![]() |
இவருக்கு இங்குப் புகலிடம் கொடுத்திருப்பவர் மத்திய மலைநாட்டின் ஒரு 'பெரும் புள்ளி' என்றும் கூறப்படுகின்றது.
![]() |
![]() |
நித்திய ஆனந்தாவுக்கு எதிராக, 'பிளாக்மெயில்' சீடர் தர்மானந்தா ஒரு பக்கம்
குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்க... 'குடைச்சல் நம்பர் டூ'வாக கடல் தாண்டி குபீரென்று பாய்ந்திருக்கிறது புது தோட்டா! இது அச்சு அசல் அமெரிக்க பிரஜை ஒருத்தரின் கைங்கரியம்! அவர் பெயர் டக்ளஸ் மெக்கெல்லர்!
கலிஃபோர்னியாவில் அட்டார்னி ஜெனரல் ஜெரி ப்ரவுனுக்கு இவர் எழுதியிருப்பதாகச் சொல்லப்படும் கடிதத்தின் நகலில், அதிரடியாக பல குற்றச்சாட்டுகள் நித்தியானந்தா மீது!
'ஐயா அட்டார்னி ஜெனரல் அவர்களே,
நித்தியானந்தா என்ற சாமியார் அமெரிக்காவில் பல கிளைகள் வைத்து ஆன்மிகம் என்ற பெயரில் பலே மோசடிகள் செய்து வருகிறார். நித்தியானந்தா ஃபவுண்டேஷன், லைஃப் ப்ளிஸ் ஃபவுண்டேஷன், நித்ய யோகா, வேதிக் டெம்பிள், தியானபீடம் ஃபவுண்டேஷன் என்று அவர் பலவகையிலும் நிறுவி பல குற்றங்கள் செய்து வருகிறார். அதையெல்லாம் நீங்கள் விசாரித்து உரிய தண்டனையை அவருக்குத் தரவேண்டும். அதற்கான பக்கா சாட்சியாக நானே வந்து எல்லாம் சொல்லத் தயார்! 2003-ம் வருடம் தொடங்கி, ஆறு வருடங்கள் அவரோடு ஒட்டி உறவாடிய பக்தன் என்ற முறையில் எனக்கு பல ரகசியங்கள் தெரியும்...' என்கிறது, இந்த டக்ளஸ் மெக்கெல்லர் எழுதியதாகச் சொல்லப்படும் கவரிங் லெட்டர்!
எல்லாம் போச்சு சாமியாராலே!
செக்ஸ் க்ரைம், மோசடிகளோடு சேர்த்து 'ஹவாலா' டைப்பிலான 'மணி லாண்டரிங்' விவகாரத்திலும் நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லி திகில் கிளப்புகிறது இந்தக் கடிதம். 'அந்த சாமியாராலேதான் என் வேலை போச்சு. என்னைவிட்டு என் பொண்டாட்டிபோயிட்டா! இப்ப நான் கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிக்கிறேன் அவராலே! தேவைப்பட்டா இந்தியாவின் எந்த கோர்ட்டிலும் போய் நின்றுகூட இதைப் பற்றியெல் லாம் நான் விவரமாகச் சொல்லத் தயார்' என்று போட்டுத் தாக்குகிறது அந்தக் கடிதம்!
நித்ய பிரபாவாகிய நான்...
வெள்ளைக்கார குடைச்சல் பார்ட்டி தன் கடிதத்தோடு கொடுத்திருக்கும் நீளமான டாகு மென்ட்டில் விவகாரம் செம ஹாட்டாகவேவிவரிக்கப் பட்டிருக்கிறது.
''2003-ம் வருஷத்துலதான் எனக்கு நித்தியானந்தா அறிமுகமானாரு. இந்து மதத்தின் மீது இருந்த ஈடுபாட்டால அவரோட ஐக்கியமானேன். என் பெயரை 'நித்ய பிரபா' என்றே சாமியார் மாத்தி வெச்சாரு. அமெரிக்காவுல அவர் ஆசிரமம் தொடங்கியபோது, அதுல டெலிபோன் ஆபரேட்டர் வேலையில தொடங்கி அத்தனை வேலைகளையும் நானே செஞ்சுருக்கேன். நித்திய ஆனந்தாவுக்கு விசா கிடைக்காத சமயத்துல நான்தான் பெரும் முயற்சி எடுத்து அவருக்கு அமெரிக்காவுக்கு விசா கிடைக்க ஏற்பாடு செஞ்சேன்.
எனக்கு சொந்தமான 'சான்ஜோஸ்' வீட்டிலும் நித்தியானந்தா தங்குவாரு. அந்த சமயத்துல அமெரிக்காவை சேர்ந்த பல இளம் பெண்கள்அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போவாங்க. முதலில் எனக்கு இதெல்லாம் தப்பா தோணவே இல்ல.
ஆனால், நான் நித்திய ஆனந்தாவோடு இப்படி இழைவது என் மனைவிக்கு ஏனோ பிடிக்கலை. அவரைவிட்டு விலகி வரும்படி அந்த மகராசியும் பல தடவை சொன்னா... நான்தான் பாவி, கேட்காமப் போயிட்டேன். அதனால அவ டைவர்ஸ் வாங்கிட்டுப் போயிட்டா. அவளுக்கு ஏன் நித்தியானந்தாவைப் பிடிக்கலன்னு அப்ப எனக்கு தெரி
யலை...'' என்று புலம்பும் அந்த டக்ளஸ் மெக்கெல்லர் கடிதம்... ஜிலுஜிலுப்பாக மேற்கொண்டு போகிறது.
யார் அந்த நடிகை..?
''2007-ம் ஆண்டு நித்தியானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருத்தரை கலிஃபோர்னியாவுக்கு கூட்டிட்டுவந்தாரு. சினிமாவுல எனக்கு பெருசா ஈடுபாடு இல்லை. அதனால அவங்க பேருஎனக்கு நினைப்பில் இல்லே. ஆனா, திருமணம் செய்தவங்கன்னு மட்டும் தெரியும். அந்த நடிகைகூட என் வீட்டுல 15 நாள் தங்கியிருந்தாங்க. அந்த நடிகைக்கும் நித்திய ஆனந்தாவுக்கும் செக்ஸுவல் ரிலேஷன் ஷிப் இருந்ததைநான் புரிஞ்சுக்கிட்டேன். அதைப்பத்தி அவரிடமே கேட்டேன். 'கடவுளை அடைய ஆனந்தமான வழி இதுதான்'னு என்கிட்ட சிரிச்சுக்கிட்டே சொன்னாரு...'' என்று சொல்லும் புகார் கடிதம்,
''பிறகு ஆசிரமத்துக்கு வந்த பல பெண்களோடு குரூப் செக்ஸ் வெச்சுக் கிட்டதையும் என்னால உணர முடிஞ்சுது. பெண்களோடு சந்தோஷமாக இருக்கிறதை அவர் மறைக்கவோ மறுக்கவோ இல்லை'' என்று கலாய்க்கிறது!
அடங்காத ஆசை...
மேற்கொண்டு சொல்லப்படுகிற குற்றச்சாட்டு, தூக்கிப்போட வைக்கிற ரகம்!
''கலிஃபோர்னியாவின் ஒரு பகுதியில் சனாதன் தர்மா கோயில் என்று ஒன்று இருக்கு. இந்த கோயில்ல நித்தியானந்தாவோட பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். கோயிலோட கர்ப்பக்கிரகத்துக்கு பக்கத்துலயே சகல வசதிகளோட கூடிய சொகுசு அறை இருக்கு. அவருக் காக உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான அறை அது. பயிற்சிப் பட்டறை நடக்குற சமயத்துல அடிக்கடி ரெஸ்ட் எடுக்க அந்த அறைக்குள்ள போயிடுவாரு. அமெரிக்காவுல வசிக்கும் தமிழ்ப் பெண்களுக்கு மட்டும் அந்த அறைக்குள் அனுமதி. தமிழ்ப் பெண்கள் மீது அவருக்கு அப்படி ஓர் அடங்காத ஆசை!
அந்த அறைக்குள்ள போனா என்ன நடக்கும்ணு என்னைப் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பெண்களும் விருப்பப்பட்டுத்தான் போயிட்டு வருவாங்க.
அதேபோல, மான்ட்க்ளேயர் ஏரியாவுலதான் வேதிக் டெம்பிள் இருக்கு. அங்கேயும் கர்ப்பக்கிரகத்துக்கு பக்கத்துலயே நித்தியானந்தாவுக்கு ஓர் அறை உண்டு. இந்த அறையின் சாவி அவரது உதவியாளரான மா நித்ய கோபிகாகிட்ட இருக்கும். அமெரிக்க
என்.ஆர்.ஐ-யான நித்ய கோபிகாவோட ஒரிஜினல் பெயர் வித்யா விஸ்வநாதன்.
அந்த வேதிக் டெம்பிளுக்குள்ள இருக்கிற சொகுசு அறைக்கு யாரெல்லாம் போகவேண்டும் என முடிவெ டுக்கும் அதிகாரம் நித்ய கோபிகா கையிலதான் இருந் தது. விதவிதமான பெண்களைத் தேர்ந்தெடுத்து அவருக்கு அனுப்பி வைக்கும் உன்னதமான வேலையை செய்ததே கோபிகாதான்!'' என்று குபீர் கிளப்புகிறது அமெரிக்க குடைச்சல் புகார்.
தயாராக மூன்று பெண்கள்...அதோடு விட்டால்தானே..!
''நித்தியானந்தாவின் ஆன்மிக போதனை களில் நம்பிக்கை கொண்டு அவரிடம் வந்துசேர்ந்த கலிஃபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சலீஸை சேர்ந்த மூன்று பெண்களை வலுக் கட்டாயமாக பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார் அவர். அந்தப் பெண் களிடம் விசாரித்தால் நிச்சயமாக புகார் கொடுக்க முன்வருவார்கள். அதனால் அவர்களை விசாரிக்க வேண்டும்'' என்று சொல்லிவிட்டு,
''இந்தியாவில் ஒரு விதமான போதனைகளை செய்யும் இந்த சாமியார், அமெரிக்காவில் மட்டும் கிளுகிளு பாலிஸியைத்தான் ஓப்பனாக போதிப்பார். 'உலகத்துக் கான அத்தனை பலன்களையும் செக்ஸ் ஆய்வுகள் மூலம் மட்டுமே பெற்றுத் தரமுடியும். அதற்கான ஆராய்ச்சியில்தான் நான் இறங்கியிருக்கிறேன். அதோடு, எந்தப் பிரச்னைகளையும் செக்ஸ் மூலம் தீர்க்க முடியும் என்பதை நான் உணர்ந் திருக்கிறேன்...' என்று அடிக்கடி சொல்வார் சாமியார்'' என்று பத்த வைக்கிறது!
வயிற்று வலி... விளக்கு ஒளி!
நம்மூர் கிளுகிளு கதைகளில் வருகிற மாதிரியே ஒரு எபிஸோடையும் எடுத்து விடுகிறார் இந்தடக்ளஸ் மெக்கெல்லர். ''ஒருநாள் இரவு நான் ஆசிரமத்துக்குப் போயிருந்தேன்.அப்போது கதவுகள் மெள்ளத் திறந்திருக்க... எட்டிப் பார்த்தேன். உள்ளே தீப விளக்கின் வெளிச்சத்தில் இரண்டு பெண்கள் முழு நிர்வாணமாக இருக்க... அவர்களுடன் ஆனந்த நிலையில் இருந்தார் நித்திய ஆனந்தா. எல்லாம் முடியும் வரை(?) அமைதியாகக் காத்திருந்தேன்.
தாண்டவத்தை முடித்துவிட்டு வெளியே வந்தவர், 'அந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் தீராத வயிற்று வலி இருந்திருக்கு. அதை சரி பண்ணுவதற்குத்தான் இந்த சிகிச்சை கொடுத்தேன். அதனாலதான் மின்சார லைட் இல்லாம தீப விளக்கு வெளிச்சத்தில் அவங் களுக்கு சக்தி கொடுத்தேன். இனி அவங்களுக்கு வயித்து வலியே இருக்காது' என்று சிரித்தபடி சொன்னார், சான்ஸை பயன்படுத்திய சாமியார். எனக்குத் தெரிஞ்சு அமெரிக்காவுல மட்டும் ரெண்டு வருஷத்துல எப்படி யும் 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நித்தியானந்தா இப்படி ஆனந்த டிரீட்மென்ட் கொடுத்திருப்பாரு.
உலகம் முழுக்க இப்போ அவரோட லீலைகளைப் பத்தி பிரச்னைகள் கிளம்பியிருக்கு. அதனாலநாங்களும் இங்கே நடந்த சம்பவங்களை உங்களோட கவனத்துக்கு கொண்டு வந்துட்டோம். நீங்க நடவடிக்கை எடுங் கய்யா...'' என்று கலிஃபோர்னிய அட்டார்னி ஜென ரலுக்கு எழுதப்பட்ட கடிதம் பவ்யமாக முடிகிறது.
விதவை பெண் வில்லங்கம்...
சேலம் மாவட்டத்தில் ஒரு ஏரியாவிலுள்ள வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் விதவை ஒருவரையும் சாமியாருக்கு எதிராக உசுப்பிவிட முடியுமா என்று அவருக்கு எதிரான பார்ட்டிகள் தீவிரமாக முயல்கின்றன. இந்த எதிர்த் தரப்பு பார்ட்டிகள் சொல்வது இதைத்தான் -
''கணவன் இழந்த பெண் அவர். தனிமை சோகம் தாளமுடியாமல் மனஆறுதல் தேட சாமியாரின் பிடதி ஆசிரமத்துக்குப் போனார். பிடதி ஆசிரமத்திலேயே ஒரு கட்டத்தில் சேர்ந்தும்விட்டார். வழக்கம்போல எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்க... ஒரு நாள் தியான மண்டபத்தில் அந்த பெண்ணின் மீது கைகள் படர்ந்திருக்கிறது.
அன்று இரவே பள்ளியறை பூஜைக்கு அந்தப் பெண் அழைக்கப்பட்டிருக்கிறாள். பள்ளியறைக்குள் சாமியார் கொடுத்த டிரீட்மென்ட்டை பெண்ணால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். அடுத்த நாளே ஆசிரமத்திலிருந்து கிளம்பி, சொந்த ஊருக்குத் திரும்பி விட்டாராம். அந்த விதவைப் பெண் எந்த நேரமும் புகார் கொடுத்து பிரச்னையைக் கிளப்புவார் என சாமியார் தரப்பும் பயந்தது. அந்தப் பெண்மணியும் கிட்டத்தட்டஅந்த மூடில்தான் இருந்திருக்கிறார். இதற்கிடையில், சி.டி விவகாரம் வெளியாவதற்கு முன்பு சாமியார் தன் பரிவாரங்களோடு சேலம் வந்தபோது, அந்தப் பெண்ணை நேரில் சந்தித்து மனமுருக மன்னிப்பு கேட்டுவிட்டார். மறுபடியும் ஆசிரமத்துக்கு வரும்படி அழைப்பும் விடுத்தாராம். அந்தப் பெண் மறுத்து விட்டார். ஆனால், தைரியமாக வெளியில் வந்து புகார் தரும்படி நாங்கள் அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வருகிறோம்...'' என்கிறார்கள் இந்த எதிர்பார்ட்டிகள்.
வயசென்ன சாமீ?
இருக்கிற வில்லங்கங்கள் போதாதென்று, நித்திய ஆனந்தாவின் வயசு விவகாரத்தை வைத்தும் சிலர் பிரச்னை பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். விசா வில் ஒரு தேதி, பாலிடெக்னிக்கில் படித்தபோது ஒரு தேதி என்று அவர் மாற்றிக் கொடுத்திருப்பதாக சில ஆதாரங்களை எடுத்துக் காட்டும் அவர்கள்... 'சமீபத் தில் நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சில கோர்ட் ஆவணங்களில் வேறொரு தேதி இருக் கிறது. இதெல்லாம் சட்டத்துக்குச் செய்கிற துரோக மில்லையா?' என்று கொளுத்திப் போட... எட்டு திசையிலிருந்து வரும் பந்துகளில் எதை எப்படித் தடுத்து ஆடுவது என்று இன்னும் தீவிரமான சட்ட ஆலோசனையில் இறங்கியுள்ளார் நித்திய ஆனந்தா!
''டக்ளஸ் மெக்கெல்லரை அத்தனை சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட முடியாது'' என்று கூறும் முன்னாள் ஆசிரமவாசிகள், அவர் இணையதளத்தில் வைத்துள்ள விவரமான 'பிளாக் ஸ்பாட்'டை அதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். நித்திய ஆனந்தா ஆசிரம நிகழ்வுகள் தொடர்பான எக்கச்சக்க வீடியோ படங்கள் ('அந்த மாதிரி' எதுவும் இல்லை!), சாமியார் பற்றிய கடும் விமர்சனங்கள் என்று விவரமாகவே தொகுத்து வைத்துள்ளார் இந்த அமெரிக்க அதிரடி மச்சான்!''2007 நித்யானந்தா நடத்திய பயிலரங்கத்தில் கலந்து கொண்ட போது 'திடீர் முக்தி' கொடுக்கிறேன் பேர்வழி...என்று அவர் சில கண்கட்டு வித்தைகளை நடத்தினார். சாம்பிராணி நெருப்பில் போதை திரவியங்களை கலந்து மயக்கத்தை ஏற்படுத்தியிருப்பாரோ என்று இப்போது தோன்றுகிறது'' என்று இவர் தன் புகாரில் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் போதை மருந்து குற்றம் செமத்தியான கடுமையோடு டீல் செய்யப்படும் என்பதால், ஆசிரம தரப்பு ரொம்பதான் கவலையோடு இதை கவனிக்கிறதாம்.
ஏதோ சீட்டு கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்ததுபோல, ''நான் அவரிடம் சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை ஏமாந்திருக்கிறேன். என்னைப் போல பல அமெரிக்க பக்தர்களையும் நித்தியானந்த சாமியார் நம்பிக்கை மோசடி செய்துவிட்டார்'' என்றும் தன் புகாரில் புலம்பியிருக்கிறாராம் மெக்கெல்லர்.
கடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர்.
உயிரிழந்தவர் வவுனியா, சாந்தசோலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவர். இச்சம்பவம் நேற்று முன்தினமிரவு வவுனியா திருநாவற்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. இந்தப் படுகொலை தொடர்பில் ஏற்கனவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது சந்தேகநபராக ஈ.பி.டி.பியின் ஒன்றிய உறுப்பினராகிய துன்பம் என்கிற தினேஸ் என்பவரைப் பொலீசார் இன்றுமாலை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரென்று தெரிவிக்கப்படும் அன்ரனி ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குரு தலைமறைவாகியுள்ளதாகவும், அவர் ஈ.பி.டி.பி அமைப்பினரால் கொழும்புக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.
அவரைத் தேடும் நடவடிக்கையில் வவுனியா பொலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பொலீஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மரண நிகழ்வுகள் இடம்பெற்ற உயிரிழந்தவரின் இல்லத்தில் இருந்து நிலைமைகளை அவதானித்த நிருபர் வழங்கிய தகவலின்படி, உயிரிழந்தவரின் தலை கடுமையாக தாக்கி சிதைக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர் மனிதாபிமானமற்ற முறையில் கோரத்தனமாக தாக்கப்பட்டுள்ளார் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது.
அன்னாரின் இல்லத்தில் பெருந்திரளானவர்கள் அன்னாருக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்றுமாலை தாண்டிக்குளம் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் தந்தையார் தங்கராசாவினால் இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டு பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதி நிகழ்வுகளில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவரும் புளொட் முக்கியஸ்தருமான ஜி.ரி.லிங்கநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈரோஸ் அமைப்பின் சார்பில் செந்தில் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். அதேபோன்று புளொட் டெலோ போன்ற அமைப்புக்களினால் அஞ்சலி துண்டுப் பிரசுரங்களும் வெளியிட்டு விநியோகிக்கப்பட்டிருந்தன.
யாழ்பாணம் சாவகச்சேரியில் அமைந்துள்ள ஈபிடிபியின் அலுவலகம் கடத்தி காணமல் பொய் சடலமாக மீட்க்கப்பட்பட்ட கபில்நாத்தின் கொலையை அடுத்து மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இம்மாணவனை ஈபிடிபியினரே கடத்தி கொலை செய்ததாக உறுதியான தகவல்கள் வெளியானதை. அடுத்து கோபம் கொண்ட மக்கள் அலுவலகத்தை சூழ்ந்து அடித்து நொருக்கியதாகவும் மக்கள் வருவதை அவதானித்த அலுவலக ஈபிடிபி உறுப்பினர்கள் தப்பி ஓடியதாகவும் தெரியவருகிறது.
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக தெரியவருகிறது.
![]() |
அப்பா அம்மா விளையாட்டு!
பாலுமகேந்திரா இயக்கத்தில் 'அப்பா அம்மா விளையாட்டு' என்ற படத்தில் பாண்டியராஜனின் ஜோடியாக, பிரதான வேடத்தில் அறிமுகமாகிறார் ரஞ்சிதா. இவர் இதற்கு முன் பாலுமகேந்திராவின் டைரக்ஷனில் 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' என்ற படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் மகளாக நடித்திருக்கிறார். நேரில் பார்க்க சாதாரண தோற்றத்தில் இருக்கும் இவர், பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் பிரமாதமாக இருக்கிறார்!
1986 ல் அப்பா அம்மா விளையாட்டு
2009 ல் சாமியார் விளையாட்டு
![]() |
திகுதிகுவெனத் தீ பிடித்து ஓடிக்கொண்டு இருக்கும் ஐ.பி.எல். திருவிழாவின் சில டிட்பிட்ஸ்...
'கட்டிப்பிடிப்பதை ரசிகர்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கிங்ஸ் லெவன் டீம் என் குடும்பம் மாதிரி. அதில் யுவராஜ் சிங் எனது தம்பி மாதிரி' என்பது ப்ரீத்தி ஜிந்தாவின் சமீபத்திய அறிக்கை. பதிலுக்கு யுவராஜ், 'ப்ரீத்தி ஜிந்தாவுக்கு இந்தியா முழுக்கப் பல அண் ணன், தம்பிகள்இருக்கிறார் கள். ஆனால், அவர் எனக்கு மட்டும் அக்கா இல்லை!' என்று ட்விட்டரில் ட்விட்டி இருக்கிறார். நல்ல அக்கா - தம்பி!
சேப்பாக்கில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த த்ரிஷாவை மெகா ஸ்க்ரீனில் காட்டியதும், விசில் பறந்தது. இதைத் தவறாகப் புரிந்துகொண்ட ரவி சாஸ் திரி 'பார்த்தீவ் பட்டேல் 50 ரன் அடித்ததை சென்னை ரசிகர்கள் எவ்வளவு உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள் பாருங்கள்' என்று அப்பாவியாக ஒரு கமென்ட் அடித்தார். இதுக்குப் பேர்தான் ஸ்க்ரீன் டெஸ்ட்!
சென்னையில் முதல் போட்டியின்போது தமிழ்க் கலாசாரத்துக்கு ஏற்ப அடக்கமான உடையில் ஆடினார்கள், சென்னை சூப்பர் கிங்ஸின் சியர் லீடர்ஸ். கடுப் பான சென்னை ரசிகர்கள், எதிர் அணி யின் கிளாமர் கேர்ள்ஸை ஆதரித்தார்கள். இப்போது சென்னை சியர் லீடர்ஸின் உடை சுருங்கிவிட்டது. இந்த சென்னை ரசிகர்கள் எப்பவுமே இப்படித்தான்!
கொச்சி, புனே என அடுத்த ஆண்டு முதல் இரண்டு புதிய அணிகள் ஐ.பி.எல்லுக்குள் புது என்ட்ரி கொடுக்க இருக்கின்றன. புனே அணியை சஹாரா குருப் 1,702 கோடி ரூபாய்க்கும், கொச்சி அணியை ரென்டீவஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 1,533 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளன. மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியா சிமென்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எவ்வளவு கொடுத்து வாங்கியது தெரியுமா? 222.6 கோடி ரூபாய். விலைவாசி ஏறிப்போச்சு!
புதிதாக இரண்டு அணிகள் அடுத்த ஆண்டு இடம்பெறுவதால் தற்போது 60 மேட்ச்சுகள் என்பதுமாறி அடுத்த ஆண்டு முதல் 94 ஆட்டங்கள் நடைபெறும். அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு அணியும் தலா 18 மேட்ச் சுகள் ஆட வேண்டும். ஆடுங்கோள்!
கேப்டன் கௌதம் கம்பீர் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் காயம் காரணமாக டீமில் இல்லாததால், தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ். இதனால், காயம் அடைந்திருக்கும் இருவரையும் தனி விமானத்தில் இலங்கைக்கு ஆயுர்வேத ட்ரீட்மென்ட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் கள். அதற்கான செலவு மட்டும் 40 லட்ச ரூபாய். சிகிச்சை செலவு கள் தனி. இருக்குற மகராசன் அள்ளி முடியுறான்!
ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி, கேத்ரீனா கைஃப், தீபிகா படுகோன் அனைவரையும்விட இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுபவர் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளர் காயத்ரி ரெட்டி. ஐ.பி.எல். துவங்கியதில் இருந்து கூகுள் சர்ச் இன்ஜினில் அதிகம் தேடப்படுபவர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித் திருக்கிறார் காயத்ரி. இதுதானாச் சேர்ந்த கூட்டம்!
ஐ.பி.எல். நைட்ஸ் என்கிற பெயரில் கிரிக்கெட் மேட்ச் முடிந்ததும் பார்ட்டியை ஆரம்பித்துவிடுகிறார்கள். நடிகைகள், மாடல்கள் என அனைவரும் பார்ட்டிக்கு ஆஜராகிவிடுவதால், வெற்றியோ, தோல்வியோ அனைத்து பிளேயர்களும் பார்ட்டிக்கு வந்து விடுகி றார்கள். ஹர்பஜனுடன் காதல் இல்லை என்று சொல்லும் கீதா பஸ்ரா தவறாமல் இந்த பார்ட்டிகளில் கலந்துகொண்டு ஹர்பஜன் சிங்கை உற்சாகப்படுத்தி வருகி றார். பாஜி ஆடினா பாரதத்துக்கே பார்ட்டிதான்!
நன்றி ஆனந்த விகடன்
| |
![]() |
![]() |
''பொட்டு அம்மான் உயிருடன் இருக் கிறார். விடுதலைப் புலிகளின் உளவுத்துறை மறுபடியும் இயங்கத் தொடங்கி இருக்கிறது!'' - இப்படி அறிவித்திருப்பது ஈழ ஆர்வலர்கள் யாருமல்ல... இண்டர்போல் போலீஸ்!
விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, நந்திக்கடலில் பிரேதத்தைக் காட்டிய இலங்கை அரசு, பொட்டு அம்மான் குறித்த எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. அதனால், பிரபாகரன் விஷயத்தில் சந்தேகப்பட்ட ஈழ ஆதரவாளர்கள்கூட பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்பினார்கள். இதற் கிடையில்,
''பெயர்: பொட்டு அம்மான் என்கிற சிவசங்கரன், பிறந்த வருடம்: 1962, பிறந்த இடம்: ஆரியவாலை, சாவகச்சேரி, இலங்கை... தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், சிங்களம்... கைது வாரன்ட்: சென்னை, இந்தியா...'' என தேடப்படும் குற்றவாளியாக அவரை இண்டர்போல் இணையதளம் சில தினங்களுக்கு முன்னால் திடீர் செய்தி வெளியிட... ஈழ ஆர்வலர்கள் பரபரத்து எழுந்திருக்கிறார்கள்.
இண்டர்போல் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பைப் பார்த்து உஷாராக வேண்டிய இலங்கை அரசோ, ''கடந்த மே மாதம் நடந்த ஈழப் போரின் கடைசி நாளில் பொட்டு அம்மானும் அவர் மனைவியும் உடலில் வெடிகுண்டு களைக் கட்டி வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார்கள். அதனால், அவரது இறப்பு குறித்த ஆதாரங்களை எங்களால் சமர்ப்பிக்க முடி யாமல் போய்விட்டது. பொட்டு உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை!'' என அவசர அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
பொட்டு விவகாரம் திடீரென கிளம்பிய பின்னணி குறித்து விசாரித்தோம். ''ஈழப்போர் நடந்த காலம் தொட்டு இன்றுவரை இலங்கையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பெரிய தலைவலியாக இருப்பது பொட்டு அம்மான்தான். கடைசிக்கட்டப் போரின் போது அவருக்கு 'குருவி' என ரகசியப் பெயர் சூட்டப்பட்டது. இப்போதும்கூட, ரகசிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புலிகளிடம் சிங்கள ராணுவமும் புலனாய்வுத் துறையும் அவரைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன் ராணுவத்திடம் பிரபா என்ற போராளி சிக்கினார். அவரைத் துருவி எடுத்தபோது, பொட்டு அம்மான் வெளிநாட்டுக்கு தப்ப முயன்று கொண்டிருப்பதாகத் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொழும்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை பகுதிக்குச் சென்று அங்கு இருந்த ஆறு மாடிக் கட்டடம் ஒன்றை ராணுவத் தரப்பு சல்லடையாகத் துழாவியது. அதிகாரிகள் அந்த இடத்துக்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சந்தேகத்துக்கிடமான சிலர் அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரது பெயர் 'குருவி'! இந்த விஷயத்தை மீடியாக்களுக்குத் தெரியாமல் இலங்கையின் உளவுப் பிரிவு மறைத்தாலும், சர்வதேச உளவு அமைப்புகளுக்கு 'குருவி' என்ற பெயரில் தப்பியது பொட்டு அம்மான் என்பது புரிந்துவிட்டது.
பிரபாகரன், பொட்டு அம்மான் இறந்து விட்டதாக இலங்கை அரசு இந்தியாவுக்கு கொடுத்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்பதை இண்டர்போல் போலீஸ் ஏற்கெனவே புரிந்துகொண்டு விட்டது. இதனால்தான், ராஜீவ் கொலை வழக்கை முடிக்க முடியாமல் சி.பி.ஐ. திணறி வருகிறது. இதற்கிடையில், பொட்டு அம்மானின் சர்வதேச தொடர்புகளை யூகித்த இண்டர்போல், அவரை மீண்டும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது!'' எனச் சொன்ன கொழும்பு விவரப்புள்ளிகள், இன்னொரு பகீர் தகவலையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
''புலிகளின் ஆயுதக் கொள்முதல் செய்த கே.பி. சில மாதங்களுக்கு முன்பு சிங்கள ராணுவத்திடம் சிக்கினார். ஆனால்... அதுவே பெரிய நாடகமோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது! புலிகளின் நாடு கடந்த நெட்வொர்க்குக்கு கே.பி-யின் பெயர் வெளியளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பெயரில் ஒளிந்திருந்த வேறு சிலர் புலிகளின் இக்கட்டுகளைக் களைய கடைசி நேரத்தில் போராடிப் பார்த்திருக்கிறார்கள். போரில் புலிகள் அடியோடு தோற்றபோது, புலிகளின் சர்வதேச ஆட்களுக்கும் கே.பி-க்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்திருக்கின்றன. சர்வதேச நிதியகங்களில் இருக்கும் புலிகளின் சேமிப்புக்கு உரிமை கோருவதிலும் சிக்கல் வெடித்து இருக்கிறது. மெக்ஸிகோவில் உள்ள மூன்று வங்கிகளுக்கு புலிகளின் சேமிப்பை மாற்றவும் முயற்சி நடந்துள்ளது. அப்போதுதான், பொட்டு அம்மான் வெளியே இருக்கும் சிலருடன் தொடர்புகொண்டு பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
இதெல்லாமே மெதுவாக இண்டர்போல் காதுக்கு வந்து சேர்ந்தது. பொட்டு உயிரோடு இருப்பதுபோல் இண்டர்போல் இப்போது அறிவித்துவிட்டதால், இலங்கை அரசுக்கு கடும் கலக்கம். புலிகளின் அத்தனை தளபதிகளும் அடியோடு வீழ்த்தப்பட்டார்கள் என சிங்கள அரசு தொடர்ந்து அறிவித்ததற்கு காரணமே, சர்வதேசத் தமிழர்கள் மீண்டும் புலிகளுக்கு நிதி கொடுக்க முன்வரக் கூடாது என்பதற்காகத்தான். மேலும், ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான பொட்டு அம்மானின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ-யும் ஏற்க மறுப்பதால், சிங்கள அரசுக்கு தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. சமீபத்தில், இலங்கைக்குச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம், 'சர்வதேச அளவில் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் இப்போதும் பிரபாகரனையும் அவருடைய தளபதிகளையும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்!' என இலங்கையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே பகிரங்கமாக அறிவித்ததையும் கவனிக்கவேண்டும்'' என்றார்கள்.
இதற்கிடையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு மிக முக்கிய இடத்தில் இருந்து ரகசியக் கடிதம் ஒன்று வந்திருப்பதாகவும்... அதில், ''நாங்கள் மிகப் பத்திரமாக இருக்கிறோம். விரைவிலேயே வெளியுலகுக்கு வரத் தயாராகிவிட்டோம். பழையபடி மிகுந்த வலிமையோடு போரிட நாங்கள் தயாராகி வருகிறோம்'' என சுருக்கமாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் முக்கியமான ஐந்து பேருக்கு இதே கடிதம் வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
''போரின் கடைசி நாள் பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக இத்தனை மாதங்கள் கழித்து இலங்கை அரசு வலிந்து அறிவிக்க வேண்டிய அவசியமென்ன? இண்டர்போல் அறிக்கை வெளியான பிறகுதான் தற்கொலை தகவல் அவர்களுக்குக் கிடைத்ததா? பிரான்ஸில் ஈழத்தமிழர்கள் ஏற்பாடு செய்யப் போகும் ரகசியக் கூட்டத்துக்கு பொட்டு அம்மான் நேரிலேயே வருவதாகச் சொல்லி இருக்கிறாராம். இண்டர்போல் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால்தான் அந்தக் கூட்டம் தள்ளிக்கொண்டே போகிறது. ஒரே ஒரு நிமிடமாவது அவர் வெளிச்சத்துக்கு வந்து போவார்'' என்று ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சிலர் அடித்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
''புலிகளின் அமைப்புக்கு பொட்டு அம்மான் புதிய தலைவராக பொறுப்பேற்பாரா?'' என்று இவர்களிடம் கேட்டால்... ''எங்களுக்கு வந்த மற்றொரு மிக இனிப்பான தகவல்படி சொல்வதானால்... இயக்கத்துக்கு புதிய தலைமை வரவேண்டிய அவசியமில்லை!'' என்று மட்டும் சிரித்தபடியே சொல்கிறார்கள்.-
நன்றி; ஜீனியர் விகடன்