Wednesday, September 17, 2008

வன்னியில்விடுதலைப் புலிகள் விஷவாயு ஆயுதங்களை பயன்படுத்தியதாக இராணுவத் தரப்புக் குற்றஞ்சாட்டியுள்ளது

வன்னியில் நடைபெற்றுவரும் போரில், விடுதலைப் புலிகள் விஷவாயு ஆயுதங்களை பயன்படுத்தியதாக இராணுவத் தரப்புக் குற்றஞ்சாட்டியுள்ளது.
கிளிநொச்சியில், அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது விடுதலைப் புலிகள் மூச்சுத் திணறல் உண்டாக்கக் கூடிய C.S.GAS எனப்படும் விஷ வாயுவைக்கக்கும் கிரனேட் குண்டுகளைக் கொண்டு படையினர் மீது தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.
அக்கராயன் மோதலின் போது மூச்சுத் திணறல் காரணமாக 6 இராணுவத்தினர் அனுராதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புலிகளின் விஷவாயு கக்கும் கிரனேட் குண்டுகளாலேயே பாதிக்கப்பட்டனர் என்று கருதப்படுவதாகவும் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மோதல்கள் இடம்பெறும் வேளைகளில் எதிர்த்தரப்பினரை பலவீனப்படுத்தும் வகையில் பல்வேறு நடைமுறைகள் கையாளப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அந்த வகையிலேயே படையினரின் உற்சாகத்தையும் பலத்தையும் முறியடிக்கும் வகையில் விடுதலைப்புலிகள் புதியதொரு நடமுறையைக் கையாண்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக கிளிநொச்சி, அக்கராயன்குளம், வன்னிவிளாங்குளம் மற்றும் மேற்கு மாங்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருதரப்பு மோதல்களின் போது விடுதலைப் புலிகளால் மூச்சுத் திணறலை ஏற்படுத்தக் கூடிய விஷ வாயுவைகக்கும் கிரனைட் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் 6படையினர் மூச்சு தினறல் ஏற்பட்ட நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகைக்குண்டுகளை ஒத்ததான இந்தக் குண்டுத் தாக்குதலினால் எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை. எதிர்காலத்திலும் விடுதலைப் புலிகளால் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அதனை முறியடிக்கும் வகையில் படையினரும் சுகாதாரத்துறையினரும் நட வடிக்கை எடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment