![]() | ![]() |
| |
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார். ஈழத் தமிழர் படுகொலைக்கு துணை போகும் இந்திய அரசினைக் கண்டித்து முழக்கம் எழுப்பிய படியே தன் உடலில் மண்ணெணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். உடல் வெந்த நிலையில் மருத்துவமனையில் காவல்துறையால் முத்துக்குமார் சேர்க்கட்டார். கவலைக்கிடமாக இருந்த நிலையில் இவர் பின்னர் உயிரிழந்துள்ளார். முத்துக்குமார் ஒரு ஊடகவியலாளர் எனவும் "பெண்ணே நீ" இதழில் பணியாற்றுகின்றார் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
No comments:
Post a Comment