Monday, January 5, 2009

கிளிநொச்சியில் "மாடுகளும் தெரு நாய்களும்" மட்டுமே உள்ளன: சிங்கள ஊடகம்

கிளிநொச்சி நகரில் தற்போது "தெரு நாய்களும் மாடுகளும்" மட்டுமே உள்ளன என்று சிங்கள ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிங்கள ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட கிளிநொச்சி நகருக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொழும்பிலிருந்து அனுராதபுரம் வான்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் உலங்குவானூர்தி மூலம் மாங்குளம் சென்றடைந்தனர். அதன் பின்னர் ஏ-9 வீதி வழியாக கிளிநொச்சி சென்றடைந்தனர்.
கிளிநொச்சி நகரானது கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளது. சற்று தொலைவில் துப்பாக்கிச் சண்டையும் எறிகணை வீச்சு சத்தமும் கேட்டவாறு உள்ளது.
கிளிநொச்சி நகரில் தெருநாய்கள் மட்டுமே திரிந்து கொண்டிருக்கின்றன. கைவிடப்பட்ட கால்நடைகளையும் காண முடிந்தது.
நாளுக்கு நாள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி சுருங்கி வருகிறது என்று கிளிநொச்சி படை நடவடிக்கைக்கு தலைமை வகித்த ஜெகத் டயஸ் கூறினார்.
"விடுதலைப் புலிகளின் இதர பகுதிகளையும் கைப்பற்றிவிடுவோம். பிரபாகரனை விரைவில் பிடித்துவிடுவோம்" என்றார் அவர்.

No comments:

Post a Comment