

முல்லைத்தீவில் படையினர் மீது ஒருவகை புதிய ஆயுதங்களை பாவித்து தாக்குதல் நடத்திவருவதாக படைத்தரப்பு தெரிவிக்கிறது. எவ்வகையான ஆயுதம் என குறிப்பிட மறுத்த அதிகாரிகள் இத்தாக்குதலால், 11ம் இலகு காலாற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்னமும் இனம் காணப்படாத இப் புதிய வகை ஆயுதங்களானது வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் தருவிக்கப்பட்டவையாக இருக்கலாம், அல்லது தருவிக்கப்பட்ட ஆயுதத்தை புலிகள் நவீன மயப்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம் என இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இரணைப்பாலையில் 58வது படைப்பிரிவும், புதுமத்தளான் பகுதியில் 55ம் படைப்பிரிவினரும் புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் நகர்வுகளை தடுப்பதற்காக புலிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து முன்னேறும் இராணுவ அணிகளுக்குள் ஊடுருவி தாக்கிவருவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரிய அளவில் இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாவதாகவும், இருப்பினும் இவர்களை வடபகுதியிலேயே வைத்து சிகிச்சை அளிக்குமாறு கண்டிப்பான உத்தரவுகளை பாதுகாப்பு அமைச்சு பிறப்பித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
appadi podu!
ReplyDeletesingala paradesikalai paralogaththukku anuppungal:koodave itali dosai,