Sunday, March 14, 2010

கசப்பு ஆப்பிள்... இனிப்பு வாழ்க்கை..!






ஆன்மாவை திறந்து ஆனந்தம் பெருக வைத்த நித்தியானந்தரை, கேமரா திறந்து கஷ்டத்தில் ஆழ்த்தியவர்கள்... இன்னமும்கூட ஜோராக பேரத்தைத் தொடர்ந்து

கொண்£டிருக்கிறார்கள் என்பது 'மிஸ்டர் கழுகு' செய்தி! 'மிஸ்டர் மியாவ்' ரேஞ்சுக்கு அவருடைய சினிமா உலகத் தொடர்புகளை இன்னும் சற்று உள்ளே போய் ஆராய்ந்தால்... ரஞ்சிதா, ராகசுதா ஆகிய 'அக்மார்க்' பக்தைகள் போக... சிலுசிலு சிற்றரசி, சிறுவாணிக் கரை வெகுளி என்று மேலும் பல நட்சத்திரங்களின் வாழ்க்கையிலும் சாமியாருக்கு செமத்தியான பங்கு இருப்பதாகத் தகவல்கள் படையெடுக்கிறது!

கசப்பு ஆப்பிள்... இனிப்பு வாழ்க்கை..!

தமிழ்த் திரையுலகில் ஒரு காலத்தில் பீக்கில் இருந்தவர் அவர், பிற்பாடு அரசியல் அது இதென்று திசைமாறிப் போனார், எல்லோருக்கும் பிடித்த தோழி. அவரைப் பார்த்தாலே சட்டென்று சிரிக்காமல் இருக்க முடியாது. வீச்சுக் குரலில் பேச்சு காட்டி யாரையும் ஃப்ரெண்டாக்கி விடும் அவருக்கு சத்தமில்லாமல் வந்தது பெரும் சோதனை! மவுஸ் மங்கி வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த சமயத் தில், சென்னையைச் சேர்ந்த பிரபல பெண் டாக்டர் ஒருவர், நித்தியானந்தரின் அருமை பெருமைகளை எடுத்துச் சொன்னார். 'சென்னையில் ஒரு பிரசங்கத்துக்காக வந்திருக்கும் நித்தியானந் தரை அவர் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டிலேயே சந்திக்க லாம். இந்த ஸ்பெஷல் சந்திப்புக்கு ஃபீஸ் ஒரு லட்ச ரூபாய். ஆனால், உன்னோட பிரச்னை எல்லாமே தீருவதற்கு நான் கியாரண்டி' என டாக்டர் சொன்னாராம்.

'கால்ஷீட் கொடுக்குறப்ப ஒவ்வொரு மணிக்கும் நான்தான் நோட்டை எண்ணி வாங்குவேன். நான் பணம் கொடுத்து ஒரு சாமியாரை பார்க்கணுமா..?' என மிக எகத்தாளமாகவே கேட்டாராம் நடிகை.

'இருந்தாலும், நீங்க சொல்றதால வரேன்...' என வேண்டா வெறுப்பாகக் கிளம்பியிருக்கிறார் நடிகை. பிற்பாடு இவர் சொன்னதன்படி பார்த்தால்... இவரைப் பார்த்ததும் நித்தியானந்தர், 'நீ இஷ்ட மில்லாமத்தானே இங்கே கிளம்பி வந்தே? இந்த சாமி... யாரு... நம்ம பிரச்னையைத் தீர்க்கறதுக்குனு உன் மனசைப் போட்டு ஒரு கேள்வி குடையுதுதானே?' என்று எடுத்த எடுப்பில் கேட்டாராம். மிரண்டு போன நடிகை, 'சாமி... உங்களைப் பத்தி ஏதேதோ பேசிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க..' என்று காலில் விழுந்து விட்டாராம்.

நடிகையின் தலை மீது கை வைத்து ஹீலிங் தெரபியை ஆரம்பித்த நித்தியானந்தர், ஒரு பச்சை நிற ஆப்பிளை இவரிடம் கொடுத்து, 'இதை வீட்டுக்கு எடுத்துட்டு போ! கத்தியில வெட்டாம அப்படியே கடிச்சு சாப்பிடு. அதற்கு முன் சுத்த பத்தமா குளிச்சிருக்கணும். ரொம்ப கசக்கும் இந்த ஆப்பிள். யோசிக்காம முழுசா சாப்பிடு. அந்த கசப்பு உன் உடம்புல ஏற ஏற... உன் பிரச்னைகள் எல்லாம் உன்னைவிட்டு விலகிப் போக ஆரம்பிச்சிடும். உன் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்தால், அதுக்கப்புறம் பெங்களூரு பிடதி ஆசிரமத்துல வந்து என்னைப் பாரு..' என்று ஆசீர்வதித்து அனுப்பினாராம்.

சிரிப்பால் யாரையும் கவரக்கூடிய அந்த நடிகையும் சுவாமி தந்த ஆப்பிளை சாப்பிட, அவரது பிரச்னைகள் தீர்ந்ததைப் போல உணர்ந்தாராம். இரண்டே வாரத்தில் பிடதி ஆசிரமத்துக்கு போனவர், ஒரு வாரத்துக்கு மேல் அங்கே தங்கியிருந்தாராம். பிறகு நடிகையின் தலை அடிக்கடி ஆசிரமத்தில் தென்பட ஆரம்பித்ததாம். ஒரு கட்டத்தில் சிஷ்ய கோடிகளின் செக்-போஸ்ட்டெல்லாம் அவரைத் தடுத்து நிறுத்தவே முடியாது என்ற நிலை உண்டாக... 'எவ்வளவுக்கு எவ்வளவு உடம்புரீதியான பிரச்னைகளில் கசந்து கிடந்தேனோ... அவ்வளவுக்கும் இப்போ இனிக்குது வாழ்க்கை' என்று மற்ற பக்த கோடிகளுக்கு நடுவே ஆசிரமத்தில் வாக்குமூலம் கொடுத்தாராம் நடிகை. அது இன்னும்கூட பத்திரமான வீடியோ பதிவாக இருக்கிறதாம்!

தாமரைக்கும் தண்ணிக்கும் சண்டையா..?

ஹீரோயினாக அறிமுகமானபோதே ரசிகர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு ஆட்டம் போட்ட சிற்றரசி இவர். கடுமையான மூட்டு வலியும் திடீர் திடீரென்று 'வீஸிங்' பிரச்னையும் இவரைத் தாக்கவும்... பார்க்காத டாக்டர் இல்லையாம். சின்னத் திரையில் அப்படியரு அதிகாரத் தோரணையோடு வளைய வந்தவர், வீட்டுக்குள் சுருண்டுவிட்டாராம். நித்தியானந்த சாமியாரின் முதல் சினிமா சிஷ்யையான ராகசுதா இவரைக் கொண்டுபோய் ஆசிரமத்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். வழக்கம்போல் தொடுதல் டெக்னிக்கில் ஹீலிங் தெரபி சிற்றரசிக்கு நடந்தது. தொடர்ந்து டச்சிங் சிகிச்சைக்கு வரவேண்டும் என்று அங்கே சொல்ல... 'இரவானால் தூக்கத்துக்கு கொஞ்சம் மருந்து சாப்பிடுவேன். நான்-வெஜ் இல்லாமல் இருக்கவே மாட்டேன்... பரவாயில்லையா?' என்று எதிர்க்கேள்வி கேட்டாராம் இவர். வந்த ஒருத்தரை இழப்பானேன் என்று, 'உங்கள் பழக்க வழக்கமெல்லாம் அப்படியே தொடரட்டும். இன்னொருபக்கம் ஹீலிங் தொட ரட்டும்' என்று ஸ்பெஷல் அனுமதியை இவருக்கு அளித்தார்களாம்.

''காதல் தோல்விதான் ராகசுதாவை ஆசிரமம் நோக்கி இழுத்தது. மற்ற பலரை உடல் ரீதியான கோளாறுகள்தான் உள்ளே தள்ளியது!'' என்று சொல்லும் முன்னாள் ஆசிரமவாசிகள், ''கதவுகள் சாத்தப்பட்ட தியான மண்டபத்தில் 'ஹீலிங் தெரபி' பலநாள் தொடர்ந்தது. அநேகமாக அந்த தெரபியும்கூட பிளாக்மெயில் பார்ட்டிகளிடம் சி.டி-யாக இருக்குமென்றே நினைக்கிறோம்!'' என்கிறார்கள்.

மாடலிங் மயக்கம்..!

கோயில் நகரத்தில் பிரபலமான துணிக்கடை யின் ஓனர் நித்தியானந்தரின் தீவிரமான பக்தராம். அங்கே துணிக்கடை பொம் மையை திசை மாற்றி வைப்பதுகூட நித்தியானந்தரை யோசனை கேட்காமல் நடக்காதாம். துணிக்கடையின் விளம் பரத்துக்காக சென்னையை சேர்ந்த மாடலிங் பெண்கள் மூன்று பேரை வைத்து ஒரு விளம்பரம் எடுத்திருந்தார் துணிக்கடை அதிபர். அந்த விளம்பரத்தை நித்தியானந்தரிடம் காட்டி ஆசி வாங்க பிடதி ஆசிரமத்துக்குப் போயிருக்கிறார். சி.டி-யைப் பார்த்ததுமே, ''ஆஹா... யாரு இந்த பொண்ணுங்க. இதுல ஒருத்தருக்கு பெரிய பிரச்னை இருக்கும் போலிருக்கே. நேரில் வரச் சொல்லு... சரி பண்ணிடலாம்' என்று தன் 'ஞான திருஷ்டி'யால் கணித்துச் சொன்னாராம். அதிலும், இந்த விளம்பரம் டி.வி-யில் வருவதற்கு முன்பாக மூன்று பெண்களையுமே பார்க்க வேண்டும் என்றாராம்.

கருணையோடு அவர்களுக்கும் நடந்ததாம் 'ஹீலிங்' தெரபி!
'போக்குவரத்து' மாறிப்போச்சு...

தானுண்டு தன் சிஷ்யப் பிள்ளைகள் உண்டு என்று இருந்த நித்தியானந்த சாமியாரின் ஆசிரமத்துக்கு பெண் கவர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்தவர் வட மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு போக்குவரத்து தொழிலதிபர்தானாம். ''சரியா சொல்லணும்னா... சாதாரண ராஜசேகராக இருந்த காலம்தொட்டே நித்தியானந்த சாமியாரை கவனிச்சு வந்தவரு இந்த தொழிலதிபர். ஓரளவு வளர்ச்சி(?) அடைந்திருந்த சமயத் தில், திருவண்ணாமலையில ஆசிரமம் அமைக்க முயற்சி செஞ்சாரு சாமியார். அப்போது உள்ளூர்க்காரர்களால் அவருக்குப் பிரச்னைகள் வந்தது. சாதி ரீதியான பாசத்தோடு சாமியாருக்கு உதவி செய்ய இந்த தொழிலதிபர் வந்தார்.

சின்னத்திரை, பெரிய திரையில் பார்க்கிற பல நிழல் உருவங்களை நேரில் பார்க்கக்கூடிய கில்லாடி! அப்படி இவருக்கு அறிமுகமானவர்தான் ஆறெழுத்து விளக்கு நடிகை. தொழிலதிபரை ரெகுலராக சந்தித்து வந்த இந்த நடிகை, திடீரென்று சாமியாரின் பக்தையாக மலேசிய பயணத்தில் கோத்து விடப்பட்டார். அங்கிருக்கும் ஆசிரமத்தில் அருளாசி கிடைத்தபோதும், அதன் பிறகு பிடதி ஆசிரமத்துக்கு மட்டும் இவருக்கு அழைப்பு வரவேயில்லை. அதேசமயம், சென்னைக்கு சாமியார் வரும்போதெல்லாம் தவறாமல் சந்திப்பும் அருளாசியும் நடக்கும்!'' என்று சொல்கிறார்கள் திருவண்ணாமலை பிரமுகர்கள் சிலர்.

பெங்களூரு பாசம்...

தமிழகத்தைவிட கர்நாடகாவில் தனது கிளைகளை பலமாக ஊன்ற வைப்பதில்தான் நித்தியானந்தருக்கு விருப்பமாம். அங்கிருக்கும் பல அரசியல்வாதிகளையும் உணர்வுபூர்வமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாராம். மாண்டியா மாவட்டத்தில் கடந்த வருடம் நித்தியானந்த பீடத்தின் கிளையைத் தொடங்கப் போனபோது, அந்த மாவட்டத்து மக்கள் நித்தியானந்தரை ஒரு பூ ரதத்தை தயாரித்து அதில் உட்கார வைத்து ஊர் முழுக்கச் சுற்றினார்களாம். கன்னட திரை முகங்களும் ஆசிரமத்தில் வந்து நித்தியானந்தருக்கு சேவை செய்ததில் தனி இன்பம் கண்டன. புதுப் படத்துக்கு அட்வான்ஸ் வாங்குவதற்கு முன் நித்தியானந்தரின் பாதம் பணிந்த பிறகே அக்ரிமென்டில் கையெழுத்துப் போடும் நடிகை ஒருவரும் உண்டு. அவர் இப்போது செம அப்செட்டில் இருக்கிறார். 'சாமி இப்படி ஏமாத்திட்டாரே...' என்று தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் அவர் புலம்ப... அதன் அர்த்தம் புரியாமல் விழித்தார்களாம் மற்றவர்கள்.

நம்பிக்கையோடு பிடதி ஆசிரமம்...

தற்போது தியான பீடத்திலேயே இருந்து கொண்டு சட்ட ரீதியான விஷயங்களை கவனிப்பவர் நித்தியானந்தரின் செக்ரெட் டரியான நித்ய சதானந்தா. ''இதுல ஏதோ பெரிய சதித் திட்டம் இருக்கு. அதைக் கண்டுபிடிப்பதற்கு முன் அவசரப்பட்டு யாரையும் நாங்கள் குற்றம் சாட்ட விரும்ப வில்லை. உலகம் முழுக்க இருக்குற நித்தியானந்தரோட பக்தர்களுக்கு உணர்வு ரீதியா பல கஷ்டங்களை கொடுத்திட்டாங்க. அதுக்காக கூடிய சீக்கிரமே சுவாமியே மக்கள் முன் வந்து மன்னிப்பு கேட்கத் தயாரா இருக்காரு. கடந்த ஏழு வருஷத்துல சுவாமியால சாதி, மத, பேதமில்லாம பல மில்லியன் மக்கள் நன்மை அடைஞ்சிருக்காங்க. அந்த மக்களோட நம்பிக்கையும், நன்றியும் நிச்சயம் எங்களை கைவிடாது! முதல்வர் எடியூரப்பாவை சந்திச்சு எல்லா விஷயங்களையும் சொல்லியிருக்கோம். சுவாமியோட ஆற்றலையும் அவரது நேர்மையையும் முதல்வரும் நன்கு உணர்வார். அதனால கண்டிப்பா எங்க பக்கம் இருக்கும் நியாயம் ஜெயிக்கும்!'' என்று தன்னை சந்திப்பவர்களிடம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார் நித்திய சதானந்தா.

கர்நாடகாவில் எதிர்பார்க்கும் அதே சப்போர்ட்டை இவர்களால் தமிழ்நாட்டில் எதிர்பார்க்க முடியவில்லை. காரணம், விவகாரம் வெடித்ததில் தொடங்கி... புகார் கொடுத்த லெனின் என்ற தர்மானந்தாவை போலீஸ் கைபொம்மையாக செயல்படுத்துவது வரையில்... எல்லா சோதனைகளுக்கும் மூல காரணமே தமிழ்நாட்டிலிருந்து முளைத்ததாகத்தான் இவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

'எங்கே அவர்?' என்று எல்லோரும் பார்த்திருக்க... மிக மிக முக்கியமான ஆசிரம நிர்வாகிகளிடம் மட்டுமே செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார் பரமஹம்ஸ நித்தி யானந்தர்! அடுத்தபடி அவர் பேசுவது தன் வக்கீலிடம்! சி.டி. மார்க்கமாகத் தோன்றி அவர் அடுத்தடுத்து அளித்த விளக்கங்கள், சர்ச்சைகளுக்கு சரியான தெளிவைக் கொடுக்காத நிலையில்... நாம் நித்தியானந்தரை தொடர்பு கொண்டு விளக்கம் பெற முயன்றோம்.

வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலமாக நாம் அனுப்பி வைத்த கேள்விகளுக்கு, அவர் மூலமாகவே நான்கு நாட் களில் நமக்கு பதில் தந்தார் நித்தியானந்தர். அவர் தரப்பையும்தான் அறிந்து கொள்வோமே..!

''எங்கேதான் இருக்கிறீர்கள்... போலீஸின் துரத்த லுக்கு பயந்துதான் பதுங்கி இருக்கிறீர்களா?''

''கிடையவே கிடையாது! திட்டமிட்டபடி என் காரியங்களைச் செய்துகொண்டே இருக்கிறேன். பக்தர்கள் நெருங்கும் தூரத்தில்தான் இருக்கிறேன். போலீஸ் என்னைத் துரத்துவதாக நீங்கள் நினைத்தால், அதுவும் தவறு. என்னிடத்திலோ மடத்துத் தரப்பிலோ போலீஸார் யாரும் இதுவரை விசாரணை நடத்தவில்லை. சீக்கிரமே என் பயணத்தை முடித்துக்கொண்டு மடத்துக்கு வருவேன்.''

''மடத்துக்கு சொந்தமான மதிப்பு வாய்ந்த ஒரு நிலம் தொடங்கி, மடத்தில் நடந்த மர்மச் சாவு வரை ஏகப்பட்ட பின்னணிகள் இந்த சி.டி. விவகாரத்தில் கூறப்படுகிறதே..? பலமான பண விவகாரங்கள் பற்றியும் பேச்சு அடிபடுகிறதே..?''

''மடம் சம்பந்தமான அத்தனை டாகுமென்ட்களையும் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சோதித்துக் கொள்ளலாம். சொத்துகளுக்கும் பணப் பரிவர்த்தனைகளுக்கும் அட்சர சுத்தமான கணக்கு இருக்கிறது. துளியும் தவறு நிகழாதபடி, ஆடிட் நடத்தப்பட்டிருக்கிறது. கனடா நாட்டுப் பெண் இறந்த விவகாரத்தை நாங்கள் என்றுமே மறைக்கவில்லை. அதுகுறித்து அப்போதே போலீஸில் தெரிவித்துவிட்டு, பிரேதப் பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்தோம். அப்பெண்ணின் பெற்றோர் விருப்பப்படி, இந்து முறைப்படி சடலத்தை எரியூட்டினோம். இதுபற்றிய எந்த விசாரணைக்கும் தயாராகவே இருக்கிறோம். எங்கள் மடம், யாரும் எவ்வித கெடுபிடியோ ரகசி யங்களோ இல்லாமல் எவரும் வந்து போகும் வெளிப் படையான இடமாகவே இருந்தது; இப்போதும் அப்படித்தான்.''

''நீங்களும் நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருக்கும் சி.டி. காட்சிகளைக் கண்டு உங்கள் பக்தர்கள்கூட உறைந்து போயிருக்கிறார்களே..?''

''இப்போதைக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்... வலிமையான சக்திகள் மூலமாக இந்த விவகாரம் பெரிதுபடுத்தப்படுவதால், நான் என்ன சொன்னாலும் அது எடுபடாமலே போய்விடக்கூடும். அதனால், சட்டரீதியாக இந்த விவகாரத்தின் உண்மை களைத் தெளிவுபடுத்த தீவிர முயற்சியில் இருக்கிறோம். சட்டரீதியாக நாங்கள் ஏதும் தவறு செய்யவில்லை என்பதை நிரூபித்த பிறகே, என் தரப்பு நியாயங்களை விளக்கமாக எடுத்துச்சொல்ல விரும்புகிறேன்!''

''உங்களுக்கும் ரஞ்சிதாவுக்குமான உறவு எத்தகையது?''

''எல்லோரையும் போலவே அவரும் ஒரு பக்தை. என் மனமறிந்து சொல்கிறேன்.... யாரையும் தவறான எண்ணத்தோடு பார்க்கவில்லை. பெரியவர்-தாழ்ந்தவர், ஆண்-பெண் என்கிற பாகுபாட்டுக்கெல்லாம் மடத்தில் இடம் இல்லை. நம் உடலினுள்ளே ஒளிந்திருக்கும் சக்தியை ஒருமுகப்படுத்தி அறிவதுதான், மடத்தில் வழங்கப்பட்ட பயிற்சி. ஹீலிங் பயிற்சி கற்றவர்கள், யாரையும் தொடுவது தவறில்லை. மற்றபடி, தற்போது உலவவிடப்படும் படங்களை எல்லாம் நான் பார்க்கவில்லை... பார்க்கும் எண்ணமும் இல்லை!''

''சி.டி. விவகாரப் பின்னணியில் ரஞ்சிதாவின் கைங்கரியங்கள் இருப் பதாக சொல்லப்படுகிறதே..?''

''பக்தர்கள் யாரையும் சந்தேகப் படும் நிலையில் நானில்லை. அப்படி அவசரப்பட்டு சொல்லப் படும் எல்லாமே பொய்யாகவோ, புரிந்துகொள்ளப் படாததாகவோ தான் இருக்கும்.''

''அப்படியானால் இதன் பின்னணியில் இருப்பதுதான் யார்? மடத்தில் பணியாற்றிய நித்திய தர்மானந்தா என்கிற லெனின் கருப்பனுக்கும் உங்களுக்கும் என்னதான் தகராறு?''

''எனக்கென்று எதிரிகள் யாருமே இல்லை. அன்பை மட்டுமே போதிக்கும் எங்கள் மடத்தில், எதிரி என்று யார் இருந்திருக்க முடியும்? அப்படியே இருந்தாலும், அவர்களை மன்னிக்கும் மனோபாவத்தில்தான் நான் இப்போதும் இருக்கிறேன். அதேநேரம், என்னை எதிரியாகவோ நண்பராகவோ பார்க்காதவர்கள்கூட இந்த விவகாரத்தை ஏதோ பரபரப்புக்காகப் பெரிதாக்கி விட்டார்கள். அந்த வருத்தம் எனக்கு இருக்கத்தான் செய்கிறது.''

''நீங்கள் யாரையுமே சந்தேகப்படவில்லையா?''

''இல்லவே இல்லை! இந்த வயதில், இந்த சமயத்தில், இத்தகைய பழியை அடையவேண்டும் என்பது என் கர்ம வினை. இத்தகைய பாவம் வரும் என்பது முன்கூட்டியே தெரியும். கர்ம வினையை யாரால்தான் தடுத்துவிட முடியும்? எப்படி இது வந்ததோ... அதே வழியிலேயே அடங்கிவிடும். மடத்தின் பெருமை மறுபடியும் நிலைத்தோங்கும்!''

''மடத்தில் நீங்கள் சந்தோஷ நாயகராக வலம் வந்ததாகச் சொல்லப்படுகிறதே?''

''மீடியாக்கள் ஒன்றையன்று மிஞ்சுவ தற்காக இப்படியெல்லாம் எழுதுகின்றன. மடத்துக்கு வந்தவர்களுக்கு இதில் துளியும் உண்மையில்லை என்பது தெரியும். சுதந்திர உணர்வோடு நம்மை நாமறியும் எளிய தியான முறைகளும், பயிற்சிகளும்தான் அங்கே போதிக்கப்பட்டன. எவ்வித தவறுகளுக்கும் அங்கு இடமே இல்லை!''

- இரா.சரவணன்


ஆள் கடத்தல் வழக்கு..

தர்மானந்தாவின் உடன் பிறந்த சகோதரர் குமார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு கடையிலிருந்து வெளியே வந்தபோது சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருக்கிறார். இந்த விஷயம் தர்மானந்தாவுக்கு தெரிந்ததும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு அவர் தகவல் சொல்ல... சிட்டி முழுக்க போலீஸாரை அலர்ட் செய்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் குமாரை மீட்டிருக்கிறது போலீஸ். நித்தியானந்தருக்கு நெருக்கமான சிலர்தான் குமாரை கடத்தியதாக சொல்லும் போலீஸார், நித்தியானாந்தர் மீது ஆள் கடத்தல் வழக்கு போடுவது பற்றிய ஆலோசனையிலும் இருக்கிறதாம்.

சிக்க வைக்குமா சேலம்..?

சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் குடும்பத்திடமும் ஆசிரமத்துக்கு எதிராக புகார் வாங்குவதில் தீவிரமாக இருக்கிறது போலீஸ். அந்த மாணவி நித்தியானந்தரின் ஆன்மிகப் பேச்சில் மயங்கி பிடதி ஆசிரமத்துக்கே போய் செட்டில் ஆகிவிட்டாராம். பிறகு, அவர் ஒருநாள் பெங்களூரு ஆஸ்பத்திரியில் ஆசிரம நிர்வாகிகளால் சேர்க்கப்பட்டதாகவும்... அவரிடமும் அவர் பெற்றோரிடமும் தீவிரமாக சமாதான முயற்சிகள் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒருவழியாக தங்கள் மகளை சேலத்துக்கே அவர் பெற்றோர் மீட்டு வந்தனர். இப்போது எதிர் பார்ட்டியாக மாறிவிட்ட தர்மானந்தாவின் சொந்த ஊரும் சேலம்தான். அவருக்கு வேண்டியவர்கள் மூலமாகத்தான் இந்தப் பெண்ணை போலீஸ் முன்பு கொண்டு வந்து நிறுத்தும் முயற்சிகள் நடக்கிறதாம்.


நன்றி - ஜீனியர் விகடன்

No comments:

Post a Comment