Sunday, September 28, 2008

மட்டக்களப்பில் மினி முகாம் புலிகளால் தாக்கியழிப்பு: 6 பேர் பலி; ஆயுதங்கள் மீட்பு



மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திகிலிவட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து அமைத்திருந்த மினி முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர். ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட திகிலிவட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுவினரும் மினி முகாம் அமைத்திருந்தனர்.

இம்முகாம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர். முகாமை தமது கட்டுப்பாட்டில் 15 நிமிடம் வரை வைத்திருந்த விடுதலைப் புலிகள் அங்கிருந்தவற்றினை முழுமையாக தாக்கியழித்துள்ளனர்.

இத்தாக்குதலின் போது சிறிலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஏனையோர் தப்பியோடி விட்டனர்.

இதில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:

ரி-56 ரக துப்பாக்கிகள் - 05

பிகே எல்எம்ஜி - 01

பிகே ரம் ரவைக்கூடு - 01

பிகே எல்எம்ஜி ரவைகள் - 100

ஏகே ரவைக்கூடு - 09

ஏகே ரவைகள் - 200

கோல்சர் - 01

ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment