
தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளில் சில வகைகள் கீழே |
* சனிக்கிழமை தாக்குதலில் 60 குடிசைகளும் அழிவு வன்னியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை விமானப் படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் சர்வதேசத்தில் தடை செய்யப்பட்ட "கிளஸ்டர்' (கொத்தணி) குண்டுகள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம், பிரமந்தனாறு, உழவனூர் பகுதிகளிலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் முகாம் மீது கிபீர் விமானங்கள் இந்தக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் இரண்டு சிறுவர்களும் (5 வயது), வயோதிபர் (80 வயது) ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும், 10 வயதிற்குட்பட்ட 7 சிறுவர்கள், 7 பெண்கள் உட்பட 18 பொதுமக்கள் படுகாமடைந்துள்ளனர். 60 குடிசைகள் முற்றாக அழிந்துள்ளன. குண்டுத் தாக்குதல் நடத்தபபட்ட பிரதேசம் இலங்கை அரசாங்கத்தினால் பிரகனப்படுத்தப்பட்ட "பாதுகாப்பு வலயம்' என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக் "கிளஸ்டர்' குண்டுகள் அமெரிக்காவின் தயாரிப்பாகும். இதனை முதன் முதலில் பயன்படுத்திய நாடு ஜேர்மனி. இரண்டாம் உலக யுத்தத்தின் போது பயன்படுத்தியது. ஆனால், மனித அழிவுக்காக அல்ல. புதைந்து கிடந்த ஆயிரக்கணக்கான நிலக் கண்ணி வெடிகளை வெடிக்க வைக்கச் செய்து அகற்ற மட்டுமே பயன்படுத்தியது. உலகிலேயே மிகக் கொடூரமான ஆயுத வகைகளில் முக்கியமான ஒன்று. வெடிக்கும் போது மேலும் நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளாகப் பிரிந்து அதாவது ஆகக் கூடியது அறுநூறு உபகுண்டுகளாக சிதறி மீண்டும் வெடிக்கவல்லது. இக்குண்டுகள் உடனடியான சேதத்தை மட்டுமல்ல அவை வெடிக்காத நிலையிலும் பின்னர் சேதத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட இந்தக் "கிளஸ்டர்' குண்டுகள் அண்மையில் இஸ்ரேலினால் லெபனான் மீதான தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment