Monday, September 15, 2008

மேலும் இரண்டு மாகாண சபைகளை கலைப்பதற்கு அரசு திட்டம்

சிறிலங்காவில் இந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் மேலும் இரண்டு மாகாண சபைகளை கலைப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

இந்த வருடம் டிசம்பர் மாதமளவில் மேலும் இரு மாகாண சபைகளை கலைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வரவு-செலவு திட்ட விவாதத்தின் பின்னர் மாகாண சபைகள் கலைக்கப்படலாம். அதற்கான தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு மாகாண சபை கலைக்கப்படவுள்ள இரு மாகாண சபைகளில் ஒன்றாகும். இதனை அதன் முதலமைச்சராகிய அதுல விஜயசிங்கவின் கருத்தும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதாவது, தனது சபையை எந்நேரமும் கலைப்பதற்கு தான் தயாராக உள்ளதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, நவம்பர் 6 ஆம் நாள் வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பிதற்கும் அதன் மீதான விவாதங்களை டிசம்பர் 8 ஆம் நாள் வரை மேற்கொள்வதற்கும் மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்களுக்கு தயாராகுமாறு சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமாகிய மைத்திரிபால சிறிசேனவுக்கு மகிந்த ராஜபக்ச உத்தரவுட்டுள்ள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment