![]() |
பிலிப்பைன்ஸ் புலனாய்வுத் தரப்புகளின் எச்சரிக்கையின்படி இந்தோனேசியாவில் எறிகணைகள்,மோட்டர்கள் மற்றும் விமான எரிபொருட்களை கப்பல் ஒன்று ஏற்றிக் கொண்டிருப்பதாகவும், அக்கப்பல் இலங்கையை நோக்கிச் செல்வதாகவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த 19 ஆம் திகதி இலங்கையின் ஆளில்லா விமானங்கள், முல்லைத்தீவுக்கு அப்பால் தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்கள் நிற்பதைக் கண்டுள்ளன. இதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு பகுதியில் ஆயுதங்களை இறக்கிக் கொண்டிருப்பதையும் அவை அவதானித்துள்ளன. எனினும் காலநிலை சீர்கேட்டினால் அவற்றின் மீது தாக்குதல்களை நடத்த முடியவில்லை என இலங்கைப் படையினர் குறிப்பிட்டுள்ளதாக லக்பிம தெரிவித்துள்ளது. இதேவேளை மேலும் பல கப்பல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை எடுத்து வரலாம் என்ற எதிர்பார்ப்பின் பேரில் முல்லைத்தீவு கடற்பரப்பில் படையினர் தொடர்ந்தும் விழிப்பாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Monday, December 29, 2008
தமிழீழ விடுதலைப் புலிகள் பெருமளவு ஆயுதங்களை தருவித்துள்ளனர்: லக்பிம
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment