Thursday, March 4, 2010

நித்தியானந்தருக்கு நடந்தது என்ன- ஸ்பெஸல் ரிப்போர்ட்

அந்த வீடியோ பார்க்கும் போதே மனதில் பட்ட விஷயம் என்னவென்றால் முதலில் உள்ளே நுழையும் ரஞ்சிதா சாமியின் காலை தொட்டு வணங்கி விட்டு அதன் பிறகு கதவை சாத்திவிட்டு வருவார்...

பின்பு கால்களை அமுக்கிவிட்டு மெயின் மேட்டருக்கு போகும் போது சாமீ லைட்டை ஆப் செய்ய முயற்ச்சிக்க.. அதை ரஞ்சிதா அணைக்கவிடாமல் தடுத்து விடுவார்... எனக்கு அப்போதே எழுந்த சந்தேகத்தை கூட நான் போன பதிவில் வெளிபடுத்தி இருந்தேன்... வாசக நண்பர் ஒருவர் கூட அதே ஐயபாட்டை வெளிபடுத்தி இருந்தார்....

ரஞ்சிதாவும் அதே ஆசிரமத்தில் தங்கி இருந்த தர்மானந்தா என்ற சாமியாரும் சேர்ந்து அமெரிக்காவில் இருந்து வரவழைக்கபட்ட உயர்தர கேமரா மூலம் அந்த காட்சிகள் பதிவு செய்யபட்டதாகவும்...அந்த கேமரா எல்லாத்தையும் படம் எடுக்காதாம் எதிரில் ஏதாவது அசைந்தால் மட்டுமே படம் எடுக்குமாம்... என்ன டெக்னாலஜி???? புடடடேஜை எப்படி எல்லாம் சேவ் பண்ணறானுங்கப்பா????

முதலில் 50 கோடிக்கு இந்த டிவிடியை சாமியார் தரப்பிடம் பேசியது ரஞ்சிதா தரப்பு... அதில் பாதி தர்மானந்தா சாமிக்கும் அவன் அண்ணணுக்கும் என முடிவானது.... இந்த தொகை டூமச் என்று சாமியார் தரப்பில் சொல்ல அததான் 1000 கோடிக்கு மேல் சொத்து இருக்கே என்று சொன்னார்களாம்....

கடைசியாக 15 கோடிக்கு பேரம் முடிய... அந்த பணத்தையும் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் பணத்தை கொடுக்காமல் செல்வாக்கை வைத்து ஜெயித்து விடாலம் என்று நினைத்த கணக்கு போட.... அந்த கோஷ்ட்டி கொடுத்த விலைதான் இது என்று குமுதம் ரிப்போர்டர் இன்றைய பதிப்பில் செய்தி வெளியிட்டு உள்ளது... அவர்களின் பதிப்பான குமுதத்தில் எந்த தகவலும் இல்லை.... அடுத்த பதிப்பில் வரலாம்....

ரஞ்சிதா..... இந்த விவாகாரத்தில் நான் தவறு செய்து விட்டேன்... என் பிரச்சனையை நான் ஹேண்டில் செய்யாமல் மூன்றாம் நபரிடம் கொடுத்ததுதான் பெரியகுற்றம்.... சாமியாருக்கு எதிராய் எந்த புகாரும் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி ரஞ்சிதா சாமியாரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தற்போது ரஞ்சிதா இருப்பது பெங்களுரில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில்தானாம்...

ஒரு வழியாக ரஞ்சிதாவுக்கும் இந்த சதியில் பங்கு இருப்பதாக அம்பலமாகிவிட்டது... இந்த டிவிடி வெளியில் வராமல் இருக்கு சாமியார் தரப்பு எவ்வளவோ முயன்றாலும் கடைசியில் எல்லாம் முடிந்து விட்டது...


இதில் குற்றவாளியார்.. காமத்துக்கு சபலபட்ட சாமியாருக்கு, பணத்துக்கு சபலபட்ட ரஞ்சிதா தரப்பு விளையாட நினைத்தது... இரண்டு பேரும் பசியும் ஒன்றும் இல்லாமல் போக.... இந்த பிரச்சனை மீடியாக்களின் பெரும் பசியை தீர்த்து விட்டன... என்று குமுதம் ரிப்போர்டரிடம் புலம்பி இருக்கின்றார் ஆசிரம நிர்வாகி ஒருவர்...

கலைஞர் அருவருக்கதக்க படங்களை பத்திரிக்கை டிவியில் வெளியிடுவதா? என்று காலம் கடந்து கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்...

“ஒரு சாமியர் செய்யும் காரியமா இது” என்று இன்று செய்தி வெளியிட்ட மீடியாக்கள்...நாளை இதே போல் ஒரு அரசியல்வாதியோ அல்லது அவர் குடும்ப உறுப்பினர்களோ மாட்டிக்கொண்டால் செய்தி வெளியீடுவார்களா? என்பது தெரியவில்லை...

என்னை பொறுத்தவரை இதுவே கடைசி உண்மையாக இருக்காது என்று நினைக்கின்றேன்.. இன்னும் தோண்ட தோண்ட வரும் வாரங்களில் பல உண்மைகள் வரும்....

சாமி நித்யாவின் வக்கில் எந்த பெண்ணும் புகார் கொடுக்காத போது சாமியை கைது செய்வது சான்சே இல்லை என்று சொல்லி இருக்கின்றார்...

சாமியாரிடம் ரஞ்சிதாவை அறிமுகபடுத்திய அம்மா நடிகை சொல்லி இருக்கின்றார்..

அது கிருஷ்ணர் மீரா அடைந்த பரவசநிலை.. அங்கே என்ன விபச்சாரமா நடக்கின்றது? சாமி்க்கு ஒரு அர்பணிப்பு உணர்வுடன் கால் பிடித்து விடுகின்றார்... மாத்திரை கொடுக்கின்றார், சாப்பாடு ஊட்டுகின்றார்... அதோடு சாமியயோடு கலந்து விடுகின்றார். இதில் என்ன தப்பு என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்...ரஞ்சிதாவை போல சாமியிடம் சரனாகதி அடைய எத்தளை பேர் காத்து கொண்டு இருக்கின்றார்கள் தெரியுமா? என்று கேட்டு இருக்கி்ன்றார்.... அதை படித்த போது எனக்கு தலை சுற்றியது.....

நேற்று கூட ரஞ்சிதாவின் பக்கத்தை யோசித்த நடுநிலையாளர்கள்... சாமி பேர் ரிப்பேர் ஆகும் போது இந்த பெண்ணி்ன் பெயரும் கெடுவதை நினைத்து வருத்தம் கொண்டனர்... ஆனால் இப்போது அப்படி இருக்காது என்று எண்ணுகின்றேன்...பணத்துக்கு சபலபட்டதற்க்கு அந்த விலை போலும்....

எது எப்படி இருந்தாலும் தொலைகாட்சியிலும் பத்திரிக்கையிலும் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்ததை பார்த்து பலர் கோபத்தில் இருக்கின்றனர் என்பது பல இடத்தில் நடக்கும் கருத்து மோதலில் தெரிகின்றது.....

No comments:

Post a Comment