Tuesday, September 30, 2008

"கொழும்பினதும் கிழக்கு மாகாணத்தினதும் பாதுகாப்பினை முறியடிப்பதே புலிகளின் திட்டம்"



சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

வன்னியில் மோதல்கள் தீவிரமடைந்து வருகையில் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் போன்றவற்றின் மீது அதிரடி தாக்குதல்களை நிகழ்த்துவது விடுதலைப் புலிகளின் பிரதான இலக்கு.

இதனால் வன்னியில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் படையினர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம்.

கொழும்பில் தாக்குதலில் ஈடுபடும் நோக்குடன் விடுதலைப் புலிகள் பலர் முஸ்லிம் மக்களின் பெயர்களைக் கொண்ட அடையாள அட்டையுடன் நடமாடி வருகின்றனர்.

கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, இரத்மலான இடைத்தங்கல் முகாம், இரத்மலான வானூர்தி நிலையம், கட்டுநாயக்கா வான்படை தளம் என்பனவே கொழும்பில் அவர்களின் பிரதான இலக்கு.

கிழக்கில் அம்பாறை மற்றும் திருமலை மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இதனிடையே அனைத்துலக ரீதியிலும் தமிழ் மக்கள் போர் தொடர்பான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்னிந்தியாவில் நடைபெறவுள்ள உண்ணாநிலை போராட்டம் முக்கியத்துவம் மிக்கது.

எனினும் அது தொடர்பாக மத்திய அரசின் பதில் என்ன என்பது தான் தற்போதைய கேள்வி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment