Thursday, March 11, 2010

யாழ்.நைனாதீவுப் பகுதியில் சோழர் காலத்து ஆலயம் கண்டிபிடிப்பு


யாழ் குடாநாட்டின் கரையோர தீவுப்பகுதிகளில் ஒன்றான நைனாதீவுப் பகுதியில் சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நைனாதீவுப்பகுதியில் கி.மு 10 ஆம் நூற்றாண்டு பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது 40 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும் பேராசிரியர் பொ. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
ராஜ ராஜ சோழன் மிகவும் பலம் மிக்க அரசனாக 985 தொடக்கம் 1014 காலப்பகுதியில் தஞ்சாவூர் மற்றும் சோழமண்டலம் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்திருந்தார்.நைனாதீவில் கண்டறியப்பட்ட ஆலயத்தில் சுவர்களும், அத்திவாரமும், சிற்பங்களும் காணப்படுவதாகவும், சோழர் காலத்து நாணயங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்குடாநாட்டின் தீவுப் பகுதிகளில் இதுவரை பிரித்தானியா மற்றும் டச்சு ஆட்சியாளர்களின் தடயப்பொருட்களே கண்டறியப்பட்டிருந்தன. ஆனால் சோழர் காலத்து தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.
மேலதிக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது இந்த ஆலயப்பகுதி முழுமையாக மீட்கப்படும் எனவும், தீவுப்பகுதி மக்கள் இவ்வாறான ஆலயங்களை நிர்மாணிப்பதில்லை எனவும் புஸ்பரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment