Thursday, March 25, 2010

ப்ரீத்தி ஜிந்தா யாருக்கு அக்கா?

ப்ரீத்தி ஜிந்தா யாருக்கு அக்கா?

திகுதிகுவெனத் தீ பிடித்து ஓடிக்கொண்டு இருக்கும் ஐ.பி.எல். திருவிழாவின் சில டிட்பிட்ஸ்...

'கட்டிப்பிடிப்பதை ரசிகர்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கிங்ஸ் லெவன் டீம் என் குடும்பம் மாதிரி. அதில் யுவராஜ் சிங் எனது தம்பி மாதிரி' என்பது ப்ரீத்தி ஜிந்தாவின் சமீபத்திய அறிக்கை. பதிலுக்கு யுவராஜ், 'ப்ரீத்தி ஜிந்தாவுக்கு இந்தியா முழுக்கப் பல அண் ணன், தம்பிகள்இருக்கிறார் கள். ஆனால், அவர் எனக்கு மட்டும் அக்கா இல்லை!' என்று ட்விட்டரில் ட்விட்டி இருக்கிறார். நல்ல அக்கா - தம்பி!

சேப்பாக்கில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த த்ரிஷாவை மெகா ஸ்க்ரீனில் காட்டியதும், விசில் பறந்தது. இதைத் தவறாகப் புரிந்துகொண்ட ரவி சாஸ் திரி 'பார்த்தீவ் பட்டேல் 50 ரன் அடித்ததை சென்னை ரசிகர்கள் எவ்வளவு உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள் பாருங்கள்' என்று அப்பாவியாக ஒரு கமென்ட் அடித்தார். இதுக்குப் பேர்தான் ஸ்க்ரீன் டெஸ்ட்!

Click to Enlargeசென்னையில் முதல் போட்டியின்போது தமிழ்க் கலாசாரத்துக்கு ஏற்ப அடக்கமான உடையில் ஆடினார்கள், சென்னை சூப்பர் கிங்ஸின் சியர் லீடர்ஸ். கடுப் பான சென்னை ரசிகர்கள், எதிர் அணி யின் கிளாமர் கேர்ள்ஸை ஆதரித்தார்கள். இப்போது சென்னை சியர் லீடர்ஸின் உடை சுருங்கிவிட்டது. இந்த சென்னை ரசிகர்கள் எப்பவுமே இப்படித்தான்!

கொச்சி, புனே என அடுத்த ஆண்டு முதல் இரண்டு புதிய அணிகள் ஐ.பி.எல்லுக்குள் புது என்ட்ரி கொடுக்க இருக்கின்றன. புனே அணியை சஹாரா குருப் 1,702 கோடி ரூபாய்க்கும், கொச்சி அணியை ரென்டீவஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 1,533 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளன. மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியா சிமென்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எவ்வளவு கொடுத்து வாங்கியது தெரியுமா? 222.6 கோடி ரூபாய். விலைவாசி ஏறிப்போச்சு!

புதிதாக இரண்டு அணிகள் அடுத்த ஆண்டு இடம்பெறுவதால் தற்போது 60 மேட்ச்சுகள் என்பதுமாறி அடுத்த ஆண்டு முதல் 94 ஆட்டங்கள் நடைபெறும். அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு அணியும் தலா 18 மேட்ச் சுகள் ஆட வேண்டும். ஆடுங்கோள்!

கேப்டன் கௌதம் கம்பீர் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் காயம் காரணமாக டீமில் இல்லாததால், தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறது டெல்லி டேர்டெவில்ஸ். இதனால், காயம் அடைந்திருக்கும் இருவரையும் தனி விமானத்தில் இலங்கைக்கு ஆயுர்வேத ட்ரீட்மென்ட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் கள். அதற்கான செலவு மட்டும் 40 லட்ச ரூபாய். சிகிச்சை செலவு கள் தனி. இருக்குற மகராசன் அள்ளி முடியுறான்!

ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி, கேத்ரீனா கைஃப், தீபிகா படுகோன் அனைவரையும்விட இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுபவர் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளர் காயத்ரி ரெட்டி. ஐ.பி.எல். துவங்கியதில் இருந்து கூகுள் சர்ச் இன்ஜினில் அதிகம் தேடப்படுபவர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித் திருக்கிறார் காயத்ரி. இதுதானாச் சேர்ந்த கூட்டம்!

ஐ.பி.எல். நைட்ஸ் என்கிற பெயரில் கிரிக்கெட் மேட்ச் முடிந்ததும் பார்ட்டியை ஆரம்பித்துவிடுகிறார்கள். நடிகைகள், மாடல்கள் என அனைவரும் பார்ட்டிக்கு ஆஜராகிவிடுவதால், வெற்றியோ, தோல்வியோ அனைத்து பிளேயர்களும் பார்ட்டிக்கு வந்து விடுகி றார்கள். ஹர்பஜனுடன் காதல் இல்லை என்று சொல்லும் கீதா பஸ்ரா தவறாமல் இந்த பார்ட்டிகளில் கலந்துகொண்டு ஹர்பஜன் சிங்கை உற்சாகப்படுத்தி வருகி றார். பாஜி ஆடினா பாரதத்துக்கே பார்ட்டிதான்!


நன்றி ஆனந்த விகடன்

No comments:

Post a Comment