

மதிக்கத்தக்க பெரிய மனிதர்களே மயங்கிக்கிடக்கும்போது, சாதாரண ஜனங்களை என்ன சொல்ல! அன்று எல்.ஐ.சி. ஏஜென்ட்டாக இருந்து, இன்று 'கல்கி பகவான்' என்றுவிஸ்வரூப வளர்ச்சி கண்டுவிட்ட அந்த ஆச்சர்ய மனிதரைப் பற்றி எத்தனையோ முறை ஜூ.வி-யில் எழுதி விட்டோம். இப்போது அந்த சர்ச்சைக்கெல்லாம் கிரீடம் வைத்தமாதிரி கேமராவில் சில பகீர் காட்சிகளில் பக்தர்களோடு சேர்ந்து 'சிறைப்பட்டிருக் கிறார்' கல்கி சாமியார்!
படுஸ்ட்ராங்கான ஏதோ ஒரு போதைக் கிறுகிறுப்பில் பக்தர்களும் பக்தைகளும் மயங்கியும், விக்கியும், துள்ளி யும், முத்தமிட்டும் கிடக்க... சோபாவில் அமர்ந்து
கொண்டு தானும் லேசாக சொக்கிய கண்களுடன் காட்சிகளை ரசித்துக் கொண்டிருக்கிறார் கல்கி பகவான். ஜட்டியோடு நடனம்... ஆணும் ஆணும் முத்தமிடும் காட்சிகள் என்று அவருடைய ஆஸ்ரமத்தை ஒரு மர்மக்கிடங்காகவே காட்டு கிறது டி.வி.9 என்ற தெலுங்கு சேனல் ஒளிபரப்பிய கேமரா காட்சிகள்.
எத்தனையோ பணக்கார வீட்டு இளைஞர்கள் கல்கி பகவா னின் நெகமம் ஆஸ்ரமத்தில் 'கவர்ச்சியால்' ஈர்க்கப்பட்டுகிடப் பதாகவும், அவர்களை மீட்க வந்த பெற்றோர் தோல்வியோடு திரும்பியதாகவும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் விசுவநாதசுவாமி என்பவர். ஜூ.வி-க்கும் பேட்டி கொடுத் திருக்கிறார். கல்கியின் ஆரம்பகாலந்தொட்டு அத்தனையும் அறிந்தவராகக் கூறிக் கொள்ளும் விசுவநாதசுவாமி, ''ஆன்மிகம் என்ற பெயரில் ஐ.டி. வேலையில் இருக்கும் இளைஞர்களையும் இளைஞிகளையும் கூட உள்ளே இழுத்துப் போட்டுக் கொண்டி ருக்கிறது அந்த ஆஸ்ரமம். அவர்களுக்கு இரவு வேளையில் தரப் படும் தீர்த்தத்தில் என்ன கலந்து கொடுத்தார்கள் என்பதை இப்போதாவது போலீஸ் விசாரணை செய்யுமா? பக்தி என்ற பெயரால், தங்கள் வாரிசுகளை சீரழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் குமுறிய பெற்றோர், வேறு வழியில்லாமல் நீதிமன்றம் போனார்கள். கோர்ட் அனுப்பிய பிரதி நிதி ஆஸ்ரமத்துக்குப் போய் விசாரித்தபோது, 'எங்கள் விருப்பத்தோடுதான் இங்கே இருக்கிறோம்' என்று அந்த அப்பாவி இளசுகள் சொல்லிவிட்டன. அந்தப் பெற்றோரில் யாராவது கூட காத்திருந்து, ரகசிய கேமராவில் இந்தக் காட்சிகளைப் பதிவு செய்து டி.வி-க்கு கொடுத்திருக்கலாம்'' என்கிறார்.
அவரே, ''ஆஸ்ரமத்துக்கு அடுக்கடுக்காக சேர்ந்த சொத்துகள் எத்தனையோ கோடி. பிரச்னைகள் வரும்போதெல்லாம் மிகப்பெரிய இடத்து பக்தர்களின் துணைகொண்டு தற்காத்துக் கொண்டார்கள். இனியும் அதுவே நடக்கப்போகிறதா?'' என்றார் கொதிப்பாக.
சில மாதங்களாகவே கல்கி பகவானுக்கும், அவரது மகனுக்கும் மனத்தாங்கல் இருப்பதையும், கல்கியின் சில விசுவாசிகள் அவருடைய மகனோடு சேர்ந்து பிரிந்து போய், தனி ஆன்மிக மையம் தொடங்கியது பற்றியும் கூட சமீபத்தில் ஜூ.வி-யில் வெளியானதை அடுத்து இப்போது டி.வி-யில் இந்த போதை பகீர் காட்சிகள்!
''இது இப்போது எடுத்த காட்சியாகத் தெரியவில்லை. கல்கி பகவான் மற்றும் அவருடைய பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்தே எடுத்த காட்சிகள் போல் தோன்று கிறது. ரிலாக்ஸாக போட்டு ரசிக்க கூட்டாக எடுத்த காட்சிதான் இப்போது டி.வி-க்குப் போய் விட்டதோ என்னவோ..?'' என்று சொல்லி குண்டு போடுகிறவர்களும் உண்டு.
டி.வி.9 தரப்போ, ''எட்டு பேர் கொண்ட குழுவின் ஆறுமாத கால 'ஸ்டிங்' உழைப்பு இது. இதைவிட திகில் காட்சிகள் உண்டு. போலீஸ் நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம்'' என்கிறதாம்.
ஆனாலும் திங்கள் நள்ளிரவு வரை இந்த கேமரா காட்சிகளுக்கு எவ்வித பதிலையும் சொல்லவில்லை கல்கி பகவான் தரப்பு.
'கல்கி'யை இனி எப்படி கையாளப்போகிறது சட்டம்?
Ethanai 1000 periyaar vanthalum intha makkal thiruntha povathu kidaiyathu.....makkal Pagutharivu kondu yosikatha varai ivanai ponra poly samiyaarkal kandippaka irupargal...
ReplyDeleteகடவுளை வணங்குங்கள் முடியாவிட்டால் இயற்கையாவது வணங்குங்கள்.இப்படி போலி சாமியார்களிடம் மாட்டிக்கொண்டு வாழ்வை இழந்து விடாதீர்கள்.(நித்தியானந்த சாமி=கல்கி)
ReplyDeleteYou have to be careful with priests regardless of whatever your religion is. But other religions abuses never come to light.
ReplyDeletehttp://news.bbc.co.uk/1/hi/world/americas/3872499.stm
Timeline: US Church sex scandal
ReplyDeleteIn recent decades, more than 10,000 children were reportedly sexually abused by Catholic priests in the United States. In "Hand of God," filmmaker Joe Cultrera explores just one of those cases
http://www.youtube.com/watch?v=j0pKL7E6QFY&NR=1
" சாமி இருக்குங்கிறவனை நம்பு.., சாமி இல்லைங்கிறவனையும் நம்பு.., ஆனா.. நான் தான் சாமின்னு சொல்லுறவனை மட்டும் நம்பாதே"
ReplyDelete