Tuesday, September 16, 2008

விண்ணில் வலம் வரும் தமிழரின் முதல் வானூர்தி

அன்று கப்பலோட்டினார் வ.உ.சிதம்பர னார்.அதே போல் இன்று வானில் விமானத்தை பறக்க விடுகிறார் தமிழ் பற்றாளர் ஷேக் தாவூது. அதன் மூலம் விண்ணில் வலம் வரும் தமிழரின் முதல் வானூர்தி எனும் புகழைப் பெறுகிறது இவரது விமானச் சேவை.

எயார் திராவிடா என்ற பெயரில் தமிழகத் தில் ஆரம்பமாகும் இந்த விமான சேவை, சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, பெங்களூர், ஐதராபாத் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலதலைநகரங்க ளுக்கும் செயல்பட உள்ளது.

தமிழ் நாட்டில் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் மிகுந்த தமிழ் பற்றாளர். அதுமட்டுமின்றி உலகம் முழு வதும் உள்ள தமிழர்“கள், பல நாடுகளில் புலம் பெயர்ந்தாலும், அவர்கள் ஒன்றிணைந்து ஒரு கட்டுக் கோப்பாக வாழ வேண்டும் என்பதில் உறுதி யாக உள்ளவர்.

ஷேக் தாவூத் தொடங்கவுள்ள விமானக் கம்பனியின் பெயர் எயார் திராவிடா .தனது விமானக்கம்பெனிக்கு ஏன் இத்தகைய தமிழ் பெயரை வைத்தார் என்ற காரணத்தைக் கேட்டபோது ஆங்கில மோகம் தலைவிரித் தாடும் இந்தக் காலத்தில், உலகமெங்கும் தமி ழுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். அதுவே நீண்ட நாளைய எனது கனவாகும். அந்த வகை யில் நான் இப்பெயரை தேர்ந்தெடுத்தேன். இந்த விமான சேவைத்திட்டத்துக்கு100 கோடி இந்தியப் பணத்தை முதலீடு செய்ய விரும் புகின்றேன். எனது இந்த எயார் திராவிடா கம்பனியில் யாவரும் பங்கு தாரர்களாகவும், சரி யான முறையில் இந்திய அரசாங்கத்தின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு, அரசாங்க வங்கிகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாட்டு தமிழ் பேசும் மக்கள் பங்கு பெறலாம். அதற்காக நான் அடுத்த சில நாட்களில் கனடா, அமெரிக்கா, லண்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற் கொள்ளவுள்ளேன்.

அப்போது அங்கு வாழும் தமிழர்களிடையே இது குறித்து கலந்துரையாடுவதற்கு ஐரோப் பிய நாடுகளில் செயல்படும் தமிழ் சங்கங்கள் ஏற்பாடு செய்கின்றன. என்னுடைய விருப்ப மெல்லாம், உலகமெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் எனது எயார் திராவிடா கம் பனியில் பங்கு பெறவேண்டும் என்பதே. உங்கள் விமான சேவைக்கு ஏன்,எயார் திராவிடா என்று வித்தியாசமாக பெயர் வைத்தீர்கள் எனக் கேட்ட போது உலகத்தில்தமிழர் கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்று அனை வரும் வியப்புற வேண்டும், மட்டு மின்றி எனது விமானக் கம்பனியில் விமா னம் ஓட்டும் விமானிகளை தமிழர்களாகவே தேர்ந் தெடுத்துள்ளேன். அதற்காக பத்து தமிழ் பேசும் விமான ஓட்டிகளை தெரிவு செய்து , அவர்கள் பயிற்சி பெற எனது சொந்த செலவிலேயே அவுஸ்தி ரேலியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு அனுப்பி யுள்ளேன். அவர்கள் அங்கு பயின்று கொண்டி ருக்கின்றனர். விமானப் பணியாளர்க ளும்தமிழர்களாகவே இருப்பார்கள். விமானத் தில் தமிழ் மங்கள ஓசை, நாதஸ்வரம் எப் போதும்,ஒலித்துக்கொண்டே இருக்கும். விமானத்தினுள்ளே அறிவிப்புகள் தமிழாகவே இருக்கும். தமிழ்தெரியாதவர்களுக்கு மொழி பெயர்ப்பு செய்து தரப்படும். அதோடு விமா னத்தில் தமிழ் நாட்டு உணவு வகைகளே வழங்குவோம். மொத் தத்தில் அனைத்தும் தமி ழாகவே இருக்கும். நாம் பல நாடுகளில் வாழ்ந்தாலும், முதலில் நாம் தமிழர்கள் என்ற கலா சாரத்தை மறக்கக் கூடாது.

தமிழன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். எனது எயார் திராவிடா விமானம் முத லில் இந்தியா வில் செயல்படும் அடுத்து தமிழர் கள் அதிகமாக வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நாடுகளிலும், செயல்படும்.

தொடர்ச்சியாக உலகமெங்கும் பறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் அனைத்து நாட்டு மக்களும் எமது எயõர் திராவிடா ஸ்தாபனத்தில் பங்குபெற வேண் டும், முதன் முதலில், தமிழன் கப்பல் விட்டதைப் போல், விண்ணிலும் தமிழனின் பயணிகள் விமானம் பறக்க வேண்டு மென்பதே எனது ஆசை. இவ்வாறு தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியின் போது தெரிவித்தார்

No comments:

Post a Comment