Tuesday, September 30, 2008

சிறுபான்மை மக்களை உதாசீனப்படுத்தும் சரத் பொன்சேகாவின் கருத்துக்கு CPAகண்டனம்



சிறுபான்மை மக்கள் தொடர்பில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு தமது கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 23ம் திகதி கனடிய பத்திரிகையான தி நெசனல் போஸ்ட் பத்திரிகைக்கு இராணுவத் தளபதி அளித்த செவ்வி குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த நாடு சிங்கள மக்களுக்கே உரித்தானது, சிறுபான்மை மக்கள் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது என இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.

எனினும், நாட்டின் உயர் பாதுகாப்புப் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கும் ஒர் படைத்தளபதி இவ்வாறான அரசியல் ரீதியான இனவாத கொள்கைகளை வெளியிடுவது கண்டிக்கப்பட வேண்டியதென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இராணுவத் தளபதியின் குறித்த செவ்வி சிறுபான்மை மக்களை உதாசீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியின் இந்த பொறுப்பற்ற செயல் குறித்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான இனவாத கொள்கைகளின் மூலம் இன நல்லிணக்கத்திற்கு பாரிய குந்தகம் ஏற்படக் கூடும் என மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment