Monday, January 5, 2009

ஆனையிறவை ஆக்கிரமித்து விட்டதாக இந்திய ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய "றோ"

ஆனையிறவை சிறிலங்கா படைத்தரப்பு ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளுக்கு இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" செய்தி அளித்ததாக இந்தியத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனையிறவை இனிமேல்தான் கைப்பற்றப் போகிறோம் என்று சிறிலங்கா படைத்தரப்பு மற்றும் சிறிலங்கா அரச தரப்பு ஊடகங்கள் இன்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஆனால், ஆனையிறவையும் படைத்தரப்பு நேற்றே ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளான பி.ரி.ஐ. மற்றும் யூ.என்.ஐ. ஆகியவற்றுக்கு இந்தியாவின் கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" பிரிவினர் தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்திய ஆங்கில மற்றும் தமிழ் ஊடகங்கள் இத்தகவல்களை வெளியிட்டன.
சிறிலங்கா அரச தரப்பு ஊடகமான டெய்லி நியூசுக்கு சிறிலங்கா படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து:
பரந்தன் மற்றும் கிளிநொச்சியைத் தொடர்ந்து 58 ஆவது படைப் பிரிவினர் பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையில் ஆனையிறவை நோக்கி முன்னேறுகின்றனர்.
ஆனையிறவிலிருந்து 2.5 கிலோ மீற்றர் தொலைவிலேயே படைத்தரப்பு நிற்கிறது.
ஏ-9 பாதையை முழுமையாக கைப்பற்றும் நிலையில் படைத்தரப்பு உள்ளது. 58 மற்றும் 57 ஆவது படையணிகளும் பரந்தன் கிழக்கு மற்றும் கிளிநொச்சியிலிருந்து 5 கிலோ மீற்றர் தொலைவில் முல்லைத்தீவு நோக்கி முன்நகர்ந்துள்ளது.
முல்லைத்தீவு நகரத்தை நோக்கி 59 ஆவது படையணியும் நகர்ந்துள்ளது.
முல்லைத்தீவு நகரின் மையப் பகுதியிலிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவிலேயே படைத்தரப்பு உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment