Friday, September 19, 2008

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ் மாணவன் முதலிடம்



இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தர்மலிங்கம் பசுபதன் என்ற மாணவன் மொத்தமாக 176 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ்ப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் மூன்று மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். குறித்த மூன்று மாணவிகளும் 183 புள்ளிகளைப் பெற்று முதனிலை வகிக்கின்றனர்.

கொழும்ப சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும் மஹிந்தனி அமாசா ஹபுவாராச்சி பம்பலப்பிட்டி லிண்ட்சே மகளிர் பாடசாலையின் சஜினி அஞ்சனா சேனாதீர மற்றும் புத்தளம் புனித அன்றூ மத்திய மகா வித்தியாலத்தைச் சேர்ந்த அபேசிங்ககே தோன மனீசா சுபிபி ஆகியோரே இவ்வாறு முதனிலை வகிக்கின்றனர்.

புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 265000 மாணவ மாணவியரில் 30000 மாணவ மாணவியர் பிரபல பாடசாலைகளில் அனுமதி அல்லது புலமைப்பரிசில் பணத்தினைப் பெற்றுக் கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment