![]() |
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் இன்று திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் இக்கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகப் பணிப்பாளர் மு.பாவரசனினால் செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி யூலியனிடம் படையினரின் 17 உடலங்களும் கையளிக்கப்பட்டன. முல்லைத்தீவு நோக்கி கடந்த சனிக்கிழமை (27.12.08) சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இருமுனை முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. இதில் 68 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன் படையினரின் 17 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிககளால் கைப்பற்றப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. |
Monday, December 29, 2008
சிறிலங்கா படையினரின் 17 உடலங்களும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment