Sunday, September 28, 2008

வவுனியாவில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி; 9 பேர் காயம்



வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் சென்ற முச்சக்கர ஊர்தி மீது ஈருளி மோதிய போது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 9 பேர் காயமடைந்துள்ளனர்.

வவுனியா நகரில் இருக்கும் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள இரண்டாம் குறுக்குத் தெருவில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:15 நிமிடமளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர ஊர்தியில் ஆண் காவல்துறையினர் நால்வரும், பெண் காவல்துறையினர் ஒருவரும் சென்றுள்ளனர்.

இக்குண்டுத் தாக்குதலின் போது அருகிலிருந்த சிறிலங்கா படைத்துறை சோதனை நிலையமும் சேதமடைந்துள்ளது. இதில் சோதனை நிலையத்தில் நின்ற மூவர் காயமடைந்தனர். இவர்களில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த பெண் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

இத்தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த நால்வரும், இராணுவத்தைச் சேர்ந்த மூவரும், பொதுமக்களில் இருவருமாக ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment