Friday, February 6, 2009

புதுக்குடியிருப்பில் புலிகள் மேற்கொண்ட ஊடறுப்பு தாக்குதலில் 1000 ற்கும் அதிகமான படையினர் பலி;பெருமளவில் ஆயுத தளபாடங்கள் மீட்பு




பெப்ரவரி 1ம் திகதி விடுதலைப்புலிகள் புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவான கனரக ஆயுதங்கள் அடங்கிய படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா சிறப்பு படைப்பிரிவினர் மன்னாகண்டல் மற்றும் கேப்பாபுலவு ஆகிய பகுதிகளில் முகாமிலிருந்து புதுக்குடியிருப்பை பகுதியை கைப்பற்றும் நோக்கில் இறுதித் தாக்குதலுக்கு தயாராகி இருந்த வேளையில் விடுதலைப் புலிகளின் சிறப்பு படையணிகள் இராணுவத்தின் பின்வளங்களை ஊடறுத்து பாரிய முற்றுகைத் தாக்குதலை கடந்த முதலாம் திகதி மேற்கொண்டனர்.

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்:

கடந்த பெப்ரவரி 1ம் நாள் புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கேப்பாபுலவு மற்றும் மன்னாகண்டல் பகுதிகளில் பெருமளவு படையினரும், பெருந்தொகையான படையப்பொருட்களும் குவிக்கப்பட்டிருந்தன.

இதனை அறிந்த விடுதலைப்புலிகள் அதிகாலை வேளையில் முகாமின் பின்தளப்பகுதி ஊடாக ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதல் 3 ம் திகதிவரை தொடர்ந்தது.

இதன்போது படையினர் எதிர்பார்க்காமல் இருந்த நிலையில் நடத்தப்பட்ட திடீர்த்தாக்குதலினால் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பலியாகினர். பல கனரக படையப்பொருட்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

அத்துடன் யுத்த டாங்கிகள், யுத்த துருப்புக் காவிகள், கவச வாகனங்கள், ட்றக் வண்டிகள், உழுபொறிகள் உட்பட சிறீலங்கா படைகளின் 20 வழங்கல் ஊர்திகள், தமிழீழ விடுதலைப் புலிகளால் துடைத்தழிக்கப்பட்டன.

அத்துடன் 3ம் திகதி கரும்புலி வீரர்களின் தாக்குதலினால் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். பெருந்தொகையில் படையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்

81 மில்லி மீற்றர் மோட்டார்கள் - பல
120 மில்லி மீற்றர் மோட்டார்கள் - பல
120 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் - 2000
81 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் - 8000
ஏ.கே துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்
ஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல
ஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல
ஆர்.பி.ஜி புரொப்ளர்கள் - பல
எல்.எம்.ஜி துப்பாக்கிகள் - பல

என இன்னும் பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை செவ்வாய்கிழமை கேப்பாப்புலவு பகுதியில் இடம்பெற்ற கரும்புலி தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டதாகவும் புதன்கிழமை வெளிவந்த ஈழநாதம் பத்திரிகை தெரிவித்திருந்தது. அதில் கரும்புலி தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளின் தேசியத் தலைவருடனான படங்களும் பிரசுரமாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


Tiger female commandos in final preparation before the preemptive strike [Photo: LTTE]


An LTTE commando with mortar [Photo: LTTE]


An LTTE commander of the female fighters [Photo: LTTE]


LTTE female commandos before launching the attack [Photo: LTTE]


Tiger fighters in a tank heading towards a frontier.

No comments:

Post a Comment