Monday, January 5, 2009

முல்லைத்தீவை கைப்பற்றியதும் வடக்கில் தேர்தல்: டலஸ் அழகப்பெருமா

முல்லைத்தீவு நகரினை சிறிலங்கா படையினர் கைப்பற்றியதும் வடபகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
யாழ். குடநாட்டில் உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வடபகுதியில் முல்லைத்தீவை படையினர் கைப்பற்றிய பின்னர் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
முல்லைத்தீவை கைப்பற்றிய பின்னரான ஆறு மாதங்களில் வடக்கில் தேர்தல் நடத்தப்படும். வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெயர்ந்த 300,000 மக்களை மீளக்குடியமர்ந்தும் நடவடிக்கைகள் மிகவும் பெரிய நடவடிக்கையாக அமையலாம். அதன் பின்னர் மக்கள் கணக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டு பின்னர் தேர்தல் அங்கு நடத்தப்படும்.
படையினர் எதிர்வரும் இரண்டு மாதங்களில் முல்லைத்தீவை கைப்பற்றியதும், அங்கு அரசின் நிர்வாக செயற்பாடுகள் தொடங்கும் என்றார் அவர்.

No comments:

Post a Comment