![]() | |
மேலும் இத்தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், 11 பேர் ராகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. காயமடைநதவர்களில் 10 பேர் படையினர் எனவும் மிகுதி பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்'ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரு பொதுமகனும், சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த இருவரும் பலியாகியுள்ளனர் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. வத்தளை அன்னம்மாள் தேவாலய வளவில் அமைந்துள்ள சந்தைப்பகுதி மினி இராணுவ முகாம் அருகே உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படையினர் சந்தேகநபரை நிறுத்தி சோதனையிட முற்பட்டபோது தற்கொலை குண்டுதாரி குண்டினை வெடிக்க வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| |
|
Monday, December 29, 2008
வத்தளையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: 7 படையினரும் ஒரு பொதுமகனும் பலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment