Monday, March 8, 2010

ஆஸ்கர் விருது 2010




மார்ச் 8, 2010: 2010 ஆம் ஆண்டின் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை, தி ஹர்ட் லாக்கர் திரைபடம் தட்டிச் சென்றது. சிறந்த நடிகராக ஜெஃப் பிரிட்ஜஸ்; சிறந்த நடிகையாக சாண்ட்ரா பொல்லாக் தேர்வு செய்யப்பட்டனர்.

ஹாலிவுட் உலகின் மிக உயரிய கெளரவமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

இதில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருதுப் பட்டியல் விவரம் வருமாறு:

* சிறந்த நடிகர் : ஜெஃப் பிரிட்ஜெஸ் - படம் : கிரேஸி ஹார்ட்

* சிறந்த உறுதுணை நடிகர் : கிறிஸ்டோபர் வால்ட்ஸ் - இன்குளோரியஸ் பாஸ்டெர்ட்ஸ்

* சிறந்த நடிகை : சாண்ட்ரா பொல்லாக் - தி ப்ளைண்ட் சைட்

* சிறந்த உறுதுணை நடிகை: மோ நிக்யூ - பிரீஷியஸ்

* சிறந்த அனிமேஷன் திரைப்படம் : அப் - பீட் டாக்கர்

* சிறந்த ஒளிப்பதிவு : அவதார் - மவுரோ ஃபியோர்

* சிறந்த கலை இயக்கம் : அவதார் - ரிக் கார்ட்டர் மற்றும் ராபர்ட் ஸ்டோம்பெர்க்; செட் இயக்கம் : கிம் சின்கிளைர்

* சிறந்த ஆடை வடிவமைப்பு : தி யங் விக்டோரியா - சாண்டி பவல்

* சிறந்த இயக்குனர் : கேத்ரின் பிகேலோ - தி ஹர்ட் லாக்கர்

* சிறந்த ஆவணப் படம் : தி கோவ் - லூயி சிஹொயோஸ் மற்றும் ஃபிஷர் ஸ்டீவன்

* சிறந்த ஆவணப்படம் (குறுங்கதை) - மியூஸிக் பை ப்ருடென்ஸ் - ரோஜர் ரோஸ் வில்லியம்ஸ் மற்றும் எலினர் பர்க்கெட்

* சிறந்த எடிட்டிங் : தி ஹர்ட் லாக்கர் - பாப் முரவ்ஸ்கி மற்ரும் கிறிஸ் இனிஸ்

* சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் : தி சீக்ரெட் இன் தி ஐஸ் (அர்ஜெண்டினா)

* சிறந்த மேக்கப் : ஸ்டார் ட்ரெக் - பார்னே பர்மன்,மிண்டே ஹால் மற்றும் ஜோயல் ஹார்லோ

* சிறந்த இசை (ஒரிஜினல் ஸ்கோர்) : அப் - மைக்கேல் ஜியாக்கினோ

* சிறந்த இசை (ஒரிஜினல் சாங்) ": தி வியரி கைண்ட் (கிரேஸி ஹார்ட் படத்தில் இருந்து தீம் மியூசிக்) கிரேஸி ஹார்ட் - இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் : ரியான் பிங்ஹாம் மற்ரும் போன் பர்னெட்

* சிறந்த படம் : தி ஹர்ட் லாக்கர்

* சிறந்த அனிமேஷன் படம் : லோகோரமா - நிகோலஸ் ஷ்மெர்கின்

* சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்) : தி நியூ டெனன்ட்ஸ் - ஜோகிம் பேக் மற்றும் டிவி மங்கூசன்

* சிறந்த சவுண்ட் மிக்சிங் : தி ஹர்ட் லாக்கர் - பால் என்.ஜே. ஓட்டோசன் மற்றும் ரே பெக்கெட்

* சிறந்த விஷுவல் எஃபக்ட் : அவதார் - ஜோ லெட்டெரி, ஸ்டீபென் ரோஸன்பவும், ரிச்சர்ட் பெனெஹம் மற்றும் ஆண்ட்ரியூ ஆர்.ஜோன்ஸ்

* சிறந்த தழுவல் திரைக்கதை : ப்ரீஷியஸ் : சஃபையரால் எழுதப்பட்ட 'புஷ்' நாவலின் தழுவல் - திரைக்கதையாளர் : ஜெஃப்ரி ஃப்ளெட்சர்

* சிறந்த திரைக்கதை : தி ஹர்ட் லாக்கர் - மார்க் போயல்

No comments:

Post a Comment