Thursday, March 18, 2010

திருட்டுகள் பலவிதம்




சில திருட்டு பிட்ஸ்...

இது ஒரு ஜாலித் திருட்டு. மதுரைப் பக்கத்தில் பல வீடுகளில் சொந்தமாகக் கறிவேப்பிலைக் கன்றை வாங்கி நட மாட்டார்கள். 'வேறு ஒருவர் இடத்தில் இருந்து அவர்களுக்குத் தெரியாமல் கொண்டுவந்து நட்டால், கறிவேப்பிலை மரம் செழித்து வளரும்' என்பது இல்லத்தரசிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. தன் வீட்டில் கறிவேப்பிலை கன்றுகாணா மல் போனால், 'இதெல்லாம் சகஜமப்பா' என்று பெரும்பாலானவர்கள் கண்டுகொள்வது இல்லை!

இது ஒரு நம்பிக்கைத் திருட்டு. பல்லவ மன்னன் கலிங்க நாட்டுக்குள் போர் தொடுக்க நுழைந்தபோது, அங்கே இருந்த வாதாபி பிள்ளையாரை வணங்கிவிட்டுச் சென்றானாம். அந்தப் போரில் பல்லவன் வெற்றிபெறவே, நாடு திரும்பும்போது அந்த வாதாபி பிள்ளையாரைத் தன் நாட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டானாம். அதில் இருந்து இன்று வரை 'ஓர் இடத்தில் இருந்து பிள்ளையாரைத் திருடிச் சென்றால் விசேஷம்' என்று மக்களால் நம்பப்படுகிறது. அதுவும் அரச மரத்தடிப் பிள்ளையாருக்கு ஏக கிராக்கி. பல ஊர்களில் மாலையில் பார்த்த பிள்ளையார் காலையில் இருக்க மாட்டார். அப்படியானால், பக்கத்து ஊர் பார்ட்டிகள் பிள்ளையாரை அலேக் பண்ணியிருப்பார்கள் என்று அர்த்தம்!

இது ஓர் உவ்வே திருட்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் லங்காஷையர் (Lancashire) என்கிற இடத்தில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் திடீர் திடீரெனச் சில பொருட்கள் காணாமல்போனது. மாதங்கள் ஓட, திருட்டு அதிக அளவில் நடக்கத்தொடங் கியது. திருட்டு விஷயம் வெளியே கசிந்தபோது, அத் தனை பேருக்கும் அதிர்ச்சி. திருடுபோனவை அனைத்தும் பெண்களின் உள்ளாடைகள். திருடனைப் பிடிக்க விடுதியில் ஆங்காங்கே கேமராவை செட் பண்ணிவைத் தார்கள். பல நாள் உள்ளாடைத் திருடன் ஒருநாள் அகப்பட்டான். அவர் பெயர் அயன் ஸ்டஃப்ஃபோர்டு. 'அவர்' என்று சொல்வதற்குக் காரணம், அவர் 59 வயது தாத்தா. அதை விட அதிர்ச்சி, அயன்தான்அந்த நகரத்தின் முன்னாள் மேயர். திருடிய அத்தனையையும்பத்திரமாகக் கண்காட்சி மாதிரி அடுக்கிவைத்திருந்தார் தாத்தா. ஜெயிலில் போட்டால் தாத்தா போய்ச் சேர்ந்துவிடுவார் என்பதால், மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளித்தார்கள்!

இது ஒரு வரலாற்றுத் திருட்டு. இந்தியாவில் இருந்து இங்கிலாந்து கொள்ளையடித்த பொருட்களின் லிஸ்ட் ரொம்பப் பெரிசு. தங்கச் சுரங்கம் கோலாரில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிலோ தங்கத்தைக் களவாடி இருக்கிறது. கூடுதலாக, கோஹினூர் வைரத்தையும் தூக்கிச் சென்றுவிட்டார்கள். கோல்கொண்டா வைரச் சுரங் கத்தில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 38 கிராம் எடை உள்ள தூய வெண்ணிற வைரம் தான் கோஹினூர். பெர்சியன் மொழியில் கோஹினூர் என்றால் மலை அளவு ஒளி என்று அர்த்தம். சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது இந்த வைரம். அதற்கு அடுத்து 1730-ம் ஆண்டு பிரேசிலில்தான் இதே மாதிரி சிறந்த ஒரு வைரத்தைக் கண்டுபிடித்தார்கள். இந்தியாவை ஆண்ட பல மன்னர்களின் கை தாண்டி கடைசியாக இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் கைகளில் போய்ச்சேர்ந்து விட்டது கோஹினூர். 1877-ம் ஆண்டு அரசி விக்டோரியாவின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது. பின்பு 2002-ம் ஆண்டின் எலிசபெத் வரை எல்லா ராஜ மாதாக்க ளும் அந்தக் கிரீடத்தையே அணிந்தனர். இப்போது மற்ற ராஜாங்க அணிகலன் களுடன் பிரிட்டனின் அருங்காட்சியகத்தில் உறங்கிக்கொண்டு இருக் கிறது கோஹினூர் வைரம்!

No comments:

Post a Comment