும்பிலிருந்து எழில்
இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று இன்று முல்லைத்தீவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. இற்த விமானம் இலங்கை நேரம் முற்பகல் 11.30 அளவில் இரணைப்பாலைப் பகுதியில் வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 









உலகம் முழுக்க வியாபித்திருக்கும் தமிழர்கள் ஒருசேரக் குரல் கொடுத்தும் சிங்கள அரசின் யுத்த வெறியாட்டத்துக்கு முடிவு கட்ட யாரும் முன்வரவில்லை! ''இன்னும் பத்தே நாட்களில் புலிகளைப் பூண்டோடு அழித்து விடுவோம்!'' 
கூட்டணியிலிருக்கும் ஜாதீக ஹெல உறுமய கட்சியினர், 'வன்னியிலிருந்து வெளியேறும் எல்லோருமே புலிகள்தான்' என்றொரு கருத்தை வெளியிட்டனர். வன்னியிலிருந்து போர் காயங்களுடன் வெளிவரும் மக்களை மருத்துவமனைகளில் அனுமதிப்பதைவிட ரகசிய முகாம்களில் வைத்து சித்ரவதைதான் செய்கிறார்கள்!'' என்கிறார்.
நகரைக் கைப்பற்றி விட்டால், ஏ-35 சாலையையும் கைப்பற்றி, புலிகளுக்கான கடைசி விநியோகப் பாதையையும் மூடி விடலாமென ராணுவம் கருதுகிறது. முல்லைத்தீவை ராணுவம் கைப்பற்றும் வரைக்கும் தற்காப்பு போரையே மேற்கொண்டு வந்த புலிகள், தற்போதுதான் முன்னகர்வு தாக்குதல்களை முழுவீச்சில் ஆரம்பித்திருக்கின்றனர்.
எந்த சூழ்நிலையையும் விரைவா சமாளிக்கக்கூடியவங்க புலிகள். அவர்களோடு காட்டுப் பகுதியில் தஞ்சமடைந்திருந்த மக்களில் 4,000 பேரைத் தேர்ந்தெடுத்து, அவசியமான சில ஆயுதப் பயிற்சிகளை மட்டும் அளித்து, மிக குறுகிய காலத்தில் போராளிகளாக மாற்றியிருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட 1,000 பேர் தற்கொலைப்படையாக மாறியிருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்து தற்போது புலிகளிடம் 17,000 பேர் இருக்கிறார்கள். இந்த மொத்த வலிமையையும் ஒரே புள்ளியில் குவித்து வைத்திருக்கிறார் புலிகள் இயக்கத் தலைவர். இந்த நிலைமையில்தான் கடந்த வாரம் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடல்புலிகள் கமாண்டர் சூசை, கட்டளைத்தளபதி லெப்டினென்ட் கலோனல் பானு, சார்லஸ் ஆண்டனி படைப்பிரிவு தளபதி அமுதாப், ராதா படையணி தளபதி ரத்னம் மாஸ்டர், இம்ரான்பாண்டியன் படையணி தளபதி ஆண்டனி உள்ளிட்ட சில முக்கியமான தளபதிகளுடன் ஆலோசித்து ஒரு வியூகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மொத்த ரெஜிமென்டையும் நேரடியாகக் களத்துக்கு அனுப்பாமல், அதை குழுக்களாகப் பிரித்து அனுப்ப முடிவெடுத்திருக்கிறார்கள். இதன்படி ஒரு ரெஜிமென்டில் உள்ளவர்கள் 4 முதல் 8 பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள். இதில் பயிற்சி பெற்ற வீரர்கள் 4 பேருடன் புதிதாகச் சேர்க்கப்பட்ட 4 பேரும் இணைந்து செல்வார்கள். இந்தக் குழு முழுக்க முன்ன கர்வு படையணியாக செயல்பட்டு, ராணுவ பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தும். புலிகளின் மிக அனுபவம் வாய்ந்த வீரர்கள், தற்காப்புப் படையணியாக செயல்பட்டு ராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவார்கள். இந்த சமயத்தில் புலிகளின் டாங்கி அணிகளும், ஏவுகணை உந்து செலுத்துதல் பிரிவும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும். 
போர் தரும் வேதனையைவிட, 'தங்கள் தகப்பன் நாடான இந்தியா தங்களை ஆதரிக்கவில்லை!' என்கிற வேதனைதான் ஈழத்தமிழர்களை வாட்டி யெடுக்கிறது. இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் பிரணாப் முகர்ஜியின் பயணமும் 'வந்தார்... சென்றார்' என்கிற ரீதியில் ஒரு சம்பிரதாயமாக நடந்து முடியவே, இறுதி நம்பிக்கையையும் இழந்து தவிக்கின்றன தமிழ் உறவுகள்.
அதிகமானவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மருந்துப் பொருட்களை ஏற்றிவந்த ஐ.நா. குழு ஒன்றும் இந்தத் தாக்குதலில் மாட்டிக்கொண்டது. அந்தக் குழு கொழும் பிலுள்ள ஐ.நா. பிரதிநிதி நீல் புஹ்னுக்குத் தகவல் தந்திருக்கிறது. அதற்குள் தாக்குதல் பற்றிய விவரங்கள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, கொழும்பு நகரம் முழுவதும் தகவல் தொடர்பைத் துண்டித்தது அரசு. இதன்பிறகு நீல் புஹ்ன் இந்தத் தகவலை ஐ.நா-வுக்குத் தெரியப்படுத்த, ஐ.நா-வின் செயலாளர் பான் கி மூனிடம் இருந்து கடுமையான கண்டன அறிக்கை வந்திருக்கிறது. அதோடு பிரிட்டன், நார்வே, அமெரிக்கா போன்ற நாடுகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன. இதைத் தொடர்ந்துதான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அழைத்தார் அதிபர் மகிந்த ராஜபக்ஷே!
முடிவெடுக்கப்போறதா சொல்லியிருக்கார் கலைஞர். இந்த நிலைமையில, முதல்வருக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாதவாறு இலங்கைக்கு வந்திருக்கார் பிரணாப். இங்கே அவர், தமிழ்ப் பிரதிநிதி கள் யாரையும் சந்திக்கலை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரா நடக்கும் விஷயங்களை அவரிடம் சொல்ல நினைத்திருந்தோம். ஆனா, அவர் யாரையும் சந்திக்கலை. இப்படியரு நிலைப்பாட்டில், பிரணாப் இலங்கைக்கு வராமலேயே இருந்திருக்கலாம்!'' என்கிறார்கள் கொதிப்புடன்.
சுமார் 19,000 பேர் மீதி இருக்கவேண்டுமே? எங்கள் கணக்குப்படி புலிகளிடம் தற்போது பயிற்சி பெற்ற 20,000 பேர் இருக்கிறார்கள். ஆனால், இவர்களை வழிநடத்த சரியான தளபதிகள் இல்லை. பல போர்முனைகளை வெற்றிகரமாக நின்று நடத்திய பிரிகேடியர் பால்ராஜின் மறைவு, புலிகளுக்குப் பெரும் இழப்பு. இருக்கிற ஒன்றிரண்டு நல்ல தளபதிகளையும் இழந்துடக் கூடாதுன்னு நினைக்கிறார் பிரபாகரன். தற்போது புதுக்குடியிருப்பில் முடங்கியிருந்தாலும், திறமை வாய்ந்த லெப்டினென்ட் கர்னல் பானுவின் தலைமையில் போர் முனையில் எதிர்ப்புத் தாக்குதலை ஆரம்பிக்கப் போறாங்க. அதுவுமில்லாமல் ஓயாத அலைகள்-1, ஓயாத அலைகள்-2 உள்ளிட்ட பல முக்கியமான சமர்களை நடத்தியது சார்லஸ் ஆண்டனியின் 'எலைட் ஃபோர்ஸ்'தான். இது எப்போது வேண்டுமானாலும் தற்கொலைப்படையா மாறுகிற நிலையில் இருக்கு. 300 பேர் இருக்கற இந்த ஸ்பெஷல் எலைட் ஃபோர்ஸை இதுவரைக்கும் களத்துக்குக் கொண்டு வரலை. அதேமாதிரி மாலதி படையணி, தலைவர் பிரபாகரனோட வலது கை மாதிரி. 300 பேர் இருக்கற இந்தப் படையணியையும் இதுவரைக்கும் களமிறக்கலை. இதுதவிர, கர்னல் சூசை தலைமையிலான சிறப்பு கடற்கரும்புலிகள் அணி எப்படிப்பட்ட தாக்குதல்களையும் சமாளிக்கும் திறன் படைத்த முன்னகர்வு அணி. ஊருடுவித் தாக்குவதில் ஆண்டனி படையணி கில்லாடி. இப்படி தன்னோட நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கற பத்துக்கும் அதிகமான சிறப்புப் படையணிகளைத் தலைவர் பிரபாகரன் இதுவரைக்கும் களத்துக்கே கொண்டுவராதது ஏன்னு புரியலை. தலைவரோட பையன் தலைமையில இருக்கற விமானப் படையையும் களத்தில் இறக்காததுக்கும் காரணம் புரியலை!'' என்கிறார்கள்
இருக்கிறார். ஏற்கெனவே இதுபோல் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோதெல்லாம், 'நான் எதிரி களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டால், சயனைட் சாப்பிட்டு மரணமடைய விரும்பவில்லை. அதனால் நீங்களே என்னை நெஞ்சில் சுட்டு, வீர மரணமடைய வைக்கவேண்டும்!' என்று தலைவர் கூறியிருக்கிறார். இப்போதும் அதைத்தான் விரும்பு வார். ஆனால், தலைவரின் மகன் சார்லஸ் ஆண்டனி, தலை வரை முல்லைத்தீவிலிருந்து அழைத்துச் செல்ல விரும்புகிறார். ஆப்பிரிக்கக் கண்டத்தில் எத்தியோப்பியாவுக்குப் பக்கத்திலுள்ள ஒரு குட்டி நாடு எரித்ரியா. இந்த நாட்டில் புலிகள் இயக் கத்தை முழுமையாக ஆதரிக்கிறார்கள். ஏற்கெனவே ஐ.நா. சபையில்கூட புலிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தது இந்த நாடு. அதனால், தங்களிடமுள்ள ரஷ்யத் தயாரிப்பான அதிவிரைவு குட்டி நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக அவரை அங்கே அழைத்துச்செல்ல நினைக்கிறார் சார்லஸ். தலைவரின் மனநிலைதான் புரியவில்லை!'' என்கிறார்கள்.