Tuesday, January 20, 2009

நெத்தலியாற்றில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 35 படையினர் பலி; 60 பேர் காயம்



முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நெத்தலியாற்று பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வு தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் 24 மணிநேர தாக்குதலின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

நெத்தலியாற்று பகுதியில் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் கனரகஆயுதங்களின்செறிவான சூட்டாதரவுடன் நேற்று முன்நாள் சனிக்கிழமை முதல்சிறிலங்கா படையினர் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் 24 மணிநேரமாக தீவிரமாக நடத்தி படையினரின் முன்நகர்வினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பெருமளவிலான படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நெத்தலியாற்றின் இரு மருங்கையும் உள்ளடக்கி ஒரு கிலோமீற்றர் அகலத்துக்கு சிறிலங்கா படையினர் இம்முன்நகர்வினை மேற்கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment