![]() |
கிளிநொச்சி சமர்க்களம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: புத்தாண்டுக்கு முன்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்ற சிறிலங்கா படைத் தளபதி பொன்சேகாவின் உறுதிமொழியை நம்பி புதிதாக படையணிகளில் சேர்க்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் மரணத்தை முத்தமிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். (1940-களில் நடைபெற்ற) கொரிய போரிலும் கூட இதே போன்றதொரு உறுதியை ஜெனரல் டக்ளஸ் மாக் ஆர்தர் கூறியிருந்தார். தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் போரில் வடகொரியா மற்றும் சீனப் படைகளுக்கு எதிராக போரிட்டு வந்தன. அப்போது "நத்தார் நாளுக்கு முன்னதாக போரை முடித்து வீடுகளுக்குத் திரும்புவோம்" என்று மாக் ஆர்தர் உறுதிமொழி அளித்திருந்தார். "நத்தார் நாள்" வந்தது..சென்றது... ஆனால் வடகொரியர்களும் சீனர்களும் மிகக் கடுமையாகப் போராடினர். மீண்டும் மாக் ஆர்தர் அதேபோன்ற உறுதிமொழியைத் தர "எந்த ஆண்டு நத்தார் நாளில் வீட்டுக்குத் திரும்புவது?" என்ற விரக்தியான கேள்வி எழுந்தது. அந்த போர்க் களத்தில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வாரத்தின் தொடக்கத்தில் கிளிநொச்சி புறநகர்ப் பகுதிகளில் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சிறிலங்கா படைத்தரப்புக்கும் புலிகளுக்கும் குறிப்பிடத்தக்க இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. போர்க் களங்களில் ஒவ்வொரு தரப்பும் இழப்புக்களை குறைத்துக் கூறுவது உண்டுதான். ஆனால் சிறிலங்கா படைத்தரப்பு வெளிப்படுத்துவதைவிட புலிகள் கூறுவது உண்மைக்கு நெருக்கமானதாக உள்ளது. சிறிலங்கா படைத்தரப்பினர் 170 பேரை கொன்றுவிட்டதாக புலிகள் தெரிவித்திருந்தனர். படைத்தரப்போ 25 பேரை மட்டுமே இழந்திருந்ததாக கூறியது. ஆனால் விடுதலைப் புலிகளோ கொல்லப்பட்ட 36 படையினரின் படங்களை வெளியிட்டு மேலதிக இழப்புக்களை படைத்தரப்புக்கு ஏற்படுத்தியதை நிரூபித்திருக்கின்றனர். இருதரப்பிலும் கடுமையான போர் நடந்து இளையோர் பலர் உயிரிழந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளைவிட சிறிலங்கா தரப்பு பெரும் எண்ணிக்கையிலான படையப் பொருட்களை இழந்திருக்கின்றன. புலிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அந்த படையப் பொருட்கள் அவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளது. பாரிய ஒரு இலக்குடன் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களாக புலிகள் போர்க்களத்தில் நின்றனர். சிறிலங்கா படைத்தரப்பிடமிருந்து படையப் பொருட்களை அவர்கள் கைப்பற்றினாலும் ஆயுதப் பற்றாக்குறை உள்ளது. சிறிலங்கா படையினரின் வான் தாக்குதல்களுக்கு பதிலடியான வான் தாக்குதல்களை புலிகள் நடத்தவில்லை. சீனா மற்றும் ஈரான் நிதியுதவியுடன் ஆயுதங்களை சிறிலங்கா பெரும் எண்ணிக்கையில் குவித்தது. ஆனால் புலிகளை ஒப்பிடுகையில் படையினர் நன்கு பயிற்றுவிக்கப்படவில்லை. போரை எதிர்பார்த்து பல வாரங்களுக்கு முன்னரே புலிகள் கிளிநொச்சி அலுவலகங்களை விட்டு வெளியேறிவிட்டனர். கிளிநொச்சியில் இப்போது எதுவும் இல்லை. ஆனால் சிறிலங்கா படையினருக்கு மரண முற்றுகைக் களமாக அது உள்ளது. எது மரண முற்றுகைக் களம் என்பது புலிகளுக்கு தெரியும். சிறிலங்கா படைத்தரப்புக்கு தெரியாது. இதுவே புலிகளுக்கு சாதகமானதாக உள்ளது என்று அதில் பி.இராமன் தெரிவித்துள்ளார். |
Thursday, December 18, 2008
கிளிநொச்சி சமரில் படையினரின் மேலதிக இழப்புக்களை நிரூபித்த புலிகள்: இந்திய றோ முன்னாள் செயலாளர் பி.இராமன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment