Monday, September 29, 2008

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகிக்க தகுதியற்றவர் – ஆங்கில ஊடகம்

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகிக்க தகுதியற்றவர் – ஆங்கில ஊடகம்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2008, 02:33.31 AM GMT +05:30 ]

இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ந்தும் அந்தப் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என பிரபல ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு விரோதமான கருத்துக்களை வெளியிடும் இராணுவத் தளபதிக்கு எதிராக யுத்த குற்றவியல் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர், மலே மற்றும் தலை தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து வரும் அனைவருக்கும் இந்தத் தேசம் சொந்தமானதென்பதை இராணுவத் தளபதி தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளது.

உயர் இராணுவப் பதவியை வகிக்கும் சரத் பென்சேகா பேரினவாத அரசியல் சக்திகளைப் போன்று கருத்துக்கள் வெளியிடுவதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இராணுவத் தளபதி என்ற ரீதியில் அரசாங்கத்திற்கு நூறு வீதம் கட்டுப்பட்டவராக சரத் பொன்சேகா பணியாற்ற வேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனினும், ஓர் குறிப்பிட்ட இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஏனைய இனங்களை உதாசீனம் செய்வது படைத்தளபதி ஒருவருக்கு உசிதமாக அமையானதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டுச் செயற்பட முடியாவிட்டால் இராணுவச் சீருடை அணிவதில் அர்த்தமில்லை எனவும், மொத்தப் படையினரையும் சரத் பொன்சேகா அவமானப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இனத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் பயங்கரவாதமாகவே அமைந்துள்ளதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள மக்களுக்கு மட்டுமே இந்த தேசம் சொந்தமானது என்ற நிலைப்பாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்கும் இராணுவத் தளபதி தமிழ் சிவிலியன்களைப் பாதுகாப்பார் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment