Tuesday, March 2, 2010

நித்யா கதவை திற... ரஞ்சிதா வரட்டும்....


நேற்று முழுவதும் சீரியல் கேரக்டர்களை பற்றி அதிகம் பேசும் வீட்டு பெண்கள்.. நித்யாவின் படுக்கை அறை காட்சிகள் பற்றி அதிகம் பேசினார்கள்... பதிவுலகில் கூட நேற்று காரசார விவாதம் நித்யாவை பற்றியதே...

நேற்று இரவுதான் சன் நியூஸ் பார்த்தேன்... நித்யா படுக்கையில் இருப்பதும்... ஆர் எழுத்து நடிகை என்று சன் புடகமாக பேசியது... ஒரு நடிகை ஒரு சாமியாரின் மீது மெல்ல கொஞ்சம் கொஞ்சம் ஏறி படுத்து கிடப்பதையும்...விண்ணைதாண்டி வருவாயா போல கிஸ் அடித்த காட்சிகளை பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்து போனேன்..

ஆனால் வியாழக்கிழமை வெளிவரும் நக்கீரன் நித்யா சாமீயாருக்காக ஒரு நாள் முன்பே வந்த அந்த ஆர் எழுத்து நடிகை ரஞ்சிதா என்று படத்தை போட்டு விட்டது... மூன்று பக்கத்துக்கு அதே படங்கள்தான்...
நித்யானந்தர் ஜட்டியுடன் கால் தூக்கிகொண்டு ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் அந்த படங்களை பாத்து விட்டு புத்தகம் வாங்கிய இருவர்... இது ஒரு வகை ஆசிர்வாதம் போல என்று சொல்லி விட்டு போனார்கள்...


நக்கீரன் பத்திரிக்கையின் வால் போஸ்டர் பார்த்து விட்டு வினாடி வினாவுக்கு ஆன்சர் தெரிந்தது போல் உடனே தன் சொந்தங்களுக்கு உடனே போன் செய்து சொன்னவர்கள் ஏராளம்.. பத்திரிக்கை வாங்காமல் அந்த கம்பியில் மாட்டி வைத்து இருக்கும் பத்திரிக்கையை துணியை தூக்கி பார்பது போல் பலர் பார்த்து விட்டு பரவசம் அடைந்தனர்.....

டீக்கடையில் டீ குடித்த சிலர்...“ மச்சான் இதுக்கெல்லாம் மச்சம் வேண்டும்டா???”என்ற அங்கலாய்து கொண்டார்கள்... எதாவது ஒரு தேவகியோ,கல்பனாவோ,சரதாவாக இருந்து இருந்தால் இந்த அங்கலாய்ப்பு வந்து இருக்காது.... நடிகை ரஞ்சிதா என்பதால் பலர் விட்டபெருமூச்சில் பொறாமை சூடு அதிகமாக இருந்தது...


பத்திரிக்கையில் பல படங்கள் போட்டு இருப்பதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்

இந்த வருட புத்தககண்காட்சியில் கூட சாமியாருக்கு தெரிய பேனர் எல்லாவற்றையும் வைத்து அசத்தினார்கள்...

நித்யாவின் சொற்பொழிவுகளுக்கு என் கடலூர் நண்பன் தீவிர ரசிகன்... சாமியாருடைய புத்தகங்களை அதிகம் வாசித்தவன்... என் அப்பாவிடம் கூட சாமியார் நடத்திய சொற்பொழிவை சிடியாக கொடுத்து கேட்க சொல்லி வற்புறுத்தியவன்...
நேற்று அவனுக்கு போன் செய்த போது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக கைபேசி சொல்லியது....

வளசரவாக்கத்தில் கூட ஒரு துணிக்கடையில் சாமியாருடைய புத்தகத்தை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்கள்.. அதாவது சாமியாருடைய புத்தகங்கள் இருந்தால் அது மதிப்புக்கு உரிய விஷயமாக இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள்..அவர்கள் எல்லோருக்கும் இப்போது வெளிவந்து இருக்கும் வீடியோ.... இது மரண அடி... அந்த நம்பிக்கைகள் தூள் தூள் ஆகி போனது...

சாதாரண ஒரு கோடிஸ்வரர் இந்த செயலை செய்தாலும் அது பெரிய விஷயமாக எடுத்து கொள்ளமாட்டார்கள்...ஆனால் சாமியார் போர்வையில்இந்த செயல் கொஞ்சம் ஓவர்தான்...

தொடர் குண்டு வெடிப்பு காரணமாக, தொடர் தீவிரவாத கைது காரணமாக... முஸ்லீம்கள் என்றால் ஒரு தீவிரவாத முத்திரை சமுகத்தில் வந்து விழுந்து விட்டது...சென்னையில் அந்த சமுகத்து மக்களுக்கு வீடு கொடுக்க நிரம்ப யோசிக்கின்றார்கள்...அந்த வேதனை ரொம்ப கொடுமையானது....யாரோ சிலர் செய்த தவறுகளுக்கு பல குடும்பங்கள் பாதிக்கபட்டு உள்ளார்கள்... அதே போல் சாமியார்கள் என்றால் அவர்கள் செக்சில் வீக்காகதான் இருப்பார்கள் என்ற மன நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்...

அதே போல் வடஇந்தியாவில் சாமியார் பெயர்.... இச்சாதாயிசாது இவர் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கபட்டு இருக்கின்றது... கைது செய்யபட்டு இருக்கின்றார்...

என்னை பொறுத்தவரை ஒரு மனிதன் எப்படி சாமியாராக இருக்க முடியும் என்ற கேள்வி எனக்கு சிறுவயதில் இருந்தே எழுந்த விஷயம்தான்...

சாய்பாபா பற்றி எனக்கு நிரம்ப கருத்து வேறுபாடுகள்.. ஆனால் அந்த புகழையும் பணத்தையும் கொண்டு 200 க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு மேல் குடிநீர் வழங்கியவர்... அதனால் சாய்பாபாவை ஒரு மனிதனாக பிடிக்கும்...


தனது சாய்பாபா டிரஸ்ட் மூலம் கிருஷ்ணா நதி நீரை சேதம் இல்லாமல் தமிழகத்துக்கு வர வைத்தவர்... அப்போது இருந்த ஜெ அரசு... அந்த பணத்தை அப்படியே கொடுத்து விடுங்கள் நாங்கள் செய்து கொள்கின்றோம் என்று சொன்ன போது... பணத்தை கொடுக்காமல் அவர் டிரஸ்ட் மூலம் செய்து முடித்தவர்...

பூட்டபர்த்தியில் ஒரு வாரம் தங்க நேர்ந்தது...கோவில் வாசலில் ஒரு ராமர் சீதை அனுமன் சிலை பிரதிஷ்ட்டை நடந்த போது அப்போது அங்கே அந்த சிலைக்கு அருகில் இருந்து வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தேன்.. எல்லோரும் அவர் பாதம் தொட்டு வணங்கிய போது எனக்கு அந்த எண்ணமே தோன்றவில்லை.... மனிதர்கள் எப்போதும் மனிதன்தான்....

இந்த நித்யானந்த சாமியாராவது ஒரு நடிகையுடன் படுத்தார்... ஆனால் ஒரு சாமியார் கொலை செய்து விட்டு இன்னும் பவனி வந்து கொண்டு இருக்கின்றார்...தமிழகத்தில் ஆன்மீகத்தின் போர்வையில் இன்னும் என்னவெல்லாம் நடக்க போகின்றதோ தெரியவில்லை.....

கல்கி சாமியார் ஐட்டியுடன் ஆடும் லீலைகளை தெலுங்கில் டிவி9 தொலைக்காட்சி அந்தரங்க காட்சிகளை வெளியி்ட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது....இன்னும் அவர்களிடம் நிறைய புட்டேஜ் இருக்கின்றதாம்...
பொதுவாக சாமியார்களுக்காக நேரம் சரியில்லை....
எத்தனை பெரியார் வந்தாலும் இவனுங்களை திருத்த முடியாது...


ஒரு ரகசியம்....

அந்த கோவில் சென்னை பாண்டிக்கு நடுவில் இருக்கின்றது... அந்த கோவிலுக்காக தேசிய நெடுஞ்சாலையே தனது வழக்க பாதையை சற்றே மாற்றிக்கொண்டது.... அம்மன் ஒரு பிரச்சனையே இல்லை...அம்மன் சாந்தமான அம்மன்தான்... ஆனால் அம்மன் பேரில் வளர்ந்த குடும்பம் அவர்கள் நடத்தும் கல்வி கூடங்களில் அடாவடி தலைவிரித்து ஆடுகின்றதாம்... பல தற்கொலைகள் நடந்து இருக்கின்றன... ஒரு வளரும் சமுதாயமே.... நடைபினமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றதாம்...எது பேசினாலும் உதைதான்....எல்லோருக்குமே அங்கு மரியாதை இல்லாத அர்சசனைதான் அனைவருக்கும் கிடைத்து கொண்டு இருக்கின்றதாம்...துக்ளக் தர்பாரை நேரில் பார்க்க வாய்ப்பு இல்லாதவர்கள்.... கல்வி கூடங்களில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தினை நேரில் பார்த்தால் துக்ளக்கே தேவலாம் என்று இருக்குமாம்.... பூனைக்கு மணி கட்டுவதுயார் என்று மாணவ சமுதாயம் விழி பிதுங்கி இருக்கின்றதாம்...

No comments:

Post a Comment